புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_m10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10 
6 Posts - 46%
heezulia
வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_m10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_m10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_m10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_m10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_m10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10 
372 Posts - 49%
heezulia
வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_m10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_m10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_m10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_m10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10 
25 Posts - 3%
prajai
வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_m10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10 
6 Posts - 1%
sugumaran
வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_m10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_m10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_m10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_m10வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Nov 22, 2010 8:19 pm

உலகிலேயே அதிக திரையிசைப் பாடல்களை எழுதியிருக்கும் வாலிப கவிஞர் வாலியின் 80வது பிறந்தநாள் விழா சென்னை நாரத கானசபாவில் 13 .11. 2010 அன்று மாலை நடைபெற்றது. இவ்விழாவில் வாலி எழுதிய திரையிசைப் பாடல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 பாடல்களின் தொகுப்பான “வாலி - 1000” என்ற நூல் வெளியீடும் நடந்தது. நல்லி குப்புசாமி செட்டியார் தலைமையில்,பொதிகை தொலைக்காட்சி நடராஜன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இவ்விழாவில், நடிகர் கமலஹாசன் நூலினை வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக்கொண்டார்.

வாலியின் 80 வது பிறந்த நாள் விழாவில் சோ, நல்லி குப்புச்சாமி, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் வைரமுத்து, பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசிலா, வாணிஜெயராம், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், சூர்யா, சரோஜா தேவி, இயக்குனர் சங்கர், கவிஞர் பழனிபாரதி உள்ளிட்ட பலர் கவிஞர் வாலியை வாழ்த்தி பேசினர்.

இது கவிஞருக்கான விழா என்பதை, நிகழ்ச்சியை கவிதைத் தமிழில் தொகுத்து வழங்கி கவிஞர் நெல்லை ஜெயந்தா நிரூபித்தார். இவரின் தொகுப்புரையே அவ்விழாவினை மேலும் இனிமையுற செய்தது எனலாம்.

கவிஞர் வாலியிடம் வாழ்த்து பெற்றால் வெற்றி நிச்சயம் என்பது தமிழ்த் திரைத்துறையினரின் நம்பிக்கை. அத்தகைய புகழ்மிக்க கவிஞர் வாலியை வாழ்த்தியவர்களின் வாழ்த்துகளின் தொகுப்பு(பூ) நமது நந்தவனத்திலும் பூக்கிறது.



“ஈரெழுத்துக்காரருக்கு வாழ்த்துரை வழங்க ஓரெழுத்துக்காரரை அழைக்கிறோம்” என்று தொகுப்பாளர் நெல்லை ஜெயந்த அழைக்க, வாழ்த்துரை வழங்க வந்தார் சோ.

“நடிகை சரோஜா தேவி என்னிடம் கேட்டார், கவிஞர் அவர்களுக்கு 80 வயதாகிறது. உங்கள் வயது என்ன? என்று. 76 கடந்து 77 ஓடிக்கொண்டிருக்கு என்றேன். அதற்கு அவர் ஒரு மாதிரி பார்த்தார். சரி, சரி ஓடவெல்லாம் இல்லை மொதுவாக நடந்து கொண்டுதானிருக்கு என்றேன்” என்று சோ, தனது பேச்சை துவக்கி அரங்கத்தை சிரிப்பொலியாலும், கைத்தட்டல் ஓசையாலும் நிறைய வைத்தார்.

மேலும் அவர், “கவிஞர் வாலிக்கு வயதின் எண்ணிக்கைதான் 80. ஆனால் அவரின் பாடல்கள் காலம் கடந்தும் நிற்பவை. வாலியால், ராமாயணத்தைப் பற்றியும் எழுத முடிகிறது. முக்காப்புல்லாவும் எழுத முடிகிறது. வாலியால் ஆன்மிகம் பற்றியும் பேச முடியும். நாத்திகர்களை பாராட்டவும் முடியும். அது ஒன்றும் தப்பில்லை.

வாலி மிகவும் கோபக்காரர். கோபக்காரர்கள் திரைத்துறையில் ஜெயிக்கமுடியாது என்பர். ஆனால், வாலி ஜெயித்திருக்கிறார். சோவுக்கு 80 வயதை வரை நண்பராக இருக்கும் ஒருவர் உருப்பட முடியும் என்பதை வாலி நிரூபித்திருக்கிறார். (அரங்கம் கைத்தட்டலில் அதிர்ந்தது.)

கண்ணதாசன் காலத்தில் புகழ் பெற்ற கவிஞராக இருந்தவர் வாலி. கண்ணதாசன் பாடலுக்கும் இவரின் பாடலுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்தது. கவிதை எழுதும் போது வாலி தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார். அவரால் எவரையும் கவர முடியும். வாலி இன்னும் பல ஆண்டுகள் வாழவேண்டும். இன்னும் பால நூறு பாடல்கள் தரவேண்டும்.

இவ்வாறு சோ வாழ்த்துரை வழங்கினார். இவரின் வாழ்த்துரைக்கு பிறகே நல்லி குப்புச்சாமி செட்டியாரின் தலைமையுரையே நிகழ்ந்தது. தலைமை உரையாற்ற நல்லி குப்புச்சாமியை நெல்லை ஜெயந்தா அழைக்கும் போது, “எப்போதுமே தலைமை உரைக்கு பிறகுதான் வாழ்த்துரை. ஆனால், இங்கு வாழ்த்துரைக்கு பிறகே தலைமையுரை. தலைமையை அசைத்து பார்ப்பதுதானே சோவின் வழக்கம்” என்று கூறினார். அதேபோல், பாடகி எஸ்.சுசிலாவுக்கு பொன்னாடை போர்த்தியபோது, “மயிலுக்கு போர்வை போர்த்தியது பேகன். குயிலுக்கு பொன்னாடை போர்த்துவது நல்லி குப்புச்சாமி செட்டியார்,” என்று அவர் கூறியதும் அருமையான தொகுப்புரையாக இருந்தது.

வாழ்த்துரை - பழனி பாரதி :

“பூகம்ப ஓசைக்கு மத்தியிலும்
பூ உதிரும் ஓசை கேட்பவன் - கவிஞன்...!” என்பர்.

வாலி, பூகம்ப ஓசையின் மத்தியில், மகரந்தம் உதிரும் ஓசையையும் பதிவு செய்பவர். தனது இதய அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவமனை செல்ல வேண்டிய நேரத்திலும், சிம்புவின் படம் ஒன்றிற்காய் இளமை துள்ளும் பாடல் எழுதித்தந்தவர்.

எல்லோரும் வாழ்த்து கூறும் இந்நேரம், வானில் இருந்து ஒரு குரல் வாழ்த்துவது காற்றில் கலந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். அந்தக் குரல் கவியரசர் கண்ணதாசன் குரல். அது தமிழை தமிழ் வாழ்த்தும் குரல்.

‘பாரத விலாஜ்’ படத்தில் பாடல் எழுதியதற்காக தேசிய விருது கிடைக்கவிருந்தது. அதை வாலி தேவையில்லை என்றார். அத்தகையவரின் பாடலைத்தான் வானில் நட்சத்திரங்கள் வாயசைத்து பாடுவதாக நினைக்கிறேன். காற்றில் கலந்திருக்கும் வாலியின் பாடல்களை கொண்டே காற்றின் ஈரப்பதம் கணக்கிடப்படுகிறது.

வாழ்த்துரை - எஸ்.பி முத்துராமன் :

வாலி கம்பனுக்கு வெண்பா எழுதியிருக்கிறார். அதில், ஒரு கவிஞன் என்பவன், கம்பனின் கவிதைகளை படித்து கவிதை தெளிவு பெற்ற வேண்டும். அப்போது தான் அவனால் வெற்றிப்பெற முடியும் என வளரும் கவிஞனுக்கு வாலி அறிவுரை கூறியுள்ளார். வள்ளுவரின் அறத்துப்பாலுக்கும் வாலி உரை எழுதியிருக்கிறார்.

அதே போல், வள்ளுவரின் பொருட்பாலுக்கும், இன்பத்துப்பாலுக்கும் வாலி உரை எழுதவேண்டும். வள்ளுவரின் இன்பத்துப்பால் எத்தகைய இனிமையானது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த இனிமைக்கு இனிமை சேர்க்க வேண்டும் வாலியின் உரை. அதற்கு வாலி இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ இறைவன் அருள்புரிய வேண்டும்.

வாலி அப்பலோ மருத்துவமனையில் இருந்தபோது, அவரின் மனைவி ரமன திலகம் மலர் மருத்துவமனையில் இருந்தார். அவரை பார்க்கச் சென்றிருந்த என்னிடம், என்னை பார்க்க பலபேர் வருவார்கள் ஆனால், என் மனைவியை பார்க்க யார் செல்வார்கள். அதனால் என் சார்பாக நீங்கள் சென்று பார்த்து வாருங்கள் என்றார் வாலி.

வாலியின் வெற்றிக்கு பின்னால் உறுதுணையாக இருந்த அவரின் மனைவியார் அப்போது காலமாகிவிட்டார். அதன் பிறகு வாலி மிகவும் நொறுக்கிப் போய்விட்டார். அவரின் கவலைகளை எல்லாம் தீர்ப்பது அவரின் கவிதைகள்தான். அவர் பாடல் எழுதும் போது எல்லாக் கவலைகளையும் மறந்து போகிறார். இதேபோல் வாலி இன்னும் பால நூறு பாடல் எழுத வேண்டும். என முத்துராமன் வாழ்த்தினார்.

சுசிலா அவர்கள், தேசிய விருது பெற காரணமாக இருந்தது வாலி எழுதிய “நாளை இந்த நேரம் பார்த்து” என்னும் பாடலாகும். அதற்கு நன்றி கூறி வாலிக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கினார். வாலி முதன் முதல் எழுதிய பாடலுக்கு குரல்ஒலி கொடுத்து வாலியின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர் சுசிலாதான்.



வாழ்த்துரை - சூர்யா :

அப்பாதான் என்னை கவிஞர் வாலியிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது அவரிடம் ஆசிர்வாதம் வாங்கினேன். அவரின் வாழ்த்துதலால்தான் இன்று இவ்வளவு தூரம் வளர்ந்துள்ளேன்.

நான் முதலில் காதலித்தது ‘ஜோ’வாக இருக்கலாம். ஆனால் பார்த்த வேகத்தில் நான் காதல் கொண்டது வாலியிடம்தான். கவிஞர் வாலி, “ஊக்குவிப்பவன் ஊக்குவித்தால்... ‘ஊக்கு’விற்பவன்கூட ‘தேக்கு’ விற்பான்” என்று கூறுவார். நமக்கு எவ்வளவு பெரிய துயர் என்றாலும், கவிஞரிடம் சென்றால் நமக்கு ஒரு புத்துணர்வு வந்துவிடும்.

நண்பர்கள் என்னிடம், “அடுத்தப் பிறவியில் என்னவாக இருக்க ஆசைப்படுகிறாய் என்று கேட்டிருக்கிறார்கள். அப்போது எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால் இப்போது சொல்கிறேன், “அடுத்தப் பிறவில் கவிஞர் வாலியாக பிறக்கவேண்டும்” என்று கூறி, வாழ்த்துவதற்கு வயதில்லை அதனால் வணங்குகிறேன்.

வாழ்த்துரை - ஷங்கர் :

எஸ். ஏ. சந்திர சேகர், பவித்திரன் ஆகியோர்களிடம் உதவி இயக்குனராக இருந்த போது, கவிஞர் வாலி பாட்டெழுதும் போது கூட இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்போது பல்லவி வரவில்லை என்றால். வெற்றிலைப் பெட்டியை எடுப்பார் வெற்றிலையை போட்டுவிட்டு கழிவறைக்கு சென்று துப்பிவிட்டு வருவார். உடனே பல்லவியையும் எழுதிவிடுவார்.

இப்போது எனது படங்களுக்கு பாட்டெழுதும் போது பல்லவி வரவில்லை என்றால், “அண்ணா வெற்றிலை போட்டு, துப்பி விட்டு வாருங்கள்” என்று நாங்களே சொல்வதுண்டு. அப்படி வெற்றிலைப் போடும் நேரத்தில் வாலி பாடல்களை எழுதிவிடுவார்.

இசைக் கீற்றாக மட்டுமே பாடல் மெட்டு போட்டுவந்த ஏர்.ஆர். ரகுமானை, தத்தகாரம் பாடி மெட்டுப் போடவைத்தவர் வாலி. இன்றுவரை ரகுமான் எல்லாப் பாடலுக்கும் பாடியே மெட்டு போட்டு கொடுக்கிறார். அதற்கு காரணம் வாலி.

முதல் பாடலுக்கு ‘மா’வில் தொடங்குமாறு பல்லவி எழுதுவது வாலி அண்ணாவின் வழக்கம். முக்காப் புல்லா, மாயா மச்சிந்திரா, முஸ்தபா, மரியா மரியா, மாரோ மாரோ, முன்னால் முன்னால் முன்னால் வாடா... இப்படி அவர் ‘மா’ வினை முதலாக வைத்து எழுதிக் கொடுத்த பாடல்கள் எல்லாமே வெற்றிப் படல்களே.

வாழ்த்துரை - வைரமுத்து :

இந்த மேடையை பார்க்கும் போது பேரதிசயமாக இருக்கிறது. பாபநாசம் சிவன் காலத்தில், அவரை வாழ்த்த தியாகராச பாகவதரோ, பி.யூ. சின்னப்பாவோ வரவில்லை. கண்ணதாசனையும் எம்.ஜி.ஆர், சிவாஜி ஒன்றாக வாழ்த்தியதில்லை. ஆனால் வாலியை வாழ்த்த ரஜினியும், கமலும் ஒரே மேடையில் அமர்ந்திருக்கிறார்கள்.

எனது பள்ளிப் பருவத்தில், ‘நான் பார்த்ததிலே அந்த ஒருவனைத்தான்’ என்ற வாலி எழுதிய பாடலை பாடி இரண்டாம் பரிசு பெற்றேன். அந்தப் பாடலுக்கு நடித்த நடிகையான சரோஜா தேவியும் இங்கு இருக்கிறார். இசையமைத்த எம்.எஸ்.வியும், அந்தப் பாடலை எழுதிய வாலியும் இங்கு இருக்கிறார்கள். அந்தப் பாடலை பாடி பரிசுப் பெற்ற மாணவனும் இங்கு இருக்கிறேன்.

கண்ணதாசன் , பட்டுக்கோட்டை போன்றவர்களைப் போல் பாட்டெழுத 100 ஆண்டுகள் ஆகும், என்று சொன்னார்கள். ஆனால் 10 வது ஆண்டே வாலி வந்துவிட்டார். நான் பல இலக்கியங்களை படித்த மாணவன் என்பதால், அந்த இலக்கியத்தை எல்லாம் திரைப்பாடலில் புகுத்த நினைத்தேன். ஆனால், வாலி அவர்கள் எதார்த்தத்தை பாடலில் ஏற்றினார். கண்ணதாசனும் அதையே செய்தார். திரை இசை என்பது பாமரனுக்கும் புரியவேண்டியது. இது கற்றறிந்தவர்களை மட்டும் சென்று சேரவேண்டிய ஒன்றல்ல. உழைப்பவனையும் சென்று சேரவேண்டியது. இந்த உண்மையை எனக்கு கற்றுத் தந்தவர்கள் கண்ணதாசனும் வாலியும்தான்.

‘பூவில், வண்டு தேன் எடுப்பது. கரும்பில் சாறு எடுப்பது’ என்று இரண்டு வகையுண்டு. கரும்பில் சாறு எடுக்கும் போது கரும்பு நசுக்கப்பட்டுவிடும். ஆனால், பூவில் வண்டு தேனை எடுக்கும் போது, பூவுக்கு வலிப்பதும் இல்லை. பூ கசங்குவதும் இல்லை. அப்படி பூவில் தேனை எடுக்கும் வண்டைப் போல் யாருக்கும் நஷ்டம் இல்லாமல், கஷ்டம் இல்லாமல் இனிமையான பாடல் தேனை எடுத்து தரக்கூடியவர் வாலி.

படைப்பளிகளை, கலைஞர்களை போற்றும் தேசம் சிறப்பு பெறும். இன்று வாலியை போற்றுவதால் இந்த தமிழ்தேசம் சிறப்பு பெறுகின்றது. என வாழ்த்தினார் வைரமுத்து.

பாடுநிலா பாலசுப்பிரமணியம், வாலி எழுதிய பாடல்களில், தான் பாடி வெற்றிப் பெற்ற பாடல்களில் மிகச்சிறந்த 10 பாடல்களை பாடிக்கொண்டிருந்தார். ‘மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ’ என்று அவர் பாடிக்கொண்டிருக்கும் போது... அந்த மன்றத்திற்கு திடீர் புயலாக ரஜினியும், வைரமுத்துவும் வந்தார்கள். அவர்களின் வருகையால் ஏற்பட்ட ஆரவாரம் அடங்கிய பின், ‘மீண்டும் சிறிய இடைவேளைக்கு பிறகு’ என்று கூறி அதே பாடலில் இருந்து பாடி தன்குரலால் வாலிக்கு வாழ்த்துத் தெரிவித்தார் தேனையே குடித்த குரலுக்கு சொந்தக்காரர்.




வாழ்த்துரை - ரஜினி :

இந்த விழாவிற்கு, கமல் என்னை அழைத்த போது, ‘என்மகள் திருமணத்திற்கு நேரில் சென்று பத்திரிகை வைத்து அழைத்தும், வராதவரின் விழாவிற்கு நான் வரமாட்டேன் என்று கமலிடம் கூறிவிட்டேன். ஆனால் என்னால் வராமல் இருக்கமுடியவில்லை. வந்துவிட்டேன். இங்குவந்து பார்த்தபின்புதான் தெரிகிறது எவ்வளவு சிறப்பான விழா என்று. ஒருபுறம் பாலு, அருமையாக பாடிக்கொண்டிருக்கிறார். எனக்கு முதன்முதல் குரல் கொடுத்த எம்.எஸ்.விஸ்வநாதன் இங்கு அமர்ந்திருக்கிறார். அவரைப்போல் இன்னும் சிறப்பானவர்கள் பலர் இங்கு வந்திருக்கிறார்கள்.


வாலி எனக்காக எத்தனையோ சிறந்தப் பாடல்களை எழுதியிருக்கிறார். ‘அம்மா என்று அழைக்காத’ பாடலுக்கு இணையான ஒருபாடல் இருக்கமுடியுமா. ராமாயண வாலிக்கு முன்பாக எதிர்த்து நிற்பவர்கள் சக்தியில் பாதி வாலியிடம் சென்று விடும். வாலியே பலசாலி அதில் எதிரியின் பாதி பலமும் சேர்ந்து ஒன்றரை மடங்கு பலசாலியாகிவிடுவார். பிறகு அவரை வெல்ல யாரால் முடியும். அதே மாதிரிதான், வாலி பாட்டெழுத வந்தால் எல்லாம் காலி. அவரது பாட்டில், என்ன ஒரு துடிப்பு. என்ன ஒரு வேகம். இளமை துள்ளல். அதே போல் இன்னும் பல ஆண்டுகள் நலமோடு வாழ்ந்து பாடல்களை எழுத, எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.

வாழ்த்துரை - கமலஹாசன் :

வாலியைப் பற்றி பகிர்ந்து கொள்ள என்னிடம் நிறைய நினைவுகள் இருக்கின்றன. ஆனால் அந்த அளவிற்கு நேரம் இல்லை. அவருக்கு இப்போது 80 வயது அல்ல. ஆயிரம் வயது. அத்தனை ஆண்டுகள் அவர் புகழோடு வாழ வேண்டும். அப்படி வேண்டிக் கொள்கிறவர்களில் நானும் ஒருவன்.

வைரமுத்து சொன்னது போல், பூவில் தேனெடுப்பதுக்கு பதில், வாலி ஒரு கரும்பென்று தெரியாமல் கடித்து பல்லுபோன வண்டு நான். அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு வாலி முதலில் ஒரு பாடலை எழுதிக் கொடுத்தார். அதைவிட இன்னும் நன்றாக வேண்டுமென்று கேட்டுவிட்டேன். உடனே வாலி கோபித்துக்கொண்டார். அதன் பிறகு ஒருவழியாக, அவரது வீட்டிற்கே சென்று பாட்டுக்கேட்டு வாங்கினேன். அப்போது என்னை மனசுல வைத்து அவர் எழுதியதுதான், “ உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன், என்னை நினைச்சேன் நானும் சிரிச்சேன்” பாடல். வாலி அந்தப் பாட்டை எழுதிக்கொடுத்துவிட்டு அந்தப் பாட்டுக்கு சிறந்த பாடலுக்கான விருதையும் வாங்கிட்டு போய்விட்டார்.

அந்தப் பாடலில், ‘வானம் போல் சில பேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்’ என்ற ஒரு வரி எழுதியிருப்பார். அதைப் போல், வானமாக வாலி இருக்கிறார். நாங்கள் எல்லாம் அந்த மழையில் பூத்த பூக்களாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். அதில் இப்போது நிறைய பேர் தேன் எடுத்து செல்கிறார்கள்.

எனது கவிதையையும் வாலி அவர்கள் படித்துப் பார்க்கும் ஒரு தர்ம சங்டமான நிலையும் ஏற்பட்டிருக்கு. நான் கவிதை எழுதி காட்டியபோது என் கவிதைகளை படித்து பிழை சொல்லாமல் பாராட்டியிருக்கிறார். தைரியமாக எழுது. கண்ணதாசன் பட்டுக்கோட்டைக் காலத்திலேயே நான் எழுதி நிலைச்சு நிற்கலையா. அதே மாதிரி, எதைப் பத்தியும் பயப்படாமல் உனக்கு என்ன தோன்றுதோ அதை செய் என்றார். இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பவர் வாலி. தைரியம் அளிப்பவர் வாலி.

அனைவரின் வாழ்த்துகளையும் பெற்ற வாலியின் ஏற்புரை :



எனது நூலை வெளியிட்ட கமல், ஷங்கருக்கு நன்றி. என்னை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கு நன்றி.எனது பாடலான “கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்” என்ற பாடல் இன்றும் உயிரோட்டமாய் இருப்பதற்கு டி.எம்.சௌந்தரராஜன்தான் காரணம். நான் திரைத்துறைக்கு வருவதற்கும் அவர்தான் காரணம். சுசிலா எனது முதல் பாடலை பாடி என் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர். இருவரும் என்னை வாழ்த்த வந்திருக்கிறார்கள் அவர்களுக்கு என் நன்றி.

இந்த நிகழ்ச்சியை முடிவு செய்ததும் முதலில் சரோஜா தேவியைத்தான் அழைத்தேன். சொன்னதும் மகிழ்ச்சியோடு வந்திருக்கிறார். “படகோட்டி” படத்தில் நான் எழுதிய பாடல்கள் இன்றும் உயிரோட்டமாய் இருப்பதற்கு அவர்தான் காரணம். முந்தானைகூட சிறிதும் ஒதுங்காமல் நடித்தவர். தனது முகப்பாவத்தினாலேயே எல்லாரையும் கட்டிப்போட்டவர் சரோஜா தோவி. (ஆமாம், நெல்லை ஜெயந்தா கூறியது போல், கறுப்பு வெள்ளைக் காலத்தில் கலராக தெரிந்தவர் இந்த கன்னடத்து பைங்களி.)

ரஜினியின் மகள் திருமணத்திற்கு வரவில்லை என்று சொல்லி அவர் வருத்தப்பட்டார். எனது மனைவி இறந்த முதல் ஆண்டு நினைவு நாளன்று ரஜினிகாந்தின் மகள் திருமணம் நடைபெற்றதால் என்னால் செல்ல முடியவில்லை. அதை அவரிடமே ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். நான் போகாவிட்டாலும் அவரது மகள், மருமகன் இருவரையும் எல்லாம் வல்ல முருகன் அருளால் பல்லாண்டு வாழ்க என்று மனதால் வாழ்த்தினேன்.

கமலஹாசன் கலைஞானி மட்டுமல்ல. கவிஞானியும்கூட. தமிழை சரியாக உச்சரிக்கத் தெரிந்தவர். டி.கே.சகோதரர்கள் குழுவில் இருந்து கலை உலகுக்கு வந்தவர்.மொழியை உச்சரிக்க தெரியாதவர்கள் அங்கிருந்து வர முடியாது. இந்த விழாவுக்கான அழைப்பிதழை கமலிடம் கொடுக்க நேரம் கேட்டபோது என் வீட்டுக்கே வந்து அழைப்பிதழை பெற்றுக் கொண்டார்.

ரஜினி, கமல் போன்றவர்கள் புகழின் உச்சியில் இருப்பதற்கு காரணம் அவர்கள் வேர்களை மறக்காததுதான். எனக்கு இன்று இருக்கும் பணம், வசதிகள் அனைத்தும் எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட பிச்சையே. அவரால்தான், சோற்றுக்கே வழியில்லாமல் இருந்தவன். சோறு திண்ணவே நேரம் இல்லாதவன் ஆனேன். 20ஆம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.தான். அவருக்கு நிகரான ஒரு ஆள் இன்னும் பிறக்கவில்லை. (கர்நாடக இசை என்று கூறுவது போல், மெல்லிசை என்று கூற வைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவருக்கு 2 லட்சம் அன்பளிப்பை நன்றிக்கடனாய் வாலி வழங்கினார்.)



ரஜினி என்னை துர்வாசகரை போல் கோபப்படுவதாக கூறுகிறார். இந்த‘துர்’வாசகனிடமும் ஒரு நல்வாசம் உண்டு. ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் ஆகிய படங்கள் ரஜினியின் நடிப்புக்கு சிறந்த உதாரணம். ரஜினி தனக்கென ஒரு தனி வழியை அமைந்துக் கொண்டு அதில் அவர் போகிறார். கமல், அவருக்கென ஒரு வழியை அமைத்துக்கொண்டு அந்த வழியில் அவர் போகிறார். இருவருமே தமிழ் திரைப்படத்தை உலக அளவில் உயர்த்தி வருகிறார்கள். ரஜினி கமலுக்கு அடுத்து சூர்யா அந்த இடத்தில் இன்று இருக்கிறார்.

வைரமுத்துவும் நானும் ‘மோதுறோம் மோதுறோம்’ என்கிறார்கள். அந்த வைரமுத்து எனக்கு மோதிரம் அணிவிதுள்ளார்.யாரும் வெற்றியை மண்டைக்குள் ஏற்றிக் கொள்ளக்கூடாது. அதே போல், தோல்வியையும் மனதுக்குள் போட்டுக் கொள்ள கூடாது.

வெற்றியை மண்டைக்குள் போட்டுகொண்டால் கர்வம் வந்துவிடும், தோல்வியை மனதுக்குள் போட்டுக்கொண்டால் கவலை வந்து விடும். இந்த இரண்டாலும் அழிவு வந்துவிடும்.

என்னை கோபக்காரன் என்கிறார்கள். கோபப் படாமல் இருக்க நான் ஒன்றும்
மரவட்டையல்ல மண்புழுவும் அல்ல. கோபம் வேண்டும். கர்வம் வேண்டும். அப்போது தான் நமக்குள் ஒரு வேகம், வெறி இருக்கும். தான் கர்வப்படுவது தப்பில்லை. தனது கர்வத்தை அடுத்தவர் மண்டையில் ஏற்றக்கூடாது.

வைரமுத்துவும் அப்படித்தான் தனது மண்டைக்குள் கர்வம் வைத்துள்ளார். அது வேண்டும். அதுதான் அவரின் வெற்றிக்கு ஆதாரம்.

இவ்விதம் தன்னை பாராட்டி வாழ்த்தியவர்கள் அனைவரையும் கவிஞர் வாலி நன்றி பாராட்டினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக