ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு.. Poll_c10கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு.. Poll_m10கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு.. Poll_c10 
Dr.S.Soundarapandian
கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு.. Poll_c10கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு.. Poll_m10கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு.. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு..

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு.. Empty கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு..

Post by senthazalravi Sat Aug 15, 2009 7:36 pm

தங்கத்தமிழகத்து திருக்கோவிலூர் என்னோட சொந்த ஊருங்க...அதான் இந்த குறிஞ்சி கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த, அதாங்க, சாப்புடாம உண்ணாவிரதம் இருந்து செத்துப்போன கபிலர் குன்று இருக்குதே, அந்த ஊரு...

மூவேந்தர் முற்றுகை படையெடுப்புல செத்துப்போன கடையெழு வள்ளள்கள்ள ஒருத்தர் பாரி, அவரோட மகளுங்க அங்கவை, சங்கவைய திருக்கோவிலூர் ராஜா திருமுடிக் காரிக்கு கட்டிகொடுத்துட்டு, நன்பனுக்கு செய்துகொடுத்த கடமை முடிஞ்சுதுன்னு அந்தமாதிரி செத்துப்போனாராம் கபிலர்..இந்த காரியும் கடையெழு வள்ளல் தானே, ஏழாவது வகுப்புல படிச்ச நியாபகம் இருக்குதுங்களா ?

அங்கிருந்து ஒரு 10 கிலோமீட்டர் மினிபஸ்ஸில் போனா நெடுங்கம்பட்டு என்ற கிராமம் வருமுங்க...அந்த காலத்துல திருக்கோவிலூரு ராஜா புலவருங்களை ஊருகளுக்கு பேரு வெக்கச்சொல்லி அனுப்புவாங்களாம்...நெடு நெடுன்னு நடந்து வந்ததால இந்த ஊரு நெடுங்கம்பட்டு, ஆடு மேஞ்சு கொழுந்து இல்லாத செடிங்களை பார்த்த ஊரு கொழுந்திராம்பட்டு, சடையை கட்டிக்கிட்டு ஒரு பொண்ணு நடந்து போன ஊரு சடகட்டி, அத்திமரம் இருந்ததால அத்திப்பாக்கம், ஆத்தோரம் மணல் அள்ளிக்கிட்டு மக்கள் இருந்த எடம் மணலூர்பேட்டை, அப்படீன்னு புலவருங்க பேரு வச்சாங்க அந்த காலத்துல...

இந்த கதை அதை பத்தி இல்லைங்க...ஒரு சம்பவத்தை பத்தி..இந்த சம்பவம் நடந்து ஒரு 8 வருடம் இருக்கும்...

எங்க தாத்தா போய் சேர்ந்த பிறது - நெடுங்கம்பட்டு கிராமத்தில எங்க கிழவி மட்டும் தனியா இருந்தது...நிலத்தை பார்க்கனும் இல்லையா...

நாம அப்பப்போ விசிட் அடிக்கிறது...காரணம் இரண்டு - ஒன்று - சுருட்டு மிலிட்டரி தாத்தாவோட சீட்டாட்டம்...

பத்து ரூவாயை வைத்து - கிழவனார் ஏமாந்தா - சுத்தி போதையில் ஆடுறவனுங்க கண்ணுலே மண்ணை தூவி - 50 ரூபாயை ஜெயிச்சிடலாம்...எல்லாம் திருட்டு ஆட்டம்தான்...கார்டுகளை ஒளித்து - மறைத்து - எப்படியாவது ஜெயிக்கிறது...

மற்ற காரணம் - நல்ல வெடக்கோழிகளை பங்காளிங்க உதவியோட அமுக்கி - காட்டுல கொண்டுபோய் வறுத்து திங்கறது.

இந்தமாதிரி தான் ஒருநாள்...கிளம்பி போறேன் கிராமத்துக்கு...

கிழவி வீட்டுலே பையை போட்டுட்டு - பத்துரூவாயை பாக்கெட்டுல சொருவிக்கிட்டு சுருட்டு கிழவனார் வீட்டுப்பக்கம் போறேன்.

தெரு முக்குல - என்னோட கண்ணு நெலை குத்துது.ஆகா.!!!



நல்ல எளஞ் செவப்பு கலர்ல - நல்ல வெடச்சாவல் ஒன்னு மேயுது.

அட இன்னாடா இது...போனவாரம் கண்ணுல படல..சந்தையில எவனோ புதுசா வாங்கிட்டு வந்திருக்காண்டோய்.

ஆவறதில்லையே இது...என்று சீட்டாட்ட கிளப்புக்குள் ( நம்ம கிழவனார் வீடுதான்) நுழைகிறேன்.

ஆட்டத்துல மனசே போவல...எப்படி அந்த கோழியை பிடிச்சு மொக்கறது (திங்கறது) என்பதுலேயே சுத்துதுடோய்.

ஆச்சு...சுருட்டை இழுத்துக்கிட்டே கிழவனார் - ரம்மி ஆட்டத்துல என்னை ரெண்டு புல்லு தூக்கினார். பிறவு கடைசியா ஒரு ஸ்கூட் அடிச்சார். பத்துரூவா போச்சு.

கிழவணார் கிட்ட திருடுன ஒரு அரை சுருட்டை பத்தவச்சிக்கிட்டே - யோசனையா வரேன்.

நம்ம பங்காளி கோபு - திருக்கோவிலூர்ல இருக்கான்.

ஒம்போது மணி மினி பஸ் டிரைவர் அண்ணாச்சிக்கிட்ட தகவல் சொல்லிவிடுறேன்.

போன் எல்லாம் ஏது எங்கூருல..அதுலயும் கோடு வேர்டு தான்.

அண்ணாச்சி.நாளைக்கு முனியப்பசாமிக்கு படையல் போடனும்.என் பங்காளி கோபு இல்லைன்னா கோபி - பஸ்டாண்டுல திரியுவானுங்க.கொஞ்சம் சொல்லிவிட்டுடுங்க..காலையில வெரசா வந்துடச்சொல்லுங்கப்பு.

என்றேன்.

கிழவி வீட்டுக்கு போய் - அது வைத்திருந்த காரக்குழம்பை ஒரு வெட்டு வெட்டிட்டு - அந்தி சாயும் நேரத்தில் குடிசை வீட்டு முற்றத்தில் கட்டையை சாய்த்தேன்..

டேய்.டேய்.ஏந்திருடா என்று கோபுவும் ( இப்போது ஊரில் விவசாயம் பார்க்கிறார்)- கோபியும் ( இப்போது இவர் போலிசாக இருக்கிறார்) எழுப்பினாங்க..

காலையில் ஏழு மணிக்கு முதல் பஸ்ஸை பிடித்து வந்துட்டானுங்க...

டேய்..எந்திரிடா..பொட்டையா இல்ல சாவலா, உடம்பு எத்தனை கிலோ தேறும், தொடை நல்லா இருக்கா ?

என்னம்மோ உலக அழகி போட்டியில கலந்துக்கப்போற கோழி மாதிரி ஆர்வமா விசாரிக்கானுங்க.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....கிழவி இன்னும் கொல்லிக்கு போவல...கொஞ்சம் இருங்க டோய்.என்றேன்..

கிழவி கிளம்பியது.

தூம்பாவுல இருந்து கொஞ்சம் அரிசியை எடுத்து வாயில் போட்டுக்கொள்கிறேன்...காலையில் பல்லு விளக்கவில்லை.

அவ் அவ் அவ் அவ் என்று அரிசியை மெல்லாமல் குதப்புகிறேன்.

மெல்ல கிளம்பி போகிறோம் மூன்று பேரும்.

கோபி - பொட்டிக்கடைக்கு போயி எண்ணையை ஒரு கவரில் கட்டிக்கோ - மொளகாத்தூள் ஒரு கவரில் வாங்கிக்கோ - அப்படியே காட்டு கொல்லிக்கு வந்திடு...நம்ம இடத்துக்கு...என்றேன்.

உப்பு - மஞ்ச தூள் ??? என்றான் கோபி.

அது ஏற்க்கனவே பாலித்தீன் கவரில சுத்தி வைச்சிருக்கோம்.என்றான் கோபு.

டேய் கோழியக்காட்டுங்கடா...கோபு அவசரப்படுறான்.

இரு ராசா.கொஞ்சம் பொறு.இது நான்.

ஆங்...அதோ மேயுறான் பாரு.

சிவப்பு நிறத்தில் கும்முனு இருக்கு சாவல்.

அப்படியே வாயில் குதப்பிக்கிட்டிருந்த அரிசியை துப்புறேன்.கோழிக்கு வெகு அருகில்..

பொ..பொ...பொ...பா.

அரிசி கிட்ட வருது சாவல்.

லபக்..லபக் னு பொறுக்குது.

அஞ்சே நிமிஷம்..நாங்க அப்படியே பெறாக்கு பாத்துக்கிட்டு நிக்குறோம். ஏதோ எங்களுக்கும் இந்த கோழிக்கும் சம்பந்தம் இல்லாதது மாதிரி..

கோழி இப்ப லைட்டா தள்ளாடுது...பல்லு விளக்காத வாயில் புழுங்கல் அரிசியை போட்டு கொஞ்சம் குதப்பி, வாயிலேயே அந்த அரிசியை வைத்திருந்து அதை கோழி தின்றால், கோழிக்கு மயக்கம் வந்து விழுந்துவிடும். என்ன ஆசிட் இருக்கோ அதில் ? கோழிக்கு அதுதான் சயனைடு..

தொடரும்...
avatar
senthazalravi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு.. Empty Re: கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு..

Post by Guest Sat Aug 15, 2009 7:38 pm

சூப்பர்

மிகவும் அருமையான நகைசுவை.

தொடர்ந்து அள்ளி விட்டுக்கிட்டே இருங்க சார்.

பரிசை எப்டியாவது தட்டிருங்கோ
avatar
Guest
Guest


Back to top Go down

கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு.. Empty Re: கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு..

Post by senthazalravi Sat Aug 15, 2009 7:42 pm

கண்டிப்பா ஹி ஹி
avatar
senthazalravi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு.. Empty Re: கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு..

Post by Guest Sat Aug 15, 2009 7:46 pm

senthazalravi wrote:கண்டிப்பா ஹி ஹி

ஆஹா

ஒரு குறிக்கோளோடுதான் வந்திருக்கீங்க போல.

செரி. எப்டியோ

வெற்றி நிச்சயம்.

அதை செயல்படுத்துவது உங்கள் சாத்தியம்

கவிதை போட்டியையும் விட்ராதீங்க.

ஒங்க கவிதை வரிகள் அப்படியே நெஞ்சிலே (என்னுடைய நெஞ்சில இல்லீங்க. நடுவர்கள் நெஞ்சில) ஈட்டி மாதிரி பாயணும்.

அந்த மாதிரி யோசிச்சி எழுதுங்க செரியா.
avatar
Guest
Guest


Back to top Go down

கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு.. Empty Re: கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு..

Post by senthazalravi Sat Aug 15, 2009 7:50 pm

முருகனடிமை.

மற்றவர்கள் நல்லா இருக்கனும் என்று எப்போதும் எண்ணுவேன்.

கவிதை எல்லாம் நான் எழுதறதில்லை ஹி ஹி
avatar
senthazalravi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு.. Empty Re: கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு..

Post by Guest Sat Aug 15, 2009 7:52 pm

senthazalravi wrote:முருகனடிமை.

மற்றவர்கள் நல்லா இருக்கனும் என்று எப்போதும் எண்ணுவேன்.

கவிதை எல்லாம் நான் எழுதறதில்லை ஹி ஹி


ரவி சார்,

அடியேன் சும்மா ஜாலிக்கு சொன்னேன்.

தங்களை பத்தி அடியேனுக்கு தெரியாதா தாங்கள் ஒரு சிறந்த மனிதர் என்று.

இருந்தாலும் பரிசுகளை விட்ராதீங்கோ அன்பு மலர்
avatar
Guest
Guest


Back to top Go down

கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு.. Empty Re: கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு..

Post by senthazalravi Sat Aug 15, 2009 7:53 pm

முருகனடிமை

பழனிக்கு எப்போது கடைசீயாக போனீர் ?
avatar
senthazalravi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு.. Empty Re: கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு..

Post by Guest Sat Aug 15, 2009 8:00 pm

பழனியை இதுவரையில் பார்த்ததே கிடையாது.
திருச்செந்தூருக்குத்தான் அடிக்கடி செல்வேன்.
கடந்த வாரம் தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூருக்கும் பின்னர் திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடிக்கும் பாதயாத்திரை மேற்கொண்டேன். கால் உடைந்தே விடும் என்று நினைத்துதான் புறப்பட்டேன். ஆனால் அந்த மாதிரி எதுவும் நிகழவில்லை. எல்லாம் முருகன் செயல். இரண்டு நாட்களை இதற்காக செலவழித்தேன்.
இருப்பினும் என்னை விட வெகு தூரத்திலுருந்தேல்லாம் பக்தர்கள் நடந்து வருகிறார்கள். இருப்பினும் என்னுடைய வாழ்வில் இப்படி இதுவரையில் நடந்ததில்லை (walking)
avatar
Guest
Guest


Back to top Go down

கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு.. Empty Re: கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு..

Post by singarakannan Sat Aug 15, 2009 8:09 pm

மு௫கனடிமை wrote:. இருப்பினும் என்னுடைய வாழ்வில் இப்படி இதுவரையில் நடந்ததில்லை (walking)
மகிழ்ச்சி
singarakannan
singarakannan
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 21/06/2009

Back to top Go down

கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு.. Empty Re: கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு..

Post by ramesh.vait Sat Aug 15, 2009 8:10 pm

புன்னகை
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு.. Empty Re: கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum