ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி

2 posters

Go down

பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி Empty பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி

Post by vmanirajan Sun Nov 28, 2010 3:19 pm

வரலாறு - மாமனிதர்கள்



பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி (ஜுலை 29, 1883 - ஏப்ரல் 28, 1945) என்ற முழுப்பெயர் கொண்ட முசோலினி இத்தாலி நாட்டுக்கு 1922 - 1943 காலப்பகுதியில் தலைமை வகித்தவர். இத்தாலிய அரசை பாசிச அரசாக மாற்றி ஏகபோக சர்வாதிகார ஆட்சியை முசோலினி நடத்தினார். அரச கட்டமைப்புகளையும், தனியார் நிறுவனங்களையும், ஊடகங்களையும், திறனாளர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வன்முறை, பரப்புரை, ஏகபோக அணுகுமுறை ஊடாக பாசிச அரசை உருவாக்கி பேணினார். ஹிட்லருடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளுக்கு எதிராகப் போரிட்டுத் தோற்றார். ஏப்ரல் 1945 இல், முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் பிடிபட்டு பின் அவரும் அவர் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனர். இவரது உடல் மிலானுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள ஒரு எண்ணெய் விற்பனை நிலையத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.


இளமைக்காலம்

முசோலினி எமிலியா-ரொமக்னா என்னும் ஊரிலுள்ள போர்லி மாகாணத்தினலுள்ள டோவியா டை பிரிடாப்பியோ என்னும் நகரத்தில் ஓர் உழைக்கும் பாட்டாளியின் குடும்பத்தில் பிறந்தார். இவர் பெற்றோருக்கு இவரே மூத்தவர் இவரின் உடன் பிறந்தோர் அமால்டோ முசோலினி மற்றும் எட்விக் முசோலினி. இவர் தந்தை பெயர் அலெக்சாண்ட்ரோ முசோலினி. இவர் ஒரு இரும்பு அடிக்கும் கொல்லர். இவர் தாய் ரோசா முசோலினி ஆசிரியை. இவர் தாய் கத்தோலிக்க மதத்தில் அதிக இறை பற்றுடையவர்.


கல்வி

முசோலினி சிறு வயதில் தன் தந்தையின் தொழிலுக்கு மிகவும் உதவி புரிந்தார். தந்தையாரின் சீர்திருத்தக் கொள்கையினால் அவருக்கு ஞானஸ்நானம் செய்யப்படவில்லை. தன் தந்தையின் பொதுவுடமை, சீர்திருத்த கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அதன் காரணமாக மெக்சிக்கன் சீர்திருத்தவாதியான பெனிட்டோ ஜீவாரசின் பெயரை தன் பெயரோடு சேர்த்து பெனிட்டோ முசோலினி என்று மாற்றி கொண்டார். பிறகு விடுதிப்பள்ளி ஒன்றில் சேர்க்கப்பட்டார் அப்பள்ளியில் இவர் செய்த குறும்புகளின் காரணமாக பள்ளியைவிட்டு நீக்கப்பட்டு வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டார், அங்கு சிறப்பானதொரு கல்வி பயின்றார். 1901 ஆம் ஆண்டு பள்ளி இறுதி தேர்வுக்குப்பின் தொடக்க கல்வி ஆசிரியராக அப்பள்ளியிலேயே நியமிக்கப்பட்டார்.


இராணுவத்தில் பணிபுரிதல்

1902 ம் ஆண்டு முசோலினி தன் சொந்த மண்ணை விட்டு சுவிட்சர்லாந்துக்கு குடியேறினார்.அங்கு வேலை கிடைக்காமல் குடும்ப வறுமைக்கு தள்ளபட்டார். அதன் சோசலிச இயக்கத்தில் சேர்ந்தனினால் இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு தன்னிச்சையாக இராணுவத்தில் சேர்ந்து பணி புரிந்தார். அவருடைய இராணுவப்பணியில் குறைகள் குற்றங்கள் ஏதுமின்றி சிறப்பான பணி புரிந்தார். இத்தகவல்கள் அவருடைய இராணுவத் தொழில் குறிப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1917 வரை இராணுவத்தில் சிறப்பானதொரு பணிபுரிந்தமையால் 40 க்கும் அதிகமான பதக்கங்கள் அவர் உடையை அலங்கரித்தன. அதன்பின் டைபாய்டு விஷக்காய்ச்சலின் காரணமாகவும் மார்ட்டர் வெடிவிபத்தில் சிக்கி விபத்துக்குள்ளானதால் அப்பணியை தொடர முடியாமல் போனது.


முசோலியின் பாசிசம்

முதலாம் உலகப் போரில் நேச நாட்டு படைபிரிவுக்காக பணிபுரிந்து திரும்பியவுடன் தன் சோசலிச கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சோசலிசம் தோற்றுப்போன ஓன்று. ஆகையால் தன்னை கொடுரகுணம் கொண்ட மனிதனாக மாற்றிக்கொண்டார். இப்படியிருந்தால் மட்டுமே இத்தாலியை அதன் பழையநிலைக்கு நிமிர்த்தமுடியும் என நம்பினார். சோசலிசம் இறந்துபோன ஓன்று; அவற்றால் நாட்டுக்கு பயன் இல்லை என்பதை அறிவித்தார்.


பாசிசத்தின் முக்கிய பங்கு

பாசிசம் வகுப்பு வாதத்தையும் வகுப்பு வாதக்கலவரங்களையும் எதிர்த்த்து. பாசிசம் தேசியவாதிகளின் உரிமைகளை நிறைவேற்றவும் அவர்களின் பங்கினால் தேசத்தை ஒருங்கிணைத்து இத்தாலியை அதன் பழைய உயரத்துக்கு உயர்த்தியது. பிரபுக்களையும் நடுத்தரவர்க்கத்தினரையும் இணைக்கும் பாலமாக பாசிசம் பயன்பட்டது. இதன் மூலம் ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சியை இத்தாலியில் நுழைய முடியாமல் செய்தது. தொழிலாள வர்க்கத்துக்கு முசோலினி எதிரியல்ல என்றாலும் பாசிச கொள்கைக்கு எதிராக யார் செயல்படுவதையும் பாசிஸ்டுகள் தடுத்தனர். இதன் கொள்கை விளக்க அறிவிப்பான பாசிசப் போராட்ட அறிக்கை (The Manifesto of the Fascist Struggle)[1] ஜூன்,1919 ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் குறைந்தபட்ச ஊதியம், பொதுத்துறை மற்றும் தனியார்த்துறை ஊழியர்களின் தொழிற்சங்க கோரிக்கைகளையும் உள்ளடக்கி வெளியிடப்பட்டது. இந்த கொள்கை பழமைவாதிகளையும், புதுமைவாதிகளையும் ஒரு சேர கட்டுபடுத்தியது. அனைவராலும் வித்தியாசமாகப் பார்க்கப்பட்டு பின் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.



முசோலினியின் கருஞ்சேனை

முசோலினியின் பாசிசக் கொள்கையில் அதிக பற்று கொண்ட முசோலினியின் நம்பிக்கைக்குரிய டினோ கிராண்டி என்பவர் இராணுவத்தில் ஒய்வு பெற்றவர்களிடம் பரப்புரை செய்து அவர்களை ஒன்று திரட்டி கருஞ்சேனை (Black Shirts) என்ற தனி இராணுவப்பிரிவை உருவாக்கினார். இந்த கருஞ்சேனைப் படையினர் கம்யூனிசவாதிகளையும், பொதுவுடமை வாதிகளையும் மற்றும் குழப்பவாதிகளையும் அடக்கும் பணியினை மேற்கொண்டது. இது அரசியலின் மூன்றாம் வழியாக (The Third Way) கையாளப்பட்டது. கம்யூனிசத்தை அப்போதய அரசு வெறுத்ததினால் இவற்றின் வளர்ச்சியையும், செயல்பாடுகளையும் அப்போதைய அரசு கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாக பாசிஸ்டுகளின் எண்ணிக்கை இரண்டு வருடங்களில் கணிசமான எண்ணிக்கையை எட்டியது. பின் தேசிய பாசிசக் கட்சியாக (National Fascist Party) ரோமில் உருவெடுத்தது. 1921 தேர்தலில் முசோலினி முதன் முறையாக இத்தாலி கீழ் சபை பாரளுமன்றக்குழு தலைவராகத் (Chamber of Deputies) தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கொள்கையால் முசோலினி 1911 முதல் 1938 வரை யூதர்களின் கணிசமான எதிர்ப்பையும் பெற்றுக்கொண்டார்.


இட்லருடன் முரண்பாடு

முசோலினியும் இட்லரும் ஆரம்பத்தில் எதிரிகளாகத்தான் இருந்தனர். 1933 இல் முசோலினியின் நண்பர் எய்ஞ்பெட் டால்பஸ் மற்றும் அவருடைய நண்பரும் ஆஸ்திரிய நாசிக்களால் கொல்லப்பட்டனர். அது முதல் முசோலினி இட்லரை எதிரியாகத்தான் பாவித்தார். முசோலினியின் பாசிசக் கட்சியில் யூதர்கள், யூதரல்லாதவர், யூதபகைமை என்ற கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்படவில்லை. பாசிசக் கொள்கையை மட்டுமே வலியுறுத்தினார். ஆகையால் முசோலினிக்கு இட்லரின் கொள்கை பிடிக்கவில்லை. முசோலினி போப்பிடம் பற்று கொண்டவர். அது மட்டுமில்லாமல் கலாச்சார பண்புகளையும், செயல்களையும் வைத்து ஒருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வர்க்க பேதத்தை உருவாக்கலாம் ஆனால் பிறப்பினால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் எடுபடாது என்ற நம்பிக்கையுடையவர் என்பதால் இட்லரின் நாசிசத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 1920 முதல் 1934 வரை உள்ள கால ஒட்டத்தில் யூதர்கள் சமூகத்தின் எல்லா மட்டங்களில் இருந்ததால் இத்தாலிய பாசிசம் யூதர்களுக்கு எதிரான வர்க்கபேதத்தையும், வகுப்புவாதத்தையும் வளர்க்கவில்லை. அவர்கள் ஒரு சிறு கூட்டமாக இருந்ததால் ரோம் அரசர் காலத்திலிருந்து அவர்களால் எந்த தொல்லையும் ஏற்படவில்லை.


இட்லருடன் இணக்கமாதல்

1938 ல் இட்லரின் தாக்கம் இத்தாலியில் அதிகமிருந்த நேரத்தில் இனவேறுபாட்டுணர்வு அறிக்கையை முசோலினி தயாரித்து வெளியிட்டார் அந்த அறிக்கை முழுக்க முழுக்க இட்லரின் கொள்கையை பறை சாற்றியது. அதில் எந்த நேரத்திலும் எந்த பதவியிலிருந்தும், குடியுரிமையிலிருந்தும் யூதர்களை விலக்க உரிமையுண்டு என்பதை அறிவித்தது. இந்த அறிக்கை இத்தாலிய பெரும்பான்மை பாசிசவாதிகளின் ஆதரவை பெறவில்லை மாறாக முசோலினிக்கு எதிர்ப்பை வளர்த்தது. ரோம ஆலயத்தின் போதகர் பதினேழாம் போப் பயஸ் இந்த அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதினார்.


முசோலினியை கொல்ல முயற்சி

முசோலினியின் பரப்புரைகள் அவ்வப்போது எதிர்ப்புகளை காட்டத்தயங்காது பெரும்பாலும் சிறிய எதிர்ப்புகளை அவரே ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார். 7 ஏப்ரல், 1926 வையலட் ஜிப்சன் துப்பாக்கியால் சுட்டதில் அவர் மூக்கில் காயம் ஏற்பட்டது. பின் 31 அக்டோபர், 1926 ஐரிஷ் பெண்ணும் அவர் மகளும் சுட்டதில் தப்பித்துகொண்டார், 15 வயதுடைய ஆன்டியோ ஜாம்போனி சுடமுற்பட்டபோது பிடிபட்டு அங்கேயே மரண தண்டனை கொடுக்கப்பட்டது. ரோமிலும் அவரை கொல்ல இரு கலகக்காரர்கள் முயன்றனர். முயற்சி முறியடிக்கப்பட்டு இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். 1938 ல் சிலோவேனிய பாசிசபகைமைவாதி கோபரிட் முயற்சித்தான் அவன் முயற்சி தோல்வியுற்றது.


வாழ்க்கைக் குறிப்பு

முசோலினியின் முதல் மனைவி பெயர் இடா டாலசர், 1947 ம் ஆண்டு டிரன்டோ வில் திருமணம் புரிந்தார் இவர்களுக்கு பெனிட்டோ அல்பினோ என்ற மகன் உள்ளார், ஓராண்டு கழித்து முசோலினி ராச்சிலி குடி என்பவரை 1915 ல் மணந்தார். 1910 ஆண்டே இவருக்கு திருமணம் நடந்ந்துவிட்டதாகவும் தன் அரசியல் கவுரவத்திற்காக இருவரிடமும் மறைத்துவிட்டார். முதல் மனைவியும் மகனும் பின்னாளில் அதிக தொல்லைகொடுத்தனர். ரேச்சலுக்கு இரு மகள்கள் எட்டா (1910-1995) அன்னா மரியா (3 செப்டம்பர் 1929- 25 ஏப்ரல் 1968), அதற்குபின் ரவேன்னாவை 11 ஜூன் 1960, நன்டோ புசி நெக்ரி ல் திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு விட்டோரியோ (1916-1997). புருனோ (அக்டோபர் 1918-7 ஆகஸ்டு 1947). ரோமேனோ (1927-2006) என மூன்று மகள்கள் பிறந்த்னர். முசோலினிக்கு பல தாரங்கள் உண்டு. மார்கெரிடா சபாட்டி கடைசியாக கிளாரா பெட்டாசி இன்னும் பல பெண்களுடன் லீலா விநோதங்கள் புரிந்துள்ளதாகவும் அதனால் பெண்களின் சூழல் அதிகம் இருந்ததாக அவருடைய சுயசரிதையாளர் நிக்கோலஸ் பேரல் குறிப்பிடுகிறார்.


முசோலியின் மரணம்


முசோலினி மற்றும் மனைவி கிளாரா பெட்டாசி மரணம்

28 ஏப்ரல் 1945 இல், முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் பிடிபட்டு பின் அவரும் அவர் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனர். 29 ஏப்ரல், 1945 ம் ஆண்டு முசோலினி மற்றும் அவர் மனைவி கிளாரா பெட்டாசியின் உடல்களும் மிலனில் உள்ள பியஜேல் லொரெட்டோ விற்கு எடுத்துசெல்லப்பட்டு தலைகீழாக எரிவாயு நிரப்பும் நிலையத்தின் கூரையிலுள்ள இறைச்சியை தொங்கவிடும் கொக்கியில் மாட்டித் தொங்கவிட்டனர். இந்த செயல்களின் நோக்கம் பாசிசவாதிகளை அச்சுறுத்துவதற்காகவும், இதற்குமுன் பார்ட்டிசான்களை இக்கொடுரமான முறையிலேயே முசோலினியும் அச்சு நாட்டு அதிகாரிகளும் செய்ததற்கு பழிவாங்கும் நோக்கில் தொங்கவிடப்பட்டது, அதன் கீழேயிருந்து அங்குவாழ் மக்கள் அவர்களின் உடல்கள் மீது கற்களைக் கொண்டு அடித்து தங்கள் ஆத்திரத்தை தீர்த்து கொண்டனர். பலரும் வசைவு மொழிகொண்டு பதவியிழந்த தலைவரின் அட்டூழியங்களை கேலியும் கிண்டலுமாக பேசினர். முசோலினியின் விசுவாசியும் தீவிர பாசிசவாதியுமான அக்கிலி ஸ்டாரேஸ் தன்னைத்தானே ஒப்படைத்து பின் மரணதண்டனை விதிக்கபட்டு முசோலினியின் உடல் தொங்கவிடப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று காட்டினர் உன்னைவிட யார் இது மாதிரி செய்யமுடியும் முசோலினி நீ ஒரு கடவுள் என்று கூறி வீர வணக்கம் வைத்து என் தலைவனுக்காக நான் என்ன கொடுக்க முடியும் என்று கூறியவுடன் அக்கிலி ஸ்டாரேஸ் தலையில் குண்டுகள் பாய்ந்தன தன் தலைவனின் பக்கத்தில் அந்த விசுவாசியும் சரிந்து விழுந்தார்.

ஹிட்லர் Print E-mail
வரலாறு - மாமனிதர்கள்



அடால்ஃப் ஹிட்லர் 1889-ல் ஆஸ்திரியாவில் பிறந்தார்.ஓவியராக வாழ்க்கையைத் தொடங்கி பின் ஜேர்மனி ராணுவத்தில் சேர்ந்தார்.ஹிட்லர் முதல் உலகப் போரின்போது சாதாரண சிப்பாயாக இருந்தார்.மெய்ன் காம்ஃ என்பது ஹிட்லரின் சுயசரிதை.‘மெய்ன் காம்ஃ’ என்பதற்கு எனது போராட்டம் என்பது பொருள்.தேசிய சோசலிஸ்ட் கட்சி என்ற நாஷிக் கட்சியை உருவாக்கினார்.எதிர்மறை ஸ்வஸ்திக் குறி நாஷிக் கட்சியின் சின்னம்.நாஷிக் கட்சியினர் பழுப்பு நிறச் சீருடையை அணிந்தனர்.நாஷிக் கட்சி செமிட்டிக் இனத்தவர்களான யூதர்களை வெறுத்தனர்.ஹிட்லர் (தலைவர்) என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டார்.ஹிட்லரின் இனவெறிக்குச் சுமார் 6 மில்லியன் யூதர்கள் பலியாயினர்.ஹிட்லரின் போலந்துப் படையெடுப்பு இரண்டாம் உலகப் போருக்குக் காரணமானது.1945 ஏப்ரல் 29‍-ல் ஹிட்லர் இவா பிரான் என்பவரை மணந்தார்.1945 ஏப்ரல் 30‍ல் ஹிட்லர் தன் மனைவியோடு தற்கொலை செய்து கொண்டார்.ஹிட்லரின் தோல்விப் பயமே அவரது தற்கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகின்றது.


உலகை மிரட்டிய ஹிட்லர்
இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் ஹிட்லர். முதல் உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது.இரண்டாம் உலகப்போர் மூள்வதற்கும், அதன் மூலம் 5 கோடி பேருக்கு மேல் சாவதற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் வாழ்க்கை, பல திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தது. ஜேம்ஸ்பாண்ட் சினிமா படங்களைவிட விறு விறுப்பானது.

வட ஆஸ்திரியாவில் உள்ள பிரானவ் என்ற ஊரில் 1889-ம் ஆண்டு ஏப்ரல் 20-ந்தேதி பிறந்தவர் ஹிட்லர். (நேருவை விட 7 மாதம் மூத்தவர்)இவருடைய தந்தையின் பெயர் அலாய்ஸ் ஷிக்கிள் கிரப்பர் ஹிட்லர். இவர் சுங்க இலாகா அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மூன்று மனைவிகள். மூன்றாவது மனைவியான கிளாராவின் நான்காவது மகன் ஹிட்லர்.பிறந்தது முதலே ஹிட்லர் நோஞ்சானாக இருந்தார். அடிக்கடி காய்ச்சல் வரும். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குப் பிறகுதான் உடம்பு தேறியது.தந்தை சுங்க அதிகாரியாகப் பணியாற்றியதால், அடிக்கடி வெளிžர் சென்றுவிடுவார். அதனால், ஹிட்லருக்கு அம்மாவிடம் செல்லம் அதிகம். தாய் மீது மிகுந்த பக்தியும், பாசமும் கொண்டவர் ஹிட்லர். பள்ளியில் படிக்கும்போது, ஹிட்லர்தான் வகுப்பில் முதல் மாணவர். பிறகு அவருக்குப் படிப்பில் ஆர்வம் குறைந்தது. படம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. விரைவிலேயே அழகாக படங்கள் வரையும் ஆற்றல் பெற்றார்.மாணவப் பருவத்திலேயே நிறைய நாவல்கள் படித்தார். போர்கள் பற்றிய கதைகள் என்றால் நாட்டம் அதிகம்.

1903-ம் ஆண்டு, ஹிட்லரின் தந்தை இறந்து போனார். தந்தையின் கண்டிப்பு இல்லாமல் வளர்ந்த ஹிட்லர், நாளுக்கு நாள் முரடனாக மாறினார். மாணவர்களுடன் சண்டை போடுவதுடன், ஆசிரியர்களுடனும் மோதுவார். தனது 17-வது வயதில், பள்ளி இறுதித் தேர்வில் தேறினார். ஹிட்லர் அதற்காகக் கொடுத்த சான்றிதழை வாங்கிக்கொண்டு வருகிற வழியில் நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தினார். சர்டிபிகேட்டைக் கிழித்தெறிந்தார்.இதை அறிந்த ஆசிரியர், அவரைக் கூப்பிட்டுக் கண்டித்தார். "இனி என் வாழ்நாளில் சிகரெட்டையும், மதுவையும் தொடமாட்டேன்" என்று சபதம் செய்தார், ஹிட்லர். அதன்படி, கடைசி மூச்சு உள்ளவரை சிகரெட்டையும், மதுவையும் அவர் தொடவில்லை.1907-ல் ஒரு ஓவியப் பள்ளியில் சேர முயன்றார். இடம் கிடைக்கவில்லை. அந்த ஆண்டின் இறுதியில் ஹிட்லரின் தாயார் இறந்து போனார்.

ஹிட்லரின் தாயார் கிளாரா குழந்தை பருவத்தில் ஹிட்லர்அதன்பின் ஓவிய அட்டைகள் தயாரித்து, பிழைப்பு நடத்தினார் ஹிட்லர். இரவில் கூட மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் ஓவியங்கள் வரைவார். சில மாடல் அழகிகளை வைத்து ஹிட்லர் வரைந்த படங்கள், நல்ல விலைக்குப் போயின. அதனால் சொந்தமாக ஒரு ஓவியக்கூடம் அமைத்தார்.இந்தச் சமயத்தில், சிந்தியா என்ற பெண்ணை ஹிட்லர் காதலித்தார். காதல் தோல்வி அடையவே, ராணுவத்தில் சேர்ந்தார். 1914-ல் தொடங்கி, 1918 வரை நடந்த முதல் உலகப் போரின் போது ஜெர்மனி ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1918-ல் போரில் ஜெர்மனி தோற்றது. இந்த தோல்விக்கு ஜனநாயகவாதிகளும், யூதர்களும்தான் காரணம் என்று ஹிட்லர் நினைத்தார்.

"உலகில் ஜெர்மானியரே உயர்ந்த இனத்தினர். உலகம் முழுவதையும் ஜெர்மனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்" என்று விரும்பினார்.ஹிட்லர் பேச்சு வன்மை மிக்கவர். தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் ஒரு உறுப்பினராகச் சேர்ந்து, தனது பேச்சு வன்மையால் விரைவிலேயே கட்சித் தலைவரானார். அரசாங்கத்தின் நிர்வாகத்திறமை இன்மையால்தான் நாட்டில் வறுமையும், வேலை இல்லாத்திண்டாட்டமும் பெருகிவிட்டதாகப் பிரசாரம் செய்தார். அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டு, ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார். ஆனால், அந்த முயற்சியில் தோல்வி அடைந்தார்.அரசாங்கம் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ஹிட்லருக்கு முதலில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அது ஓராண்டு தண்டனையாகக் குறைக்கப்பட்டது.சிறையில் இருந்தபோது, "எனது போராட்டம்" என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதினார் ஹிட்லர். இது உலகப் புகழ் பெற்ற நூல்.1928-ல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வி அடைந்தது. ஆனால் ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை.

தன்னுடைய கட்சியின் பெயரை "நாஜி கட்சி" என்று மாற்றி நாடு முழுவதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டார். அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தார். அவருடைய இடைவிடாத உழைப்பும், பேச்சுவன்மையும், ராஜதந்திரமும் வெற்றி பெற்றன. ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து, பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாராளுமன்றக் கட்டிடம் கொளுத்தப்பட்டது. ஜனாதிபதியாக இருந்த ஹிண்டன்பர்க், மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்தார். 1933-ஜனவரி 30-ந்தேதி ஹிட்லரை அழைத்துப் பிரதமராக நியமித்தார். அன்று முதல் ஹிட்லருக்கு ஏறுமுகம்தான்.பிரதமராக இவர் பதவி ஏற்ற 1 வருடத்தில் ஜனாதிபதி ஹிண்டன்பர்க் மரணம் அடைந்தார். அவ்வளவுதான். ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக் கொண்டு, எதிர்ப்பாளர்களை எல்லாம் ஒழித்துவிட்டு, ஜெர்மனியின் சர்வாதிகாரி ஆனார் ஹிட்லர்.ராணுவ இலாகாவையும், ராணுவ தளபதி பதவியையும் தானே எடுத்துக்கொண்டார். அரசியல் கட்சிகளை எல்லாம் தடை செய்தார். பாராளுமன்றத்தைக் கலைத்தார்.எதிரிகளைச் சிறையில் தள்ளினார். "இனி ஜெர்மனியில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை" என்று அறிவித்தார்.யூதர்களை அடியோடு அழிக்கவேண்டும் என்று முடிவு செய்து, ஒரு பாவமும் அறியாத யூதர்களைக் கைது செய்து, சிறையில் பட்டினி போட்டுச் சித்திரவதை செய்து கொன்றார். பலர் இருட்டறைகளில் அடைக்கப்பட்டு, விஷப் புகையால் கொல்லப்பட்டனர். தினமும் சராசரியாக 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் விஷப்புகையிட்டுச் சாகடிக்கப்பட்டனர்.ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம்.முதல் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்விக்குக் காரணமான பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளைப் பழிவாங்க வேண்டுமென்று திட்டமிட்டார். ராணுவத்தைப் பலப்படுத்தினார். ஜெர்மனியின் தரைப்படை, கப்பல் படை, விமானப் படை மூன்றும் உலகின் சிறந்த படைகளாக உருவெடுத்தன.உலகத்தையே தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர நேரம் நெருங்கிவிட்டதாக நினைத்தார் ட்லர். 1939-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி, எந்தவிதப் போர்ப் பிரகடனமும் வெளியிடாமல் போலந்து நாட்டின் மீது படையெடுத்தார் ஹிட்லர்.

பிரிட்டனும், பிரான்சும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்ப் பிரகடனம் வெளியிட்ட போதிலும், போரில் நேரடியாக குதிக்கவில்லை. இதனால், இரண்டே வாரங்களில் போலந்தைக் கைப்பற்றிக் கொண்டது ஜெர்மன் ராணுவம்.இந்தச் சமயத்தில் ஹிட்லருடன் நட்புக் கொண்டார் இத்தாலி சர்வாதிகாரி முசோலினி.


ஜப்பான் உள்பட வேறு சில நாடுகளும் ஜெர்மனியுடன் கைகோர்த்துக் கொண்டன. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் ஒரு ரகசிய ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன. ஆசியப் பகுதிகளை ஜப்பானும், ஆப்பிரிக்காவை இத்தாலியும், ஐரோப்பிய பகுதிகளை ஜெர்மனியும் தாக்கிக் கைப்பற்றவேண்டும் என்பதே அந்த ரகசிய ஒப்பந்தம்.

ஹிட்லரின் போர் வெறி, அவருடைய நாஜி கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பை உண்டாக்கியது. அதனால், அவரை கொலை செய்ய அவருடைய தளபதிகளே சதித்திட்டம் தீட்டினார்கள். இவர்களுக்குத் தலைவர் கர்னல்வான் ஸ்டப்பன்பர்க்.

1944 ஜுலை 20-ந்தேதி தன்னுடைய தலைமை அலுவலகத்தில் தளபதிகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார், ஹிட்லர். அவர் முன் இருந்த மேஜை மீது தேசப்படம் விரிக்கப்பட்டிருந்தது. எந்தெந்த இடத்தை எப்படித் தாக்கவேண்டும் என்று ஹிட்லர் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஹிட்லரின் கால்களுக்கு அருகே ஒரு "சூட்கேஸ்" இருந்ததை மெய்க்காவலர் ஒருவர் பார்த்தார். "இது இங்கு எப்படி வந்தது? யார் வைத்தது?" என்று அவர் மனதில் கேள்விகள் எழுந்தது. சந்தேகம் தோன்றியது. பெட்டியை தள்ளிவிட்டார்.


தரையில் 'சர்' என்று சரிந்து சென்ற பெட்டி, பயங்கர சத்தத்துடன் வெடித்தது. ஹிட்லர் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. நாலாபுறமும் புகை மண்டலம் சூழ்ந்தது. புகை அடங்கியவுடன் பார்த்தால், இடிபாடுகளுக்கு இடையே 4 அதிகாரிகள் செத்துக் கிடந்தனர். மயிரிழையில் உயிர் தப்பிய ஹிட்லருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தன. குண்டு வெடித்த இடத்துக்கும், ஹிட்லருக்கும் இடையே ஒரு மேஜை இருந்ததால் அவர் தப்பினார். மெய்க்காவலர் சந்தேகப்பட்டு பெட்டியை தள்ளி விடாமல் இருந்திருந்தால், நிச்சயம் ஹிட்லர் பலியாகியிருப்பார். இந்த சதியையொட்டி, 5 ஆயிரம் பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இவ்வளவு பேருக்கு தூக்கு மேடை கிடைக்காததால், விளக்குக் கம்பங்களிலும், மரங்களிலும் பலர் தூக்குக் கயிற்றில் தொங்கவிடப்பட்டனர்.


கறிக்கடையில் மாமிசத்தை தொங்கவிடப்படுவதற்காக உள்ள கொக்கிகளில், வயர்களைக் கட்டி, அதில் பலர் தூக்கில் மாட்டப்பட்டனர். கர்னல் ஸ்டப்பன்பர்க்குக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இன்னொரு தளபதியான ரோமெல் என்பவரும் இந்த சதியில் சம்பந்தப்பட்டிருந்தார். குண்டு வெடிப்பில் அவரும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். குணம் அடைந்ததும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.


அவர் கடைசி காலத்தில் இப்படி ஹிட்லருக்கு எதிராகத் திரும்பினாலும், முதலில் ஹிட்லருக்கு பக்கபலமாக இருந்தவர். ஆகவே ஹிட்லரின் மனதில் இரக்கம் ஏற்பட்டது. "அவரை தூக்கில் போட வேண்டாம்" என்றார், கருணை தேய்ந்த குரலில். ரோமெல் அதிர்ஷ்டசாலி, அவரை விடுதலை செய்ய உத்தரவிடப்போகிறார்ஹிட்லர் என்று எல்லோரும் நினைத்தனர்."அவருடைய பழைய சேவையை நினைத்துப் பார்த்து கருணை காட்டுகிறேன். அவரை சுட்டுக் கொல்லவேண்டாம்; தூக்கிலிடவேண்டாம். விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள அனுமதியுங்கள்!" என்று கூறினார், ஹிட்லர்! அதன்படி அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரை ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்டார் ஹிட்லர்.

காதலியுடன் ஹிட்லர் தற்கொலை 1945 ஏப்ரல் 30-ந்தேதி இரவு 9 மணி. "இன்று மாலை 4 மணிக்கு இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியும், அவர் மனைவியும் எதிர்ப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று சுவீடன் நாட்டு ரேடியோ அறிவித்தது. ரேடியோச் செய்தியை ஹிட்லர் நேரடியாகக் கேட்டார்.முசோலினியின் முடிவு, ஹிட்லருக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியது. அன்றிரவு 12 மணி, பெர்லின் நகரம் முற்றிலுமாக ரஷியப் படைகள் வசமாகிவிட்டது என்றும், எந்த நேரத்திலும், சுரங்க மாளிகை தகர்க்கப்படலாம் என்றும், ஹிட்லருக்குத் தகவல் கிடைத்தது. ஹிட்லரின் முகம் இருண்டது. மவுனமாக எழுந்து, தன் தோழர்களுடன் கை குலுக்கினார்.


1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை.எதிரிகளிடம் யுத்தக் கைதியாகப் பிடிபட்டால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்தார் ஹிட்லர். எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். தன் முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம் தெரிவித்தார். ஹிட்லரின் முடிவைக் கேட்டு, ஈவாபிரவுன் திடுக்கிடவில்லை. "வாழ்விலும் உங்களுடன் இருந்தேன். பூப்பறிக்கும் ஈவாபிரவுன். சாவிலும் உங்களுடன்தான் இருப்பேன். உங்களுடன் நானும் தற்கொலை செய்து கொள்வேன்" என்றாள்.


பிறகு தன் அந்தரங்க உதவியாளரை அழைத்து, "நானும் ஈவாவும் ஒன்றாக இறந்துவிடப்போகிறோம். நாங்கள் இறந்தபின், எங்கள் உடல்களை ஒரு போர்வையில் சுருட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்துச் சாம்பலாக்கி விடுங்கள். எங்கள் அறையில் உள்ள கடிதங்கள், டைரிகள், என் உடைகள், என் பேனா, கண்ணாடி முதலிய பொருள்களை சேகரித்து, ஒன்றுவிடாமல் எரித்துவிடுங்கள்" என்று கூறிவிட்டு, மனைவியையும் அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றார்.அறைக்கதவு சாத்தப்பட்டது. வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.

ஹிட்லரும் ஈவாவும் என்ன ஆனார்கள் என்று வெளியே இருந்தவர்களுக்குத் தெரியவில்லை. வெளியே நீண்ட நேரம் காத்திருந்த மந்திரிகளும், தளபதிகளும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றனர். அங்கே அவர்கள் கண்ட காட்சி:ஒரு சோபாவில், உட்கார்ந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற உடல். அவர் காலடியில் ஒரு துப்பாக்கி கிடந்தது. அதன் நுனியிலிருந்து புகை வந்து கொண்டிருந்ததால், அவர் சற்று நேரத்துக்கு முன்தான் தன்னைச் சுட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிந்தது. அவருடைய வலது காதுக்கு கீழ் அரை அங்குல அளவுக்கு துவாரம் விழுந்து, அதிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. ஹிட்லர், துப்பாக்கி முனையை வாய்க்குள் வைத்து சுட்டதால்தான், குண்டு காதுக்கு அருகே துளைத்துக் கொண்டு சென்றிருக்க வேண்டும் என்று தளபதிகள் கருதினார்கள்.

ஹிட்லரின் வலது கரம் ஒரு புகைப்படத்தை மார்போடு அணைத்தபடி இருந்தது. அந்தப்படம், ஹிட்லரின் தாயாரின் புகைப்படம். தாயின் மீது ஹிட்லர் கொண்டிருந்த பாசத்தை எண்ணி அவர் நண்பர்கள் கண்ணீர் சிந்தினர். ஹிட்லர் உடல் இருந்த சோபாவில் சாய்ந்தபடி பிணமாகியிருந்தாள் அவருடைய மனைவி ஈவா. வெள்ளைப் புள்ளிகளோடு கூடிய கருநீல "மாக்சி" உடை அணிந்திருந்தாள். அவள் உடல் நீலம் பாய்ந்திருந்தது. எனவே அவள் சயனைடு விஷம் சாப்பிட்டிருக்க வேண்டும் என்பது புலனாகியது.

ஹிட்லர் உடலையும், ஈவா உடலையும் உதவியாளர்கள் ஒரு கம்பளிப் போர்வையில் சுற்றினார்கள். பிறகு அந்த உடல்களை அந்த அறையிலிருந்து தலைமைச் செயலகத் தோட்டத்திற்கு தூக்கிக் கொண்டு போனார்கள். அங்கே, பெட்ரோலையும், எரிவாயுவையும் கொண்டு இரு உடல்களையும் எரித்துச் சாம்பலாக்கினார்கள்.சில மணி நேரம் கழித்து அங்கு வந்த ரஷியப் படையினர் ஹிட்லரைக் காணாமல் திகைத்துப் போனார்கள். அவர் தற்கொலை செய்து கொண்டதும், பிணம் எரிக்கப்பட்டதும் பிறகுதான் தெரிந்தது. எனினும் ஹிட்லர் சாகவில்லை, தலைமறைவாக இருக்கிறார் என்று நீண்ட காலம் நம்பியவர்கள் ஏராளம்!

ஹிட்லரின் கடைசி நிமிடங்கள்...
60 ஆண்டுக்குப் பின் முதன்முறையாக நர்ஸ் பேட்டிகடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் உலகப் போர் முடியும் தருணத்தில், தன்னைத்தானே சுட்டு ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்.(1945,ஏப்.30). அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை, அவருடைய நர்சாக பணிபுரிந்த எர்னா பிளஜல் (93), ஜெர்மனியில் உள்ள பெர்லினில் வாழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டு காலம் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்த அவர் முதல் முறையாக பேட்டியளித்தார். உலக வரலாற்றிலிருந்து அழிக்க முடியாத முக்கிய நிமிடங்களை இங்கு அசை போடுகிறார்...

இரண்டாம் உலகப் போர் முடியும் நேரத்தில், நீங்கள் ஹிட்லரின் பதுங்கு குழியில் இருந்தீர்களா?
ஆம். 1945ல் போர் முடியும் போது, நான் பதுங்கு குழியில்தான் இருந்தேன். பெர்லின் பல்கலைக்கழக கிளினிக்கில் நர்சாக பணிபுரிந்து வந்தேன். அங்கிருந்து ஹிட்லர் பதுங்கியிருந்த ரகசிய இடத்துக்கு கிளினிக் மாற்றப்பட்டது. எல்லாம் முடியும் வரை அங்கேயேதான் வாழ்ந்தேன்.

உங்களுக்கு அங்கு எப்படி வேலை கிடைத்தது?
ஹிட்லரின் ரகசிய இடத்தில் வேலை இருப்பதாக தலைமை சகோதரி கூறினார். உங்களுக்கு விருப்பமா என்றும் கேட்டார். நானும் ஒப்புக்கொண்டேன். அதன்படி உத்தரவும் வந்தது. நான் அங்கு சென்று, ஹிட்லரின் மறைவிடத்தைப் பார்த்த போது, அது பதுங்கு குழி போல் அல்லாமல் தரைக்கடியில், கட்டடங்களுடன் பெரியதாகவும், மிகவும் அழகாகவும் இருந்தது. எனக்கு அங்கு தனி இடம் ஒதுக்கப்பட்டது. ரஷ்யப் படைகள் பெர்லினை நெருங்கிய போது, நாங்கள் அனைவரும் சிறிய இடத்துக்குள் பங்கு போட வேண்டியிருந்தது. எனக்கும் இன்னொரு நர்சுக்கும் ஓர் அறை ஒதுக்கப்பட்டது.

நாஜி கொள்கைகளின் பிரச்சார பீரங்கியான கோயபல்சின் மனைவி மாக்டாவை நீங்கள் பதுங்கு குழியில் சந்தித்திருக்கிறீர்கள். அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அவர் தனது முதல் கணவரை பிரிந்து பின்னர் கோயபல்சை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சூழ்நிலை காரணமாக அவரது இரண்டாவது திருமணமும் மகிழ்ச்சிகரமாக இல்லை. கோயபல்சைப் பற்றி பல கிசுகிசுக்கள். எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது.

ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட பின்னர் கோயபல்சின் அழகான ஆறு குழந் தைகளை அவரது மனைவி மாக்டா கொன்று விட்டார். குழந்தைகளை கொல்ல வேண்டாம் என்று நீங்கள் கூறவில்லையா?
நாங்கள் வாழ்ந்த சூழ்நிலை வெளியில் இருந்ததைப் போல் சாதாரணமானது அல்ல. குழந்தைகளை பெர்லினுக்கு வெளியே கொண்டு சென்று விடுங்கள் என்று கெஞ்சினேன். ஆனால் கோயபல்ஸ், "குழந்தைகள் எனக்கு சொந்தமானவர்கள். அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்வேன்' என்று கோபத்துடன் கூறிவிட்டார். (பழைய விஷயங்களை ஞாபகத்திற்கு கொண்டு வர யோசிக்கிறார்...). ஒரு நாள்... மாக்டா பல் மருத்துவரிடம் செல்வதாக என்னிடம் கூறினார். ஆகவே அன்றிரவு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார். பதுங்கு குழியில் ஒன்றின் மீது ஒன்றாக அமைந்திருந்த இரு படுக்
avatar
vmanirajan
பண்பாளர்


பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Back to top Go down

பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி Empty Re: பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி

Post by realvampire Tue May 24, 2011 12:28 am

நியாயமானவர்கள் தங்கள் நாட்டிற்கு..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum