ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? Poll_c10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? Poll_m10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

+9
சிவா
கலைவேந்தன்
T.N.Balasubramanian
சரவணன்
கோவை ராம்
மஞ்சுபாஷிணி
balakarthik
அன்பு தளபதி
கா.ந.கல்யாணசுந்தரம்
13 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? Empty ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 26, 2010 12:20 pm

அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றாவதும்,
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் என்பதூம்,
நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்
.................இது சிலப்பதிகாரத்தின் செய்திகளை சுருங்கக் கூறும் செய்யுள்.
புகார் காண்டம் (சோழ நாடு)
மதுரைக் காண்டம் (பாண்டிய நாடு)
வஞ்சிக் காண்டம் (சேர நாடு)
சேர, சோழ மற்றும் பாண்டிய நாட்டில் வசித்த கோவலன், கண்ணகியின் வாழ்க்கை வரலாறு சிலப்பதிகாரமாக இளங்கோவடிகளால் எழுதப்பட்டது. ஏன் பாண்டியநாட்டு மன்னன் மட்டும் தேரா மன்னன் ஆனான்? ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? ஊழ்வினை உருத்துவந்து ஊட்டினாலும் மதுரை மட்டும் தீக்கரையானது ஏன்? இதற்க்கு ஏதாவது முன் சாப வினைகள் இருப்பதாக இளங்கோவடிகள் சொல்லி உள்ளார்களா? யாராவது ஈகரையில் விளக்கமுடியுமா?

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? Empty Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Post by அன்பு தளபதி Tue Oct 26, 2010 12:25 pm

முன் சாபவினைகள் குறித்தோ இது குறித்தும் ஏதும் தெரியவில்லை அனால் மன்னன் செய்த தவறுக்கு அப்பாவி மக்களை எரித்தது மாபெரும் குற்றமே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? Empty Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Post by balakarthik Tue Oct 26, 2010 12:47 pm

சினம் எல்லோருக்கும் வரும்; அந்த சினத்தினால் கண்களும் சிவக்கும். ஆனால் சிவனுடைய கண்களுக்கு மட்டுமே எரிக்கும் ஆற்றல் உண்டு. அதனால் தான் சிவனை 'கண்ணுதல் பெருமான்' என்று அழைப்பர். சிவனுக்கு மட்டுமின்றி சீவனுக்கும் (மாந்தருக்கும்) எரிக்கும் ஆற்றல் உண்டு என்பதற்கு ஓர் சான்றே கண்ணகி ஆவாள். நீதிமுறை தவறி தன் கணவனை கொன்ற பாண்டிய மன்னனின் மீது பெரும்சினம் கொண்ட கண்ணகி ஓர் பத்தினி (கற்புக்கரசி) என்பதால் அவளது சினம் மதுரை நகரை எரித்தது எனலாம். பெருகிய சினத்தினால் சிவந்து வெம்மையுற்ற தனது கண்களில் இடது கண்ணைப் பறித்த கண்ணகி மதுரையினை மூன்றுமுறை சுற்றிவந்து எறிந்ததாகக் கீழ்வரும் சிலப்பதிகாரப் பாடல் கூறுகிறது.

இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள்

- பா.எண்: 5
கோவலனை இழந்ததால் சினம் கொண்ட கண்ணகி 3 முறை மதுரையை வலம் வந்து, தன் வலது கையால், இடது முலையை பறித்து எறிந்து, மதுரையை எரித்தாள் !
அப்பொழுது அங்கு தோன்றும் அக்கினித்தேவன் கண்ணகியிடம் -”யார் பிழைப்பார் ஈங்கு” என்று ஆணை கேட்கிறான்.

அதற்க்கு கண்ணகி ”பார்ப்பார் (அந்தணர்), அறவோர், பசு, பத்தினிப்பெண்டிர்,மூத்தோர், குழவி (குழந்தைகள்) எனும் இவரை கைவிட்டுத்தீத்திறத்தார் பக்கமே சேர்க “- இவர்களைத் தவிர்த்து விட்டு ம்ற்றவர் அனைவரையும் தீயில் பொசுக்கவும் என்று சொல்கிறாள். என்று இளங்கோ அடிகள் கூறுகிறார், ஆக மதுரை எரிந்ததற்கு எந்த ஊழ்வினையும் காரணமல்ல என்று நினைக்கிறேன் , மேலும் ஒரு அரசனென்பவன் அந்நாட்டின் மக்களின் தலைவன் ஆவான் அப்படிபட்டவன் ஒரு தவறு செய்யும் பொழுது அது அந்நாட்டு மக்களையும் பாதித்திருக்கலாம் இல்லையென்றால் மதுரையில் கோவலனை கள்வன் என குற்றம் சாட்டபட்டபோழுது அவனுக்கு ஆதரவாக யாரும் வராததால் கூட மதுரை மக்கள்மேல் கோவன் கொண்டு மதுரையை எரித்திருக்கலாம் என்று நினைக்கிறேன் விவரம் தெரிந்தவர்கள் திருத்தவேண்டும்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? Empty Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 26, 2010 12:53 pm

யதார்த்தமான பாலகார்த்திகின் விளக்கம் சான்றுகளுடன் இருக்கிறது. மேலும் விவரம் அறிய விழைகிறேன்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? Empty Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Post by balakarthik Tue Oct 26, 2010 1:23 pm

Kaa Na Kalyanasundaram wrote:யதார்த்தமான பாலகார்த்திகின் விளக்கம் சான்றுகளுடன் இருக்கிறது. மேலும் விவரம் அறிய விழைகிறேன்.

தேடிகிட்டு இருக்கேன் கிடைத்ததும் சொல்கிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? Empty Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Post by balakarthik Tue Oct 26, 2010 1:51 pm

கணவனின் பிரிவுத் துயரால் உள்ளம் கொதித்துச் சுடுமூச்செறிகிறாள். கண்ணகி. கால் போன இடமெல்லாம் சுற்றித் திரிகிறாள். கவலையோடு மயங்கிச் செய்வதறியாது திகைத்து நிற்கிறாள். அப்போது ஊர் எரிந்து அழிந்ததைப் பொறுக்க முடியாத மதுராபதித் தெய்வம் கண்ணகியின் முன் தோன்றுகிறது.
கட்டுரை காதை

மதுராபதித் தெய்வம் கண்ணகிக்குக் கோவலனின் பழைய வினை பற்றிக் கூறுதல், கண்ணகி மதுரையை விட்டு வெளியேறித் திருச்செங்குன்றத்தினை அடைந்து தன் கணவனோடு சேர்தல் ஆகியவை பற்றிக் கூறும் பகுதி இது.

கண்ணகியின் முன்னால் தோன்றிய மதுராபதித் தெய்வம் கண்ணகியைப் பணிந்து போற்றிப் பாண்டியனுக்கும் மதுரைக்கும் நேர்ந்தவற்றுக்கு ஊழ்வினையே காரணம் எனச் சொல்கிறது. கோவலன் முற்பிறவியில் பரதன் என்பவனாகப் பிறந்து சங்கமன் என்ற வணிகனை ஒற்றன் எனக் காட்டிக் கொன்றான். ஆகவே கோவலனின் இறப்புக்குக் காரணம் அவன் முன் வினைப் பயனே என்று கூறுகிறது. பின்னர்ச் செங்கோலினையும் குறைபடாத வெற்றியையும் உடைய பாண்டியர்களின் குலப்பெருமையை எடுத்துக் கூறிப் பாண்டியன் நெடுஞ்செழியனின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாக நிகழ்ச்சி ஒன்றையும் விளக்குகிறது.

சோழ நாட்டைச் சேர்ந்த பராசரன் என்பவன் சேரன் பெருஞ்சோற்று உதியலாதனிடம் பரிசு பெற்றுத் திரும்பும் வழியில் தக்கிணன் என்பவனுடைய அறிவுத் திறத்தைப் பாராட்டிப் பொன், முத்துக்களால் ஆகிய அணிகலன்களைத் தந்து விட்டுச் சென்றான். பாண்டிய நாட்டுக் காவலர் சிலர் தக்கிணன் பரிசு பெற்ற பொருள்கள் அரசனிடமிருந்து திருடியவை என்று எண்ணித் தக்கிணனைச் சிறையில் அடைத்து விட்டனர். இதனைக் கேட்ட அவன் தாய் கதறி அழுதாள். அவள் துயரம் கண்டு, கொற்றவை கோயிலின் கதவு அடைபட்டுப் போயிற்று. இதனை அறிந்த பாண்டியன் தக்கிணனை விடுவித்து அவனிடம் மன்னிப்புக் கேட்டதோடு திருத்தங்கால் என்றும் ஊரினையும் இறையிலி நிலமாகத் தருகிறான். உடனே கொற்றவையின் கோயில் கதவு திறந்தது. மேலும் பாண்டியன் சிறைக் கோட்டங்களையும் திறந்து விடுமாறு ஆணையிட்டான்.

இடுபொருள் ஆயினும், படுபொருள் ஆயினும்
உற்றவர்க்கு உறுதி, பெற்றவர்க்கும் ஆம்


(கட்டுரை காதை, 128-129)

என முரசறைந்தான். இவ்வாறு அரச நீதியிலிருந்து பிறழாத அவனும் தவறு செய்தான் என்றும் அத்தெய்வம் கூறுகிறது.

அடுத்து, கோவலனின் முற்பிறப்புச் செய்தியையும் கூறுகிறது. முற்பிறப்பில் பரதன் என்னும் பெயரில் தோன்றிய கோவலன் கபிலபுரத்து வணிகனான சங்கமன் என்பவனை ஒற்றன் என அரசனிடம் காட்டிக் கொல்வித்தான். அவன் மனைவி நீலி அழுது புலம்பிக் கடைத்தெருவிலும் ஊர் மன்றத்திலும் உள்ளோரிடமெல்லாம் முறையிட்டாள். பதினான்கு நாட்கள் கடந்தபின் ஒரு மலைமீது ஏறித் தன் தலைவனைக் கூடுவதற்காக நின்றாள். மலையுச்சியிலிருந்து வீழ்ந்து உயிர்துறக்குமுன் ஒரு சாபமிட்டாள். ‘எங்களுக்குத் துன்பம் இழைத்தவர்கள் இதே போன்ற துயரத்தை அடைவார்களாக’ என்பது அவள் சாபம். அந்தச் சாபம்தான் கோவலன் கொலைப்படக் காரணமாகியது என எடுத்துக் காட்டுகிறது மதுராபதித் தெய்வம். மேலும், பண்டை ஊழ்வினை வந்து தன் பயனை ஊட்டும்போது, இக்காலத்துச் செய்யும் நல்வினையால் பயனில்லை.

உம்மை வினை வந்து உருத்த காலைச்
செம்மையிலோர்க்குச் செய்தவம் உதவாது

(கட்டுரை காதை, 171-172)

எனவும் உரைக்கிறது.

கண்ணகியிடம் ‘நீ பதினான்கு நாட்கள் கழித்து உன் கணவனை வானவன் வடிவில் காண்பாய்’ என உரைக்கிறது. பின்னர் மதுரை மாநகரைப் பற்றிய தீயிலிருந்து விடுதலை பெற்றுத் தந்து நெருப்பையும் தணிவிக்கிறது.



Last edited by balakarthik on Tue Oct 26, 2010 1:53 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? Empty Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Post by balakarthik Tue Oct 26, 2010 1:52 pm

கல்யான் அண்ணா இதையும் பாருங்கள் அதே சிலபதிகாரத்தில்

வஞ்சினமாலை

கண்ணகி, அரசனோடு மட்டுமல்லாமல் மதுரை மாநகரையும் அழிப்பேன் என்று வஞ்சினம் கூறுதல், தீக்கடவுளை மதுரை மீது ஏவுதல் ஆகியவற்றைக் கூறும் பகுதி இது.

பாண்டியன், அரசி இருவரும் இறந்து விழுந்ததைக் கண்ட கண்ணகி , ‘தீவினையேன் யான்’ என்று கூறுகிறாள் ‘முற்பகல் தீவினை செய்த ஒருவன் பிற்பகல் அதன் பயனை அனுபவிப்பான்’ என்று உரைக்கிறாள். பின்னர்த் தான் அறிந்த பத்தினிப் பெண்கள் எழுவர் வரலாறுகளைச் சொல்கிறாள்.

வன்னி மரத்தையும் மடப் பள்ளியையும் தன் கற்புக்குச் சாட்சியாகக் கொணர்ந்து காட்டினாள் பத்தினிப் பெண் ஒருத்தி. மணற்பாவையை ‘உன் கணவன்’ எனத் தோழியர் கூறியதால், அலை வந்து அழிக்காமல் அதனைக் காத்து நின்றாள் மற்றொரு பத்தினிப்பெண். கரிகாலன் மகள் ஆதிமந்தி. அவள் கணவன் ஆட்டனத்தி காவிரிப் பெருக்கில் அடித்துச் செல்லப் பட்டான். அப்போது அவள் நீரோட்டத்தின் வழியே கரை மீது தொடர்ந்து சென்றாள். இறுதியில் அவன் கடலுள் அடித்துச் செல்லப்பட்டது கண்டு கடலின் முன் நின்று கதற, கடல் அவள் கணவனைக் கொண்டு வந்து நிறுத்தியது. அவனைத் தழுவி மகிழ்ச்சியோடு ஊர் திரும்பினாள் ஆதிமந்தி.

கணவன் பிரிந்து சென்ற பிறகு கடற் கானலில் கல் உருவாக மாறி இருந்து கணவன் திரும்பி வந்தபிறகு நல் உருவம் பெற்றாள் பத்தினிப் பெண் ஒருத்தி.

மாற்றாள் குழந்தை கிணற்றில் விழுந்துவிட, தன் குழந்தையையும் கிணற்றுள் வீசிப் பின்னர் இரு குழந்தைகளையும் கிணற்றிலிருந்து பெற்றாள் மற்றொரு பத்தினிப்பெண்.

கணவன் ஊரில் இல்லாத நேரத்தில் காமுகன் ஒருவன் தன் முகத்தை நோக்குகின்றான் என்பதற்காகத் தன் முகத்தைக் குரங்கு முகமாக வேண்டிப் பெற்றுப் பின்னர்க் கணவன் வந்தவுடன் அக்குரங்கு முகத்தைப் போக்கிக் கொண்டாள் ஒருத்தி்,

தாய் தன் தோழிக்குத் தந்த வாக்குறுதிக்காகத் தாயின் தோழியின் மகனை மணந்தாள் ஒரு பெண்.

இவ்வாறு புகாரில் வாழ்ந்த பத்தினிப் பெண்கள் எழுவரின் சிறப்புகளை எடுத்துக் கூறி அவர்களைப் போல நானும் ஒரு பத்தினி என்றால் அரசனோடு மட்டுமல்லாமல் மதுரையையும் அழிப்பேன் என்று கூறித் தன் இடப்பக்கத்து மார்பகத்தைத் திருகி எறிகிறாள். தீக்கடவுள் அவள் முன் தோன்ற ‘பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்கள், முதியோர், குழந்தைகள் ஆகியோரைத் தவிர்த்துத் தீயவர் பக்கம் சேர்க’ என்று ஏவுகிறாள். மதுரை நகரம் பற்றி எரியத் தொடங்குகிறது.


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? Empty Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Post by balakarthik Tue Oct 26, 2010 1:56 pm

அண்ணா இங்கே மிக அழகாக சிலபதிகாரத்தை பற்றி மேலும் விரிவாக உள்ளது படித்து பாருங்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? Empty Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Post by மஞ்சுபாஷிணி Tue Oct 26, 2010 2:05 pm

எங்க பாட்டி வேற கதை சொன்னாங்க இதைப்பற்றி...

இது உண்மையா பொய்யா தெரியாது...

ஆனால் பாட்டி எனக்கு சின்னப்ப சொன்னதை நான் உங்களுக்கு சொல்றேன்பா...

ஒரு ஊர்ல கணவன் மனைவி இருவரும் இருந்தாங்களாம்... அப்ப கணவன் வியாபாரத்திற்காக தூர தேசம் போய் வருவாராம்.. மனைவி வீட்டில் உத்தமியாய் இருந்து பிள்ளைகளை வளர்த்து பண்புடன் இருந்தாராம்....

அப்ப அந்த ஊர்ல ஒரு பராசக்தி கோவில் இருந்திச்சாம்..
அந்த ஊர்ல மழை பெய்யாத காரணத்தால் ராஜா கோச்சிண்டு விளக்கேத்தே கூடாதுன்னு சொல்லிட்டாராம்..

அப்ப இந்த மனைவி யாருக்கும் தெரியாம போய் போய் விளக்கேத்திட்டு சாமி கும்பிட்டு வருவாங்களாம்...

கணவன் வியாபாரம் முடிந்து ஊருக்கு வந்தப்ப ஊரின் கட்டுப்பாட்டு முறை கண்டு கோபமுற்று அன்னிக்கு குடும்ப சமேதமா போய் விளக்கேற்றி கும்பிடும்போது ராஜா பார்த்துட்டு கோபம் அதிகமாகி வெட்ட சொல்லிட்டாராம்...

அப்ப மனைவி பராசக்தியை பார்த்து அம்மா தாயே நீ தானே எங்களுக்கு கதி எங்களை ராஜா கொல்கிறாரே என்று கதறிட்டு இருக்கும்போதே கணவனை கொன்னுட்டாராம் ராஜா...

அப்ப பராசக்தி சொன்னாளாம்...
நீ அழாதே அடுத்த பிறவியில் நானே பிறப்பேன் கண்ணகியாய்...
இதோ இவனும் பிறப்பான் கோவலனாய்....

நீயும் பிறப்பாய் மாதவியாய்....

நீ உன் புருஷனுடன் சந்தோஷமாய் இருப்பே....

இதோ இன்னிக்கு வெட்டின ராஜா அடுத்த பிறவியிலும் பிறப்பான் ராஜாவாய்...

அடுத்த பிறவியிலும் கோவலனுக்கு நற்கதி இல்லை... இதே ராஜா அப்பவும் வெட்டுவான்.... ஆனால் முக்தி கிடைக்கும் என்னால் உங்கள் எல்லோருக்கும் அப்டின்னு சொல்லி மறைஞ்சுட்டாளாம் பராசக்தி....

மனைவி குழந்தை எல்லாரையும் வெட்டிட்டானாம் ராஜா...

அப்ப இடி மின்னல் மழை வேகமாக பெய்து மழை வெள்ளத்தில் ஊரே வெள்ளக்காடாகி அழிந்துவிட்டதாம்...

அடுத்தப்பிறவியில் அம்பாள் சொன்னமாதிரி ராஜாவாவே பிறந்தார் ராஜா...

கணவன் கோவலனாய் பிறந்தான்...

அம்பிகே கண்ணகியாய்..... அம்பாளைத்தொட முடியுமா...

அதான் வியாபார சகிதமாய் போன கோவலன் மாதவியிடம் அதாவது தன் முற்பிறவி மனைவியுடன் மனம் பறிகொடுத்து கல்யாணமும் செய்துக்கொண்டாராம்...

ராஜா மனைவி போட்டிருந்தது முத்து போட்டிருந்த சிலம்பு....
மனைவியின் சிலம்பு ஏதோ வளைஞ்சுட்டுதுன்னு ரிப்பேர் செய்ய ஆச்சாரி கிட்ட கொடுத்திருந்தப்ப...

ஆச்சாரி அதை சரி செஞ்சு மாடத்துல வெச்சிருந்தப்ப ஒரு கழுகு அதுக்கு ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கு ராஜா வேட்டைக்கு போனப்ப ஒரு கழுகு தன் குஞ்சுகளை கூட்டில் வெச்சிட்டு இரை தேட போச்சாம்.. அப்ப ராஜா வந்து கூட்டை கலைச்சுட்டாராம்... அந்த கோபத்துல கழுகு மாடத்துல வெச்சிருந்த ராணியோட சிலம்பை எடுத்து ஒளிச்சிருச்சாம் தன் கூட்டில்...

சோ சிலம்பு காணாம போயிடுத்தா?

இங்க கோவலன் காசில்லாம சிரமப்பட்டப்ப அம்பாள் தன் காற்சிலம்பு... ( அரசனை மனைவி போட்டிருதது வெறும் முத்துக்கள் அடங்கிய சிலம்பு.... ஆனால் அம்பாள் போட்டிருந்ததோ மாணிக்கம் ரொம்ப வெல உசத்தியாம்ல? )

அதை கோவலன் கிட்ட கொடுத்து வித்து பணம் கொண்டு பிழைக்கச்சொன்னப்ப கோவலன் கொண்டு போனப்ப தான் ராஜாவோட ஆட்கள் பிடிச்சு கொண்டு வந்துட்டு வெட்டிட்டா கழுத்தை...

கண்ணகி அம்பாளாச்சே... ஸ்வாமி ஆச்சே... உண்மை என்னன்னு தெரிஞ்சுண்டு வர நேரா கோவலன் இறந்த இடத்துக்கு போய் அவனை எழுப்பி விவரம் கேட்டுட்டு ( சாமி என்ன வேணாலும் மேஜிக் செய்யுமாமே)

ராஜாவை உண்டு இல்லன்னு பண்ணிட்டு ஊழித்தாண்டவம் ஆடி ராஜாவின் தவறை சுட்டிக்காட்டி ஊரையே துவம்சம் பண்ணிட்டு நீரோடு நீரா மூழ்கிட்டா அம்பாள் அதாம்பா கண்ணகி...

இதான் எங்க பாட்டி சொன்னது....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? Empty Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Post by balakarthik Tue Oct 26, 2010 2:09 pm

அக்கா உங்க பாட்டி சாதாரண பாட்டி இல்ல ஜெட்டிக்ஸ் பாட்டி


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? Empty Re: ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே?
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
»  மதுரை 293-வது ஆதினமாக நித்தியானந்தர் தொடரலாம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum