ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய அணியின் வெற்றி தொடருமா! இன்று நியூசிலாந்துடன் 2வது மோதல்

Go down

இந்திய அணியின் வெற்றி தொடருமா!  இன்று நியூசிலாந்துடன் 2வது மோதல் Empty இந்திய அணியின் வெற்றி தொடருமா! இன்று நியூசிலாந்துடன் 2வது மோதல்

Post by சிவா Wed 1 Dec 2010 - 4:12

ஜெய்ப்பூர்: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடக்கிறது. முதல் போட்டியில் வென்ற இளம் இந்திய அணியின் எழுச்சி, இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, தொடரில் 1-0 என்ற முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி இன்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள மான்சிங் மைதானத்தில், பகலிரவு போட்டியாக நடக்கிறது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் சச்சின், தோனி, சேவக், ஹர்பஜன் உள்ளிட்ட சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் காம்பிர் தலைமையில் களமிறங்கிய இளம் வீரர்கள் முதல் போட்டியில் அசத்தல் வெற்றி பெற்றனர். இன்று முரளி விஜய், காம்பிர் அதிக நேரம் களத்தில் இருந்து ரன்கள் சேர்க்க வேண்டும். ரஞ்சிக் கோப்பை தொடரில் அடுத்தடுத்து சதம் அடித்த விராத் கோஹ்லி, கடந்த போட்டியிலும் சதம் அடித்து நல்ல பார்மில் உள்ளார்.

இவருக்கு, யுவராஜ் சிங் (42 ரன்கள்) பேட்டிங்கில் ஓரளவு கைகொடுத்தாலும், பவுலிங்கில் இவரது பங்கு மகத்தானது. கடைசி 26 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. உலக கோப்பை தொடர் துவங்க சிலமாதங்களே உள்ள நிலையில் யூசுப் பதான், ரெய்னா ஆகியோர் மீண்டால் நல்லது. இதேபோல, "பவர் பிளே' ஓவர்களில் அதிக ரன்கள் சேர்க்க முயற்சிக்க வேண்டும்.

பவுலிங் ஆறுதல்:

பவுலிங்கை பொறுத்தவரை, ஸ்ரீசாந்த் நம்பிக்கை தருகிறார். ஆஷிஸ் நெஹ்ரா, முனாப் படேல் இன்று ஆறுதல் தருவார்கள் என்று நம்பலாம். சுழற்பந்து வீச்சில் தமிழக வீரர் அஷ்வின், "பவர் பிளே' ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்துவது, விக்கெட்டுகளையும் சாய்ப்பது அணிக்கு நல்ல செய்தி தான்.

மீண்டும் சந்தேகம்:

நியூசிலாந்து அணியின் வெட்டோரி, காயத்தை பொருட்படுத்தாமல் இன்று களமிறங்கினாலும், பிரண்டன் மெக்கலம் குறித்து சந்தேகம் உள்ளது. இதனால் கப்டில், ஹாப்கின்ஸ், வில்லியம்சன் ஆகியோர் ரன்கள் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த ரோஸ் டெய்லர், மீண்டும் சாதிக்க முயற்சிப்பார்.

பவுலிங்கில் முன்னணி வீரர் டேரல் டபி, காயம் காரணமாக நாடு திரும்புகிறார். ஏற்கனவே பேட்டிங்கில் பலவீனமாகி இருக்கும் இந்த அணிக்கு, இது அடுத்த பின்னடைவு தான். கடந்த போட்டியில் கடைசி நேரத்தில் அசத்திய மெக்கே, மில்ஸ், டிம் சவுத்தி ஆகியோருடன், "ஆல் ரவுண்டர்' நாதன் மெக்கலம் போன்றவர்களும் வெற்றி தேடித்தர வேண்டிய நிலையில் உள்ளனர்.

பனி பாதிப்பு:

இன்று பகலிரவு போட்டி என்பதால் இரவில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதனால் இரண்டாவதாக பவுலிங் செய்யும் போது, ஈரப்பதம் அதிக தொல்லை தரும். இதனால் "டாஸ்' வெல்லும் அணி, முதலில் பீல்டிங் செய்ய வாய்ப்பு உள்ளது.

ராசியான மைதானம்

* ஜெய்ப்பூர், மான்சிங் மைதானத்தில் இந்திய அணி, இதுவரை 10 போட்டிகளில் பங்கேற்று 6ல் வெற்றி, 4ல் தோல்வியடைந்துள்ளது.
* கடைசியாக கடந்த பிப். 21ல் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது.
* இந்திய அணி இலங்கைக்கு எதிராக (2005) அதிகபட்சமாக 303/4 ரன்கள் எடுத்துள்ளது. குறைந்த பட்சமாக இங்கிலாந்துக்கு எதிராக (2006), 126/6 ரன்கள் எடுத்து வென்றது.
* இந்தியாவின் சச்சின், 7 போட்டிகளில் பங்கேற்று 322 ரன்கள் எடுத்துள்ளார்.
* கும்ளே, 4 போட்டிகளில் 9 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
* தற்போது அணியில் உள்ள வீரர்களில் ஸ்ரீசாந்த், 2 போட்டிகளில் 5 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

அதிக ரன்கள் தேவை

இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதற்கு அதிக ரன்கள் தேவை என்று இந்திய கேப்டன் காம்பிர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காம்பிர் கூறியது:

ஆஷிஸ் நெஹ்ரா அனுபவம் வாய்ந்த பவுலர். ஸ்ரீசாந்த்தும் டெஸ்ட் தொடரில் அதிகம் பவுலிங் செய்துள்ளார். இருந்தாலும் இந்திய துணைக்கண்டத்தை பொறுத்தவரையில், பேட்டிங் என்பது மிகவும் முக்கியமானது. இங்கு எப்போதுமே அதிக ரன்கள் எடுத்தால் தான் நல்லது. முதலில் பேட்டிங் செய்தால் குறைந்தது 300 ரன்கள் எடுக்க வேண்டும். பனித்துகள் சிக்கல் இருப்பதால், இது தான் பவுலர்களுக்கு பாதுகாப்பான இலக்கு. அதேநேரம், எங்களது பவுலர்கள் இதுபோன்ற சூழ்நிலையில் ஏற்கனவே அனுபவம் பெற்றுள்ளனர். இருப்பினும், டாஸ், இயற்கை எல்லாம் நமது கையில் இல்லை.
இவ்வாறு காம்பிர் தெரிவித்தார்.


இந்திய அணியின் வெற்றி தொடருமா!  இன்று நியூசிலாந்துடன் 2வது மோதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவின் வெற்றி தொடருமா: வெஸ்ட் இண்டீசுடன் இன்று மோதல்
» முதல் வெற்றி பெறுமா இந்தியா? இன்று இங்கிலாந்துடன் 2வது மோதல்
» ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா? - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை
» புதிய வரலாறு படைக்குமா இந்தியா * இன்று வெ.இண்டீசுடன் 2வது மோதல்
» இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum