புதிய பதிவுகள்
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காட்டேரியம்மன்  கதை Poll_c10காட்டேரியம்மன்  கதை Poll_m10காட்டேரியம்மன்  கதை Poll_c10 
59 Posts - 42%
heezulia
காட்டேரியம்மன்  கதை Poll_c10காட்டேரியம்மன்  கதை Poll_m10காட்டேரியம்மன்  கதை Poll_c10 
36 Posts - 26%
Dr.S.Soundarapandian
காட்டேரியம்மன்  கதை Poll_c10காட்டேரியம்மன்  கதை Poll_m10காட்டேரியம்மன்  கதை Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
காட்டேரியம்மன்  கதை Poll_c10காட்டேரியம்மன்  கதை Poll_m10காட்டேரியம்மன்  கதை Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
காட்டேரியம்மன்  கதை Poll_c10காட்டேரியம்மன்  கதை Poll_m10காட்டேரியம்மன்  கதை Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
காட்டேரியம்மன்  கதை Poll_c10காட்டேரியம்மன்  கதை Poll_m10காட்டேரியம்மன்  கதை Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
காட்டேரியம்மன்  கதை Poll_c10காட்டேரியம்மன்  கதை Poll_m10காட்டேரியம்மன்  கதை Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காட்டேரியம்மன்  கதை Poll_c10காட்டேரியம்மன்  கதை Poll_m10காட்டேரியம்மன்  கதை Poll_c10 
310 Posts - 50%
heezulia
காட்டேரியம்மன்  கதை Poll_c10காட்டேரியம்மன்  கதை Poll_m10காட்டேரியம்மன்  கதை Poll_c10 
183 Posts - 30%
Dr.S.Soundarapandian
காட்டேரியம்மன்  கதை Poll_c10காட்டேரியம்மன்  கதை Poll_m10காட்டேரியம்மன்  கதை Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
காட்டேரியம்மன்  கதை Poll_c10காட்டேரியம்மன்  கதை Poll_m10காட்டேரியம்மன்  கதை Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
காட்டேரியம்மன்  கதை Poll_c10காட்டேரியம்மன்  கதை Poll_m10காட்டேரியம்மன்  கதை Poll_c10 
21 Posts - 3%
prajai
காட்டேரியம்மன்  கதை Poll_c10காட்டேரியம்மன்  கதை Poll_m10காட்டேரியம்மன்  கதை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
காட்டேரியம்மன்  கதை Poll_c10காட்டேரியம்மன்  கதை Poll_m10காட்டேரியம்மன்  கதை Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
காட்டேரியம்மன்  கதை Poll_c10காட்டேரியம்மன்  கதை Poll_m10காட்டேரியம்மன்  கதை Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
காட்டேரியம்மன்  கதை Poll_c10காட்டேரியம்மன்  கதை Poll_m10காட்டேரியம்மன்  கதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
காட்டேரியம்மன்  கதை Poll_c10காட்டேரியம்மன்  கதை Poll_m10காட்டேரியம்மன்  கதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காட்டேரியம்மன் கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 14, 2009 3:24 pm

பரமசிவனும் பார்வதியும் தூங்கச் சென்றனர். எப்போதும் போல் பரமசிவன் சீக்கிரம் தூங்கிப் போய்விட்டார். பரமசிவன் தூங்கிய பிறகு, நடு இரவில் எப்போதும் கிளம்புவது போல் பார்வதி கிளம்பிவிட்டாள். அன்று மட்டும் தற்செயலாகப் பரமசிவன் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டார். சுற்றும் முற்றும் பார்த்தார். தன் பக்கத்தில் படுத்திருந்த பார்வதியைக் காணவில்லை. தேடிப் பார்த்துவிட்டுப் பரமசிவன் தூங்கிப் போனார். தன் வேலையை முடித்துக் கொண்ட பார்வதி, ஒன்றும் தெரியாதது போல் பரமசிவன் பக்கத்தில் வந்து படுத்துத் தூங்கினாள். காலையில் எழுந்த பரமசிவன், 'ராத்திரி எங்கே போனே?' என்று கேட்டார். பார்வதிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு 'எங்கேயும் போகலியே' என்று மறுத்தாள். பரமசிவனுக்குக் கோபம் வந்தது. 'நான் எழுந்து பார்த்தேன்.உன்னைக் காணவில்லை. பொய் சொல்லாதே' என்றார் கோபமாக. பார்வதி சிரித்துக் கொண்டே 'அதுவா... எனக்குத் தூக்கம் வரவில்லை. அதனால், உலாவிவிட்டு வந்தேன்' என்றாள். அதற்கு மேல் பரமசிவன் எதுவும் கேட்கவில்லை.

மறுநாள் இரவு பரமசிவனுக்குத் தூக்கம் வரவில்லை. நடு இரவில் பார்வதி தன் வேலைக்குக் கிளம்பினாள். பார்வதி புறப்படுவதைத் தெரிந்து கொண்ட பரமசிவன் அவளுக்குத் தெரியாமல் பார்வதியின் பின்னாலேயே போனார். பார்வதி நேராகச் சுடுகாட்டுக்குச் சென்று விகாரமான உருவெடுத்து, புதைத்து வைத்திருந்த பிணங்களைத் தோண்டி எடுத்துக் கடித்துத் தின்றாள். எரியும் பிணங்களைப் பிடுங்கித் தின்றாள். இதைப் பார்த்த பரமசிவன் அதிர்ச்சியடைந்தார். 'தினமும் இதற்குத்தான் வருகிறாள் போலிருக்கிறது' என்று உறுதி செய்துகொண்ட பரமசிவன் வீடு திரும்பினார். அன்று காலை அவர் பார்வதியை எதுவும் கேட்கவில்லை. இயல்பாக இருந்துவிட்டார்.

பார்வதியின் இந்தச் செயலுக்கு முடிவு கட்ட எண்ணிய பரமசிவன் ஒரு திட்டம் போட்டார். பகல் வேளையில் நேராகச் சுடுகாட்டுக்குப் போகும் வழியில் அகலமாகவும் ஆழமாகவும் ஒரு குழியை வெட்டினார். அதன் மேல் புல், தழைகளைப் போட்டு மூடிவிட்டு வந்துவிட்டார். நள்ளிரவு வந்தது. பார்வதி புறப்பட்டாள். நேற்றுப் போலவே இன்றும் பரமசிவன் பார்வதியைப் பின்தொடர்ந்தார். மிகவும் ஆர்வத்தோடு போன பார்வதிக்கு வழியில் குழி இருப்பது தெரியவில்லை. குழிக்குள் விழுந்துவிட்டாள் பார்வதி. பின்னாலேயே தொடர்ந்து சென்ற பரமசிவன் குழியில் இருக்கும் பார்வதியைப் பார்த்தார். பார்வதிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தன்னுடைய சுயரூபம் தெரிந்துவிட்டதே என்ற அச்சம். 'என்னை மன்னிச்சிடுங்க, எனக்குப் பிணம் தின்னும் ஆசை வந்துவிட்டதால் சுடுகாட்டுக்கு வருவேன். உங்களுக்குத் தெரிந்தால் திட்டுவீர்கள் என்பதால் நீங்கள் தூங்கிய பிறகு வந்துகொண்டிருந்தேன். இனி அப்படிச் செய்ய மாட்டேன்' என்று பார்வதி சொன்னாள். 'உன்னை அப்படியே என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. உன்னிடம் உள்ள இந்த ராட்சதக் குணத்தை விட்டுவிட்டு வந்தால் ஏற்றுக் கொள்கிறேன்' என்றார் பரமசிவன். 'அப்படியே செய்கிறேன். இந்தக் குழியிலேயே என்னுடைய மற்றொரு உருவை விட்டு வருகிறேன். என்னை வணங்குபவர்களுக்கு இனி நன்மைகள் செய்வேன்' என்று பார்வதி உறுதி அளித்ததும் பார்வதியை வெளியில் எழுப்பினார். பார்வதி வெளியே வந்ததும் அந்தக் குழியை மூடினார் பரமசிவன். இன்றும் புதையுண்ட பார்வதியின் சக்தியான 'காட்டேரி' பூமிக்கடியில் இருப்பதாக நம்புகின்றனர். காட்டேரியம்மன் காவல்தெய்வமாக வழிபடப்பட்டு வருகிறாள். சிலருக்குக் குலதெய்வமாகவும் இருக்கிறாள்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் உள்ள மேல்சீசமங்களத்தில் வாழ்ந்து வரும் மக்கள் கூட்டத்தில் எண்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நடுக்கொத்து வகையறாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் காட்டேரியம்மனைத் தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

காட்டேரியம்மனுக்குக் கோயில் கட்டிடம் என்று ஒன்றும் இல்லை. ஒரு வேப்பமரத்தடியில் உள்ள 'குழி' மட்டுமே வழிபாட்டுக்குரிய தளம். ஒவ்வொரு ஆண்டும் விழா நடத்தப்படுவதில்லை. விளைச்சல் அதிகமாக இருக்கும்போது பங்காளிகள் அனைவரும் செலவைப் பகிர்ந்து கொண்டு விழா எடுப்பதாகச் சொல்லப்படுகிறது. நேர்த்திக்கடனைச் செலுத்துபவர்கள் சிலர் அவ்வப்போது வந்து காட்டேரியம்மனை வழிபடுகின்றனர்.

ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் காட்டேரியம்மன் வழிபடப்படுகிறாள். நடுக்கொத்து வகையறாவில் வயதானவர் அம்மனுக்குப் பூசாரியாக இருப்பார். அவர் ஒரு புதுத் துணியால் வாயைக் கட்டிக்கொண்டு காட்டேரியம்மனுடைய குழியை மூடியிருக்கும் தழை குப்பைக் கூளங்களை எடுத்துச் சுத்தம் செய்வார். ஏற்கனவே இருக்கும் மண்ணையும் ஓரங்குலம் வெட்டி எடுக்கின்றனர். பின்னர் தண்ணீர் தெளித்துச் சுத்தம் செய்து புதிய மண்ணில் பிடித்த பிள்ளையார்களை எண்ணாமல் குழியில் வைக்கின்றனர். காட்டேரியம்மனுக்குப் படைக்கப்படும் வெற்றிலை, பாக்கு, கருப்புமணி, கற்பூரம், கொழுக்கட்டை எவற்றையுமே எண்ணுவதில்லை. 'எண்ணாத பொருள்' என்றுதான் சொல்கின்றனர்.

குழியின் நடுவில் ஒரு இலை போட்டுச் சோறு படைக்கின்றனர். கறுப்புப் பெட்டைக் கோழியைப் பலியிட்டு அதன் ரத்தத்தைச் சோற்றில் விட்டுப் பிசைந்து நான்கு திசைகளில் வீசி எறிகின்றனர். அதன் பிறகு, படைக்கப்பட்ட கொழுக்கட்டையைப் பங்காளிகள் பகிர்ந்து கொள்கின்றனர். காட்டேரியம்மனுக்குப் படைக்கப்படும் எந்தப் பொருளையும் மற்ற வகையறாவினருக்குக் கொடுப்பதில்லை. மற்றவர்களும் அப் பொருட்களை வாங்க மாட்டார்களாம். காட்டேரியம்மன் மேல் அப்படியொரு பயம் இன்றும் உள்ளது. வழிபாடு முடிந்ததும் அந்தக் குழியை மூடி விடுகின்றனர். அடுத்த வழிபாட்டின்போது குழி மீண்டும் தோடப்பட்டு சுத்தப்படுத்தப்படும்.

தாய்ப்பால் இல்லாத பெண்மணிகள், பிரசவ வலியால் துடிப்பவர்கள் ஆகியோர் காட்டேரியம்மனை வழிபட்டால் உடனே தீர்வு கிடைப்பதாக நம்புகின்றனர். மூடப்படும் குழியில் காட்டேரியம்மன் என்றும் இருப்பதாக நம்பி வருகின்றனர்.

cityboy
cityboy
பண்பாளர்

பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009

Postcityboy Fri Aug 14, 2009 3:37 pm

சுவாரசியமான அம்மன் கதை மெய் சிலிர்க்க வைக்கிறது..
நன்றி

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Aug 14, 2009 3:47 pm

சார் பேய் இருக்கா!! இல்லையா!! பாத்துருக்கங்களா!! பாக்கலையா !!



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக