புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெல்ல முடியாத வீரம்! Poll_c10வெல்ல முடியாத வீரம்! Poll_m10வெல்ல முடியாத வீரம்! Poll_c10 
73 Posts - 77%
heezulia
வெல்ல முடியாத வீரம்! Poll_c10வெல்ல முடியாத வீரம்! Poll_m10வெல்ல முடியாத வீரம்! Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
வெல்ல முடியாத வீரம்! Poll_c10வெல்ல முடியாத வீரம்! Poll_m10வெல்ல முடியாத வீரம்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
வெல்ல முடியாத வீரம்! Poll_c10வெல்ல முடியாத வீரம்! Poll_m10வெல்ல முடியாத வீரம்! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெல்ல முடியாத வீரம்! Poll_c10வெல்ல முடியாத வீரம்! Poll_m10வெல்ல முடியாத வீரம்! Poll_c10 
238 Posts - 76%
heezulia
வெல்ல முடியாத வீரம்! Poll_c10வெல்ல முடியாத வீரம்! Poll_m10வெல்ல முடியாத வீரம்! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
வெல்ல முடியாத வீரம்! Poll_c10வெல்ல முடியாத வீரம்! Poll_m10வெல்ல முடியாத வீரம்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வெல்ல முடியாத வீரம்! Poll_c10வெல்ல முடியாத வீரம்! Poll_m10வெல்ல முடியாத வீரம்! Poll_c10 
8 Posts - 3%
prajai
வெல்ல முடியாத வீரம்! Poll_c10வெல்ல முடியாத வீரம்! Poll_m10வெல்ல முடியாத வீரம்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வெல்ல முடியாத வீரம்! Poll_c10வெல்ல முடியாத வீரம்! Poll_m10வெல்ல முடியாத வீரம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வெல்ல முடியாத வீரம்! Poll_c10வெல்ல முடியாத வீரம்! Poll_m10வெல்ல முடியாத வீரம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
வெல்ல முடியாத வீரம்! Poll_c10வெல்ல முடியாத வீரம்! Poll_m10வெல்ல முடியாத வீரம்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வெல்ல முடியாத வீரம்! Poll_c10வெல்ல முடியாத வீரம்! Poll_m10வெல்ல முடியாத வீரம்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வெல்ல முடியாத வீரம்! Poll_c10வெல்ல முடியாத வீரம்! Poll_m10வெல்ல முடியாத வீரம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெல்ல முடியாத வீரம்!


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Nov 15, 2010 4:21 pm

எதிர்வரும் 27 நவம்பர் அன்று ஈழத்தமிழ் மக்களின், போரில் இழந்த வீரமைந்தர் நினைவு நாளைக் குறித்து இது அமைகிறது. இதைபற்றிய கருத்துக்கள் குறை நிறை விரும்பின் தாருங்கள். .


மானாடி மயிலாடி மரம்மீது குயில்கூவி
மகிழுமோர் நாட்டினிலே
தேனோடி சுவைக்கின்ற தீந்தமிழ் மொழிபேசும்
திருநாட்டின் நிலம் காக்கவே
வானோடி நிலமோடி வளையுகடல் நீரோடி
வெல்கின்ற படைகொண்டுமே
தானோடி எல்லோர்க்கும் தமிழர்க்கு முன்னோடி
தலைவனும் இருந்தானங்கே

போராடி வெல்கின்ற தீரமும் நெஞ்சிலே
பொய்மையே அற்ற மறமும்
வீராதிவீரர்கள் விளையாடிக் களம்கண்டு
வெற்றியைக் கொள்ளும் பலமும்
மாறாத நிலைகொண்ட மைந்தரும் கண்டுலகு
மனதிடை பயம் கொண்டதோ
ஊராகி நாடாகி உலகாளும் வீரரென்
றுளம்மீது கிலிகொண்டதோ


கூனோடி நிமிராத கொள்கையைக் கொண்டொரு
கொடுமைகொள் நிலமானதே
பூநாடிவரும் வண்டு போலாகி தானுண்ணப்
புகுந்ததோ நம்வீட்டிலே
சேய்நாடி வருகின்ற தாயென்றுசொல்லியே
தெரியாமல் விஷம் பற்றியே
வாய்மீது அமுதூட்டும் வழிதன்னில் விசமாக்கி
வா என்று பால் தந்ததே!

போராடி வெல்லாத படையுமோர் படைதானோ
பொய்மையில் கால்கொண்டுமே
தேரோட முடியாது திறனற்ற படைதானும்
திருநாட்டின் ஒரு ஊனமே
நேரோடி வெல்கின்ற நெஞ்சத்து உரம்கொண்ட
நெறிகாத்த தமிழ் வீரரைப்
போராடி வெல்லவே முடியாது என்றிடப்
புகை நஞ்சில் கொலைசெய்ததே

மார்தட்டிப் பயில்வானும் சண்டைக்கு வருகையில்
ஒருவனுக் கொரு சோடியே
பாரெங்கும் பலம்பார்க்க அவனுக்கு இவனென்று
பார்ப்பது ஒருநீதியே
ஊருக்குத் தமீழீழ உயிருக்கு அதுஇல்லை
நூறுக்கு ஒன்றானதே
யாருக்கு நீதியைக் கேட்பதோ உலகெங்கும்
போருக்கு எதிர்நின்றதே

நீபத்து போட்டிடில் நான்பத்து குண்டென
போட்டிக்கு பொருள் ஈந்ததே
ஆபத்து ஒன்றல்ல அகிலத்து நிலமெங்கும்
அணிதிரண் டுயிர் கொன்றதே
ஓர்பத்து வயதான உரம்கொண்ட சிறுவனை
ஈர்பத்து பயில்வான்களே
கால்பற்ற ஒருவனும் கைபற்ற ஒருவனும்
கழுத்துக்குச் சுருக்கிட்டதேன்

நீதிக்கு நானென்று நிற்பவன் யாவரும்
நெஞ்சத்தில் பொய்கூறியே
பாதிக்கு மனிதனும் மீதிக்கு மிருகமும்
பார்க்கின்ற நிலையானதே
சேதிக்குஅல்லநீ சிந்தையில் கொண்டிடு
சிதைகின்ற அறம்யாவுமே
பூமிக்கு அழிவென்ற போர்வைக்கு வழிகோலும்
புதுயுகம் பிறக்கட்டுமே!

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon Nov 15, 2010 10:46 pm

சகோதரர் கிரி அவர்களே.... அருமையான படைப்பு.

நடந்த அத்தனையும் கண்முன்னே கொண்டுவந்து என்னை மறுபடி கலங்கச் செய்துவிட்டீர்.

கொடுமைகளின் உச்சமென மிச்சமில்லாமல் செய்த சதிச்செயல்களை செய்வதறியாது ஒட்டுமொத்தத் தமிழினமும் திகைத்து நின்றதே. தமிழினத்தை அழிப்பதையே தனது கொள்கையென கொண்டதை தெளிவாகக் கூறியுள்ளீர் இவ்வரிகளில்....

"கூனோடி நிமிராத கொள்கையைக் கொண்டொரு
கொடுமைகொள் நிலமானதே"


இலங்கையில் அந்தக் கொடூரம் அரங்கேறிய வேளையில் வல்லரசாக மாறுவதாக மார்தட்டிக் கொண்டு நல்லரசுகளாக நடித்துக் கொண்டிருக்கும்
எல்லாஅரசுகளும் வீரம் செறிந்த படைகொண்டிருந்தும் ஏதும் செய்ய முடியாத திறனற்றதாயிருந்ததை கோபமும் ஆதங்கமும் ஒருசேரக் கூறியுள்ளீர் இங்கு.

"தேரோட முடியாது திறனற்ற படைதானும்
திருநாட்டின் ஒரு ஊனமே"

தமிழர்களின் வீரத்தை அழகாகக் கூறி நேருக்கு நேர் வெல்லமுடியாமல் மறைந்திருந்து ராமன் வாலியைக் கொன்று அறம் காத்ததாய் கூறியதுபோல் தானே இங்கும் அரங்கேறியது என்று நேரடியாய்க் கூறியுள்ளீர்..

“நேரோடி வெல்கின்ற நெஞ்சத்து உரம்கொண்ட
நெறிகாத்த தமிழ் வீரரைப்
போராடி வெல்லவே முடியாது என்றிடப்
புகை நஞ்சில் கொலைசெய்ததே”


செவிடர் சமுதாயத்தில் சங்கொலி கேட்குமா? எங்கு சென்று நாம் முறையிடுவதென்று அரசாங்கம் கைவிட்ட அநாதைகளாக அலைந்த நேரத்தை அப்படியே பதித்துள்ளீர்

“யாருக்கு நீதியைக் கேட்பதோ உலகெங்கும்
போருக்கு எதிர்நின்றதே
நீபத்து போட்டிடில் நான்பத்து குண்டென
போட்டிக்கு பொருள் ஈந்ததே



மனதைப் பிசைகின்ற வலிஉணர்கிறேன் இந்த வரிகள் வாசிக்கும்போது

"அகிலத்து நிலமெங்கும்
அணிதிரண் டுயிர் கொன்றதே"


அடுத்த வரிகளைப் படிக்கும்போது கண்ணெதிரே தெரிகிறது மீண்டும் அக்காட்சிகள் கண்ணீரில் மிதக்கிறது மீண்டும் அந்நினைவுகள்.

"ஓர்பத்து வயதான உரம்கொண்ட சிறுவனை
ஈர்பத்து பயில்வான்களே

கால்பற்ற ஒருவனும் கைபற்ற ஒருவனும்
கழுத்துக்குச் சுருக்கிட்டதேன்?"



பழுதாகிப்போன மனிதம்
முழுதாகத் தெரிகிறது எனக்கு

பாதிக்கு மனிதனும் மீதிக்கு மிருகமும்
பார்க்கின்ற நிலையானதே"



சேதிக்கு அல்லநீ சிந்தையில் கொண்டிடு
சிதைகின்ற அறம்யாவுமே
பூமிக்கு அழிவென்ற போர்வைக்கு வழிகோலும்" -எனக்கூறி
மிகத் தெளிவாகாக முடித்துள்ளீர் இக்கவிதையை...

பாராட்டுக்கள் கூற இது மகிழ்ச்சியான தருணமல்ல.... இவ்வேதனையில் நானும் பங்கேற்கிறேன்.


தங்கள் தமிழ்த் தங்கை
யாதுமானவள்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Nov 15, 2010 11:20 pm

சகோதரி யாதுமானவளுக்கு,
உங்கள் உணர்வுகளுக்கு தலை வணங்குவதோடு துயரத்தை பங்கிட்டமைக்கு நன்றிகள்! வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக