ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!!

4 posters

Go down

தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!! Empty தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!!

Post by balakarthik Wed Oct 27, 2010 10:13 am

என் பக்கத்துக்கு வீடு அக்கா பையன் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். அவனது தமிழ் புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தபோது அவனிடம் கேட்டேன், பஸ்ஸுக்கு தமிழ்ல என்னடா? அவன் பஸ்தான் என்கிறான். அப்படி இருக்காது , தமிழ் வேற மொழி, ஆங்கிலம் வேற மொழி என்கிறேன். புத்தகத்தை வேகமாக வாங்கி, 32வது பக்கத்திற்கு தாவுகிறான். பச்சை நிற பல்லவனுக்கு கீழே “ப ஸ்” என இருக்கிறது. அதற்கு அடுத்து மஞ்சள் நிறப் படத்திற்கு கீழே ”ஆட்டோ” என்றிருக்கிறது. நீ சரியா படிக்காம எனக்கு சொல்லித் தறீயா என்கிறான்.

நாம் சுவாசிக்கும் காற்றைப் போல, கண்கள் இமைப்பது போல, உடலினுள் ஓடும் குருதியைப் போன்றது மொழி. மனிதனுக்குள் பிரிவினை உண்டாக்கும் எந்த காரணிகளும் எனக்கு ஒவ்வாது என்றாலும் மொழி அந்த வட்டத்திற்குள் அடங்காது என்று எண்ணுகிறேன். . மொழி அடிப்படையில் மட்டுமே சமூக பிரிவினைகள் இருக்க வேண்டும் என்பது என் ஆசை..

மொழியை வெறும் தகவல் பரிமாற்றத்திற்கான கருவியாக மட்டுமே பார்க்கும் தலைமுறை உருவாகிவிட்டது. எனக்கு C, C++ தெரியும் என்பது போலத்தான் தமிழையும், ஆங்கிலத்தையும் இன்ன பிற மொழிகளையும் பார்க்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை மொழி நான் யார் என்பதை உலகிற்கு உணர்த்தும் உன்னதம். ஒரு சமூகத்தின் வாழ்வை பிரதிபலிக்கிற கண்ணாடி. தாய்மொழியை சரியாய் கற்றவனாலே மற்ற மொழிகளை சரியாக கற்க முடியும். தாய்மொழியில் சிந்திப்பவனே more efficient என பல முறை நிரூபித்து காட்டப்பட்டுள்ளது.

மொழி என்பது அறிவல்ல. ஒரு மொழி தெரியாமல் போவதில் எந்த தவறும் இல்லை. ஆங்கில வழியில் படித்ததால் தமிழ் சரியாக எழுதவும் பேசவும் வராது என்பவர்களைப் பார்த்தால் எனக்கு அசூசை உணர்வே வருகிறது. எனக்கு ஆங்கிலம் தெரியாது என ஒரு சமூகமே தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளும் கேவலமும், I know english என்பதை வாழ்வின் மிகப்பெரிய சாதைனயாக நினைக்கும் வேதனையும் இங்கே மட்டும்தான் இருக்கக்கூடும்.

ஒரு பயணத்தின் போது சாருவின் “கடவுளும் நானும்” புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். அதன் அட்டைப் படத்தையும், கடவுள் என்றத் தலைப்பையும் தலைகீழாக பார்த்தபடி, தன் 50 வயது மனைவியிடம் ஏதோ சொல்கிறார் அந்த வயதானவர். புத்தகத்தை அவரிடம் தருகிறேன். அதை மறுத்தவர் என்னிடம் கேட்கிறார் “are you working in Chennai?”. நான் எனக்கு ஆங்கிலம் தெரியாது என்கிறேன், முகத்தைப் பார்க்காமல் என் மணிக்கட்டில் இருந்த Fast track கடிகாரத்தையும், Pepe ஜீன்ஸையும், பார்க்கிறார். அவையெல்லாம் எப்படி அவருக்கு பதில் சொன்னது என்று புரியவில்லை எனக்கு. மறுநாள் காலை வரை என்னை வேற்று கிரகத்துவாசியைப் போல் பிரமிப்புடனே பார்த்தார். நல்ல வேளை என் கையில் ஸிரோ டிகிரி இல்லை.

இந்தியாவில் ஆங்கிலம் பேசும் 99.99 பேசுவது ஆங்கிலம்தானா? மொழியை வெறும் வார்த்தைகளாக பார்ப்பது அபத்தம். ஒவ்வொரு மொழிக்கும் தனி அழகும், நளினமும் உண்டு. அதையெல்லாம் தெரிந்துக் கொள்ளாமல், my name is karthik. I am 26 years old என்பது நுனிப்புல். ஒரு மொழியை கற்பதென்பது அவர்களது பண்பாட்டையே கற்றுக் கொள்வது போன்றது. ஏதோ ஒரு மூத்திரசந்தின் மூன்றாம் கட்டிடத்தில் இரண்டாம் மாடியில் பட்டைப் போட்ட ஒருவரிடம் கற்றுக் கொள்வதல்ல அது. ஆங்கிலம் தெரியுமென்பவர்கள் குறைந்தபட்சம் ஷேக்ஸ்பியரையும், கீட்ஸையும், வேர்ட்ஸ்வொர்த்தையுமாவது படிக்கட்டும்.

முதல் பத்தியைப் மீண்டும் படியுங்கள். எத்தனை வார்த்தைகள் இதுவரை இப்படி தமிழாகிப் போனது?

இந்த தேர்தலில் 66% மக்கள் வோட்டளித்தனர்.

மதுரை செல்ல ஆண்டிபட்டி வழி ரூட்டிலும் சில பேருந்துகள் செல்கின்றன.

மேற்கண்ட வாக்கியங்களில் இருக்கும் வேறு மொழி சொற்கள் தெரிகிறதா? ஒரு மொழி அழிந்தால், இனம் அழியும். இனம் அழிந்தால் நாடு அழியும். இதைத்தான் வரலாறு சொல்கிறது.




ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!! Empty Re: தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!!

Post by Thanjaavooraan Wed Oct 27, 2010 10:35 am

சரியாக சொன்னீர்கள் பாலா...வாழ்துக்களும், பாராட்டுக்களும். மகிழ்ச்சி நன்றி
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!! Empty Re: தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!!

Post by balakarthik Sun Sep 11, 2011 6:52 pm

:வணக்கம்: :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!! Empty Re: தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!!

Post by பிஜிராமன் Sun Sep 11, 2011 7:02 pm

அருமையான பதிவு பாலா........இன்றைய நிலையினையும்....ஒரு மொழியின் மாகாதுவதினையும் பறைசாற்றும் விதமாக உங்கள் பதிவு உள்ளது.....

எனக்கு தெரிந்த ஒரு வார்த்தை அசால்ட் இது ஆங்கில சொல் ஆனால் தமிழ் சொல் போல ஆகி விட்டது....இது போல இன்னும் நிறைய சொற்கள் இருக்கும்.......
மிக்க நன்றிகள் நண்பா....... தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!! 224747944


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!! Empty Re: தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!!

Post by கே. பாலா Sun Sep 11, 2011 7:03 pm

முன்பெல்லாம் உருப்படியான பதிவுதான் போட்டிருக்கிங்க பாலாகார்த்திக் . சூப்பருங்க


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!! Empty Re: தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!!

Post by balakarthik Sun Sep 11, 2011 7:05 pm

நன்றி ராமன் இன்னும் இதுபோல் நிறையா வார்த்தைகள் உள்ளது இதில் கொடுமை என்னவென்றால் இதர்க்காண சரியான தமிழ் வார்த்தை நமக்கு தெரிவதே இல்லை அட அந்த வார்த்தைகளை உபயோகிக்க வேணாம் ஆனால் தான் அர்த்தைத்தையாவது தெரிந்துவைத்துக்கொள்ளலாமே அன்பு மலர் நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!! Empty Re: தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!!

Post by பிஜிராமன் Sun Sep 11, 2011 7:06 pm

கே. பாலா wrote:முன்பெல்லாம் உருப்படியான பதிவுதான் போட்டிருக்கிங்க பாலாகார்த்திக் . தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!! 224747944


ஸார் நான் இந்த பதிவை இன்று போட்ட பதிவு என்று தான் நினைத்தேன்......உங்களின் பின்னூட்டத்தை பார்த்து தான்.....தேதியை பார்த்தேன்.....நல்ல வேலை நன்றி கார்த்திக் மீண்டும் இந்த பதிவை தூசி தட்டி எங்களை அறிய செய்தமைக்கு தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!! 224747944


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!! Empty Re: தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!!

Post by balakarthik Sun Sep 11, 2011 7:08 pm

கே. பாலா wrote:முன்பெல்லாம் உருப்படியான பதிவுதான் போட்டிருக்கிங்க பாலாகார்த்திக் . சூப்பருங்க

என்ன பன்றது அப்பப்போ கொஞ்சம் தண்ணில பாலும் கலக்கணுமூல இல்லேனா வியாபாரம் சரியாபோகாதே :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!! Empty Re: தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum