ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
பயணம் Poll_c10பயணம் Poll_m10பயணம் Poll_c10 
Dr.S.Soundarapandian
பயணம் Poll_c10பயணம் Poll_m10பயணம் Poll_c10 
heezulia
பயணம் Poll_c10பயணம் Poll_m10பயணம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயணம்

3 posters

Go down

பயணம் Empty பயணம்

Post by கவிக்காதலன் Fri Dec 10, 2010 5:20 pm

அப்போது மாலை மணி ஐந்து...!
அதிக மக்கள் நெரிசலான
அந்த ரயில் நிலையம்...!!

அரைமணி நேர
என் காத்திருப்புக்கு பின்
அலறியடித்துக்கொண்டு வந்தது...!
அனந்தபுரி எக்ஸ்பிரஸ்...

எனக்குப் பிடித்த
ஜன்னலோர சீட்...!
ஏறி அமர்ந்து கொண்டேன்...

பெரிய சத்தத்தோடு
புகையையும் கக்கிக்கொண்டு
பயணமானது ரயில்...

ஆடி அசையும் மரம்...!
ஆகாய பறவைகள்...!!
ஆற்று வெள்ளம்...!
ஆட்டு மந்தை கூட்டம்...!!

அனைத்தையும்
அழகாய் காட்டியது...!
அந்த ஜன்னலோர சீட்...

அரைமணி நேரத்தில்
அலுப்பு தட்டியது எனக்கு...

அன்று காலை வாங்கிய
ஆனந்த விகடனை
அப்போது கையில் எடுத்தேன்...!

பக்கங்களை திருப்பி
படிக்க ஆரம்பித்தேன்...!

அதிகம் சிரிப்பை தராத ஜோக்ஸ்...!
ஆர்ப்பாட்டமான சினிமா செய்திகள்...!!
அப்போது ஏனோ
அதிலும் மனம் ஒட்டவில்லை...

மீண்டும் ஜன்னல் வழி பார்வை...

மனமோ இப்போது
மலையாய் கனத்தது...!
மறுபடியும்
அவள் நினைவுகள்...

மேகம்,
மேலே தெரிந்த வானம்,
வெற்றிடம்,
வெளியே தெரிந்த மரங்கள்
எல்லாவற்றிலும்
எனக்கு அவளே தெரிந்தாள்...

இதயத்தில் அவள்
இதழசைத்து பேசும் சத்தம்...
இமை மூடி ரசித்தேன்...!

உயிருக்குள் அவள்
உரக்க சிரிக்கும் சத்தம்...
உயிரோடு உணர்ந்தேன்...!

இரவு நேரம்...
இப்போது மணி பதினொன்று...

எதிர்பாராமல்
என் நோக்கியா அலறியது...!
எடுத்து பார்த்தேன்...!!
எனக்கு தெரியாத எண்...

அவளாய் இருக்கக்கூடாத என
அடிநெஞ்சு ஏங்கியது...!

பட்டனை அமுக்கியதும்
பாடுவதை நிறுத்தியது...!
என் செல்போன்...

எதிர் முனையில் அவள்...

ரயிலை விட்டு இறங்கி
நிலவை தொட்டு வந்ததாய்
எனக்கு உணர்வு...

என் காதோடு
ஏதேதோ பேசினாள்...!
அதை என் இதயமோ
அமைதியாய் ரசித்தது...!!

"பை" சொல்லி செல்போனை
வைத்தாள் அவள்...

மெதுவாய் நான்
எனக்குள்ளே புன்னகைத்தேன்...!
அவளும் ஒருவேளை
என்னைப்போல் புன்னகைத்திருப்பாள்...!!

இரவு மணி ஒன்றாகி
இப்போது இரண்டானது...!
இன்னும் தூக்கம் வரவில்லை...!!

ரயிலோ தண்டவாளத்தோடு
ரகசியம் பேசிக்கொண்டு
ராத்திரி பயணித்துக்கொண்டிருந்தது. ..!

நீண்ட நேரத்திற்குப் பின்
நிம்மதியில்லாத ஒரு தூக்கம்...!
கனவிலும் என்னோடு வந்து
காதல் செய்தாள் அவள்...!!

அவள் எனக்குரியவள் அல்ல...!
ஆயிரம் முறை சொன்னேன்...!!
என் மனதோடு...

மனமோ அதை
மறுத்தது...!
காரணம் சொன்னேன்...!!
கண்டுகொள்ளவில்லை மனது...

எனக்கு தெரிந்தது
என் மனதிற்கு
ஏனோ புரியவில்லை...!

என் பயணம் முழுவதும்
என்னோடு பயணம் செய்தது...!
அவள் நினைவுகள்...

இறங்க வேண்டிய இடம்...

இறங்கி விட்டு,
இரயிலை பார்த்து
என் கண்கள் நனைய
எனக்குள்ளே நான்
நினைத்துக்கொண்டேன்..

எந்த பயணமும்,
எந்த ரயிலும்
என்னை
அவளிடம் கொண்டுபோய் சேர்க்காது...!
ஏனென்றால்
அவள் எனக்குரியவள் அல்ல....

-----அனீஷ்...


Source: http://anishj.co.cc


[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...


அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... பயணம் 154550 ]
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009

http://www.anishj.co.cc

Back to top Go down

பயணம் Empty Re: பயணம்

Post by புவனா Fri Dec 10, 2010 5:23 pm

அழகன வரிகள் நனைத்தது இதயத்தை மட்டும் அல்ல... கண்களையும் தான்....


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

பயணம் Empty Re: பயணம்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 10, 2010 5:36 pm

அவளை நினைத்து எழுதிய கவிதை
ரயில் பயண இருப்புப்பாதைகளாய்
இணையாமல் - இணைக்காமல் போனாலும்
இந்த ஈகரையின் இதயங்களில் தடம்பதித்து
கவிதையாளர்களின் நிலையத்தில் ஒரு
சிம்மாசனம் போட்டுள்ளீர்கள்.

வாழ்க, வளர்க அனீஷ் , கவிக்காதலன்.


அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

பயணம் Empty Re: பயணம்

Post by கவிக்காதலன் Fri Dec 10, 2010 9:32 pm

மிக்க நன்றி...!நன்றி நான் என்னுடைய நேர்முகதேர்விற்க்காக, கடந்த வருடம் கன்னியகுமரியிலிருந்து, சென்னைக்கு பயணித்தேன்... அந்த பயணத்தின் அனுபவமே இந்த பயணம்....


[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...


அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... பயணம் 154550 ]
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009

http://www.anishj.co.cc

Back to top Go down

பயணம் Empty Re: பயணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum