புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை!
Page 1 of 1 •
உறவுகளே உங்களுக்கு இந்தக் கட்டுரையால் உங்களுக்குப் பயன்கிட்டுமா என்பதற்கு விளக்கம் அளிக்கத் தெரியவில்லை, ஆனால் என் மனதின் கண்ணீர்த்துளிகளை இங்கு எழுத்துக்களாகப் படைக்கிறேன்!
இந்தப் பிறவியில் நாம் எடுத்துள்ள இந்த அவதாரத்தில், நமக்குக் கிடைத்த பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், குழந்தைகள் மற்றும் நம் சுற்றத்தார்கள் அனைவருமே நாமாக விரும்பிப் பெற்றுக் கொண்டதில்லை! அதற்காக அவர்களிடமிருந்து நாம் விலகிச் செல்வதுமில்லை. இந்தப் பூவுலகில் நாம் வாழவிருப்பது சில வருடங்களே! அதன் பிறகு பூரண நித்திரைதான். இது இயற்கையின் நியதி! அந்த இடைப்பட்ட காலத்திற்குள் நம் உறவுகளுக்குள்தான் எவ்வளவு பிரச்சனைகள். நம் குடும்பத்தில் நமக்குக் கிடைத்துள்ள சொந்தங்கள் விலைமதிப்பற்றவை! ஏதும் அறியா வயதில் அவர்களுடன் எவ்வளவு மகிழ்ச்சியாக உங்கள் நாட்கள் கழிந்தது. அதே மகிழ்ச்சி ஏன் பெரியவர்களானதும் மறைந்துவிட்டது.
என் தோழியின் அக்காவிற்கு 30 வயதுக்கு மேல்தான் திருமணம் நடந்தது. இரு அண்ணன், இரண்டு அக்கா, இரண்டு தங்கை, ஒரு தம்பி என அளவில்லா சொந்தங்களுடன் பிறந்து தன் இளமைக்காலத்தை மகிழ்ச்சியுடன் களித்திருந்தார்கள். ஆனால் திருமணமானதும் அந்த மகிழ்ச்சி என்னும் தருணமே கானல் நீராகிவிட்டது. திருமணமாகி 8 வருடங்களாகியும் குழந்தையில்லாததால் கடந்த வருடம் ஒரு அழகான பெண் குழந்தையை தத்தெடுத்திருந்தார்கள். அந்தக் குழந்தையின் புகைப்படத்தை நம் தளத்தில் ”காவ்யா என்னும் குட்டிதேவதை” என்ற தலைப்பில் பார்த்திருப்பீர்கள். சில மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்தார்கள். அவர்களின் உடன்ப் பிறப்புகளுக்கு பலமுறை தொலைபேசியில் அழைத்துக் கூறியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. அவரது கணவருக்கும் இவரைப் பற்றி சிறிதும் அக்கரையில்லை.
கடந்த சில வாரங்களாக நோயின் கொடுமை அதிகரித்த பின்னர், அவரது சகோதரி கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தார்கள். அங்கு என்ன பரிசோதனை செய்தார்களோ தெரியவில்லை, இவருக்கு எந்த நோயும் இல்லை எனக் கூறி அனுப்பிவிட்டார்கள். சகோதரியின் வீடு மாடியில் உள்ளது. ஆனால் அவர்களால் ஒரு படி கூட ஏற முடியாது என்ற நிலை. அந்த அளவிற்கு வயிறு, கால்கள் என அனைத்தும் வீங்கியிருந்தது. அவரின் தம்பி வீட்டிற்கு சென்று தங்க வைத்தார்கள். அவருக்குத் துணையாக அவரது தாயாரும் சென்று அங்கு அவருடன் இருந்தார். உடல்நலக் குறைவால் சென்றிருந்த அந்தப் பெண்ணை அங்குள்ளவர்கள் நடத்திய விதம் அவர்களெல்லாம் மனிதர்களே இல்லை என்ற அளவிற்கு இருந்தது. கால்களில் புண் ஏற்பட்டு நீர் வடிந்து கொண்டே இருந்தது. அவரது அம்மாவிற்கு அது அருவருப்பாக இருந்ததாம். தன் மகளின் அருகிலேயே செல்வதில்லை. அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சமையல் வேலைகள் அனைத்தையும் இவர்தான் செய்ய வேண்டும். காலை எழுந்ததும் இன்று என்ன சமைக்கப் போகிறாய் எனக் கேட்பார்களாம்.
அவரது தங்கைதான் தினமும் சென்று புண்ணிற்கு மருத்துவம் செய்து வந்தார்கள். அவரது அண்ணன் மருத்துவமனைக்கு வந்து பார்த்துவிட்டு, நாளை வந்து உன்னை என் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் எனக் கூறிச் சென்றவர் கடைசி வரை வரவே இல்லை. இவர் பலமுறை தொலைபேசியில் அழைத்தாலும் பதிலில்லை. அவரது தம்பி குடும்பத்தில் அறிவார்ந்த யாரோ ஒருவர், இது செய்வினை பாதிப்பு, சாமியாரைச் சந்தித்தால் குணமாகிவிடும் என்று கூறவே, மருத்துவமனையை மறந்து போலிச் சாமிகளைத் தேடிச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அவருக்கு இரத்தப் பரிசோதனை செய்து பார்த்ததில் அவரது சிறுநீரகங்கள் கடுமையாக பாதிப்படைந்திருந்தது தெரிய வந்தது. உடனே அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டினேன். ஆனால் அவர்கள் இன்னும் இருவாரங்கள் சாமியாரைப் பார்க்க வேண்டுமென்றும், சிறுநீரகங்களில் எந்தப் பாதிப்பும் இல்லையென மருத்துவமனையில் கூறிவிட்டார்கள் என்றும் கூறி என் கருத்தைப் புறக்கணித்துவிட்டார்கள்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் அவரது சகோதரியின் உதவியுடன் மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தார்கள். முதல் நாள் நள்ளிரவு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதியுற்றுள்ளார். மறுநாள் (நேற்று) எந்தத் தொந்தரவும் இன்றி அங்குள்ள செவிலிகளிடமும், மருத்துவர்களிடமும் நன்றாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். இன்று அதிகாலை மீண்டும் ஏற்பட்ட மூச்சுத் திணறலால் நிரந்தர அமைதிநிலையை அடைந்துவிட்டார்கள். இப்பொழுது அவரது உறவுகள் எல்லாம் வந்து கதறிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கண்ணீரால் அவர் மீண்டும் பிழைக்கப் போகிறாரா?
இதை விதி என்று கூறிப் புறக்கணித்துவிட முடியுமா? நிச்சயமாக முடியாது. கணவர் ஒரு தொழிலதிபராக இருந்தும் இவரைப் பற்றி இறுதிவரை அக்கறை கொள்ளவில்லை. தாயார் அருகில் இருந்தும், தன் மகளையே புறக்கணித்துவிட்டார். சகோதரர்களுக்கு இவரைப் பற்றிய எண்ணமே இல்லை. இவர்கள் அனைவரும் இணைந்து இவருக்கு உதவியிருந்தால் தன் வாழ்வை 40 வயதிலேயே முடித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். தான் தத்தெடுத்த 18 மாதக் குழந்தையை மீண்டும் அனாதையாக விட்டுச் சென்றிருக்க மாட்டார்கள். என் கண்ணீர் அஞ்சலியைச் சமர்ப்பிப்பதற்காக இந்தக் கட்டுரையை இங்கு என் கண்னீர்த் துளிகளால் எழுதியுள்ளேன்.
அன்பு உறவுகளே,
உறவுகளுக்குள் பிரச்சனைகள் வரலாம். அந்தப் பிரச்சனைகள் ஓரிரு நாட்களில் முடிந்து போகட்டும். இளமைப் பருவத்தில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தோம் என்பதை சற்றி நினைவு கூறுங்கள். எப்படிப்பட்ட மனப் பிரச்சனைகளும் நீங்கிவிடும். இருக்கும் பொழுது பகைத்துக் கொண்டு, இறந்த பிறகு வாழ்நாள் முழுதும் துன்பப்படாதீர்கள். வாழ்வது ஒருமுறை, நமக்குக் கிடைத்த உடன்பிறப்புகள், பெற்றோர்கள், குழந்தைகள் மீண்டும் கிடைக்கப் போவதில்லை. அவர்கள் மீது அன்பை செலுத்துங்கள். பணம் என்னடா பணம், நல்ல குணத்தின் முன் அனைத்துமே பிணம். உங்கள் உறவுகளுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தால் இன்றே மறந்து அவர்களைச் சென்று சந்தித்துப் பேசுங்கள். விடுபட்ட மகிழ்ச்சியை மீண்டும் உங்கள் வாழ்வில் நிலை நாட்டுங்கள். நாம் வாழ்வதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
அன்பு.. அன்பு.. அன்பு...! இதற்கு நிகர் இந்தப் பூவுலகில் வேறெதுவுமில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
//அன்பு.. அன்பு.. அன்பு...! இதற்கு நிகர் இந்தப் பூவுலகில் வேறெதுவுமில்லை.//
அமைதி அடைந்த அந்த சகோதரியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
குட்டி தேவதைக்கும் நலவாழ்வு அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
நல்ல பயனுள்ள பதிவு. உண்மைச் சம்பவங்களே நம் விழிகளைத் திறக்கப் பயன்படும். நெஞ்சு நிறைந்த வருத்தத்துடன் ..
அமைதி அடைந்த அந்த சகோதரியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
குட்டி தேவதைக்கும் நலவாழ்வு அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
நல்ல பயனுள்ள பதிவு. உண்மைச் சம்பவங்களே நம் விழிகளைத் திறக்கப் பயன்படும். நெஞ்சு நிறைந்த வருத்தத்துடன் ..
கண்கள் நிறைந்தன அந்த சகோதரியின் சோகம் கேட்டு..! அன்புடையார் மட்டுமே என்பும் பிறர்க்குரியதாக்குவர்.. அன்பிலார் எல்லாம் தமக்குரியதாக்கி அற்பவாழ்வு வாழ்ந்து மடிவர்..!
இப்பிறவியில் அன்பு பூணுவோம்... நன்றி சிவா பகிர்ந்தமைக்கு...!
இப்பிறவியில் அன்பு பூணுவோம்... நன்றி சிவா பகிர்ந்தமைக்கு...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
மறைந்த சகோதரி ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன், அவருக்கு என் கண்ணிர் அஞ்சலி
உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி – உடன் பிறவா
மாமலையில் தோன்றும் மருந்தே பிணி தீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு
மனதில் சொல்லொணாத் துயருடன்
நந்திதா
மறைந்த சகோதரி ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன், அவருக்கு என் கண்ணிர் அஞ்சலி
உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி – உடன் பிறவா
மாமலையில் தோன்றும் மருந்தே பிணி தீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு
மனதில் சொல்லொணாத் துயருடன்
நந்திதா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1