புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_m10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10 
90 Posts - 76%
heezulia
ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_m10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_m10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_m10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_m10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_m10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_m10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_m10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10 
255 Posts - 77%
heezulia
ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_m10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_m10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_m10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10 
8 Posts - 2%
prajai
ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_m10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_m10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_m10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_m10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_m10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_m10ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை)


   
   
Soliyan
Soliyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 05/10/2010

PostSoliyan Mon Oct 25, 2010 6:10 pm

(1)

எவ்வளவுநேரந்தான் காத்திருப்பது?!

செக்கன்கள் நிமிடங்களாகி மணித்தியாலத்தை எட்டப்போகின்றது.

இன்னும் காணவில்லை.பொறுமை எரிச்சலைத்தந்தது. "போய்விடுவோம்" என நினைத்தாலும் மனம் வரவில்லை.

"போன பிறகு வந்துவிட்டால்..?"

அது காத்திருப்பதைவிடக் கஸ்டமான காரியம்.

அதற்கும் பார்க்க காத்திருப்பதே மேல்.

"வருவன்" என்று சொன்னாளே..?!

வருவாளா..?!

இன்னும் கொஞ்சநேரம் பார்ப்போம்.

இப்படி மனதுக்குள் சொல்லிச்சொல்லியே இந்த சுழல் கதிரையில் உட்கார்ந்தவாறு, சுற்றிச் சுற்றியே ஒரு மணித்தியாலமாகப் போகிறது.

முன்னால் ஒளிர்ந்தவாறு இருந்த கணனித்திரையில் அவளது பெயருக்கு முன்னால் சிவப்பாகத்தான் அந்த அரைவாசி "மனிதப்பொம்மை"..

வேறு சில பெயர்களின் முன்னால் பச்சையாக நிறம்காட்டிய பொம்மைகளை கைக்குள் இருந்த "எலி"யை நகர்த்தி அமத்தப் பிடிக்கவில்லை.

அவளது பெயரின் முன்னால் உள்ள அந்த "பொம்மை"" எப்போது பச்சையாவது.. எப்போது பேசுவது..வேறொன்றுமில்லை

... இன்று மெசன்சரில் வந்து பேசுவதாக நேற்று சொல்லியிருந்தாள். அந்த மெசன்சரிலுள்ள பெயர்களின் முன்னாலுள்ள இடுப்பளவு மனிதப் பொம்மைகளின் நிறத்தை வைத்து, குறிப்பிட்ட பெயருக்குரியவர் "ஓன்லைனா" அல்லது "ஓவ்லைனா" என்பதை அறியமுடியும்.

அவளது பெயருக்கு முன்னாலுள்ள பொம்மை சிவப்பாகவே இருந்தது... அவள் ஓன்லைனில் இல்லை.. சிலவேளை "புளொக்"பண்ணிவிட்டு வேறு யாருடனாவது கதைக்கிறாளோ?!

"புளொக்"பண்ணினாலும் சிவப்பாகத்தானிருக்கும்.

ச்சீ... அப்படி இருக்காது..அவள் அப்படி ஏமாற்றமாட்டாள்..கடந்த மூன்றுமாதமாக பேசுகிறாள்.. அடிக்கடி வந்து பேசுகிறாள்.. பெரிய மனுசிபோல.. பருவ மங்கைபோல.. பச்சிளங் குழந்தைபோல.. மனந்திறந்து பேசுகிறாள்... அடிக்கடி ஒவ்வொரு செய்தியுடன் வந்து சலிப்பான பொழுதுகளை எல்லாம் பஞ்சாகப் பறக்கவைத்து.. கணனித் திரை ஒன்று முன்னால் இருக்கிறதே என்ற எண்ணத்தை இல்லாதொழித்து.. தனிமையில் சிரிக்கவைத்து எண்ணத்தில் வண்ணக்கோலமல்லவா காட்டுகிறாள்?!

அவளை மெசன்சரில் காணாதவேளைகள் கனமாக மனதுள் நெருடுவதை உணர்ந்து தவித்த பொழுதுகள் கணமான

நிகழ்வுகள்தான் எத்தனை.. எத்தனை..?!

"பிரின்ஸெசின்.."

"என்ன பெயர் இது?"

"ஏன் இந்த பெயருக்கு என்ன?"

"ஐயோ... ஒரு தமிழ் பெயர் கிடைக்கலியா.."

"ம்.. போடா.. சும்மா எல்லாத்துக்கும் தமிழ் தமிழ் என்று..."

"நாங்கள் தமிழ்தானேடி.. உன்ரை உண்மையான பெயரை மெசன்சரிலை போடலாந்தானே?!"

"அடப் பாவி.. நல்லாய் தெரிஞ்சவங்களுக்குத்தான் உண்மையான பெயர்.. மற்றவங்களுக்கு பிரின்ஸெசின்தான்.."

"ம்.. மற்றவங்களென்ன இளவரசர்களா?"

"லொள்.."

"ஐயோ... என்னடி லொள்..?"

"சிரிக்கிறன்.."

"ஓ.. லொள் எண்டால் சிரிப்பா.. நான் குரைக்கிறதெண்டு நினைச்சன்.."

"ஆ..."

"வள் மாதிரி இருந்துத.."

"லொள்.."

"ஐயோ.. லொள்ளை விட்டுட்டு... ஹே ஹே எண்டு சிரிடா.."

"போடா... அதென்ன ஹே ஹே?"

"அப்ப ஹீ ஹீ எண்டு சிரி.."

இவ்வாறு பொழுதுகளைப் புளகாங்கிதமாக்கிய உரையாடல்கள்தான் எத்தனை எத்தனை.. அத்தனையும் கட்டிப்போட்டு...

சுழல்நாற்காலியில் இழுத்துப்பிடித்து இருத்திவைத்து அவளது வரவுக்காக காத்திருந்து பொழுதுகளை கரைத்து, கணனித் திரையே உலகமாகியதென்னவோ உண்மைதான்.

அறைக்கதவு "படார்" எனத் திறந்துகொள்கிறது.

அம்மா..

"டேய் தம்பி.. எந்தநேரமும் கொம்பியூட்டரோடை என்ன செய்யுறாய்.. எக்கணம் கண் கெடப்போகுது.. ஒரு அளவுகணக்கு இல்லையே?"

எரிச்சலுடன் அம்மாமேல் சிறிது கோபம் வந்தது.

இந்த அம்மாவுக்கு நேரகாலம் தெரியாது... முக்கியமானவேளைகளில் வந்து உபதேசம் செய்துகொண்டிருக்கும். "வெளியாலை நல்ல வெய்யிலடிக்குது.. அறையுக்கை இருக்காமை சைக்கிளை எடுத்துக்கொண்டு உலாத்திப்போட்டு வரலாம்.."

"பொறுங்கோ.. நான் இப்ப முக்கியமான வேலையாய் எல்லே இருக்கிறன்."

"அப்பிடி உந்தப் படப்பெட்டீக்கை என்னதான் முக்கியமான வேலையோ.. முதல்லை முகத்தைக் கழுவிப்போட்டு வந்து

ரீயை குடி.. பேந்து உதுகளை ஆராச்சி செய்யலாம்.."

"ஓம்.. நீங்கள் அங்காலை போங்கோம்மா.." என்று சிறிது சத்தமாக சொன்னேன்.

என் கண்களை ஒருகணம் ஊடுவிப் பார்த்தவள், அங்கிருந்து அகன்றாள்.

அவளது பார்வையில் பல அர்த்தங்கள்."ஏதோ தப்பு செய்யுறாய்" என்று நினைப்பதுபோலிருந்தது.

"ஏதோ மாற்றத்திற்குள்ளாகிவிட்டாய்" என்று கேட்பதுபோலிருந்தது.

"முன்புபோல் நீ இல்லை" என்று கூறுவதுபோலிருந்தது.

மனம் சங்கடப்பட்டது.

அப்போது..

மெசன்சரில் அவளது பெயருக்கு முன்னாலிருந்த பொம்மை பச்சையானது.

"ஹி!!!!!!!!!!!!!!!!!!!!!"

"ஸ்ஸ்ஸ்.."

"என்ன ஸ்...?"

"சத்தம்போடாதே.. அம்மா பக்கத்திலை நிற்கிறா.."

"ஹே.. ஹே.. ஹே.."

"என்னடா சிரிப்பு.."

"அம்மாக்கு என்ன தெரியும்.. சும்மா இருடி.. படிக்கிறாய் எண்டு நினைப்பா.."

"லொள்.."

"சுகமா இருக்கிறியா.. நீ சுத்த மோசம்டி.."

"ஏண்டா..?"

"பின்னை என்ன.. உனக்காக இந்த கொம்பியூட்டருக்கு முன்னாலை எவ்வளவு நேரந்தான் காத்துக்கொண்டு இருக்கிறது..?"

"சொறிடா.. கொலிஜ் முடிஞ்சு வர லேட்டாச்சுது.."

"பொய் சொல்லாதை.. கொலிஜ் முடிஞ்சு எங்கையோ சுத்திப்போட்டு வாறாய்.. அப்பிடித்தானே?"

"ஐயோ.. உனக்கெப்படி தெரியும்.. மாலுக்கு போட்டு வாறன்.."

"மாலா? மால் எண்டால் என்ன?"

"எங்கை ஜேர்மனிலை மால் இல்லையா..?"

"போடா.. அப்ப எங்கை சாமான்கள் வாங்குவாய்.. நிறைய கடைகள் இருக்கிற இடம்தான் மால்.."

"ஓ.. அயன்கவ்சென்றும் எண்டு இங்கை சொல்லுவோம்.. அங்கை எதுக்கு போனாய்.. கனடா தமிழ் பெட்டைகளுக்கு ஊர் சுத்தாமல் இருக்க முடியாதாக்கும்.."

"ஏய்.. கனடா எண்டு கேலி செய்தால் கதைக்கமாட்டன்.."

"ஐயோ.. சும்மா சொன்னேன்டா.. மாலுக்கு போய் என்ன வாங்கினாய்?"

"மக்டொனால்ட்லை மில்க் குடிச்சுட்டு வாறேன்.."

"ஐயோ.. பத்தொன்பது வயசிலை உனக்கு இப்பிடி ஒரு ஆசையா?"

"லொள்.. ஏன் உனக்கு இல்லையா... உனக்கும் உந்த இருபத்தைஞ்சு வயசிலை வரலாம்.."

"எனக்கு உதிலை எல்லாம் ஆசை இல்லை.. உன்னோடை பேசிக்கொண்டிருக்கவேணும்.. அதுதான் ஆசை.."

"போடா..."

"என்னடி.."

"எனக்கும்தான்.. சொறிடா.. இப்ப போகோணும்.."

"ஐயோ.. நான் இவளவுநேரமாய் இருக்கிறன்.. நீ வந்துட்டு உடனை ஓடுறாய்.."

"ஒரு பிறந்தநாள் பார்ட்டிக்கு "மோம்"கூட போறேன்.."

"ம்.."

"ஒரு ரண்டு வயது குட்டிக்கு பிறந்தநாள்..."

"ம்.."

"நல்ல சுட்டி கேள்... அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. நானும் கட்டாயம் விஸ் பண்ணோணும்.. கோபமா?"

"நாளைக்கு கனநேரம் கதைப்போம்... ம்மாாாாாா"

எனக்குள் ஏற்பட்ட ஏமாற்ற உணர்வு சடுதியில் மறைந்துபோனது.

"கட்டாயம் நாளைக்கு வரவேணும்.."

"ஐயோ.. நாளைக்கு ஒரு அலுவல் இருக்கே.."

"என்னடி நீ.."

"அச்சா பிள்ளைதானே.. கோபிக்காதைடா.. அடுத்த திங்கள் கிழமை நிறைய கதைக்கிறன்.. ஓகே?!"

"சரி.. நீ சொல்லுறதுதானே சட்டம்.."

"லொள்... மண்டே கட்டாயம்.."

"ஏய் பிரின்செஸின்..."

"உண்மையான பெயரைச் சொல்லி கூப்பிடு.."

"பிருந்தா குட்டி..."

"லொள்.. என்ன சொல்லு.."

"அந்த சின்னஞ்சிறிய பேர்த் டே குட்டானுக்கு... என்ரை ஹப்பி பேர்த் டேயையும் சொல்லிடு.."

"ஓகே மிஸ்டர் தரன்.. சீ யூ லேட்டர்.. டாடா.."

"டாடாடி.."

பச்சைப் பொம்மை மீண்டும் சிவப்பாகியது.

இனந்தெரியாத வெறுமை என்னை ஆட்கொள்ள ஆரம்பித்தது.

--தொடரும்

நன்றி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Oct 27, 2010 10:57 am

மனிதனின் கண்டுபிடிப்புகள் எல்லாமே ஆக்கத்திற்கு தான் என்றாலும் ஒரு சிலது இதுபோல் அழிவுக்கும் பயன்படலாம் என்பதற்கு உதாரணம் தான் இந்த இணையம்...

இணையத்தால் பயன் எத்தனையோ உண்டு என்றாலும் இன்றைய காலக்கட்டத்தில் பிள்ளைகள் கல்விக்கும் பொது அறிவுக்கும் இணையத்தை பயன்படுத்துவதை விட காதலுக்கும் ஜாலியா டைம்பாஸ் சாட்டிங்குக்கும் பயன்படுத்துவதும் மிக வேதனையாக இருக்கிறது...

பெண்களின் நிலை இன்னும் மோசம்.. இணையம் மூலமாக யார் எப்படி என்ன என்று புரிந்துக்கொள்ளுமுன் காதலில் விழுந்து அதனால் படும் அவஸ்தைகளும் பெற்றோர் சொல் கேளாமல் காதலித்தவனை தான் கல்யாணம் செய்வேன் என்று பிடிவாதமாய் இருப்பதும்....

இந்த கதை அழகிய இலங்கை தமிழில் கொண்டு போயிருப்பது படிக்கவே அருமையாக இருக்கிறது சோழியன்...

தாயின் கண்பார்வையில் எதுவும் தப்பாது என்பதை சரியாக இங்கே வரிகளில் உணர்த்தி இருக்கிறீர்கள்....

ரெண்டே நாள் பழக்கத்தில் பையன் பெண்ணை அடக்க நினைப்பதும் காண்கிறேன்.. என்னிடம் பேசாமல் வேறு யாருடனோ கதைக்கிறாளோ? கனடா தமிழ் பெண்களுக்கு ஊர் சுற்றாமல் இருக்க முடியாதோ என்று கேட்பது.... காலேஜ் முடிஞ்சு நீ வந்தேன்னு பொய் சொல்லாதே எங்கனா சுத்திட்டு வந்தியான்னு கேட்பதும்...

இன்றைய கால இளைஞர்களும் இளைஞிகளும் எப்படி நடந்துக்கொள்வார்கள் என்று நிதர்சனமாய் சொல்வது தான் உச்சக்கட்டம்...

அருமையான கதைவளம் தொடருங்கள் சோழியன்....

அன்பு வாழ்த்துக்கள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) 47
Soliyan
Soliyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 05/10/2010

PostSoliyan Thu Oct 28, 2010 6:05 pm

மிகவும் நன்றி. அடுத்த அங்கம் வெகு விரைவில்..!



ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) 53361007402666092651000
பழையன அறிந்து புதியன புகுவோம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 01, 2010 5:05 am




இன்றைய இணைய உலகில் இளையோர்களின் செயல்களை அழகான உரையாடல்களுடன் கொண்டு செல்கிறீர்கள்!

மீண்டும் எப்பொழுது அந்தச் சிவப்புப் பொம்மை பச்சையாக மாறும், இளவரசி மீண்டும் எப்பொழுது வருவாள் என நானும் காத்திருக்க ஆரம்பித்துவிட்டேன்! விரைவில் அடுத்த பகுதியையும் எழுதுங்கள்!

- படிக்க ஆவலுடன்!






ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Soliyan
Soliyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 05/10/2010

PostSoliyan Mon Nov 01, 2010 5:06 pm

மிகவும் நன்றி. இதோ பகுதி இரண்டு. புன்னகை



ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) 53361007402666092651000
பழையன அறிந்து புதியன புகுவோம்.
Soliyan
Soliyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 05/10/2010

PostSoliyan Mon Nov 01, 2010 5:19 pm

(2)

ஜேர்மனிக்கு வந்து பத்து வருடங்கள்தான்.

பதினைந்து வயதுவரை ஊர் வாழ்க்கை. அதனால், ஊரில் சந்திகளில்... குட்டையான மதில்களில் குந்தியிருந்து வம்பளக்கும் இளைஞர்களைக் கண்டிருக்கிறேன்.

வயல்வெளி நடுவே அமைந்துள்ள நன்னீர் கிணறுகளைச் சுற்றிநின்று அரட்டையடிக்கும் இளம் பெண்களையும் கண்டிருக்கிறேன்.
அவர்களின் கையால் தண்ணீர் குடிக்கவென்றே அலையும் வாலிபர்களையும் கண்டிருக்கிறேன்.

அப்படித்தான் இதுவும்.
அங்கே வெளியில் நிகழ்ந்தவை இங்கே வீட்டினுள்ளே.
ஒரு கதிரையில் குந்தியிருந்து அரட்டை.
தனியாக கும்பலாக தமிழாக... ஆங்கிலத் தமிழாக... ஊர் கடந்து நாடு கடந்து.. ஒரு உலகமே சந்தியாகி... குட்டை மதிலாகி.. நன்னீர்க் கிணறாகி ஒரு சின்னஞ்சிறிய கணனித் திரைக்குள்ளே அடக்கமாகி அதுவே தற்போது எனது பொழுதாகி சிலவேளை தொழுதலாகி எனும்போது.. நினைக்கவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

முகம் தெரியாத வரவுகள்... விசாரிப்புகள்.. கேலிகள்... பகிடிகள்... குறும்புகள்... அதனால் உருவாகும் உறவுகள்... பாசங்கள் என்று நிற்பவையும், அறுபவையுமாக தினமொரு பொழுதுக் கழிப்பு.

அது ஒரு பிரபலமான தமிழ் "சற்" அறை.
சுந்தர்தான் அறிமுகப்படுத்தினான்... "இன்ரர்நெற் வைச்சுக்கொண்டு ஆறு மாசமாய் என்னடா செய்யிறாய்" என்ற மேதாவித்தனக் கேள்வியுடன்..!
கொஞ்சநாள் அவன்தான் என்னுடைய "சற்" ஆசான். "எவ்வாறு சற் அறைக்குள் போவது? எவ்வாறு உரையாடுவது.. எப்படி அவர்களுடன் தனியறையில் உரையாடுவது?"... இப்படிப் பல விசயங்களுக்கு ஆசான்.

விளையாட்டு, ஊர் சுற்றல், சினிமாப் பாட்டுச் சீடிகள் என்று திரிந்த என்னை கதிரையொன்றில் மணித்தியாலக்கணக்காக அசையாமல் அமர்த்திவைத்த பெருமை அந்த "சற்" அறைக்குத்தான் சேரும்.

முதலில் கொஞ்சநாள் வித்தியாசமாகத்தான் இருந்தது.
"தமிழ் சற்."
கதைகளோ ஆங்கிலத் தமிழ். தமிழை ஆங்கில எழுத்துக்களுள் மிக வேகமாகவே நுழைத்துக் கதைத்தார்கள்.
ஆச்சரியம் என்னவென்றால்.. "எல்" என்ற ஒரேயொரு ஆங்கில எழுத்தால்... ல, ழ, ள-வில் வரும் சொற்களை சுலபமாக இனங்கண்டு உரையாடினார்கள்.
ஒரு கிழமை உருண்டோடியது. ஒரு நட்பும் கிடைத்தவாறாக இல்லை.

"ஹலோ" என்றால் "ஹலோ." அவ்வளவுதான்.
என்னை விலத்திவிட்டு ஏனையோர் தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
சினிமா... காதல்..
காதல்.. சினிமா...
இதுதான் அங்கே பெரும்பாலான உரையாடல்கள்.
காதலிலும் சினிமாதான் குந்திக்கொண்டிருந்தது.

ஆனால் சுவாரசியமாக இருந்தது. பொழுது போவதே மறந்துபோனது.
எனக்கும் அவர்களுடன் கதைக்கவேண்டும்போல அவா. அது என்னை ஒரு கிழமையாகவே அங்கு தினமும் ஈர்த்தது.
ஆனால் அவர்கள் என்னை ஒரு பொருட்டாகவே கருதுவதாகத் தெரியவில்லை.

"எனக்கு சற்றிலை உரையாடத் தெரியவில்லையோ?"
சற்று ஏக்கமாகக்கூட இருந்தது.

ஒருநாள்..
சிலர் ஒருவனை ஆங்கிலம் தெரியாது என கேலி செய்துகொண்டிருந்தார்கள்.
எனக்குப் பொறுக்க முடியவில்லை. அவர்களை திட்டவும் முடியவில்லை. திட்டினால் எட்டிப் போய்விடுவார்கள் என்ற பயம்.. எனக்கு சற் நண்பர்கள் தேவை.. அதனால் விரட்ட முடியாது.
எனினும் அவர்களின் கருத்துக்கு மௌனமாக இருந்து வேடிக்கை பார்க்கவும் முடியவில்லை.
"பிரண்ட்ஸ்.."
"இங்கிலிஸ் நல்ல பாசைதான்.. அதுக்காக தமிழை கூடாதென்று சொல்லாதீங்க.. "இன்று உங்களுக்கு எத்தனையாவது பிறந்தநாள்?".. இதை யாராவது இங்கிலீசிலை சொல்லுங்கோ பார்ப்பம்.. "
சிறிதுநேரம் மௌனம்.
எவருமே பதில் சொல்லவில்லை.
"இதுக்குத்தான் சொல்லுறது.. மொழியை பழிக்கக் கூடாதென்று.."
பெருமையாக எழுதினேன்.

அப்போது...
"ஹீ ஜோ.."
என்னைத்தான் கூப்பிட்டாள்.
எனது "சற்" பெயர்தான் ஜோ.
"ஹலோ..."
"ஹே... உன்னை ஒரு கிழமையா பார்க்கிறேன்.. என்ன அமைதியா இருக்கிறாய்.."
இனம்புரியாத சந்தோசம்.
ஒரு கிழமையாகப் பார்க்கிறாளாமே?!
இருக்காதா?!

"இந்த "சற்" சுத்த "போர்"".
"நீ கதைக்காமல் இருந்துகொண்டு "போர்" என்று சொல்லுறாய்.."
"ம்.. யாரோடை கதைக்க?"
"சும்மா பேசு.. பேசுவாங்கள்.."
"அப்படி பேச தெரியாதே?"
"ஓ.. அதுக்கும் படிக்கவேணுமா?... லொள்.."
"இப்ப ஒரு கிழமையாதான் இங்கை வாறேன்.. இது புதுப்பழக்கம்.."
"இதுக்கெதுக்கு பழக்கம்..? சும்மா பேச வேண்டியதுதான்.. விரும்பினவங்கள் உன்னோடை பேசுவாங்கள்.. சிலர் உன்னை ஞாபகம் வைச்சிருப்பாங்க.."
"ஓ.. நான் உங்களை மறக்கமாட்டன்.."
"லொள் (lol).. ஏன்?"
"நீங்கதான் முதன்முதலா என்னை கூப்பிட்டு கதைக்கிறீங்கள்.."
"ஓ... "

"உங்கடை பெயர் என்ன?"
"ஐஸ்.."
"ஐயோ.. நான் உண்மையான பெயரை கேட்கிறன்.."
"அதை இங்கை சொல்ல முடியாது.."
"அப்ப எங்கை..?"
"ம்... தனியறைக்கு வா.."

எங்கோ வானத்தில் பறக்க ஆரம்பித்த உணர்வு.
அவளின் பெயரை "எலி"யால் அழுத்த.. தனியறையில் நானும் அவளும்.
"என்னடா சுகமா இருக்கிறியா?... ம்.. நான் வாடா போடான்னுதான் கதைப்பேன்.. கோபப்படுவியா?"
எனக்கு சிரிப்பாக வந்தது.
"இல்லையே... நீ எப்படி வேண்டுமானாலும் கதை.."
இப்படித்தான் அவளது தொடர்பு "சற்" அறையில் ஆரம்பித்து.. "மெசன்சர்"வரை இந்த மூன்று மாதத்தில் வளர ஆரம்பித்தது.

இன்று புதன்கிழமை ஆகிவிட்டது.
திங்கள் கிழமை வந்து பேசுவதாகக் கூறியவளை இன்றுவரை காணவில்லை. நேற்றிலிருந்து எனது மனம் அமைதியாகவில்லை.
அவள் வந்தாளா என்றுகூடத் தெரியவில்லை.

வைரஸ்.. வோர்ம்ஸ் ப்லாஸ்ரர்.. (worm blaster) எனது கணனிக்குள் புகுந்து.. அப்பப்பா.. இரண்டு நிமிடத்துக்கொரு தடவை கணனி நிற்பதும்.. நான் மீண்டும் அதை ஆரம்பிப்பதுமாக... வைரஸை தேடி அழித்து.. அது மீண்டும் வராமல் கவசம் போடுவதற்குள் புதன்கிழமை ஆகிவிட்டது.
எனினும் அன்பு நண்பர்களின் உதவியால் கணனியை மீட்டுவிட்டேன்.
இணையம் அளித்த அந்த நட்புகளை மனம் நன்றியோடு நினைத்துக் கொள்ளுகிறது.

ம்... பிருந்தாவை நினைக்கத்தான் கவலை ஏற்பட்டது.
திங்கள் வந்து கோபத்துடன் போயிருப்பாளா? ம்... இப்படி ஒரு தடங்கல்.
இதை அவள் புரிந்துகொள்ளவாளா?
இன்றாவது அவள் வருவாளா?
அல்லது அடுத்த திங்கள்தான் வருவாளா?

நான் அவளுக்காக கணனியின் முன்னால் அலைபாயும் மனதுடன் குந்திக்கொண்டிருக்கிறேன்.

-தொடரும்..

நன்றி



ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) 53361007402666092651000
பழையன அறிந்து புதியன புகுவோம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 01, 2010 5:40 pm

அவள் வருவாளா? என்ன?

ஏக்கம் அருமை சோழியன்! ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) 154550



ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Soliyan
Soliyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 05/10/2010

PostSoliyan Wed Nov 10, 2010 1:30 am

மிகவும் நன்றி. இதோ பகுதி மூன்று. ஒன்னும் புரியல



ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) 53361007402666092651000
பழையன அறிந்து புதியன புகுவோம்.
Soliyan
Soliyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 05/10/2010

PostSoliyan Wed Nov 10, 2010 1:34 am

(3)

அவளேதான்... பிருந்தா..

வந்துவிட்டாள்.

"வருவாளா, வருவாளா" என்று கணணியின் முன்னால் காக்கவைத்து வந்துவிட்டாள்.

"ஜோ..!"

காத்திருந்து, காத்திருந்து பூத்துப்போன விழிகளுடன் சோர்ந்திருந்த என்னை கதிரையில் துள்ளி நிமிரவைத்தது அவளது அழைப்பு.

முகம் தெரியாது... குரல் தெரியாது... ஊர் தெரியாது... வெறுமனே பெயர் வயது நாடு... இதுவும் அவள் சொல்லி அறிந்தவை...!

எனினும் அவளின் வரவால் என்னுள் இனம்பரியாத உணர்வு பீறிட்டெழுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

"ஹேய்! என்னடா செய்யுறாய்?"

"சும்மா இருக்கிறேன்.. நீதான் வாறன் வாறன் என்று ஏமாத்திக் கொண்டிருக்கிறாய்?"

"பொய் சொல்லாதை.. வேறை ஆக்களோடை "சற்"பண்ணுறாய்.. அப்பிடித்தானே?"

"இல்லைடா.. வேறை யாரை தெரியும்.. நீதானே என் ஒரேயொரு மெசன்சர் சிநேகிதி.."

"பொய் சொல்லாதை..."

"என்ன பொய்..?"

"எனக்காகமட்டும் காத்திருக்கிறியா? போய்தானே?"

"ஐயோ... சத்தியமா சொல்லுறன்டா... உனக்காகத்தான் கொம்பியூட்டருக்கு முன்னாலை உட்கார்ந்திருக்கிறன்.. நம்பமாட்டியா?"

"ம்.. நம்புறன்..."

"அப்ப ஒரு சத்தியம் தா"

"என்னடா?"

"வாறன் என்று சொன்னால்... சொன்ன நாளுக்கு... சொன்ன நேரத்துக்க வரவேணும்..."

"ஐயோ... என்னடா நீ..."

"முடியாவிட்டால் முடியாதென்று சொல்லு.. பரவாயில்லை..."

"ஐயோ.. உனக்கு எப்படி விளங்கப்படுத்துறது... பள்ளிக்கூட "ஹோம்வேர்க்"... படிப்பு... ஸ்போர்ட்ஸ்.. டான்ஸ் கிளாஸ்.... அப்பிடி நேரம் கிடைச்சு வந்தால்.. பக்கத்திலை அம்மா வந்து நிப்பா.. அவவுக்கும் நான் கொம்பியூட்டரிலை படிக்காமை என்னவோ செய்யுறன் என்று சந்தேகம் வந்திட்டுது..."

"உனக்கென்ன.. நீ பொடியன்.."

"நீயும் பொடியன்தானே?"

"என்னடா.. பொடியன்மாதிரியா இருக்கிறேன்..?"

"ஐயோ.. நான் சும்மா பகிடிக்குடா.. நீ பேசும்போது.. ஒரு சின்னப்பிள்ளை பேசுறமாதிரி இருக்குடா.."

"............"

"உரிமையோடை கூப்பிடுறது... கோபமாய் பேசுறது... செல்லமாய் பேசுறது... உண்மையிலேயே பத்தொன்பது வயசிலை சின்னப்பிள்ளை மாதிரித்தான் இருக்கிறாய்.."

"..........."

"அந்த சின்னப்பிள்ளைத்தனம்தான் எனக்கு பிடிச்சிருக்கு... அதாலைதான் உனக்காக நான் ஒவ்வொருநாளும் காத்திருக்கிறன்..."

".........."

திடீரென அவள் அமைதியாயிருப்பது புரிந்தது. சிலவேளை போய்விட்டாளோ?

"ஹலோ.."

"........."

"பிருந்தா... இருக்கிறியா..?"

"ம்..."

"என்ன பேச்சைக் காணேல்லை..."

"பேசப் பிடிக்கேலை.."

"ஐயையோ... என்ன தப்புச் செய்தேன்டா?"

"தப்புத்தான்.. எப்பிடி என்னை நீ சின்னப்பிள்ளை என்று சொல்லலாம்? ஏனக்கு பத்தொன்பது வயதென்று சொன்னேன்தானே?"

"இந்த சின்ன விசயத்துக்கடா கோபம்.. நான் என்னவோ ஏதோ என்று பயந்திட்டேன்.."

"இது சின்ன விசயமா.. இனிமேல் சின்னப்பிள்ளை என்று சொன்னால் உன்கூட பேசமாட்டேன்.."

"சரி.. சத்தியமா இனி சொல்லமாட்டேன்.. போதுமா?"

"போதும்.. ஏன்டா.. நான் கதைக்கிறது பத்தொன்பது வயது பெண்போலை இல்லையா..?"

"ஐயோ.. என்னை விடு தாயே.. எல்லாம் பெரிய பெண் கதைக்கிறமாதிரித்தான் இருக்கு... ஏதோ என்னோடை கதைச்சுக் கொண்டிரு.. அது போதும்.."

"லொள்.. சரியான எம்மெம்(MM) .."

"எம்மெம்மா?"

"லொள்.. எம்மெம்தான்.."

"எம்மெம் என்றால் என்னடா?"

"எம்மெம் என்றால் மாங்காய் மண்டை... லொள்.."

"அப்ப நீ ரீரீ(TT).. ஹா.. ஹா.."

"அது என்ன ரீரீ...?"

"ரீரீ என்றால் தேங்காய் தலை... ஹா.. ஹா.."

"லொள்.. என்னடா சிரிப்பு உது?"

"இதுவா.. இதுதான் தரனின் சிரிப்ப.. அது சரி.. என்ன ஸ்போர்ட்ஸ் செய்யிறாய்..?"

"நெற்போல்டா.. கொலிஜ் ரீமிலை இருக்கிறேன்டா.."

"நெற்போல் விளையாட உயரமாயெல்லோ இருக்கோணும்?"

"நான் உயரம்தான்.."

"அம்மாடியோவ்.. அவ்வளவு உயரமா... கனடாவிலை தமிழ் பெண்கள் எல்லாம் உயரமா? ஹா.. ஹா.."

"லொள்.. போடா.."

"சரி.. டான்ஸ் பழகிறாய்.. எப்பிடியடி... தமிழ் தெரியாதென்று முந்தி சொன்னாய்?"

"ஐயோ.. இப்ப தமிழிலைதானே எழுதுறன்.."

"இது தமிழா... தமிழை இங்கிலீசிலை எழுதுறாய்... இது தமிங்கிலீசு.."

"லொள்... இப்படித்தான்.. டான்ஸ் பாட்டை இங்கிலீசில் எழுதி பழகுறேன்டா.."

ஓ... வருங்காலத்தில் புகலிட நாடுகளில் தமிழ் ஆங்கிலத்தினு}டாக கடிதங்களாகவும்.. மெயில்களாகவும் புதுத்தோற்றமாகி... வேர் அறுந்த மரமாகத் தள்ளாடி உக்கப் போகிறதா?

"ஏன்டா... தமிழ் படிச்சால் என்னவாம்?"

"ஐயோ.. போடா... பேசத் தெரியுந்தானே... கதைக்கிறது விளங்குதுதானே... இதுக்கும் மேலை என்னத்தையடா படிக்க... நீ சரியான எம்மெம்தான்டா.."

"ஹேய்.. உனக்கு என்ரை அக்காவை அறிமுகப்படுத்தட்டா?"

"அக்காவா... நீ ஒரு பிள்ளை என்று சொன்னாய்.. இப்ப என்னடி அக்கா?"

"நீ சரியான எம்மெம்தான்.. இது என்ரை "சற்" அக்காடா.."

"ஓ... "சற்" அக்கா.. அண்ணா என்றெல்லாம் இருக்கா?"

"உனக்குத் தெரியாதா? "சற்" அக்கா.. "சற்" லவ்வர்... தம்பி என்றெல்லாம் இருக்கு.."

"ஓ..."

"என்ன ஓ... வாயை பிளக்காதை... பூச்சி போகப் போகுது... லொள்.."

"நான் உன்னோடைதானே கதைக்க இருக்கிறன்.."

"என்னோடை எப்பவும் கதைக்கலாம்தானே... உனக்கு கொஞ்சப் பேரை அறிமுகப்படுத்துறன்டா.. நான் இல்லாவிட்டால் நீ அவங்களோடை கதைக்கலாம்தானே..?"

"ஏன்.. நீ எங்கை போறாய்.."

"........"

"ஐயோ.. என்ன பேச்சை காணேலை..."

"அப்பிடித்தான்.. சும்மா சும்மா கேள்விகேட்டால் பேசமாட்டன்.. இப்ப அக்காவை உனக்கு அறிமுகப்படுத்தவா.. உன் மெசன்சரிலை "அட்" (add)பண்ணவா.. சொல்லு.."

"ஐயோ.. என்னடி நீ... உன்னோடைமட்டும் கதைக்கலாம் என்றால்.. யார் யாரையோ "அட்"பண்ணுறன் என்கிறாய்.."

"ப்ளீஸ்டா... உனக்கு என்னிலை அன்பிருக்கா.. இல்லையா...?"

என்னுள் இனம்புரியாத உணர்வு. முகம் தெரியாத உறவொன்று கணனிக்குள்ளால் அன்பைப்பற்றிக் கேட்கிறது. நான் எங்கே போகிறேன் என்று எனக்கே புரியவில்லை.

"சரிடா.. "அட்"பண்ணு..."

என் மெசன்சரில் புதுவரவு ஒன்று உதயமாகியது.

"வணக்கம் அண்ணா... நான் சுதா..."

"வணக்கம் சகோதரி... நான் தரன்.. ஜேர்மனி.."

"தெரியும்.. பிரின்செசின் சொன்னாள்.."

"பிரின்செசின்.. ஐஸ்.. இவளுக்கு எவ்வளவு "சற்" பெயர்?"

"லொள்.. நான் எத்தினை பெயரும் வைப்பன்.. நீ பிருந்தா என்று கூப்பிடு.. லொள்.."

அதன் பின்னர் சுதாவின் தொடுர்பும் தொடர்ந்தது. அடிக்கடி மெசன்சரில் வந்தாள்.... பிருந்தா இல்லாத வேளைகளில் அவளுடனான உரையாடல் வளர்ந்தது.

"அண்ணா... எனக்கு வாழவே பிடிக்கேலை..."

ஒருநாள் இவ்வாறுதான் சுதா ஆரம்பித்தாள்.

-தொடரும்...
நன்றி



ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? (தொடர் கதை) 53361007402666092651000
பழையன அறிந்து புதியன புகுவோம்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக