ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்

3 posters

Go down

சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Empty சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்

Post by அன்பு தளபதி Fri Dec 03, 2010 1:48 pm

போரின் இறுதி நாட்களில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டமைக்காக தற்போது பிரித்தானியாவிற்கு வருகை தந்திருக்கும் சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்சவினையும் அவரது அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர்களையும் கைதுசெய்யும் வகையில் அவர்களுக்கெதிரான பிடியாணையினை பெறும் முயற்சிகளில் தமிழ்ச் செயற்பாட்டாளர்களுக்காகப் பணியாற்றும் சட்டவாளர்கள் முயன்று வருகிறார்கள். இவ்வாறு guardian.co.uk இணையத்தளம் தெரிவித்துள்ளது. மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் போர்க் குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்படும் சிறிலங்கா அரசாங்கத்தின் தலைவர் ராஜபக்ச வியாழனன்று ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் உரைநிகழ்த்தவுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தினரால் விடுதலைப் புலிகளின் முன்னாள் கேணல் ஒருவர் விசாரணைக்குட்படுத்தும் வீடியோ ஆவணம் ஒன்று தமக்குக் கிடைத்திருப்பதாக தமிழ் ஆதரவாளர்கள் கூறும் இந்தத் தருணத்தில் மகிந்தவினது பிரித்தானிய விஜயம் அமைந்திருக்கிறது.

புலிகளின் இந்த உறுப்பினர் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே கொல்லப்பட்டிருக்கிறார் என அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொக்ஸ் அவர்களையும் அதிபர் ராஜபக்ச சந்தித்துக் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகுpறது.

போர் உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் குறிப்பிட்ட சில ஆயுதங்களை சிறிலங்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான உரிமத்தினை பிரித்தானியா நிறுத்தம் செய்திருந்தது.

பிரித்தானியாவிற்கு பயணம் செய்யுமிடத்து அது பெருமெடுப்பிலமைந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் ஈடுபடுவதற்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தின் காரணமாக அதிபர் ராஜபக்ச கடந்த மாதம் பிரித்தானியாவிற்கான தனது பயணத்தினை ஒத்திவைத்திருந்தார்.

திங்களன்று மாலையில் ஹீத்துறூ விமானநிலையில்தில் அதிபர் ராஜபக்ச வந்திறங்கியபோது ஆயிரக்கணக்கான தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள்.
ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் அதிபர் ராஜபக்ச உரைநிகழ்த்தவுள்ள நிலையில் அங்கும் தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிகளவில் ஒன்றுதிரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவில் உக்கிரமாக இடம்பெற்றுக்கொண்டிருந்த போர் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்தினைக் கொண்டுவருவதற்காக வெஸ்மினிஸ்ரர் பகுதியிலுள்ள பாராளுமன்ற சதுக்கப் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பல வாரங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் தற்போது நிலவுகின்ற உறையவைக்கின்ற காலநிலையின் விளைவாக ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் முன்னால் திரளும் ஆர்ப்பாட்டக்காரர்களின் தொகை வெகுவாகக் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவில் மாத்திரம் 300,000 தமிழர்கள் வசித்துவருகிறார்கள்.

"போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் யாரோ அவர்களை நீதியின் முன், நிறுத்துவதற்கான பிடியாணையினைப் பெறும் முனைப்புக்களில் நாங்கள் ஈடுபட்டுவருகிறோம். இதுவிடயம் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அமைப்பு ஒன்றினது அறிவுறுத்தல்களுக்கு அமையச் செயற்பட்டுவருகிறோம்" என பிரித்தானியத் தமிழர் அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குடை அமைப்பான பிரித்தானியத் தமிழர் பேரவையினைச் சேர்ந்த சான் கந்தையா கூறுகிறார்.

"போரின் இறுதி நாட்களில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இந்தக் கொலைகளைப் புரிந்த முப்படைகளின் தளபதியும் நாட்டினது அதிபருமான ராஜபக்ச இன்று ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்திருக்கிறார். இவர் நிச்சயம் முறையான விசாரணையினை எதிர்கொள்ளவேண்டும்" என்றார் அவர்.

நாட்டினது அரச தலைவர் என்ற வகையில் சட்டத்தின் பிடியிலிருந்து அதிபர் ராஜபக்ச தப்பிவிட்டாலும் நாட்டினது பாதுகாப்புக் கட்டமைப்பில் முக்கிய பொறுப்புக்களிலும் பதவிகளிலும் இருப்பவர்களுக்கு எதிரான பிடியாணையினைப்பெறும் முயற்சிகளில் நாங்கள் தொடர்ந்தும் ஈடுபடுவோம் என பிரித்தானியத் தமிழர் பேரவையின் இன்னொரு செயற்பாட்டாளரான சுரேன் சுரேந்திரன் கூறுகிறார்.

சிறிலங்காவிற்கு எதிரான போராடத்தின் ஒரு பகுதியில் சிறிலங்காவில் உற்பத்தியாகும் பொருட்களைப் புறக்கணிப்போம் என்ற பிரசாரம் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்தலக அளவில் மேற்கொள்ளப்படும் போர்க் குற்றங்களுக்கான வழக்கினை பிரித்தானியா ஏற்றுக்கொள்ளும் நடைமுறை இருக்கிறது.

பிரித்தானியச்சட்டத்தின் பிரகாரம், குறித்த ஒருவர் உலகின் எந்தப் பாகத்திலும் போர்க் குற்றத்தினை மேற்கொண்டிருந்தாலும் அவர் பிரித்தானியாவிற்குள் நுழையுமிடத்து பிரித்தானிய அதிகாரிகளால் கைதுசெய்யப்படலாம்.

ஆனால் இதுபோன்ற இதுபோன்ற நிலைமைகளின் போது பொதுமக்கள் வழக்குகளின் பொறுப்பதிகாரி அதனை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில்தான் இதுபோன்ற சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியவாறு நாட்டினது சட்டம்திருத்தியமைக்கப்படும் என நீதியமைச்சின் செயலாளர் கென் கிளார்க் அண்மையில் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவிற்கு பயணம் செய்யும் வெளிநாட்டு அலுவலர்களுக்கு எதிராக தனியார் தரப்பினரால் இதுபோன்ற சட்ட முனைப்புக்கள் எடுக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே பிரித்தானியா இந்த ஏற்பாட்டினைத் தற்போது கொண்டுவர விரும்புகிறது.

பிரித்தானியாவிற்கு பயணம் செய்தால் தான் கைதுசெய்யப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக இஸ்ரேலிய அலுவலர் ஒருவர் தனது பயணத்தினைக் கைவிடும் நிலை ஏற்பட்டிருந்தது.

அதேபோலவே மாக்கிரட் தச்சர் பிரித்தானியாவின் பிரதமராக இருந்த காலப்பகுதியில் சிலியின் முன்னாள அதிபர் ஜெனரல் ஒகொஸ்ரே பினிசேக்கு எதிராகவும் இதேபோனற உபாயம் கையாளப்பட்டது.

மனிதகுலத்திற்குஎதிராகப் புரிந்த குற்றங்களுக்காக பிரித்தானிய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட பினிசே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். ஆனால் பின்னர் அவரது உடல் நிலையினைக் கருத்திற்கொண்டு குற்றப்பத்திரம் எதுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

சிறிலங்காவில் 2009ம் ஆண்டு இடம்பெற்ற போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்ற வாதத்தினை வலியுறுத்தி கடந்த மாதம் பிரித்தானிய வெளியுறவுச் செயலர் டேவிட் கமரோன் கருத்து வெளியிட்டிருந்தார்.

"இடம்பெற்றதாகக் கூறப்படும் செய்திகளை நாங்கள் அனைவரும் வாசித்திருக்கிறோம், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான காட்சிகளை பார்த்திருக்கிறோம். அங்கு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதா என்பதைக் கண்டறியும் வகையில் சுதந்திரமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமானது" என்றார் அவர்.

சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்ச அவர்கள் பிரித்தானியாவிற்கு பயணம் செய்யுமிடத்து அவருக்கு எதிரான பிடியாணை பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சத்தாலேயே பிரித்தானியாவிற்கான தனது பயணத்தை பிற்போட்டார் என வெளிவந்த செய்திகளை மறுத்து ராஜபக்சவினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரித்தானிய மக்களுறவு நிறுவனமான பெல் பொட்டிங்கர் இனது பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

"அதிபர் மகிந்த ஐ.நா சபையில் முக்கியத்துவம் வாய்ந்த உரையினை ஆற்றவேண்டியிருந்தது. அத்துடன் சங்காய்க்கு விஜயம் செய்யவேண்டியிருந்தது. ஆதலினால் பிரித்தானியாவிற்கு பயணம் செய்து ஒக்ஸ்போட்டில் உரைநிகழ்த்துவதற்கான தருணம் இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது' என அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

2008ம் ஆண்டு அதிபர் ராஜபக்ச ஒக்ஸ்போட்டில் உரை நிகழ்த்தியிருந்தார். இன்றையதினம் அவர் மீண்டும் ஒக்ஸ்போட்டில் உரைநிகழ்த்தவுள்ளார். ஒகஸ்போட்டில் இதுபோல இரண்டுமுறை உரைநிகழ்த்தும் அரசதலைவர் மகிந்த ராஜபக்சதான் என அந்தப் பேச்சாளர் தொடர்ந்து தெரிவித்தார்.

நன்றி சங்கமம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Empty Re: சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்

Post by புவனா Fri Dec 03, 2010 1:55 pm

இலங்கை விட்டு வெளியில் சென்ற ராஜபக்ஷே திரும்பவும் இலங்கையில் கால் வைக்க கூடாது... அங்கேயே அவனின் தீர்ப்பு எழுதப்பட வேண்டும்... சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  128872


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Empty தப்பி ஓட வழி தெரியாத ராஜபக்ச! தப்பிக்க வைக்க விழி பிதுங்கிய காவல்துறை

Post by kirikasan Fri Dec 03, 2010 1:56 pm


தப்பி ஓட வழி தெரியாத ராஜபக்ச! தப்பிக்க வைக்க விழி பிதுங்கிய காவல்துறை

ஓக்ஸ்போர்ட்டில் நிகழ்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து பிரித்தானிய அரசில் உயர் மட்டங்களுடன் எப்படியாவது ஒரு புகைப்படமாவது எடுத்து தன்னுடைய கௌரவத்தை சிங்கள மக்கள் மத்தியில் காப்பற்றும் யோசனையில் இருந்த ராஜபக்சவுக்கு இடியென இறங்கியது தமிழ் மக்களின் போராட்டம் அவர் தங்கியிருந்த விடுதி அருகே நடைபெற இருக்கிறதெனும் செய்தி
அதை அடுத்து இலங்கை தூதுவராலயத்துக்குள் தஞ்சம் புகுந்தார்.
அதனை அறிந்த இளையோர்கள் முதலாவதாக தூதுவராலயத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தையும் முடக்கினார்கள். இலங்கை தூதுவராலயத்துக்கு உள்ளே சென்றவர்களையும் வெளியேறியவர்களையும் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடனேயே அழைத்துச்சென்றனர்.
அனைத்துப் பகுதிகளும் தமிழ் மக்களால் சுற்றி வளைக்கப்பட்டதால் விழி பிதுங்கிய காவல்துறையினர் தமிழர்களிடம் வந்து வணக்கம் நீங்கள் அனைவரும் சுகமா? இங்கு நீங்கள் பிரச்சனை எதுவும் ஏற்படுத்த மாட்டீர்கள் என நம்புகின்றோம் என கூறினார்கள்.
அதன்பின்பு சிங்கள மக்கள் யாருக்கும் நாம் எவ்விதத்திலும் தடங்கல் ஏற்படுத்த மாட்டோம். எமது நோக்கம் மகிந்தவை முடக்குவதே எனவும் சிங்களவர்களை போக நாம் அனுமதிப்போம் என உறுதியளித்த பின்னர் சிங்களவர்கள் காவல்துறையின் பாதுகாப்போடு தூதுவராலயத்தில் இருந்து வெளியேறினார்கள்.
அனைத்து சிங்களவர்களும் வெயியேறிய பின்னர் மிகவும் பலத்த பாதுகாப்போடு மூடி வைக்கப்பட்டிருந்த தெருவொன்றில் இருந்து மகிந்தவும் அவரது சகாக்களும் வேகமாக வெளியேற்றப்பட்டனர்.
அதற்கிடையில் இன்று காலையில் பிரித்தனியாவில் உள்ள சிங்களவர்கள் என்ன செய்கின்றார்கள் என மகிந்த கடிந்துகொண்டமைக்கு அமைய தமிழ் மக்கள் போராட்டம் நடாத்துவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக 15 முதல் 25 வரையான சிங்களவர்கள் தமிழர்களுக்கெதிரான போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். தமிழர்கள் வரத்தொடங்க இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனார்கள் சிங்களவர்கள்.
எதையாவது எப்படியாவது சாதிப்பேன் என பிரித்தானியா வந்திறங்கிய மகிந்தவுக்கு அவமானம் மேல் அவமானமே மிச்சமானது இனி மகிந்தவுக்கு பிரித்தானியா சீ சீ இந்தப் பழம் புளிக்குமே!.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்  Empty Re: சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்
» போர்க் குற்றம் புரிந்த நாடு இலங்கை : அடையாளப்படுத்தியது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்
» எகிப்து அதிபர் பதவி விலக இறுதி கட்ட `கெடு' முடிந்தது ராஜினாமா செய்ய அதிபர் தொடர்ந்து மறுப்பு
» சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் சூடான் அதிபர் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு பதிவு
» பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும் - த இன்டிப்பென்டன்ட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum