புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவா விபத்து?! Poll_c10இதுவா விபத்து?! Poll_m10இதுவா விபத்து?! Poll_c10 
30 Posts - 86%
heezulia
இதுவா விபத்து?! Poll_c10இதுவா விபத்து?! Poll_m10இதுவா விபத்து?! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
இதுவா விபத்து?! Poll_c10இதுவா விபத்து?! Poll_m10இதுவா விபத்து?! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
இதுவா விபத்து?! Poll_c10இதுவா விபத்து?! Poll_m10இதுவா விபத்து?! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவா விபத்து?!


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 04, 2010 3:54 pm

சென்னையில் சிறுவன் காளீஸ்வரனது மர ணம் எத்தனைபேரின் கவனத்தில்

பதிந்திருக் கும்? பரந்து விரிந்த மாநகரத்தில் ஓர் ஏழையின் பரிதாபச் சாவு எத்தனை பேருக்கு முக்கியமானதாக இருந்திருக்கும்? சென்னை சூளைமேடு கூவம் கரையில் இருக்கிறது காளீஸ்வரனது வீடு. பேர்தான் வீடு... கால் நீட்டிப் படுக்கவும் முடியாத சின்னச்சிறு கூடு அது. எட்டாவது படித்துக்கொண்டே, தன் தாய்க்குப் பொறுப்பான உதவியாளனாகவும் இருந்தவன்.

மகன் இறந்ததை இன்னும் நம்பக்கூட முடியாமல் பித்துப் பிடித்து வெறித்துப் பார்க்கிறார் தாய் மனோன்மணி. ''ஆறு மாசமாத்தான் அந்த அபார்ட்மென்ட்டுக்கு போய் பூ கொடுத்துட்டு இருந்தான் காளீஸ்வரன். அங்க குடியிருக்கிறவங்களே அந்த லிஃப்ட் அடிக்கடி கோளாறா இருக்கும்னு இப்போ சொல்றாங்க. 'பையன் முதல்ல லிஃப்ட்டுக்குள்ள போய் பட்டனை அழுத்தி இருப்பான். அது உடனே நகராம இருந்திருக்கு. திரும்பவும் வெளியே வந்துட்டு உள்ளே போறப்ப லிஃப்ட் கதவு சாத்தி, பையனை மாட்டி இழுத்துட்டுப்போய் இருக்கணும்'னு சொல்றாங்க. அவனோட காலில் இருந்து வயிறு வரைக்கும் உடம்பு ரெண்டா பிளந்து இருக்கு... அந்த கடைசி நிமிஷத்துல எத்தனை ரணவேதனைபட்டு இருப்பான் காளீஸ்வரன்!'' என்று அருகில் இருப்பவர்கள் சொல்லும்போதே, தாய் மனோன்மணிக்கு உடம்பு உலுக்கிப் போடுகிறது.

''பாவம் மனோன்மணி... 10 வருஷத்துக்கு முந்தியே இவ புருஷன் இன்னொருத்தியோட ஓடிட்டான். வீட்டு வேலை செஞ்சு பையனைப் படிக்கவெச்சிட்டு இருந்தவளுக்கு, ஓடியாட முடியாத அளவுக்கு கால் வலி வந்தது. 10 நிமிஷம் சேர்ந்தாப்ல நிக்க முடியாது. இதைப் பார்த்த காளீஸ்வரன், 'உனக்கு நான் இருக்கேன்மா...'ன்னு சொல்லி, சாயங்காலம் ஸ்கூல்விட்டு வர்றப்பயே மார்க்கெட்டுக்குப் போய் பூ வாங்கிட்டு வந்து டுவான். அம்மா அதைக் கட்டிக் கொடுக்க... இவன் வீடு, வீடா வித்துட்டு வருவான். மீதம் இருக்கிற பூவையும் காலையில் வித்துட்டுத்தான் ஸ்கூலுக்கே போவான்.

தினமும் 50... 100 கிடைக்கிறதே பெருசு. அதை வெச்சுத்தான் இவங்க பொழப்பு ஓடிட்டு இருந்துச்சு. மனோன்மணிக்கு சொந்தம்னு சொல்லிக்க அவனைவிட்டா யாரும் இல்லை. இனிமே என்ன பண்ணப்போகுதுன்னு தெரிய லையே...'' என்று அக்கம் பக்கத்தினர் சோகத்துடன் சொல்கிறார்கள்.

சிறுவர்கள் இயக்கும்போது, கோளாறு காரணமாக லிஃப்ட் அவர்களை உள்ளிழுத்து உயிர் பறித்த சம்பவங்கள் புதிதல்ல. எத்தனை தடவைதான் மீடியாக்கள் இது குறித்து எச்சரிக்கை செய்திகள் வெளியிட்டாலும், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் பொறுப்பாளர்கள் பலருக்கு உரிய எச்சரிக்கை பிறப்பதில்லை. குடியிருப்புகள் பலவற்றில், பராமரிப்புக் கட்டணமாக 500 முதல் 2,000 வரை வசூல் செய்கிறார்கள். இதை வைத்துதான் பராமரிப்பு மற்றும் செக்யூரிட்டிகளுக்கு சம்பளம் கொடுக்கிறது அந்த அபார்ட்மென்ட் அசோசியேஷன். ஆனால், லிஃப்ட்டுக்கென்று ஒரு பணியாளரை நியமிக்க முன்வருவது இல்லை. சிறிய செலவுதான்; இருந்தும் இதன் முக்கியத்துவத்தைப் பலர் உணர்வதாக இல்லை.

போலீஸும் இதை விபத்தாகவே பதிவுசெய்து விசாரிக்கிறது. நடந்த சம்பவம் ஒரு விபத்து என்றே வைத்துக்கொண்டாலும், மனிதநேயத்தின் அடிப்படையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர்களோ, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோ அல்லது அப்பகுதியின் மக்கள் பிரதிநிதியோகூட யாருமே ஆறுதல் சொல்லவும் வரவில்லை, இந்த ஏழைத் தாயின் வீட்டுக்கு.

நகரத்தின் இயந்திர வாழ்க்கையில், மற்றோர் இயந்திரம் ஓர் உயிரைப் பறிப்பதும்கூட சாதாரணம் ஆகிவிட்டதா?

சமீபத்தில், திருவல்லிக்கேணி பகுதியில் அதிகாலைப் பொழுதில் கண்ட காட்சி இது... பால் பாக்கெட்டுகள் நிறைந்த பெரிய பிளாஸ்டிக் பையை சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு பங்களா வாசலில் நின்று இருந்தாள் ஒரு சிறுமி. அவளுக்கு 10 வயதுகூட இருக்காது. தனக்கு எட்டாத உயரத்தில் இருந்த அழைப்பு மணியைப் பார்த்து மலங்க மலங்க விழித்தாள் அவள். அழைப்பு மணியை அழுத்தித் தர தெருவில் யாரும் இல்லை. தயங்கியபடியே பங்களா கேட்டில் காலை ஊன்றி ஏறி மணியை அழுத்த எத்தனித்தபோது, உள்ளே இருந்து ஆக்ரோஷமாக வந்த நாய் கேட் மீது பாய... பையை அப்படியே கீழே போட்டுவிட்டு பயமும் பதற்றமுமாக அழுதுகொண்டே ஓடினாள் அந்தச் சிறுமி!

இப்படி ஒன்றிரண்டு பேர்அல்ல... தமிழகத்தில் மட்டும் சுமார் 50 லட்சம் குழந்தைகள், ஏதோ ஒரு தொழில் பிரிவில், ஏதோ ஒரு வழியில் தத்தளிப் பதாக அரசின் புள்ளிவிவரப் பதிவுகள் கூறுகின்றன. இத்தனைக்கும், குழந்தைகள் உரிமைகள் குறித்த ஐ.நா-வின் ஒப்பந் தத்தில் நாம் கையெழுத்திட்டு 21 ஆண்டு கள் ஆகிவிட்டன. கோடிகளில் வீடு கட்டி, லட்சங்களில் கார்கள் ஓடும் மாநகரத்தில் ஏழையின் உயிர்தான் எத்தனை மலிவு!

நன்றி ஜூனியர்விகடன்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Nov 04, 2010 7:50 pm

உண்மைதான்... ஏழைகள் சொல் அம்பலம் ஏறுவதில்லை...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 27/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Fri Nov 05, 2010 12:16 am



மிகவும் துயரமான சம்பவம். அடிக்கடி இது போன்று நடந்துகொண்டுதான் இருக்கின்றது.



இதுவா விபத்து?! Mஇதுவா விபத்து?! Oஇதுவா விபத்து?! Hஇதுவா விபத்து?! Aஇதுவா விபத்து?! N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக