ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு

+5
krishnaamma
அன்பு தளபதி
புவனா
கார்த்திக்
balakarthik
9 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 5 Empty கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு

Post by balakarthik Thu Dec 02, 2010 1:35 pm

First topic message reminder :

அவர் கொஞ்சம் பெரிய ஆள். ஒரு பெரிய குழுமத்தின் President – HR. அவரை சந்திக்க போகும்போது வழக்கமான கட்டம் போட்ட சட்டை சரிவராது என முடிவு செய்தேன். என்னடா செய்யலாம் என என் ரூமிலே யோசித்தபோது நம்ம ஏவிஎம் சரவணன் நினைவுக்கு வந்தார். எப்போதும் வெள்ளைச் சட்டையில் வலம் வரும் அவரை எல்லோரும் ஒரு மரியாதையுடன் பார்ப்பதை பார்த்திருக்கிறேன். விவேக் கூட ஒரு படத்தில் வெள்ளைச்சட்டையின் மகிமையை சொல்லியிருப்பார்.ஆக நம்ம காஸ்ட்யூம் வெள்ளைச் சட்டைதான் என்பது முடிவானது. ஆனால் வெள்ளைச் சட்டைக்கு எங்கே போவது? சாயம் போகாது என்ற ஒரே ஒரு அட்வாண்டேஜ் உடைய சட்டையை வாங்க நான் என்ன 16 வயது பள்ளி மாணவனா, அல்லது 170,00,000 கோடி(முட்டை கரெக்டா) ஆட்டையைப் போட்ட அரசியல்வாதியா? புதிதாய்தான் வாங்க வேண்டும். கடையினுள் நுழைந்தவுடன் காலர் வச்ச டீஷர்ட், காலர் இல்லா டீஷர்ட், பூப்போட்ட அரைக்கை சட்டை, ஜிகுஜிகு முழுக்கை சட்டையென என என் வயதுக்கேற்றது போல் காட்டினார் சேல்ஸ்பாய். சிரித்துக் கொண்டே அழுத நான் சொன்னேன் “40 சைஸூல ஒரு வொய்ட் ஃபுல் ஸ்லீவ்”.

வீட்டுக்கு வந்தவுடன் சட்டையைப் பிரிக்கும் படலம் ஆரம்பமானது. பின்நவீன கதையில் கூட அத்தனை உள்குத்து இருக்காது. அந்த சட்டையில் ஏராளமான பின் குத்தியிருந்தது. ஒவ்வொன்றாய் எடுத்துவிட்டு ஹேங்கரில் மாட்டினேன். தூங்கும்போது ஒரு முறை சட்டையைப் பார்த்தேன். மடிப்பு தெரியும்படி இருந்தது ஏனோ மனதுக்கு நிறைவாய் இல்லை என்பதால் இஸ்திரி பொட்டியை தேடினேன். அயன் என்று பெயர் வைத்ததால் அந்தப் படத்தையே பார்க்காதவன் அயர்ன் பாக்ஸை தேடும் மாயமென்ன என்று யோசித்தார்கள் சக அறை நண்பர்கள். வாழ்வில் முதல் முறை அயர்ன் செய்து விட வேண்டியதுதான் என்ற முனைப்போடு தரையில் ஒரு பெரிய பெட்ஷீட் விரித்து, அதற்கு மேல் ஒரு மெல்லிய போர்வை விரித்து வைத்தேன்.இந்த ஏற்பாடெல்லாம் வேறொரு விஷயத்திற்கு செய்ய்ய வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். ம்ம். அயர்ன் பாக்ஸை பிளக் பாயிண்ட்டில் சொருகி தயாராகிவிட்டேன். .ஒரு குவளையில் தண்ணீரோடு தரையில் அமர்ந்தேன். டப்ப்ப்ப்ப். ஓரம்போ.ஓரம்போ. ஆற்காடு வீராசாமி வண்டி வருது என்ற பாட்டு சத்தம் கேட்டது. பவர் கட். ச்சே.

மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது நண்பன் அயர்ன் செய்து வைத்திருந்தான் . சந்தோஷத்தில் குளிக்க சென்றேன். பிரவுன் நிற பியர்ஸ் கண்ணை உறுத்த, பக்கத்தில் இருந்த வெள்ளை நிற டாய் சோப்பை எடுத்துக் கொண்டேன். குளித்துவிட்டு சட்டையை போடும்போது கொஞ்சம் கெத்தாகத்தான் இருந்தது. சாப்பிட்டு சென்றால் காரியம் வெற்றி என்பதால் மெஸ்சுக்கு சென்று சாப்பிட அமர்ந்தேன். இட்லியைப் பார்த்த போது ஏனோ சட்டையின் வாரிசாகவே தெரிந்தது. கடலை சட்னி வேற நிறத்தில் இருக்க, கடை பையனிடம் கேட்டேன் “தேங்காய் சட்னி செய்யலையா?”. சாப்பிட்ட பின் கிளம்பினேன். கருப்பு நிற பைக் இன்று மட்டும் ஏனோ வெறுப்பாய் தெரிந்தது. மனதை தேற்றிக்கொண்டு பயணத்தை தொடங்கினேன்.

பயணம் என்ற வார்த்தை சுவாரஸ்யமானது. பணம், பயம், பணயம் என தொடர்புடைய வார்த்தைகளை தன்னுள்ளே உடையது பயணம். டிராஃபிக் குறைவு என்று சந்தோஷப்பட்ட நேரம் குறிப்பாய் தூறல் வந்தது. போய் சேர்ந்து விடலாம் என ஆக்ஸெலரேட்டரை முறுக்க, ராங் கனெக்‌ஷன் ஆகி மழை பொத்துக் கொண்டு வந்தது. துள்ளுவதோ இளமையில் ஷெரினிடம் தனுஷ் சொல்வது ஞாபகம் வர, வண்டியை ஓரங்கட்டினேன். வேறு வழியில்லை. மழை நிற்கும் வரை நான் அங்கேதான் நிற்க வேண்டும். இல்லையேல் 2499 ரூபாய் கொடுத்து வெள்ளைச் சட்டை வாங்கியது வீணாகிவிடும். இந்தியாவில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி தமிழ்நாட்டில் நடப்பது கலைஞ்சர் ஆட்சி அங்கே விட்டுவிட்டு . இந்த நாட்டில் பொழிய வேண்டுமா என்பது மழைக்கு சற்று தாமதமாகத்தான் தோன்றியது. சட்டென நின்றுவிட்டது. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது போல நானும் பைக்கில் ஏறினேன்.

அடுத்த பரீட்சை காத்திருந்தது. மற்ற வாகன ஓட்டிகளின் சக்கரத்திலிருந்து அடிக்கும் சேற்றில் இருந்து வெள்ளைச் சட்டையை காக்க வேண்டும். லேட்டானாலும் பரவாயில்லை என ஓரமாகவே , பாதுகாப்பாக சென்று கொண்டிருந்தேன். ரைட்டில் வந்த ஒரு கார் வேகமாக என் முன்னாடி வர, நான் ரைட்டில் சென்றேன். என் பின்னால் வந்த ஜீப் முறுக்கிக் கொண்டு எனக்கு ரைட் சைடில் வந்தார். எப்படியும் இவரும் என் முன்னால்தான் செல்வாரென நான் லெஃப்ட்டில் வர, பின்னாடி வந்த சிகப்பு ஹம்மர் சடென் பிரேக் அடித்தார். எதையுமே கவனிக்காமல் சாலையைக் கடந்தேன். ஒரு வழியாக சாலையை கடந்தேன் என்றுதான் முதலில் எழுதினேன். ஆனால் அந்த சாலை ஒரு வழி இல்லையே என யாராவது சொல்லிவிடுவார்களோ என்று பயந்து சாலையைக் கடந்தேன் என்று மட்டும் எழுதினேன்.ஆயிற்று.. இன்னும் 200 மீட்டர்தான் அலுவலகம். அங்கே போய்விட்டால் மேனஜரின் காரில் ஜாலியாக கிளையண்ட் அலுவலகத்திற்கு சென்றுவிடலாம். இண்டிகேட்டர் போட்டு, கண்ணாடியில் பார்த்துவிட்டு வலது புறம் திரும்பினேன். எங்கிருந்தோ வந்த சிறுவன் ஒருவன் சைக்கிளை கீழே போட்டு விட்டு,தட்டு தடுமாறி என் முதுகில் கை வைத்துவிட்டான். அலறிக் கொண்டு திரும்பிய பின் தான் கவனித்தேன். முதுகில் ஒரு பை இருந்தது. அதனுள் ஜாக்கெட் இருக்கிறது. போட்டுக் கொண்டு வந்திருந்தால் சட்டையை கங்காரு போல காப்பாற்றியிருக்கலாம். இப்போதும் கூட அந்த பையனின் கை பையில்தான் பட்டிருக்கிறது. சட்டைக்கு எதுவும் ஆகவில்லை. தப்பிச்சோம்டா சாமி என வண்டியை கிளப்பி, முறுக்கினேன். ஒரு மாருதி 800 அதிரடி வேகத்தில் வந்து தேங்கியிருந்த தண்ணியில் இறங்க, சுதாரித்த நான் வண்டியை அப்படியே ஒரு வீலிங் செய்து தப்பினேன். சொட்டு தண்ணீர் கூட மேலே படவில்லை. வண்டிக்குத்தான் ஏதோ ஆகிவிட்டது. போகட்டும்.

மொத்த தடைகளையும் தாண்டி வந்து வண்டியை பார்க் செய்துவிட்டு நேரம் பார்க்க மொபைலை எடுத்தேன். One message recieved என்றிருந்தது. யாருடா என பார்த்தால், President – HR. “As its raining heavily, I will not come to office today. We shall meet tomorrow” பாரதிராஜா படத்தின் அலைகள்,பறவைகள் போல எல்லாமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்துவிட்டது. மூணாங்கிளாஸ் பையனெல்லாம் மழையில் பள்ளிக்குப் போய்க் கொண்டிருக்க க்ரூப் பிரெசிடெண்ட் மழையால வரவில்லை என்பது எப்படி இருக்கிறது? இதில் நாளை மீண்டும் வர வேண்டுமென்றால், சட்டையை எப்போது தோய்க்க? எப்படி தேய்க்க? ஆயிரம் கேள்விகள் எழுந்தது எனக்குள். ஒரே வழிதான் என ரெஸ்ட் ரூமிற்கு சென்று சட்டையை பத்திரமாக கழட்டி, மடித்து பைக்குள் வைத்துக் கொண்டேன். ஜாக்கெட்டை எடுத்து பனியனுக்கு மேலே போட்டுக்கொண்டு கழுத்து வரை ஸிப் போட்டுக் கொண்டு இருக்கைக்கு சென்றேன். எல்லோரும் ஒரு மார்க்கமாக பார்ப்பது தெரிந்தது. பார்க்கட்டும். இந்த உலகில் வெள்ளை மனதை மட்டுமல்ல, வெள்ளைச் சட்டையை கூட கறை படியாமல் பார்த்துக் கொள்வது சிரமம் தான். பையை தடவிக் கொடுத்தேன். நமக்கு கார்தியைபோல் கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு.


ஈகரை தமிழ் களஞ்சியம் கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 5 Empty Re: கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு

Post by கலைவேந்தன் Mon Apr 04, 2011 1:37 am

கடைசி வரை ஐயோ அந்த வெள்ளைச் சட்டை மேல் கறைபடாம இருக்கனுமேன்னு பதைச்சுக்கிட்டே வாசித்தேன் பாலா... இதுக்கு பேருதான் நகைச்சுவைத் திரில்லரா... அசத்தல்ப்பா..! சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 5 Empty Re: கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு

Post by balakarthik Tue Apr 05, 2011 7:52 pm

கலை wrote:கடைசி வரை ஐயோ அந்த வெள்ளைச் சட்டை மேல் கறைபடாம இருக்கனுமேன்னு பதைச்சுக்கிட்டே வாசித்தேன் பாலா... இதுக்கு பேருதான் நகைச்சுவைத் திரில்லரா... அசத்தல்ப்பா..! சூப்பருங்க

நன்றிங்கனா நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 5 Empty Re: கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு

Post by balakarthik Tue Apr 17, 2012 7:31 pm

இன்றும் இங்கே செம மழை காலையிலிருந்து எங்கள் ஜி‌எம்முக்காக காத்திருந்து கடுப்பானத்துத்தான் மிச்சம் மழை காரணமாக அவர் வரவில்லை வாழ்க்கையில ஒரே மாதிரி எனக்கு இரண்டாவது முறையாக இன்றும் நடந்துள்ளது கோபம் கோபம் கோபம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 5 Empty Re: கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு

Post by கேசவன் Tue Apr 17, 2012 8:33 pm

உங்கள் அனுபவத்தை பகிர்ததகு மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி . தயவுசெய்து மேலே உள்ள புகைப்படத்தை நீக்கிவிடுகள் சோகம் சோகம் சோகம் சோகம்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 5 1357389கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 5 59010615கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 5 Images3ijfகட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 5 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 5 Empty Re: கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு

Post by balakarthik Tue Apr 17, 2012 8:37 pm

கேசவன் wrote:உங்கள் அனுபவத்தை பகிர்ததகு மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி . தயவுசெய்து மேலே உள்ள புகைப்படத்தை நீக்கிவிடுகள் சோகம் சோகம் சோகம் சோகம்

அதனால் என்ன கேசவன் இது நகைசுவை பதிவுத்தானே இப்பொழுது அந்த படங்களை நீக்கினால் அதிலுள்ள பிநூட்டங்களையும் நீக்க வேண்டி இருக்குமே


ஈகரை தமிழ் களஞ்சியம் கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 5 Empty Re: கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு

Post by கேசவன் Tue Apr 17, 2012 9:39 pm

balakarthik wrote:
கேசவன் wrote:உங்கள் அனுபவத்தை பகிர்ததகு மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி . தயவுசெய்து மேலே உள்ள புகைப்படத்தை நீக்கிவிடுகள் சோகம் சோகம் சோகம் சோகம்

அதனால் என்ன கேசவன் இது நகைசுவை பதிவுத்தானே இப்பொழுது அந்த படங்களை நீக்கினால் அதிலுள்ள பிநூட்டங்களையும் நீக்க வேண்டி இருக்குமே
பின்னுடகளை நீக்காமல் படத்தை மட்டும் நீக்கமுயற்சிசெய்து பாருகளேன் புன்னகை


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 5 1357389கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 5 59010615கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 5 Images3ijfகட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 5 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 5 Empty Re: கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு

Post by balakarthik Sat Apr 21, 2012 1:00 pm

கேசவன் wrote:பின்னுடகளை நீக்காமல் படத்தை மட்டும் நீக்கமுயற்சிசெய்து பாருகளேன் புன்னகை

நீக்கியாயிற்று கேசவன் சூப்பருங்க சூப்பருங்க :suspect:


ஈகரை தமிழ் களஞ்சியம் கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 5 Empty Re: கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum