Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மைனா - திரைப்பட விமர்சனம்
Page 1 of 1
மைனா - திரைப்பட விமர்சனம்
மைனா வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பே படுபயங்கர எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு, அதில் ஓரளவு பூர்த்தியும் செய்திருக்கிறது.
குடித்து குடித்து இறந்து போன அப்பாவால் சின்ன வயதிலேயே குடியிருக்கும் வீடு உள்ளிட்ட சொத்துபத்துகளையும், சொந்தபந்தங்களையும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் நாயகிக்கும், அவரது அம்மாவிற்கும் அடைக்கலம் கொடுக்கிறான் சிறுவயது ஹீரோ. பனியாரம் சுட்டு விற்று வயிற்றை கழுவும் நாயகியின் அம்மாவால் நன்றாக படித்தும், நாயகியை படிக்க வைக்க முடுியாத சூழல். அதனால் நாயகியை தானே கூலி வேலையெல்லாம் செய்து படிக்க வைக்கும் நாயகனுக்கு, இனம் புரியாத வயதில் இருந்தே நாயகி மீது காதல்! நாயகிக்கும் நாயகன் மீது அதே ரக காதல்! இது நாயகியின் அம்மாவிற்கு தெரியவருகிறது.அதுவரை வாய்திறந்து ஹீரோவை மருமகனே.. மருமகனே... என அழைத்து வந்த அவர், அதன் பின் காட்டும் ஆக்ஷனும், ஆக்ரோஷமும், அதற்கு ஹீரோ பண்ணும் ரீயாக்ஷனும், அதனால் எழும் பிரச்னைகளும்தான் மைனா படத்தின் மீதிக்கதை!
க்ளைமாக்ஸில் சந்தர்ப்பத்தாலும், சூழ்நிலையாலும் அந்த ஜோடிக்கு ஏற்படும் கொடூரம், படம் முடிந்து நீண்ட நேரமாகியும் நம் நெஞ்சை விட்டு நீங்க மறுப்பது படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறும் ப்ளஸ் பாயிண்ட்.
மைனாவின் நாயகராக சுருளி எனும் பாத்திரத்தில் தொட்டுப்பார் விதார்த் நம் மனதை தொடுகிறார். காட்டான் மாதிரி தலைமுடியும், தாடி மீசையுமாக இருந்தாலும், ரசிகர்கள் நெஞ்சை உலுக்கும் நடிப்பில் ஜூனியர் ராஜ்கிரண் என்று பட்டமே தரலாம் இவருக்கு. அதுவும் தன் காதலுக்காகவும், காதலிக்காகவும் பெற்ற தாய் - தந்தையையே அடிக்க பாயும் இடத்தில் விதார்த் சிறப்பான நடிப்பை விதைத்திருக்கிறார். அதேமாதிரி, விபத்துக்குள்ளான பேருந்தில் தன்னையும், தன் காதலையும் குழி தோண்டி புதைக்க நினைக்கும் சிறைக்காவலர்களை காப்பாற்றும் இடத்திலும் சபாஷ் வாங்கி விடுகிறார் விதார்த்.
மைனாவாகவே வாழ்ந்திருக்கும் அமலா பால், சிந்து சமவெளியில் விட்டதை இங்கே பிடித்து விட்டார். இவர் அழகான பெண்பால் மட்டுமல்ல... அருமையான நடிப்பாலும் நம்டம தன்வசப்படுத்தி விடுகிறார். க்ளைமாக்ஸில் அவருக்கு நிகழும் கொடூரம் கல் நெஞ்சக்காரர்களையும் கரைய வைக்கும்.
விதார்த் - அமலா பால் மாதிரியே ஜெயிலர் பாஸ்கராக வரும் சேது, தம்பி ராமையா, செவ்வாளை, கார்த்திக், பூவிதா, மீனாட்சி உள்ளிட்ட சகலரும் தங்கள் பங்கை சரியாய் செய்திருக்கிறார்கள். அதிலும் மைனாவின் சாவிற்கு காரணமான தன் மனைவி உள்ளிட்ட சொந்தபந்தங்களை போட்டுத் தள்ளும் ஜெயிலர் பாஸ்கராக வரும் சேதுவும், சுருளியின் அன்பில் உருகிப் போகும் தம்பிராமையாவும் பிரமாதம்.
சுகுமாரின் ஒளிப்பதிவும், டி.இமானின் இசையும் இதுவரை காணாத தமிழ்சினிமாவை கண் முன் நிறுத்துகிறது. இதுதான் க்ளைமாக்ஸோ, அதுதான் க்ளைமாக்ஸா இருக்குமோ... என எக்கச்சக்கமாக யோசிக்க விட்டு, யாருமே யோசிக்காத கோணத்தில் மைனாவுக்கும், சுருளிக்கும் முடிவு கட்டும் க்ளைமாக்ஸில் டைரக்டர் பிரபு சாலமன் வித்தியாசமாகத் தெரிகிறார்.
மைனா - தரமான தமிழ்ப்படம்தான் நைனா!
தினமலர் விமர்சனம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மைனா - திரைப்பட விமர்சனம்
மைனா - மாலைமலர் விமர்சனம்!
சிறு வயதில் ஆதரவின்றி நிற்கும் மைனா குடும்பத்துக்கு சுருளி உதவுகிறான். வளர்ந்த பிறகும் குடும்ப செலவுகளை ஏற்று பள்ளியில் படிக்க வைக்கிறான். அவர்கள் நட்பு காதலாக மலர்கிறது.
மைனாவை படித்த பையனுக்கு மணமுடிக்க அவள் தாய் சதி செய்கிறாள். தடுக்கும் சுருளியை போலீசில் சிக்க வைக்கிறாள். ஜெயிலில் இருந்து தப்பி மைனாவை அழைத்து கொண்டு ஓடுகிறான். போலீஸ் வளைத்து பிடிக்கிறது. கைவிலங்குடன் போலீஸ் நிலையம் அழைத்து போகின்றனர். மைனாவும் உடன் செல்கிறாள். அங்கு நடக்கும் சம்பவங்கள் இதயத்தை உலுக்கும் கிளைமாக்ஸ்...
காடு, மலை, அங்கு வசிக்கும் கிராம மக்களை கதைக்களமாக வைத்து காட்சி படுத்தியுள்ளார் இயக்குனர் பிரபுசாலமன். கேரக்டர்களை யதார்த்தங்களாய் மனதில் நடமாட விட்டுள்ளார்.
சுருளியாக விதார்த்தும், மைனாவாக அமலாபாலும் வாழ்கின்றனர்.
மைனாவை தன் உயிராய் நினைக்கும் விதார்த் அவளை வேறொருவனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவானதும் முகத்தில் வெறி காட்டுகிறார்.
கைதியாக காடு, மலை கடந்து போகும்போது உடன் வரும் மைனாவை பத்திரமாய் பாதுகாத்து அழைத்து போவது அவள் காலில் ஆணி குத்தியதும் தோளில் தூக்கி கொண்டு ஓடி ஆஸ்பத்திரியில் சேர்ப்பது... இருட்டில் படிக்கும் மைனாவுக்கு பெடல் சுற்றி சைக்கிள் லைட்டை எரிய வைப்பது என காதல் கோட்டை கட்டியுள்ளார்.
அமலாபால் கிராமத்து தேவதையாய் பளிச்சிடுகிறார். காதலனுடன் சேர்த்து வைக்க மறுக்கும் தாயிடம் செத்துப்போ என ஆவசேமாவது வித்தார்த் மேல் காதல் பார்வை வீசுவது அழுத்தம் பதிக்கிறார்.
அடங்காப்பிடாரி மனைவியின் தொல்லை ஒரு புறம், கைதி தப்பித்ததால் கோபம் இன்னொரு புறம் என இருதலைகொள்ளி எறும்பாய் போலீஸ் அதிகாரியாக வரும் சேது கவனிக்க வைக்கிறார்.
காமெடி, குணசித்திர கேரக்டரில் தம்பி ராமையா மனதில் நிற்கிறார்.
பஸ் விபத்தில் சக பயணிகளையும் போலீசாரையும் விதார்த் காப்பாற்றும் சீன்கள் சீட் நுனிக்கு இழுக்கின்றன.
சேது மனைவி குடும்பத்தினர் தீர விசாரிக்காமல் செய்யும் படுபாதக செயல் யதார்த்த மீறலாக இருந்தாலும் உலுக்கி போடுகிறது. காதல் ஜோடி, போலீஸ் அதிகாரிகளின் நீண்ட காடுமேடு பயணம் வேகத்தடை போடுகிறது.
இமான் இசையில் பாடல்கள் இதம். சுகுமார் கேமரா காட்டின் பசுமையை கண்ணில் பதிக்கிறது.

Similar topics
» மைனா - சிறப்பு விமர்சனம்
» செம்பி – திரைப்பட விமர்சனம்
» புலிவேஷம் - திரைப்பட விமர்சனம்
» மெளனகுரு - திரைப்பட விமர்சனம்
» பப்பி - திரைப்பட விமர்சனம்
» செம்பி – திரைப்பட விமர்சனம்
» புலிவேஷம் - திரைப்பட விமர்சனம்
» மெளனகுரு - திரைப்பட விமர்சனம்
» பப்பி - திரைப்பட விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum