ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

50 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்…

3 posters

Go down

50 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்…  Empty 50 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்…

Post by கார்த்திக் Tue Nov 30, 2010 10:11 am

40 முதல் 60 வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. இந்த காலகட்டத்தில்தான் பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தேடி வரும். அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாகக் கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும்.நாம் கவனமாக இருந்தால் நோயை அண்டவிடாமல் தடுத்து, முழு ஆரோக்கியத்துடன் வாழலாம்.

என்னென்ன நோய்கள் வரும்?

* உடல் எடை அதிகரித்தல்.

* மன அழுத்தம்.

* சர்க்கரை நோய்.

* அதிக அளவில் கொழுப்பு சேருதல்.

* உயர் ரத்த அழுத்தம்.

* இதய நோய்.

* எலும்பு மூட்டு நோய்கள்.

* புற்று நோய்.

* வாழ்வியல் முரண்பாடுகளால் ஏற்படும் நோய்கள்.

`மெட்டோபாலிக் சின்ட்ரோம்`

இந்தியர்களுக்கு அதிகமாக உள்ளது. இது அளவிற்கு அதிகமாக இடுப்பு பெருத்துபோவதையும், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) ஆகிய 4 பாதிப்புகளையும் குறிபிடுகிறது. இத்தகைய பாதிப்புகள் இருப்பவர்களிடம் மது மற்றும் புகை பழக்கம் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் ஆரோக்கியம் அபாயத்தை நோக்கிச் செல்லும்.

தற்போதைய வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு பழக்கத்தால் ஆண்களின் இடுப்பு அளவு 100 செ.மீட்டருக்கு மேலும், பெப்களின் இடுப்பு அளவு 85 செ.மீட்டருக்கு மேலும் பெருத்து காணப்படுகிறது. மனித உடலில் சேரும் கொழுப்புகளில் இடுப்பில் சேரும் கொழுப்பாலே ஆபத்து அதிகரிக்கிறது.

உடல் எடை அதிகரிப்பது ஏன்?

நாற்பது வயதுக்கு மேல் இளமை விடைபெற்று விடுவதால், இயல்பாகவே உடல் உழைப்பு குறைந்துவிடுகிறது. அதே நேரத்தில் அவர்கள் பார்க்கும் வேலையில் பதவி உயர்வு கிடைக்கிறது. சமூக அந்தஸ்து அதிகரிக்கிறது. நண்பர்கள் வட்டம் விரிவடைகிறது. அதனால் விருந்து, விழா என்று அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவு அதிகரித்துவிடுகிறது. மது பழக்கமும் தோன்றுகிறது. உடல் உழைப்பு குறையும் அதே நேரத்தில், உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவைகளையும் இந்த பருவத்தில் குறைத்துவிடுகிறார்கள். பதவி உயர்வால் அதிகமான நேரம் உட்கார்ந்த நிலையிலே வேலை பார்பார்கள். இது போன்ற பல காரணங்களால் உடல் குண்டாகிறது.

இந்த பருவத்தில் மன அழுத்தம் அதிகரிப்பது ஏன்?

ஐம்பது வயதைத் தொடும்போது திருமணமாகி 20 வருடங்கள் கடந்து போயிருக்கும். திருமண வாழ்க்கை போரடிக்க தொடங்கியிருக்கும். இந்த காலகட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்து படிப்பில் முக்கிய கட்டத்தை அடைந்திருப்பார்கள். படிப்பில் அவர்கள் அடுத்தடுத்த கட்டத்தை அடைய நிறைய பணம் தேவைபடும். பெண் பிள்ளைகள் திருமண வயதை அடைந்திருப்பார்கள். அதனால் பணத்தின் தேவையும், மாப்பிள்ளை பார்க்கும் அலைச்சலும் தோன்றும். சில வீடுகளில் பிள்ளைகள் திருமணமாகி தனியாக போய்விடுவார்கள். இதனால் கணவனும், மனைவியும் தனிமையை அனுபவிக்கும் நிலை தோன்றும். 40-60 வயதில் கழுத்து எலும்பு தேய்மானம், டென்ஷன் தலைவலி, வயிற்று எரிச்சல், ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். தூக்கமின்மை தோன்றும். முடிவு எடுக்கும் திறன் பாதிக்கும்.

சர்க்கரை நோய் தோன்றுவது ஏன்?


பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால் மரபு வழியாக பிள்ளைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது. தந்தைக்கு 50 வயதில் இந்த நோய் வந்திருந்தால், மகனுக்கு 40 வயதிலே வந்துவிடுகிறது. அதிக உடல் உடை இருந்தால் அதுவும் சர்க்கரை நோய் வர காரணமாகிறது. அதிக உடல் எடை கொண்டவர்களிடம் மது அருந்தும் பழக்கம் இருந்தால், சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரிக்கும். உடற்பயிற்சியின்மையும் பாதிக்கும். உடலில் வயிற்று பகுதியில் பான்கிரியாஸ் சுரப்பி உள்ளது. அங்குதான் உடலுக்கு தேவையான இன்சுலின் சுரக்கிறது. மது அருந்தும்போது பான்கிரியாஸ் பாதிக்கபடுகிறது. அதனால் இன்சுலின் உற்பத்தி குறைந்து, சர்க்கரை நோய் தோன்றுகிறது. மது அருந்துபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான பாதிப்பு அதிகம். தந்தைக்கு சர்க்கரை நோய் ஏற்படும்போது அவர், ஜென்மம் ஜென்மமாக தன் வாரிசுகளுக்கும் அந்த நோயை கொடுத்துவிட்டுச் செல்கிறார்.

அதிகமான அளவு கொழுப்பு தோன்ற என்ன காரணம்?

சர்க்கரை நோய் போல் இதுவும் மரபு வழியாகத் தோன்றுகிறது. உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது. அசைவ உணவுகள் அதிகம் சாப்பிடுவது. சைவ உணவுகளில் உடலுக்கு தேவையான கொழுப்பு இருக்கிறது. அசைவ உணவுகளில் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கொழுப்பு உள்ளது. இது போன்ற பல்வேறு காரணங்களால் உடலில் கொழுப்பு அதிகம் சேருகிறது. உயர் ரத்த அழுத்தம் உருவாகும் காரணம் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை. அதிகரிக்கும் உடல் எடை. பெரும்பாலான நேரம் ஏ.சி. அறையிலே உட்கார்ந்து வேலை பார்பது. ஏ.சி. அறையில் வேலை பார்த்தால் வியர்வை வராது. உடலில் வியர்வை தோன்றினால்தான் அதன் மூலம் உடலில் இருக்கும் உப்பு வெளியேறும். வியர்வை தோன்றாமலே இருந்தால் உப்பு உடலிலே தங்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

இதய நோய் தோன்றுவதற்கு என்ன காரணம்?


இந்த வயதில் இதய நோய் உருவாக ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. மரபு வழியான இதய நோய் உருவாகும் சூழ்நிலை இந்தியர்களுக்கு மிக அதிகமாக இருக்கிறது. இந்தியர்களின் ரத்தத்தில் இருக்கும் மரபு வழியான குறிப்பிட்ட குறைபாடு இதய நோய் தாக்குதல் தன்மையை அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்கள் 45 வயதைக் கடக்கும்போது மெனோபாஸ் காலகட்டத்தை அடைகிறார்கள். அப்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி நின்றுவிடும். அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. மன அழுத்தம், அதிக உடல் எடை, சர்க்கரை நோய் போன்றவை இருந்தாலும் இதயம் பாதிக்கும். புகையிலை பயன்பாடு, புகை பிடித்தல் போன்றவை இருந்தால் பாதிப்பு மிக அதிகமாகிறது.

முதுமை தொடங்கும்போது மூட்டுவலி ஏற்படுவது ஏன்?

40 வயதில் தொடங்கி வயது அதிகரிக்க அதிகரிக்க மூட்டு வலி நோய்களால் அவதிபடுகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. 30 வயதுக்குள் அப்பாவாகி விடுகிறவர்கள், 60 வயதுக்குள் தாத்தாவாகி விடும்போது இயல்பாக அவர்கள் உடல் தளர்ந்து, எலும்புகள் தேய்மானமாகி மூட்டு நோய்களால் பாதிக்கபடுகிறார்கள். வயதாகும்போது உண்பது, உறங்குவது என்று வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். அதனால் உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாமல் போய்விடுகிறது. உடல் இயக்கம் குறையும்போது மூட்டு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படத் தொடங்குகின்றன.

புற்றுநோய் தாக்குவது ஏன்?

இளம் வயதிலே புற்றுநோய் ஏற்பட்டாலும் 40-ல் இருந்து 60-க்கு உட்பட்ட வயதில்தான் ஆண்களும், பெண்களும் பெரும்பாலும் புற்றுநோய்த் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். புற்று நோய் எந்த பகுதியை பாதிக்கிறதோ, அது அதற்கென்று தனிக் காரணங்கள் இருக்கின்றன. நுரையீரலில் புற்றுநோய் ஏற்பட புகை பிடித்தலும், ஈரலில் ஏற்பட மது பழக்கமும் காரணமாக இருக்கிறது. கார உணவு, பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது வயிற்று புற்று நோயை ஏற்படுத்தும். தொடர்ந்து மலச் சிக்கல் இருந்துவந்தால் பெருங்குடல் புற்றுநோய் தோன்றும். மனித உடலில் ஏற்படும் புற்று நோய்க்கு மது 3 சதவீதம் அளவுக்கு காரணமாக இருக்கிறது.

CNN


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

50 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்…  Empty Re: 50 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்…

Post by புவனா Tue Nov 30, 2010 10:17 am

சிறந்ததொரு பதிவிற்கு நன்றி கார்த்திக்...

கலை அண்ணா படித்துவிட்டிர்களா....


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

50 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்…  Empty Re: 50 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்…

Post by Thanjaavooraan Tue Nov 30, 2010 11:26 am

பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி 50 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்…  154550
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

50 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்…  Empty Re: 50 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum