ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 17:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 15:12

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 15:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 15:27

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:07

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:35

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:25

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 14:24

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 14:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 14:03

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 13:46

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:21

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:02

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 9:35

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 8:15

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 20:49

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:47

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:46

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 15:14

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:39

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:27

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:26

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024 - 13:42

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011

+2
அன்பு தளபதி
krishnaamma
6 posters

Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011 Empty குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011

Post by krishnaamma Thu 2 Dec 2010 - 22:22

மேஷம்
இந்த விக்ருதி ஆண்டு, கார்த்திகை மாதம், 20ஆம் தேதி (06.12.2010), திங்கள் கிழமை, காலை 9.06 மணிக்கு குரு பகவான் உங்களின் லாபஸ்தான ராசியான கும்ப ராசியிலிருந்து அயன, விரய ஸ்தான ராசியான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் அனாவசிய செலவுகளை ஏற்படுத்தினாலும், உங்கள் ராசிக்கு பாக்யாதிபதியம் பெற்று விரய ஸ்தானத்தில் ஆட்சி பெறுவதால் சுபச் செலவுகளையே பெரிதும் உண்டாக்குவார். இந்தக் காலகட்டத்தில் உங்கள் காரியங்களை ஆரவாரம் இல்லாமல் ஆற்றுவீர்கள். பல வகையிலும் முயன்று வருமானத்தைப் பெருக்குவீர்கள். விழிப்புடன் இருந்து சேமிப்பைக் கூட்டிக் கொள்வீர்கள். குறிப்பாக பரஸ்பர நிதித் திட்டங்களில் சிறுகச் சிறுக சேமிக்கத் தொடங்குவீர்கள்.

குரு பகவானின் ஐந்தாம் இடப்பார்வை உங்களின் சுக ஸ்தான நான்காம் வீட்டின் மீது படிகிறது. இதனால் குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வீர்கள். பாகுபாடு காட்டாமல் அனைவரிடமும் நன்றாகப் பழகுவீர்கள். முரண்டு பிடித்த நண்பர்களையும், உற்றார், உறவினர்களையும் உங்கள் வழிக்குக் கொண்டு வருவீர்கள். சிலர் சொந்த வீடு வாங்குவார்கள்.
குரு பகவானின் ஏழாம் இடப் பார்வை உங்களின் ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானத்தின் மீதும், அங்கு சுப பலத்துடன் அமர்ந்துள்ள சனி பகவானின் மீதும் படிகிறது. இதனால் உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். இதுவரை நிலவி வந்த நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும். போட்டி, பந்தயங்களிலும், ஏஜென்ஸி, கமிஷன் போன்றவற்றிலும் ஆதாயம் கிடைக்கும்.

குரு பகவான் அஷ்டம ராசியைப் பார்வை செய்வதால் நெடுநாட்களாக சர்க்கரை நோய், உப்பு நோய், ரத்தம் கெடுதல் ஆகிய உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் அவற்றிலிருந்து நலம் பெறுவார்கள். கடன்கள் வாங்கியிருந்தாலும் அதனால் தொல்லைகள் ஏற்படாது. "முடிந்தபோது கொடுங்கள்' என்று கடன் கொடுத்தவர்கள், உங்கள் மனம் கோணாமல் கூறுவார்கள். பெற்றோர்களுக்கு மருத்துவச் செலவுகள் குறையும்.

அரசாங்கத்தால் ஏற்பட்ட கெடுபிடிகள் நீங்கும். அதேநேரம் வண்டி, வாகனங்களைப் பராமரிப்பதற்கும், இருக்கும் வீட்டைப் பழுது பார்ப்பதற்கும் சிறிது செலவு செய்ய நேரிடும்.
உத்யோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். எனவே கொடுத்த வேலைகளைக் கச்சிதமாக முடிக்க முடியும். சக ஊழியர்களின் அன்பும், ஆதரவும் தொடர்ந்து கிடைக்கும் என்பதால் எடுத்த காரியங்கள் அனைத்தும் பிரச்சினையின்றி நிறைவேறும். தெளிவான மனதுடன் பணியாற்றுவீர்கள். என்றாலும் சிலர் அலுவலக ரீதியான பயணங்களை விருப்பமில்லாமல் செய்ய வேண்டிவரும்.

வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் படிப்படியாக நீங்கிவிடும். எனவே விட்டதைப் பிடிக்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தை சிறிது சீர்திருத்தம் செய்தாலே நல்ல நிலைக்கு வந்துவிடுவீர்கள். செய்தொழிலில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் எப்படியும் இலக்குகளை எட்டிவிடுவீர்கள். அதேசமயம் கூட்டாளிகளைக் கலந்தாலோசிக்காமல் எதையும் செய்ய வேண்டாம்.

விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். ஆனாலும் பயிர்களில் புழு, பூச்சிகளின் பாதிப்புண்டாவதாகத் தெரியவந்தால் உடனே தகுந்த நிவாரணம் காண்க! விவசாய உபகரணங்களை வாங்கி மேலும் முன்னேற்றமடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

அரசியல்வாதிகள் மீது எதிர்கட்சியினர் வீண் அவதூறுகளைச் சுமத்த நினைப்பார்கள். அதனால் இந்த குரு பெயர்ச்சிக் காலத்தில் சற்று எச்சரிக்கையுடன், நிலைமைக்குத் தகுந்தவாறு நடந்து கொள்ளவும். அதேசமயம் உங்களின் பெயரும், புகழும் உயரும். தொண்டர்களை அரவணைத்துச் சென்று உங்களின் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.

கலைத்துறையினர் ஏற்ற இறக்கங்களைக் காண்பீர்கள். துறையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படாவிட்டாலும் ஓரளவு புகழ் கிடைக்கும். எனினும் ஏதேனும் ஒரு வகையில் வருமானத்திற்குக் குறைவு ஏற்படாது. சக கலைஞர்களின் உதவி உங்களை உற்சாகப்படுத்தும்.

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார், உறவினர்களிடமிருந்து உங்களுக்கு நல்ல செய்தி வரும். உத்யோகத்திற்கு செல்லும் பெண்களுக்கு பண வரவுடன் விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். எனினும் அதிகம் பழகாதவர்களின் பேச்சை நம்ப வேண்டாம்.

மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். அதிக மதிப்பெண்களை அள்ளுவீர்கள். தேவையில்லாத வீண் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுங்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை அருகம் புல் மாலை அணிவித்து வழிபட்டு வரவும். சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தியன்று கணபதிக்கு தேங்காய் உடைத்து, "விநாயகர் அகவல்' பாராயணம் செய்யவும்


ரிஷபம்

குரு பகவான் உங்களின் தொழில் ஸ்தான ராசியான கும்ப ராசியிலிருந்து லாப ஸ்தான ராசியான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்த சஞ்சாரத்தினால் பொருளாதாரத்திலும், குடும்பத்திலும் இருந்து வந்த நெருக்கடிகள் நீங்கும். வருமானம் சீராக வந்து கொண்டிருக்கும். உங்களின் புகழும், செல்வாக்கும் உயரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். முன்பு உங்களுக்கு உதவி செய்வதாக வாக்களித்து, "மறந்து' போனவர்கள், தற்போது உங்களைத் தேடி வந்து உதவுவார்கள். உங்களின் புத்திசாலித்தனமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எந்த விஷயத்தையும் பதற்றப்படாமல் சுலபமாக அனுகுவீர்கள்.

குரு பகவானின் ஐந்தாம் பார்வை, உங்களின் தைரிய ஸ்தானத்தின் மீது படிகிறது. இதனால் புதிய முயற்சிகளைத் துவக்குவீர்கள். கடினமான விஷயங்களை பெரியோர்களின் ஆலோசனையைக் கேட்டு நடத்தி முடித்துவிடுவீர்கள். அசாதாரண சூழ்நிலைகளை சாதகமாக மாற்றிக் கொள்வீர்கள். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

குரு பகவானின் ஏழாம் பார்வை உங்களின் பூர்வ புண்ய புத்திர புத்தி ஸ்தானத்தின் மீதும், அங்கு அமர்ந்திருக்கும் சனி பகவானின் மீதும் படிகிறது. இதனால் போட்டிகளைச் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். இக்கட்டான சூழல்களில் மாட்டிக்கொண்டாலும் உங்களின் சமயோஜித புத்தியால் அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். பள்ளிப் படிப்பை முடிக்கும் பருவத்திலுள்ள உங்கள் குழந்தைகளுக்கு விரும்பிய கல்லூரிகளில் சேர்ந்து படிக்க இடமும், விரும்பிய பாடப் பிரிவும் கிடைத்துவிடும்.உங்களின் உடல் உழைப்புக்கு இரு மடங்கு பலன் கிடைக்கும்.

குரு பகவான் சப்தம ஸ்தானமான களத்ர ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் அனைத்தையும் பற்றி சிந்தித்து முடிவெடுப்பீர்கள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும்.

வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். சிலருக்கு பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும்.

உத்யோகஸ்தர்கள், எதிர்பார்த்த பதவி உயர்வைப் பெறுவீர்கள். மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றத் தொடங்குவார்கள். அலுவலகத்தில் சகஜமான சூழ்நிலையைக் காண்பீர்கள். அதேநேரம் கடமை தவறாமல் உழைக்கவும். நீங்கள் தலை நிமிர்ந்து தன்னம்பிக்கையுடன் உலா வரும் கால கட்டம் இது என்றால் மிகையாகாது.

வியாபாரிகள் இந்தக் காலத்தில் கடுமையாக உழைப்பீர்கள். உங்களின் உழைப்பு இரு மடங்காக லாபம் தரும். கூட்டாளிகளிடம் வரவு - செலவுக் கணக்குகளை சரியாகக் காட்டி நற்பெயர் எடுப்பீர்கள். வியாபாரத்தைப் பெருக்குவதற்காக பல இடங்களுக்குப் பிரயாணம் செய்வீர்கள். கூட்டாளிகளுடன் சேர்ந்து புதிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். சிலருக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள். கையிருப்புப் பொருட்கள் மீது அக்கறை காட்டுவீர்கள். வங்கியில் கடன் வாங்கி, புதிய பயிர்களைப் பயிரிடுவீர்கள். கொள்முதல் லாபம் இந்தப் பெயர்ச்சி காலம் முழுவதும் தொடரும்.

அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். சோதனைகள் மறையும். கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். மேலிடத்தின் கட்டளைகளைத் தீவிரமாக நிறைவேற்றி நற்பெயர் எடுப்பீர்கள். உங்களை எதிர்ப்பவர்களும் பணிந்து போகும் காலகட்டம் இது.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் முகத்தில் மலர்ச்சியும், பொலிவும் அதிகரிக்கும். கடினமாக உழைத்து அரிய சாதனைகளைச் செய்வீர்கள். சிறிய வாய்ப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்துப் பயன்படுத்திக் கொள்வீர்கள். உங்களின் தனித்தன்மையை செயல்களில் வெளிப்படுத்துவீர்கள். சிலருக்கு தக்க இடங்களிலிருந்து விருதுகள் கிடைக்கும்.

பெண்மணிகள் மாற்றங்களையும், ஏற்றங்களையும் காண்பீர்கள். வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தினரிடையே உங்கள் செல்வாக்கு உயரும். புதிய ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்திலுள்ள மூத்தோர்களிடம் விட்டுக் கொடுத்துப் பழகுவதன் மூலம் மேலும் வளர்ச்சி அடையலாம்.

மாணவமணிகள் கல்வியில் முன்னேறுவதற்காகச் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சிலருக்குக் கல்வி கற்பதற்கான இட மாற்றமும் கிடைக்கும். சிறிய முயற்சிகளால் பெரிய வெற்றிகளை அடைவீர்கள். மேலும் பெற்றோர்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவு, உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும்.

பரிகாரம்: பெருமாளையும், தாயாரையும் வழிபட்டுச் சிறப்படையவும். இயன்றவர்கள், திருப்பதி மற்றும் காளஹஸ்திக்கு ஒரு முறை சென்று வழிபாடு செய்துவிட்டு வரவும்.


மிதுனம்


குரு பகவான் உங்களின் பாக்ய ஸ்தானமான கும்ப ராசியிலிருந்து தொழில் ஸ்தானமான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்தத் தொழில் ஸ்தான சஞ்சாரத்தினால் செய்தொழில் ஏற்ற இறக்கமாக இருக்கும். நண்பர்கள் இணக்கமாகப் பழகுவதுபோல் இருந்தாலும் மறைமுக சங்கடங்களை உண்டாக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் வருமானம், எதிர்பார்த்த அளவு வந்து கொண்டிருக்கும்.

இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். கைவிட்டுப் போன ஒப்பந்தங்கள் திரும்பவும் உங்கள் கை வந்து சேரும்.

குரு பகவானின் ஐந்தாம் பார்வை உங்கள் குடும்ப ஸ்தானத்தின் மீது படுகிறது. இதனால் உபரி வருமானம் அவ்வப்போது கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள்.

அரசாங்கத்திலிருந்து சில சலுகைகள் கிடைக்கும். நீண்ட நாளைய பிரார்த்தனை ஒன்று நிறைவேறும். மனதை அரித்துக் கொண்டிருந்த பிரச்சினைகள் தானாகவே தீர்ந்துவிடும். உங்களின் அனுபவ அறிவு, தக்க சமயத்தில் உங்களுக்குக் கை கொடுக்கும்.

குரு பகவானின் ஏழாம் பார்வை உங்களின் சுக ஸ்தான ராசியின் மீதும், அங்கு அர்த்தாஷ்டம சனியாக அமர்ந்திருக்கும் சனி பகவான் மீதும் படிகிறது. இதனால் தாயின் உடல் நலன் மேம்படும். உங்களின் அறிவுத் திறனும் உயரும். உடல் உழைப்பைக் கூட்டிக் கொள்வீர்கள். பொதுச் சேவையில் ஈடுபடுவீர்கள். சிலர் உடலை வருத்தும் விரதங்களைக் கடைப்பிடிக்கும் ஆர்வத்தைப் பெறுவீர்கள். ஆயின், "அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு' என்பதை மறவாதீர்கள். மற்றபடி எதிரிகளை அவர்களின் போக்கிலேயே சென்று உங்கள் வசப்படுத்திக் கொள்வீர்கள்.

குரு பகவான் உங்களின் ருண (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் ராசியைப் பார்வை செய்வதால் உற்றார், உறவினர்களால் நன்மை அடைவீர்கள். திடீரென்று சம்பந்தமில்லாதவர்கள் வந்து உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பார்கள். பெரிய கடன்களையும் முழுமையாக அடைத்துவிடுவீர்கள். தேக ஆரோக்யத்தை சிறப்பாக வைத்துக் கொள்வீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு இந்த குரு பெயர்ச்சிக் காலத்தில் பிரச்சினைகள் பெருமளவு குறையும். பொருளாதாரம் சீராக இருக்கும். மேலதிகாரிகளும் மனக்கசப்பு நீங்கி உங்களுடன் நட்புடன் நடந்து கொள்வார்கள். உங்கள் வேலைகளைத் திட்டமிட்டதுபோல் முடிப்பீர்கள். அதேநேரம் மனதில் காரணமின்றி கவலை குடிகொண்டிருக்கும்.

வியாபாரிகளுக்குத் தேவையான பணப் புழக்கம் இருந்து கொண்டிருக்கும். சாதுர்யமாகச் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அள்ளலாம். போட்டிகளையும் சமாளிக்கலாம். மற்றபடி கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சீராகவே முடிவடையும். இருப்பினும் புதிய முதலீடுகளில் ஈடுபட வேண்டாம். கூட்டாளிகளிடமும் உங்களின் அந்தரங்க எண்ணவோட்டத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

விவசாயிகளுக்கு விளைச்சல் சிறிது மந்தமாக இருந்தாலும் வருமானம் நன்றாக இருக்கும். அதேநேரம் குத்தகைகளை நன்கு ஆலோசித்த பிறகே எடுக்கவும். பூச்சிக்கொல்லி மருந்துக்கு சிறிது செலவு செய்ய நேரிடும். மற்றபடி பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும். கால்நடைகள் மூலம் கிடைக்கும் வருமானம், உங்களைத் திருப்திப்படுத்தும்.

அரசியல்வாதிகள், கட்சியில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர நினைக்க வேண்டாம். தற்போதுள்ள நிலையையே பயன்படுத்திக் கட்சி மேலிடத்திடம் நற்பெயர் எடுக்க முயலுங்கள். சில கண்டனங்களைச் சந்தித்தாலும் அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள்.

கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். இதனால் வருமானம் பெருகும். ரசிகர்களின் ஆதரவை, அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்க வேண்டாம்; புரட்சிகரமாக எதையும் செய்ய வேண்டாம். வெளியூர் நிகழ்ச்சிகளில் பொறுப்புடன் நடந்து கொள்ளவும். மேலும் உங்கள் தகுதிக்குக் குறைவானவர்களிடம் பழகுவதைத் தவிர்க்கவும்.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபட்டு புதிய பலம் பெறுவீர்கள். உங்கள் உடமைகளை பத்திரப்படுத்திக் கொள்ளவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்லவும். பேச்சிலும் கவனம் தேவை.

மாணவமணிகளுக்கு அவசர புத்தியால் பிரச்சினைகள் ஏற்படும். வீண் விவகாரங்களில் மாட்டிக் கொள்ள நேரிடும். எனவே "கொக்குக்கு ஒன்றே மதி' என்கிற ரீதியில் கல்வியிலும், விளையாட்டிலும் மட்டும் ஈடுபடவும்.

பரிகாரம்: வியாழக் கிழமைகளில் கறுப்பு கொண்டைக் கடலை மாலை அணிவித்து, குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும். "நம: சிவாய' என்ற திருவைந்தெழுத்தை தினசரி 108 முறையாவது ஜபிப்பது அவசியம்.

கடகம்


குரு பகவான் உங்களின் அஷ்டம ஸ்தானமான கும்ப ராசியிலிருந்து பாக்ய ஸ்தானமான மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த பாக்ய ஸ்தான சஞ்சாரத்தில் நிலம், வீடு போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும். மனதிற்கு இனிய பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். ஒன்றுக்கு இரண்டாக லாபம் தரும் அதிர்ஷ்ட முதலீடுகளைச் செய்வீர்கள். உங்கள் பெயரும், புகழும் உயரத் தொடங்கும். எதிர்கால முன்னேற்றத்திற்காக இப்போதே சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். அரசு வழியில் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும்.

குரு பகவானின் ஐந்தாம் இடப் பார்வை உங்கள் ராசியின் மீது படிவதால், தெளிவாகச் சிந்தித்து ஆக்கபூர்வமான முடிவுகளை எடுப்பீர்கள். தேவையான அளவு வருமானம் கிடைக்கும். உடல் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவீர்கள். அலைபாயும் மனது தெளிந்த நீரோடை போலாகும். அதேநேரம் மற்றவர்களின் வழக்கு விவகாரங்களில் தலையிடக் கூடாது.

குரு பகவானின் கனிந்த பார்வை உங்களின் தைரிய ஸ்தான ராசியின் மீதும், அங்கு சுப பலத்துடன் அமர்ந்துள்ள சனி பகவான் மீதும் படிவதால் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உங்களை அலட்சியப்படுத்தியவர்கள் சமாதானமாகி இணக்கமாகப் பழகுவார்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். நீங்கள் செய்யும் பூஜைகளும், ஜபங்களும் கைமேல் பலனளிக்கும் காலகட்டம் இது என்றால் மிகையாகாது.

குரு பகவானின் அருட்பார்வை உங்களின் பூர்வ புண்ய, புத்திர, புத்தி ராசியின் மீது படிவதால் முன்னோர்கள் சம்பாதித்த சொத்துக்கள் உங்கள் கையை வந்தடையும். அதிலிருந்து வருமானமும் வரத் தொடங்கும். உங்கள் குறிக்கோள்களை சுலபமாக எட்டிவிடுவீர்கள். குழந்தைகளை இன்பச் சுற்றுலா செல்ல அனுமதிப்பீர்கள். எதிர்வரும் ஆபத்துகளை உள்ளுணர்வால் புரிந்துகொண்டு அவை உங்களைத் தாக்காமல் காப்பாற்றிக் கொள்வீர்கள். சுய முயற்சி செய்து உயர்ந்த நிலைக்கு வந்துவிடும் கால கட்டம் இது.

உத்யோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் அனைத்தும் சுமுகமாக முடியும். அலுவலகத்தில் அனைவரிடமும் நன்றாகப் பழகுவீர்கள். உங்கள் வேலைகளை கவனம் சிதறாமல் பட்டியலிட்டுச் செய்து முடிப்பீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டு சில சலுகைகளையும் பெறுவீர்கள். அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை அடைவீர்கள்.

வியாபாரிகளின் பேச்சில் வசீகரம் கூடும். வாணிபம் சூடுபிடிக்கும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். வருமானம் அதிகரிக்கும். எல்லா நிலைகளிலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாக முடியும். போட்டியாளர்களின் சதியை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கூட்டாளிகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.
விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகி, வருமானம் பெருகும். பழைய குத்தகை பாக்கிகளும் வசூலாகும். கைநழுவிப் போன குத்தகை திரும்பக் கிடைக்கும். அதேநேரம் கால்நடை பராமரிப்புக்கு சற்று கூடுதல் செலவு செய்ய வேண்டிவரும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியிலும், வெளியிலும் செல்வாக்கு அதிகரிக்கும். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெற்று மகிழ்வீர்கள். சந்தோஷம் தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். வருமானம் சீராக இருக்கும். எதிர்கட்சியினரின் நடவடிக்கைகளை முன் கூட்டியே அறிந்துகொண்டு அதற்கேற்ப எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வெற்றி காண்பீர்கள்.

கலைத்துறையினர், உயர்ந்தவர்களை சந்தித்து உற்சாகம் அடைவீர்கள். புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். வருமானம் சிறப்பாக இருப்பதால் ரசிகர் மன்றங்களுக்கும் செலவு செய்து மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் உங்களைத் தேடி வரும்.
பெண்மணிகள் கணவரின் ஆதரவுடன் புதிய பொருட்களை வாங்கி ஆனந்தம் அடைவீர்கள். பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். விருந்துகளில் கலந்துகொள்வீர்கள். அதேநேரம் அறிமுகமில்லாதவர்களை நம்ப வேண்டாம். எவரிடமும் அனாவசியப் பேச்சு வேண்டாம்.

மாணவமணிகளுக்குக் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய மொழிகளைக் கற்க ஆசைப்படுவீர்கள். சிலருக்கு உயர் கல்வி படிப்பதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளி விளையாட்டுகளிலும் வெற்றி வாகை சூடுவீர்கள்.

பரிகாரம்: ராம பிரானையும், பக்த அனுமனையும் வழிபடவும். தினமும், இயன்ற வரை "ராம! ராம' என்று சொல்லிக் கொண்டே இருங்கள். இதனால் நற்பலன்கள், பல மடங்காகப் பெருகும்

சிம்மம்

குரு பகவான், உங்களின் சப்தம ராசியான கும்ப ராசியிலிருந்து அஷ்டம ராசியான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்த அஷ்டம ராசி சஞ்சாரம் அவ்வளவு சிறப்பில்லையென்றாலும் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் குரு பகவான் பெரும்பாலும் நற்பலன்களையே தரப் போகிறார் என்பதே உண்மை. இந்தக் காலகட்டத்தில் உங்கள் காரியங்களை அவசரப்படாமல் விவேகத்துடன் செய்யத் தொடங்குவீர்கள். நண்பர்கள் உங்களை நம்பிக்கையான விசுவாசியாக எண்ணி உங்களிடம் தங்கள் ரகசியங்களைப் பரிமாறிக் கொள்வார்கள். அவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

தாமதமாகவே வருமானம் கிடைத்தாலும் பொருளாதாரத்தில் சிரமம் ஏற்படாது. உங்களை அலைக்கழித்தவர்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு துணை புரிவார்கள். உங்களின் பேச்சுக்கு பிரத்யேக மரியாதை கிடைக்கும்.

குரு பகவான் ஐந்தாம் பார்வையாக அயன, சயன, விரய ராசியைப் பார்வை செய்வதால் பெற்றோர் வழியில் சிறு மருத்துவச் செலவுகள் உண்டாகும். காரணம் புரியாத புதிய வியாதிக்கு ஆளாகி செலவு செய்ய நேரிடும். ஆனால் அஞ்சத் தேவையில்லை. உங்களை நம்பி வந்து உதவி கேட்பவர்களுக்குத் தக்க உதவிகளைச் செய்வீர்கள். ஆலய தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

குரு பகவானின் கனிந்த பார்வை உங்களின் குடும்ப ஸ்தான ராசியின் மீது படிவதால் உங்களின் மதி நுட்பமும், பேச்சு சாதுர்யமும் அதிகரிக்கும். புதிய தொழில் நுட்பங்களையும், கலைகளையும் கற்பீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த உறவினர்கள் திரும்பி வந்து சேர்வார்கள். கல்வியில் சாதனை செய்வீர்கள்.

குரு பகவான் சுக ஸ்தானத்தை, தன் ஒன்பதாம் பார்வையால் பார்வை செய்வதால் குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வழக்கு விவகாரங்களில் தற்காலிகத் தீர்வைக் காண்பீர்கள். அதேநேரம் பூர்வீகச் சொத்துக்களைப் பராமரிக்க சிறிது செலவு செய்ய நேரிடும். இந்தக் கால கட்டத்தில் அவசர முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

உத்யோகஸ்தர்களுக்கு, உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். வேலைப் பளு அதிகரிப்பதால் "உத்யோகத்தை மாற்றலாமா...?' என்கிற எண்ணம் அவ்வப்போது தோன்றும். அதேநேரம் உத்யோகத்தை விட்டு விடக்கூடிய நிலைமையும் ஏற்படாது. சிலருக்கு விருப்பமில்லாத இடமாற்றம் கிடைக்கும். அதை ஏற்றுக் கொண்டு பொறுமையுடன் உழைப்பீர்கள். உங்கள் வருமானத்திற்கு எந்தக் குறைவும் ஏற்படாது. பிறகென்ன கவலை?

வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் லாபகரமாக இருக்கும். அனாவசிய செலவுகளைச் செய்ய விடாது கோள்களே தடுத்துவிடும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைக் காண்பீர்கள். கூட்டாளிகள் உங்களிடம் நட்புடன் நடந்து கொள்வார்கள். அதேநேரம் எல்லா முடிவுகளையும் கூட்டாளிகளைக் கலந்து ஆலோசித்த பிறகே எடுக்கவும்.

விவசாயிகள் திருப்திகரமான மகசூலைக் காண்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். பழைய கடன்களை அடைக்க நினைப்பீர்கள். விவசாய உதவியாளர்கள் உங்களுக்குப் பயன்படுவார்கள். மாற்றுப் பயிர்களையும் பயிரிட்டுப் பலனடைவீர்கள்.

இந்த ராசி அரசியல்வாதிகளின் மக்கள் தொண்டுகளுக்கு சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும். கட்சியில் மதிப்பும், மரியாதையும் உயரும். பலவழிகளிலும் வருமானம் பெருகும். அரசு அதிகாரிகள் உங்களுக்குத் தேவையான உதவிகளை செய்வார்கள். அதேநேரம் தொண்டர்களை அனுசரித்துச் செல்லவும்.

கலைத்துறையினருக்கு வருமானம் சீராக இருக்கும். உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளும் புதிய பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள். சக கலைஞர்களை எந்தக் காரணத்துக்காகவும் பகைத்துக் கொள்ளாமல் இருக்கவும். முக்கிய முடிவுகளை உயர்ந்தவர்களோடு ஆலோசித்து எடுக்கவும்.

பெண்மணிகள் இந்தக் காலகட்டம் முழுவதும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் குறையாது. குடும்பத்தில் இருந்த பிணக்குகள் சீராகும். கணவரின் அன்புப் பரிசாக புதிய ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் கூடுவார்கள்.

மாணவமணிகள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் முயற்சிக்குத் தகுந்தவாறு மதிப்பெண்களைப் பெறுவீர்கள். எனவே பாடங்களைப் பிறகு படித்துக் கொள்ளலாம் என்று நினைக்காமல் உடனுக்குடன் மனப்பாடம் செய்யவும். விளையாட்டில் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளவும். மற்றபடி வருங்காலக் கனவுகள் நிறைவேறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன! பெற்றோரிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: அடிக்கடி "சிவாலயம்' செல்வது மிகவும் நல்லது. இயன்றவர்கள், உத்திர மேரூர், காஞ்சிபுரம் சாலையில், உத்திரமேரூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள "திருப்புலிவனம்' என்ற தலத்தில் கோயில் கொண்டுள்ள தக்ஷிணாமூர்த்தியை அவசியம் தரிசிக்கவும். சிம்ம ராசிக்காரர்களுக்கான சிறந்த பரிகாரத் தலமிது. இங்கு தக்ஷிணாமூர்த்தி, சிம்மத்தின் மீது காலூன்றி இருப்பது விசேஷம்

கன்னி


குரு பகவான், உங்களின் சஷ்டம ராசியான கும்ப ராசியிலிருந்து சப்தம ராசியான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். சப்தம ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் சிறப்பான பலன்களை உங்களுக்கு வழங்குவார். விட முடியாமலும், பிடித்துக் கொண்டிருக்க முடியாமலும் தவித்த விஷயங்கள் நல்லபடியாக முடியும். நண்பர்கள் நாடி வந்து உதவிகளைச் செய்வார்கள்.

எதிர்காலத்திற்கான அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உங்களை எதிர்த்தவர்கள் காணாமல் போய்விடுவார்கள். படிப்படியாக வருமானம் உயரும். வெளிநாடு செல்ல விசாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் விசா கிடைத்து வெளிநாடு செல்வார்கள். நீண்ட நாட்களாகத் துன்புறுத்தி வந்த உடல் உபாதைகளிலிருந்து விடுதலை ஆவீர்கள். விரக்தி மனப்பான்மையை விட்டொழித்து, நம்பிக்கைச் சின்னமாக வலம் வருவீர்கள்.

குரு பகவானின் கனிந்த பார்வை உங்களின் லாப ஸ்தான ராசியின் மீது படிகிறது. இதனால் உங்கள் திட்டங்கள் சரியான இலக்கைச் சென்றடையும். "ஸ்பெகுலேஷன்' துறைகளிலும் ஆதாயம் கிடைக்கும். சரியான நேரத்தில் ஆகாரத்தை உட்கொள்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆலயத் திருப்பணிக்கு செலவு செய்து இறைவனின் அருளைப் பெறுவீர்கள்.

குரு பகவானின் ஏழாம் பார்வையான அருட்பார்வை உங்களின் ஜன்ம ராசியின் மீதும், அங்கு அமர்ந்திருக்கும் சனி பகவானின் மீதும் படிவதால் மனதில் வைராக்யம் கூடும். "நடப்பதெல்லாம் நன்மைக்கே' என்று சிந்தித்துத் தெளிவுடன் செயல்படுவீர்கள். அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு தோல்விகளைக் கண்டு துவண்டு விடமாட்டீர்கள். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். சில காலமாக புரியாமல் இருந்த விஷயங்களின் மர்ம முடிச்சுகள் அவிழும்.

குரு பகவான், உங்களின் தைரிய ஸ்தான ராசியைப் பார்வை செய்வதால் சகோதர, சகோதரி வழியில் நன்மைகளை அடைவீர்கள். விலகியிருந்த உற்றார், உறவினர்கள் திரும்ப வந்து இணைவார்கள். அதேநேரம் புதிய நண்பர்களிடம் தாமரை இலைத் தண்ணீர் போல் பழகி வரவும். அகலக் கால் வைக்க வேண்டாம். எவருக்கும் முன் ஜாமீன் போடுவதோ, உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுப்பதோ கூடாது.

உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். உங்களின் மேலதிகாரிகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். இருப்பினும் உங்கள் வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்தால் குழப்பங்களிலிருந்து தப்பிக்கலாம். மேலும் நிதானமாகப் பேசவும். மற்றபடி பொருளாதார வசதி மேம்படும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும்.

வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவீர்கள். புதிய யுக்திகளைப் புகுத்தி விற்பனையைப் பெருக்குவீர்கள். வெளியில் கொடுத்திருந்த பணம் உங்கள் கை வந்து சேரும். புதிய கூட்டாளிகளுடன் சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ஆனால் எதிலும் கவனம் தேவை.

விவசாயிகள், ஆதாயங்களைப் பெறக் கடினமாக உழைக்க வேண்டிவரும். நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நீரைத் தேக்கி வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சந்தையில் அதிகப் போட்டிகளை சந்திக்க நேரிடும். என்றாலும் கால்நடைகளாலும், பால் வியாபாரத்தாலும் பலன் அடைவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றகரமான சூழ்நிலை அமையும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அதேநேரம் கோர்ட் விவகாரங்களில் விட்டுக் கொடுத்துச் செல்லவும்.

கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதன் மூலம் பெயரும், புகழும் பெறுவீர்கள். துறையில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். சமுதாயப் பணி செய்து நற்பெயர் வாங்குவீர்கள். சக கலைஞர்களுடன் தூர தேசப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பெண்மணிகள் ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். தந்தை வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். உற்றார், உறவினர்களைச் சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். குழந்தைகளின் எதிர்காலத்தில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள்.

மாணவமணிகள் தினமும் நன்றாகப் படித்துத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பேச்சைக் கேட்டு நடப்பீர்கள். உடல் ஆரோக்யத்திற்குத் தேவையான உடற்பயிற்சிகளை செய்வீர்கள். என்றாலும் கடினமான பயிற்சிகள் வேண்டாம்.

பரிகாரம்: இந்தக் காலகட்டம் முழுவதும் "ஜெயஜெய துர்கா' என்று ஜபித்து வரவும். கழுத்தில் எப்போதும் ஒரு "ஐந்து முக ருத்ராக்ஷம்' அணிந்திருப்பது, திருஷ்டி தோஷங்களைப் பொசுக்கிவிடும்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011 Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011

Post by krishnaamma Thu 2 Dec 2010 - 23:04

துலாம்

குரு பகவான், உங்களின் பூர்வபுண்ய புத்திர ஸ்தான ராசியான கும்ப ராசியிலிருந்து சஷ்டம ராசியான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்த ஆறாம் ராசியில் குரு பகவான் சஞ்சரிப்பது அவ்வளவு விசேஷமில்லை என்றாலும், தன் சொந்த ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் நலமே உண்டாகும். இந்தக் காலகட்டத்தில் கடுமையாகப் போராடி உங்கள் செயல்களில் வெற்றி வாகை சூடுவீர்கள். மாற்றுக் கருத்து கொண்டோர்களிடமும் பக்குவமாக நடந்துகொண்டு காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை நம்புவீர்கள். குடும்பத்திற்காக சில தியாகங்களைச் செய்வீர்கள். நேர்முக - மறைமுக எதிர்ப்புகள் ஏற்படாது. எதிர்பார்த்த அளவு கடனுதவி கிடைக்கும். இதன் மூலம் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும் அதை முடித்துவிட்டுத்தான் மறுவேலை என்ற வைராக்யம் உண்டாகும்.

குரு பகவானின் ஐந்தாம் பார்வை உங்களின் தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்வதால், தொழில் சீராகவே நடக்கும். பெரிய இழப்புகள் ஏற்படாது. நண்பர்களையும் உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களையும் பகைத்துக் கொள்ளாமல் தட்டிக் கொடுத்துச் செல்வீர்கள். பழைய நண்பர்களையும் மறக்கமாட்டீர்கள். அதேநேரம் எவருக்கும் அவர்கள் கேட்காமல் அறிவுரைகளைக் கூற வேண்டாம்.

குரு பகவானின் ஏழாம் பார்வை உங்களின் அயன-சயன மோட்ச ராசி மீதும், அதில் அமர்ந்துள்ள சனி பகவான் மீதும் விழுவதால் குடும்பத்திலிருந்து பிரிந்திருந்தவர்கள் மறுபடியும் இணைவார்கள். வாழ்க்கையில் விரக்தியடைந்தவர்களுக்கு நம்பிக்கை துளிர்விடும். விரயங்கள் ஏற்படாது. வருமானம் கையில் தங்கும்.

உத்யோகத்திற்காகவோ அல்லது கல்வி கற்பதற்காகவோ வெளிநாடு செல்லும் வாய்ப்பு, சிலருக்குக் கிடைக்கும்.
குரு பகவானின் ஒன்பதாம் பார்வை உங்களின் குடும்ப ஸ்தானத்தின் மீது படிவதால் மேல்தட்டு மக்களின் ஆதரவு கிடைக்கும். அரசு அதிகாரிகள் உதவி செய்வார்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். நூதனமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். கடினமான வேலையாக இருந்தாலும் அவற்றை சரியாக முடித்துக் கொடுப்பீர்கள். திறமைசாலி என்று பெயர் வாங்குவீர்கள். உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களிடம் நட்போடு பழகுவீர்கள். அதேசமயம் மனதில் காரணமில்லாத பதற்றம் குடி கொண்டிருக்கும்.

வியாபாரிகள் வியாபாரத்தில் அனுகூலமான சூழலைக் காண்பீர்கள். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பீர்கள். வருமானம் சீராக இருந்தாலும் தொழிலை பெரிய அளவில் விரிவுபடுத்த முடியாத நிலை ஏற்படும். தனிக்காட்டு ராஜாவாக இருந்த நீங்கள், இந்தக் கால கட்டத்தில் போட்டிகளைச் சந்திக்க நேரிடும்.

விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். இதனால் புதிய வாழ்க்கை வசதிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். என்றாலும் உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய மாட்டார்கள். அதனால் சுய முயற்சிகளைக் கூட்டிக்கொண்டு உழைக்க வேண்டி வரும். இது தவிர கால்நடைகளையும் மிகுந்த கவனத்துடன் பராமரிக்கவும்.

அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் கருணையோடு நடந்து கொள்ளும். புதிய பொறுப்புகளையும் வழங்கும். உங்களின் பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். அதேநேரம் தொண்டர்களால் சில சிக்கல்களைச் சந்திப்பீர்கள். எனவே அனாவசியப் பயணங்களையும் தவிர்க்கவும்.

கலைத்துறையினருக்கு இந்த குரு பெயர்ச்சிக் காலத்தில் வரவேற்பு அதிகரிக்கும். திறமைக்குத் தக்க அங்கீகாரமும், விருதுகளும் கிடைக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். அதேநேரம் மனதில் ஏற்படும் எண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்த முனைய வேண்டாம். ஆடம்பரச் செலவுகளையும் தவிர்க்கவும்.
பெண்மணிகளுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலத்தில் கவனம் செலுத்தவும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எதற்காகவும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். உடல் நலத்தில் அக்கறை காட்டவும்.

மாணவமணிகள் பெருமைப்படும்படி மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிறிய விஷயங்களுக்காக நண்பர்களுடன் சண்டை போடுவதைத் தவிர்க்கவும். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும்.

பரிகாரம்: ஆஞ்சநேயப் பெருமானை வழிபடவும். ""ஜெய்ராம், சீதாராம்'' என்று எப்போதும் ஜபிப்பதால் அனுமனின் கருணையை எளிதில் பெறலாம்.


விருச்சிகம்


குரு பகவான் உங்களின் சுக ஸ்தான ராசியான கும்ப ராசியிலிருந்து பூர்வபுண்ய புத்திர புத்தி ஸ்தானமான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். பூர்வபுண்ய ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், குடத்திற்குள் இட்ட விளக்காக இருந்த உங்களை, இனி வெளிச்சத்திற்குக் கொண்டு வருவார். புதுப்புது வழிகளில் வருமானம் வரும். எடுத்த காரியங்கள் குறித்த காலத்திற்கு முன்பாகவே முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். குழந்தைகள் பாராட்டுகளும், விருதுகளும் பெறுவார்கள். தீயவர்கள் உங்களிடமிருந்து தானாகவே விலகிவிடுவார்கள். உங்களின் தெய்வ பலம் அதிகரிக்கும்.

குரு பகவானின் அருள்பார்வை உங்களின் பாக்ய ஸ்தானத்தின் மீது படிவதால் பூர்வீகச் சொத்துக்கள் வழியில் வருமானம் வரத் தொடங்கும். வழக்குகள் வெற்றியடையும். அரசு வழியில் நன்மைகள் உண்டாகும். திருடு போயிருந்த பொருட்கள் திரும்பக் கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் பெயரும், புகழும் உயரும். சிலருக்கு முக்கியப் பதவிகள் கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடபுடலாக நடக்கும்.

குரு பகவானின் கனிந்த பார்வை உங்களின் லாப ஸ்தானத்தின் மீதும், அங்கு பலமாக அமர்ந்துள்ள சனி பகவானின் மீதும் படிவதால், "பருத்தி புடவையாய்க் காய்த்தது' என்பார்களே... அதுபோல் தேடாமலேயே விரும்பியவை கிடைக்கும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல் எந்த விஷயத்திலும் லாபத்தை இரட்டிப்பாகக் காண்பீர்கள். உங்களின் செல்வாக்கு உயரும். அதிகாரம் செய்யக்கூடிய பதவிகள் தேடி வரும்.

குரு பகவானின் அதிர்ஷ்டப் பார்வை உங்களின் ராசியின் மீது விழுவதால் தோற்றத்தில் மிடுக்கு உண்டாகும். வாசனை திரவியங்களைப் பூசிக் கொண்டு புத்துணர்ச்சியோடு காட்சியளிப்பீர்கள். எதிர்பாராத சில அற்புதங்கள் நடக்கும். அனுகூலம் தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். வாகனம், நிலம், வீடு ஆகியவற்றை வாங்குவீர்கள். தேக ஆரோக்யம் சிறப்பாக இருக்கும்.

உத்யோகஸ்தர்கள், அலுவலக வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். இதனால் மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள். எதிர்பார்த்திருந்த ஊதிய உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளைக் குறித்த காலத்திற்குள் முடித்துவிடுவீர்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள்.

வியாபாரிகள் நல்ல லாபம் ஈட்டுவீர்கள். தைரியமாக அனுபவம் இல்லாத தொழிலில்கூட ஈடுபடுவீர்கள்; அதில் வெற்றியும் காண்பீர்கள். சிலருக்கு வியாபாரிகள் சங்கங்களில் பொறுப்புகள் கிடைக்கும். உங்களின் சொல்லுக்கு மதிப்பு கூடும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். புதிய நிலம் குத்தகைக்கு வந்து சேரும். விவசாயத்தைப் பெருக்க புதிய உபகரணங்களை வாங்குவீர்கள். மேலும் கூடுதல் வருமானத்தைப் பெறக் காய்கறிகள், பழங்கள், கிழங்குகள் எனப் பயிர் செய்து பலன் பெற வழி கிடைக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத் தக்க உதவிகளை செய்யவும்.

அரசியல்வாதிகள் தங்களின் எண்ணங்களை சரியாக வெளிப்படுத்தவும். ஏனென்றால் உங்கள் எண்ணங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். மேலும் முக்கியப் பிரச்சினைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். மற்றபடி கடந்த கால உழைப்புகளுக்கு இந்தக் காலகட்டத்தில் பலன் கிடைக்கும். பிரச்சாரத்திற்கு அதிக நேரம் ஒதுக்குவீர்கள்.

கலைத்துறையினருக்குப் புகழும், பொருளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக நீங்கள் செய்யும் முயற்சிகள் பலனளிக்கும். ரசிகர்களின் ஆதரவு பெருகும். உங்களின் வசீகரப் பேச்சினால் அனுகூலங்களைக் காண்பீர்கள். மற்றவர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள்.

பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். கணவரிடம் பாசம் அதிகரிக்கும். பிள்ளைப் பேறில்லாதோர்க்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். எப்போதும் உங்களின் தகுதிக்கு மீறி ஆசைப்பட வேண்டாம்.
மாணவமணிகள் புதிய உற்சாகத்துடன் பாடங்களைப் படிப்பீர்கள். ஓய்வு எடுப்பதைக் குறைத்துக் கொண்டு பாடங்களை மனப்பாடம் செய்தால் இன்னும் அதிக மதிப்பெண்களை அள்ளலாம். மற்றபடி விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வெற்றிவாகை சூடி பள்ளிக்குப் பெருமை சேர்ப்பீர்கள்.

பரிகாரம்: முடிந்த போதெல்லாம் "ராம' நாமத்தை ஜபிக்கவும். அதுவே சிறந்த பரிகாரம்.


தனுசு
குரு பகவான் உங்களின் இளைய சகோதர தைரிய ஸ்தான ராசியான கும்ப ராசியிலிருந்து சுக ஸ்தான ராசியான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், உங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவார். இளம் பருவத்தினர், கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அனைவர்க்குமே தாய் வழியில் நன்மைகள் கிடைக்கும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உங்களின் புத்திசாலித்தனம் அதிகரிக்கும்.

தன்னம்பிக்கையுடன் உங்கள் காரியங்களை செய்வீர்கள். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். எளிதில் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம். தீயோர்களின் சேர்க்கையைத் தவிர்க்கவும். புதிய முயற்சிகளை நண்பர்களைக் கலந்தாலோசித்த பிறகே செயல்படுத்தவும்.

குரு பகவானின் பார்வை உங்களின் அஷ்டம ராசியின் மீது படிவதால் நீங்கள் தைரியத்துடன் உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம். செலவுகளையும், விரயங்களையும் கட்டுப்படுத்தி சேமிப்புகளை உயர்த்திகொள்வீர்கள். உங்கள் காரியங்களைக் குறுக்கு வழிகளைத் தவிர்த்து நேரிடையாகச் செய்து முடிப்பீர்கள். நெடுநாட்களாகத் துன்புறுத்திக் கொண்டிருந்த உடல் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

குரு பகவானின் பார்வை உங்களின் தொழில் ஸ்தானத்தின் மீதும், அங்கு அமர்ந்துள்ள சனி பகவானின் மீதும் படிவதால் புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். உங்களின் நிர்வாக ஆற்றல் அதிகரிக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும்; சுறுசுறுப்புடன் இயங்குவீர்கள்.

குரு பகவானின் பார்வை உங்களின் அயன, சயன, மோட்ச ஸ்தானத்தைப் பார்வை செய்வதால், இதுவரை சரிவர கவனிக்க முடியாமல் கிடந்த காரியங்களை கவனமாக முடித்துவிடுவீர்கள். மகான்களை சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

உத்யோகஸ்தர்களைப் பொறுத்தவரை தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி வாகை சூடுவீர்கள். மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். சிலருக்குப் புதிய உத்யோகத்திற்கு மாறும் யோகம் உண்டாகும். அலுவலக ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள்.

வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்தி லாபத்தைப் பெருக்குவீர்கள். அரசாங்கத்திலிருந்து சலுகைகளைப் பெறுவீர்கள். கடுமையாக உழைக்க நேரிடும். வாகனங்களுக்கு சிறிது பராமரிப்புச் செலவுகள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆயினும் நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

விவசாயிகளுக்கு பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும். தானிய விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். பழைய குத்தகை பாக்கிகளைத் திருப்பி அடைப்பீர்கள். அதே சமயம் உங்கள் வருமானத்தைப் பங்கு போட நினைக்கும் இடைத்தரகர்களிடம் கவனமாக இருக்கவும்.

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். நேர்த்தியாகச் செயலாற்றுவீர்கள். எதிரிகளால் தொல்லை ஏற்படாது என்றாலும் கவனமாக இருக்கவும். நிதானமாகப் பேசவும். குறிப்பாக மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களால் மன நிம்மதி அடைவீர்கள். வருமானம் சீராக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களிடமிருந்து சிறுசிறு நுணுக்கமான விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். ரசிகர்களின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெற்றி பெறுவீர்கள்.

பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். தடைபட்ட திருமணம் சிறப்பாக நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். அதேநேரம் குடும்பச் சொத்து விஷயங்களில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்பட வாய்ப்பில்லை.

மாணவமணிகள் கல்வியில் முதல் இடத்தைப் பெறுவீர்கள். பெற்றோர்களுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். விரும்பிய துறையில் முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களால் ஏற்படும் இடையூறுகளை சாதுர்யத்துடனும், பொறுமையுடனும் சமாளிப்பீர்கள். அதேநேரம் விளையாட்டுத்தனத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம்: "நம: சிவாய' என்று ஜபித்துக்கொண்டே சிவபெருமானை வழிபட்டு வரவும். நவகிரகத்தில் சனி பகவானுக்கு எள் தீபமேற்றி வழிபடவும்.


மகரம்

குரு பகவான் உங்களின் தனம், வாக்கு, குடும்ப ஸ்தான ராசியான கும்ப ராசியிலிருந்து இளைய சகோதர தைரிய ஸ்தான ராசியான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்த தைரிய ஸ்தான சஞ்சாரத்தினால் கடினமான செயல்களையும் தைரியத்துடன் செய்து முடித்துவிடுவீர்கள். இந்தச் சூழ்நிலையில் உங்களின் சமயோஜித புத்தி உங்களுக்குக் கைகொடுக்கும். அமைதியாகவும், சீரிய ஒழுக்கத்துடனும் செயலாற்றுவீர்கள். சுயநலமில்லாமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். வறியோர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்வீர்கள். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் உங்களை வந்தடையும்.
குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தினருடன் இணக்கமாக வாழ்வீர்கள். அதேநேரம் இந்தக் காலகட்டத்தில் மனதில் பட்டதையெல்லாம் வெளியில் சொல்லிவிட வேண்டாம்.

குரு பகவானின் ஐந்தாம் பார்வை உங்களின் சப்தம ராசியின் மீது படிவதால் மனதிற்கினிய பயணங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்கள், நண்பர்களால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும். பல ஆண்டுகளாகப் பார்க்காமல் இருந்த நண்பர்கள் சிலரை சந்தித்து மகிழ்வீர்கள். விழாக்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். உங்களின் மீது அபாண்டமாகப் பழி சுமத்தியவர்கள், உங்களிடம் மன்னிப்பு கேட்பார்கள்.

குரு பகவானின் பார்வை உங்களின் பாக்ய ஸ்தானத்தின் மீது படிவதால் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். ஸ்பெகுலேஷன் துறைகளின் மூலம் ஆதாயம் கிடைக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தால் பிறரிடம் நன்மதிப்பைப் பெறுவீர்கள். எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து தன்னம்பிக்கையுடன் சிந்திக்கத் தொடங்குவீர்கள். பாதியில் நின்றுபோன வீட்டைக் கட்டி முடிப்பீர்கள்.

குரு பகவானின் கனிந்த பார்வை உங்களின் லாப ஸ்தானத்தின் மீது படிவதால் பயத்துடன் அனுகிய விஷயங்கள் சாதகமாக முடிவடையும். தனிமையில் வருந்திய உங்களின் மனம் தெளிவடையும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களிலிருந்து ஆதாயங்கள் கிடைக்கும். விட்டதைப் பிடிக்கும் காலமாகவும், புதியவற்றைத் தொடங்கும் காலமாகவும் இந்த குரு பெயர்ச்சி அமையும் என்றால் மிகையில்லை.

உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பாராத நிம்மதி கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். சக ஊழியர்களும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். தற்காலிகப் பணி நீக்கத்தில் இருந்தவர்கள், "குற்றமற்றவர்கள்' என்று நிரூபிக்கப்பட்டு வேலையில் சேர்ந்துவிடுவார்கள்.

வியாபாரிகளுக்கு புதிய முயற்சிகள் கைகூடும். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களை சார்ந்து செய்து வந்த தொழிலை தனித்து நின்று நடத்த முயல்வீர்கள். விற்பனை விறுவிறுப்பாக நடக்கும். கூடுதலாக உழைத்து, மன உறுதியுடன் செயல்பட்டு வருமானத்தைப் பெருக்க முனைவீர்கள்.

விவசாயிகள் புதிய சாதனங்களை வாங்கி விவசாயத்தைப் பெருக்குவீர்கள். திடீரென்று கடன் பிரச்சினைகள் முளைத்தாலும் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சந்தையில் உங்களின் விளைபொருட்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். விவசாயக் கூலிகளுக்கு உதவிகளை செய்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்குக் கட்சியில் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். அதோடு "உட்பகை'யால் போட்டிகளையும் சந்திக்க நேரிடும். உங்கள் திட்டங்களைப் பொறுமையுடன் செயல்படுத்தவும். இருப்பினும் போராட்டங்களில் புதிய வேகத்துடன் ஈடுபடுவீர்கள். கட்சி ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள்.
கலைத்துறையினரைப் பொறுத்தவரை புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். புதிய பாணியில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சக கலைஞர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள். சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு வளர்ச்சி அடைவீர்கள்.

பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். குழந்தைகளின் எதிர்காலத்துக்காக சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். கணவரோடு ஒற்றுமையாகப் பழகுவீர்கள். அதேநேரம் மனதில் காரணமில்லாமல் அமைதி குறையும். அப்போதெல்லாம் திருமகளை தியானம் செய்யவும்.

மாணவமணிகள் படிப்பில் கவனம் சிதறாமல் இருப்பீர்கள். பாடங்களை மனப்பாடம் செய்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு உந்து சக்தியாக அமையும்.

பரிகாரம்: மஹாலட்சுமியை வழிபடுங்கள். நவகிரகத்தில் ராகு பகவானுக்கு தீபமேற்றுங்கள்.


கும்பம்
குரு பகவான் உங்களின் ஜன்ம ராசியான கும்ப ராசியிலிருந்து தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்தக் காலகட்டத்தில் நீங்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பீர்கள். ஆகாரத்தைக்கூட சரியான நேரத்தில் உட்கொள்ள முடியாதபடி கடினமாக உழைப்பீர்கள். அந்த உழைப்புக்குத் தகுந்த பண வரவும் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட வீண் சண்டை சச்சரவுகள் மறையும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். பொருளாதாரம் சீராக இருப்பதால் இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். கர்வத்தை விட்டொழித்துவிட்டு அனைவரிடமும் சகஜமாகப் பழகி உங்களின் நற்பெயரைக் காப்பாற்றிக்கொள்வீர்கள்.

குருபகவான் தன் ஐந்தாம் பார்வையால் உங்களின் ருண (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தான ராசியைப் பார்வை செய்வதால் உங்களின் தைரியமும், தன்னம்பிக்கையும் வளரும். சிக்கல் ஏற்படும் என்று ஒதுக்கி வைத்திருந்த காரியங்களைக்கூட புதிய மெருகுடன் செய்து முடிப்பீர்கள். சந்தேகப்படாமல் நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியவை தடங்கலின்றிக் கிடைத்துவிடும். சந்தர்ப்பங்களை உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். அதேநேரம் அகலக் கால் வைப்பது ஆகாதென்பதை அறியவும்.

குரு பகவான் ஏழாம் பார்வையினால் உங்களின் அஷ்டம ஸ்தானத்தையும், அங்கு அமர்ந்துள்ள சனி பகவானையும் பார்வை செய்கிறார். இதனால் இறங்குமுகமாக இருந்த வருமானம் ஏறத் தொடங்கும். மனக் கசப்புடன் இருந்த சகோதர, சகோதரிகள் நட்புக்கரம் நீட்டுவார்கள். "தோற்றுவிடுவோம்' என்று நினைத்திருந்த வழக்குகள் திடீரென்று உங்களுக்குச் சாதகமாக திசை மாறும். இருப்பினும் முன்பின் யோசிக்காமல் எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

குரு பகவான் தன் ஒன்பதாம் பார்வையினால் உங்களின் தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் உங்களின் தகுதிக்கு மீறிய பதவிகள் உங்களைத் தேடி வர வாய்ப்புண்டு. உங்கள் காரியங்களைப் பதற்றப்படாமல் செய்து முடிப்பீர்கள்.

மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிப் புகழடைவீர்கள். சிலருக்கு உபரி வருமானத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்; விருது பெரும் யோகமும் உண்டாகும். இந்த குருப் பெயர்ச்சிக் காலத்தில் சமுதாயத்தில் உங்கள் புகழும், செல்வாக்கும் பல மடங்காக உயரும்.

உத்யோகஸ்தர்கள் அனைவரிடமும் சுமுகமாகப் பழகுவீர்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். அலுவலகப் பயணங்களால் நன்மை உண்டாகும். ஊதிய உயர்வு கிடைப்பதில் ஏற்பட்ட தடை நீங்கும். அதேநேரம் உடலில் சோர்வு ஏற்பட்டு சுறுசுறுப்பு குறையும். தினமும் "நடைப் பயிற்சி' செய்து, சோர்வை விரட்டி அடியுங்கள்.

வியாபாரிகள் சிக்கல்களைத் தாண்டி சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். உங்களைத் தேடிப் பல வகையிலும் வருமானம் வரும். பழைய கடன்கள் வசூலாகும். அதேசமயம் செலவு செய்யும் நேரத்தில் கவனமாக இருக்கவும். போட்டி, பொறாமைகள் கூடுதலாக இருப்பதால் எச்சரிக்கை தேவை.

விவசாயிகளுக்குக் கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக கால்நடைகளை வைத்திருப்போர் எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவீர்கள். நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்திக்கொள்ள முயற்சி செய்வீர்கள். உழைப்புக்கேற்ற பலனை அடைவதில் தாமதம் ஏற்பட்டாலும், இறுதி வெற்றி உங்களுக்கே!

அரசியல்வாதிகளுக்குக் கட்சியில் மதிப்பு, மரியாதை உயரும். இதனால் அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் செயல்கள் எதிர்பார்த்த திருப்பங்களை ஏற்படுத்தும். எதிர்கட்சியினரிடம் அனாவசிய நெருக்கம் வேண்டாம். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும்.

கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்களை செய்வதில் சில தடைகள் ஏற்படலாம். ஆயினும் வருமானம் சீராக இருக்கும். ரசிகர் மன்றங்களுக்கு சிறிது செலவு செய்ய நேரிடும். மற்றபடி உங்களின் கடமையை உணர்ந்து செயல்படுவீர்கள். சக கலைஞர்களும் உங்களுக்கு உதவுவார்கள்.

பெண்மணிகள், இத்தனைக் காலம் வாட்டிய விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். உங்களை நாடி வரும் நண்பர்களுக்குத் தயங்காமல் உதவி செய்வீர்கள். குடும்பத்தினரின் அன்பைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்யத்திற்காக யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றை செய்வீர்கள். பிறரிடம் பேசும் நேரத்தில் கவனமாக இருக்கவும்.
மாணவமணிகள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள். உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களை அள்ளுவீர்கள். பெற்றோர்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்ளவும். பிடிவாத குணத்தை விட்டொழிக்கவும்.

பரிகாரம்: கணேசரை வழிபடவும். முடிந்தவரை "சங்கஷ்ட நாசன கணேச ஸ்தோத்திரம்' பாராயணம் செய்து வரவும்.


மீனம்

குரு பகவான் உங்களின் அயன, மோட்ச ராசியான கும்ப ராசியிலிருந்து உங்களின் ஜன்ம ராசியான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்தக் காலகட்டத்தில் உங்களின் தயாள குணமும், தர்ம குணமும் வளரும். மன நெருக்கடியிலிருந்து மீண்டு தெளிவடைவீர்கள். தெய்வ வழிபாட்டைத் தவறாது மேற்கொள்வீர்கள். உங்களின் திறமையால் புதிய நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். தேகத்தில் பொலிவு ஏற்படும். மிடுக்காக இருப்பீர்கள்.

இந்தக் காலகட்டத்தில் குரு பகவான் உங்களின் பூர்வ புண்ய புத்திர புத்தி ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். புத்திரகாரகர், புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் குழந்தைகளால் பெருமை ஏற்படும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும். உங்களுக்கு விருப்பமான துறைகளில் ஈடுபட்டு, சாதனை செய்வீர்கள். எந்த விஷயத்தையும் நுனிப் புல் மேயாமல் அடி வரை சென்று ஆராய்ந்து செய்து முடிப்பீர்கள். பெரியோர்களை வணங்கிப் போற்றுவீர்கள்.

குரு பகவான், தன் ஏழாம் பார்வையினால் உங்களின் ஏழாம் இடத்தையும் அங்கு அமர்ந்துள்ள திக் பலம் பெற்றுள்ள சனி பகவானையும் பார்வை செய்வதால் நெடுநாட்களாக திருமணத் தடையால் அவதிப்பட்டவர்கள், இந்த சஞ்சார காலத்தில், "சம்சாரி'களாக ஆவார்கள். நண்பர்களையும் உற்றார், உறவினர்களையும் உங்களின் நகைச்சுவைப் பேச்சினால் சந்தோஷப்படுத்துவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத் தக்க நேரத்தில் தேவையான உதவிகளை செய்வீர்கள். அதேநேரம் திடீர் திடீரென்று செயல் திட்டங்களை மாற்றிக்கொண்டே இருப்பதால் சரியான இலக்கை அடையத் தாமதமாகும். எனவே, எண்ணித் துணிக கருமம்!

குரு பகவானின் ஒன்பதாம் பார்வை, உங்களின் பாக்ய ஸ்தான ராசியின் மீது படிவதால் பெற்றோர் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். அவர்களுக்கும் நீங்கள் உதவி செய்வீர்கள். தொலை தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிரிகளையும் வசப்படுத்திவிடுவீர்கள். குடும்பத்தில் அமைதி பூத்துக் குலுங்கும். மன நலமும், உடல் நலமும் சீராகவே இருக்கும். உங்களின் ஆன்மீக பலம் சிறப்படையும்.

உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவினால் வேலைப் பளு குறையும். ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் கிடைத்ததை ஏற்றுக்கொண்டு பொறுமையாக இருக்கவும். மற்றபடி உங்கள் எண்ணங்களைப் பக்குவமாக மேலதிகாரிகளிடம் எடுத்துக் கூறி, பாராட்டு பெறுவீர்கள்.

வியாபாரிகளுக்கு போட்டியாளர்களால் சில எதிர்ப்புகள் தோன்றினாலும் அவற்றை சமாளிப்பீர்கள். வியாபாரத்திற்காகக் கடன் வாங்க நேரிடும். பொருட்களை கடனுக்கு விற்பதையும் தவிர்க்க முடியாது. ஆயினும் உங்கள் நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். அதனால் சமாளித்துவிட முடியும். புதிய சந்தைகளை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்க வாய்ப்புண்டாகும். உங்கள் செல்வாக்குக்கு எந்தக் குறைவும் வராது.

விவசாயிகள் கூடுதல் விளைச்சலைக் காண்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். தரமான விதைகளை வாங்கி மகசூலை இரு மடங்காக்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உபரி வருமானங்களுக்காக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.

அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். தொண்டர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தவும். உட்கட்சிப் பூசலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். புதிய பொறுப்புகள் உங்களை வந்தடையும். அரசு அதிகாரிகளிடம் செல்வாக்கு அதிகரிக்கும்.

கலைத்துறையினரின் விடாமுயற்சிகள் பெரும் வெற்றிகளைக் கொடுக்கும். சமூகத்தில் பெயரும், புகழும் உண்டாகும். ஆயினும் கடின முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களைக் குறை சொல்லும் சக கலைஞர்களைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம்.

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் பிரிந்தவர்கள் கூடுவார்கள். அதேநேரம் பெற்றோர் வழியில் சிறிது மருத்துவச் செலவுகள் செய்ய வேண்டிவரும். மேலும் சகோதர, சகோதரிகளிடம் எல்லா "உண்மைகளையும்' போட்டு உடைப்பதைத் தவிர்த்துவிடுங்களேன்!
மாணவமணிகள் பாடுபட்டுப் படித்தால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். பெற்றோர்களின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள்.

பரிகாரம்: முருகப் பெருமானை வழிபட்டு வரவும். செவ்வாய்க்கிழமையன்று "கந்த சஷ்டி கவசம்' பாராயணம் செய்யவும்.

நன்றி தினமணி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011 Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011

Post by அன்பு தளபதி Thu 2 Dec 2010 - 23:50

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011 Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011

Post by வினுப்ரியா Fri 3 Dec 2010 - 0:03

நல்ல பதிவு
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011 Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011

Post by கலைவேந்தன் Fri 3 Dec 2010 - 0:38

நன்றிங்...!

- சிம்மராசிக்காரன்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011 Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011

Post by தாமு Fri 3 Dec 2010 - 9:06

நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011 Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011

Post by புவனா Fri 3 Dec 2010 - 9:16

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011 678642 குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011 678642 குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011 154550 குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011 154550


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011 Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum