ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி

2 posters

Go down

ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Empty ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி

Post by kirupairajah Sat Aug 15, 2009 5:07 pm

தமிழகம் ஊமைத் துயரத்தில் ஆழ்ந்துள்ள நேரம் இது. தமிழீழத்தில் நம்மின மக்கள் சிங்களவெறிப் படையினரால் கொத்துக் கொத்தாய்க் கொலையுண்டு போவதை நம்மால் தடுக்க முடியவில்லையே! இன்றளவும் அங்கே முள்வேலி முகாமில் அடைபட்டிருக்கும் மூன்று இலட்சம் தமிழர்களை மீட்க வழி தெரியவில்லையே! நமது அரசு என நாம் நினைத்திருந்த இந்திய அரசு நம் கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்துப் போரை நிறுத்தச்சொல்லவில்லை. ஈழத் தமிழர்களைக் காக்கத் துரும்பும் அசைக்கவில்லை. இதைவிடப் பெரிய கொடுமை என்னவென்றால், சிங்கள அரசு நடத்திய இன அழிப்புப் போருக்கு ஆயுதம், கருவி, பொருள், ஆதரவு அனைத்தும் கொடுத்து உடந்தையாகச் செயல்பட்டது தில்லி அரசு.

ஈழத் தமிழர்கள் இருக்கட்டும், இந்தியக் குடிமக்களான தமிழக மீனவர்களைச் சிங்களப் படையினரின் கொலைத் தாக்குதலிலிருந்து காக்கவும் கூட இந்திய அரசு அக்கறையுடன் முயன்றதாக வரலாறு இல்லை.இந்த உலகில் தமிழினம் தன் உயிருக்கும் உரிமைக்கும் காப்பின்றிக் கலங்கி நிற்கும் இந்தச் சூழலில்தான் இந்தியாவின் விடுதலை நாள்- சுதந்திர தினம் � ஆட்சியாளர்களால் கொண்டாடப்படுகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கு மிட்டாயும், பணியாளர்களுக்கு விடுமுறையும் தவிர இந்த விடுதலை நாளில் மகிழ்ச்சி கொள்ள என்ன இருக்கிறது?

1947 ஆகஸ்டு 15 இந்திய விடுதலை நாள் என்பது தமிழர்கள் மீதான ஆதிக்கம் ஆங்கிலேயர் கையிலிருந்து இந்தியப் பார்ப்பன � பனியாக்களின் கைக்கு மாற்றித் தரபட்ட நாளே தவிர வேறல்ல, எனவே இது துக்க நாள் என்று அன்றே அறிவித்தார் தந்தை பெரியார். அவர் கூறியதே உண்மை என்பதைக் கடந்த அறுபத்திரண்டு ஆண்டு கால வரலாறு மெய்ப்பிக்கிறது.

ஆம், அன்றும் இன்றும் ஆகஸ்டு 15 தமிழர்களுக்குத் துக்க நாளே!

சுதந்திர இந்தியாவில் தீண்டாமை ஒழியவில்லை. தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைகள் ஒழியவில்லை. வெண்மணியும் விழுப்புரமும் ஊஞ்சனையும் மேலவளவும் தாமிரவருணியும் தாழ்த்தப்பட்ட மக்களின் குருதியில் பாரத மாதா திரும்பத் திரும்பக் குளித்தெழும் தொடர் நிகழ்வின் சில புள்ளிகளே அல்லவா? ஒடுக்குண்ட மக்களின் சமூக நீதியை நிலைநாட்ட முடிந்ததா சுதந்திர இந்தியாவால்? இன்றளவும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம், எய்ம்ஸ் போன்ற உயர் தனிக் கல்வி நிறுவனங்கள் பார்ப்பன மேலாதிக்கக் கோட்டைகளாகவே இருந்து வருகின்றன.

உழபவனுக்கு நிலம் சொந்தம் என்ற முழக்கத்தை ‘இடதுசாரிகளே’ மறந்து போய் விட்டார்கள். உலகமயத்துக்கு இதெல்லாம் ஒத்து வராது என்று கருதும் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா போன்றவர்கள் ‘டாடாவுக்கே நிலம் சொந்தம்’ என்ற புதிய முழக்கத்தோடு புறப்பட்டிகுக்கிறார்கள். இப்போது சிவப்புப் பொருளியலைக் கைவிட்டு சிறப்புப் பொருளியலைத் தழுவியுள்ளர்கள். எல்லாம் நாற்காலி அரசியல் செய்த மாயம்! இந்துத்துவ பாசக, இந்தியத் தேசிய காங்கிரசு, இடதுசாரி முன்னணி... எல்லாரும் இந்திய வல்லாதிக்கச் சேவையில் கைகட்டி நிற்கக் காண்கிறோம்.

தமிழ்நாட்டில் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று கொட்டி முழக்கி அரசியல் வளர்த்த திராவிட இயக்கம் இப்போது தில்லி வல்லாதிக்கத்தின் தரகு முகவாண்மையாகச் சீரழிந்து விட்டது. கொள்கையை வேட்டி என்றும், பதவியை மேல்துண்டு என்றும் வர்ணித்தவர் அண்ணா. தம்பி கருணாநிதியோ வேட்டி போனாலும் துண்டுதான் உயிரெனத் துடித்து நிற்கிறார். தமிழினத்தைக் காட்டிக் கொடுத்துப் பிழைப்பு நடத்துவதில் அவருக்கும் செயலலிதாவுக்கும் வேறுபாடில்லை.

தமிழ்நாட்டின் உழவும் நெசவும் சுதந்திர இந்தியாவில் பாழ்பட்டுக் கிடக்கின்றன. பன்னாட்டுக் குழுமங்களின் சுரண்டல் கொள்ளை நம் காற்றையும் மண்ணையும் கெடுத்து வருகிறது. நாம் உண்ணும் உணவையும் குடிக்கும் நீரையும் நஞ்சாக்கி வருகிறது.

இதற்கொரு முடிவு கட்ட வெண்டுமானால், இந்தியச் சிறையிலிருந்து தமிழகம் விடுதலை பெறவெண்டும். விடுதலைக்காகத் தமிழர்கள் ஒன்றுபடுவதற்குத் தடையாக நிற்கும் சாதியத்தை எதிர்த்துப் போராட வேண்டும். தமிழ்த் தேசியமும் சமுக நீதியுமான குறிக்கோள்களுக்கான போராட்டமே நமக்கு உண்மையான விடுதலையைத் தரும். அந்த விடுதலைக்கான போராட்டத்திற்கு அணி திரள்வோம், தமிழர்களே


ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி Empty Re: ஆகஸ்டு 15- இன்ப நாளா ? துன்ப நாளா? ஓர் இந்திய தமிழன் கேள்வி

Post by நிலாசகி Sat Aug 15, 2009 5:14 pm

சுதந்திர இந்தியாவில் தீண்டாமை ஒழியவில்லை. தாழ்த்தப்பட்டோர் மீதான
வன்கொடுமைகள் ஒழியவில்லை. வெண்மணியும் விழுப்புரமும் ஊஞ்சனையும் மேலவளவும்
தாமிரவருணியும் தாழ்த்தப்பட்ட மக்களின் குருதியில் பாரத மாதா திரும்பத்
திரும்பக் குளித்தெழும் தொடர் நிகழ்வின் சில புள்ளிகளே அல்லவா? ஒடுக்குண்ட
மக்களின் சமூக நீதியை நிலைநாட்ட முடிந்ததா சுதந்திர இந்தியாவால்?
இன்றளவும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம், எய்ம்ஸ் போன்ற உயர் தனிக் கல்வி நிறுவனங்கள்
பார்ப்பன மேலாதிக்கக் கோட்டைகளாகவே இருந்து வருகின்றன.!!



இது முழுமையாக மாறவில்லை அனால் மாற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum