ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்.....

2 posters

Go down

தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்..... Empty தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்.....

Post by rrsimbu Mon 29 Nov 2010 - 9:35

தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்.....


இசையின் கடவுள் ராகதேவனின் பொற்பாதங்கள் தொட்டு வணங்கி இந்த பாடல் [பதிவை] எழுதுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்....

சமீபத்தில் நண்பர்கள் அனைவரும் நந்தலாலா படம் பார்த்து அந்த நெகிழ்வின் பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வரமுடியவில்லை, அந்தளவுக்கு மனம் முழுக்க நிரம்பி நம்முள் பாதிப்புகளையும் உணர்வுகளையும் ஏற்படுத்தி விட்டது இந்த படைப்பு , படத்தின் உயிர் நாதமே இளையராஜாதான் தனது இசை ராஜாங்கத்தை மீண்டும் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார், இப்படி ஒரு கதைக்களத்தை அன்பின் உணர்வுகளாக பதிவு செய்த மிஷ்கின் சாருக்கு எனது இதயங்கனிந்த நன்றி! படைப்பிற்கு உயிர் கொடுத்த எங்கள் ராகதேவன் ராசைய்யாவுக்கு எனது கோடான கோடி நன்றி!

படத்தைப்பற்றி நிறைய நண்பர்கள் விமர்சனம் எழுதி விட்டார்கள், ஆயினும் என்னுள் இன்னும் உணர்வுகளாக ஒலித்துக்கொண்டிருக்கும் ராசைய்யாவின் தாலாட்டைப் பற்றி ஒரு சிறு முயற்சி இந்த பதிவு, ஏதேனும் குறைகள் எழுத்துப் பிழைகள் இருப்பினும் இந்த மாணவனை மன்னித்தருள்க!

இதோ ராசைய்யாவின் இசைத்தாலாட்டு:

(தாலட்டைக் கேட்க கேஸட்டை PLAY பன்னுங்க)

தாலாட்டின் வரிகள்:

தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்!
தாய் உன்னை காணத்தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்!
அம்மா உன்ன பார்த்தா வார்த்தவல்ல மேலே
இப்ப உன்ன பார்த்தா பச்சப்புள்ள போலே
தாலாட்டுப் பாட இங்கே யாராரிராரோ.........
தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்!

என்னை ஒரு பாரமென்றா சுமந்து நீ காத்திருந்த...
உனக்கு நான் பாரமென்று எதுக்கு நீ தள்ளிவச்ச
சங்கிலியால் என்ன கட்டி வச்ச காலம் உண்டு
சங்கிலியால் நீயே கட்டிக்கொண்ட நியாயம்தா...
உன்மேலே என்ன காயம்
என் நெஞ்சில் வலி கூடும்!
அன்பே ஒரு துன்பமா!

தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்!
தாய் உன்னை காணத்தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்!
அம்மா உன்ன பார்த்தா வார்த்தவல்ல மேலே
இப்ப உன்ன பார்த்தா பச்சப்புள்ள போலே
தாலாட்டுப் பாட இங்கே யாராரிராரோ.......

தொட்டிலிலே தூளி வக்க உன்வயசு தோது இல்ல
உன்ன விட்டு ஒதுங்கவும் எம்மனசு கேட்கவில்ல
பிள்ளப் பெத்த நோவ எந்த பிள்ளத் தீர்த்ததண்டு
அம்மா என்னும் பூவ பொத்திக் காக்க நானும் உண்டு
அம்மா உந்தன் அம்மா வந்தால் இங்கே அம்மா
பிள்ளை எந்தன் அன்பிலே!

தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்!
தாய் உன்னை காணத்தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்!
அம்மா உன்ன பார்த்தா வார்த்தவல்ல மேலே
இப்ப உன்ன பார்த்தா பச்சப்புள்ள போலே
தாலாட்டுப் பாட இங்கே யாராரிராரோ.......

தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்!
தாய் உன்னை காணத்தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்!

இந்தப் பாடலைக் கேட்கும்போது நம்மையறியாமல் கண்கள் குளமாவதைத் தடுக்க முடியாது, அந்தளவுக்கு நெகிழ்ச்சியும் உணர்வுகளும் கலந்து நம்மை
உருக்கமாய் உணர்வுகளூடே பயணித்து கரைய வைத்திருக்கிறார் ராகதேவன் பாடல்களுக்கு இடையே வரும்( interlude) இசை கூட நம்மை ஏதோ செய்கிறது,மற்றொன்று ராகதேவனின் குரல்,இந்தப் பாடலை ராஜாவைத்தவிர வேறு பாடகர்கள் பாடினால் இந்தளவுக்கு நம்மை உருக்கமாய் நெகிழவைத்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான், அந்தளவுக்கு ராஜாவின் குரலும் ஜீவனும் நம்மை கட்டிப்போடுகிறது. அதுவும் தாயைப் பற்றிய பாடல் என்றால் கேட்கவே வேண்டாம் ராஜா ராஜாதான் அன்றும் இன்றும் என்றும்....
சமீப காலமாக ராகதேவனின் இசை அவ்வளவாக பேசப்படவில்லை என்று சிலர் குறைகூறிக் கொண்டு இருந்தார்கள், இது ராகதேவனின் வெறியர்களாகிய எங்களுக்கும் ஒரு குறையாகவும் சற்று வருத்தமாகவும் இருந்தது, இதற்கெல்லாம் தனது இசையால் பதிலடி கொடுத்து தன்னை யாரென்று மீண்டும் நிருபித்துவிட்டார் இசைஞானி....சிறந்த படைப்பும் கதைக்களமும் அமைந்தால் இசையில் என்றுமே தன்னை யாரும் அசைக்க முடியாது என்பது இசைஞானியின் பலம்...

அடுத்த வருடம் தேசிய விருது நிச்சயம் ராஜாவுக்கு உண்டு
இசைஞானியை குறை சொல்பவர்களுக்கெல்லாம் ஒன்றே ஒன்றுதான் சொல்லிக்கொள்கிறோம்:
“நத்திங் பட் இளையராஜா”
NOTHING BUT ILAYARAJA
தமிழிசையின் கடைசி சத்தம் கேட்கும் வரை ராஜா வாழ்ந்துகொண்டிருப்பார் தனது இசையால்! “இசைஞானி=இசை” He Is Music.

இசைஞானியின் ஒரு சிறிய வரலாற்றுக் கானொளி: