ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்

+2
Thanjaavooraan
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  Empty சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்

Post by சிவா Mon 22 Nov 2010 - 3:59

ஏழரைச்சனி, அஷ்டமத்து சனி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கறீர்களா! சிவராத்திரியன்று இரவில் கண்விழித்து ஒரு ஜாமத்துக்கு 16 தடவை வீதம் கீழ்க்கண்ட 11 பாடல்களையும் படியுங்கள். சிவராத்திரி கழிந்ததும், தினமும் காலையில் நீராடி, சனிப்பெயர்ச்சி காலம் நீங்கும் வரை நெய் விளக்கேற்றி ஒருமுறை படியுங்கள். சனியால் ஏற்படும் கெடுபலன்கள் வெகுவாகக் குறையும். திருநள்ளாறு நள்ளாற்றீஸ்வரர் குறித்து ஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள் இவை.


1. போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ளேற்று அண்ணல் பரமேட்டி
ஆகம் ஆர்த்த தோலுடையன் கோவண ஆடையின் மேல்
நாகம் ஆர்த்த நம் பெருமான் மேயது நள்ளாறே!


2. தோடுடைய காதுடையன் தோல் உடையன் தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணும் ஓர் பாலுடையன்
ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே.


3. ஆன்முறையால் ஆற்ற வெண்நீறு ஆடி அணியிழை ஓர்
பால்முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நால்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே!


4. புல்கவல்ல வார்சடை மேல் பூம்புனல் பெய்து, அயலே
மல்கவல்ல கொன்றைமாலை மதியோடு உடன்சூடி
பல்கவல்ல தொண்டர் தம் பொற்பாத நிழல் சேர
நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே!


5. ஏறுதாங்கி ஊர்திபேணி ஏர்கொள் இளமதியம்
ஆறு தாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம் சூடி
நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரைகொன்றை
நாறு தாங்கும் நம்பெருமான் மேயது நள்ளாறே!


6. திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன் இமையோர்கள்
எங்கள் உச்சி எம் இறைவன் என்று அடியே இறைஞ்ச
தங்கள் உச்சியால் வணங்கும் தம் அடியார்கட்கெல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே!


7. வெஞ்சுடர்த்தீ அங்கை ஏந்தி விண்கொள் முழுவதிர
அஞ்சிடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்
செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே!


8. சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத் தீ அம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ணவெண் நீறு ஆடுவது அன்றியும் போய்
பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர்பால் மதியும் சூடி
நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே!


9. உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்ட உடனே ஒடுக்கி
அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்
எண்ணம் ஆகா உள்வினை என்று எள்க வலித்து இருவர்
நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே!


10. மாசுமெய்யர் மண்டைத்தேரர் குண்டர் குணமிலிகள்
பேசும் பேச்சை மெய் என்றெண்ணி அந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றை சூடி மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே!


11. தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்
நண்புநல்லார் மல்குகாழி ஞான சம்பந்தன் நல்ல
பண்பு நள்ளாறு ஏத்துபாடல் பத்தும் இவை வல்லார்
உண்பு நீங்கி வானவரோடு உலகில் உறைவாரே!


சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  Empty Re: சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்

Post by Thanjaavooraan Mon 22 Nov 2010 - 13:20

செய்யுளின் பொருளையும் இட்டால் நன்றாக இருக்கும்
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  Empty Re: சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்

Post by சிவா Mon 22 Nov 2010 - 14:42

Thanjaavooraan wrote:செய்யுளின் பொருளையும் இட்டால் நன்றாக இருக்கும்

நந்திதா அக்காவிற்கு அனுப்புகிறேன்.


சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  Empty Re: சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்

Post by nandhtiha Mon 22 Nov 2010 - 23:31

வணக்கம்
சிறிது அவகாசம் கொடுங்கள், என்னாலியன்ற வரைபொருள் தருகிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  Empty Re: சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்

Post by சிவா Mon 22 Nov 2010 - 23:34

nandhtiha wrote:வணக்கம்
சிறிது அவகாசம் கொடுங்கள், என்னாலியன்ற வரைபொருள் தருகிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

நன்றி அக்கா! சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  678642


சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  Empty திரு நள்ளாறு பதிகத்தின் பொருள்

Post by nandhtiha Tue 23 Nov 2010 - 12:50

பெரு மதிப்புக்குரிய சிவா அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திருநள்ளாற்றுப் பதிகத்தின் பொருளை எனக்குத் தெரிந்த வரையில் பதிவிடுகிறேன். குற்றம் குறை கண்டவர்கள் தெரிவித்தால் திருத்திக் கொள்கிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா


1. போகமார்த்த பூண்முலையாள்
தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள்
ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன்
கோவண வாடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான்
மேயது நள்ளாறே.

உலகத்து அடியார்க்கு ஞானம் வைராக்யம் என்ற இருவகை தத்துவங்களையும் அளிக்க வல்ல இரு நிறைவான ஆபரணங்களை அணிந்த நகில்களை உடைய உமையவளை இடப் பாகமாகக் கொண்டவனும் பசிய (குளுமையான) கண்களையும் வெண்மையான காளையை தன் ஊர்தியாகக் கொண்டவனும் நாகத்தை இடுப்பில் ஞாணாகக் கொண்டு நான் மறைகளை இடைத்துணியாகவும் கொண்ட நம் இறைவனாகிய சிவ பெருமான் எழுந்தருளி உள்ள இடம் திரு நள்ளாறு


2.தோடுடைய காதுடையன்
தோலுடை யன்தொலையாப்
பீடுடைய போர்விடையன்
பெண்ணுமோர் பாலுடையன்
ஏடுடைய மேலுலகோ
டேழ்கட லுஞ்சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான்
மேயது நள்ளாறே.

தோடுடைய காதுடையன் அம்மை பாகத்தே உள்ள இடச் செவியில் தோடணிதன் காதினை உடையவன் என்றே பொருள் கொண்டனர். (நான் சிறிது மாறு படுகின்றேன். தோடுடைய செவியன் என்று ஆரம்பித்த முதற் பதிகம் சீகாழி தோணியப்பரைக் குறித்துத்தான், பசியால் அழுத சம்பந்தரின் குரல் கேட்டு இடப் பக்கம் அமர்ந்துள்ள இறைவியைப் பால் கொடுக்கும் படி இறைவன் பணிக்க அம்மையும் அவ்வாறே செய்தனள். நல்ல நூல்களைக் கேட்காத செவிகள் துளைக்கப் படாத செவிகளே என்பார் வள்ளுவதேவரும், அடியார்களின் குறைகளைக் கேளாத செவிகளும் தோட்கப் படாத செவிகளே ஆகும். ஆனால் தாயினும் சாலப் பரிந்து இன்னல் களையும் எம் பெருமான் செவிகள் துளைகள் உள்ளவை மட்டுமல்ல பொன்னால் அலங்கரிக்கப் பட்ட தோடுகளையும் உடையவன் என்றே நான் பொருள் கொள்கிறேன். சைவப் பெருந்தகைகள் சிறியவளாகிய அடியாள் எழுதும் இதில் பிழைக் காணுவாராயின் “பித்தர் சொன்னதும் பேதையர் சொன்னதும் பத்தர் சொன்னதும் பன்னப் பெறுபவோ” என்ற கம்பன் வாக்குப் படி மன்னித்தருள்க) புலி மற்றும் யானையின் தோலை ஆடையாக அணிந்தவனும், பெருமை பொருந்தியதும் அமரில் வெல்வதுமாகிய காளையை ஊர்தியாக உடையவனும் கீழ் மேலாக உள்ள உலகங்களோடு எழு பரவைகளாலும் சூழப் பட்டுள்ள இவ்வுலத்தை தனது ஆட்சியின் கொண்டு எந்நாட்டவர்க்கும் இறைவனாகிய எம்பெருமான் விரும்பி உறைவது நல்லோர் நாடும் திரு நள்ளாறே ஆம்.


528 ஆன்முறையா லாற்றவெண்ணீ
றாடி யணியிழையோர்
பான்முறையால் வைத்தபாதம்
பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவுஞ்
சூலமும் பற்றியகை
நான்மறையான் நம்பெருமான்
மேயது நள்ளாறே.

நல் ஆவினத்திலிருந்து முறையாகச் செய்யப் பட்ட திரு நீற்றை மேனி முழுதும் அணிந்தவனும், மங்கல அணிகளை அணிந்துள்ள உமையம்மையை இடப்பாகத்தில் ஏற்றவனும், தன்னடியார்கள் வணங்கத் தக்க திருவடிகளை உடையவனும் , மான் மழு மூவிலைச் சூலம் முதலியவற்றைத் தம் திருக்கைகளில் ஏந்தியவனும், நான்கு வேதங்களுள் தலையாக எண்ணப் படும் யஜுர் வேதத்தின் நடு நாயகமாக உள்ள ஸ்ரீருத்ரத்தின் நடுப் பொருளாக உள்ள பஞ்சாட்சரப் பெருமானாகிய நஞ்சணி கண்டன் உறைவது திரு நள்ளாறே.

3. புல்கவல்ல வார்சடைமேற்
பூம்புனல் பெய்தயலே
மல்கவல்ல கொன்றைமாலை
மதியோ டுடன்சூடிப்
பல்கவல்ல தொண்டர்தம்பொற்
பாதநி ழற்சேர
நல்கவல்ல நம்பெருமான்
மேயது நள்ளாறே.

திரிபுரம் எரித்த விரி சடையின் மேல் கங்கைத் திருநதியையும் கொன்ற மாலையையும் வளர் பிறையையும் தாங்கி அடியவர் தொழத் தன் அடிநிழல் தரும் பெருமானாகிய ஆலவாய் அண்ணல் அமர்ந்திருப்பது திரு நள்ளாறே.


4 ஏறுதாங்கி யூர்திபேணி
யேர்கொள் இளமதியம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர்
ஆடர வஞ்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த
மார்பினில் நிரைகொன்றை
நாறுதாங்கு நம்பெருமான்
மேயது நள்ளாறே. 1.049.5

ஆனேற்றைக் கொடியாகவும் ஊர்தியாகவும் ஏற்று பொலிவுற்ற இளம் பிறை மற்றும் கங்கை யாற்றினையும், பைங்கண் அரவினையும் தாங்கி மணம் பொருந்திய திரு நீற்றுப் பூச்சால் விளங்கும் திரு மார்பில் முப்புரி நூல் துலங்கும் திருமேனியுடைய எம் இறைவனான சிவபெருமான் உறைவது திரு நள்ளாறே


5 திங்களுச்சி மேல்விளங்குந்
தேவன் இமையோர்கள்
எங்களுச்சி யெம்மிறைவன்
என்றடி யேயிறைஞ்சத்
தங்களுச்சி யால்வணங்குந்
தன்னடி யார்கட்கெல்லாம்
நங்களுச்சி நம்பெருமான்
மேயது நள்ளாறே.

தேவர்களும் எம்பெருமானே என்று தம் தலையால் வணங்கும் பெருமை பொருந்தி மதிசூடிய எம் தேவா என்று அவன் திருவடியைத் தம் சென்னி தாழ்த்தி வனங்கும் அடியார்கள் போற்றும் ஏற்றம் கொண்ட எம்பிரான் தங்குமிடம் திரு நள்ளாறே




6 வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி
விண்கொண் முழவதிர
அஞ்சிடத்தோ ராடல்பாடல்
பேணுவ தன்றியும்போய்ச்
செஞ்சடைக்கோர் திங்கள்சூடித்
திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான்
மேயது நள்ளாறே.

வெம்மை பொருந்திச் சுடர் விட்டெரியும் எரியினைக் கையிலேந்தி உம்பருலகும் அஞ்சிடத் தான் வேண்டிப் பெற்ற தமிழ்ப் பாடலுடன் (என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய்த் தமிழ் செய்யுமாறே –திருமந்திரம். தன்னையே தமிழாக்க வேண்டுமென்பதே இறைவனின் திருவுள்ளம். தான் உண்ட நஞ்சுக்கு தமிழே நன் மருந்து என்றறிக) ஆடல்வல்லான் என்ற தன் பெயருக்கேற்றபடி நடனம் ஆடியும் திங்களைச் சென்னியிலும் உண்ட ஆலத்தைத் தன் கண்டத்துள்ளும் நிறுத்திய நம் இறைவன் விரும்பி உறைவது திரு நள்ளாறே.

7 சிட்டமார்ந்த மும்மதிலுஞ்
சிலைவரைத் தீயம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ
றாடுவ தன்றியும்போய்ப்
பட்டமார்ந்த சென்னிமேலோர்
பான்ம தியஞ்சூடி
நட்டமாடும் நம்பெருமான்
மேயது நள்ளாறே.

மேருவை வில்லாக்கி மாதவனை அம்பாக்கி முப்புரத்தை எரித்து, திரு நீற்றினை விருப்போடு பூசி, தலைப் பட்டம் என்ற ஓர் அணியையும் சூடி அதன் மேல் பாலினை ஒத்த வெண்மதியினைச் சூடி திரு நடம் புரியும் பெருமான் உறைவது திரு நள்ளாறே.

8 உண்ணலாகா நஞ்சுகண்டத்
துண்டுடனே யொடுக்கி
அண்ணலாகா வண்ணல்நீழல்
ஆரழல் போலுருவம்
எண்ணலாகா வுள்வினையென்
றெள்க வலித்திருவர்
நண்ணலாகா நம்பெருமான்
மேயது நள்ளாறே.

எவராலும் அருந்த முடியாத அரு நஞ்சாம் ஆலத்தை உண்டு அதனைத் தம் கழுத்தளவில் நிறுத்தி அறம் பிழைத்தார் யாரும் அணுக ஒண்ணாத தலைமைப் பிரானும் தீச் சுடரைப் போன்ற அழகிய திருவுருவம் கொண்டவனும் திருமாலும் பிரம்மனும் நினைக்கவும் அரிதாகி வருத்தமுறச் செய்தவனும் ஆன நம் சிவ பெருமான் மேவி அமர்ந்த இடம் திரு நள்ளாறே.

9 மாசுமெய்யர் மண்டைத் தேரர்
குண்டர்கு ணமிலிகள்
பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி
யந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றைசூடி
மும்மதிளும் முடனே
நாசஞ்செய்த நம்பெருமான்
மேயது நள்ளாறே.

அழுக்கடைந்த மேனியும் மண்டை ஓட்டை உண்கலமாகக் கொண்டு திரிந்து அறநெறி விலகிச் செல்பவர்களும் பேச்சினில் மட்டும் இனிமை கொண்டவருமாகிய சாருவாகர்களின் பேச்சை மெய்யென்று எண்ணி நெறி வழுவாதீர் என்று ரீங்காரத்தால் எச்சரிக்கும் வண்டுகள் விரும்பிப் பொருந்தும் கொன்றை மலர் மாலையைச் சூடி முச்சோவினை ஒரு சேர அழித்து அமரர்களைப் புரந்தருளிய எம் பெருமான் சிவநாதன் அவாவுற்று அமர்ந்த இடம் திரு நள்ளாறே.


10 தண்புனலும் வெண்பிறையுந்
தாங்கிய தாழ்சடையன்
நண்புநல்லார் மல்குகாழி
ஞானசம் பந்தன்நல்ல
பண்புநள்ளா றேத்துபாடல்
பத்தும் இவைவல்லார்
உண்புநரங்கி வானவரோ
டுலகில் உறைவாரே.

எல்லோரும் போற்ற எழில் மதியையும் கங்கையையும் தன் திரு முடியில் சூடி திரு நள்ளாற்றில் கோயில் கொண்டுள்ள எம்பெருமானை நல்லதோர் நட்பும் பல்லோர் ஏத்தும் பண்பும் நிறைந்த அடியார்கள் வாழும் சீகாழித் திருப்பதியில் அம்மையின் பாலருந்தி அருந்தமிழ் வல்ல ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இந்தப் பதிகத்தை அன்புடன் உள்ளமுருக இசைக்க வல்லவர் ஆகாமியம் சஞ்சிதம் பிராரப்தம் என்ற மூவகைத் துன்பத்தினின்றும் விடுபட்டு அமரருலகில் நிலையான வாழ்வு பெறுவர்,

திருச் சிற்றம்பலம்
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  Empty Re: சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்

Post by ராஜா Tue 23 Nov 2010 - 12:56

சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  678642 நன்றி அக்கா ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  Empty Re: சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்

Post by V.Annasamy Tue 23 Nov 2010 - 13:15

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  Empty Re: சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue 23 Nov 2010 - 15:18

ஞானசம்பந்தரின் பதிகங்களை அளித்த சிவா அவர்களுக்கும், செய்யுளுக்கு பொருளுரை வழங்கிய நந்தித அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  Empty Re: சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்

Post by nandhtiha Tue 23 Nov 2010 - 15:32

அனைவருக்கும் வணக்கம்.
கற்றறிந்த பெரியோர்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி.
சித்தாந்தம் என்பது வேதக் கருத்துக்களை உள்ளடக்கிய மாபெரும் கடல்.36 ஆகமங்களைக் கொண்ட சைவம் ஆழத்தினும் அகலத்தினும் அச் சிவபெருமானையே ஒத்திருக்கும். சைவத்திலோ வைணவத்திலோ ஆழ்ந்த புலமை இல்லாத என்னிடம் திரு சிவா அவர்கள் இதனை ஒப்படைத்தார். என்னுடைய உரை முழுமை பெற்றது அல்ல, இன்னும் நல்லதொரு விளக்கத்தையோ அல்லது என் உரையில் ஏதேனும் குறைகள் இருப்பின் எடுத்துரைக்கப் பெரியோரகளை வேண்டுகின்றேன்.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்  Empty Re: சங்கடங்கள் தீர்வதற்கு - திருஞான சம்பந்தர் வழங்கிய பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum