ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை

+5
ஹாசிம்
உதயசுதா
Thanjaavooraan
மோகன்
Aathira
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Empty அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை

Post by Aathira Sun Nov 28, 2010 9:11 am

First topic message reminder :

அன்றும் இன்றும் அறுவை



அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 220px-Caesarian_section_-_Pull_out

ஒரு மருத்துவமனையில், பலர் அறுவை சிகிச்சைக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் மயக்க ஊசி போட்டு ஆபரேஷன் தியேட்டர் முன்பு அமரவைத்திருந்தனர் அம்மருத்துவ மனையின் மருத்துவர்கள். பெரிய மருத்துவமனைகளில் எல்லாம் சிறு சிறு அறுவை சிகிச்சைகள் இவ்வாறு ஒரே நேரத்தில் அடுத்தடுத்துப் பலருக்குச் செய்வது வழக்கம். முதலில் மயக்க மருந்து கொடுத்து அமரவைத்திருப்பர். உள்ளே அழைத்துச் சென்ற பின்பு அப்பகுதி மட்டும் மறத்துப் போகும் ஊசி போட்டு அறுவை சிகிச்சை செய்து விடுவர்.

அம்மருத்துவ மனையில் அறுவை சிகிச்சைக்கு அமர்ந்தவர்களில் ராமனும் ரஹ்மானும் அடங்குவர். உள்ளிருந்து ஆப்ரேஷனுக்காக ரஹ்மானை அழைக்க, பாதி மயக்க நிலையில் இருந்த ராமன் தன்னைத்தான் அழைக்கிறார்கள் என்று நினைத்து உள்ளெ சென்று விட்டார். அதிவிரைவில் அமோகமாக அறுவை சிகிச்சை முடிந்தது. பின்னர் தான் தெரிந்தது அவர் ராமன் என்று. அறுவை சிகிச்சையில் ஒரு சிறு வித்தியாசமே. ராமன் வந்திருந்தது விரைவீக்க அறுவை சிகிச்சைக்கு. ரஹ்மான் வந்திருந்தது சுன்னத் அறுவை சிகிச்சைக்கு. என்ன நடந்திருக்கும் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். இது கட்டுக்கதை அல்ல. உண்மைச் சம்பவம். ஆந்திர மாநிலத்தில் நடந்தது.


ஏன் நடிகை ஷ்ரிதேவியின் தாயாருக்கு நடை பெற்ற அறுவை சிகிச்சைபற்றி பக்கம் பக்கமாக எல்லா இதழ்களூம் கிழித்துத் தள்ளியதை நம்மால் மறக்கத்தான் முடியுமா? இத்தனைக்கும் ஷ்ரிதேவியின் தாயாருக்கு மருத்துவம் அளித்தது அமெரிக்காவின் புகழ் பெற்ற ஒரு பெரிய மருத்துவமனை.


இவற்றையெல்லாம் ஏன் கூறுகிறேன் என்றால், அறுவை சிகிச்சை அத்துனை எளிதாக, விரைவாக, அதிகமாக இக்காலங்களில் நடைபெறுகிறது. யாராவது கிடைப்பார்களா, என்று உடல் உறுப்புகளை வெட்டி எறிய கத்தியுடன் காத்திருக்கும் மருத்துவர்கள் பெருகிவிட்டனர். அதனால் ஒரு சில தவறுகளும் நடைபெறுகின்றன. அதுமட்டுமல்ல போகிற போக்கில் உறுப்புகளைத் திருடிப் பிழைக்கும் சதிகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. சரி முந்தய காலங்களில் அறுவை முறை இருந்து இருக்குமா? அவர்கள் இது போன்ற சிகிச்சை முறைகளை மேற்கொண்டு இருந்தார்களா? என்பதை அறிய வேண்டாவா?


பண்டைய காலங்களில் அறுவை சிகிச்சை நடக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் வீரயுகம் என்று அழைக்கப் பட்ட போர்க்காலங்களில் இது போன்ற சிகிச்சைகள் நிச்சயமாக இருந்து இருக்க வேண்டும்.


கூர்மையான நகங்களை உடைய கழுகின் தாக்குதலால், புண் எய்தி தன்னிடம் தஞ்சம் அடைந்த ஒரு புறாவுக்காகத் தன் தசையைத் தந்தான் ஒரு மன்னன். கானகத்தில் கண்களில் குருதி வழிய அமர்ந்து இருந்த ஒரு தெய்வக் கற்சிலைக்கு, தன் கண்ணை எடுத்து அப்பினான் ஒரு வேடன். இச்செய்திகள் எதனைக் குறிக்கின்றன? இக்காலத்து உடல் உறுப்புக் கொடைக்கு முன்னோடிகளாக இவர்கள் இருந்து உள்ளனரோ என்று என்று எண்ணத் தோன்றுகிறது. சிபி சக்கரவர்த்தி புறாவுக்குத் தன் தசையைத் தந்தது, இன்றைய தோல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னோடியாக இருக்குமோ என்ற ஐயமும் எழுகிறது. ஆய்வு நோக்கில் சிந்தித்துப் பார்த்தால் இதுதான் உண்மையாக இருக்குமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில் புறாவைக்காக்க வேடனுக்கு ஏன் தசையைக் கொடுக்க வேண்டும் சிபி. அங்கு என்ன நடந்து இருக்கும்? ஒரு வேளை அம்புப் பட்டுச் சிதைந்து போன தசைக்குப் பதிலாகத் தன் தசையை வைத்து தைத்திருப்பானோ மன்னன். இதன் உட்பொருளைப் புரிந்து கொள்ளாமல் புறாவுக்குத் தன் உடலின் தசையை அறுத்துக் கொடுத்தான் சிபிச்சக்கரவர்த்தி என்று இன்றும் கூறிக் கொண்டிருக்கிறோமா என்றும் தெரியவில்லை. ஏனெனில் இது கர்ண பரம்பரை கதை.


ஆனால் இரண்டாவதை, மருத்துவ அடிப்படையில் நோக்கினாலும், ஆன்மீக அடிப்படையில் நோக்கினாலும், இன்றைய கண் படல மாற்று அறுவை சிகிச்சைக்கு வழிகாட்டிய பாமரன் கண்ணப்பன் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை.

அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 300px-Uganda_cesarean_section
ப்ண்டைய காலத்தில் அறுவை செய்வதற்கு செம்பினால் ஆன கத்தியைப் பயன் படுத்தினர் என்கிறது அகழ்வாய்வு அறிக்கை. சிந்து வெளி ஆய்வில் கிடைக்கப்பட்ட ஆயுதங்களில் மடுத்துத்துவத்துக்குரிய கத்திகள் கிடைத்துள்ளன். இதன் சிறப்பு என்ன என்றால பக்க விளைவுகளை ஏற்படுத்தாத உலோகம் செம்பு என்பதை அவர்கள் அறிந்து இருந்தனர் என்பதை அறிய முடிகிறது.

அக்காலத்தில் தசையைச் சேர்த்துத் தைப்பதற்கு வெள்ளூசியைப் பயன் படுத்தினர் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. தையல் போடுவதற்கு செந்தலை எறும்புகள் என்ற ஒரு வகை எறும்புகளையும் பயன்படுத்தினர் என்பர். எப்படி என்று கேட்கிறீர்களா? தையல் போட வேண்டிய தோலில் இவ்வெறும்புகளை விடுவர். அவை சதையை இறுக்கமாகக் கவ்விப் பிடித்துக் கொள்ளும்போது (அதாவது கடிக்கும் போது) அதன் உடல் படுதியை வெட்டி எடுத்து விடுவார்களாம். எத்தனை தையல் போட வேண்டுமோ அத்தனை எறும்புகளை பயன் படுத்துவார்களாம். (இச்செவிவழிச் செய்தியை வழங்கியவர் ஆசிரியர். முனைவர் சி. வெ. சுந்தரம்)

சாதாரனமாகத் திருவள்ளுவர் ஒருவரைப் பாராட்டி விடுவாரா என்பதையும் இங்கு நாம் சிந்திக்க வேண்டும். ‘அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்று கூறுகிறார், என்றால் யாரோ ஒருவர் பிறருக்கு எலும்பைத் தந்திருக்கிறார் என்றுதானே பொருள். அதுமட்டுமல்ல ‘என்பும்’ என்று கூறும்போது அச்சொல்லுக்கு முன்னாலோ பின்னாலோ மற்றொரு சொல்லையும் இணைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் தமிழ் சொற்கள் பெரும்பாலும் இரட்டைச் சொற்கள். நன்மையும் தீமையும், இரவும் பகலும், கையும் காலும், என்பது போல எலும்புடன் இணையும் மற்றொரு சொல் தோல். எலும்பும் தோலும் என்பது இணைச் சொற்கள். இதற்கும் சான்று திருவள்ளுவரே தருகிறார், ‘என்பு தோல் போர்த்திய உடம்பு’ என்ற மற்றொரு திருக்குறளில். எனவே எலும்பையும் தோலையும் திருவள்ளுவர் காலத்துக்கு முன்பே கொடையாகத் தந்தவர்களோ அல்லது தந்தவரோ இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது அல்லவா? யார் அவர் என்பதைத் தெரிந்து கொள்ள பரிமேலழகரின் திருக்குறள் உரையைப் பார்த்தால், சங்கப் பாடல் ஒன்றைச் சான்று காட்டுகிறார். அப்பாடலில் பேசப்படுவது சிபி மன்னனின் கொடைப் பண்பைப் (தசை தானத்தை) பற்றியே. எனவே சிபி தசையைக் கொடுத்தார் என்பது தெளிவு. யாருக்கு என்பதில் தான் ஐயம். இந்த ஆய்வை பிறகு பார்ப்போம். இப்பொழுது அந்த சங்கப் பாடலைப் பார்ப்போமா?



“கால்உணவு ஆகச் சுடரொடு கொட்கும்


அவிர்சடை முனிவரும் மருள, கொடுஞ்சிறைக்


கூர்உகிர்ப் பருந்தின் ஏறுகுறித்து, ஒரீஇ,


தன்அகம் புக்க குறுனடைப் புறவின்


தபுதி அஞ்சிச் சீரை புக்க


வரையா ஈகை உரவோன்”


அறுவை மருத்துவ முறை பற்றி ஒவ்வொரு குறிப்புகள்ஒவ்வொரு நூலில் காணப்படுகின்றன. அறுவை மருத்துவத்தில் என்னென்ன முறைகள்செய்யப்பட்டன என்பதை விளக்கிக் கூறுவதாக அமைகிறது சீவக சிந்தாமணி.


சீவக சிந்தாமணி காப்பிய நூலாக அமைந்ததினால், விரிவான செய்திகளைத் தருவதாக அமைந்து' அறுவை முறை மருத்துவத்தை விவரிக்கிறது.

”முதுமரப் பொந்து போல முழுமெய்யும் புண்க ளுற்றார்க்கு
இதுமருந் தென்ன நல்லார் இழுதுசேர் கவளம் வைத்துப்
பதுமுகன் பரமை மார்பில் நெய்க்கிழி பயிலச் சேர்த்தி
நுதிமயிர்த் துகிற்குப் பாயம் புகுகென நூக்கி னானே''

மரப்பொந்துபோல உடல் முழுவதும் ஏற்பட்ட புண்களுக்கு ஏற்ற மருந்து எது? என்பதை அறிந்தமருத்துவர், அம்மருந்தை வாயில் கவளத்தை வைப்பது போல் வைப்பர்; பின்னர் எலி மயிரால் நெய்யப்பட்ட ஆடையால் போர்த்தி,காற்றுப் புகாதவாறு பாதுகாப்பர் என்று உரைப்பதினால், புண்பட்டார்க்குச்செய்யப்படுகின்ற மருத்துவ முறைகள் தெளிவாக்கப் பட்டுள்ளன.

” நெய்க்கிழி வைக்கப் பட்டார் நெய்ப் பந்தர் கிடத்தப் பட்டார்
புக்குழி யெஃக நாடி யிரும்பினாற் போழப் பட்டார்'

உடலுக்குள் புகுந்த இரும்புத் துண்டுகளை அறுவை முறையால்அறுத்தெடுத்துள்ளனர் என்று இப்பாடலடிகள் விளக்குகின்றன. நெய்யில்தோய்த்த துணியைப் இரும்புத்துண்டு நுழைந்த உடற்பகுதியின் மேல் போர்த்துவர். புண்பட்டாரை நெய்ப்பத்தலில்கிடத்துவர்; உடலுக்குள் புகுந்த இரும்புத் துண்டுகளை அறுவை முறையால்அறுத்தெடுப்பர்;

கால அடிப்படையில் இடைக்காலத்துக்கும் சற்று பின்னோக்கிச் சென்று பார்ப்போம். சோழர்கள் ஆட்சி காலத்தை, இலக்கிய அடிப்படையில் சிற்றிலக்கிய காலம் என குறிப்பர். சோழர்கள் ஆட்சி காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. இந்த ஒன்பதாம் நூற்றாண்டில் அறுவை சிகிச்சை இருந்திருக்கிறது என்பதற்கு ஊர் பெயருடன் சான்று உள்ளது. கொங்கு மண்டலத்தில், மகப்பேற்று அறுவை சிகிச்சை முறை ஒரு துறையாக வளர்ந்த நிலையில் இருந்திருக்கிறது. அதனைப் பெண் மருத்துவர் (மருத்துவச்சி) செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இச்செய்தி ‘கொங்கு மண்டல சதகம்’ என்ற சிற்றிலக்கியத்தால் அறியலாகிறது. காந்தபுரம் என்ற ஒரு பகுதியை ஆண்ட வேந்தனின் மகள் பிள்ளையைப் பெற்றெடுக்க முடியாமல், பிரசவ வேதனையால் துன்பப்படுகிறாள். அப்பெண்ணின் வயிற்றைக் கிழித்துத் தன் திறமையால் குழந்தையை வெளியில் எடுத்தாளாம் கொங்கு நாட்டைச் செர்ந்த நறையூரில் வாழ்ந்த மருத்துவச்சி ஒருவர்.


“குறைவறு தெண்ணீர் நதியணை காந்த புரத்தொடுநல்


இறைமகளார் மகவீனப் பொறாது உடல் ஏங்க வகிர்


துறைவழி ஏற்று மகிழ்வூட்டும் அங்கலை தோன்றி வளர்


மறைவழி நேர் நறையூர் நாடுசூழ் கொங்கு மண்டலமே”



இப்பாடலில் கூறப்பட்டுள்ள ‘வகிர் துறைவழி’ என்பது வயிற்றை வகிர்ந்து (கிழித்து) குழந்தையை வெளியில் எடுக்கும் மருத்துவமுறையை குறிக்கிறது. ‘துறை’ என்ற சொல் அக்காலத்தில் அறுவை மருத்துவத்துறை பரவலாக இருந்ததைக் காட்டுகிறது. ஏனெனில் ‘வகிர்வழி’ என்று கூறியிருந்தால் சாதாரனமாக வகிர்ந்து எடுத்தாள் என்று கொள்ள இடமிருக்கிறது. ஆனால் ‘வகிர் துறைவழி’ என்ற சொல்லாட்சி அறுவை மருத்துவத்துறை என்ற ஒரு துறை அக்காலத்தில் தோன்றி வளர்ந்து இருந்ததையும், ‘அங்கலை தோன்றி வளர் நேர் நறையூர்’ என்பது அரிய கலையான இம்மருத்துவ முறை, கொங்கு நாட்டின் நறையூரில் வளர்ந்து இருந்தது என்பதையும் குறிக்கிறது.


அறுவை தொடரும்....



ஆதிரா.
நன்றி குமுதம் ஹெல்த்.







Last edited by Aathira on Mon Dec 06, 2010 7:55 pm; edited 2 times in total


அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Tஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Hஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Iஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Rஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Empty Re: அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Dec 06, 2010 2:59 pm

நன்றி அக்கா ...
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Empty Re: அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை

Post by krishnaamma Mon Dec 06, 2010 6:22 pm

அருமையான பகிர்வு நன்றி நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Empty Re: அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை

Post by Aathira Mon Dec 06, 2010 7:54 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:நன்றி அக்கா ...
அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 154550 அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 678642


அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Tஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Hஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Iஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Rஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Empty Re: அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை

Post by kalaimoon70 Mon Dec 06, 2010 8:02 pm

அருமையான பகிர்வு .
அறுவை சிகிச்சை பற்றிய தெளிவு,.
தமிழோடு சொன்ன விதமும் ,தமிழில் இருப்பதை
சொன்னவிதம்
நம் முன்னோகளும் கொண்ட பங்கு
எல்லாம் சொல்லும் உங்கள் கருத்து அழகு .

பாராட்டுக்கள் தோழியே .தொடரட்டும் உங்கள் பணியே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Empty Re: அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை

Post by Aathira Mon Dec 06, 2010 8:52 pm

krishnaamma wrote:அருமையான பகிர்வு நன்றி அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 678642 அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 154550
மிக்க நன்றி கிருஷ்ணம்மா. அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 154550


அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Tஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Hஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Iஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Rஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Empty Re: அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை

Post by பூஜிதா Tue Dec 07, 2010 11:00 am

அருமையான பதிவு நன்றிகள் ஆறுதல்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Empty Re: அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை

Post by Aathira Tue Dec 07, 2010 11:24 pm

kalaimoon70 wrote:அருமையான பகிர்வு .
அறுவை சிகிச்சை பற்றிய தெளிவு,.
தமிழோடு சொன்ன விதமும் ,தமிழில் இருப்பதை
சொன்னவிதம்
நம் முன்னோகளும் கொண்ட பங்கு
எல்லாம் சொல்லும் உங்கள் கருத்து அழகு .

பாராட்டுக்கள் தோழியே .தொடரட்டும் உங்கள் பணியே .

என்றும் போல தங்கள் வாழ்த்து... அதே போல என் நன்றியும்.. தொடர்வதற்கு மிக்க நன்றி கலைநிலா.. அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 154550


அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Tஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Hஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Iஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Rஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Aஅன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை - Page 2 Empty Re: அன்றும் இன்றும் அறுவை சிசிச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum