புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_m10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_m10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_m10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10 
3 Posts - 9%
heezulia
பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_m10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_m10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10 
2 Posts - 6%
Raji@123
பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_m10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_m10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_m10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_m10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_m10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_m10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_m10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10 
8 Posts - 2%
prajai
பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_m10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_m10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_m10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_m10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_m10பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் எச்ஐவி நோயாளிகள் நிலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 16, 2009 1:49 pm

"அது வேறு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், ஆனால் படித்து, திடகாத்திரமாக இருக்கும் எனக்கு எச்ஐவியாவது, எய்ட்ஸாவது, வருவதாவது, சான்சே இல்லை" என்று அடித்துப் பேசும் இளைஞர்களும் பெரியவர்களும் ஏராளம். "முறைதவறி நடப்பவர்கள்தான் அதுபற்றியெல்லாம் கவலைப்பட வேண்டும், எனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை" என்போர் பலர். ஆனால் அண்மையில் பத்திரிகையாளர்களுக்காக சென்னையில் நடந்த பயிலரங்கு ஒன்றில் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட திருமதி சுமதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற எச்ஐவி கிருமியுடன் வாழ்பவரின் அனுபவமே முற்றிலும் மாறுபட்டது. அவராகச் சொன்னால் ஒழிய ஒருவராலும் பார்த்தமாத்திரத்தில் இவர் ஒரு எச்ஐவி நோயாளி என்று கூறவே முடியாது. அந்நோய்க்கிருமி பெறுவதற்கு முன்பு தோற்றத்தில் எப்படி இருந்தாரோ அதே அளவுக்கு தாம் பார்வையில் இப்போதும் திடகாத்திரமாகவே இருப்பதாக கூறுகிறார் அவர்.

சுமதியின் கணவர் எய்ட்ஸ் மூலம் வரும் நோய்களால் இறந்துவிட்டார். யாருக்குத் தெரியும், அவருக்கு பலருடன் பாலியல் தொடர்பு இருந்திருக்கலாம், அல்லது எப்போதாவது ஊசி மூலமோ அல்லது ரத்த பரிமாற்றம் மூலமோ கூட எச்ஐவி தொற்று ஏற்பட்டிருக்கலாம். தனக்கு கணவனைத் தவிர யாரையுமே தெரியாது என்கிறார் சுமதி. ஆனால் அவர் இப்போது யாரையும் குறைகூற தயாராக இல்லை. அதே நேரத்தில் தனது விதியை நொந்துகொண்டு சுய பரிதாபத்துடன் ஒரு மூலைக்குள் ஒதுங்கிக்கொள்ளவும் அவர் தயாராக இல்லை. வந்தது வந்தாயிற்று, இனி இருக்கப்போகும் ஐந்தோ பத்தோ பதினைந்தோ ஆண்டுகளை எப்படி மகிழ்ச்சியாக கழிப்பது என்பதிலேயே அவர் கவனம் செலுத்துகிறார். சாதாரண நபரைப் போலவே முகத்தில் மலர்ச்சியுடன் சமுதாயத்தை அணுகுகிறார். இது எப்படி சாத்தியம்? அவரைக் கேட்டால் எந்தவிதத் தயக்கமுமின்றி நிதானமாக பதிலளிக்கிறார்: "எச்ஐவி கிருமி உடலில் நுழைந்ததும் ஒருவரது வாழ்வுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி விழுந்துவிடவில்லை. நல்ல சத்தான உணவை வேளாவேளைக்கு எடுத்துக்கொண்டு மன நிம்மதியுடன் இயல்பான வாழ்க்கை முறையை நடத்தினால் எச்ஐவி கிருமி கொண்டவராலும் பிற எவரையும் போலவே வாழ இயலும்" என்று நம்பிக்கையுடன் அவர் கூறுகிறார்.

தம்மைப் பாதிக்கும் அம்சங்களைப் பட்டியலிடும்போது, சமுதாயம் தம்மைப் போன்றோரை மிகவும் புறக்கணிக்கிறது என்பதை முதன்மைப் பிரச்சினையாக அவர் குறிப்பிடுகிறார். "நீதான் விரைவில் சாகப்போகிறவளாச்சே, உனக்கெதுக்கு சொத்து, பணமெல்லாம்," என்று கூறி, குறிப்பாக பெண் எச்ஐவி நோயாளியிடமிருந்து அவர்களது உடமைகளையெல்லாம் உறவினர்கள் பறித்துக்கொள்வது மிகச் சாதாரணம் என்கிறார் அவர். ஆனால் உடமைகளை ஏற்றுக்கொள்வோர் தம்மை அவர்களுக்கருகில் வாழ அனுமதிப்பதில்லை என்றபோது அவரது நா தழு தழுத்தது. கணவர் உட்பட தமக்கு அருமையானவர்கள் இறந்தபோது அந்தத் தகவலைக்கூட தம்மைப் போன்ற பெண்களுக்கு யாரும் சொல்வதில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். இவரைப் போன்றோரின் நலனுக்காக ஐநா எய்ட்ஸ் எதிர்ப்பு அமைப்பு இவ்வாண்டு பெண் எச்ஐவி எய்ட்ஸ் நோயாளிகள் என்ற தலைப்பில் உலக எய்ட்ஸ் தினத்தை அனுசரிக்கிறது.

ஆண்கள், பெண்கள், கற்றோர், கல்லாதோர், ஏழை, பணக்காரர் என அனைத்துத் தரப்பினரிலும் சுமதியைப்போன்று எச்ஐவி கிருமியுடன் நம் நாட்டில் 71 லட்சம் பேர் உள்ளார்கள். அவர்களில் பலர் பெண்கள். பல நாடுகளில் ஆண்களுக்குச் சரி நிகராக பெண்களும் இக்கிருமிகளை சுமந்து திரிகிறார்கள். நம் நாட்டில் 1986ஆம் ஆண்டு சென்னையில்தான் முதன்முதலில் எச்ஐவி கிருமியுடன் வாழ்பவர் அடையாளம் காணப்பட்டார். அதைத் தொடர்ந்து மும்பை, மணிப்பூர் உட்பட நாட்டின் பல பகுதிகளில் அத்தகையோர் இருப்பது படிப்படியாக வெளிச்சத்துக்க வந்தது. பத்து, நூறு, ஆயிரம் என்று வளர்ந்த அவர்களின் எண்ணிக்கை பத்தாயிரம், லட்சம் என்று பெருகி இன்று நாடு முழுவதும் 51 லட்சத்தைத் தொட்டு நிற்குமானால், அதன் தீவிரம் நமக்கு விளங்கும். இதே நிலையில் சென்றால் பலரது நெருங்கிய உறவினர்களிடையே கூட யாருக்காவது இந்நோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. ஒருவருக்கு வந்தால் பெரும்பாலும் அது கணவன் அல்லது மனைவியையும் தாக்கும் வாய்ப்பு உள்ளதால் இது குடும்ப நோயாக உருவெடுக்கும் அபாயமும் மறுப்பதற்கு இல்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 16, 2009 1:50 pm

எல்லா நோய்களையும் போல இதனை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. டைபாய்டு போன்ற நோய்களை எடுத்துக்கொண்டால், அது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது. மஞ்சள் காமாலை, வைரல் காய்ச்சல் போன்றவை பரவும் என்றபோதிலும் மருந்துகொடுத்துக் குணப்படுத்த முடியும். ஆனால் எச்ஐவியைப் பொறுத்தமட்டில் ஹியூமன் இம்யூனோ வைரஸ் என்ற நாசகாரணி கிருமி ஒருவரது உடலுக்குள் சென்றுவிட்டால் அதன்பிறகு மருந்துகொடுத்து குணமாக்க வழியே கிடையாது. இருக்கும் மருந்துகளால் அவரது வாழ்நாளை இன்னும் சற்று நீட்டிக்கலாம், அவ்வளவே. இந்நோய்க் கிருமி தனது தோற்றத்தையும், குணாதிசயங்களையும் பல விதங்களில் மாற்றிக்கொள்வதால், அதற்கு எதிராக இதுவரை மருந்து கண்டுபிடிக்க இயலவில்லை.

ஒரு அரண்மனைக்குள் இருக்கும் கூலிப்படையினர் வாயிற்காவலர்களை வீழ்த்திவிட்டால், பின்பு வலிமையற்ற குட்டிப் பகைவர்கள் கூட சரளமாக ஒருவர்பின் ஒருவராகவோ அல்லது சேர்ந்தோ அந்தக் கோட்டைக்குள் எளிதில் புகுந்து கொள்ளலாம். இதேபோலவே எச்ஐவி கிருமிகள் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் குறிப்பிட்ட வகை ரத்த அணுக்களை அழித்து விடுகின்றன. இதனால் காசநோய், காய்ச்சல், ஜலதோஷம், வாந்திபேதி போன்ற பல வித நோய்கள் அவர்களை சென்றடைந்துவிடுகின்றன. சத்தான ஆகாரமும், சந்தோஷமான சூழலும் அரவணைப்பும் கிடைத்தால் மட்டுமே அவர்களால் மருந்துகளின் உதவியுடன் தற்காலிகமாக அந்நோய்களை வெற்றிகொள்ள முடியும். அப்படியும் ரத்த வெள்ளணுக்கள் மிகவும் குறைந்துபோய்விட்டால் "ஆன்டிரெட்ரோ வைரல்" ரக வீரியமிக்க கூட்டு மருந்துகளை எடுக்கவேண்டி வரும். சென்னை தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனை உட்பட நாடு முழுவதும் சில குறிப்பிட்ட மருத்துவமனைகளில் இத்தகையை மருந்துகளை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எச்ஐவி வைரஸ் ஒருவரை சென்று சேர்ந்த உடனேயே அவர் எய்ட்ஸ் நோயாளி ஆகிவிடுவதில்லை. அக்கிருமி காரணமாக ஒருவரது உடலில் பலவிதமான நோய்கள் உருவாகி, கட்டுப்படுத்த இயலாத நிலைக்கு செல்லும்போது மட்டுமே அவர் எய்ட்ஸ் நோயாளி என்ற முடிவை மருத்துவர் எடுக்கிறார். அதுவரை அவர் எச்ஐவி கிருமி கொண்டவர் என்று மட்டுமே அழைக்கப்படுகிறார். அந்த நிலையில் அவர் எல்லோரையும் போலவே தோற்றமளிப்பதுடன் அவர்களால் பிறர் செய்யும் அலுவல்களை எந்தவித சலனமுமின்றி செய்ய முடியும். இந்த வைரசை சுமப்போருடன்கூட பயணம் செய்யலாம், அவர் சாப்பிட்ட தட்டில் சாப்பிடலாம், கை குலுக்கலாம், பிரச்சினையே இல்லை. ஆனால் அத்தகையோருடன் உடலுறவு, ஓரினச் சேர்க்கை, ஊசி பரிமாறிக்கொள்ளுதல், அவர்களது ரத்தத்தைச் செலுத்திக் கொள்தல் ஆகியவை மூலம் இந்நோய் பரவுகிறது. சுருங்கக் கூறினால், ரத்தம், விந்து, பெண் பிறப்புறுப்புத் திரவங்கள், உமிழ் நீர் போன்ற உடல் திரவங்கள் வாயிலாகவே எச்ஐவி கிருமி பரவுகிறது. ஆணுறை இது பரவுவதிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

தாய்ப்பால் கூட உடல் திரவம்தானே, தாய்க்கு அக்கிருமி இருந்தால் அதன் மூலம் எச்ஐவி சேய்க்குப் பரவுமா? என்று மற்றொரு கேள்வி எழுகிறது. அண்மைக் காலம் வரை அவ்வாறு எச்ஐவி பரவி வந்தது. ஆனால் இப்போது மருத்துவத்தில் விளைந்துள்ள அற்புதமான முன்னேற்றம் காரணமாக தாயிடமிருந்து குழந்தைக்கு இந்நோய் பரவுவதை தடுக்க வழி பிறந்துள்ளது. சென்னை எழும்பூரிலுள்ள அரசினர் குழந்தைகள் மருத்துவமனை உட்பட நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் இதற்கான சிகிச்சை முறைமைகள் கைதேர்ந்த மருத்துவர்களால் அளிக்கப்பட்டு வருகின்றன என்பது சற்று ஆறுதலான செய்தி.

தானிய விளைச்சல் கிடைக்காததால் பஞ்சம், வறட்சியால் பஞ்சம் என்றெல்லாம் கேள்விபட்டிருக்கலாம். ஆனால் எச்ஐவி எய்ட்ஸ் நோயால் பஞ்சம் என்பது வியப்பாகத்தான் இருக்கும். இருப்பினும் அது உண்மை. சென்ற நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் தெற்குப் பகுதியில் உள்ள சில நாடுகளில் எய்ட்ஸ் நோயினால் பஞ்சம் எற்பட்டது என்கிறார்கள் சமூக நோக்கர்கள். ஏனெனில் எச்ஐவி கிருமி பெரும்பாலும் இளைஞர்களையே குறிவைத்து வீழ்த்துகிறது. இதனால் பல கிராமங்களில் விவசாய வேலைசெய்ய இளைஞர், இளைஞிகளே இல்லை என்ற அளவுக்கு மக்களை விழுங்கிப்போட்டது எச்ஐவி கிருமி. பலர் இதற்கான மருந்து மாத்திரைகளுக்காக தமது சேமிப்புகளை எல்லாம் செலவு செய்து பயனேதுமின்றி மாண்டனர். விளைவு, பஞ்சத்தின் அகோரம்.

"ஒரே ஒரு முறை தவறு நடந்துபோச்சு, அதற்குள் எச்ஐவி கிருமி வந்துவிட்டது. அதனால் வாழ்க்கைத் துணைக்கும் பரவிடுச்சி" என்று அங்கலாய்ப்போர் பலர் உண்டு. "மெத்தப் படித்த பெண், பார்க்க அழகாக நவ நாகரீகமாக இருப்பார், தேன் ஒழுகப் பேசுவார் என்பதால் சந்தேகப்படாமல் நம்பிக்கையுடன் ஒரே ஒரு நாள் உறவு வைத்துக்கொண்டேன். ஆனால் விளைவு, இப்போது எச்ஐவி பாதிப்பு. நாளை நானொரு எய்ட்ஸ் நோயாளி" என்று உருகுவோர் பலர். எச்ஐவி வைரஸ் தயவு தாட்சணியமற்ற கண்ணுக்குத் தெரியாத வைரஸ். வருமுன் காப்பது விவேகம். நோய் வந்தோரையும் ஏற்றுக்கொள்ளுதல் அவசியம்.

மு. ஜெய சிங் @ இந்திய தகவல் அமைச்சகம்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Aug 16, 2009 2:05 pm

இந்தியாவில் அண்மையில் நடந்த கருததுக்கணிப்பில 63% ஆண்கள் பெண்களுக்கு கற்பு முக்கியமில்லை என்று கூட கூறமுடியுமென்றால்.. இந்தியாவில் தான் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் உயரப் போகின்றதே ... என்ன மனிதர்கள் வார்தைககு வார்த்தை பண்பாடு, கலாச்சாரம் நிறைந்த நாடு என்கிறார்கள் ஆனால் அதி கூடிய எயிட்ஜ் நோயாளர்களின் எண்ணிக்கை இநதியாவில தானே உள்ளது..

நாட்டுககு ஒழுங்கான சுகாதார வசதிகளை அழிக்க முடியாததால் தானே ஊசி மூலம் பரவலடைகின்றது... மொத்தபணத்தையும் அரசியல் வாதிகளே சுருட்டிக கொண்டால் எப்படி சுகாதார வசதிகளை சீராக அளிப்பது.. வர வர இந்தியா மாதரி.. ஒரு நாடா...???

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக