புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தமான் சிறைச்சாலை Poll_c10அந்தமான் சிறைச்சாலை Poll_m10அந்தமான் சிறைச்சாலை Poll_c10 
91 Posts - 61%
heezulia
அந்தமான் சிறைச்சாலை Poll_c10அந்தமான் சிறைச்சாலை Poll_m10அந்தமான் சிறைச்சாலை Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அந்தமான் சிறைச்சாலை Poll_c10அந்தமான் சிறைச்சாலை Poll_m10அந்தமான் சிறைச்சாலை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அந்தமான் சிறைச்சாலை Poll_c10அந்தமான் சிறைச்சாலை Poll_m10அந்தமான் சிறைச்சாலை Poll_c10 
6 Posts - 4%
viyasan
அந்தமான் சிறைச்சாலை Poll_c10அந்தமான் சிறைச்சாலை Poll_m10அந்தமான் சிறைச்சாலை Poll_c10 
1 Post - 1%
eraeravi
அந்தமான் சிறைச்சாலை Poll_c10அந்தமான் சிறைச்சாலை Poll_m10அந்தமான் சிறைச்சாலை Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அந்தமான் சிறைச்சாலை Poll_c10அந்தமான் சிறைச்சாலை Poll_m10அந்தமான் சிறைச்சாலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தமான் சிறைச்சாலை Poll_c10அந்தமான் சிறைச்சாலை Poll_m10அந்தமான் சிறைச்சாலை Poll_c10 
283 Posts - 45%
heezulia
அந்தமான் சிறைச்சாலை Poll_c10அந்தமான் சிறைச்சாலை Poll_m10அந்தமான் சிறைச்சாலை Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அந்தமான் சிறைச்சாலை Poll_c10அந்தமான் சிறைச்சாலை Poll_m10அந்தமான் சிறைச்சாலை Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அந்தமான் சிறைச்சாலை Poll_c10அந்தமான் சிறைச்சாலை Poll_m10அந்தமான் சிறைச்சாலை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அந்தமான் சிறைச்சாலை Poll_c10அந்தமான் சிறைச்சாலை Poll_m10அந்தமான் சிறைச்சாலை Poll_c10 
19 Posts - 3%
prajai
அந்தமான் சிறைச்சாலை Poll_c10அந்தமான் சிறைச்சாலை Poll_m10அந்தமான் சிறைச்சாலை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அந்தமான் சிறைச்சாலை Poll_c10அந்தமான் சிறைச்சாலை Poll_m10அந்தமான் சிறைச்சாலை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அந்தமான் சிறைச்சாலை Poll_c10அந்தமான் சிறைச்சாலை Poll_m10அந்தமான் சிறைச்சாலை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அந்தமான் சிறைச்சாலை Poll_c10அந்தமான் சிறைச்சாலை Poll_m10அந்தமான் சிறைச்சாலை Poll_c10 
7 Posts - 1%
mruthun
அந்தமான் சிறைச்சாலை Poll_c10அந்தமான் சிறைச்சாலை Poll_m10அந்தமான் சிறைச்சாலை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தமான் சிறைச்சாலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 16, 2009 1:09 pm

அந்தமான் சிறைச்சாலை ArialJailView




அந்தமானில் உள்ள கொட்டடி சிறைச்சாலை, சுதந்திரத்திற்காக இந்தியா நடத்திய நீண்டகால போராட்டத்தின் நினைவு சின்னமாக விளங்குகின்றது. இருண்ட அந்த சிறைச்சாலையின் குறுகிய அறைகளுக்குள், நூற்றுக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்கள் தமது தாய் நாட்டின் விடியலுக்காக உயிர் விட்டனர். அவர்களின் தியாகத்திற்கு பரிசாக சுதந்திரம் கிடைத்தது. ஆனால் வீரர்கள் பட்ட சித்ரவதைகளின் மௌன சாட்சியான அந்த சிறைச்சாலை இருண்டு கிடக்கிறது.

அந்தமான் தீவுகளை, 1789 - 1796 களில் ஆக்கிரமிக்க முயன்ற ஆங்கிலேயர்களின் முதல் முயற்சி தோல்வியை தழுவியது. 1857 இல் நிகழ்ந்த இந்தியாவின் முதல் சுதந்திரப் போர், கிளர்ச்சியாளர்கள், எதிர்ப்பாளர்கள், குற்றவாளிகளை நாடு கடத்த, ஆங்கிலேயர்கள் பொருத்தமான இடத்தை தேர்ந்தெடுக்கத் தூண்டியது. டாக்டர் ஜே.ஈ. மவுட், டாக்டர் ஜி.ஆர். பிளேஃபேர், லெப். ஜெ.ஏ. ஹீத்கோட் ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையின் படி தற்போதைய போர்ட் பிளேயர் (அப்போதைய போர்ட் காரன்வாலிஸ்), குற்றவாளிகளை தண்டிக்க சிறந்த இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த குடியிருப்பின் முதல் கண்காணிப்பாளரான டாக்டர் ஜெ.பி. வாக்கர், 1858 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 10 ஆம் தேதியன்று 200 குற்றவாளிகளுடன் போர்ட் பிளேயர் வந்திரங்கினார். குற்றவாளிகள் என்று ஆங்கிலேயரால் அழைக்கப்பட்ட அவர்கள் 1857 இல் நடந்த முதல் விடுதலைப் போரில் பங்கேற்ற சுதந்திர போராட்ட வீரர்களாவர்.

தண்டனைப் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, குடியிருப்பின் அளவு பெருகியது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அந்த குடியிருப்புகள் 327 சதுர மைல் பரப்பளவுக்கு விரிந்தன. இதில் தெற்கு அந்தமானில் இருந்த 34 கிராமங்களும், 29 தண்டனை நிலையங்களும் அடங்கும். கொட்டடி சிறை கட்டுவதற்கு முன்பு, 1901 இல் அந்தமான குடியிருப்பில், தண்டனை பெற்றோர் 11,974 பேர் உட்பட 16,106 பேர் இருந்தனர்.

போர்ட் பிளேயர் குடியிருப்பை ஆராய்வதற்காக பல்வேறு உயர்மட்டக் குழுக்கள் அவ்வப்போது அமைக்கப்பட்டன. 1890 இல் அமைக்கப்பட்ட சர். சி.ஜே. லயல், டாக்டர் ஏ.எஸ். லெக்பிரிட்ஜ் ஆகியோர் அடங்கிய குழு, குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்களிடையே தீவிர ஒழுங்கு முறையை ஏற்படுத்த, முதல் ஆறு மாதத்திற்கு ஒவ்வொரு குற்றவாளியையும் தனித்தனி கொட்டடியில் அடைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதன்படி 600 குற்றவாளிகளைத் தனித்தனிக் கொட்டடிகளில் அடைக்க ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. இதை சில திருத்தங்களுடன் அப்போதைய அரசு ஏற்றுக்கொண்டது. இந்தத் திட்டம்தான், புதுமையான வடிவமைப்புடன் கூடிய கொட்டடிச் சிறை உருவாக வழி வகுத்தது. 690 கொட்டடிகளையும், ஏழு பிரிவுகளையும் கொண்ட இந்த மூன்று மாடி கட்டிடம் உருவாக சுமார் பத்து வருடங்களானது.

மைய கோபுரத்தில் ஒரு காப்பாளர் நின்று கொண்டு ஏழு பிரிவுகளையும் ஒரே நேரத்தில் கண்காணிக்க முடியும். வெவ்வேறு பிரிவுகளில் உள்ள கைதிகள் ஒருவரையருவர் தொடர்பு கொள்ளவே முடியாது என்பது இச் சிறைச்சாலையின் மற்றொரு கொடுமையான அம்சமாகும். ஒவ்வொரு பிரிவும் மற்றொன்றின் பின்புறத்தை நோக்கி இருக்கும். பதிமூன்றரை அடி நீளமும் ஏழரையடி அகலமும் கொண்ட ஒரு கொட்டடி இரும்பு கிரில் கதவால் மூடப்பட்டு வெளிப்புறத்தில் கனமான பூட்டால் பூட்டப்பட்டிருக்கும். இது நுழைவு கதவிலிருந்து சில அடிகள் தள்ளியிருக்கும். ஆகையால் உள்ளிருக்கும் கைதி நுழைவுக் கதவை எட்ட முடியாது. மூன்றடி நீளமும், ஒரு அடி அகலமும் கொண்ட இரும்பு கம்பிகளாலான சிறிய ஜன்னல்தான் கொட்டடிக்குள் சிறிதளவேனும் வெளிச்சத்தை கொண்டு வரும். நான்கடி அகல வராந்தா பிரிவின் அனைத்து கொட்டடிகளின் முன்புறத்தை இணைக்கிறது. இது சுவருடன் இணைக்கப்பட்டு, இரும்பு கிராதிகளால் அடைக்கப்பட்டிருக்கும். அனைத்துப் பிரிவுகளின் வராந்தாக்களும் மைய கோபுரத்துடன் இணைக்கப்பட்டு இரும்பு கேட்டால் பூட்டப்பட்டிருக்கும். உயர்ந்த சுற்றுச் சுவர்கள் சிறைச்சாலையைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும். முன்புறம் நிர்வாக அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கும்.

1857 சுதந்திரப் போரில் பங்கேற்ற வீரர்கள் தவிர, வாகாபிகளும், கொலைகாரர்கள், வழிப்பறி கொள்ளையர்கள் உட்பட பிற குற்றவாளிகளும் சேர்த்து இந்தக் குடியிருப்பில் அடைபட்டிருந்தோரின் எண்ணிக்கை அதிகப்பட்சமாக சுமார் 14,000 - ஐ ஒரு கட்டத்தில் எட்டியது. கொட்டடிச் சிறைச்சாலை கட்டி முடிக்கப்பட்டப் பின்னர், மலபார் மாப்பிளாக்களும், கோதாவரி ரும்பா விவசாயிகளும், பர்மாவைச் சேர்ந்த தர்வாடிகளும், ஆங்கிலேயருக்கு எதிராக போராடியதற்காக இங்கு ஆயுள் கால சிறை வைக்கப்பட்டனர்.

அவர்களில், 1909 முதல் 1937 வரை வங்காளம் மற்றும் பிற மாநிலங்களில் புரட்சியில் ஈடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் முக்கியமானவர்களாவர். இந்த மகத்தான வீரர்கள் இங்கு பட்ட சித்ரவதைகளும், அவர்கள் செய்த உயிர்த் தியாகங்களும் இந்த கொட்டடிச் சிறையை சுதந்திர இந்தியாவின் புனிதத் தலமாக ஆக்கியுள்ளன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 16, 2009 1:09 pm

மனித தன்மையற்ற, வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத பல சித்ரவதைகளை நமது விடுதலைப் போராட்ட வீரர்கள் இங்கு அனுபவித்தனர். தலைமை சிறை காவலர் டேவிட் பேரியின் அடக்கு முறையை எதிர்த்து அரசியல் கைதிகள் இங்கு முதல் முறையாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 1913 இல் நடந்த இரண்டு கிளர்ச்சிகள் காரணமாக ஆங்கிலேய அரசு அரசியல் கைதிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. ஆயுட்கால தண்டனைக்கும் குறைவான தண்டனை பெற்றவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவர் என்றும் அது கூறியது.

சிட்டகாங் ஆயுத கிடங்கு கொள்ளை வழக்கில் ஈடுபட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் 1932- 38 இல் அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டனர். இவர்கள்தான் கடைசியாக இங்கு அனுப்பப்பட்ட அரசியல் கைதிகள் ஆவர். நாடு கடத்தப்பட்ட இந்த 366 வீரர்களில் 332 பேர் வங்காளத்தைச் சார்ந்தவர்கள். இது கொட்டடி சிறையின் மிக மோசமான ஒரு காலகட்டம். இந்த காலத்தில்தான் இரண்டு சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்றன. 1933 மே மாதத்தில் நடைபெற்ற முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில், சிறை நிர்வாகம் முரட்டு கைதிகள் மூலம் வலுக்கட்டாயமாக உணவை திணிக்க முயன்றதால், மகாபீர்சிங் ( லாகூர் சதி வழக்கு ), மொகித் மைத்ரா (ஆயுதச் சட்டத்தின் கீழ் கல்கத்தாவில் தண்டனை பெற்றவர்), மோகன் கிஷோர் நாமதாஸ் ( ஆயுதச் சட்டம்) ஆகிய மூன்று தியாகிகளும் உயிரிழந்தனர். மிகக் கொடூர சித்ரவதையை தாங்க முடியாமல் 1912 இல் இந்து பூசன் ராய் தற்கொலை செய்து கொண்டார். 1919 இல் பண்டிட் ராம் ரக்கா (பர்மா சதி வழக்கு) தமது பூணூலின் புனிதத்தை காக்க சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்.

1937 இல் இங்கு நடைபெற்ற இரண்டாவது உண்ணாவிரத போராட்டம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியது. ரவீந்தரநாத் தாகூரும், மகாத்மா காந்தியும் அமைதியை இழந்து, பரிதவித்தனர். "இந்த நாட்டின் மலர்கள் உதிர்ந்து சருகாக நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார் தாகூர். நிர்பந்தங்கள் தொடர்ந்ததால் ஆங்கிலேய அரசு 1938 ஜனவரியில் அனைத்து அரசியல் கைதிகளையும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பியது.

இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேயர்கள் அந்தமான் தீவை விட்டு தப்பித்தனர். ஜப்பானியர்கள், 1942 மார்ச்சில் இதை ஆக்கிரமித்தனர். அதற்குப் பிறகு மூன்றரை ஆண்டுகள் ஜப்பானிய ஆதிக்கத்தில் இந்த தீவு அச்சத்தில் மிதந்தது. ஆங்கிலேயருக்கு உளவு பார்த்ததாகக் கூறி நூற்றுக்கணக்கான தீவுவாசிகள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஏராளமானோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கொலைபாதக செயல்களுக்கு, திக்னாபாத், ஹாம்பிரேகஞ்ச், ஹேவ்லாக், தர்முக்லி, கொட்டடிச் சிறை ஆகியவை மௌன சாட்சியாக நின்றன. ஹீரோசிமா, நாகசாகி குண்டு வெடிப்புகளுக்கு பிறகு ஜப்பான் சரணடைந்தது. 1945 அக்டோபர் 7 இல் ஆங்கிலேயர்கள் இந்தத் தீவை திரும்பவும் ஆக்கிரமித்தனர்.

1947 ஆகஸ்ட் 15 இல் இந்தியாவில் சுதந்திர சூரியன் உதித்த போது, கொட்டடிச் சிறை இருண்டுபோய் அனாதையாக நின்றது. ஜப்பானியர்கள் இந்த சிறையின் இரண்டு பிரிவுகளைத் தகர்த்து விட்டனர். சுதந்திர இந்தியா இரண்டைத் தகர்த்தது. மீதியுள்ள மூன்று பிரிவுகள், அந்தமானில் வசித்த சுதந்திர போராட்ட வீரர்கள் நடத்திய போராட்டத்தால் காப்பாற்றப்பட்டன. அதற்குப் பிறகு அந்தமான் கொட்டடி சிறை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட 13 ஆண்டுகள் பிடித்தன. 1979 பிப்ரவரி மாதத்தில் அன்றைய பிரதமர் காலம் சென்ற திரு. மொராஜி தேசாய் இந்த சிறையை நாட்டு அர்ப்பணித்து, நினைவு சின்னமாக அறிவித்தார். சுதந்திர போராட்ட வீரர்கள் பட்ட காயங்களின் தழும்புகள், அவர்கள் செய்த மகத்தான தியாகங்களின் சுவடுகளுடன் அந்தமான் கொட்டடி சிறைச்சாலை கம்பீரமாக நிற்கிறது. என்றும் அழியாத இந்த நினைவுகள் வரவிருக்கும் தலைமுறைகளுக்கு நாட்டுப் பற்றையும், அர்ப்பணிப்பு உணர்வையும் சொல்லித்தரட்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 16, 2009 1:11 pm

இங்கு சுதந்திர தியாகிகள் கொடுமைப்படுத்தப் பட்டதை சித்தரிக்கும் ஓவியங்கள்:

அந்தமான் சிறைச்சாலை Beating%20the%20prisoners%20paintng

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 16, 2009 1:11 pm

அந்தமான் சிறைச்சாலை Force%20feeding%20prisoners%20paintng

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 16, 2009 1:12 pm

அந்தமான் சிறைச்சாலை Prisoners%20clearing%20forest%20paintng

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 16, 2009 1:12 pm

அந்தமான் சிறைச்சாலை ExAnd82%20CoconutCrushingMachine

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 16, 2009 1:12 pm

அந்தமான் சிறைச்சாலை ExAnd81%20Flogging1

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 16, 2009 1:12 pm

அந்தமான் சிறைச்சாலை ExAnd84%20Flogging2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 16, 2009 1:12 pm

அந்தமான் சிறைச்சாலை ExAnd83%20Prisoners%20in%20shackles%20(models)

http://www.andamancellularjail.org/

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Aug 16, 2009 1:19 pm

நேற்று இந்தியாவின் சுதந்திர தின நாள் ஆனால் பல்வேறு தொலைக்காட்சிகள் சுதந்திரம் பற்றிய எந்த விடயங்களையும் ஒளிபரபபாக்கவே இல்லை.. நீங்களாவது இவற்றை நினைவு படுத்தினீர்களே அண்ணா.. நிச்சயம் தற்போது இது தேவையான ஒரு பதிவே...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக