புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_vote_lcapஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_voting_barஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_vote_lcapஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_voting_barஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_vote_lcapஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_voting_barஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_vote_lcapஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_voting_barஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_vote_lcapஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_voting_barஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_vote_rcap 
10 Posts - 4%
prajai
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_vote_lcapஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_voting_barஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_vote_lcapஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_voting_barஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_vote_lcapஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_voting_barஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_vote_lcapஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_voting_barஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_vote_lcapஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_voting_barஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_vote_lcapஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_voting_barஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_vote_lcapஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_voting_barஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரெல்லை - சில ஞாபகமீட்புக்கள்


   
   
jeevaraj
jeevaraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 14/08/2009
http://www.geevanathy.com/

Postjeevaraj Sat Aug 15, 2009 10:48 pm

ஊரெல்லை - சில ஞாபகமீட்புக்கள்

ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் 5uoi8z
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் 2ufa68m
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் 207xg85
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் 6quxwn


படங்களில் நீங்கள் காண்பது தம்பலகாமத்தின் (திருகோணமலை , இலங்கை) எல்லைப்பிரதேசம். திடல்களாகக் காணப்பட்ட ஊர்மனைகள் முடிவடைந்து, ஒருசில தனித்த வீடுகளுடன், பசுமைநிறைந்த வயல்வெளிகளும் மறைந்துபோக சதுப்பு நிலவெளிகளாகக் காணப்படுகிறது எங்கள் ஊரெல்லை.



நன்றாக ஞாபகம் இருக்கிறது 1990ம் ஆண்டு வைகாசிப் பொங்கலுக்கு அடுத்த நாள் நள்ளிரவு முதன்முதலாக இந்த எல்லையைத் தாண்டி அகதிகளானோம்.


1985 முதல் பலமுறை உயிர்காக்க பாதுகாப்பான இடமாக நாங்கள் கருதிய ஐயனார் கோயில்த் தீவிற்கு மூட்டை முடிச்சுக்களுடன் ஓடுவதும், சிலநாட்களின் பின் மீளத்திரும்பி வருவதுமாக இருந்து வந்தோம்.


ஆனால் இது அவ்வாறிருக்கவில்லை. வழக்கம் போலில்லாமல் உயிர்குடிக்கும் வேட்டுச் சத்தங்களும், எறிகணைவீச்சுக்களும் ஆரம்பித்தபோதே மிகச் செறிவாக இருந்தமையால் நீண்ட மனப்போராட்டத்துக்குப் பின் ஊர்விட்டகலுவதாக முடிவெடுக்கப் பட்டது.


அப்போது எனக்கு 12 வயது. இருந்தும் பயம்எதுவும் இருக்கவில்லை. மூட்டைமுடிச்சுக்களுடன் அடிக்கடி ஓடுவது பழக்கமாகிப்போயிருந்தது.


நள்ளிரவில் ஆரம்பித்த அந்த மிகக் கடுமையான நடைப்பயணம் அதிகாலை 4 மணிக்கு சூரங்கல் எனும் இடத்துக்குச் சென்றடைந்ததைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறைவுக்கு வந்தது.


அதிகளவில் சிறுவர்களைக் கொண்டிருந்த குடும்பங்களே முதலில் இடம் பெயர்ந்தன. அதனால் ஊரில் நிறையப்பேர் எஞ்சியிருந்தார்கள். அன்றைய ஊரின் நாட்குறிப்பு உதிரத்தால் எழுதப்பட்டதை பின்னர் அறிந்து கொண்டோம்.


படமெடுப்பதற்காக தரித்துநின்ற சில நிமிடங்களில் அனைத்து ஞாபகங்களும் அலையலையாய் வந்துபோனது.


சூரங்கல் பிரதேசத்தில் நாங்களாகவே களிமண்ணில் கல்லறுத்து, தென்னோலை வேய்ந்த குடிசை அமைத்திருந்தோம். மழைநிறைந்த ஒருநாளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஈரமூறிய பாயில் காய்ச்சலில் கிடக்க, குடிசைக்குள் மழைவெள்ளம் வராமல் விடியவிடிய மண்ணணை கட்டிய காட்சிகள் மனதில் படமாக வந்து போகிறது. ம்.. ம் ..இன்னும் இப்படி நிறைய...


மீண்டும் ஊர்திரும்பியபோது, சொந்த ஊரில் 6000 பேரைக்கொண்டு அமைக்கப்பட்ட அகதிமுகாமாக எமது பாடசாலை மாறியது வாழ்வில் மறக்கமுடியாத கொடுமை. சொந்த ஊரில் படித்த பாடசாலையில் பொலித்தீன் பைகளுடன் சீனி, அரிசி, பருப்புக்காக வரிசையில் நின்ற ஞாபகங்கள் வந்து போகிறது. வாழ்வின் மிகமோசமான காலப்பகுதி அது. அப்போது தற்காலிகமாக ஆதிகோணேஸ்வரர் ஆலயத்திலுள்ள வாகைமரத்தின் கீழ் எங்கள் படிப்புக்கள் தொடர்ந்தது. இரண்டு வருடங்கள் அந்த முகாம் இயங்கியது அந்த நாட்கள் மிகக் கொடுமையானவை.


நீண்ட நேரம் புகைப்படக்கருவியுடன் அந்த இடத்தில் நிற்பதை உணர்ந்து திடுக்கிட்டு பழைய நினைவுகளில் இருந்து சுதாகரித்துக் கொண்டு வீடுதிரும்பினேன்.


என் அன்றைய பொழுதினை நிறைத்திருந்தது பழைய ஞாபகங்கள்..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 15, 2009 10:57 pm

படித்து முடித்ததும் பாராட்டக்கூட மனமில்லை! மனத்தில் இனம்புரியா தாக்கத்தை ஏற்படுத்தி, மூளைச் செல்களை சுக்குநூறாக உடைத்தெரிந்துவிட்டது தங்களின் கட்டுரை!

அழுகை நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 15, 2009 11:01 pm

முதல் பதிவிலேயே எங்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட என் இனிய நண்பர் ஜீவராஜ் அவர்களை ஈகரை நண்பர்கள் சார்பில் வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறேன்.

jeevaraj
jeevaraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 14/08/2009
http://www.geevanathy.com/

Postjeevaraj Sat Aug 15, 2009 11:05 pm

நன்றி நண்பரே
பகிர்கையில் குறைகிறது துன்பம்
உங்கள் அன்பிற்கும் ,ஆதரவிர்க்கும் நன்றி சிவா

jeevaraj
jeevaraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 14/08/2009
http://www.geevanathy.com/

Postjeevaraj Thu Aug 20, 2009 4:14 pm

இடப்பெயர்வு


அவசரத்தில் அவிழ்க்காமல்
விட்டு வந்த மாடு

பூட்டிய கூட்டுக்குள்
கோழியும் , குஞ்சும்

உலையில் புட்டு
வரும்போது அரையவியல்
எரிந்துபோயிருக்கும் இப்போது

யார் சோறுவைக்கப்போகிறார்கள்
பூனைக்கும் , நாய்க்கும்

வெட்டி அடுக்கியமாதிரி
வேலிக்கான கதிகால்கள்

வாஞ்சையுடன் வளர்த்த பயிர்கள்
வாடிப்போய்விடும் பராமரிப்பில்லாமல்

பாழாய்ப்போன யுத்தம்
வீடுகூடப் பூட்டவில்லை

வாழ்ந்தவரெல்லாம் மாண்டுவிட
மிஞ்சி இருப்பது நான்மட்டும்தானே

உயிர் பிழைக்க நானும்
ஊர் பெயர்ந்தால்
வீடென்ன செய்யும்.


மீள்குடியமர்வு



சொல்லிலடங்காத
சோகங்களின்
தொகுப்பு

பட்டவர் அன்றி
மற்றவர் புரிந்திடா
உணர்ச்சிகளின் குவியல்


கூரைபிளந்து
வானம் பார்த்திருக்கும்
வீடு


செடிகொடி வளர்ந்து
காடாய்க் கிடக்கும்
வளவு


குதுகலத்தோடு வாழ்ந்த
குடிதனின் நிலைகண்டு
குளமாகும் கண்கள்


அடியெடுத்துவைக்கையில்
அன்னியப்படும்
பயிர் நிலங்கள்


சிறப்பாய் வாழ்ந்த நாட்கள்
சிந்தையில்
வட்டமிட்டிட


சின்னதில் செய்திட்ட
குறும்பினைச் சொல்லிடும்
சுவர்கள்


இருப்புக்கும்
இழப்புக்குமிடையில்
அல்லல்ப்படும் மனம்


சிரிப்பும், அழுகையும்
சேர்ந்தேவரும் - ஆம்
மீள்குடியமர்வென்பது எங்களுக்கு


மரணிப்புக்கு
முன்னால் கிடைக்கும்
மறுபிறப்பு.

ஊரெல்லையில் நின்று ஞாபகங்களை இரைமீட்டுக்கொண்டிருந்தபோது கட்டுக்கடங்காமல் மனதில் வந்துவிழுகின்றன வேதனை நிறைந்த வார்த்தைகள். வாழ்க்கை மட்டும் தொலைந்துபோயிருக்கிறது.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Aug 20, 2009 4:28 pm

jeevaraj wrote:இடப்பெயர்வு




சிரிப்பும், அழுகையும்
சேர்ந்தேவரும் - ஆம்
மீள்குடியமர்வென்பது எங்களுக்கு


மரணிப்புக்கு
முன்னால் கிடைக்கும்
மறுபிறப்பு.

ஊரெல்லையில் நின்று ஞாபகங்களை இரைமீட்டுக்கொண்டிருந்தபோது கட்டுக்கடங்காமல் மனதில் வந்துவிழுகின்றன வேதனை நிறைந்த வார்த்தைகள். வாழ்க்கை மட்டும் தொலைந்துபோயிருக்கிறது.



அருமயாக உள்ளது அண்ணா

jeevaraj
jeevaraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 14/08/2009
http://www.geevanathy.com/

Postjeevaraj Sun Nov 22, 2009 6:30 am

நன்றி நண்பரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக