புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_c10அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_m10அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_c10 
284 Posts - 45%
heezulia
அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_c10அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_m10அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_c10அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_m10அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_c10அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_m10அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_c10அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_m10அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_c10 
19 Posts - 3%
prajai
அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_c10அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_m10அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_c10அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_m10அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_c10அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_m10அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_c10அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_m10அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_c10அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_m10அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Wed Nov 24, 2010 10:58 am

அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Ujiladevi.blogpost.com+%25285%2529

இந்து மத வரலாற்று தொடர் 5
வேதங்களை பற்றி பலர் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். அப்பொழுதெல்லாம் வேதங்களின் கருத்துகளை நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லையே என்று வருத்தப்பட்டிருக்கிறோம். அப்படி வருந்தியவர்களில் வருத்தங்களை போக்குவது நமது கடமையாகும். எனவே நான்கு வேதங்களும் எதை பற்றி பேசுகிறது என்பதை எடுத்து சொல்வது அவசியமாகிறது. அதனால் இந்த அத்யாயத்தில் ரிக் வேதத்தின் முழுமையான வடிவத்தை சுருக்கி காட்டுவது மிகவும் முக்கியமாகும். காரணம் என்னவென்றால் வேதங்களை புரிந்து கொண்டால்தான் இந்து மதத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.
வேதங்களில் முதன்மையானது ரிக் வேதம் ஆகும். இது மட்டும் இந்த வேதத்திற்கு தனிப்பட்ட பெருமை அல்ல. மனித சிந்தனையானது நூல் வடிவாக முதன்முதலில் கொண்டு வரப்பட்டது இந்த வேதத்தின் மூலமாகத்தான் அதாவது உலகின் முதல் நூல் ரிக் வேதம் தான்.

அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Ujiladevi.blogpost.com+%25281%2529

நான்கு வேதங்களிலும் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை 1,82,211 ஆகும். இதில் 1,52,222 பாடல்கள் ரிக் வேதத்திலேயே இருக்கிறது அதாவது நான்கு வேதங்களில் முக்கால் பங்கு பாடல்கள் ரிக் வேதத்திற்கு சொந்தமாகும். இந்த வேதம் பத்து மண்டலங்களாக அதாவது பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பத்து பாகங்களும் 1028 சூத்தகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சூத்தகமும் தனிதனியான விஷயங்களை எடுத்து சிறப்பாக பேசுகிறது. ரிக் வேதம் தனிமனிதனாலோ குழுக்களாகலோ உருவாக்கப்பட்டது அல்ல. சிந்து நதி தொடங்கி கங்கை நதி வரையிலும் பரவி கிடந்த பல ஞான புருஷர்களால் கண்டறியப்பட்டு பல தலை முறைகளால் உருவாக்கப்பட்டதே ஆகும். ரிக் வேதத்தில் முதல் பாகத்தையும் கடைசி பாகமான பத்தாவது பாகத்தையும் உருவாக்கியது யார் என்று இதுவரை தெரியவில்லை. மற்ற எட்டு பாகத்தையும் உருவாக்கியவர்களை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. இரண்டாவது பாகத்தை கிறிதமாதாவும் அவரது சீடர்களும் உருவாக்கியிருக்கிறார்கள். மூன்றாவது பாகத்தை விஸ்வாமித்திரரும், நான்காவது பாகத்தை வாமதேவரும் ஐந்தாவது பாகத்தை அந்திரியும், ஆறாவது பாகத்தை பரத்வாஜரும், ஏழாவது பாகத்தை வஸிஷ்டரும், எட்டாவது பாகத்தை ஆங்கிரகரும், ஒன்பதாவது பாகத்தை கன்வரும் கண்டறிந்து வெளிபடுத்தியதாக கருதப்படுகிறது.
லட்சத்திற்கு மேல் பாடல்கள் ரிக் வேதத்தில் இருந்தாலும் அவைகள் சமயப் பாடல்கள், வாழ்க்கை பாடல்கள், தத்துவப் பாடல்கள் என்று மூன்று வகையாக பிரித்துவிடலாம். இருப்பினும் இந்த பாடல்களில் வழிபாட்டு பாடல்களான சமய பாடல்கள் தான் அதிகமாக இருக்கிறது உடம்பும் மனதும் தனிதனியானவைகள் அல்ல. ஒன்றாகவே ஆனது என்று ஆதிமனிதர்கள் நம்பினார்கள். வாழ்வில் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையை கண்டறிந்த பிறகு பண்பட்ட சிந்தனை வளர்ச்சி அதிகரித்த பிறகு உடல் வேறு உள்ளம் வேறு என்ற தெளிவை பெற்றார்கள். இந்த தெளிவான அறிவு மக்களிடம் எப்படி இருந்தது என்பதை ரிக் வேத தத்துவப் பாடல்கள் தெளிவுபடுத்துகிறது. அலை வீசும் கடலுக்கடியில் சில முத்துக்கள் தான் கிடைக்கும் என்பதை போல் சமயப் பாடல்கள் என்ற அலைகளுக்கிடையில் தத்துவப்பாடல்கள் என்ற சில முத்துக்கள் தான் ரிக் வேதத்தில் பின்னிக் கொண்டிருக்கின்றன.

அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Ujiladevi.blogpost.com
இனி ரிக் வேதத்தின் ராஜபாட்டைக்குள் பிரவேசித்து வேதக் கருத்துகளை தரிசனம் செய்வோம். மனிதன் என்பவன் யார் என்ற கேள்வியை ரிக்வேதம் முன் வைத்து மனிதன் உயிர், உடம்பு, ஆத்மா ஆகிய மூன்றின் கலவை என்ற பதிலை தருகிறது. இந்த மூன்றும் இல்லாத மனிதனை கற்பனையில் கூட பார்க்க முடியாதல்லவா. உயிர் தன்னை வெளிப்படுத்த உடம்பு என்பது அவசியம் அந்த உடம்பில் தான் ஆத்மா கொலுவிருக்க முடியும். அழகிய இந்த மூன்றையும் மனிதனுக்கு கொடுப்பது யார்?
அழகான சரீரம் அமைய கருமுட்டையை கொடுப்பவள் தாய். அந்த சரீரம் உருவாக விந்துவான உயிரைக் கொடுப்பவன் தகப்பன். உயிரையும் உடலையும் இயக்கும் சக்தியாகிய ஆத்மாவை கொடுப்பவன் இறைவன். உடலும் உயிரும் தந்த தாய் தந்தையை கண்களால் காணமுடியும். அறிவுப் பொருளான ஆத்மாவை கொடுத்த இறைவனை வெறும் கண்களால் காணமுடியாது. அவனை தரிசிக்க ஞானக் கண் வேண்டும். ஞானக்கண் பெற்று இறைவனை தரிசித்து விட்டால் ஆனந்தம் என்பது அன்றாட வாழ்வின் அனுபவமாகி விடும்.
ரிக் வேதத்திற்கு சொந்தமானதை அறிய உபநிஷதம் மனிதன் என்பவன் அன்னநிலை, பிரான நிலை, மனோநிலை, விஞ்ஞான நிலை, ஆனந்த நிலை என்று ஐந்து வகையான ஆக்கப்பட்டதாக சொல்கிறது. இந்த ஐந்தில் அன்னநிலை என்பது உடம்பை குறிக்கும், பிரான நிலை உயிரை குறிக்கும், மனோ நிலை ஆத்மாவாகும், விஞ்ஞான நிலை அறிவாகிய ஞானமாகும், ஆனந்த நிலை என்பது இறைவனோடு கலப்பதால் ஏற்படும் பெருங்களிப்பாகும். இதை மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வகையிலும் நாம் எடுத்து கொள்ளலாம். அதாவது கருவிலே உருவாகிய தாய் நம்மை தகப்பனிடம் தருகிறாள். தகப்பன் ஞானம் பெறுவதற்காக நம்மை குருவிடம் அனுப்புகிறார். ஞானத்தை தரும் குருவோ நம்மை அழியாத ஆனந்தத்தை தரும் ஆண்டவனிடத்தில் கொண்டு சேர்க்கிறான். எனவே மனிதனின் இறுதி லட்சியம் இறைவனின் திருவடிகளை சேர்வதே ஆகும் என்று ரிக் வேதம் வலியுறுத்துகிறது.

அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Tree_pencil
ரிக் வேதத்தில் புகழ்பெற்ற பருஷசூத்தகம் பத்தாவது மண்டலத்தில் அடங்கியுள்ளது. இந்த சூத்தகத்திலுள்ள மந்திரங்கள் மிகவும் அர்த்த புஷ்டியானது ஆகும். அந்த சூத்தகத்தின் கருத்தை சுருக்கமாக விளக்கி சொல்ல முயற்சிப்போம். விராட் புருஷனான கடவுள் நாம்காணும் இடத்திலும் கானாத இடத்திலும் பரவிகிடக்கிறான். ஏனென்றால் அவனது உருவம் கண்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு பிரம்மாண்டமானது. அவனுக்கு ஆயிரம் தலைகளும் பல்லாயிரம் கைகளும் பல நூறு கோடி கால்களும் உள்ளன. பூமியின் எல்லா திசைகளையும் அண்டசராசரத்தின் ஒவ்வொரு துகள்களையும் அவனது கைகள் தாங்கி கொண்டிருக்கின்றது.
இந்த சூத்தகத்தின் மூலம் கண்ணுக்கு தெரியாமல் நுணுக்கரிய நுண்ணியனாகவும் பிரமாண்டமாகவும் இருக்கும் இறைவனுக்கு மனித உடல்கள் இருப்பது போன்ற கற்பனையை வேத ரிஷி வர்ணனை தருகிறார் கடவுளை மனித வடிவாக்கியது சரிதானா முறைதானா என்ற வாதங்கள் வேத உரையாசியர்களால் இன்று வரை எழுப்பட்டு கொண்டிருக்கிறது. பதில் தான் இன்னும் கிடைத்த பாடில்லை. ஏன் இந்த கேள்வி புருஷ சூத்தகத்தை பார்த்து கேட்கபடுகிறது என்றால் 33 வகையான பெயர்களைக் கொண்டு கடவுள் வர்ணனை செய்யப்பட்டாலும் வேத கால கவிஞர்களான ரிஷிகள் காட்டியது தேவதைகள் இயற்கையின் வடிவங்களாக இருக்கிறது என்பது தானே தவிர மனிதர்களாக இருப்பதாக அவர்கள் உறவில்லை.

அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு 9-wintertree

மின்னலை ஆயுதமாகக் கொண்ட இந்திரன் தான் வேதப் பாடல்களில் முழுமுதற்கடவுளாக கருதப்படுகிறான். மக்களின் அபிமனாத்திற்குய கடவுளாகவும் நான்கில் ஒரு பகுதி இந்திரனை பற்றி மட்டுமே பேசுகிறது அதற்கு அடுத்த படியாக அக்னியும் மூன்றாவதாக மழையை தரும் வருணனும் நான்காவதாக காற்றுக் கடவுளான வாயுவும் சூரிய சந்திரர்களும் வணங்கப்படுகிறார்கள். பருவக்காலங்களில் வரும் மந்த மாருதமும் சண்டமாருதமும் காலை பொழுதின் நாயகியான உஷாவும் கோபத்தோடு இருக்கும் ருத்திரனும், விஷ்ணுவும், அஷ்வினி தேவர்களும், பிரகஸ்பதி, பிரஜாபதி, அதிதி என்று இன்னும் பல தேவதைகளும் வேத ரிஷிகளின் பாடல்களால் ஆராதிக்கபடுகிறார்கள். இந்த பாடல்களில் எந்த தேவதையும் மனித வடிவமாக சித்தரிக்கப்படவில்லை. மாறாக புருஷ சூத்தகம் மட்டுமே கடவுளை மனித வடிவில் வர்ணனை செய்கிறது. அது ஏன்?
மிக முக்கியமாக இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இறைவனை மனித வடிவில் காட்ட முயற்சிக்கும் புருஷ சூத்தக பாடல் ரிக் வேதத்தின் கடைசி பகுதியாகத்தான் வருகிறதே தவிர முதற்பகுதியிலோ நடுப்பகுதிலோ வரவில்லை. எனவே சென்ற அத்யாயத்தில் நாம் சிந்தித்த படி பூர்வ குடிமக்கள் தான் கடவுளை மனித வடிவில் வணங்கினார்கள் அவர்களின் கொள்கைகளை பிறகு வேதங்களோடு இணைக்கப்பட்டன என்ற வாதத்திற்கு இது வலுசேர்க்கிறதல்லவா.

அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Perspective-sketch
ரிக் வேத காலத்தில் ஜாதி பிரிவுகள் இல்லை. வர்ணம் என்ற வார்த்தை மனித நிறங்களை குறிக்க பயன்படுத்தப்பட்டதே தவிர சாதியை குறிக்க பயன்படவில்லை. வெள்ளை நிறம் கொண்டவர்கள் ஆரியர்கள் என்றும் தேவர்கள் என்றும் கருதப்பட்டார்கள். கருப்பு நிற மக்கள் தாசர்கள் என்றும் அசுரர்கள் என்றும் கருதப்பட்டார்கள். தேவாசுர யுத்தம் என்று ரிக்வேதம் பேசுவது எல்லாம் வெள்ளை நிற மக்களுக்கும் கருப்பு நிற மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட பூசல்களே ஆகும். இந்த பூசல்கள் முடிவு வெற்றி தோல்வியை தராமல் இரண்டு இனக் குழுக்களும் ஒன்றிற்குள் ஒன்று கலந்து போய் விட்டதாகவே ரிக் வேதம் கூறுகிறது.
ரிக் வேதக் கருத்துபடி பிராமணர், சத்திரியர், வைசீகர், சூத்திரர் என்னும் நான்கு வகையான மக்கள் அனைவரும் ஒரே வர்ணத்தை சேர்ந்தவர்களே அவார்கள். ஜன நெருக்கடியும் இடநெருக்கடியும் ஏற்பட்டபொழுது சமூக தேவைகளுக்காக தொழிலின் அடிப்படையில் மனிதர்கள் பிரிக்கப்பட்டார்களே தவிர அவர்களிடத்தில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் கருதப்படவில்லை. அதாவது பிறப்பின் அடிப்படையில் நான்கு தொழில்களும் பிரித்து வைக்கப்படாமல் சர்வ சுதந்திரமாக யார் வேண்டுமென்றாலும் கல்வி போதிக்கும் பிராமணனாகவோ உடல் உழைப்பு செய்யும் சூத்திரனாகவோ இருக்க அனுமதிக்கபட்டார்கள் அதே நேரம் ஒரு தொழிலை செய்பவன் சாகும் வரை அதே தொழிலை தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் அப்போது இல்லை. சூத்திரனாக இருந்து உடல் உழைப்பு செய்யும் ஒருவன் தான் விரும்பினால் கல்வி கற்று பிராமணனாக மாறிவிடலாம்.

அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Ujiladevi.blogpost.com+%25282%2529
இந்த கருத்திற்கு வேதங்களிலேயே வலுவான ஆதாரங்கள் இருக்கிறது ரிக் வேதத்தின் இரண்டாவது மண்டலத்தை உருவாக்கிய விஷ்வா மித்திரர் மகரிஷி அடிப்படையில் கௌசீகன் என்ற சத்ரியன் ஆவான். இவர் தனது ஆர்வத்தால் தனது மக்களை காக்கும் அரசியல் தொழிலை விட்டுவிட்டு தவம் செய்து மந்திரங்களை உருவாக்கும் பிராமணனாக மாறிவிடுகிறான். வேதங்களால் இவர் சிறந்த அந்தணராகவும் போற்றப்படுகிறார். பிறப்பின் அடிப்படையில் வர்ணங்கள் உருவாக்கப்பட்டு இருந்தால் ஒரு சத்ரியன் எப்படி பிராமணனாக மாறி இருக்க முடியும்.
இன்று மற்ற சாதியினர் சமைத்த உணவை பிராமணர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் சாப்பிட மறுக்கிறார்கள். நாகரீக சமூகம் வளர்ந்து விட்ட இன்றைய காலத்தில் இந்த பழக்கம் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் கூட மறைமுகமாக வலுவாக இருப்பதை பலர் அறிவார்கள். ஆனால் வேதகாலத்தில் உணவை தயாரிப்பதிலும் உண்பதிலும் எந்த பாகுபாடும் இருந்ததாக தெரியவில்லை. ரிக் வேதத்திலுள்ள பல பாடல்களில் சூத்திரர்கள் சமைத்த உணவை பிராமணர்கள் உண்டதற்கான பல ஆதாரங்கள் காட்டப்பட்டுள்ளன. உணவு விஷயத்தில் மட்டுமல்ல திருமண விஷயத்திலும் பாகுபாடுகள் வேதகாலத்தில் இல்லை. சத்திரிய பெண்ணை பிராமணனும், பிராமணப் பெண்ணை சூத்திரனும் மணந்து கொண்டதாக பலத் தகவல்கள் கிடைக்கின்றன. இதை எயாதி, ருஷ்யசுருந்தர் ஆகியோர் கதைமூலம் நம்மால் அறிந்து கொள்ளமுடிகிறது.
கடவுள்தான் மனிதனை படைத்தான் என்று ரிக் வேதம் தெளிவாக எடுத்துச் சொல்கிறது. ரிக் வேதத்திலுள்ள தைந்திரிய உபநிஷதம் இதை தெளிவுபட காட்டுகிறது. மனிதன் எங்கிருந்து வந்தான் எங்கே இருக்கிறான் இறுதியில் எங்கே போகிறான் என்பதை இந்த உபநிஷதம் ஒரு பாடல் மூலம் அழகுபட விளக்குகிறது.

அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Ujiladevi.blogpost.com+%25283%2529
பிரம்மம் என்னும் கடவுளை பற்றி அறிந்து கொள்ள ஆசைப்பட்ட பிறகு முனிவர் தமது தந்தையான வருண தேவனிடம் கேள்விகள் கேட்கிறான் அதற்கு வருணதேவன் பல பதில்களை சொல்லி கடைசியாக எதிலிருந்து எல்லாப் பொருட்களும் வெளியேறுகிறதோ எதனால் எல்லாப் பொருட்களும் காக்கப்படுகிறதோ எதில் எல்லாப் பொருட்களும் ஒரு நாள் திரும்பி வந்து அடங்குகிறதோ அதுதான் பிரம்மம் என்று வருணதேவன் குறிப்பிடுகிறான். இந்த சொற்றொடரில் வருகின்ற பொருள்கள் என்னபதம் மனிதன் உட்பட சகல ஜீவ ராசிகளையும் ஜடப் பொருட்களையும் குறிக்கிறது. இப்படி மனிதனையும் மற்ற பொருட்களையும் படைத்த இறைவனுக்கு எப்படிபட்ட உருவத்தை கொடுக்கலாம் என்று வேத ரிஷி சிந்திக்கிறார். இறைவனை மிருகமாகவோ பறவையாகவோ சிந்தித்து பார்ப்பதை விட மனிதனாக சிந்தனை செய்வதே சிறந்ததாக இருக்கும் என்று அவர்கருதுகிறார். ஏனென்றால் அவர் பறவைக்காகவோ மிருகத்திற்காகவோ இறைவனை பற்றிய தகவலை தரவில்லை அல்லவா.
மனித வடிவில் இறைவனை உருவப்படுத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு தலையும் இரண்டு கால்களும், கைகளும் கொடுத்தால் அவனும் சாதாரண மனிதனாக கருதப்பட வாய்பிருக்கிறதே தவிர சர்வசக்தி வாய்ந்த ஆண்டவனாக கருதமுடியாது. அதனால் வேதக் கவிஞன் இறைவனுக்கு ஆயிரம் தலைகளும், ஆயிரம் கைகளும் கொடுத்து உருவகப்படுத்துகிறான்.

அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Ujiladevi.blogpost.com+%25288%2529
தன்னைக் காட்டிலும் சக்தி மிகுந்த வேறு ஒன்று இருந்தால்தான் மனிதன் அதை பயத்துடனும் வியப்புடனும் மதிப்பான். இந்தக் கருத்தை கொண்டுதான் ரிக் வேதத்தில் புருஷ சூத்தகத்தில் பிரமாண்டமான வடிவத்தை இறைவனுக்கு கொடுத்து வேதகால கவிஞன் போற்றிபாடுகிறான். அத்தகைய பிரமாண்ட வடிவுடைய ஈஸ்வரனுக்கு விராட் புருஷன் என்ற பெயரையும் சூட்டுகிறான். விராட் புருஷனை பற்றி பகவத் கீதையும் பேசுகிறது.
விராட் புருஷனின் தன்மைகளை பற்றி புருஷ சூத்தகம் விளக்கம் கொடுப்பதை பார்ப்போம். விராட் புருஷன் தனியாகவே இருக்கிறான் இதே நிலையில் தான் முன்பும் இருந்தான் இப்போதும் இருக்கிறான் இனி எப்போதும் அப்படியே இருப்பான். அவன் அழிவு என்பதை அறியாதவன் உணவை எடுத்துக் கொள்ளும் எல்லா உயிர்களும் இவனிடமிருந்தே வருகின்றது. உயிரை உற்பத்தி செய்யும் அவன் ஒவ்வொரு ஜீவனுக்கு உணவையும் உற்பத்தி செய்கிறான். உணவு என்பது உடலை வளர்ப்பது அன்று. உயிரை வளர்ப்பதாகும்.
விராட் புருஷன் எல்லா தெய்வங்களை விட மேம்பட்டவன். இவனுக்கு இணையாக எந்த கடவுளும் இல்லை. ஏனென்றால் இவனே எல்லா கடவுளுமாக இருக்கிறான். இவனது மனதிலிருந்துதான் சந்திரன் தோன்றினான் இவன் கண்களிலிருந்து சூரியன் தோன்றினான். இந்திரனும் அக்னியும் இவனது வாயிலிருந்து தோன்றியவர்களே. இவன் சுவாசம் தான் வாயுவாகும். உலகத்தில் காணுகின்ற யாவும் காணாத எல்லாமும் இவனன்றி வேறில்லை. உலகப் பொருளாகவும் இருக்கிறான் அந்த பொருட்களுக்கு அப்பாலும் இருக்கிறான்.

அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Redcappedmanikinsmall
இப்படி 16 பாடல்களாக புருஷ சூத்தகம் பிரம்மத்தை பற்றியும் அதன் உருவம் ஆற்றல் குறித்து விளக்கி கொண்டு போகிறது. இந்த விளக்கங்களுக்கு இடையில் மனித சிருஷ்டியை பற்றியும் பேசுகிறது. இனி ரிக் வேதத்தின் அக்னி என்ற இரண்டாவது மண்டலத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை பார்ப்போம்.
அக்னியை அழியக்கூடிய பிறவிகொண்ட மனிதனான எங்களுக்கு நாள்தோறும் சக்தியை கொடு அதேநேரம் அழிவற்ற நிலையை நோக்கி செல்லும் பாதையை காட்டி அருள் கொடு இப்போதும் இனி எப்போதும் குறைவில்லாத வளம் கொழிக்கும் வாழ்க்கையையே அறிவாளி வேண்டுகிறான். அந்த குறைவற்ற நிறைவான வாழ்வை எப்போதும் கொடுத்துக் கொண்டே இரு இப்படி அக்னி தேவனை நம்பிக்கையுடன் வழிபடும் வேத ரிஷி உரிமை நிறைந்த உறவுடன் அக்னியின் அருகில் நெருக்கமாக சென்று
அக்னியே எங்களிடம் அன்பு கொண்டவனாகவே நீ எப்போதும் இருக்கிறாய். நீ தான் எங்களுக்கு உயிர் கொடுத்த தந்தை என்பதை நாங்கள் அறிகிறோம். நீ எவராலும் வெல்ல முடியாத வல்லமை படைத்தவன் எனவே உனது குழந்தைகளை பலசாலிகாளக பார்க்கவே நீ விரும்புவாய். உன்னை வணங்கும் எங்களுக்கு நீயே பாதுகாவலன் நாங்கள் கேட்பதெல்லாம் எங்களை நூறு நூறாகவும் ஆயிரம் ஆயிரமாகவும் பெருக்கு. உன்னிடம் நாங்கள் சரணடைகிறோம்.

அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Ujiladevi.blogpost.com+%25287%2529
இந்த ரிக் வேத பாடல் ஒரு தோத்திர பாடலாக மட்டுமல்லாது அந்தகால மக்களின் நிலையை படம் பிடித்து காட்டும் காலக் கண்ணாடியாகவும் இருக்கிறது. வேதப் பாடல்களை வடித்தெடுத்த இந்த மக்கள் தாங்கள் வாழும் பகுதியில் வாழ்ந்த மற்ற மனித கூட்டத்தோடு ஒற்றுமையாக இல்லை. அவர்களுடன் போராடிக் கொண்டே இருந்தனர் மனித எண்ணிக்கையும் அடிப்படையில் அன்றைய யுத்தத்தில் வெற்றி தோல்விகள் தீர்மாணிக்கப்பட்டதால் ஆள் பலம் தங்களுக்கு வேண்டுமென்று நெருப்பு தேவியிடம் பிரார்த்தனை செய்கிறான். இதில் இன்னொறு உண்மையும் மறைந்திருக்கிறது. நெருப்பு என்பது விரகுகளை மட்டுமே பற்றிக் கொண்டு எரியும் ஒரு பொருள்ளல்ல எல்லா உயிர்களிடத்திலும் உடம்பிற்குள் அக்னி மறைந்திருக்கிறது. ஜனனத்தை அதிகப்படுத்தும் காமமும் ஒரு வகையில் நெருப்புதான் பித்த உடம்பு அதாவது சூடான உடம்பும் படைத்த மனிதனால் உடனுக்குடன் பிள்ளைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவே இந்த பாடல் அக்னியை போற்றும் பாடலாக மட்டும் அல்லாது இதை முறையிலான சந்தலயங்களோடு ஓதினால் மனித உடம்பில் வெப்பத்தை அதிகபடுத்தும் அதிர்வுகளும் நிறைந்துள்ளதை அனுபவத்தில் உணரலாம்.
இதனால்தான் வேத ரிஷி அக்னியை தந்தை என்று உணர்வு பூர்வமாக பாடுகிறான். அதனுடைய உறவையும் நெருக்கத்தையும் வேண்டுகிறான். எல்லா வெளிச்சங்களிலேயும் அக்னியை காண்கிறான். சூரியனும் சந்திரனும், நட்சத்திரங்களும், மின்னலும் அவனுக்கு அக்னி வடிவாகவே தெரிந்தது. அக்னியை பற்றி வேத பாடல் ஆசிரியர் கூறுவதை உபநிஷத ஞானி தத்துவ நோக்கில் நமக்கு காட்டுகிறான். இருட்டிலிருந்து உண்மைக்கு என்னை கூட்டிசெல்வாயாக பொய்யிலிருந்து என்னை மீட்டு செல்வாயாக அழிவிலிருந்து அழிவற்ற அமிர்த நிலைக்கு என்னை அழைத்து செல்வாயாக என்று அக்னி தேவனிடம் முறையிடும் உபநிஷத வாக்கியம் அக்னியை ஞான வடிவாக நமக்கு காட்டுகிறது.

அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Ist2_138337-animal-ink-sketch-drawing-of-giraffe
ரிக் வேதத்தின் இரண்டாம் மண்டலம் இந்திரனையும் மூன்றாவது பகுதி வருணனையும் நான்காவது வாயுவையும் பற்றி பேசுகிறது. அவையாவும் ஏறக்குறைய முதல் மண்டல கருத்துகளை போலவே இருப்பதனால் இனி ஐந்தாம் மண்டலத்தில் சூரியனை பற்றி சொல்லப்பட்டிருப்பதை பார்ப்போம்.
வேத ரிஷி சூரியனை துதிக்கும் போது அவனுக்கு பல பெயர்களை சூட்டி மகிழ்கிறான். சூரியனை இருட்டின் பகைவன் என்றும் மனிதச் சோம்பலின் எதிரி என்றும் பாராட்டுகிறான். சூரியனை சோம்பலின் எதிரியாக காட்டுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வேதகால மனிதன் சோம்பி இருக்க முடியாத நிலையில் இருந்தான். பகைவர்களிடமிருந்தோ கொடிய மிருகங்களிடமிருந்தோ சதாகாலமும் அவனை அபாயம் துரத்திக் கொண்டே இருந்தது. சூரியன் மறைந்து விட்டால் அவனது அச்ச உணவு அதிகபட்டது பாதுகாப்புணர்வு இன்னும் அதிகமாக தேவைப்பட்டது அதனால் அவன் இருட்டை வெறுத்தான் இருட்டை கிழித்தெரியும் பகலவனை வரவேற்றான். ஒளி தருகின்ற அனைத்து பொருட்களையுமே தனது நண்பனாக கருதி அன்பு செலுத்தினான் ஆராதனை செய்தான். இந்த உணர்வுகளை சூரியனை பற்றிய ரிக் வேதப் பாடல்கள் தெளிவாக காட்டுகிறது.
சூரிய தேவன் எல்லாம் தெரிந்தவன் சகல சக்திகளும் வாய்க்கப் பெற்றவன் பலவாறு வடிவம் கொண்ட உயிர்கள் அனைத்திற்கும் போதனை செய்யும் ஆசியரை போன்றவன் மனிதனுக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கும் அவன் உணவளிப்பவன். வைகரை பொழுதின் இவன் தலை உயர்த்தி பார்த்து விட்டாலே மனித மனங்கள் இன்பத்தின் எல்லையை தொட்டுவிடுகிறது. பசியை நீக்கும் நேரத்தை மட்டும் சூரியன் தருவதில்லை. ஞானமும் அறிவும் ஆற்றலும் பெறுகின்ற பொழுதையும் சூரியன் தருகிறான். சூரியனின் ஞானக் கதிர்கள் மனநிலத்தை ஆழ உழுது அறிவு பயிர்களை விதைக்கிறது. இதனால் புத்திசாலிகள் சூரியனை ஆராதிக்கிறார்கள். தெய்வீகமான எண்ணங்களை வளர செய்பவன் மனச்சோர்வுகளை போக்க செய்பவனும் தானியங்களை செழிக்க செய்பவனும் சூரியனே ஆவான் என்று சூரியனை போற்றும் இந்த பாடல் மேலோட்டமாக பார்க்கும் பொழுது சாதாரணமாக நமக்கு தெரியும் ஆழமான சிந்தனையை செலுத்தினால் ஆதிகால இந்து எத்தகைய நுட்பம் வாய்ந்தவனாக இருந்தான் என்பது புலப்படும்.

அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு 2235677754_1bc3ccdb55
வைகரையில் சூரிய தரிசனத்தை பெறும்படி வேத ரிஷி ஏன் வற்புறுத்துகிறான். அந்த நேரம் மனிதனின் உடலும் மனமும் பிரபஞ்ச சக்தியை உள்வாங்கக் கூடியதாக இருக்கிறது. சூரிய கதிர்கள் கண்களிலும் உடல் முழுவதும் அந்த நேரம் பரவினால் மனிதனின் அறிவாற்றல் பலமடங்கு கூடும். சிந்தனையின் வேகம் செழுமைபடும். எதையும் துணிந்து செய்யக் கூடிய மன தைரியம் அதிகரிக்கும். உடலிலுள்ள மாசுகள் அழிந்து ஆரோக்கியம் பெருகும். இந்த உண்மையை அவன் அறிந்து பாடினானா அறியாமல் பாடினானா என்பது முக்கியமல்ல. இந்த பாடல் வரிகள் சூரிய சக்தியை நமக்கு அதிகபடுத்தி தருவதாக இருப்பது அறிவியல் உண்மையாகும்.
இனி சமுதாய சிந்தனைகளை கொண்ட ரிக் வேதத்தின் ஆறாவது மண்டலத்தை பார்ப்போம். சமூகம் என்பது ஆண்களையும் பெண்களையும் கொண்டது மட்டுமல்ல குழந்தைகளையும், முதியவர்களையும், பல மற்றவர்களையும், நோயாளிகளையும் கொண்டதே ஆகும். பலசாலிகள் அப்படி பட்ட பலஹீனர்களை காப்பாற்ற வேண்டும் உணவளித்து பாதுகாக்க வேண்டும் என்று ரிக் வேதம் வலியுறுத்துகிறது.
ஆறாவது மண்டலம் 75-வது சூத்தகம் சமூகத்தை நேசி அதற்கு மதிப்பு கொடு, பசியால் வாடுவோருக்கு ஆகாரம் கொடு, சிரமத்தில் சிக்கியோன் துன்பத்தை போக்க போராடு, அதற்காக உனது சக்தியை பெருக்கிகொள், ஆற்றலை வளர்த்துக் கொள், உனது கௌரவத்தை திரட்டிக்கொள், உயர்ந்த செயலுக்காக உன்னிடமுள்ள துணிச்சல் உச்ச நிலையை அடையட்டும். உனது கைகளிலுள்ள ஆயுதங்கள் எதிகளை மட்டுமல்ல அதர்மத்தையும் சாய்க்கும் ஆற்றலை பெறும் வண்ணம் பயிற்சி எடுத்துக்கொள். தர்மத்திற்கு மாறானவைகளிடமும் எதிகளிடமும் நிமிர்ந்து நிற்க்கும் சுபாவத்தை வளர்த்துக் கொள். மக்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பண்பை பெறுக்கி கொள் என்றெல்லாம் மனிதனுக்கு அறிவுரை தருகிறது.

அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Danger+wild+animal+tiger+sketches+wallpapers
அடுத்ததாக முழுமுதற்கடவுளான விஷ்ணுவை பற்றி குறிப்பிடும் ரிக் வேதத்தின் ஏழாவது மண்டலத்தை பார்ப்போம். இந்த இடத்தில் ஒரு உண்மையை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். வேத பாடங்களில் எந்த இடத்திலேயும் விஷ்ணுதான் மூலப்பரம் பொருள் என்று குறிப்பிடப்படவில்லை. இந்திரன் வருணன் போன்ற தெய்வங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற முக்கியத்துவம் கூட கொடுக்கப்படவில்லை. விஷ்ணு என்று அழைக்கப்படும் திருமால்தான் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம் என்ற கருத்து வேதகாலத்திற்கு பின்பு வந்ததே ஆகும். உபநிஷதங்களின் சாரமாக கருதப்படும் வேதாந்தம் என்பது நடைமுறைக்கு வந்த பிறகுதான் விஷ்ணு பரம்பொருளாகக் கருதப்பட்டு வைணவ சம்பிரதாயத்தில் முதல் தெய்வமாக உயர்த்தப்படுகிறார். இப்படி வேதத்தில் விஷ்ணுவை பிரதானபடுத்தாமைக்கு வேறொரு காரணத்தையும் கூறலாம். வேத பாடல்கள் அனைத்துமே ஒருவரால் உருவாக்கப்படவில்லை ஒரே காலகட்டத்திலும் ஆக்கப்படவில்லை பல ரிஷிகளால் பல காலத்தில் அறியபட்டதே வேதபாடல்களின் தொகுப்பாகும். எனவே ஒவ்வொரு பாடலும் தான் போற்றும் தெய்வமே சிறந்தது உயர்ந்தது இணையற்றது என்று கருதுகிறது. அதனால் மற்ற தெய்வங்களை பாடிய ரிஷிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் விஷ்ணுவை பாடிய ரிஷிகளின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதனால் வேதத்தில் விஷ்ணுவின் தரம் தாழ்த்தபட்டிருப்பதாக கருதமுடியாது. இந்திய தத்துவங்கள் சிந்தனை மரபுகள் மதக் கோட்பாடுகள் உருவாக வேதங்கள் பாதைகளை மட்டுமே அமைத்து கொடுத்து இருக்கிறது மற்றபடி உள்ள வளர்சிகள் அனைத்துமே உபநிஷதங்களாலும் இதிகாச புராணங்களாலும் ஏற்படுத்தப்பட்டிக்கிறது என்பதை உணர்ந்து கொண்டால் எந்த குழப்பம் ஏற்படாது. இனி விஷ்ணுவை பற்றிய வேத வரிகளை பார்ப்போம்.
விஷ்ணுவே நீ தான் அனைத்திலும் உயர்ந்தவன். மிகச் சிறந்த அரியாசனத்தில் அமர்ந்திருப்பவன் ஏனென்றால் இந்த மண்ணில் பிறந்த நாங்கள் பூமியின் அனைத்து பகுதிகளையும் அறிந்து கொள்ள முடியாத அர்பர்களாக இருக்கிறோம். ஆனால் நீ எல்லா இடங்களை அறிந்தவனாகவும் எங்கும் இருப்பவனாகவும் எல்லா இடங்களிலும் வியாபித்துள்ளாய். நீ விஸ்வரூபம் எடுத்து உயரும் போது எல்லாமே உனக்குள் அடங்கி விடுகிறது. உனது விஸ்வ ரூபத்திற்கு எல்லைகளை வகுக்கும் ஆற்றல் எங்களுக்கு இல்லை. அதனால் உனது பெருமையில் சந்தேகப்படும் தகுதி எந்த மனிதனுக்கும் இல்லவே இல்லை. நீ தான் உயர்ந்தவன் சிறந்தவன் என்று உன்னை துதிக்கும் எனக்கு ஆதாரமாக இருப்பதுவும் நீயே ஆகும். நீ பெரு வடிவம் எடுத்து நிர்க்கும் பொழுது உனது சிரசு சொர்க்கத்தையும் தாண்டி மேலே நிற்க்கிறது. உன் பலம் பொருந்திய பாதங்கள் பாதாளத்தையும் தாண்டி கண்ணுக்கு புலப்படாமல் இருக்கின்றன. திசைகள் அனைத்தும் உனது கைகளுக்குள் சிறைபட்டு கிடக்கிறது. மனித சமூகம் தனது சக்திகள் அனைத்தையும் திரட்டிக் கொண்டாலும் உனது பெருமையின் ஒரு துளியை மட்டுமே கணித்து பார்க்க முடியும். இது இப்போது இருக்கும் எங்களின் கருத்துமட்டுமல்ல. எங்களுக்கு முன்னால் இருந்தவர்களும் இப்படித்தான் கருதினார்கள் இனி வரப்போகிறவர்களும் இப்படிதான் கருதுவார்கள்.
விஷ்ணுவை பற்றி இன்னும் சில குறிப்புகள் ரிக் வேதத்தில் உள்ளது. அவற்றில் முக்கியமானதாக இந்த பகுதியை நான் சுட்டி காட்டுவதற்கு வேறொரு காரணம் உண்டு. நமது புராணங்களை பற்றி குறிப்பிடும் பொழுது அவைகள் வேதங்களுக்கான விளக்க உரைகளே என்று பொதுவான கருத்துகள் சொல்லப்படுவது உண்டு.
வேதங்களை புராணங்கள் எந்த வகையில் விளக்குகின்றன என்பதை எல்லோரும் அறிந்து கொள்ளவே இந்த பகுதியை மட்டும் தொட்டேன். விஷ்ணுபுராணத்தில் நாராயணன் வாமன அவதாரமும், திருவிக்ரம் அவதாரமும் எடுத்த விதத்தை வர்ணனை செய்யப்பட்டிருப்பதை எல்லோரும் அறிவீர்கள். அந்த வர்ணனையோடு ரிக் வேத கருத்துகளை பொறுத்தி பார்த்தால் வேத விஷயங்கள் புராணங்களில் எந்த வகையில் எடுத்தாளப்பட்டிருக்கிறது என்பது நன்கு புலனாகும்.
மேலும் ரிக் வேதத்தில் வேதத்தின் பெருமையை பற்றி எட்டாவது மண்டலமும் விடியலை பற்றி ஒன்பதாவது மண்டலமும் சதுரங்கம் முதலான அறிவு சார்ந்த விளையாட்டுகளை பற்றி பத்தாவது மண்டலமும் பேசுகிறது. அவைகள் முக்கியம் வாய்ந்தவைகள் என்று கருதினாலும் கூட நாம் எடுத்திருக்கின்ற மதம் சார்ந்த சிந்தனை ஓட்டத்திற்கு அவைகள் தற்போது தேவைபடாது என்பதனால் அடுத்த வேதமான யஜீர் வேதத்தை பற்றி சிந்திப்போம்.

தொடரும்...




இந்து மத வரலாறு படிக்க இங்கு செல்லவும்அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Neu_006












அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு Sri+ramananda+guruj+3





எனது இணைய தளம் www.ujiladevi.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக