ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
அகிலமெங்கும் தீபாவளி Poll_c10அகிலமெங்கும் தீபாவளி Poll_m10அகிலமெங்கும் தீபாவளி Poll_c10 
heezulia
அகிலமெங்கும் தீபாவளி Poll_c10அகிலமெங்கும் தீபாவளி Poll_m10அகிலமெங்கும் தீபாவளி Poll_c10 
mohamed nizamudeen
அகிலமெங்கும் தீபாவளி Poll_c10அகிலமெங்கும் தீபாவளி Poll_m10அகிலமெங்கும் தீபாவளி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகிலமெங்கும் தீபாவளி

3 posters

Go down

அகிலமெங்கும் தீபாவளி Empty அகிலமெங்கும் தீபாவளி

Post by krishnaamma Thu Nov 04, 2010 10:01 pm

உலகமெங்கும் தீபாவளி கொண்டாடும் விதத்தை சொல்லும் கட்டுரை. தினகரனில் பார்த்தேன் . இங்கு உங்களுக்கு அறியத்தருகிறேன்.

நேபாளத்தில் தீபாவளிப் பண்டிகை பொதுவாக அக்டோபர் மாதம் தேய்பிறையில் 13ம் நாள் தொடங்கி வள ர்பிறையில் இரண்டாம் நாள்வரை ஐந்து நாட்களுக்குத் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. அதனால் அதற்கு பஞ்சக் என்று ஒரு பெயரும் உண்டு. பண்டிகையின்போது வீட்டில் எல்லாக் கதவுகளையும் ஜன்னல்களையும் அலங்கரிப்பர். மேலிருந்து விளக்குகளைத் தொங்கவிடுவர்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசியில் வியாபாரிகள் மங்கள நாளான தீபாவளி அன்று செல்வத்தை அளிக்கும் அன் னபூரணியை வணங்கிவிட்டு புதுக்கணக்கு துவங்குகிறார்கள். அன்றைய தினம் பெண்கள் புது நகை வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். நகை வாங்க முடியாதவர்கள், ஒரு சிறு பாத்திரமாவது அன்று கட்டாயம் வாங்குவர். உண்மையான கங்காஸ்நானம் செய்து அன்னபூரணி ஆலயம் செல்லும் காசி மக்கள் அன்று பூப்போன்ற சாதத்தை வைத்து பூஜிக்கப்படும் அன்னக்கூடம் எனும் பூஜையை கண்டு களிக்கிறார்கள். இனிப்பு வகைகளும் பூஜையில் இடம் பெறும். இதை மிட்டாய்த் திருவிழா என்றும் அழைப்பர்.

வங்காளத்தில் தீபாவளிப் பண்டிகை துர்க்கைக்கு உரியதாகக் கொண்டாடப்படுகிறது. மாவிலை தோரணம் கட்டி தீபவரிசைகள் வைத்துப் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள். அன்று பதினோரு வகை கீரைகளை சமைப்பது சிறப்பு அம்சம். குறைந்தது 14 தீபங்களையாவது வரிசையாக ஏற்றி வைப்பது வழக்கம்.


Last edited by krishnaamma on Thu Nov 04, 2010 10:04 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அகிலமெங்கும் தீபாவளி Empty Re: அகிலமெங்கும் தீபாவளி

Post by krishnaamma Thu Nov 04, 2010 10:01 pm


ராஜஸ்தானில் தீபாவளி, தீவாளி, தீபமாலிகா என்று பல பெயர்களால் கொண்டாடுகிறார்கள். மார்வாடிகள் தீபாவளி அன்று மாலை தொடங்கி நள்ளிரவுவரை லட்சுமி பூஜை செய்கிறார்கள். பூஜிக்கப்படும் லட்சுமியின் படம் வெள்ளியில் இருக்கும். அதை ஒவ்வொரு குடும்பத்தினரும் தலைமுறை தலைமுறையாக பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர். பூஜையின் நிறைவாக புதிய திண்டுகள் போடுவதும், புது முண்டாசு அணிவதும் தனி சிறப்பு.

குஜராத்தில் தீபாவளிதான் மிக முக்கியமான பண்டிகை. அன்றைய தினம் அவர்களுக்கு வருடப்பிறப்பும் கூட. அங்கே தீபாவளி ஐந்து நாள் கொண்டாட்டம். முதல்நாள் பண்டிகை தன்தோஸ் எனப்படுகிறது. கடைகளை முன்பே சுத்தம் செய்து, தங்க, வெள்ளி நாணயங்களுடன் லட்சுமி பூஜை நடத்துகிறார்கள். இரண்டாவது நாள் காளிசௌதாஸ். அ ன்று நோன்பு நடக்கும். கல்வி, செல்வம், ஆரோக்கியம் கிடைக்க பூஜை செய்வர். மூன்றாவது நாள் தீபாவளி. வியாபாரிகள் புத்தகங்களை வைத்துப் பூஜை செய்தபின் பட்டாசு வெடிப்பர். கணேசருக்கு வழிபாடு செய்து தொடங்கும் பூஜை, பின் லட்சுமி, சரஸ்வதிக்கும் நடக்கிறது. நான்காவது நாள் வருடப்பிறப்பு. வியாபாரிகள் வாடிக்கை

யாளரிடமிருந்து ஒரு ரூபாயாவது மரியாதைக்காக பெறுவது வழக்கம். ஐந்தாம் நாள் பாய் பீச். அன்று சகோதரர்கள் தங்கள் சகோதரிகளின் இல்லத்திற்குச் சென்று விருந்து சாப்பிட்டு, பரிசளிப்பர். அன்றுடன் தீபாவளிப் பண்டிகை முடிகிறது. ஐந்து நாட்களும் எல்லோர் வீட்டிலும் ஏதாவது இனிப்பு தயாரித்து சாப்பிடுவார்கள். வீட்டில் சப்பாத்தி இடுவதையும், அப்பளம் தயாரிப்பதையும் தவிர்ப்பார்கள். கோதுமையை உடைத்து சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள். புத்தாண்டு தினத்தில் குழந்தைகள் தெருவில் உப்பு விற்பதும் ஒரு மரபு. அதை வாங்கி சிறிது வாயில் போட்டுக் கொண்டு பிறகுதான் இனிப்பை உண்கிறார்கள். வாழ்க்கை உப்புச் சப்பில்லாமல் போய்விடக்கூடாது என் பதற்காக இப்படி ஒரு வழக்கமாம்!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அகிலமெங்கும் தீபாவளி Empty Re: அகிலமெங்கும் தீபாவளி

Post by krishnaamma Thu Nov 04, 2010 10:05 pm

மேற்கு வங்காளத்தில் தீபாவளியை மகாநிஷா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். மகாகாளி 64000 யோகினிகளுடன் இந்த நாளில் தோன்றியதாக ஐதீகம்.

மகாராஷ்டிரத்தில் தீபாவளி நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதை நரக சதுர்த்தி என்கிறார்கள். முதல்நாள் மங்களஸ்நானம் செய்து வண்ணக் கோலங்களால் வீட்டை அலங்கரிக்கிறார்கள். தரையில் மண் பொம்மைகளை வை த்து தோரணங்கள் கட்டி புத்தாடை அணிகிறார்கள். இரண்டாவது நாள் லட்சுமி பூஜை. அன்று கட்டாயம் எ ல்லோர் வீட்டிலும் துடைப்பம் வாங்குகிறார்கள். துடைப்பத்தை லட்சுமி என்றே சொல்லி விற்கிறார்கள். புது துடைப்பத்தை குங்குமம் இட்டு பூஜை செய்து பின்பே உபயோகிக்கிறார்கள்.

மூன்றாவது நாள் பட்வா. இது மனைவியர் கணவரின் நலம் காக்க நோன்பு நோற்கும் நாள். கணவன், மனைவிக்கு இனிப்பு ஊட்டுவார். நான்காம் நாள் பாய்பீச். இது சகோதர, சகோதரியருக்கு முக்கியமான நாள். சகோதரியர் உடன்பிறந்தோருக்கு ஆரத்தி எடுத்து அவர்களிடமிருந்து பரிசும் பணமும் பெறுவர்.

ஆந்திர மாநிலத்தில் விடியற்காலை தீபாவளி இல்லை. விடிந்த பிறகே விருந்து சாப்பிட்டு தீபாவளியைக் கொண் டாடுகிறார்கள். இரவில் தீபங்களை ஏற்றி வீட்டை அழகு படுத்துவது உண்டு.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அகிலமெங்கும் தீபாவளி Empty Re: அகிலமெங்கும் தீபாவளி

Post by krishnaamma Thu Nov 04, 2010 10:06 pm

பீகார் மாநிலத்தில் தீபாவளியை மூதேவியை விரட்டிடும் பண்டிகை என்று சொல்வதுடன், அன்று துணியினால் ஆன பந்தம் கட்டி அதில் தீயைக் கொளுத்தி வீட்டுக்கு வெளியே எறிவார்கள். சில இடங்களில் துடைப்பத்தைக் கொளுத்தி வீட்டு வாசல் முன் போடுவார்கள். இதனால் மூதேவி வெளியேறி ஸ்ரீதேவி வருவதாக நம்பிக்கை.

இமாச்சலப் பிரதேசத்தில் தீபாவளியை பொங்கல் பண்டிகை போலக் கொண்டாடுகிறார்கள். தீபாவளி நாளில் பசுமாடுகளைக் குளிப்பாட்டி, அலங்காரம் செய்து, வழிபாடு செய்கிறார்கள். அஷ்டலட்சுமிகளும் பசுமாட்டில் இரு ப்பதாகிய நம்பிக்கை வடநாட்டில் உண்டு.

தீபாவளி நாளில் மகாலட்சுமி உலகம் முழுதும் வலம் வருவதாக நம்பிக்கை. மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பண்டல்கண்டு பகுதியில் கோஜாகாரா என்ற பெயரில் தீபாவளி, திருமகள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. கோஜாகாரா என்ற சொல்லுக்கு இரவு கண்விழித்தல் என்று அர்த்தம். அன்று இரவு முழுதும் கண்விழித்து பஜனைகள், பாடல்கள், நடனம் என்று கேளிக்கைகளில் மகிழ்வார்கள்.

பர்மாவில் இந்த தீபாவளி டாங்கி ஜூ என்று அழைக்கப்படுகிறது. புத்தர் ஞானோதயம் பெற்ற நாள் என்று ஒவ்வொரு வீட்டிலும் தீப அலங்காரம் செய்து பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள்.

சீனாவில் தீபாவளிக்கு நயீம் ஹூயுபா என்று பெயர். வீடுகளை சுத்தப்படுத்தி வண்ணத்தாள்களால் அலங்கரித்துக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் புதுக்கணக்கு ஆரம்பிப்பதும் தீபாவளி நாளில்தான்.

தாய்லாந்தில் தீபாவளி, லாய்கிரத்தாய் எனப்படுகிறது. வாழை இலையில் தொன்னைகள் செய்து அதில் அகல்வி ளக்கையோ அல்லது மெழுகு வர்த்தியையோ ஏற்றி வைத்து ஆற்றில் ஓடும் நீரில் விடுவது அவர்கள் வழக்கம்.

ஜப்பானில் மூன்று நாட்கள் தீபவிழா டோரோ நாகாஷு என்ற பெயரில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. முன்னோர்களை வரவேற்கும் விழாவாக இது அந்நாட்டில் கருதப்படுகிறது.

தீபாவளி சீக்கியர்களுடைய மதகுருவான குருநானக் பிறந்த நாள். அதனால் அவர்களும் தீபாவளியைக் கொண்டாடு கின்றனர். புதிய தலைப்பாகை அணிந்து, புதுக் கணக்கு துவங்கி வீட்டை வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்கின்றனர்.

ஜைனர்களும் தீபாவளி கொண்டாடுகிறார்கள். அன்று மகாவீரர் மகாநிர்வாணம் அடைந்த நாள் ஆகும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அகிலமெங்கும் தீபாவளி Empty Re: அகிலமெங்கும் தீபாவளி

Post by அன்பு தளபதி Thu Nov 04, 2010 10:07 pm

அம்மா தீப திருநாள் வாழ்த்துக்கள் ஆசிர்வாதம் பண்ணுங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அகிலமெங்கும் தீபாவளி Empty Re: அகிலமெங்கும் தீபாவளி

Post by krishnaamma Thu Nov 04, 2010 10:08 pm

இவ்வளவும் சொன்ன கட்டுரையாளர் நம் தமிழ்நாட்டை விட்டுவிட்டார். நமக்கு தான் தெரியுமே என்பதாலா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அகிலமெங்கும் தீபாவளி Empty Re: அகிலமெங்கும் தீபாவளி

Post by krishnaamma Thu Nov 04, 2010 10:11 pm

maniajith007 wrote:அம்மா தீப திருநாள் வாழ்த்துக்கள் ஆசிர்வாதம் பண்ணுங்க

புன்னகை 16 ம் பெற்று தீர்க்காயுசாக, நோய் நொடி இல்லாமல் வாழுங்கள் !

உங்கள் மனோரதம் எல்லாம் நிறைவேறட்டும் ! !


சந்தோஷமா ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அகிலமெங்கும் தீபாவளி Empty Re: அகிலமெங்கும் தீபாவளி

Post by மோகன் Thu Nov 04, 2010 10:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணம்மா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அகிலமெங்கும் தீபாவளி Mஅகிலமெங்கும் தீபாவளி Oஅகிலமெங்கும் தீபாவளி Hஅகிலமெங்கும் தீபாவளி Aஅகிலமெங்கும் தீபாவளி N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

அகிலமெங்கும் தீபாவளி Empty Re: அகிலமெங்கும் தீபாவளி

Post by அன்பு தளபதி Fri Nov 05, 2010 1:43 pm

krishnaamma wrote:
maniajith007 wrote:அம்மா தீப திருநாள் வாழ்த்துக்கள் ஆசிர்வாதம் பண்ணுங்க

புன்னகை 16 ம் பெற்று தீர்க்காயுசாக, நோய் நொடி இல்லாமல் வாழுங்கள் !

உங்கள் மனோரதம் எல்லாம் நிறைவேறட்டும் ! !


சந்தோஷமா ? புன்னகை
ரொம்ப மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அகிலமெங்கும் தீபாவளி Empty Re: அகிலமெங்கும் தீபாவளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum