ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் துப்பாக்கி சுடுதல், தடகளத்தில் கிடைத்தது

2 posters

Go down

ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் துப்பாக்கி சுடுதல், தடகளத்தில் கிடைத்தது Empty ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் துப்பாக்கி சுடுதல், தடகளத்தில் கிடைத்தது

Post by சிவா Mon Nov 22, 2010 2:11 pm

ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் துப்பாக்கி சுடுதல், தடகளத்தில் கிடைத்தது First

ஆசிய விளையாட்டில் நேற்று ஒரே நாளில் இந்தியா 3 தங்கம் வென்றது. துப்பாக்கி சுடுதல் மற்றும் தடகளத்தில் இந்த பதக்கங்கள் கிடைத்தன.

ஆசிய விளையாட்டு

45 நாடுகள் பங்கேற்றுள்ள 16-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் குவாங்சு நகரில் நடந்து வருகிறது. மற்ற எந்த நாடும் நெருங்க முடியாத அளவுக்கு சீனா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.

600 வீரர், வீராங்கனைகளுடன் களம் இறங்கியுள்ள இந்தியா முதல் 9 நாட்களில் வெறும் 2 தங்கப்பதக்கமே (பில்லியர்ட்சில் பங்கஜ் அத்வானி, துடுப்பு படகு போட்டியில் பஜ்ரங்லால் தாக்கர்) வென்று இருந்தது. இந்த நிலையில் இந்த ஆசிய விளையாட்டு திருவிழாவில் நேற்றைய 10-வது நாள், இந்தியாவுக்கு தித்திப்பான நாளாக அமைந்தது. ஒரே நாளில் 3 தங்கப்பதக்கம் கிடைத்தது.


துப்பாக்கி சுடுதல்

ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் துப்பாக்கி சுடுதல், தடகளத்தில் கிடைத்தது Sp02

துப்பாக்கி சுடுதலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காமன்வெல்த் நாயகன் ககன்நரங், பீஜிங் ஒலிம்பிக் ஹீரோ அபினவ் பிந்த்ரா ஆகியோர் ஏமாற்றிய நிலையில், இந்த ஆசிய விளையாட்டில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு முதலாவது தங்கப்பதக்கத்தினை ரஞ்சன் சோதி பெற்றுத் தந்துள்ளார்.

ஆண்களுக்கான டபுள் டிராப் தனிநபர் பிரிவில் கலந்து கொண்ட ரஞ்சன் சோதிக்கு, மற்ற வீரர்கள் கடுமையான சவால் கொடுத்தனர். இதன் தகுதி சுற்றில் ரஞ்சன் 139 புள்ளிகள் பெற்றார். அதே சமயம் சீன வீரர் பான் குயாங் அவரை விட 4 புள்ளிகள் அதிகம் பெற்று முன்னிலை கண்டார்.

இதை தொடர்ந்து தகுதி சுற்றின் மூலம் முன்னேறிய 6 பேர் இடையே இறுதிசுற்று நடந்தது. இதில் துல்லியமாக சுட்ட ரஞ்சன் மேற்கொண்டு 47 புள்ளிகளை சேர்த்து மொத்தம் தனது புள்ளி எண்ணிக்கையை 186 ஆக உயர்த்தினார். அதே சமயம் குயாங், இறுதி சுற்றில் சோடை போனார். இதில் அவருக்கு 38 புள்ளிகளே கிடைத்தன. அவரது மொத்த புள்ளிகள் (181) எதிர்பார்த்ததை விட சரிந்ததால் வெண்கலம் கூட கிடைக்கவில்லை.


ரஞ்சன் சோதிக்கு தங்கம்

ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் துப்பாக்கி சுடுதல், தடகளத்தில் கிடைத்தது Sp03

முடிவில் ரஞ்சன் ஜோதி மொத்தம் 186 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர் ஷேக் அல் மக்தோம் (182 புள்ளி) வெள்ளியும், கத்தார் வீரர் ஹமாத் அலி அல் மாரி (181 புள்ளி) வெண்கலமும் பெற்றனர்.

அர்ஜுனா விருது பெற்றவரான 31 வயதான ரஞ்சன் சோதியின் சிறந்த ஸ்கோர் இது கிடையாது. இந்த ஆண்டில் இத்தாலியில் நடந்த உலக கோப்பை போட்டியில் அவர் இந்த பிரிவில் 195 புள்ளிகள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

இதே போல் டபுள் டிராப் அணிகள் பிரிவிலும் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்தது. ரஞ்சன் சோதி, ஆஷர் நோரியா, விக்ரம் பாட்னாகர் ஆகியோர் கொண்ட இந்திய குழுவினர் 403 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தை வசமாக்கினார்கள். இதில் சீனாவுக்கு தங்கமும் (414 புள்ளி), குவைத்துக்கு வெள்ளியும் (407 புள்ளி) கிடைத்தன.


தடகளத்தில் 2 தங்கம்

ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் துப்பாக்கி சுடுதல், தடகளத்தில் கிடைத்தது Sp04

ஆசிய விளையாட்டில் நேற்று தொடங்கிய தடகளத்தில் முதல் நாளிலேயே இந்தியா முத்திரையை பதித்திருக்கிறது. பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பிரீஜா ஸ்ரீதரன் 31 நிமிடம் 50.47 வினாடிகளில் இலக்கை கடந்தார். முதலிடம் பிடித்த அவரது கழுத்தை தங்கப்பதக்க மாலை அலங்கரித்தது. மற்றொரு இந்திய வீராங்கனை கவிதா ரவுத் 31 நிமிடம் 51.44 வினாடிகளுடன் 2-வதாக வந்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றார்.

தங்கம் வென்ற 28 வயதான பிரீஜா கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர். 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் அவரது சிறந்த செயல்பாடு இதுவாகும். இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு வாட்போர்டில் நடந்த 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் 32 நிமிடம் 04.41 வினாடிகளில் கடந்ததே சிறந்த இலக்காக இருந்தது. இதே போல் வெள்ளிப்பதக்கம் வாங்கிய மராட்டிய மாநிலம் நாசிக்கை சேர்ந்த 25 வயதான கவிதாவின் சிறந்த ஓட்டமாகவும் (இதற்கு முன்பு 32 நிமிடம் 41.31 வினாடி) இது அமைந்தது.


சுதாசிங் அசத்தல்

ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் துப்பாக்கி சுடுதல், தடகளத்தில் கிடைத்தது Sp08

இதே போல் பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபில்சேஸ் போட்டியில் இந்திய வீராங்கனை சுதா சிங் 9 நிமிடம் 55.67 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி தங்கப் பதக்கத்தை முகர்ந்தார். ரெயில்வேயைச் சேர்ந்த 24 வயதான சுதா சிங்கின் தனிப்பட்ட திறனில், இது சிறந்த செயல்பாடாகவும் (இதற்கு முன்பு காமன்வெல்த் போட்டியில் 9 நிமிடம் 57.63 வினாடி) அமைந்தது.

இந்த போட்டியில் சீனாவின் யுவான் ஜின் வெள்ளியும் (9 நிமிடம் 55.71 வினாடி), ஜப்பானின் மினோரி ஹயாகரி வெண்கலமும் (10 நிமிடம் 01.25 வினாடி) பெற்றனர்.

வில்வித்தையில் வெண்கலம்

வில்வித்தைபோட்டியில் பெண்கள் அணிக்கான அரைஇறுதியில் டோலான பானர்ஜி, தீபிகா குமாரி, ரிமில் புருலி இந்திய அணி, நம்பர் ஒன் அணியான தென்கொரியாவுக்கு எதிராக மயிரிழையில் தோல்வியை தழுவியது. இதில் இரு அணிகளும் 221-221 என்ற சமநிலை வகித்தன. இதையடுத்து வெற்றியை நிர்ணயிக்க நடந்த ஷூட்-ஆப்-ல் தென்கொரிய வீராங்கனைகள் சரியான இலக்கில் அம்புகளை எய்து 29 புள்ளிகள் (10, 9, 10) பெற்றனர். ஆனால் இந்திய வீராங்கனைகளால் 26 புள்ளிகளே (9, 8, 9) எடுக்க முடிந்ததால் தோல்வி அடைந்தது.

இதையடுத்து நடந்த வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்தியா, சீனத்தைபேயுடன் மோதியது. இதுவும் திரிலிங்காகவே நகர்ந்தது. முடிவில் இந்தியா 218-217 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலத்தை தனதாக்கியது.

ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் துப்பாக்கி சுடுதல், தடகளத்தில் கிடைத்தது Sp06


மல்யுத்தத்தில் 2 வெண்கலம்

மல்யுத்தத்தில் இந்தியா 2 பதக்கத்தை வாங்கி இருக்கிறது. கிரேகோ-ரோமன் 60 கிலோ எடை பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் ரவிந்தர் சிங், தென்கொரியாவின் ஜங் ஜிஹையனுடன் 0-3 என்ற கணக்கில் வீழ்ந்தார். இதையடுத்து வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் ரவிந்தர்சிங் 9-3 என்ற கணக்கில் இந்தோனேஷியாவின் முகமது அலியான்சையாவை வீழ்த்தி வெண்கலத்தை பெற்றார்.

மற்றொரு இந்திய வீரர் சுனில்குமார் ராணா, கிரேகோ-ரோமன் 66 கிலோ பிரிவின் அரைஇறுதியில் ஈரானின் சயீத் அப்ட்வாலியுடம் 0-3 என்ற கணக்கில் தோற்றார். இதன் பின்னர் சுனில்குமார் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் தாய்லாந்தின் சுதெப் ஊம்சோம்பூவை 4-2 என்ற கணக்கில் சாய்த்து எனது பெயரையும் பதக்க பட்டியலில் இணைத்துக் கொண்டார். மல்லுகட்டி வெண்கலம் வென்றுள்ள இரு இந்திய வீரர்களும் சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர்கள் என்பது நினைவு கூறத்தக்கது.

தினதந்தி!


ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் துப்பாக்கி சுடுதல், தடகளத்தில் கிடைத்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் துப்பாக்கி சுடுதல், தடகளத்தில் கிடைத்தது Empty Re: ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் துப்பாக்கி சுடுதல், தடகளத்தில் கிடைத்தது

Post by உதயசுதா Mon Nov 22, 2010 2:15 pm

ITHU KURAIVUTHAAN, IRUNTHAALUM PERUMAI KOLLA VENDIYA SEYTHITHAAN


ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் துப்பாக்கி சுடுதல், தடகளத்தில் கிடைத்தது Uஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் துப்பாக்கி சுடுதல், தடகளத்தில் கிடைத்தது Dஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் துப்பாக்கி சுடுதல், தடகளத்தில் கிடைத்தது Aஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் துப்பாக்கி சுடுதல், தடகளத்தில் கிடைத்தது Yஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் துப்பாக்கி சுடுதல், தடகளத்தில் கிடைத்தது Aஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் துப்பாக்கி சுடுதல், தடகளத்தில் கிடைத்தது Sஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் துப்பாக்கி சுடுதல், தடகளத்தில் கிடைத்தது Uஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் துப்பாக்கி சுடுதல், தடகளத்தில் கிடைத்தது Dஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் துப்பாக்கி சுடுதல், தடகளத்தில் கிடைத்தது Hஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் துப்பாக்கி சுடுதல், தடகளத்தில் கிடைத்தது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics
»  உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: கடைசி நாளில் இந்தியாவுக்கு இரண்டு தங்கம்
» காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
» உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி- இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்
» தோஹாவில் நடந்த ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்
» உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum