புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்களும் ஹீரோதான்.. Poll_c10நீங்களும் ஹீரோதான்.. Poll_m10நீங்களும் ஹீரோதான்.. Poll_c10 
96 Posts - 49%
heezulia
நீங்களும் ஹீரோதான்.. Poll_c10நீங்களும் ஹீரோதான்.. Poll_m10நீங்களும் ஹீரோதான்.. Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
நீங்களும் ஹீரோதான்.. Poll_c10நீங்களும் ஹீரோதான்.. Poll_m10நீங்களும் ஹீரோதான்.. Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
நீங்களும் ஹீரோதான்.. Poll_c10நீங்களும் ஹீரோதான்.. Poll_m10நீங்களும் ஹீரோதான்.. Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
நீங்களும் ஹீரோதான்.. Poll_c10நீங்களும் ஹீரோதான்.. Poll_m10நீங்களும் ஹீரோதான்.. Poll_c10 
7 Posts - 4%
prajai
நீங்களும் ஹீரோதான்.. Poll_c10நீங்களும் ஹீரோதான்.. Poll_m10நீங்களும் ஹீரோதான்.. Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
நீங்களும் ஹீரோதான்.. Poll_c10நீங்களும் ஹீரோதான்.. Poll_m10நீங்களும் ஹீரோதான்.. Poll_c10 
2 Posts - 1%
Barushree
நீங்களும் ஹீரோதான்.. Poll_c10நீங்களும் ஹீரோதான்.. Poll_m10நீங்களும் ஹீரோதான்.. Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நீங்களும் ஹீரோதான்.. Poll_c10நீங்களும் ஹீரோதான்.. Poll_m10நீங்களும் ஹீரோதான்.. Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
நீங்களும் ஹீரோதான்.. Poll_c10நீங்களும் ஹீரோதான்.. Poll_m10நீங்களும் ஹீரோதான்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்களும் ஹீரோதான்.. Poll_c10நீங்களும் ஹீரோதான்.. Poll_m10நீங்களும் ஹீரோதான்.. Poll_c10 
223 Posts - 52%
heezulia
நீங்களும் ஹீரோதான்.. Poll_c10நீங்களும் ஹீரோதான்.. Poll_m10நீங்களும் ஹீரோதான்.. Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
நீங்களும் ஹீரோதான்.. Poll_c10நீங்களும் ஹீரோதான்.. Poll_m10நீங்களும் ஹீரோதான்.. Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
நீங்களும் ஹீரோதான்.. Poll_c10நீங்களும் ஹீரோதான்.. Poll_m10நீங்களும் ஹீரோதான்.. Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
நீங்களும் ஹீரோதான்.. Poll_c10நீங்களும் ஹீரோதான்.. Poll_m10நீங்களும் ஹீரோதான்.. Poll_c10 
16 Posts - 4%
prajai
நீங்களும் ஹீரோதான்.. Poll_c10நீங்களும் ஹீரோதான்.. Poll_m10நீங்களும் ஹீரோதான்.. Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
நீங்களும் ஹீரோதான்.. Poll_c10நீங்களும் ஹீரோதான்.. Poll_m10நீங்களும் ஹீரோதான்.. Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நீங்களும் ஹீரோதான்.. Poll_c10நீங்களும் ஹீரோதான்.. Poll_m10நீங்களும் ஹீரோதான்.. Poll_c10 
2 Posts - 0%
Barushree
நீங்களும் ஹீரோதான்.. Poll_c10நீங்களும் ஹீரோதான்.. Poll_m10நீங்களும் ஹீரோதான்.. Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நீங்களும் ஹீரோதான்.. Poll_c10நீங்களும் ஹீரோதான்.. Poll_m10நீங்களும் ஹீரோதான்.. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் ஹீரோதான்..


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Mar 13, 2010 5:50 am

வணக்கம் தோழர்களே. எல்லாரும் நல்லாருக்கீங்களா? நீங்க யாராவது பத்மபூஷன், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ, ஸ்ரீலஸ்ரீ இத்யாதி விருது எதாவது, நீங்க அறிஞ்சோ அறியாமலோ, தெரிஞ்சோ தெரியாமலோ செஞ்ச எதுக்காவது (உதா: தலைவன்(ர்) வாழ்கன்னு கத்திருந்தா கூட போதும்) இந்த வருஷம் வாங்கிருக்கீங்களா? அப்டி யாராவது ‘வாங்கி’யிருந்தா சொல்லுங்க, சந்தோஷத்த பகிர்ந்துக்கலாம். ஏன்னா, இந்த உலகத்துல இப்பலாம் எத வாங்கறதுனாலும் ரொம்ப ஈஸி, காசே இல்லன்னாலும் கையெழுத்துக்கு தருவாங்க... ஆமாங்க, பொண்டாட்டியே கையெழுத்துல சேந்துக்கறா, பிரிஞ்சுடறா..!!? (யார் கூட வேனுன்னாலும், சம்மந்த பட்டவங்களும், ஜட்ஜும் போடற கையெழுத்தால!) அது மட்டுமில்லேங்க, உங்களை எப்படி எதாவது வாங்க வைக்கறதுங்கற வித்தைல எல்லா யாவரிங்களும் (அரசியல் யாவாரம் உட்பட) தலகீழா நின்னு தண்ணி குடிச்சவங்க.. எப்டி இருந்தாலும் கடேசில ஏமாளி நீங்கதான்..

நீங்களும் ஹீரோதான்.. Image3
இன்னிய நெலமைக்கி நீங்க கடைத்தெருவுக்கு குடும்பத்தோட போனா திரும்பி வரும் போது, நீங்க பல முக்கியமான நேரம் கவனமா இருந்த, உங்க அளவான குடும்பத்துல ஒரு டிக்கெட் கூடியிருந்தா கூட ஆச்சரியமில்லே.. அந்தளவுக்கு உங்கள ஏமாத்தி எதயாவது உங்கள்ட்ட வித்துர்றதுதான் அவங்க சாமர்த்தியம். ஒரு உதாரணம் பாருங்க, “யானை வாங்குனா பூனை ஃப்ரீ”, அப்டின்னு ஒரு விளம்பரம் வந்தா, கூட்டத்த கட்டுபடுத்த மிலிட்டரி தான் வரனும்.. ஏன்னா, யானைக்கும் பூனைக்கும் என்ன சம்மந்தம்?, வாங்குனா என்ன பிரயோஜனம்? அப்டின்னு யாரும் யோசிக்கறதுல்ல.. ஃப்ரீ அவ்ளோதான்! வுழுந்தடிச்சி ஓடி வாங்கிட வேண்டியது.. பாக்கிய அப்புறம் பாத்துக்கலாம்னு.. அப்புறம் பாத்தாதான் தெரியும், யான கக்கா போனா கூட அத பக்காவா க்ளீன் பன்ற தளவாடமெல்லாம் அதே கம்பெனிலதான் வாங்கி தொலையனும்னு.. அதும் அவங்க சொல்ற விலைக்கி.. இப்டி நீங்க நொந்துகிட்டிருக்கும் போதுதான் அந்த ஃப்ரீ பூனை மியாவ் மியாவ்ன்னு (ஸ்ரேயாவ நெனைக்காதீங்க) இடுப்புல பொறாண்டும்.. என்னன்னு பாத்தா, சாப்புட எலியும், சைட் டிரிங்ஸ்சா பாலும் கேக்கும். அதயும் பாத்தா அந்த கம்பெனிதான் தயாரிக்கும்... “எப்பவும் குடிங்க ஏழரைப்பால்”னு அதுக்கு விளம்பரம் வேற..! சரி பால்தானேன்னு வாங்க போனா அங்கதான் உங்களுக்கு ஏழரை ஆரம்பிக்கும்.... பால் கம்பெனில வாயெல்லாம் பல்லா, ரெகுலரா 6 வருஷத்துக்கு காண்ட்ராக்ட் போட்டாத்தான் வாங்கலாம்னு தலயில கல்ல போட்டு சொல்வாங்க.. (பூனை அத்தன வருஷம் இருக்குமா? இருந்தாலும் நம்மளோடயே இருக்குமா? அப்டியே இருந்தாலும் நாம இருப்போமா?) இத மாதிரி (வாங்கறப்ப வராத) சனியன் புடிச்ச சந்தேகம்லாம் இப்பத்தான் வரும்.


நீங்களும் ஹீரோதான்.. Newspaper
இன்னும் சில பேரு, 300 ரூவாய்க்கு 35000 பொருளுன்னு ஒரு நல்ல ஞாயித்துகிழமையா விளம்பரம் கொடுப்பான் (அதயும் இந்த பேப்பர் காரங்க இலவச இனைப்புல போட்டு நம்மள ஏமாத்துவாங்க)... நம்ம பொது ஜனம் எல்லா சாமானயும் எண்ணி வாங்க கூட நேரமில்லாம அடிச்சி புடிச்சி வாங்கிட்டு போவாங்க.. அப்புறம், செய்கூலி இல்ல, சேதாரம் இல்லன்னு தமுக்கடிச்சி சொல்றவங்க, சொல்லாம விடறது தரமும் இல்லங்கறதுதான்... மேலும், சில ஓட்டல் காரங்க திருவிழா நடத்துவாங்க, புளி கொழம்பு காரம், புன்னாக்கு வாரம் அப்டின்னு.. அங்கனயும் அடிதடிதான். சில இடத்துல 32 அடி தோசையும் 6 வாளி சாம்பாரும் ஐநூறே ரூவாதான்னு வாய்க்குள்ளயே ஆசைய அலய வுடுவாங்க.. ஏன், எதற்கு, எப்படின்னு எவன் சொன்னாலும் யோசிக்காத நம்ம மஹா ஜனம் எல்லா இடத்துலயும், காவல் துறையே வந்து கூட்டத்த கட்டுப்படுத்துனாலும் அந்த கூட்டத்துல முட்டி மோதி வெற்றி வாகை சூடிடும்...


நீங்களும் ஹீரோதான்.. Billboard-advertisement
இப்பலாம் சினிமா போறதுன்னா கேக்கவே வானாம், தனியா போனா ஒரு நாள் சம்பளமும், குடும்பத்தோட போனா ஒரு வார சம்பளமும் நிச்சய காலி... கூடவே மருத்துவ செலவு வேற.. (தியேட்டர்ல விக்கற தின்பண்டங்கள், படத்தால வர தல வலி அப்புறம் இந்த ரசிக குஞ்சுகள் போடற கூச்சலால வர காது வலி எக்ஸ்ட்ரா..) இதில்லாம போற வர ரோடெல்லாம் இந்த மிக்ஸி வாங்குங்க, பைக் வாங்குங்க, முடிஞ்சா பரலோகத்துக்கு டிக்கெட் வாங்குங்கன்னு ஒரே விளம்பர பேனர் தொல்ல..

நீங்களும் ஹீரோதான்.. ATV_Intro_Preview_Slideshow
சரி, வீட்டுலயாவது நிம்மதியா இருக்கலாம்னா அங்கயும் டிவி வழியா வந்து. “இந்த மாத்திரய போடுங்க, ராத்ரி பூரா ஜோருங்க”னு. (ராத்ரி பூரா ஜோருனா காலயில? டர்ர்ருதானா?). ஏன் இப்டி தொரத்தி தொரத்தி மக்கள வாங்கறதுக்கு தூண்டறாங்க? பொருளாதாரம் வளந்துடுச்சா? இல்லியே.. (இன்னும் 50%-60% சதவீத நம் மக்கள் நல்ல தண்ணிருக்கும், உணவுக்கும் நாயாதான் அலயுறாங்க) அப்புறம்? உலகத்துல அதிகளவு நுகர்வோர் இருக்கற நாடு நம்மளுது, அது மட்டுமில்ல, மிக பரந்த ஏரியாவுல அமைஞ்ச நாடுங்கறதால வித்தவன தேடுறது கஷ்டம், விற்பனைக்குப் பின்னான சேவைகளை பத்தியும் அதிகளவில் தெரியாதுங்கறதாலயும், உலகத்துல எங்க, எத தயாரிச்சாலும், அந்த குப்பைய கொட்டி காசாக்க முதல்ல நம்ம நாட்டத்தான் தேர்ந்தெடுக்கறாங்க.. பாருங்க பாதி ஜனத்தொகைக்கு ஒரு வேள சோத்துக்கே வழியில்லன்னு சர்வே சொன்னாலும், அம்பத்தஞ்சு கோடி செல் கனெக்‌ஷன் வச்சுருக்கற நாடு நம்ம தாய் நாடுதான்.. ஏன்னா சோத்துக்கே வழியில்லன்னாலும் சூ வுக்கு போட சந்தன சோப்பு கேக்கற ஆளுங்கதான் நம்ம பயளுவ.

நீங்களும் ஹீரோதான்.. Samsung_worlds_slimmest_led_backlight_hdtv
நம்மாளுங்க நெறய பேரு இன்னிக்கு கொறஞ்சது ஒரு நாளக்கி நூறு ரூவாயிலேருந்து(ஃப்ரீ) , ஆயிரம் ரூவாய்க்கும் மேல சம்பாதிக்கறாங்க. ஆனா அத எப்படி செலவு பன்றாங்க? யோசிச்சு பாத்தா பாதிக்கும் மேல வேஸ்ட்டா தான் இருக்கும்.. டிவி வச்சிருக்கவங்க, எல்சிடி டிவி, எல்ஈடி டிவி அப்டின்னு பல டிவிக்கள பெருமைக்கு வாங்கி சுவத்துல மாட்டுனாலும், அதுல வழக்கம் போல அண்ணன்-தம்பி டிவி கம்பெனியோட விளம்பரக்காரன் தான் வந்து வாஆஆஆடான்னு கத்தி எவனுமெ வராத தியேட்டருக்கு கூப்புடுவான்... இத மறந்துட்டு, எல்லாரும் பட்ஜெட்ல ஆஃபர், மந்திரி வார்த்தை சூப்பர்னு வருஷா வருஷம் ஏமாறது மட்டுமில்ல, தொனக்கி நண்பர்களயும் இழுத்து கொல்லயில விடுவாங்க... இத மாதிரி பல உதாரணம் சொல்லலாம்..

ஒரேயொரு வழில வருமானம் வாங்கிக்கிட்டு, நாம ஒவ்வொரு வருஷமும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூவாய்க்கி நம்ம இந்தியாவுல பிரமாதமான யாவாரம் பன்றோம். எல்லாம் நான், நீங்க சேந்து செஞ்சது... இப்டி எக்கச்சக்கமா கண்டது, கேட்டதையெல்லாம் வாங்கறோம், இன்னும் பல வழில நாம சம்பாதிக்கற பணத்த செலவு பன்றோம்.. பணத்த மட்டுமல்ல நேரத்தையும் கூட தான்.. எதெதுக்கோ காலத்தையும், காசையும் செலவழிக்கற நாம சுத்தமா மறந்துட்டது ஒன்னு இருக்கு. அது? அதுக்கு காரனமும் பணமும், மனசு மறத்து போனதும்தான்.......

நீங்களும் ஹீரோதான்.. Image0
நம்ம இந்தியாவுல கடேசி இனம் வறுமை கோட்டுக்கு கீழே இருக்கறவங்கதான்.. ஆனா அவங்களுக்கும் அடுத்து ஒரு இனம் அரசாங்க கணக்குலே வராம இருக்கு தெரியுமா? அவங்கதாங்க ஆதரவற்றோர், அநாதைகள், மன நலமில்லாமல் பெற்றோர், உறவினரால் கைவிடப்பட்டு தெருவில் அலைபவர்கள் மற்றும் மனசாட்சி இல்லாம கைவிடப்படும் முதியோர்கள். சின்ன சின்ன தளிர் குழந்தைகள், முதியோர்கள் இரண்டு வகையினரும் எதிர்பாக்குறது என்ன? காசோ, நல்ல சுவையான உணவோ, உடையோ இல்ல.. அன்பு... அன்பு ஒன்னுதான்... இன்னிக்கி ஆதரவற்றோர், அநாதைகள் மற்றும் முதியோர் இல்லங்கள் அப்டிங்கற விஷயம் பெரிய அளவுல இருக்கறதுக்கு காரனம் நாம பொறுப்பற்றதனமா இருக்கறதுதான்.. நம்ம எல்லாருமே ஏதோ ஒரு வகையில இந்த விஷயத்துல சம்மந்தப் பட்டிருக்கிறோம்...

நீங்களும் ஹீரோதான்.. Taxfree
அதெல்லாம் கிடையாது நான் எப்பவுமே மாச சம்பளத்துல 2% இந்த மாதிரி விஷயங்களுக்கு ஒதுக்கிடுறேன்னு சொல்றீங்களா? அப்டி நீங்க ஒதுக்கறத பதுக்கத்தான் பல பேரு ரெடியா இருக்காங்கன்னு ஞாபகம் வச்சுக்கங்க... அப்டி நீங்க ஒதுக்கறது கூட டாக்ஸ் ஃப்ரீயானு உங்க சுயநலம் பாத்துதானே? அது மட்டுமில்லே கடைதெருவுலயோ, கார் நிக்கற சிக்னல்லயோ கடமைக்கு சில்லறையோ, ஒர்ரூவாயோ தூக்கி போட்டுட்டு தர்மம் தல காக்கும்னு நம்பிக்கிட்டு போறவங்களும் தப்புதான் பன்றீங்கன்னு புரிஞ்சுக்குங்க... ஏன்னா பிச்சை எடுக்கறதுக்குன்னு பல கொழந்தகள கடத்தறாங்கன்னு. கொழந்தகள இழந்த அந்த பெற்றோர்கள் பாவம் இல்லியா? இதெல்லாம் யோசிக்காம நம்ம தல தப்புனா போதுன்னு சில்லறயில புண்னியம் தேடுறோம் நாம..

இந்த முதியோர்கள் இருக்காங்களே அவங்க நெலம ரொம்ப மோசம்.. யாருமே இல்லாம இருக்கறவங்கதான் அநாதங்க, (யாரோ யாரோடயாவது சேந்தாத்தான் கொழந்த பொறக்கும், அப்புறம் எப்டி அநாத? பொறுப்ப தட்டிக் கழிச்சிட்டு போற மனிதம் செத்த பெற்றோர்கள் செய்யற வேல அது) ஆனா பாருங்க, எல்லாரும் இருந்தும் பாத்துக்கற பொறுமையும், அன்பும், கடமயும் மறந்துட்டு சில ஆயிரம் ரூவாய இல்லத்துல கட்டிட்டு பெற்றோர்கள தவிக்க விட்டுட்டு போறாங்களே, அவங்கள என்ன செய்யறது? அந்த அன்ப மறந்த வாரிசுகள நெனச்சே எவ்வளவோ பெரியவங்க உயிர விட்டுருக்காங்க.. ஏக்கமே உயிர கொல்லுங்கறதுக்கு சாட்சியா எத்தன உயிர் போயிருக்கு தெரியுமா?

நீங்களும் ஹீரோதான்.. No-tax-free-shopping-in-washington-state
குப்ப தொட்டியிலே போட்ட கொழந்தங்க, திருடிட்டு வந்து பிச்ச எடுக்க வைக்கற புள்ளங்கனு, இப்டி லட்சக்கணக்கான இளம் தளிர்கள் வெயில்லயும், மழையிலயும் தெருவுல வெறும் சில்லறை காசுக்காக திரியறாங்கன்னு யாராவது நெனச்சி பாத்திருக்கீங்களா? நம்ம வூட்டு புள்ளங்களுக்கு நம்மளால முடிஞ்ச அளவுக்கு கேட்டது, கேக்காததுன்னு வாங்கி கொடுத்து அழகு பாக்குற நாம, இந்த மாதிரி தெருவுல திரியற கொழந்தகள பத்தி ஈஸியா எடுத்துகிட்டு போறோமே ஏன்?

“யோவ் உனக்கு வேற வேலயில்ல, இதே மாதிரி எல்லா விஷயத்துலயும் எதாவது கொற கண்டு புடிச்சுட்டே இரு, அவ அவனுக்கு ஆயிரம் வேலயிருக்கு, நாங்க முடிஞ்ச அளவுக்கு திருப்பதிக்கு வருஷா வருஷம் உண்டியல்ல போட்டுர்றோம்” அப்டின்னு சட்னு சொல்லிட்டு போய்டாதிங்க தோழர்களே... நம்ம எல்லாருக்கிட்டேயும் மனசாட்சி இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கிட்டு இருக்கு. அதனால முடிஞ்ச அளவுக்கு உதவி பன்னுங்க.. உதவின்னதும் தர்மமோ, டொனேஷனோ இல்ல..

நீங்களும் ஹீரோதான்.. Image7
பச்ச கொழந்தகள எங்க பாத்தாலும், அவங்க உண்மையிலே பிச்ச எடுக்கற சூழ்நிலயிலயோ அல்லது வேல பாத்து சாப்புடற நெலமயிலொ இருக்காங்களான்னு தெரிஞ்சுக்குங்க. தெரிஞ்சுக்கிட்டு உங்க அளவுக்கு என்ன உதவி செய்ய முடியுமோ அத தயங்காம, புண்னிய பாவம் எதிர் பாக்காம செய்யுங்க.. அப்டி யாரையுமே நான் பாத்ததுல்லன்னு சொல்றவங்க ஏழ பாழைங்க ளோட கொழந்தைகள படிக்க வைக்க எதாவது ஒரு உதவி பன்னுங்க... டிவி, பேப்பர், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட்ல எவ்வளவோ கொழந்தைகள காணவில்லனு விளம்பரம் வருது, அந்த பெற்றோருக்கு எதாவது துப்பு கொடுத்தீங்கண்னா கூட பெரிய உதவிதான்....(அப்டி தொலச்சவங்க மன நிலய எண்ணி பாருங்க... நம்மூட்டு செல்லங்க, கிழிஞ்ச சட்டயோட தெருவோரத்துல கையேந்துனா எப்டியிருக்கும்? கற்பனையே ஹார்ட் அட்டாக்க வரவழைக்குதுல்ல?)

நீங்களும் ஹீரோதான்.. Billy_and_lilly_001
அநாதைகள் அப்டிங்கற வார்த்தைய நாம நெனச்சா ஒழிச்சிரலாம். ஏன்னா உருவாக்குனதே நாமதான்.. ஆட்டுக் குட்டிக்கு நாய் பால் கொடுக்குது, கொரங்கு பூனக்குட்டிய வளக்குது, இதெல்லாம் பேப்பர்ல பாத்துட்டு பிஸ்கெட் தின்னுட்டு போய்டறோம். அப்ப ஆறறிவு உள்ள நம்மளால நாலு புள்ளங்கல எந்த எதிர் பார்ப்பும் இல்லாம வளத்து ஆளாக்க முடியாதா? மனசு வச்சா முடியும்.

அது மட்டுமல்ல, 2000 ரூவாயிலேருந்து 200000 வரைக்கும் விக்கற வகை வகையான நாய்க்குட்டிகள வாங்கி, அதுக்கு ஜலுக்கா, புலுக்கான்னு ஏதோ ஓர் பேர வச்சி கொஞ்சி குலாவர நெறய பேர், தெருவோர புள்ளைங்களுக்கு, எதோ அந்த நாய் குட்டிக்கு பிஸ்கெட் வாங்கிப்போடற காசளவுக்காவது உதவுனா தேவல....

நீங்களும் ஹீரோதான்.. Image5
வயதானவர்கள் இருக்கற முதியோர் இல்லத்துலயும், ஆதரவற்றோர் மற்றும் அநாதை விடுதிகளிலும் இருக்கறவங்க நல்ல சொகுசா இருக்கறாங்களா? இல்ல. எதோ சாப்பாடு கெடச்சாலும் நிம்மதியும், அன்பும் எதிர் பாத்து, கெடைக்காம வாழ்க்கைய முடிவுக்கு கொண்டு வர போராடிக்கிட்டிருக்கவங்கதான் அங்க இருக்காங்க....

நீங்களும் ஹீரோதான்.. 100
நண்பர்களே, உங்களால எந்தளவுக்கு முடியுமோ அத்தன உதவிகளும் செய்யுங்க,, ஆனா நேரடியா செய்யுங்க... இன்னிய தேதிக்கு நாம நம்மளோட வருஷ சம்பளத்துல ஒரு சில நாள் அல்லது ஒரு நாள் ஊதியத்த, சரி வேனாம் அதுல பாதிய செலவு பன்னா கூட அது பெரிய உதவிதான். பாருங்க, சாராய காசு தான் நம்ம நாட்டோட பட்ஜெட்டுக்கு முதுகெலும்பா இருக்குது.. யாரு காசு அது? எல்லாம் நம்ம கொடுத்ததுதான்.. இப்டி பற்பல வழில நாம அழிக்கறதுல ஒரே ஒரு துளி நம்மை போன்ற சக மனிதர்களுக்கு செலவிடலாமெ? அப்டி செலவு பன்ன நெனச்சா, டி.டி. எடுத்து அனுப்பறத விட நேர்ல குடும்பத்தோட போங்க, (தயவு செய்து ப்ரட், பிஸ்கெட் வாங்கிட்டு போறத தவிருங்க, ஏன்னா எல்லாரும் அதயேதான் வாங்குறாங்க, அதனால தேவை என்னன்னு கேட்டு செய்யுங்க) நாலு வார்த்த அவங்களோட அன்பா பேசுங்க, அப்ப அவங்களுக்கு கிடைக்கிற சந்தோஷம்தான் உங்களுக்கு கிடைக்கிற புண்ணியம்... முக்யமா உங்க புள்ளங்களுக்கு, மத்தவங்களுக்கு உதவறது முக்யம், நல்ல விஷயம்னு கத்து கொடுங்க.. இதோ இப்ப கூட இந்த பதிவ படிக்க எதோ ஒரு ப்ரவுசிங் செண்ட்டருக்கு ஒரு மணி நேரத்துக்கு கொடுக்கற காச கூட வருஷத்துக்கு ஒரு தடவ உங்க கண்ல படற யாருக்காவது உதவியா செஞ்சா கூட போதும். எங்கிட்ட காசு இல்ல நான் கூலிக்கு வேல செய்றேன், ஆனா எப்டி உதவி செய்யறதுன்னு கேக்கறவங்களுக்கு, காசு கொடுத்தலோ, அறுசுவை உணவு போட்டாலோ உதவி இல்லங்க, அன்பா, ‘நல்லாருக்கீங்களான்னு’ ஒரு வார்த்த கேட்டா கூட போதும், இத மாதிரி கேக்க ஆளு இல்லாம இருக்கறவங்கதான் இவங்கெள்லாம்..

நீங்களும் ஹீரோதான்.. Children-reading-book
இதெல்லாம் வாரமோ, மாதமோ போக வேண்டியதில்ல குறைந்த பட்சம் வருஷத்துக்கு ஒரே ஒரு முறையாவது போய் அவங்களுக்கு சந்தோஷம் தந்து உங்க நிம்மதிய கூட்டிக்குங்க... இப்டி விடுதியோ, அநாத ஆஸ்ரமமோ தேட முடியாது / எங்ல ஏரியாவுல இல்லன்னு சொல்றவங்க ஏழ புள்ளங்களுக்கு கல்வி அறிவ கொடுக்க உதவி பன்னுங்க,, பணம் தரலேன்னாலும் ஓய்வு நேரத்துல பாடம் சொல்லி கொடுத்தா கூட போதும்..

நீங்களும் ஹீரோதான்.. Image8அறியாமைய போக்கவும், அன்ப போதிக்கவும் நம்மாளான முயற்சிகள எடுக்கலாம். நாம ஒரு பைசா கூட செலவு செய்யாம நம்ம உடலுழைப்பாலே நாலு பேருக்கு உதவலாம். ஒரு பைசா நமக்கோ, நண்பர்களுக்கோ பிரயோஜனப்படாத, யார் யாருக்கோ கருப்பு பனமா போய் சேர கூடிய பல விஷயங்கள பத்தி வெட்டியா பேசி பொழுத கழிக்கற நேரம், கொஞ்சம் ஆக்க பூர்வமா கருனையோடு செயல் பட்டா, நாளய இந்தியா, நிச்சயம் வல்லரசா மாறலேன்னாலும் மனிதர்களும், மனிதமும் நிறைந்ததா மாறும்... என்றும் உலகளவில் உன்னதமான இடம் பிடிக்கும்.... அதுக்கான மொத அடிய நீங்க ஒவ்வொருவரும் எடுத்து வச்சீங்கன்னா.. மெய்யாலுமே “நீங்களும் ஹீரோதான்”.


நீங்களும் ஹீரோதான்.. Question-mark1ஆகிடுவீங்கள்ல?











by அண்ணாமலையான் நீங்களும் ஹீரோதான்.. 678642

http://annamalaiyaan.blogspot.com/2010/02/blog-post.html




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jul 24, 2010 1:37 pm

நீங்களும் ஹீரோதான்.. 755837 நீங்களும் ஹீரோதான்.. 678642 நீங்களும் ஹீரோதான்.. 678642 நீங்களும் ஹீரோதான்.. 678642 நீங்களும் ஹீரோதான்.. 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 27, 2010 1:18 pm


நண்பர்களே, உங்களால எந்தளவுக்கு முடியுமோ அத்தன உதவிகளும் செய்யுங்க,,
ஆனா நேரடியா செய்யுங்க... இன்னிய தேதிக்கு நாம நம்மளோட வருஷ சம்பளத்துல ஒரு
சில நாள் அல்லது ஒரு நாள் ஊதியத்த, சரி வேனாம் அதுல பாதிய செலவு பன்னா கூட
அது பெரிய உதவிதான். பாருங்க, சாராய காசு தான் நம்ம நாட்டோட பட்ஜெட்டுக்கு
முதுகெலும்பா இருக்குது.. யாரு காசு அது? எல்லாம் நம்ம கொடுத்ததுதான்..
இப்டி பற்பல வழில நாம அழிக்கறதுல ஒரே ஒரு துளி நம்மை போன்ற சக
மனிதர்களுக்கு செலவிடலாமெ? அப்டி செலவு பன்ன நெனச்சா, டி.டி. எடுத்து
அனுப்பறத விட நேர்ல குடும்பத்தோட போங்க, (தயவு செய்து ப்ரட், பிஸ்கெட்
வாங்கிட்டு போறத தவிருங்க, ஏன்னா எல்லாரும் அதயேதான் வாங்குறாங்க, அதனால
தேவை என்னன்னு கேட்டு செய்யுங்க) நாலு வார்த்த அவங்களோட அன்பா பேசுங்க,
அப்ப அவங்களுக்கு கிடைக்கிற சந்தோஷம்தான் உங்களுக்கு கிடைக்கிற
புண்ணியம்... முக்யமா உங்க புள்ளங்களுக்கு, மத்தவங்களுக்கு உதவறது முக்யம்,
நல்ல விஷயம்னு கத்து கொடுங்க.. இதோ இப்ப கூட இந்த பதிவ படிக்க எதோ ஒரு
ப்ரவுசிங் செண்ட்டருக்கு ஒரு மணி நேரத்துக்கு கொடுக்கற காச கூட
வருஷத்துக்கு ஒரு தடவ உங்க கண்ல படற யாருக்காவது உதவியா செஞ்சா கூட போதும்.
எங்கிட்ட காசு இல்ல நான் கூலிக்கு வேல செய்றேன், ஆனா எப்டி உதவி
செய்யறதுன்னு கேக்கறவங்களுக்கு, காசு கொடுத்தலோ, அறுசுவை உணவு போட்டாலோ
உதவி இல்லங்க, அன்பா, ‘நல்லாருக்கீங்களான்னு’ ஒரு வார்த்த கேட்டா கூட
போதும், இத மாதிரி கேக்க ஆளு இல்லாம இருக்கறவங்கதான் இவங்கெள்லாம்..



நீங்களும் ஹீரோதான்.. 678642 நீங்களும் ஹீரோதான்.. 678642 நீங்களும் ஹீரோதான்.. 678642 நீங்களும் ஹீரோதான்.. 678642 நீங்களும் ஹீரோதான்.. 678642 நீங்களும் ஹீரோதான்.. 678642 நீங்களும் ஹீரோதான்.. 678642 நீங்களும் ஹீரோதான்.. 678642 நீங்களும் ஹீரோதான்.. 678642 நீங்களும் ஹீரோதான்.. 678642 நீங்களும் ஹீரோதான்.. 678642 நீங்களும் ஹீரோதான்.. 678642 நீங்களும் ஹீரோதான்.. 678642




நீங்களும் ஹீரோதான்.. Power-Star-Srinivasan
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Tue Aug 03, 2010 12:14 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Tue Aug 03, 2010 12:16 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக