Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிப்பாகவும், சீரியஸாகவும் அம்மாவுக்கு 10 அட்வைஸ் !
Page 1 of 1
சிரிப்பாகவும், சீரியஸாகவும் அம்மாவுக்கு 10 அட்வைஸ் !
01. போயஸே போ... கொடநாடே வா !
முன்பு எல்லாம் ஹைதராபாத்தில் ஓய்வு எடுத்து வந்த ஜெயலலிதாவுக்கு இப்போது பிடித்த இடம் கொடநாடுதான். சிறுதாவூர், பையனூர் பங்களாவில்கூட, தனியாகத் தங்குவதற்குப் பயப்படும் அவர், பரந்து விரிந்த குளிர் கொடநாட்டில் எத்தனை மாதமும் தனிமையில் கழிக்கத்தயராக இருக்கிறார். மலையும், மழையும் அவர் மனதை மகிழ்வித்து வருகிறது. தேர்தலுக்கு முன்பும், தோற்ற பின்பும் அங்கு அடைந்து கொள்வதே கருணாநிதியின் முரசொலி கிண்டல்களுக்குக் களம் அமைக்கிறது. இதற்குப் பதிலாக போயஸ் கார்டன் வீட்டையே கொடநாட்டுக்கு நிரந்தரமாக மாற்றி விட்டால் " ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வு எடுக்கிறார் !'' என்று கிண்டல் செய்ய முடியாது. போயஸ் கார்டனை சில்ரன்ஸ் கார்டன் நடத்த இலவசமாக அளித்தால், கருணாநிதியின் கோபாலபுரக் கொடைக்குப் பகீர் பதிலடி கொடுத்தது போலவும் இருக்கும் !
02. எதற்கு இத்தனை எம். எல்.ஏக்கள் ?
ஆளுங்கட்சியாக இருக்கத்தான் 117 எம்.எல்.ஏக்கள் தேவை. மெஜாரிட்டிக்குக் கைதூக்க அத்தனை பேர் அவசியம். எதிர்க்கட்சி நாற்காலியில் உட்கார எத்தனை பேர் இருந்தால் என்ன ? நிறைய எம்.எல்.ஏக்கள் இருந்தாலே அவர்களைப் பற்றி வரும் மொட்டைக் கடிதங்களைப் படித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. சட்டசபைக்குப் போகும் இவர்கள் கருணாநிதி, ஸ்டாலினைப் பார்க்கிறார்கள். திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பட்டால் சிரிக்கிறார்கள். சிலர் வணக்கம்கூட வைக்கிறார்கள். ""அதிமுக'' வின் அடிப்படை உறுப்பினர் பதவியைப் பறிக்க இந்த ஒரு காரணம் போதாதா ?
03. தேர்தல் கமிஷனைக் கலையுங்கள் !
தனது ஆட்சிக் கனவுக்கு ஆப்பு வைப்பதே தேர்தல் கமிஷன்தான் என்று நினைக்கிறார் அம்மா. தேர்தல்களில் அதிமுக வாக்காளர்களின் பெயரைத் திட்டமிட்டு நீக்கினார்கள். மதியம் ஒன்றரை மணிக்கு மேல் விழும் அத்தனை வாக்குகளும் உதயசூரியனுக்குப் போய் விடுவது மாதிரி மெஷினை செட் பண்ணிக் கொடுத்தார்கள். புகார்களை விசாரிப்பதே இல்லை... என்று பல கோபங்கள் அவருக்கு. இதற்கு மாற்றாக தேர்தல் கமிஷனே தேவையா என்று யோசிக்கலாம். மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள்... மெஷினில் அது பதிவு ஆகிறது. இடையில் நரேஷ் குப்தா, நவீன் சாவ்லா போன்றவர்களுக்கு என்ன வேலை ? இதை ஜனாதிபதி கவனத்துக்கு கொண்டு போகலாம் !
04. அட்டெண்டன்ஸூக்கு ஆப்பு !
எம்.எல்.ஏ. என்பது 5 ஆண்டுகளுக்கு அதிகாரம் <உள்ள பதவி. அவர்களுக்கு பள்ளிக்கூட மாணவர்கள் போல அட்டண்டன்ஸ் தேவையா ? மன்றத்துக்கு வராததை ஏதோ தெய்வ குற்றம் போலக் குத்திக் காட்டுவது ஏன்? வாக்கு அளித்த மக்களாலேயே அசைக்க முடியாத பதவியை, அந்த சுண்டைக்காய் கையெழுத்துக் காலி செய்து விடுமா ? இதை உடனடியாக, அதி அவசரமாகப் போர்க்கால நடவடிக்கையில் மாற்றியாக வேண்டும். அல்லது, கல்லூரிகளில் யாரும் யாருக்கும் ""உள்ளேன் ஐயா'' சொல்லும் பிராக்ஸி நடைமுறையை சட்டசபையில் கண்டிப்பாக்கி விட வேண்டும் !
05. ஜெயாஸ்ரீயா.... விஜயஸ்ரீயா ..?
போயஸ் தோட்டத்தில், வாய்ஸூடன் கொடி கட்டிப் பறந்த மனிதர்கள் வரிசையில் நடராஜன் முதல் புள்ளி. அடுத்து வந்தார் திவாகரன். அடுத்து வளர்ப்பு மகன் சுதாகரன். அவருக்குப் பிறகு பாஸ்கரன். அவரும் அடங்கவில்லை என்றதும் தினகரன். அவர் மீது பொறாமைப் பகை மலைமலையாகக் குவிய... மகாதேவன் வந்தார். ஒரு வாரம்கூடத் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
இப்போது டாக்டர் வெங்கடேஷ். மன்னார்குடி சசிகலா குடும்பத்தில் இருந்து மளமளவென்று வருகிறார்கள் அதிமுகவின் அடுத்த வாரிசுகள். இப்படி மாற்றிக்கொண்டே போவதால், போஸ்டர் ஒட்டிப் பொழுதைக் கழித்துப் பொழைப்பைக் கெடுத்துக் கொள்ளும் ரத்தத்தின் ரத்தங்கள்தான் குழப்பம் அடைகின்றனர்.வீட்டில் வளர்ந்து கொண்டு இருக்கும் சசிகலாவின் பேத்திகளான ஜெயாஸ்ரீ, விஜயஸ்ரீ இருவரில் அடுத்த சமஸ்தானத்து வாரிசு யார் என்று இப்போதே தெரிவித்துவிட்டால் போஸ்டர் அடிக்க, பட்டங்களை யோசிக்க வசதியாக இருக்குமே !
Re: சிரிப்பாகவும், சீரியஸாகவும் அம்மாவுக்கு 10 அட்வைஸ் !
06. மைனாரிட்டியை மெஜாரிட்டி ஆக்கிய மகாராணி !
கருணாநிதியை "" மைனாரிட்டி திமுக அரசின் முதல்வர்'' என்று அழைத்தவர் நீங்கள். ஆனால், போகிறபோக்கில் காங்கிரஸின் தயவு இல்லாமல் திமுக மெஜாரிட்டியுடன் காலூன்றி விடும். அதிமுகவின் எம்.எல்.ஏக்களை நீங்கள் நீக்கிக்கொண்டே இருந்தால், அவர்கள் திமுகவில் ஐக்கியமாவார்கள். அந்த காலி தொகுதிக்கான இடைத்தேர்தல்கள் அனைத்தையும் புறக்கணியுங்கள். அவர்கள் பிரச்சாரத்துக்குப் போகாமல், கோழி பிரியாணி-குவார்ட்டர்களுக்குச் செலவழிக்காமல் ஜெயிக்கட்டும். ""மைனாரிட்டியை மெஜாரிட்டி ஆக்கிய மகாராணி !'' என்று திமுக கையால் பட்டம் பெற்ற பெருமையும் உங்களுக்கு வந்து விடும் !
07. அம்மா ஆன் லீவ் !
பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டுக் கல்யாணத்தில், ""கட்சிக்காரர்கள் எல்லோரும் தேர்தல் வேலையைச் சரியாகப் பார்க்க வில்லை. மதியம் ஒன்றரைக்கு வீட்டுக்குப் போய்விட்டார்கள் !'' என்று பேசி இருக்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் அதற்கு முந்தைய ஒன்றரை வருஷம் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் ? என்று தொண்டன் நினைக்கிறான். அதனால் ஒரு ஏற்பாடு செய்யலாம். பள்ளிக்கூடங்களின் காலாண்டு, அரையாண்டு விடுமுறைகள் போலக் கட்சிக்கும் கோடை, குளிர்கால விடுமுறைகள் விடலாம். ""அம்மா ஆன் லீவ் !'' என்று அமைதியாகி விடுவான் தொண்டன் !
08. ""களங்கம், கட்டுப்பாடு ! ''
கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தியதாகவும், கட்டுப்பாட்டை மீறியதாகவும் பலரைக் கட்டம் கட்டுகிறார் ஜெயலலிதா. அவர்களுள் பலர் மன்னிப்பு கேட்டுக் கொண்டதால், மீண்டும் கட்சிக்குள் இணைக்கப்படுகிறார்கள். அவர்கள் ஏற்படுத்திய களங்கம் என்ன.. என்ன கட்டுப்பாட்டை மீறினார்கள் என்பது பொதுமக்களுக்குத் தெரிவதில்லை.குறிப்பாக, ரத்தத்தின் ரத்தங்களுக்கு அந்த ரசவாதம் புரிவதே இல்லை. எனவே, எது களங்கம்,எது கட்டுப்பாடு என்ற தலைப்பில் தொடர் எழுதினால், அதிமுகவினருக்கு மட்டுமல்லாமல், அத்தனை கட்சிக்காரர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கும் !
09. கெட்டப் சேஞ்ச் !
சினிமா ஹீரோக்கள் மட்டுமல்ல... இப்போதெல்லாம் அரசியல் தலைவர்களும் கெட்டப்புக்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். கறுப்புக்கண்ணாடியில் வந்து மிரட்டுகிறார்கள் ஸ்டாலினும், அழகிரியும். பார்த்துப் பார்த்துச் சலித்த முகங்களாக மக்களுக்கு அலுப்புத் தட்டிவிடக் கூடாதே என்பதுதான் இதற்குக் காரணம். எனவே, எம்.ஜி.ஆரின் கண்ணாடி, தொப்பியைக் கூட ஜெயலலிதா அணியலாம். எதற்கும் அவர் முந்திக்கொள்வது நல்லது. ஏனென்றால், இந்த தொப்பி ஐடியாவை விஜயகாந்த் உருவிக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது !
10. இவருக்குப் பதில் இவர் !
முன்பு போல உங்களால் அலைய முடியவில்லை. அரங்குக்கு வர முடியவில்லை. நிறைய நேரம் மேடையில் உட்கார முடியவில்லை. எனவே, மாற்று ஏற்பாடு செய்து கொள்வது நல்லது. டிவி சீரியலில், இனி இவருக்குப் பதில் இவர் நடிப்பார் என்று கேப்ஷன் போடுவது போல, உங்களுக்குப் பதிலாக யாரையாவது மேடைகளில் உட்கார வைத்து விட்டால், மக்கள் அதே கதாபாத்திரமாகவே நினைத்து மனதார ஏற்றுக் கொள்வார்கள். நீங்கள் நிழலாக இருந்து கட்சியை நடத்தலாம். யாரும் கிண்டல் செய்ய மாட்டார்கள். சகலவித சங்கடங்களையும் நிவர்த்தி செய்யும் சிறந்த ஐடியா இது !

Similar topics
» அம்மாவுக்கு…
» என் அம்மாவுக்கு ...........
» அன்புள்ள அம்மாவுக்கு
» முதன்முதலாய் அம்மாவுக்கு
» தீவுத்திடல் அம்மாவுக்கு....
» என் அம்மாவுக்கு ...........
» அன்புள்ள அம்மாவுக்கு
» முதன்முதலாய் அம்மாவுக்கு
» தீவுத்திடல் அம்மாவுக்கு....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum