புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_lcapதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_voting_barதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_rcap 
61 Posts - 46%
heezulia
தென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_lcapதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_voting_barதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_rcap 
40 Posts - 30%
mohamed nizamudeen
தென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_lcapதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_voting_barதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_rcap 
8 Posts - 6%
T.N.Balasubramanian
தென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_lcapதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_voting_barதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
தென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_lcapதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_voting_barதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
தென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_lcapதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_voting_barதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_rcap 
4 Posts - 3%
prajai
தென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_lcapதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_voting_barதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
தென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_lcapதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_voting_barதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
தென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_lcapதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_voting_barதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
தென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_lcapதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_voting_barதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_lcapதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_voting_barதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_rcap 
176 Posts - 40%

23 Posts - 5%
Dr.S.Soundarapandian
தென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_lcapதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_voting_barதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_rcap 
21 Posts - 5%
prajai
தென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_lcapதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_voting_barதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
தென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_lcapதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_voting_barதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
தென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_lcapதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_voting_barதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_lcapதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_voting_barதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
தென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_lcapதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_voting_barதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
தென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_lcapதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_voting_barதென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 01, 2010 3:11 am

உலகளாவிய நாடுகளில் பரவியிருக்கும் பண்பாடுகளில் இந்திய நாகரிகம் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றிருக்கிறது. ஆசிய நாடுகளின் பல்லின சமுதாயத்தில் வெவ்வேறு மொழி, வழிபாடு, இயல் இசை, கலைகள் காணப்பட்டாலும் அவற்றில் தென்னிந்தியக் கலாச்சாரத்தை, குறிப்பாகத் தமிழின் தாக்கத்தைக் காணலாம். இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், மியான்மார் ஆகிய நாடுகளில் அவர்களின் கலாச்சாரத்துடன் தமிழ்ப்பண்பாடு இழையோடுவதைக் காணலாம். பாரதத்துக்கு அப்பால் நேப்பாளம், இலங்கை மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் கி.பி. முதலாம் நூற்றாண்டு முதலே அமைந்த புராதனச் சின்னங்களும் தொன்மையான தென்னிந்தியக் கலாச்சாரச் சுவடுகளும் காணக் கிடக்கின்றன.
கம்போடியாவில் கவனிப்பாரற்றுப் பாழடைந்த நிலையில் இருக்கும் நூற்றுக்கணக்கான கற்கோயில்களின் இடிபாடுகளிடையே தமிழிலும் கிரந்த வடிவத்திலும் பதிக்கப்பட்ட கல்வெட்டுகள் பல இருப்பதைப் பார்த்தேன். அவற்றை பற்றி விரிவாக நிறைய வண்ணப் படங்களுடன் நான் எழதி வெளியிட்டிருக்கும் நூல் ""கம்போடியாவில் கவின் கோயில்கள்'' இந்த ஆலயங்கள் அருகே இருக்கும் குடிசை வீடுகளில் தமிழ் / கிரந்தக் கல்வெட்டுகள் கொண்ட கருங்கற் பாளங்களை அதன் அருமை புரியாது எடுத்துப் பதிவு செய்வது இன்றியமையாத் தேவை என்பதையும் வலியுறுத்தியுள்ளேன். அது மட்டுமல்ல, ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் கம்போஜம் என்ற கம்போடிய நாடு தமிழ் மன்னர்களின் ஆட்சியில் இருந்து வந்திருக்கிறது. கி.பி.நூற்றாண்டில் கவுண்டின்ய மன்னன் தொடங்கி, கி.பி. 17 ஆம் நூற்றாண்டு வரை ஆளுமையில் இருந்த பாரம்பரிய மன்னர்களின் வாரிசுகளின் விபரங்கள் அனைத்தும் ஆண்டு வாரியாக குறிப்பிட்டு சியாம் ரீப் அரும் பொருளகத்தில் வைத்திருக்கிறார்கள்.

கம்போடியாவில் கி.பி.1000 ஆம் ஆண்டு முதல் 1050 வரை ஆண்ட சூர்யவர்மன் தொடங்கி, அவர் வாரிசுகள் கலம் வரை தொடரப்பட்ட உலகின் மிகப்பெரிய வளாகத்தைக் கொண்டது. அங்கோர் வாட் திருமால் ஆலயம். கி.பி.13, 14 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பவுத்த, சமண சமயத் தாக்கம் தென் கிழக்காசிய நாடுகளுக்கும் பரவியது. ஜெயவர்மன்-7 கட்டிய அங்கோர் தோம், பாயோன் கோயில்கள் 10 சதுர மைல் சுற்றளவிற்கு அமைந்திருக்கிறது. நீண்ட பெரும் அகழிகளுடன் கோட்டை போன்ற அமைப்பில் இருக்கும் இந்தச் சிவனாலயம் 5 பாலங்களுடன் இணைப்பைப் பெற்றிருக்கிறது. ரோமானிய கிரேக்க, எகிப்திய, மாயா நாட்டுக் கட்டுமானங்களுக்கு நிகரான நேர்த்தியான கலைக்கோயில்கள் என அநேக மேல்நாட்டுக் கட்டிட வல்லுநர்கள் வியந்து பாராட்டியிருக்கும் கம்போடியாவின் கோயில்களை ஐக்கிய நாட்டு சபையின் யுனெஸ்கோ புதுப்பித்து சுற்றுலாப் பயணிகளின் காட்சிப் பொருளாக வைத்திருக்கின்றது.க்ஷ

சில புராதனக் கோயில்கள் ஐ.நா. சபையின் தேசிய மரபுடைமைத் திட்டத்தின் கீழ் பராமரிக்கப்படுகின்றன.

இந்த ஆலயங்களைக் காண அன்றாடம் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுப்பயணிகள் வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 20 யு.எஸ். டாலர் கட்டணமும் கார் வாடகை, வழிகாட்டிக்கான செலவு ஆகியவையும் சுற்றுப்பயணி வழங்குகிறார். அந்த நாட்டின் பொருளியிலே இந்த வருவாயைத்தான் சார்ந்திருக்கிறது. தமிழகத்திலிருந்து எங்கோ இரண்டாயிரம் மைல்களுக்கப்பால் கானகத்துக்குள் தமிழன் எழுப்பிய சிவன், திருமால் ஆலயங்கள் அந்த நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்துவரும் நிலையில் திகழ்வது நவீன காலத்து விந்தைகளில் ஒன்று . உலக மனித நேயத்திற்கு ஒரு சான்று.

3500 கி.மீ. நீளக் கடற்கரையையும் மறுபுறம் அடுக்கடுக்கான மலைத் தொடர்களையும் கொண்ட நாடு வியட்நாம். அடர்ந்த வனங்களையும் இயற்கை வளங்களையும் கொண்டு ஒருங்கிணைந்த வியட்நாம் முழுவதையும் 2000 ஆண்டுகள் கட்டி ஆண்டிருக்கிறது தென்னிந்திய சம்பாப் பேரரசு! தமிழ் மன்னர்களின் தலைநகராக இந்திரபுரம் என்ற பெயரில் முன்னர் திகழ்ந்திருக்கிறது நாங்கள் வந்த டாணாங் நகர்! கி.பி. முதலாம் நூற்றாண்டு முதல் பதினைந்தாம் நூற்றாண்டு வரை சம்பாப் பேரரசின் ஆளுகையில் இருந்ததைக் காட்டும் ஆதாரங்களை இந்த நகரில் இருக்கும் சாம் அரும் பொருளகத்தில் காண முடிந்தது. வெளிநாடு ஒன்றில் தமிழர்களின் கலைச் சின்னங்களையும் ஆட்சித் திறனையும் விளக்கும் காட்சியகத்தை 1915ல் பிரெஞ்சு அரசாங்கம் தொடங்கி வைத்தது. அது முதல் நமது பாரம்பரியத்தின் தொன்மையைக் காண அன்றாடம் பல்லாயிரக்கணக்கான சுற்றுப்பயணிகள் கட்டணம் செலுத்திச் சென்று பார்த்து அறிந்து வருகின்றனர்.

கி.பி.2 ஆம் நூற்றாண்டு முதல் 10 ஆம் நூற்றாண்டு வரை கட்டப்பட்ட அந்த ஆலயங்கள் மை சன் என்ற இடத்தில் இருக்கின்றன. அடர்ந்த வனாந்திரத்திற்குள் இருந்ததால் 2,3 கி.மீ நடந்தே சென்றோம். இங்கே மிகப்பெரிய கோபுரங்களைக் கொண்ட பல ஆலயங்கள் இருக்கின்றன. சிவன், விஷ்ணு, விநாயகர் ஆலயங்கள் இடிபாடுகளுடன் இருக்கின்றன. தமிழில் இருந்த கல்வெட்டுகளையும் படம் எடுத்துக் கொண்டோம். ஆள் நடமாட்டமோ, கடைகளோ வீடுகளோ இல்லாத வனாந்திரப் பிரதேசமாக இன்று இருப்பது முன்பு தமிழர்கள் வாழ்ந்த நகராகும். கலை எழில் கொழிக்கும் கட்டுமானங்கள் அன்றைய மகோன்னத காலத்தைக் கண் முன் நிறுத்துகின்றன.

சைவ சமயத்தைச் சார்ந்த சம்பா மன்னர்கள் 75க்கு மேற்பட்ட கோயில்களை எழுப்பியிருக்கிறார்கள். சில கோயில்களின் கருவறையில் மாபெரும் சிவலிங்கங்கள் நந்தியுடன் இன்னும் இருக்கின்றன. தலைநகரான இந்திரபுரி போன்று தமிழ்ப் பெயர்களைக் கொண்ட மாநிலங்கள் -சிங்கபுரி, அமராவதி, விஜயா, காந்தாராம், பாண்டுரங்கம் இருந்திருக்கின்றன. தமிழர்களின் ஆளுமைத் திறன், ஆன்மிக, கணித அறிவாற்றலுடன் ஏற்படுத்திய கட்டுமானங்கள், கலை நுணுக்கங்கள், தகவல், தொழில் நுட்பங்கள், நீர்ப்பாசன, அணைக்கட்டுகள் அமைத்து முப்போகம் விளையும் வேளாண்மைத் திட்டங்கள், நீர்வழிப்போக்குவரத்துக்கு அமைத்த கால்வாய்கள், நுண் கலை ஆற்றல் என இப்படி பல துறைகளிலும் அவர்களின் ஆழ்ந்த வரலாறுகளை மேல்நாட்டினர் வியந்து எழுதி வருகின்றனர். இந்த வட்டாரங்களில் இருபது நூற்றாண்டுகள் கோலோச்சிய தமிழ்ப் பேரினத்தின் சாதனைகள் இன்னும் சரிவரக் கணிக்கப்படவில்லை. அகழ்ந்தெடுக்கப்படாத ஆதாரங்கள் ஆசியான் நாடுகளில் பரவலாக இருக்கின்றன.

டாணாங் சீனாவின் எல்லையில் இருப்பதால் சீன ஆதிக்கம் இங்கே மேலோங்கி இருக்கிறது. வியட்நாம் மக்களின் மொழி, வாழ்க்கை நடைமுறை, கலை அனைத்திலும் சீனக்கலாச்சாரம் தழுவி இருப்பினும் அவர்களின் அடித்தளக் கூறுப் பண்பாடாக மிளிர்வது சம்பாத் தமிழினத் தாக்கமே. அவர்கள் தங்களைச் சீன வம்சத்தவர்களென்று கூறப்படுவதை விரும்புவதில்லை. மொழி, உடை, பண்பாடு அனைத்திலும் தங்களைத் தனி இனத்தவர்களாக அடையாளங் காட்டுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். பூர்வீக இந்திய வம்சாவழியினர் என்று கூறுவதில் பெருமைப்படுகின்றனர்.

டாணாங் நகரில் இருக்கும் சம்பா அருங் காட்சியகத்தில் தஞ்சைப் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இருப்பது போன்ற பிரமாண்டமான சிவலிங்கம் நடுநாயகமாகத் திகழ்கிறார். கி.பி.2 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரையிலான விஷ்ணு, விநாயகர், அம்மன் விக்கிரகங்கள், நடனமணிகளின் சிற்பங்கள், சிவ நடனத் தோற்றங்கள், கலைப்பொருட்கள் ஆகியவற்றை குறிப்புகளுடன் வைத்திருக்கிறார்கள்.

மற்றொரு பகுதியில் கலை வேலைப்பாடுகள் பஞ்சகச்ச வேட்டியும் தலைப்பாகையும் அணிந்த சம்பா இனத் தமிழர்களின் அன்றைய தோற்றத்தைச் சித்தரிக்கும் உருவச் சிலைகள், புகைப்படங்கள் ஆகியவை இருக்கின்றன. அவற்றைக் காணும்போது கடல் கடந்து வந்து தங்கள் படைப்புக் கலைக் திறனைக் காட்டிய தமிழரின் சாதனையில் மெய்சிலிர்க்கிறோம். இன்று போல் நவீன வசதிகள் எதுவும் இல்லாத காலத்தில் எப்படி இதனைச் சாதித்தார்கள் என்று எண்ணி வியக்கிறோம்.

13,677 தீவுகளை கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய நாடான இந்தோனேஷியாவை முதலாம் இராஜேந்திர சோழன் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் தன் ஆளுகைக்குள் வைத்திருந்த காலத்தில் கட்டிய பிரம்மாண்டமான ஆலயங்கள் காண்போரைப் பிரமிக்க வைக்கின்றன. பெரம்பனான் என்ற இடத்தில் அழகிய உயர்ந்த கோபுரங்களுடன் சிவன் கோயில் இருக்கிறது. அருகில் பிரம்மா, விநாயகர், விஷ்ணு, அம்மன் ஆலயங்களும் பெரிய வளாகங்களுடன் இருக்கின்றன.

மத்திய ஜாவாவில் இருப்பது உலகிலேயே மிகப்பெரிய 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போராபுத்தூர் ஆலயம். 20 மைல் சுற்றளவுக்கு இது பரந்து இருக்கிறது. முன்பு சிவன், திருமால் கோயில்களாக இருந்தவை. இப்போது மகாயான புத்தர் கோயிலாக மாறிவிட்டாலும் சுவர்களில் இராமாயண, மகாபாரத சிற்பங்களும் புத்தரின் வாழ்க்கைச் சித்திரங்களும் இருக்கின்றன.

மக்கள் தொகையில் 92 விழுக்காட்டினர் இந்துக்களாக இருக்கும் பாலியில் நமது கலை, கலாச்சாரம், வழிபாடுகள் 3000 ஆண்டுகளாகத் தொடர்கின்றன. பைசாகி அம்மன், சதாசிவனுடனும் பிரம்மா, விஷ்ணு எனத் திரிசக்திகளாக மூன்று தேர்களில் பவனி வரும் புரா பைசாகித் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். கையில் வீணை ஏந்திய கலைவாணியின் சிலைகளுடன் கலைமகள் விழாவை நவராத்திரியின் போது பொது விடுமுறையுடன் கொண்டாடுகிறார்கள். பாலியின் தலைநகரான டான் பசாரில் இருக்கும் பாண்டுரங்கன் கோயில், 12 ஆம் நூற்றாண்டில் ஆண்ட சிங்கராஜா அமைத்த கோயில்கள், எரிமலைச் சிகரத்தில் இருக்கும் குணோங் அகோங் சிவன் கோயில் ஆகியவையும் பிரபலமானவை. பாலியில் நடைபெறும் ஏகதச ருத்ரா சிவ வேள்வித் தேசிய திருவிழாவில் நாட்டின் அதிபர் உட்பட பல்லாயிரவர் பங்கு பெறுவார்கள்.

சுமத்திராவில் 30000 தமிழர்களுக்கு மேல் வாழ்கின்றனர். அதிபர் சுகர்ணோ ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டினருடன் இவர்கள் தொடர்பு விட்டுப்போனது. 1960-70 களில் எனது நாடகக் குழுவினருடன் மூன்று தடவை சென்று தமிழ் நாடகங்களையும் கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி அமோக வரவேற்பைப் பெற்றோம். கடல் கடந்த தமிழ்க் கலாச்சாரத்தில் இலங்கை முன்னிலையில் இருக்கிறது. மும்முடிச் சோழ மண்டலம் என்ற பெயரில் கிபி 907 முதல் இலங்கை சோழப்பேரரசின் பேராதிக்கத்தில் 126 ஆண்டுகள் இருந்தது. 7ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் பாடிப்புகழ்பெற்ற திருக்கோணேசர், அப்பர் பெருமான் பாடிய திருக்கேதீசுவரம் மற்றும் அநேக ஆலயங்கள் ஆன்மிக நெறியையும் தமிழ் அருட்பாக்களையும் அருளி வருகின்றன.

அதேபோன்று நேபாள நாட்டிலும் தென்னிந்தியச் சுவடுகள் பதிந்திருக்கின்றன. இமயச் சிகரத்தில் இருக்கும் சிகரத்தில் இருக்கும் கைலாச நாதரைத் தரிசிப்பதைப் பெரும் பேறாகப் போற்றியிருக்கின்ற அடியார்களின் அருட்பாடல்கள் தமிழின் செம்மையைச் செப்புகின்றன. பணியில் உறைந்த நிலையில் திகழும் முக்திநாதர் 108வது திவ்விய தேசம் என வைணவர்கள் வணங்குகின்றனர். தலைநகர் காட்மாண்டுகளில் பாகிமதி நதிக்கரையில் இருக்கம் புகழ்பெற்ற நான்முகப் பசுபதிநாதரை நான்கு வாயில்களில் தீபாராதனை செய்யும் புரோகிதர்கள் தென்னிந்தியர்களே. 8ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் மங்களாசாசனம் செய்தது முதல் இது தொடர்கிறது.

சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் கி.பி.6 ஆம் நூற்றாண்டில் அமைந்த ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் ஆளுகையிலிருந்தே ஆட்சியின் ஆதாரசுருதியாகத் தமிழ் திகழ்ந்தது. மலேசியாவில் கடாரம் மாநிலத்தில் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் இரண்டாம் சூர்யவர்மன் ஆட்சியில் அமைந்த ஆலயங்கள் தொல்பொருள் ஆய்வாளர்களால் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. 14ஆம் நூற்றாண்டில்மலாக்கா நகரிலிருந்து சிங்கபூரையும் உள்ளடக்கி ஆட்சி நடத்திய ராஜேந்திர சோழனின் வாரிசான பரமேசுவரனின் ஆட்சியும் தமிழ் மரபுக்குக் கட்டியம் கூறியவை.

சிங்கப்பூரின் பழைய பெயர் சிங்கபுரம். இந்தப் பெயர் 2ஆம் நூற்றாண்டின் சிலப்பதிகாரத்திலும் இடம் பெற்றிருக்கிறது. வியட்நாம் டாணாங் தமிழர் ஆட்சியில் தலைநகராக இருந்தபோது சிங்கபுரம் என்ற மாநிலம் இருந்ததை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். பழம்பெரும் மலாய் மொழி இலக்கியங்களும் சிங்கப்பூரைச் சிங்கபுரம் அல்லது சிங்கப்பூரா என்றே கூறுகின்றன. தாய்லாந்தின் தலைநகராக 1767 ஆம் ஆண்டு வரை இருந்த அயோத்தியா நகரில் 10ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் கட்டிய 30க்கு மேற்பட்ட தொன்மையான ஆலயங்கள் லோப்புரி, பிரயாகை, பாசாக் ஆகிய மூன்று நதிகளின் கரைகளில் இன்னும் இடிபாடுகளுடன் இருக்கின்றன. இன்றும் அந்ந நாட்டின் அரச வைபவங்களில் ஒலிக்கும் தமிழ்ப் பாசுரங்கள், அவர்களின் ஆடல் கலைகளில் இடம் பெற்றிருக்கும் இதிகாசங்கள் தமிழ் மேலாதிக்கம் பெற்றிருந்தற்கான தடயங்களாக விடப்பட்டிருக்கின்றன. தென்திசை நாடுகளில் மகாபாரதமும் இராமயணமும் அந்தந்த நாட்டு மக்களின் ஆன்மிக, கலை, இலக்கிய வாழ்வுடன் இன்றும் ஒன்றியிருக்கின்றன.

மியன்மாரில் ஐராவதி நதிக்கரையில் பாகன் என்ற இடத்தில் இருக்கும் மிகப் பழமையான அற்புத ஆலயங்களில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் பாணியில் ஒரு கோயிலும் இருக்கிறது. தமிழன் சிறப்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அலைகடல் கடந்து பல நாடுகளிலும் ஆழப் பதிந்திருக்கின்றன. பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் காலச் சுவடுகளாக நிலைத்திருக்கின்றன. அவை நம் பாரம்பரியக்கலைச் சிறப்பையும் இறை உணர்வையும் எடுத்துக் கூறிக்கொண்டிருந்தார்கள்.

"கலையரசு'' டாக்டர் எஸ்.எஸ்.சர்மா, சிங்கப்பூர்.

தென் கிழக்காசியாவில் தேன் தமிழ்க்கோவில்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக