புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_m10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_m10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_m10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_m10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_m10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_m10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_m10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10 
2 Posts - 1%
prajai
வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_m10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_m10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_m10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_m10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10 
432 Posts - 48%
heezulia
வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_m10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_m10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_m10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_m10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10 
29 Posts - 3%
prajai
வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_m10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_m10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_m10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_m10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_m10வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 01, 2010 3:03 am

வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் E_129011

மனித குலத்தின் பிறப்பிடமான ஆப்பிரிக்கக் கண்டத்தில் முப்பது நாடுகளில் ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் எண்ணிக்கையில் அதிகமானவை சகாரா பாலைவனத்திலும் தெற்காப்பிரிக்க நாடுகளிலும் உள்ளவை. வரலாற்றுக் காலத்திற்கு முன் வாழ்ந்த மனித குலம், வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், கற்பனை வளம் பற்றி அறிய அவை உதவுகின்றன. ஐரோப்பாவில் உள்ளதுபோல முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவியங்கள் ஆப்பிரிக்காவில் இல்லையென்றாலும் பன்னிரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட பல ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

கிழங்குகளையும் காய்கனிகளையும் சேகரித்து, வேட்டையாடி காடோடிகளாகத் திரிந்த கற்கால மனிதர், சிறிய குழுக்களாக வாழத் தொடங்கிய காலத்தில் தங்கள் எண்ணங்களை மற்றவர்களுக்கு உணர்த்த ஒலிகள் எழுப்பியதும் சைகைகள் காட்டியதும் ஒருவிதமான சங்கேத மொழியின் ஆரம்பம். அடுத்து அவர்கள் பாறைகளில் குறியீடுகள், சின்னங்கள், கோட்டோவியங்கள் வரைய ஆரம்பித்தது அவர்களைப் பரிணாம வளர்ச்சியில் ஒரு படி உயர்த்தியது. பாறைகளில் சின்னங்களை, குறியீடுகளை வரைந்ததே எழுத்துகளின் ஆரம்பம் என்பதைச் சீனா, மத்தியக் கிழக்கு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன.

ஆஸ்திரேலிய ஆதிமனிதர் தீட்டிய ஓவியங்கள், செதுக்கல்கள் பற்றித் தொல்லியல் ஆய்வாளர் ஜியார்ஜ் கிரே 1837இல் எழுதியதே இந்தப் பொருள் பற்றிய புரிதலின் ஆரம்பம் எனலாம். ஸ்பெயினின் ஆல்டமிரா குகைகளில் உள்ள பாறை ஓவியங்கள் 1880இல் கண்டறியப்பட்டன. ஃபிரான்ஸிலும் சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கற்கால மனிதர்களின் ஓவியங்கள் அறியப்பட்டன. அதே காலகட்டத்தில் இந்தியாவில் ஆர்ச்சிபால்டு கார்லைல் ஜான் காக்ஸிர் இருவரும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஐமூர் மலைத்தொடரில் பாறை ஓவியங்களை வெளி உலகின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். ஒரு காலத்தில் பாறை ஓவியம் என்றாலே ஐரோப்பாவில் உள்ளவற்றை மட்டுமே குறிப்பிட்ட நிலை இருந்தது. பின்னரே ஆஸ்திரேலிய, ஆசியப் பாறை ஓவியங்கள் பற்றிப் பரவலாக அறியப்பட்டது. ஐரோப்பாவின் தட்ப வெப்ப நிலையால் குகைப் பாறை ஓவியங்கள் பல அழியாமல் எஞ்சியதுபோல, உலகின் பிறபகுதிகளில் அவ்வாறு இயற்கையால் பாதுகாக்கப்படாததும் அவை பற்றி தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படாததும் இதற்குக் காரணங்கள்.

கற்கால மனிதரின் பாறை ஓவியங்கள் பற்றி முதலில் பலவிதமான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன. ஆஸ்திரேலியாவிலும் தெற்கு ஆப்பிரிக்காவிலும் உள்ள பாறை ஓவியங்களை வரைந்தவர்களின் சந்ததியினரான பழங்குடியினர் இன்றும் அதே பாணியில் வரைவதால், அவ்வோவியங்கள், எவ்வாறு, என்ன காரணங்களுக்காக வரையப்பட்டன என்பது பற்றிய புரிதல் ஏற்பட்டது. ஆனால் ஐரோப்பியப் பாறை ஓவியங்களுக்கு அத்தகைய தொடரும் மரபு இல்லாததால், தொல்லியலாளர்களின் ஊகங்கள் மட்டுமே உள்ளன. எவ்வாறு புராணங்கள் பற்றிய பின்புலம் இல்லாமல் நம்மூர்க் கோவில் சிற்பங்களைப் புரிந்துகொள்ளவியலாதோ அது போலவே ஆப்பிரிக்கப் பழங்குடியினரின் நம்பிக்கைகளை தெரிந்துகொள்ளாமல் பாறை ஓவியங்களைப் புரிந்துகொள்வது சிரமம். இன்று இத் திணைக்குடியினர் பற்றிய ஆய்வுகள் பண்படுத்தப்பட்ட நிலையில், ஓவியங்களின் பின்புலம் பற்றி நாம் அறிய முடிகிறது.

ஓவியங்கள் வரையப்பட்ட பாறை முகப்புகள், எழிலார்ந்த குன்றுகளில், மலைத்தொடர்களில் அமைந்தவை. குன்றுகளில் புடைத்து நிற்கும் பாறை முகப்புகளின் உள்வாங்கிய அடிப் பகுதிகளிலும் ஓவியங்கள் வரையப்பட்டன. சில இடங்களில் தனித்து நிற்கும் பாறைகளிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டன. அவை பகலில் வரையப்பட்டதால், பிற்பகல் அல்லது முற்பகல் சூரிய ஒளிபடும் இடங்களில் அவை அமைந்துள்ளன. பல ஓவியங்கள் காலநிலையின் பாதிப்பால் நலிவடைந்துள்ளன; பல அழிந்துபட்டன.

ஓவியங்கள் தீட்ட அவ்விடங்கள் தேர்வுசெய்யப்பட்டது தற்செயலாக நடந்ததல்ல. இவ்வோவியங்கள் வரையப்பட்ட குகைகள் இருவகைப்படும். உணவு தேடித்திரிந்த ஆதி மனிதக் குழுக்கள் அவ்வவ்போது தங்கிய குகைகள் ஒருவகை. இவை பொதுவாக அகலமானவை, ஆட்கள் நுழையப் போதுமான உயரம் கொண்டவை. உட்கவிந்த பாறையின் கீழே சூரிய ஒளி முகப்பில் படுமாறு அமைந்தவை. பெரும்பாலானவை கீழேயுள்ள பள்ளத்தாக்கு, அவற்றிலமைந்த நீர்நிலைகள் ஆகியவற்றை மேலிருந்து பார்க்க வசதியான உயரத்தில் அமைந்தவை. தாம் நீர் அருந்தவும் நீர்நிலைகளுக்கு வரும் விலங்குகளை வேட்டையாடவும் தம் பெண்டிர், குழந்தைகளுக்குப் பாதுகாப்பான, ஊனுண்ணிகள் எளிதாக நுழைந்துவிடயியலாத குகைகளில் அவர்கள் தங்கினர். இரண்டாம் வகைக் குகைகள் சடங்குகள் செய்யப் பயன்படுத்தப்பட்டவை.

ஏற்கனவே அக்குகைகளில் இருந்தவர்களைச் சண்டையிட்டு விரட்டிய கூட்டமும் அங்கே தங்கியிருந்திருக்கலாம். அவற்றில் தங்கியவர்கள் வரைந்த குறியீடுகளையும் சின்னங்களையும் ஓவியங்களையும் அங்கே காணலாம். சாம்பியா நாட்டில் நச்சிகுஃபு எனுமிடத்தில் இத்தகைய குகை ஒன்றை முதன் முறையாகப் பார்த்தேன். அழகான மணற்பாறைக்குன்றின் மீது ஆதி மனிதர்கள் வசித்த பாறைக்குடிலும் அதிலிருந்து சற்றே உயரத்தில் அவர்கள் சடங்குகள் செய்த குகையும் உள்ளன. பழங்கற்காலம் தொடங்கி, சில நூற்றாண்டுகளுக்கு முன்வரை புழங்கப்பட்ட குகையான அதில் யானை, மான், அவற்றை வில், ஈட்டிகள் ஏந்தி வேட்டையாடுபவர்களையும் நிழலுருவங்களாகக் கறுப்பு வண்ணத்தில் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம் (படம்). இந்த ஓவியங்கள் மீது புகை படிந்திருப்பதால், உற்றுப் பார்த்தால்தான் வடிவங்கள் புலப்படுகின்றன.

இத்தகைய குகைகள் எக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன என்பதை அறிய அவற்றில் வாழ்ந்தவர்கள் எரித்த விறகு, உணவான விலங்குகளின் எலும்புகள், குகைவாசிகளின் எலும்புகள், பயன்படுத்திய ஆயுதங்கள் போன்றவை தடயங்களாக உதவுகின்றன. எனவே தொல்லியல் ஆய்வில் குகையின் தளத்தில் படிந்த படிவங்கள், அதில் புதையுண்டவை சிறந்த காலங்காட்டிகள். ஓவியம் தீட்டப் பயன்படுத்தப்பட்டு எஞ்சிய வண்ணக்குழவைகளில் உள்ள அங்கதப்பொருட்களின் (ணிணூஞ்ச்ணடிஞி ட்ச்ttஞுணூ) மூலமாகவும் காலத்தைத் துல்லியமாகக் கணிக்க இயலும். இவை தவிர ஓவியங்களில் உள்ள சித்தரிப்புகளை வைத்தும் காலத்தைக் கணிக்கலாம். எடுத்துக்காட்டாக, சகாராப் பாலைவனத்தில் அற்றுப்போய்விட்ட முதலை, ஒட்டகச்சிவிங்கி ஆகியவற்றின் ஓவியங்கள் அப்பகுதி பாலைவனமாக மாறுமுன் வரையப்பட்டதைக் காட்டுகின்றன. அதேபோல் கால்நடை பற்றிய சித்திரங்களை வைத்து ஓரளவு காலக்கணிப்பு செய்யலாம். எடுத்துக்காட்டாகத் தெற்காப்பிரிக்காவில் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆடுகள் வளர்ப்பு விலங்குகளாக்கப்பட்டன. அங்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர் காலனி ஆட்சியாளர்கள் குதிரைகளைக் கொண்டுவந்தனர்.



வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 01, 2010 3:03 am

புதிய கற்கால மனிதர்களும் அவர்களின் சந்ததியினரும் பிணியகற்றல், மழைக்காக வேண்டல், ஆவியுலகத் தொடர்பு, இனவிருத்தி போன்றவற்றிற்கான சடங்குகளை இடுக்கமான ஆழமான குகைகளில் செய்தனர். சடங்குகளின் ஒரு கூறாக அங்கிருந்த பாறைகளின் மீது ஓவியங்கள் வரையப்பட்டன. புறவுலகும் ஆவியுலகும் அங்கு ஒரே தளத்தில் இயங்கியதாக அவர்கள் நம்பியதால் அப்பகுதிகள் வழிபாட்டுத்தலங்களாயின என்றும் அந்த ஓவியங்களுக்கு ஒரு புனிதத் தன்மை இருந்ததாக நம்பினார்கள் என்றும் யூகிக்கலாம். இதனால் இன்றும் அப்பகுதிகளில் வாழும் கிராமத்தவர் அந்தி, சந்தி வேளைகளில் குகைகளின் அருகே செல்வதில்லை. குகைகள் தவிர, நீர் நிலைகள், பாறைகளில் உள்ள பிளவுகள் இரு உலகுகளையும் இணைப்பதாகவும் அவற்றின் வழியே மாந்திரீகர்கள் இவ்வுலகிலிருந்து அடுத்த உலகிற்குள் நுழைய முடியும் எனவும் நம்பினர். இதனால் பிளவு, விரிசல்களைச் சித்தரிப்பின் ஒரு கூறாகக் கொண்டு சில பாறை ஓவியங்கள் வரையப்பட்டன. நோய்வாய்ப்பட்டவர்களின் பிணிகள் ஆவிகளால் உண்டாக்கப்படுவதாகவும் மந்திரவாதிகள் பாறை விரிசல்களின் வழியே ஆவியுலகில் நுழைந்து அந்தத் தீய ஆவிகளை விரட்டக்கூடும் என்று நம்பினார்கள்.

இறைச்சி தவிர, காய்கனிகள், கிழங்கு இவற்றை உண்டு வாழ்ந்த ஆதித்திணைக்குடியினரை வேட்டையாடுபவர்களாகவே பாறை ஓவியங்கள் சித்தரிக்கின்றன. வெகுசில ஓவியங்களில் மட்டுமே பெண்கள் காணப்படுகிறார்கள் - கிழங்கு தோண்டிக்கொண்டிருப்பது போல. தம் மூதாதையரின் ஆன்மாக்களுக்கும் மான் வகை விலங்குகளுக்கும் தொடர்பு இருந்ததாக நம்பப்பட்டதால் அவற்றின் சித்தரிப்புகள் பெருமளவில் உள்ளன. சடங்குக் குகைகள் சிலவற்றில் சிங்கம், சிறுத்தை ஓவியங்கள் உள்ளன. அவர்கள் வேட்டையாடியவற்றில் சில விலங்குகளே இங்குச் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஓவியங்களில் காணப்படும் பாதி விலங்கு பாதி மனித உருவங்கள், சடங்குகள் செய்த ஷாமன் எனும் மந்திரவாதிகளைக் காட்டுகின்றன. பெரும்பாலான பாறை ஓவியங்கள் இவர்கள் அருள் வந்த நிலையில் தங்கள் மனக்கண்ணில் கண்டவற்றின் சித்தரிப்புகளே. இன்றும் திணைக்குடியினரின் மந்திரவாதிகள் ஆவேசத்துடன் மூச்சிறைக்க அருள்வரும் நிலையை அடைய ஆடுகின்றனர். அந்நிலையை அடையப் போதை மருந்துகளின் பிரயோகமும் இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. மயக்கநிலையடையப் பயன்படுத்தப்பட்ட மூலிகைகளின் வீரியத்தால் மூக்கில் ரத்தக்கசிவு ஏற்படுவது சில பாறை ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இன்றும் திணைக்குடியினர் நடத்தும் சடங்குகளில் மாந்திரீகர்களின் ரத்தக்கசிவைப் பிணியாளிகள்மீது தடவினால் நோயகலும் என்னும் நம்பிக்கை நிலவுகின்றது.

மயக்கநிலையின் ஆரம்பத்தில் புள்ளிக்கோட்டு உருவங்களையும் அந்நிலையின் உச்சகட்டத்தில் பாதி விலங்கு பாதி மனித உருவங்களையும் ஷாமன்கள் தம் மனக்கண்ணில் கண்டனர். ஆவேசம் தணிந்த நிலையில் அவர்கள் அவற்றைச் சித்திரங்களாகத் தீட்டினர். அவர்கள் மழை உருவாக்க நடத்திய சடங்குகளின் போது வரைந்த ஓவியங்கள் கணிசமான அளவில் தெற்காப்பிரிக்கா முழுவதும் காணப்படுகின்றன. அவற்றில் புள்ளிகள், சுழிகள், வட்டங்கள், கோடுகள் எனப் பல குறியீடுகளைக் காணலாம். அவர்கள் மழையை இருவகையாகக் கண்டனர்; ஆண் மழை என்பது இடி மின்னலுடன் காலிறங்கிப் பெய்து அழிவை உண்டாக்குவது. பரவலாகப் பெய்து செழுமையை உண்டாக்குவது பெண் மழை.

மழைச் சடங்குகள் நடத்தப்பட்ட இடங்களில் தீட்டப்பட்ட பாறை ஓவியங்கள் பரவலாகக் காணப்படும் தெற்காப்பிரிக்க நாடான சாம்பியாவில் கட்டலோல எனுமிடத்தில் நான் கண்ட பாறை ஓவியங்கள் சிறப்பானவை. அங்கு அகன்ற பாறை முகப்பில் நேர்க்கோடுகளால் வரையப்பட்ட அடிமரம் போன்ற சித்தரிப்பில் (படம் ) குறுக்காக வரையப்பட்ட கிளை போன்ற பகுதியில் தேனீக்கள் மொய்ப்பது போல் தெரிவது மழையைக் குறிக்கின்றது. இந்த ஆளுரயக் கருஞ்சிவப்பு ஓவியத்தில் வட்டங்களுக்குள் வட்டங்களாகக் காண்பிக்கப்படுபவை கார்மேகங்கள். இரும்பு யுகத்தவர் வரைந்த இந்தப் பாறை ஒவியத்தின் மீது, மழைக்காகக் கற்கள் எறிவது அன்றைய பழக்கம். இப்பரப் பின் மீது கற்கள் எறியப்பட்டதால் உண்டான அடையாளக்குறிகளைக் காணலாம். அதே குன்றின் அடிவாரத்தில் சற்றே சரிவாக உள்ள பாறையின் முகத்தில் இரண்டு மீட்டர் நீளமான ஈலன்டு மானின் ஓவியம் உள்ளது. அதன் பிடரி மயிர்கூடத் துல்லியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கோட்டுருவங்களைத் தீட்ட நெருப்புக்கோழியின் இறகு, முள்ளம்பன்றியின் முள், காட்டுப்பன்றியின் வால்மயிர், வேப்பங்குச்சி அல்லது வேர் போன்றவை தூரிகைகளாகப் பயன்படுத்தப்பட்டன.

தொல்பழங்கால ஓவியங்கள் பாறையின் மீது நேராக வரையப்பட்டன. தளம் ஏதும் தயாரிக்கப்படவில்லை. பாறை இடுக்குகளில் இருந்து கனிமங்களைச் சுரண்டி ஏற்ற திரவத்துடன் குழைத்து வண்ணங்கள் தயாரிக்கப்பட்டன. சிவப்பு, மஞ்சள், காவி நிறங்கள், இரும்புத் தாதுக்களாலும் வெள்ளை, இளஞ் சிவப்பு நிறங்கள், கயோலின் (ஓச்ணிடூடிண) எனும் களிமண்ணாலும் கருப்பு நிறம் மாங்கனீஸ் டை ஆக்ஸைடு கனிமத்தாலும் கரியாலும் உண்டாக்கப்பட்டன. இந்த ஓவியங்களில் நீலம், பச்சை நிறங்களைக் காண்பதரிது. கனிமம் அல்லது மண்ணை வண்ணக்குழவையாக்க முட்டையின் வெள்ளைக்கரு, விலங்குகளின் ரத்தம், மற்றும் உமிழ்நீர் அல்லது சிறுநீர் பயன்படுத்தப்பட்டதை வேதியல் ஆய்வுகள் காட்டுகின்றன. உமிழ்நீர் உபயோகிக்கப்பட்டதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு கைகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள். சிவப்பு வண்ணத்தை வாய்க்குள் குதப்பி, உள்ளங்கையைப் பாறைமீது பரப்பிவைத்து அதன் மீது உமிழ்நீரைப் பீச்சி உருவாக்கப்பட்டவை. வல்லமை கொண்டவை என்று பழங்கற்கால ஓவியர்கள் கருதிய விலங்குகளின் குருதியை, கொழுப்பை, வேட்டையைச் சித்தரிக்கும் ஓவியங்களைத் தீட்டப் பயன்படுத்தினர். அவ்வாறு செய்வதால் அவ்விலங்குகளின் சக்தியைப் பெற முடியும் என்று நம்பப்பட்டது. பல செந்நிற ஓவியங்கள் வண்ணக்குழவைகளைக் கைகளால் எடுத்துப் பூசியும் கைவிரல்களால் சாயத்தைத் தொட்டுப் புள்ளிகளால் வரையப்பட்டும் உருவாக்கப்பட்டன. சில குகைகளில் பழங்காலத்தவர் சாயங்களைத் தம் உள்ளங்கைகளில் தடவிப் பாறை முகப்புகளில் அப்பி அச்சாக்கியுள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை சிறிய கைகளாக இருப்பதால் (படம்) அன்று வாழ்ந்தவர்கள் உருவில் சிறியவர்களாய் இருந்தனர் எனச் சிலர் நினைத்தனர். பின்னர் அவற்றை ஆராய்ந்தவர்கள் அவை இளம்பிராயத்தினரின் கையச்சு என்றும் அது பருவம் அடைந்தபோது நடத்தப்பட்ட சடங்கு என்றும் கண்டறிந்தனர்.

இந்தச் சித்திரங்களைத் தீட்டியவர்கள் நின்றுகொண்டு வரைந்தார்கள். கண்மட்டத்தில் ஆரம்பித்து தங்கள் முழங்கால் உயரத்தில் முடித்தனர். அன்று ஆதிமனிதர் வரைந்தபோது நின்றுகொண்டிருந்த சில பாறைகள், காலப்போக்கில் சிதைந்து உருண்டுவிட, அவர்கள் தீட்டிய பல ஓவியங்கள் இன்று தலைக்கு மேல் காணப்படுகின்றன.

இதுபோலவே குகையின் உள்ளே மழையால் கொண்டுவரப்பட்ட மண் குகையின் தளத்தை உயர்த்திவிடச் சில ஓவியங்கள் இன்று கீழே உள்ளன. ஃபிரான்ஸிலும் ஸ்பெயினிலும் சில குகைகளில் ஆதிமனிதர் சாரங்கள் அமைத்து, குகையின் மேற்பகுதிகளில் சித்திரங்கள் தீட்டியதற்கான தடயங்கள் உள்ளன. ஆனால் ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் அவ்வாறு வரையப்படவில்லை.

தொல்காலத்தில் ஆப்பிரிக்க ஆதிமனிதர்களின் வம்சாவளியினர், ஆப்பிரிக்காவின் தென்பகுதி தொடங்கி வடகிழக்கிலுள்ள பிளவுப் பள்ளத்தாக்குவரை பரவி வாழ்ந்தனர். இன்று தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, நமீபியாவில் காடோடிகளாகத் திரிந்து வாழும் இவர்களை வெள்ளையர் "புஷ்மென்' (ஆதண்டட்ஞுண) என்றும் மானிடவியலாளர்கள் சான் (குச்ண) திணைக்குடியினர் என்றும் குறிப்பிடுகின்றனர். இவர்களும் இவர்களது புதிய கற்கால மூதாதையர் ஈறாக, அங்கு வாழ்ந்தவர்கள் வரைந்த பாறை ஓவியங்கள் பரவலாக உள்ள தென்னாப்பிரிக்காவின் மலைப்பாங்கான நட்டால் (Nச்tச்டூ) மாநிலத்தில் உள்ள குகை ஓவியங்களைக் காணும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்குள்ள டிரேகன்ஸ்பெர்க் (ஈணூச்டுஞுணூணண்ஞஞுணூஞ்) எனும் பகுதியில் 2,500 மீட்டர் உயர மலை முகடுகள், பள்ளத்தாக்குகள், புல்வெளிகள், காடுகள், அருவிகள், தெளிநீர் ஓடைகள் என இயற்கையழகு கொட்டிக்கிடக்கின்றது. முப்பதுக்கு மேற்பட்ட குகைகளில், சிறியதும் பெரியதுமான ஏறத்தாழ இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அதிகமாகக் காணப்படுகின்ற, மனித வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த உக்ஹலம்பா - டிரேகன்ஸ்பெர்க் கவனம் உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கே குடியேறிய ஐரோப்பியர்களால், சில பாறை ஓவியங்கள் பற்றி வெளியுலகிற்குத் தெரியவந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1915இல் சயன்டிபிக் அமெரிக்கன் (குஞிடிஞுணtடிஞூடிஞி அட்ஞுணூடிஞிச்ண) இதழில் டிரேகன்ஸ்பெர்க் பாறை ஓவியங்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரை ஒன்று வெளியானது.

சென்ற ஆண்டு, ஒரு வசந்தகாலக் காலையில் வழிகாட்டி முன் செல்ல, பாறை ஓவிய ஆர்வலர்கள் சிலருடன் தங்கியிருந்த முகாமிலிருந்து புறப்பட்டு அருகிலிருந்த மலைமுகட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மணற் பாறைகளிடையே காட்டு மலர்கள் பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்த ஒற்றையடிப்பாதையில் இரண்டு மணிநேரம் நடந்து, மலைமுகட்டின் அருகே நெற்றி போன்று மூன்று மீட்டர் துருத்திக்கொண்டிருந்த பாறையில் கீழே இருந்த, உட்கவிந்த பகுதியை அடைந்தேன். கேம் பாஸ் ஷெல்டர் என்றழைக்கப்படும் இப்பகுதியில் ஐந்து மீட்டர் உயரமுள்ள இருபது மீட்டர் நீண்ட பாறை முகப்பில் தீட்டப்பட்ட ஓவியங்கள் நான் அதுவரை கண்டிராத எழிலானவை.



வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 01, 2010 3:04 am

அவற்றில் பெரும்பாலானவை காளை மாடு அளவுள்ள ஈலன்டு எனும் மான் வகையைச் சித்தரிப்பவை. இதர ஓவியங்கள் வேட்டையாடிகளையும் அருள்வந்த நிலையிலுள்ள மந்திரவாதிகளையும் காட்டுபவை. இந்த ஓவியங்களில் உள்ள மாந்திரீகர்களின் உருவங்கள் சான் மக்கள் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த ஈலன்டுகளைவிடச் சிறியதாக வரையப்பட்டுள்ளன. சான் புராணக் கதை ஒன்று அவை வழிபாட்டுத் தகுதிபெற்றது பற்றிக் கூறுகின்றது. இக்குடியினரின் மூலதெய்வம் கான் (இச்ஞ்ண). அவன் மனைவி சோட்டி (இணிtடி) கானின் சக்தி வாய்ந்த கத்தியை அவன் அனுமதியின்றி எடுத்துக் கிழங்கு தோண்டப் பயன்படுத்தி அதைப் பழுதாக்கிவிடுகின்றாள். அவன் கோபம்கொண்டு அவளைச் சபித்துவிடுகின்றான். அதன் விளைவாகக் கருவுற்றிருந்த சோட்டிக்கு ஒரு மான்குட்டி பிறக்கிறது. என்ன இருந்தாலும் அது தன்னுடைய பிள்ளை என்றுணர்ந்த கான் அந்தக் குட்டியைப் பாதுகாப்பான இடத்தில் மறைத்துவைக்கிறான். அது தன் உடன்பிறப்பு என்றறியாத கானின் மூத்த மகன் கெவி (எஞுதீடி) அதைக் கொன்றுவிடுகின்றான். கான் பதறி ஓடிவந்து அந்தக் குருதியை எடுத்துத் தரையில் தெளிக்க அது விழுந்த இடமெல்லாம் ஈலன்டுகள் தோன்றியதாக முடிகிறது கதை. எனவே அவை புனிதமானவை என நம்பும் சான் மக்கள் அவற்றுக்கும் தம் முன்னோர்களின் ஆன்மாக்களுக்கும் தொடர்பு உள்ளதென்றும் அவை எங்குத் திரளாக மேய்கின்றனவோ அங்கே கான் இருப்பதாகவும் மற்ற விலங்குகளை வேட்டையாட ஈலன்டுகள் வழிகாட்டிகளாக உதவுவதாகவும் நம்புகிறார்கள்.

முன்னர் வரையப்பட்ட சில மனித உருவங்கள்மீது மான் உருவங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. சிவப்பு, அதன்மீது வெள்ளை வர்ணம் பூசி வரையப்பட்ட இந்த ஓவியங்கள், முப்பரிமாணத் தோற்றமளிக்கின்றன. பக்கவாட்டுக் கோணத்தில் சித்தரிக்கப்பட்ட மான்கள் பல வலப்புறம் நோக்கியுள்ளன. இத்தகைய சித்தரிப்பு பொதுவாக இடது கைப்பழக்கம் கொண்டவர்களால் உருவாக்கப்படுபவை. ஏனெனில் வலக்கைப் பழக்கம் உள்ளோர் தாம் வரையும் உருவங்களை இடப்புறம் பார்ப்பதுபோல் சித்தரிப்பர். புகழ்பெற்ற ஓவியர்கள் பலர் இடது கைப்பழக்கம் உடையவர்கள் என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும். அக்கால மனிதர்களில் வரையத் தூண்டுதல் பெற்ற சிலரே பாறை ஓவியங்களை வரைந்திருக்க வேண்டும். அவ்வாறு வரைந்தவர்கள் அனைவரும் ரவிவர்மா போன்ற விற்பன்னர் அல்ல என்றாலும், இயற்கையில் கிடைத்த பொருளை வைத்து நேரிலும் மனக்கண்ணிலும் தாம் கண்டவற்றை அவ்வவ்போது வரைந்தனர்.

கேம்பாஸ் ஷெல்டெரில் உள்ள வேட்டையாடிகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள் அவர்களை ஒற்றை அம்புடன் காட்டுகின்றன. அந்த ஒற்றை அம்புகளிலுள்ள இருவண்ணங்கள் அவை விஷம் தடவப்பட்டவை என்பதைக் காட்டுகின்றன. இன்றும் சான் (ண்ச்ண) திணைக்குடியினர் இரும்பாலான அம்புமுனையை நாணல் தண்டில் பொருத்தி, அதில் கடுமையான நச்சைத் தடவி வேட்டையாடுகிறார்கள். இங்குள்ள ஓவியங்களில் நம் கவனத்தை ஈர்ப்பது அம்புபட்டுச் சாகும் தறு வாயிலிருக்கும் ஒரு ஈலன்டின் ஓவியம். தலை தொங்கிய நிலையில், முன்னங்கால்கள் தளர்ந்து, வளைந்து, பின்னங்கால்கள் பின்னிய நிலையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது துடித்து உயிர்விடும் நிலையிலுள்ள சித்தரிப்பு. அதன் வாலைப் பிடித்துக்கொண்டிருக்கும் மனித உருவமொன்றை உன்னிப்பாகப் பார்த்தால் அதன் கால்களும் குளம்புடையதாக இருப்பது தெரிகின்றது. இது அருள்வந்த நிலையிலுள்ள மாந்திரீகனைக் குறிப்பதாகும். மானின் ஆவி பிரியும் நிலையில் அவனும் ஆவியுலகில் நுழைந்து அந்த மானின் சக்தியைப் பெறுவான் என்னும் நம்பிக்கையின் சித்தரிப்பு இது. இன்றும் சான் மக்களின் மொழியில், இறப்பிற்கும் அருள்வந்த நிலையைக் குறிப்பதற்கும் ஒரே சொல் பிரயோகிக்கப்படுகின்றது. அதனருகே மனித உடலுடன் விலங்குத் தலை கொண்ட இளஞ் சிவப்பு நிறத்தில் வரையப்பட்ட ஓவியம் அருள் நிலையிலுள்ள மற்றொரு மாந்திரீகனைச் சித்தரிக்கின்றது. பின்புறம் கைகட்டி, முன்புறம் சாய்ந்தவாறு சாமியாடும் உருவம் இன்றும் அவ்வாறு ஆடும் சான் மாந்திரீகர்களை நினைவூட்டுகின்றது. அவர்கள் இறந்துகொண்டிருக்கும் விலங்கின் சக்தியைப் பெற அதைச் சுற்றி ஆவேசம்கொண்டு ஆடுகின்றனர்.

அவர்கள் மொழியில் "நோம்' (ணணிட்) என்றழைக்கப்படும் அந்தச் சக்தியைப் பெற்றவுடன் வியர்த்துக் கொட்டி, நிலை தடுமாறி விழுந்துவிடுகிறார்கள். இதையே டிரேகன்ஸ் பெர்க் ஓவியங்கள் பதிவுசெய்கின்றன. இந்த ஓவியங்களைப் பற்றிய ஆய்வுகள் மூலம்தாம் பாறை ஓவியங்கள் குறித்த அடிப்படைப் புரிதல் தொல்லியலாளர்களுக்கு ஏற்பட்டதால், இந்தப் பொருள் பற்றிய ஆராய்ச்சியில் இவை மிக முக்கிய மானவையாகக் கருதப்படுகின்றன.

அதே மலைப்பகுதியில் போர்க்களக் காட்சிகளைச் சித்தரிக்கும் ஓவியங்களைக் கொண்ட குகை (ஞச்ttடூஞு ஞிச்திஞு) சிறப்பு வாய்ந்தது. தோலாடை அணிந்து, ஈட்டியேந்திய வீரர்களில் கருஞ்சிவப்பு உருவங்கள், சான் மக்களை வீழ்த்தி அவர்களது நிலங்களை அபகரித்த சூலு குடியினரைக் குறிப்பிடுகின்றன. ஆடையற்ற உருவங்கள் சான் திணைக் குடியினர். அவற்றில் பல நுட்பமாக வரையப்பட்டவை. அம்பாரியுடன் வில்லேந்திய உருவமும் உடலின் தைத்த அம்பு ஒன்றைக் களையும் உருவமும் அருமையான எடுத்துக் காட்டுகள். சிங்கமொன்றைக் கொல்ல முற்படும் இருவேட்டையாடிகளைச் சித்தரிக்கும் ஓவியம் ஒன்று கவனத்திற்குரியது. சிங்கம், சிறுத்தை போன்ற ஊனுண்ணிகளின் வலிமையை அதைக் கொல்பவர்கள் அடைவர் என்று நம்பப்பட்டதால் இத்தகைய சித்தரிப்பு. வேளாண்மையும் கால் நடைப் பராமரிப்பும் அறிந்திருந்த ஆப்பிரிக்கக் குடியினர் சிலர் செழிப்பான இப்பகுதிகளில் குடியேற, சான் திணைக்குடியினரின் வாழ்விடம் சுருங்க ஆரம்பித்தது. குடியேறிகளின் வேட்டையால் கானுயிரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைய ஆரம்பித்தது. எங்கும் மேய்ந்து திரிய ஆரம்பித்த குடியேறிகளின் கால்நடைகளை அவ்வவ்போது கவர்ந்த சான் மக்கள் பலர் கொல்லப்பட்டனர். பின்னர் அப்பகுதிகளை ஆக்கிரமித்த போர்க்குணம் படைத்த சூலு குடியினராலும் அவர்கள் விரட்டப்பட்டனர். பலர் ரத்தம் சிந்தினர். நன்னம்பிக்கை முனையில் குடியேறிய போயர் என்றழைக்கப்பட்ட டச்சு விவசாயிகள் நிலங்களைக் கையகப்படுத்திப் பரந்த பண்ணைகளை அமைத்து, எதிர்த்த ஆப்பிரிக்கர்களைத் துப்பாக்கி கொண்டு துவம்சம் செய்தனர். ஒண்டவந்த பிடாரியை ஒண்டவந்த இன்னொரு பிடாரி விரட்டிய கதையாக 1837இல் இருந்து தென்னாப்பிரிக்கா வரத் தொடங்கிய பிரிட்டீஷ் காலனியாளர்கள் கடற்கரைப் பகுதியை ஆக்கிரமிக்கத் தொடங்கினாந். இதனால் போயர்கள் உள்நிலம் நோக்கிச் சென்று, எதிர்ப்பட்ட ஆப்பிரிக்கத் திணைக்குடியினரை விரட்டியடித்தனர். போக்கிடமின்றி சான் மக்கள் மலைப்பகுதிகளில் தஞ்சமடைந்தனர்.

அவர்களது பாரம்பரிய வாழிடங்கள், சாலைகள், மின்சாரக்கம்பங்கள், அணைகள், பண்ணைகள் இவற்றால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதால், சுருங்கி, இன்று இவர்கள் தங்கள் தாயகத்திலேயே விளிம்புநிலை மக்களாக மாறிவிட்டனர். அறிக்கை ஒன்றின்படி, 1890வாக்கில் டிரேகன்ஸ்பெர்க் மலைப்பகுதிகளில் முழுவதுமாக அழிக்கப்பட்டனர். அவர்கள் வரைந்த பாறை ஓவியங்களே அங்கு வாழ்ந்தவர்களைப் பற்றிச் சாட்சியம் பகர்கின்றன என விளக்கினார் எங்கள் வழிகாட்டி.

திரும்பி இறங்கிய வழியில் குகை ஒன்றில் இளைப்பாறி நடக்க ஆரம்பித்தபோது, கேம்பெர்க் பாறை ஓவிய மையம் தொலைவில் பள்ளத்தாக்கின் ஆரம்பத்தில் சிறு புள்ளிபோல் தெரிந்தது. அங்கு முந்தைய நாள் நான் கண்ட சான் குடியினர் பற்றிய ஆவணப்படம் என் நினைவில் ஓடியது. அதில் சுருட்டை முடி, சப்பை மூக்கு, தீர்க்கமான பார்வை கொண்ட, சான் குடியினர் ஒருவர் பேசினார் ""பல நூற்றாண்டுகளாக எங்கள் முன்னோர்கள் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தனர். மாறும் பருவ நிலைகளைப் பொறுத்து வலசை போன கானுயிர்த் திரளைப் பின்தொடர்ந்தனர். இம்மலைகளே எங்கள் குடியிருப்புகள். எங்கள் அன்றாட வாழ்க்கை, வேட்டையாடிய விலங்குகள், மறுமை, இயற்கை ஆகியவை பற்றிய எங்கள் நம்பிக்கைகளின் சித்தரிப்புகளைப் பாறை ஓவியங்களாக வரைந்தோம். ஈலன்டுகள் அடுத்த உலகிற்கு எங்களைக் கூட்டிச்செல்லும் வழிகாட்டிகள் என நம்புகிறோம்'' என்று அவர்களது குருதி தோய்ந்த வரலாறு பற்றி ஏதும் கூறாமல் அவர்களின் நம்பிக்கைகள் பற்றி மட்டுமே பேசினார். எஞ்சியுள்ள சான் திணைக்குடியினருக்கு ஈலன்டுகள் தாம் வழிகாட்ட வேண்டும்.

சு.கி. ஜெயகரன்



வரலாற்றின் காலடித்தடங்கள்: ஆப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக