ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெமிக்கல சாயம் கலந்த உணவுப்பொருட்கள்: உடல்நிலை பாதிக்கும் அபாயம்

4 posters

Go down

கெமிக்கல சாயம் கலந்த உணவுப்பொருட்கள்: உடல்நிலை பாதிக்கும் அபாயம் Empty கெமிக்கல சாயம் கலந்த உணவுப்பொருட்கள்: உடல்நிலை பாதிக்கும் அபாயம்

Post by சிவா Fri Nov 19, 2010 10:44 am

உணவு பொருட்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாகவும், ஆடைகளுக்கு பயன்படுத்தும் கெமிக்கல் வண்ணங்களும் பயன்படுத்துவதால், அதை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு, உடல் நிலை பாதிக்கும் அபாயம் உள்ளது.

சமீபகாலமாக தயாரிப்பாளர்கள் பலர், வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக, தாங்கள் தயாரிக்கும் உணவு பொருட்களில் பல்வேறு வண்ணங்களை கலக்கின்றனர். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேக், சுவீட், குழல் அப்பளம் முதல் ஓட்டல்களில் பெரியவர்கள் சாப்பிடும் சிக்கன்-65, பொறித்த மீன் என அனைத்திலும், வண்ண சாயங்கள் கலக்கப்படுகின்றன. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக வண்ணங்கள் சேர்ப்பதால், உணவு பொருட்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதற்கு மாறாக, பாதிப்பையே ஏற்படுத்தும்.

இயற்கை மற்றும் செயற்கை வண்ணத்தை பயன்படுத்திய வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் பலர், சமீபகாலமாக விலைமலிவு, பலன் அதிகம் என்பதற்காக, துணிகளுக்கு சாயம் ஏற்ற பயன்படுத்தும் கெமிக்கல் வண்ணங்களை உணவு பண்டங்களில் சேர்க்கின்றனர். இதுபோன்ற கெமிக்கல் வண்ணம் சேர்த்த உணவு பண்டங்களை சாப்பிடுவதால், குழந்தைகள் கடுமையாக பாதிக்கின்றனர்.

நகராட்சி உணவு ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது: உணவு பொருட்களில் இயற்கை வண்ணம், செயற்கை வண்ணம் என்ற இருவகை வண்ணங்கள் கலக்கப்படுகின்றன. பீட்டா கரோட்டின், குளோரோபில், ரிபோப்ளேவின், கேராமல், சேப்ரான் உட்பட 11 வகை இயற்கை வண்ணங்களை உணவு பொருட்களில் பயன்படுத்தலாம். சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை ஆகிய நான்கு செயற்கை வண்ணத்தையும் பயன்படுத்தலாம். செயற்கை வண்ணத்தை பொறுத்தவரை, சிவப்பில் பான்சியோபோராக், கார்மோசிம், எரித்ரோசின், மஞ்சளில் டாட்ராசின், சன்செட் எல்லோ, நீலத்தில் இன்டிகோ கார்மென், பிர்லியண்ட் புளூ, பச்சையில் பாஸ்ட் கிரீன் ஆகிய வண்ணங்களையே உணவு பொருட்களில் சேர்க்க வேண்டும். அதிலும், ஒவ்வொரு பண்டங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் மட்டுமே வண்ணங்களை சேர்க்க வேண்டும். நிர்ணயித்த அளவுக்கு கூடுதலாக இயற்கை, செயற்கை வண்ணம், கெமிக்கல் சாயம் கலந்த உணவு பொருட்களை சாப்பிடும் பெரியவர்கள், குழந்தைகள் என அனைவருக்கும், கல்லீரல் பாதிப்பு, மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு, கேன்சர், பசியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

உணவு கலப்பட தடை சட்டம் 1954ல் கீழ், நிர்ணயிக்கப்பட்ட வண்ணத்தை விட கூடுதலாக சேர்த்திருப்பது உறுதியானால், அதை தயாரித்தவர்கள், விற்பவர்களுக்கு ஆறு மாதம் முதல் ஆயுள் தண்டனை வரையும், 1,000 முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். "உணவு பாதுகாப்பு சட்டம் 2006' இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. அந்த சட்டம் அமலாக்கம் செய்யப்பட்டால், உணவு பொருளில் கலப்படம் செய்வோருக்கு லட்சக்கணக்கில் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு ஆய்வாளர் கூறினார்.


கெமிக்கல சாயம் கலந்த உணவுப்பொருட்கள்: உடல்நிலை பாதிக்கும் அபாயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கெமிக்கல சாயம் கலந்த உணவுப்பொருட்கள்: உடல்நிலை பாதிக்கும் அபாயம் Empty Re: கெமிக்கல சாயம் கலந்த உணவுப்பொருட்கள்: உடல்நிலை பாதிக்கும் அபாயம்

Post by மோகன் Fri Nov 19, 2010 1:33 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல பகிர்வு நன்றி சிவா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கெமிக்கல சாயம் கலந்த உணவுப்பொருட்கள்: உடல்நிலை பாதிக்கும் அபாயம் Mகெமிக்கல சாயம் கலந்த உணவுப்பொருட்கள்: உடல்நிலை பாதிக்கும் அபாயம் Oகெமிக்கல சாயம் கலந்த உணவுப்பொருட்கள்: உடல்நிலை பாதிக்கும் அபாயம் Hகெமிக்கல சாயம் கலந்த உணவுப்பொருட்கள்: உடல்நிலை பாதிக்கும் அபாயம் Aகெமிக்கல சாயம் கலந்த உணவுப்பொருட்கள்: உடல்நிலை பாதிக்கும் அபாயம் N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

கெமிக்கல சாயம் கலந்த உணவுப்பொருட்கள்: உடல்நிலை பாதிக்கும் அபாயம் Empty Re: கெமிக்கல சாயம் கலந்த உணவுப்பொருட்கள்: உடல்நிலை பாதிக்கும் அபாயம்

Post by தாமு Fri Nov 19, 2010 2:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கெமிக்கல சாயம் கலந்த உணவுப்பொருட்கள்: உடல்நிலை பாதிக்கும் அபாயம் Empty Re: கெமிக்கல சாயம் கலந்த உணவுப்பொருட்கள்: உடல்நிலை பாதிக்கும் அபாயம்

Post by அன்பு தளபதி Fri Nov 19, 2010 2:53 pm

விழிப்புணர்வை உண்டாக்ககூடிய பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கெமிக்கல சாயம் கலந்த உணவுப்பொருட்கள்: உடல்நிலை பாதிக்கும் அபாயம் Empty Re: கெமிக்கல சாயம் கலந்த உணவுப்பொருட்கள்: உடல்நிலை பாதிக்கும் அபாயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உப்பு கலந்த நொறுக்குத்தீனி இதயத்தை பாதிக்கும்!–மருத்துவர்கள் எச்சரிக்கை
» உப்பு கலந்த நொறுக்குத்தீனி இதயத்தை பாதிக்கும்!–மருத்துவர்கள் எச்சரிக்கை
» எல் நினோவால் இந்தியா, ஆஸ்திரேலியாவில் மழை அளவு கடுமையாக பாதிக்கும் அபாயம்
» எச்சரிக்கை : செல்போனை இடுப்பில் அணிந்தால் எலும்புகள் பாதிக்கும் அபாயம்
» மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு ஒரு வாரத்தில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum