புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
108 Posts - 74%
heezulia

19 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

273 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Oct 30, 2010 1:59 am

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் நினைவாக, அஞ்சல் அட்டை பிரசாரத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது சர்வதேச மன்னிப்புச் சபை. இச்சபையின் அமெரிக்கப் பணிப்பாளர் ஜீன் மக் டொனால்ட் இத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுபோன்ற இனப் படுகொலை சம்பவங்களுக்கு அனைத்துலக விசாரணை அவசியம் என்பதனை வலியுறுத்தி இப்பரப்புரைப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. திருமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி மற்றும் புனித சூசையப்பர் கல்லூரியைச் சேர்ந்த மனோகரன் இரஜிகர், யோகராஜா ஹேமச்சந்திரா, லோகிதராஜா ரோகான், தங்கத்துரை சிவானந்தா, சண்கராஜா கஜேந்திரன் ஆகிய மாணவர்கள் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட கைக்குண்டு வீச்சில் கொல்லப்பட்டனரென்று கூறப்பட்டது.
பின்னர் மூவரின் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாக, வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை வெளிப்படுத்தியது.

ஆகவே உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் விசாரணைக் குழுக்கள், சரியான தீர்வினை வழங்குவதில்லை என்பதனை வலியுறுத்தும் வகையில் இந்தச் சர்வதேச மன்னிப்புச் சபையின் புதுவிதமான போராட்டம் உணர்த்துவதைப் புரிந்து கொள்ளலாம்.
மாயமான் வேட்டையில் இறங்கியுள்ள அரசின் கற்றறியும் ஆணைக்குழு, ஒடுக்கு முறைக்குள்ளான தமிழ்த் தேசிய இனத்திற்கு நீதியைப் பெற்றுத் தரப் போவதில்லை.

சர்வதேச அளவில் உற்று நோக்கப்படும் அனைத்துலக நெருக்கடிக் குழுவினரோ (International Crisis Group) சர்வதேச மன்னிப்புச் சபையோ அல்லது நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைக் கண்காணிப்பகமோ அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் நம்பத்தன்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன.
இந்தியா சீனாவின் உதவியின்றிப் போரை வென்றெடுக்க முடியாதென்று பகிரங்கமாக அறிவிக்கும் இலங்கை அரசு, அவர்களைத் தம்வசம் ஈர்த்தது போன்று இந்த மனித உரிமைச் சபைகளை வளைத்துப் போட முடியாமல் தடுமாறுவதைக் காணக் கூடியதாகவுள்ளது.

இவை தவிர, 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதியளவில் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக் கெதிரான அமைப்பின் (Action Contre La Faim) 17 தொண்டர்கள் குறித்த விசாரணைக்கு என்ன நடந்தது என்பதனையும் இந்த அனைத்துலக அமைப்புக்கள் கேட்க வேண்டும்.
மேல் விசாரணை என்கிற போர்வையில், படுகொலை செய்யப்பட்ட 17 தொண்டர்களின் சடலங்கள், பல தடவைகள் தோண்டி எடுக்கப்பட்டு, அவர்களின் பெற்றோரின் நெஞ்சங்களில் ஆறாத ரணங்களை உருவாக்கியிருந்தன.
எத்தனை தடவைகள் தோண்டியும், பாதிப்புற்ற குடும்பங்களுக்கு இன்னம் நீதி கிடைக்கவில்லை.

சுவீடனைச் சார்ந்த உல்வ் ஹென்றிக்சனை (ULF Nenricssion) தலைவராகக் கொண்டு செயற்பட்ட ஸ்ரீலங்கா கண்காணிப்புக் குழு (SLMM) பிரான்ஸை தளமாகக் கொண்டியங்கும் பட்டினிக்கெதிரான அமைப்பின் 17 உள்ளூர் தொண்டர்களின் படுகொலைக்கு, பாதுகாப்புப் படையினரே பொறுப்பேற்க வேண்டுமென அன்று அறிவித்திருந்தது.
அதேவேளை இன்று, அரசின் ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிராகப் போராடும் அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ள மங்கள சமரவீர, அன்றைய அரசின் வெளிநாட்டமைச்சராகப் பதவி வகித்தவர்.
கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்வ் ஹென்றிக்சனின் கூற்று, பொறுப்பற்ற வகையில் அமைந்திருப்பதாக பி. பி. ஸி. செய்திச் சேவைக்கு மங்கள சமரவீர அளித்த காட்டமான பதிலை இன்று நினைவு கூர வேண்டும்.
பதவியில் இருக்கும் போது செய்த நியாயப்படுத்தல்கள், தற்போது அவர்களின் கழுத்தை நெரிக்கும் வகையில் சுற்றி வருவதை காலம் கடந்தாவது புரிந்து கொள்வார்கள் என நம்பலாம்.

இவ் வினப்படுகொலை குறித்து தனது விசனத்தை வெளிப்படுத்திய பட்டினிக்கெதிரான அமைப்பின் தலைவர் டெனிஸ் மெட்ஸ்ஜர் (Dennis Metzger) தமது அமைப்பின் 27 வருட காலப் பணியில் இத்தகைய தொண்டர் மீதான படுகொலை, இதுவே முதன் முறையாக நிகழ்த்தப்பட்டதெனக் கூறியிருந்தார். இதுபோன்ற எத்தனையோ கூட்டு இனப் படுகொலைகள், தமிழர் தாயகமெங்கும் கடந்த 60 வருட காலமாக நடைபெற்று வருவதனை மனிதாபிமானம் பேசும் உலகம் உணர்ந்து கொள்ளவில்லை.
ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கை உடைந்து போகக் கூடாதென்பதற்காக இக்கோரச் சம்பவங்களை, இவர்கள் மௌனமாக விழுங்கிக் கொண்டார்களோவென்று எண்ணத் தோன்றுகின்றது.
இருப்பினும் டப்ளினில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் (PPT), இக் குற்றங்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியதையிட்டு சற்று ஆறுதலடையலாம்.
ஆனாலும் பூனைக்கு மணி கட்டி நீதியை நிலைநாட்டுவது யார் என்பதில் தான் சிக்கல்.

ஏட்டுச் சுரக்காய் போலாகும் சர்வதேசச் சட்ட நியமங்கள், டாபூரில் இனப்படுகொலை புந்த சூடான் அதிபர் பசீரை இனப் படுகொலையாளன் என்று விளிப்பதற்கு பின்னடித்தது, போர்க் குற்றவாளி என்று சமாளிக்க முற்படுகின்றது.
தாயகக் கோட்பாட்டை முன் வைக்கும் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகவும் திட்டமிட்ட, அரச சார்பு பெரும்பான்மையின மக்களைக் குடியேற்றும் முன்னெடுப்புக்களை இறைமை கொண்ட அரசின் உரிமையாகவும் கொள்ளும் சர்வதேச ஜனநாயகவாதிகள், தமது பிராந்திய நலன் என்பதற்கு அப்பால் எதனையும் பார்ப்பதில்லை என்பதே யதார்த்த நிலையாகும்.
அரச அதிகாரக் கட்டமைப்பில், 18 ஆவது திருத்தச் சட்டம் போன்று ஏதாவது மாற்றங்களைக் கொண்டு வந்தால் இந்த ஜனநாயக ஏற்றுமதியாளர்கள் துள்ளிக் குதிக்கின்றார்கள்.

இனப்பிரச்சினைக்கான தீர்வினை முன் வைக்கும், பொருத்தமான பொங்கு சனிக் காலமிதுவென அறிவுரைப் பின்னிணைப்பொன்றையும் சேர்த்து விடுவார்கள்.
இவை தவிர சர்வ அதிகாரம் கொண்ட ஒற்றையாட்சியை உறுதிப்படுத்தும் 18 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட கையோடு, மக்களின் தினசரி வாழ்வோடு நேரடியான இணைப்பைக் கொண்ட, உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் விதிமுறைகளில் மாற்றமேற்படுத்த புதிய சட்ட மூலமொன்று வரப் போகின்றது.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் சிபாரிசின் அடிப்படையில் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல் திருத்த சட்ட மூலமொன்றினை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க, அரசு முற்படுகிறது.
ஜேர்மன் நாட்டில் அமுலிலுள்ள ஒரு கலப்பு முறைமையை இச்சட்டத் திருத்தம் கொண்டிருக்கும்.

மின்சாரத்திலும், பெற்றோலிலும் இயங்கும் ஹைபிட் (Hybrid) வாகனங்கள் போன்று, விருப்புத் தேர்வும், விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையும் இப்புதிய சட்டத்தில் கலந்திருக்கும்.
வரவு செலவுத் திட்ட சமர்ப்பணத்திற்கு முன்பாக நிறைவேற்றப்படவுள்ள இச்சட்டத் திருத்தம், மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கான தேர்தல் விதிமுறைகளிலும் நடைமுறைகளிலும் பெரும் மாறுதல்களை கொண்டு வருமென எதிர்பார்க்கலாம்.
இதில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையூடாக, எத்தனை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்பது தீர்மானிக்கப்படவில்லை. அதேவேளை விருப்புத் தெரிவு ஊடாக வரும் உறுப்பினர்களில் 30 சதவீதமானோர், விகிதார பிரதிநிதித்துவ பட்டியலில் இணைத்து நியமிக்கப்படுவார்களென்று கூறப்படுகின்றது.
இதில் மக்கள் ஜனநாயகத்தை மறுதலிக்கும் சில சரத்துக்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

சபையில் உறுப்பினர் ஒருவருக்கு வெற்றிடம் ஏற்படும் போது அந்த நாற்காலியில் எவரை அமர்த்துவது என்கிற அதிகாரத்தை அவர் சார்ந்த அரசியல் கட்சியின் செயலாளர் நாயகமோ அல்லது சுயேச்சைக் குழுவாயின் அதன் தலைவரோ கொண்டிருப்பார்கள்.
அங்கு தமது வட்டாரத்திற்கு பொருத்தமானவரைத் தெரிவு செய்யும் ஜனநாயக உரிமையை இழக்கும் நிலை அம்மக்களுக்கு ஏற்படும். மறுதேர்தல் என்கிற பேச்சிற்கும் இடமிருக்காது.
இவற்றிற்கு அப்பால் உள்ளூராட்சி சபைகளில் இரு கட்சி ஆட்சிமுறை வலுவாகும் சாத்தியப்பாடுகள் அதிகமிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது.
ஆனாலும் இத்திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட பின்னரே அது குறித்த தரவுகளோடு விரிவாக உரையாடலாம்.

தற்போது இயங்கும் சபைகள், மக்களின் அங்கீகாரம் இல்லாமல், எவ்வாறு திருத்தச் சட்ட மூலத்திற்கு தமது ஆதரவினையோ அல்லது எதிர்ப்பையோ முன்வைக்க முடியுமென்கிற அடிப்படைக் கேள்வி எழுவது நியாயமே. மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் நாடாளுமன்றில் இருப்பதால் எத்தகைய சட்ட மூலங்களையும் நிறைவேற்றக் கூடிய வல்லமை அரசிற்கு இருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது.
முன்பு பரவலாக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை மறுபடியும் மத்திய ஆட்சி மையத்தை நோக்கி திருப்புவது தான் இந்த திருத்தச் சட்ட மூலத்தின் சூத்திரம் போல் தெரிகிறது.

வெளிப்படையில் பல கட்சிகள் சுயாதீனமாக இயங்கும் ஜனநாயக இலங்கை போல் இந்நாடு காட்சியளித்தாலும் ஒரு கட்சி ஆட்சியை நோக்கியே சகல சட்டத் திருத்தங்களும் உருவாக்கப்படுகின்றன என்ற பேருண்மையை உலகம் எப்போது புரிந்து கொள்ளும்.
"நிதியால் வசமாகா நாடு எது'' என்று பாடியவாறு அடுத்த மாதம் வருகை தரும் இந்திய வெளிநாட்டமைச்சர் கிருஷ்ணாவிற்கு 18, 13 என்பதெல்லாம் சிறிய கோடுகளே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக