ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே மிகப் பெரிய ஊழல். மத்திய அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி இழப்பு

2 posters

Go down

உலகிலேயே மிகப் பெரிய ஊழல். மத்திய அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி இழப்பு Empty உலகிலேயே மிகப் பெரிய ஊழல். மத்திய அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி இழப்பு

Post by சிவா Wed Nov 17, 2010 1:58 am

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு விவகாரம்: மாஜி தி.மு.க மந்திரி ராசாவின் உலகிலேயே மிகப் பெரிய ஊழல்.

உலகிலேயே மிகப் பெரிய ஊழல். மத்திய அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி இழப்பு 225px-%E0%AE%86.%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE

இந்தியாவில் இதுவரை எத்தனையோ விதமான ஊழல்கள் நடந்திருக்கின்றன. பீகாரில் கால்நடை தீவன ஊழல் நடந்தது. இந்த ஊழலில் சிக்கியவர் சாட்சாத் லல்லுபிரசாத் யாதவ்தான். இவர் அம்மாநில முதல்வராக இருந்தவர்.

முதல்வராக இவர் பதவி வகித்த காலத்தில்தான் ரூ 900 கோடி அளவிற்கு கால்நடை தீவன ஊழல் நடந்ததாக செய்திகள் வெளியானதும் நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். ரூ 900 கோடி ஊழலா?என்று மக்கள் மலைத்துப் போனார்கள். இது தொடர்பான வழக்கு இப்போது நடக்கிறதா என்பது கூட நமக்குத் தெரியவில்லை. அதன் பிறகும் இந்திய நாட்டில் ஏராளமான ஊழல்கள் நடைபெற்றன. முத்திரைத் தாள் மோசடி என்று ஒரு மோசடி பற்றி செய்திகள் வெளியானது. இதில் சம்பந்தப்பட்ட தெல்கி என்பவர் கோடிக்கணக்கில் மோசடி செய்த விவகாரம் நாட்டு மக்களுக்கு தெரியவரவே மக்கள் மேலும் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகு ஹர்சத் மேத்தாவின் பங்குச் சந்தை ஊழல் போன்ற ஊழல்களும் வெளிச்சத்துக்கு வந்தன. சமீபத்தில் கூட காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த ஊழல்கள், மகராஷ்டிரா மாநிலத்தில் கார்கில் போர் வீரர்களுக்காக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டமான ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டத்தில் நடந்த முறைகேடுகள், இப்படி இந்தியாவில் ஊழல்களுக்கு பஞ்சமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஊழல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த ஊழல்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்ட ஊழல்தான் தி.மு.க மந்திரியாக இருந்த ராசாவின் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல். இதில் சம்பந்தப்பட்ட தொகை கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி ரூபாய், இந்த முறைகேட்டால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக தணிக்கை அதிகாரியே சமீபத்தில் தனது இறுதி அறிக்கையில் குற்றம் சாட்டியிருக்கிறார்.

2 ம் தலைமுறைக்கான ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு விவகாரத்தில் இப்படி முறைகேடு நடந்ததாக ஆரம்பத்தில் எதிர்க்கட்சிகள் சொன்ன போது அதை மத்தியில் ஆளும் அரசும் ஒப்புக் கொள்ளவில்லை. காங்கிரசின் கூட்டணி கட்சியான தி.மு.கவும் ஒப்புக் கொள்ளவில்லை. கட்சியே ஒப்புக் கொள்ளாத போது அதில் சம்பந்தப்பட்ட ராசா ஒப்புக் கொள்வாரா என்ன? கடைசி வரை தான் குற்றவாளி அல்ல என்றே அவர் கூறி வந்தார். பிறகு இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு போன பிறகுதான் இந்த ஊழல் சூடு பிடிக்க ஆரம்பித்தது. மத்திய புலனாய்வுத் துறைக்கு குட்டு வைத்த சுப்ரீம் கோர்ட், இது பற்றி விரைவாக விசாரிக்குமாறும் உத்தரவிட்டது. சம்பந்தப்பட்டவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே இடைக்கால அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்த மத்திய கணக்கு தணிக்கை குழு தனது இறுதி அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.

2 ஜி. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவே தனிப்பட்ட பொறுப்பு வகிக்கிறார் என்று அந்த இறுதி அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் அளித்த ஆலோசனையையும் மத்திய சட்டத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய நிதி அமைச்சகம் வழங்கிய ஆலோசனைகளையும் தொலைத் தொடர்பு கமிஷனின் பரிந்துரைகளையும் அலட்சியப்படுத்தி விட்டு சில குறிப்பிட்ட தனியார் தொலைதொடர்பு கம்பெனிகளுக்கு குறைந்த கட்டணத்தில் (அடிமாட்டு விலைக்கு) ஆ.ராசா ஒதுக்கீடு செய்திருக்கிறார் என்றும் இந்த இழப்பீட்டுக்கு தனிப்பட்ட முறையில் ராசாவே பொறுப்பு என்றும் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தனது இறுதி அறிக்கையில் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த ஒதுக்கீட்டில் ராசா தனிப்பட்ட முறையில் செயல்பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்யும் கோப்புகளையும் தனது இறுதி அறிக்கையில் அவர் இணைத்திருந்தார்.

இந்த இழப்பீட்டு விவகார விஷயத்தில் மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயையும் அவர் விட்டு வைக்கவில்லை. அந்த ஆணையத்தையும் தணிக்கை அதிகாரி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். தனது பரிந்துரைகள் அலட்சியப்படுத்தப்பட்டோ அல்லது தவறாக பயன்படுத்தப்பட்டோ வருகிறது என்பது தெரிந்தும் கூட டிராய் தனது கைகளை கட்டிக்கொண்டு வெறுமனே வேடிக்கை பார்த்திருக்கிறது என்றும் அந்த இறுதி அறிக்கையில் தணிக்கை அதிகாரி கூறியிருந்தார்.

மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் இந்த இறுதி அறிக்கை பிரதமர் அலுவலகத்திலும், ஜனாதிபதியிடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற மாபெரும் இழப்பீட்டை செய்த அமைச்சர் ராசா தொடர்ந்து மத்திய அரசில் அங்கம் வகித்திருப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு விவகாரத்தில் மொத்தம் வழங்கப்பட்ட 122 புதிய லைசென்சுகளில் 85 லைசென்சுகள் 12 கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இப்படி லைசென்ஸ் பெற்ற கம்பெனிகளில் பல கம்பெனிகள், தொலை தொடர்பு துறையின் வரையறுக்கப்பட்ட தகுதிகளைக்கூட பெறவில்லை. ஆனால் அவற்றுக்கும் 2 ஜி லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது என்றும், அந்த இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 2 ஜி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட பலவீனமான நடைமுறைகளுக்கும் கணக்கு தணிக்கை அதிகாரி கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.

முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையை ராசா எப்படி நடைமுறைக்கு கொண்டு வந்தார் என்றும் தணிக்கை அதிகாரி கேள்வி எழுப்பினார்.

எவ்வளவு ஸ்பெக்ட்ரம் அலை வரிசை கையிருப்பில் உள்ளது. அதற்கு தேவை எவ்வளவு உள்ளது என்பதை கண்டறியாமல் இந்த 2ஜி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அதிகாரி சுட்டிக்காட்டினார். 2 ஜி ஏலம் தொடர்பாக கடந்த 2007 நவம்பர் மாதம் மந்திரி ராசாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் இந்த ஒதுக்கீடுகளை ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக நடத்த வேண்டும் என்றும் நுழைவுக்கட்டணத்தை மாற்றி அமைக்கும்படியும் பிரதமர் கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு ராசா பதில் கடிதம் ஒன்றை பிரதமருக்கு அனுப்பியுள்ளார். அதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை போதுமான அளவுக்கு இருக்கிறது என்றும் அதனால் புதிதாக வருபவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யலாம் என்றும் ராசா பதில் கடிதத்தில் கூறியிருந்தார்.

இந்த ஒதுக்கீடுகள் எல்லாமே சரியான நடைமுறைகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக செய்யப்பட்டுள்ளன என்றும் இதற்கெல்லாம் ராசாவே காரணம் என்றும் கணக்கு தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் கூறியிருந்தார். இந்த அறிக்கை வெளியான பிறகு ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் ஞீதாகரமாக வெடித்தது. ராசாவை நீக்கக் கோரி ஜனாதிபதிக்கு தந்தி அனுப்புமாறு இந்திய மக்களை அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். அதன் படி ஜனாதிபதிக்கு இந்திய மக்கள் தந்திகளை லட்சக்கணக்கில் அனுப்பினர். பா.ஜ.க, இடதுசாரிகள் போன்ற கட்சிகளும் இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்பி சபையையே ஸ்தம்பிக்க வைத்தன. ராசாவை நீக்காவிட்டால் பாராளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் எச்சரிக்கவே, ஆளும் கட்சியான காங்கிரஸ் அரண்டு போனது. அவசர அவசரமாக காங்கிரசின் உயர் மட்டத் தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசிக்க, இக்கூட்டத்தின் முடிவு தி.மு.க தலைவரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த விஷயத்தில் தயக்கம் காட்டிய முதல்வர் கருணாநிதி இறுதியில் வேறு வழியின்றி ராசா பதவி விலகுவதற்கு ஒப்புக் கொண்டாராம். அப்போது கூட ராசா குற்றவாளி இல்லை என்றே அவர் கூறியிருக்கிறார். எது எப்படியோ, தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ராசா, ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தின் எதிரொலியாக தற்போது பதவி விலகி உள்ளார். இது அ.தி.மு.க, பா.ஜ.க போன்ற எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும். அவர்கள் இதை இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகிறார்கள். உலகிலேயே மிகப் பெரும் ஊழலை செய்து கின்னஸ் சாதனை படைத்த ராசா, பதவி விலகினால் போதாது. அவரை மத்திய அரசு ஊழல் தடுப்பு சட்டத்தில் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் இப்போது புதிய கோரிக்கையை வைத்துள்ளனர். அவர்களின் இந்த கோரிக்கையும் வெற்றி பெற வேண்டும். ஊழலில் சிக்கியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.


உலகிலேயே மிகப் பெரிய ஊழல். மத்திய அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி இழப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகிலேயே மிகப் பெரிய ஊழல். மத்திய அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி இழப்பு Empty Re: உலகிலேயே மிகப் பெரிய ஊழல். மத்திய அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி இழப்பு

Post by thirujothi Wed Nov 17, 2010 2:19 am

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா....வாழ்க முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி.... ஊழழின் மொத்த வுரு
thirujothi
thirujothi
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 22/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  இந்திய கடல் பகுதிகளில் தோரியம் கடத்தப்பட்டதில், அரசுக்கு 60 லட்சம் கோடி இழப்பு
» ஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..!
» மத்திய அரசுக்கு ரூ.1½ லட்சம் கோடி பாக்கி: தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மறுஆய்வு மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» உலகிலேயே மிகப் பெரிய பூ!
» தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum