புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்-பெண் சமத்துவம் I_vote_lcapஆண்-பெண் சமத்துவம் I_voting_barஆண்-பெண் சமத்துவம் I_vote_rcap 
62 Posts - 43%
heezulia
ஆண்-பெண் சமத்துவம் I_vote_lcapஆண்-பெண் சமத்துவம் I_voting_barஆண்-பெண் சமத்துவம் I_vote_rcap 
45 Posts - 31%
mohamed nizamudeen
ஆண்-பெண் சமத்துவம் I_vote_lcapஆண்-பெண் சமத்துவம் I_voting_barஆண்-பெண் சமத்துவம் I_vote_rcap 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆண்-பெண் சமத்துவம் I_vote_lcapஆண்-பெண் சமத்துவம் I_voting_barஆண்-பெண் சமத்துவம் I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஆண்-பெண் சமத்துவம் I_vote_lcapஆண்-பெண் சமத்துவம் I_voting_barஆண்-பெண் சமத்துவம் I_vote_rcap 
6 Posts - 4%
prajai
ஆண்-பெண் சமத்துவம் I_vote_lcapஆண்-பெண் சமத்துவம் I_voting_barஆண்-பெண் சமத்துவம் I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
ஆண்-பெண் சமத்துவம் I_vote_lcapஆண்-பெண் சமத்துவம் I_voting_barஆண்-பெண் சமத்துவம் I_vote_rcap 
4 Posts - 3%
Saravananj
ஆண்-பெண் சமத்துவம் I_vote_lcapஆண்-பெண் சமத்துவம் I_voting_barஆண்-பெண் சமத்துவம் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
ஆண்-பெண் சமத்துவம் I_vote_lcapஆண்-பெண் சமத்துவம் I_voting_barஆண்-பெண் சமத்துவம் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
ஆண்-பெண் சமத்துவம் I_vote_lcapஆண்-பெண் சமத்துவம் I_voting_barஆண்-பெண் சமத்துவம் I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்-பெண் சமத்துவம் I_vote_lcapஆண்-பெண் சமத்துவம் I_voting_barஆண்-பெண் சமத்துவம் I_vote_rcap 
181 Posts - 40%
ayyasamy ram
ஆண்-பெண் சமத்துவம் I_vote_lcapஆண்-பெண் சமத்துவம் I_voting_barஆண்-பெண் சமத்துவம் I_vote_rcap 
177 Posts - 40%
mohamed nizamudeen
ஆண்-பெண் சமத்துவம் I_vote_lcapஆண்-பெண் சமத்துவம் I_voting_barஆண்-பெண் சமத்துவம் I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆண்-பெண் சமத்துவம் I_vote_lcapஆண்-பெண் சமத்துவம் I_voting_barஆண்-பெண் சமத்துவம் I_vote_rcap 
21 Posts - 5%
prajai
ஆண்-பெண் சமத்துவம் I_vote_lcapஆண்-பெண் சமத்துவம் I_voting_barஆண்-பெண் சமத்துவம் I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆண்-பெண் சமத்துவம் I_vote_lcapஆண்-பெண் சமத்துவம் I_voting_barஆண்-பெண் சமத்துவம் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
ஆண்-பெண் சமத்துவம் I_vote_lcapஆண்-பெண் சமத்துவம் I_voting_barஆண்-பெண் சமத்துவம் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆண்-பெண் சமத்துவம் I_vote_lcapஆண்-பெண் சமத்துவம் I_voting_barஆண்-பெண் சமத்துவம் I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
ஆண்-பெண் சமத்துவம் I_vote_lcapஆண்-பெண் சமத்துவம் I_voting_barஆண்-பெண் சமத்துவம் I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
ஆண்-பெண் சமத்துவம் I_vote_lcapஆண்-பெண் சமத்துவம் I_voting_barஆண்-பெண் சமத்துவம் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்-பெண் சமத்துவம்


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Aug 13, 2009 6:42 pm

இன்று பெரும்பாலான பெண்களிடம், "நாம் முன்னேற வேண்டும்" என்ற மனநிலையே காணப்படுகிறது. பெண்கள் முன்னேற வேண்டும் என்பது உண்மையே. அதேசமயம், இடையிடையே பின்னால் திரும்பியும் பார்க்க வேண்டும். காரணம், அவர்களுக்குப் பின்னால் அவர்களின் குழந்தை தொடர்ந்து வருகிறது. தாய் தனது குழந்தைக்காக சிறிது பொறுமையைக் கடைபிடிப்பது அவசியம். குழந்தைக்கு அவளது வயிற்றில் இடம் கொடுப்பது மட்டும் போதாது, இதயத்திலும் இடமளிக்க வேண்டும்.

எதிர்கால சமுதாயத்தின் உறுதியும், அழகும், நறுமணமும் உண்மையில் தாய் மூலமே வெளிப்பட வேண்டும். தாயே முதல் குரு. குழந்தைகள் மீது அதிகமான செல்வாக்கு செலுத்த ஒரு தாயால்தான் முடியும். தாயின் செயல்களையே குழந்தைகள் அதிகமாக கிரகிக்கின்றன. தாய்ப்பாலானது குழந்தையின் உடலை மட்டும் வளர்க்கவில்லை. அது குழந்தையின் மனம், புத்தி மற்றும் இதயத்தின் வளர்ச்சிக்கும் கூடக் காரணமாகிறது.

அதேபோல், தாய் மூலம் வழங்கப்படும் வாழ்க்கைப் பண்பும், முன்னுதாரணமுமே குழந்தையின் எதிர்கால வாழ்வுக்குத் தேவையான ஆற்றலையும், தைரியத்தையும் வழங்குகிறது. ஆணுக்குப் பிறப்பளிப்பதும், அவனை வளர்த்து ஆளாக்குவதும் ஒரு பெண் எனும்போது, ஆணுக்கும் பிறப்பளித்த பெண்ணுக்கு நிச்சயமாக ஆணுக்கு சமமான இடத்தை அளிக்க வேண்டும். தாய்மார்கள் விழித்தெழுந்து செயல்பட்டால் மட்டுமே அன்பு, கருணை, செழிப்பு நிறைந்த ஒரு புதிய யுகம் மலர இயலும்.

வெகுகாலத்திற்கு முன்பு ஒரு அரசி (கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட சோழ அரசர் சுபதேவரின் மனைவி கமலவதி) கருவுற்றாள். அவளுக்கு பிரசவ வேதனை எடுத்தது. ஆஸ்தான ஜோதிடர் கிரக நிலைகளை நோக்கிய பின், "இன்னும் ஒரு முகூர்த்தத்திற்குப் பிறகு பிரசவத்திற்கு மிகவும் உத்தமமான லக்னம் வருவதாகவும், அப்போது குழந்தை பிறந்தால், அனைத்து நற்குணங்களின் இருப்பிடமான மகன் பிறப்பான். அவன் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை புரிவான். நற்புகழுடன் விளங்குவான்" என்றும் கூறினார்.

இதைக்கேட்ட அரசி, அந்த லக்னம் வருவதற்கு முன்பே குழந்தை பிறந்துவிடாமல் இருப்பதற்காகத் தனது கால்களை கட்டித் தலைகீழாகத் தொங்கவிடச் சொன்னாள். சகிக்க முடியாத கஷ்டத்தை அவள் குழந்தையின் மேன்மையின் பொருட்டுத் தாங்கிக் கொண்டாள். அவளது விருப்பப்படியே நல்ல லக்னத்தில் குழந்தை பிறந்தது. ஆனால், அரசி இறந்துவிட்டாள். (தாயைத் தலைகீழாகக் கட்டித் தொடங்கவிட்டதால் குழந்தை முகமெல்லாம் ரத்தம் ஏறியிருந்தது. குறிப்பாகக் கண்களில் ரத்தக் கட்டிச் சிவப்பாக இருந்த காரணத்தால் அவனுக்கு கோச்செங்கண் எனப் பெயர் சூட்டினர்.) அவன் வளர்ந்து பின்னர் அரசனாக ஆனபோது, நாட்டின், நாட்டு மக்களின் நலனுக்காக அயராது பாடுபட்டான். அவன் பல அழகு வாய்ந்த ஆலயங்களைக் கட்டினான். பூமி செழித்தது. மக்கள் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்தனர். (இவர் 63 நாயன்மார்களில் ஒருவராவார்.)

"எனக்கு என்ன கிடைக்கும்?" என்றே இன்று அனைவரும் சிந்திக்கிறார்கள். நான் எதைப் பெறலாம் என்று சிந்திக்காமல், சமூக நலனிற்காக என்னால் எதை வழங்க முடியும் என்றே சிந்திக்க வேண்டும்.

பெண்ணின் ஆத்மசக்தி பெருகிச் செல்லும் நதியைப் போன்றது. நதி செல்லும் வழியில் மலை தடையாக நின்றால், நதியானது மலையைச் சுற்றி வளைந்து செல்லும். கற்பாறைகள் காணப்பட்டால், தடைப்பட்டு நின்றுவிடாமல் அவற்றிற்கு இடையில் நுழைந்து செல்லும். சில சமயங்களில் நதியானது பாறைகளின் மீதும், பாறைகளுக்கு அடியிலும் செல்லும். அதேபோல், பெண்ணிடம் எந்தத் தடையையும் கடந்து சென்று இலட்சியத்தை அடையும் ஆற்றல் உள்ளது. பெண்ணிடம் காணப்படும் இந்த சக்திக்குத் தகுந்த மதிப்பு கொடுக்க ஆண்கள் முன்வர வேண்டும். சமூகத்தின் முழுமையான வளர்ச்சிக்காக, ஆண்கள் பெண்களைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளவும், அவர்களை ஊக்குவிக்கவும் வேண்டும்.



ஆண்-பெண் சமத்துவம் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Aug 13, 2009 6:43 pm

பழங்காலத்தில் ஆண்கள் ஒருவழிப் பாதையைப் போல் இருந்தார்கள். அப்படி ஆகாமல், அவர்கள் ஒரு நெடுஞ்சாலையைப் போல் ஆகவேண்டும். பெண்கள் முன்னேறுவதற்கு வசதியாக பாதை அமைத்துக் கொடுப்பது மட்டுமல்ல, வழிவிட்டுக் கொடுக்கவும் முன்வர வேண்டும். ஆண்களுக்கு பெண்களைவிட தசையும், உடல் பலமும் அதிகம் உண்டு. ஆனால் அந்த பலத்தை உபயோகித்து பெண்களை கீழ்ப்படுத்தாமல், அவர்களுக்கு உதவ வேண்டும்.
பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர் பதவிகளை அளிப்பதைப் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும். சமத்துவம் என்பது அதிகாரம் மற்றும் பதவியால் வருவதல்ல, அது இதயம் சம்பந்தப்பட்டதாகும். அது ஒரு மனோபாவமாகும். ஆணும்-பெண்ணும் புத்திக்கு முக்கியத்துவம் அளிப்பது போலவே இதயத்திற்கும் முக்கிய இடமளிக்க வேண்டும். இதயத்தையும், புத்தியையும் இணைத்து செயல்படுத்தவும், ஒருவர் மற்றவருக்கு நல் உதாரணமாக அமையவும் முயற்சிக்க வேண்டும். அப்போது சமத்துவமும், இசைவும் இயல்பாக வந்து சேரும்.

வெளிப்படையாக யாரும் யாருக்கும் சமமாக முடியாது. கோழியால் சேவலைப் போல கூவ முடியாது. அதேசயமம், சேவலால் முட்டை இட முடியுமா? ஆனால், வெளிப்படையான வேறுபாடுகள் இருந்த போதிலும், மனதால் ஆணும், பெண்ணும் ஒன்றாக முடியும். மின்சாரமானது குளிர்சாதனப் பெட்டியின் மூலம் குளிர்ச்சியாகவும், ஹீட்டரின் மூலம் வெப்பமாகவும், மின் விளக்கின் மூலம் ஒளியாகவும் வெளிப்படுகிறது.

தொலைக்காட்சியின் இயல்பு மின் விளக்கிலோ மின் விளக்கின் இயல்பு தொலைக்காட்சியிலோ காணப்படுவதில்லை. குளிர்சாதனப் பெட்டி ஹீட்டரின் இயல்பையே, ஹீட்டர் குளிர்சாதனப் பெட்டியின் இயல்பையோ வெளிப்படுத்த முடியாது. இருப்பினும், எல்லா உபகரணங்களின் மூலமும் செயல்படும் மின்சாரம் ஒன்றாகும். அதுபோலவே, வெளிப்படையான வேறுபாடுகள் ஆண்-பெண்ணுக்கு இடையில் காணப்பட்டாலும், அவர்களுக்குள் குடியிருக்கும் ஆத்ம சைதன்யம் (இறையுணர்வு) ஒன்றே ஆகும்.

இயற்கையிலுள்ள அனைத்திற்கும் அவற்றிற்கே உரிய இடம் உண்டு. பொருளற்றதாக எதுவுமில்லை. அனைத்திலும் சைதன்யம் உண்டு. ஒரு பொருள் சிறியதாயினும், பெரியதாயினும் அவற்றிற்கே உரிய தனித்தன்மை உண்டு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கதிரவனில் வெப்பமும், கடலில் அலையும், காற்றில் குளிர்ச்சியும் இருப்பது அவற்றின் இயல்பாகும். மானிற்கு சாந்த குணத்தையும், சிங்கத்திற்கு கொடிய குணத்தையும் அளிப்பது இந்த அடிப்படை இயல்பே ஆகும். அதேபோல், ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுக்கே உரிய இயல்பு உண்டு. அதுவே ஒவ்வொருவரையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. இதை மறந்துவிட்டு ஆணும், பெண்ணும் செயல்படக்கூடாது.

ஆண்களைத் தோல்வியுறச் செய்யும் முயற்சியில், பெண் தனக்குக் கிடைத்துள்ள தாய்மை எனும் வரப்பிரசாதத்தை மறந்து, புகைபிடிக்கவும், மதுவருந்தவும் செய்தால், அது அவளுக்கும் சமூகத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும். இதனால் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

பெண்களை விட ஆணோ, ஆணைவிடப் பெண்ணோ மேலானவர் அல்ல. படைப்பில், யாரும் யாரை விடவும் உயர்ந்தவர் இல்லை என்பதே உண்மையாகும்.

மேன்மையான இடத்தை இறைவனுக்கு மட்டும் அளித்து, ஆணும், பெண்ணும் அந்த ஒப்பற்ற சக்திக்கு சேவை செய்யும் வெறும் கருவிகளாக மாறவேண்டும். இந்த மனோபாவத்திலிருந்து தான் ஆண்-பெண்ணுக்கிடையில் சரியான சமத்துவம் உருவாகிறது.



ஆண்-பெண் சமத்துவம் Skirupairajahblackjh18
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 13, 2009 8:32 pm

சூப்பர் மிகவும் அருமையான கட்டுரை மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக