ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-2(1)

Go down

தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-2(1) Empty தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-2(1)

Post by நிசாந்தன் Mon Oct 25, 2010 2:44 pm

1985

எந்த ஒரு விடுதலைப் போராளியும் தன்னால்தான் விடுதலை கிடைக்கும் என தன்னை ஏமாற்றிக்கொள்ள முடியாது

ஒரு விடுதலைப் போராளி தனது தற்பெருமையிலிருந்தும் தன்னுணர்விலிருந்தும் கடந்து வருவதென்பது போராட்டத்தில் முழுமனதோடு தோய்வதற்குத்தான். நாம் தமிழ் மக்களின் இலட்சியத்தின் அடையாளச் சின்னங்கள் மட்டுமே. விடுதலைப் போராட்டத்தின் சுமையை அடுத்தத் தலைமுறைக்கு விட்டுச் செல்ல நாம் விரும்பவில்லை. நமது போராட்டத்தின் பலன்களை அவர்கள் அனுபவிக்க வேண்டும். நமது இலக்கு நிறைவேறும் வரை போராட வேண்டும். இந்தியாவிற்கு நம் மீதான பரிவு நமது மனஉறுதிக்கான உந்துசக்தி. ஒருவேளை இந்தியா ஆதரவை விலக்கிக்கொண்டால் நமது விடுதலைப் போர் முடிவுக்கு வந்துவிடும் என்பது பொருளல்ல. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவின் உதவியை நம்பி மட்டும் அல்லது ஏதேனும் ஒரு வெளியார் உதவியை நம்பி நாம் விடுதலைப் போரைத் துவங்கவில்லை. நாம் உயிருள்ள வரை போராடுவோம். நான் இறந்தால் வேறு ஒருவர் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்வார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சொன்னதுபோல, “எந்த ஒரு விடுதலைப் போராளியும் தன்னால்தான் விடுதலை கிடைக்கும் என தன்னை ஏமாற்றிக் கொள்ள முடியாது. விடுதலையைப் பெறாமல் இன்றைய தலைமுறை இறந்தால் அடுத்த தலைமுறை அப்போரைத் தொடரும்…


நீங்கள் ஏன் தலைமறைவு ஆக முடிவு செய்தீர்கள்?

தலைமறைவாகப் போகவேண்டும் என்று விரும்பிப் போகவில்லை. எனது நாட்டிற்கென சில பணிகளைச் செய்ய வேண்டியிருந்தது. சமாதானப் பேச்சுவார்த்தைக்கென, சிலவற்றின்மீது உள்ள நிலைமைகள் மக்களின் உணர்வுகள் பற்றி நான் கவனிக்க வேண்டியிருந்தது. நான் அதற்கென அங்கு இருக்கும்பொழுது சில நிகழ்வுகள் நடந்தன. (புலிகளின் அதிகாரம் பெற்ற பேச்சாளர் திரு.ஏ.எஸ்.பாலசிங்கம் நாடு கடத்தப்பட்டார்.) எனவே, நான் தொடர்ந்து தலைமறைவாக இருக்க நேர்ந்தது.

போர்நிறுத்தம் பற்றி உங்கள் சகாக்கள் என்ன கருதினார்கள்?

அந்தப் போர்நிறுத்தம் ஒரு நாடகமே. அந்தப் போர்வையில் எங்கள் மக்கள் மீது வெறித்தனமான தாக்குதல்களைத் தொடர்ந்தனர். படுகொலைகள் தொடர்ந்து நீடித்தன. இன்றும் தமிழ் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து துரத்தப்படுகின்றனர். அப்போர் நிறுத்தம் உண்மையாக இருக்குமெனில், எனது சகாக்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். ஆனால், நாங்கள் போர் நிறுத்த விதிகளை உறுதியாகவும் உணர்வுபூர்வமாகவும் கடைப்பிடித்தோம். மேலும் அனைத்து கெரில்லா நடவடிக்கைகளையும் நிறுத்தினோம். ஆனால், இலங்கை அரசுப்படைகள் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை தொடர்ந்து நிகழ்த்தியதால் நாங்கள் திருப்பியடிக்க நேர்ந்தது. இந்த சூழ்நிலையை மிக எச்சரிக்கையுடன் நான் கையாள வேண்டும் என உணர்ந்தேன். போர்நிறுத்தம் என்பது ஒரு ஏமாற்று. எனவே இதை ஒரு போர்வையாகப் பயன்படுத்தி தமிழ் இனப்படுகொலைகளை இலங்கை அரசுப் படைகள் தொடர்ந்து நடத்துகிறது என்பதை என்னைவிட நன்கு உணர்ந்து எனது சகாக்களை சரியாகப் பயன்படுத்த வேண்டியதாயிற்று.

பாலசிங்கம் வெளியேற்றப்பட்ட சூழலில், தலைமறைவாக போவது என ஏன் முடிவு செய்தீர்கள்?

நான் உடனடியாக மறைவிலிருந்து வெளிவந்திருக்கலாம். ஆனால் அரசின் வெளியேற்ற ஆணையின்மீது என் வருத்தத்தைத் தெரிவிக்க விரும்பினேன்.

இராசீவ் காந்தி, ஈழ தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களை அழைத்தபோதும் நீங்கள் தொடர்புகொள்ள இயலாமல் இருந்தீர்கள். அது இந்திய அரசுக்கும் உங்களுக்குமிருந்த உறவைப் பாதித்தது. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பாலசிங்கத்தின் வெளியேற்ற ஆணை தேவையற்றது என்று வலுவாகக் கருதியதால், நான் எனது அதிருப்தியை வெளிபடுத்த விரும்பினேன்.

பிறகு, மீண்டும் மறைவிலிருந்து வெளிவரக் காரணம் என்ன?

அதற்குப் பல காரணங்கள் உண்டு. நான் மறைவிலிருந்த போது எங்களைப் பயங்கரவாதிகள்; சமாதானப் பேச்சுவார்த்தைக்கு எதிரானவர்கள் என சில எதிர்மறைச் சக்திகளும், விடுதலைக்கு எதிரான அணிகளும் சித்தரித்தன. இரண்டாவதாக, நாங்கள் சமாதானத்திற்கு எதிரிகள், இராணுவத் தீர்வையே விரும்புபவர்கள் என்று கூறி எங்களை விலக்கி வைக்கவும், தனிமைப்படுத்தவும் முயற்சிகள் நடந்தன. மக்களிடையிலும், சில செய்தித்தாள்களிலும் எங்களை ஆபத்தான பயங்கரவாதிகள் எனப் பெயர் சூட்டி மிகமோசமாகப் பெரிதுபடுத்தியும், திரித்தும் வதந்திகள் பரப்பப்பட்டன. மூன்றாவதாக, எனது தலைமறைவைத் தவறாக பயன்படுத்தி தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களை விடுதலைப் புலிகள்தான் கொன்றனர் என்று இலங்கை இராணுவம் பொய்யுரைகளைப் பரப்பியது.

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-2(1) Empty தமிழர் தேசியத் தலைவரின் நேர்காணல்கள்-2(2)

Post by நிசாந்தன் Wed Oct 27, 2010 12:53 am

பிரதமர் இராசீவ் காந்தியுடனான உங்கள் சந்திப்பு எத்தகைய முடிவுகளைத் தரும் எனக் கருதுகிறீர்கள்?

எங்கள் பிரசனையைத் தெளிவாக அவரிடம் விளக்க முடியும் என நம்புகிறோம். ஜெயவர்தனே போர்நிறுத்தத்தை முன்னால் நிறுத்திக் கொண்டு அதேவேளை தமிழ் மக்களைத் திட்டமிட்டுக் கொலை செய்து வருவதை இராசீவ் புரிந்து கொள்ளுமாறு செய்வதையும் ஒரு பிரச்சனையாக அவரிடம் எழுப்பவுள்ளோம். இராசீவ் காந்தி இலங்கையில் நடைபெறுவது இனப்படுகொலைதான் என்பதை புரிந்துக்கொள்ளச் செய்ய முயற்சிப்போம். ஒரு போர்நிறுத்தம் நடைமுறையில் இருப்பதாகச் சொல்லப்பட்ட போதிலும், என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய விவரங்கள் அளிக்க விரும்புகிறோம். இலங்கை அரசு இதுவரை எந்த ஒரு நேர்மையான, யோசனைகளை முன்வைக்கவில்லை என்பதை அழுத்தமாக வைக்க விரும்புகிறோம். இதுவரை மூன்றாவது நபர்கள் மூலமே நாங்கள் இந்தியப் பிரதமருடன் தொடர்பு கொண்டு வந்துள்ளோம். அவரை இம்முறை நேரில் சந்திப்பதன் மூலம் எங்களைப் பற்றிய பல ஐயப்பாடுகளையும், தவறான புரிதல்களையும் நீக்க முடியும் என நம்புகிறோம்.

பிரதமர் உங்கள் பிரச்சனையில் பரிவுடனிருப்பார் எனக் கருதுகிறீர்களா?
அவர் இருப்பார் என்றே நான் கருதுகிறேன்.

கடந்த மூன்று மாதங்களில் இந்திய அரசின் அணுகுமுறை கடுமையாகியுள்ளது என்பதை உணர்கிறீர்களா?
தொடக்கத்தில் நானும் அப்படிக் கருதவில்லை. ஆனால், பாலசிங்கம் அவர்கள் வெளியேற்றப்பட்ட பின், அணுகுமுறை கடுமையாகியுள்ளது எனக் கருத வேண்டியுள்ளேன்.

இந்தக் கடுமையான அணுகுமுறைக்கு எது காரணம் எனக் கருதுகிறீர்கள்?
இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை, சர்வதேச அளவிலான சிக்கல் அல்லது அழுத்தம் காரணமாக இருக்கலாம். இந்த மாற்றத்திற்கான காரணத்தை உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை எனினும் நாளடைவில் அதற்கான காரணங்கள் வெளிவரும் என நம்புகிறோம்.

இந்தியா, இலங்கைக்கு ஆதரவாக மாறியுள்ளது எனக் கருதுகிறீர்களா?
இதுவரை நாங்கள் அவ்வாறு கருதவில்லை. ஆயினும் சில நிகழ்ச்சிகள் எங்கள் மனதில் சில ஐயங்களை எழுப்பியுள்ளது.

திம்பு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தபோது, இராசீவின் அழைப்பை நீங்கள் ஏன் உடனடியாக ஏற்கவில்லை?
திம்புவிலிருந்து விடுதலைப் புலிப் போராளிகள் இருவரும் வெளிவந்தபிறகும், மற்றொரு குழுவின் போராளர் ஒருவர் நிறுத்திவைக்கப்பட்டார். ஈழ தேசிய விடுதலை முன்னணித் தலைவர்களை தில்லியில் தங்கவைத்துப் பேச்சுவார்த்தையைத் தொடர இந்தியா விரும்பியது. வவுனியாவிலும் திருகோணமலையிலும் எமது மக்கள் படுகொலை செய்யப்படும்போது நாங்கள் சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது என்பதுக் கேலிக் கூத்தல்லவா? போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிகளைக் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு இலங்கை அரசுக்கு இல்லாதபோது, சமாதானப் பேச்சு என்பது அர்த்தமற்றது. அதுபோன்ற படுகொலைகள் தொடராது என்ற எந்த ஒரு உறுதிமொழியையும் தர முன்வரவில்லை. இந்தச் சூழலில்தான், நாங்கள் பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டோம்.

தமிழீழ விடுதலை முண்ணனியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களை விடுதலைப் புலிகள் கொலை செய்யவில்லையா? இந்திய உளவுத்துறை நீங்கள்தான் காரணம் என்பதில் உறுதியாக இருந்தது…
அந்தக் கொலைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. இந்திய உளவுத்துறை அவ்வாறு கருதுமேயானால் நாங்கள் என்ன செய்ய முடியும்! அந்நிகழ்வு நடந்தவுடனேயே, நாங்கள்தான் அதை செய்தவர்கள் என்று இலங்கை அரசு கூறியதை நாங்கள் மறுத்தோம். ஈழத் தேசிய முண்ணனியும் மறுத்தது. இந்திய உளவுத்துறை நாங்கள்தான் பொறுப்பு எனக் கூறியபோதும், யாழ்ப்பாணத்திலுள்ள மக்களுக்கு அதை நாங்கள் செய்யவில்லை என்பது தெரியும். ஒருவேளை நாங்கள் தான் செய்திருக்கலாம் என இந்திய உளவுத்துறை எந்த ஆதாரமும் இன்றி கருதியிருக்கலாம். நான் தலைமறைவு ஆனதால் அப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். நாங்கள் அதைச் செய்திருந்தால், அதற்கான காரணங்களை விளக்கி நாங்கள் பொறுப்பை அறிவித்திருப்போம். எங்களது உறுதியான நம்பிக்கையின் பேரில்தான் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுப்போம். எனவே, நாங்கள் செய்திருந்தால், அதனை மறைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. முன்னாள் தமிழீழ விடுதலை முண்ணனியின் முன்னாள் எம்.பி. ஆலாலசுந்தரம் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், ஆலாலசுந்தரத்தினை(முன்பு காலில் சுடப்பட்டவர்) நாங்கள்தான் செய்தோம் என ஏற்றுக்கொண்டோம். நாங்கள் அவரை ஏன் கொல்லவில்லை எனில் அதை தேவையாகக் கருதவில்லை. அவரது சமூகவிரோத காரணிகளுக்காகவே அவரைத் தண்டித்தோம். அவருக்கு கூட்டுறவுத் துறை ஊழலில் பங்கிருக்கிறது. அவர் பொதுப் பணத்தை சுருட்டியதற்கான சான்றுகளை அப்போது முன்வைத்தோம். இதையொட்டி, அவரது சட்ட விரோத நடவடிக்கை தொடர்பான பல சான்றாதாரங்கள் கூட்டுறவு அலுவலகத்திலேயே கொளுத்தி எரிக்கப்பட்டன. யாழ்ப்பாண புனித ஜான் பள்ளி முதல்வர் ஆனந்தராஞாவைச் சுட்டபோதும் பொறுப்பை ஏற்றுக் கொண்டோம். இலங்கை அரசு இக்கொலையாளியை பற்றிய தகவல்களைத் தருவதற்கு ஐந்து இலட்ச ரூபாய் தருவதாக அறிவித்தபோதுதான் யாழ்ப்பாண மக்களுக்கு இலங்கை அரசுடன் அவருக்கு இருந்த உறவு தெரிய வந்தது.

அவர் ஏன் கொல்லப்பட்டார் என்பதற்கான முழுவிவரமும் தெரிந்தபிறகும், அரசு வாயேத் திறக்கவில்லை. இலங்கை இராணுவம் நம் மக்களைக் கொன்று குவித்தும், நமது தமிழ்ப் பிள்ளைகளை எந்த ஆதாரமுமின்றி கைது செய்தபோதும், தமிழர்களின் சொத்துகளை எரியூட்டி, தமிழ்ச் சகோதரிகளை வல்லுறவு கொண்டு அழித்துவரும் வேளையில் ஒரு மட்டை பந்துப் போடியை இராணுவத்துடன் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். அவரைத் தீர்த்துக் கட்ட வேண்டிய தேவை எவ்வாறு வந்ததெனில், இலங்கை அரசு அந்த மட்டைப் பந்து போட்டியை முன்வைத்து தமிழீழ மக்களுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் நல்லுறவு நிலவுவதாகவும், இனச்சிக்கல் ஒரு சில தீவிரவாதிகளால் மட்டுமே உருவாக்கப்படுவதாகவும், உலகிற்கு ஒரு கருத்தினை உருவாக்கவே அரசு பரப்புரை செய்தது.

LTTE யிலிருந்து பிரிந்து சென்ற சிலரே தமிழீழ ஐக்கிய விடுதலை முண்ணனியின் முன்னாள் எம்.பி.க்களை கொன்றிருக்கலாமல்லவா?
நிச்சயமாக இல்லை. எனது அனுமதியின்றி LTTEயில் எதுவும் நடப்பதில்லை. இந்தக் கொலைதொடர்பாக சில சொல்ல விரும்புகிறேன். நான் த.ஐ.வி.மு. தலைவர்களைச் சந்தித்து அந்தக் கொலையை நாங்கள் செய்யவில்லை என உறுதியாகவும், அதனால் எங்களிடமிருந்து அத்தகைய நிகழ்வை எதிர்கொள்ள நேரிடுமோ எனக் கவலையுறத் தேவையில்லை எனவும் கூறியுள்ளேன். ஆனால், ஆலால சுந்தரத்தைச் சுட்டதனால் த.ஐ.மு.விற்கு நாங்கள் எதிரானவர்கள் என்று பொருளல்ல என்று சொன்னேன். அத்தலைவர்களுக்கும் இளம் தலைமுறையினருக்கும் இடைவெளி அச்சப்படத்தக்க வகையில் கூடியுள்ளது என்று சுட்டியுள்ளேன். இளந்தலைமுறையினர் தமிழீழ விடுதலைப் போரைக் கைவிட்டுவிட்ட துரோகிகள் எனப் பார்க்கின்றனர். இந்த இடைவெளி கூடுவதற்கு அவர்கள் ஈழமக்கள் மதிப்பதில்லை என்பதே காரணம். அவர்கள் ஈழம் பற்றிய மெய்நிலையிலிருந்து முற்றாகக் துண்டிக்கப்படுள்ளனர். எனவே, தமிழ் மக்களிடமிருந்து இதுபோல தனிமைப்பட்ட, இளந்தலைமுறையிடமிருந்து கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். மெய்நிலை என்னவெனில், ஈழப் போரைக் கைவிட்டால் நானும் இத்தகைய விளைவுகளையே எதிர்கொள்ள நேரிடும்.

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-2(1) Empty தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள் -2(3)

Post by நிசாந்தன் Thu Oct 28, 2010 8:20 pm

இளம் தலைமுறையினர் ஈழத்திற்காக கூடுதலாக அர்ப்பணித்துள்ளனர் என்று கூறுகிறீர்களா?
ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகள் ஈழம் என்ற தனி நாடே ஒரே தீர்வு என்பதை காட்டுகிறது. இதுபோன்ற பல இனப்படுகொலைகளை நேர்கொண்ட தமிழர்கள், தாங்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டுமெனில் ஈழம் தவிர வேறு தீர்வே இல்லை என உணர்ந்துள்ளனர்.

ஐ.வி.மு. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொலைக்கு LTTEயே காரணம் எனக் கருதுவதால் இராசீவ்காந்தி அணுகுமுறை இறுகியுள்ளது. உண்மையில் பாலசிங்கம் மீதான வெளியேற்ற ஆணையை நீக்கவிருந்தபோதிலும், இறுதியில் செய்யவில்லை…
இந்தக் கொலையில் எங்களுக்கு எந்தத் தொடர்புமில்லை. த.ஐ.வி.மு. தலைவர்கள் கொலைக்கு நாங்கள்தான் காரணம் என்று கருதியே பாலசிங்கம் வெளியேற்ற உத்தரவை இரத்து செய்யவில்லையெனில், அது தவறு. அதற்காக எங்களை தண்டிப்பதில் எந்த பொருளுமில்லை. இந்தக் கொலைக்கான உண்மையான குற்றமிழைத்த முகவாண்மையைத் தண்டிப்பதன் மூலம்தான் எதிர்காலத்தில் அத்தகு நிகழ்ச்சிகள் நடைபெறாது.

பாலசிங்கம் நாட்டிலிருந்து வெளியேற்றபட்டபோது உங்கள் கருத்து என்னவாக இருந்தது?
நாங்கள் இந்திய அரசோடு பெருமளவில் ஒத்துழைத்தோம். எனவே இந்த வெளியேற்றம் நிகழ்ந்தபோது எங்களுக்கு தவறிழைக்கப்பட்டதாகவே கருதினோம். இந்த நிகழ்வு எங்களுக்கும் இந்திய அரசுக்குமிடையே ஓரளவு கசப்புணர்வைத் தோற்றுவித்தது.

பாலசிங்கத்துடன் உங்களுக்குள்ள உறவு பற்றி…
அவர் எங்களது அரசியல் அலோசகர். ஒரு உண்மையான தேசபக்தர் என்ற வகையில் எங்கள் மக்களது தேசிய உணர்வுகளைப் பிரதிபலித்தார்.

இந்திய அரசு பாலசிங்கத்தை ஏன் வெளியேற்றியது?
அவர் பொதுநலன் கருதி வெளியேற்றப்பட்டதாக இந்தியா கூறியது. ஆனால் இந்தக் காரணம் பொய்யானது. அவரை வெளியே அனுப்பிவிட்டு எங்களோடு சமாதானப் பேச்சு வார்த்தை என்பது எந்த வகையிலும் பொறுத்தமானதல்ல.

உண்மையான காரணம், பாலசிங்கம் இல்லாமல் உங்களால் இயங்கமுடியாது என தில்லி கருதியிருக்கலாமா?
அப்படி அவர்கள் நினைத்திருந்தால், ஒரு தவறைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் தனிநபர்களோடு பாலசிங்கம்(அ)பிரபாகரனோடு அல்ல – மக்களின் பொது இலட்சியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
இந்திய அரசு வெளியேற்ற ஆணையை இரத்து செய்யுமா?
நிச்சயமாக செய்யும் என நம்புகிறேன்.

ஈழத் தேசிய விடுதலை முண்ணனி, பாலசிங்கம் திரும்ப அழைக்கப்பட்டால் ஒழிய பேச்சுவார்த்தை தொடராது என்பதில் உறுதியாக இருக்குமா?
பாலசிங்கம் இல்லாமல் பிரச்சனைகளும், இடையூறுகளையும், சமாதானப் பேச்சுவார்தையில் எதிர்கொள்ள நேரிடும். அவர் சட்ட நுணுக்கங்களில் சிறந்த அறிவாளி. எனவே, அவர் பிரசன்னம் பேச்சுவார்த்தைக்கு மிக இன்றியமையாதது. நான் இந்தியப் பிரதமரைச் சந்திக்கும்போது இவற்றை விளக்கி, வெளியேற்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்துவேன்.

பிரதமர் இரத்து செய்ய விரும்பாவிட்டால்?
பேச்சுவார்த்தைகளில் சிக்கல்களை உருவாக்கும்.

பிரதமரிடம் தனி ஈழம்தான் ஒரே தீர்வு எனத் தெரிவிப்பீர்களா?
நிச்சயமாக. ஈழம்தான் ஒரே தீர்வு என்பதையும், இந்த முடிவுக்கு நாங்கள் வருவதற்கான வரலாற்று வழியிலான காரணிகளையும் குறிப்பிடுவோம்.

அப்படி ஒரு தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கமாட்டேன் என ஏற்கனவே கூறியுள்ளீரே?
எங்கள் முடிவுகளைக் கூற இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வோம். இந்தியாவிடம் வேறு தீர்வு இருக்குமானால் எங்களிடம் கூறட்டும். அவ்வாறு கூறும் தீர்வு பயனுள்ளதாக இருக்கும் என உறுதிபடுத்தட்டும்.

இந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு நியாயமான சரியான தீர்வு உருவாகும் எனக் கருதுகிறீர்களா?
இலங்கை அரசு நடந்துகொள்ளும் முறையைப் பார்த்தால், அவர்கள் பிரச்சனைகளைத் தீர்க்க, பேச்சுவார்த்தை மூலம் ஒரு உடன்பாடு ஏற்படுவதில் உறுதியாக இருப்பதாகத் தெரியவில்லை. போர்நிறுத்த காலத்தில் பெருமளவு ஆயுதங்களையும், தளவாடங்களையும் வாங்கி வருகின்றனர். அச்செயல்பாடு அவர்கள் ஒரு இராணுவத் தீர்வையே விரும்புவதாகத் தோன்றுகிறது. பேச்சுகள் நடந்து கொண்டிருக்கையில், தமிழர்களை அவர்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றி அவர்களை அகதிகளாக்கிக் கொண்டுள்ளனர். திருகோணமலையில் மட்டும் 35,000 தமிழ் அகதிகள் தற்போது உள்ளனர். போர்நிறுத்தம் இருப்பதாகச் சொல்லப்படும் காலத்திலேயே 600 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறையில் ஒரு துறவி வேடத்தில் நீண்ட அங்கியுடன் நீங்கள் காணப்பட்டதாக வரும் செய்திகள் பற்றி…?
நான் ஈழத்தில் இருந்தது உண்மை. மற்ற செய்திகள் கற்பனை.

இலங்கையில் தமிழர்கள் இனக்கொலை செய்யப்படுவதாக நீங்கள் உறுதியாக நம்புகையில், இந்தப் பிரச்சனைக்கான சிறந்த தீர்வு என்னவாக இருக்கும்?
போராளிகளுக்கு இந்தியா உதவுவதன் மூலம் இனப்படுகொலையை நிறுத்த வேண்டும். தமிழர்களைக் காப்பாற்றும் விடயத்தில் எங்களுக்கு உதவ வேண்டும். இந்தியாவின் உளமார்ந்த ஆதரவும் எங்களுக்குத் தேவை.

இந்தியா இராணுவ வழியில் தலையிடவேண்டும் எனக் கருதுகிறீர்களா?
அந்தக் கருத்தை நான் ஆதரிக்கவில்லை. சர்வதேச அரங்கில் அது இந்தியாவுக்குப் பல சிக்கல்கள் உருவாக்கும்.

இலங்கைத் தமிழர்கள் பற்றிய இராசீவின் அணுகுமுறை அவரது தாயாரின் அணுகுமுறையிலிருந்து மாறுபட்டதா?
பெரும் வேறுபாடுகளை நான் காணவில்லை.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இதே ‘சண்டே’ இதழுக்கான நேர்முகத்தில் வவுனியாவிலும் திருகோணமலையிலும் இராணுவத் தாக்குதல் வரும் என எந்த அடிப்படையில் கணித்தீர்கள்?
இந்தப் பகுதிகளில் கட்டாயக் குடியேற்றங்கள் விறுவிறுப்பாக நடைபெறுவதை வைத்து இராணுவத் தாக்குதல் வரும் என்று எனக்குத் தெரிந்தது. எங்கள் பகுதிகளை ஆக்கிரமிக்கவும், யாழ்ப்பாண தீபகற்பப் பகுதிக்குள் எங்களைத் தள்ளவும் ஒரு திட்டமிட்ட முயற்சி நடக்கிறது. நேற்றுகூட(செப்.15) திருகோணமலையில் ஒரு உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தியுள்ளோம். எங்கள் எல்லைகளைப் பாதுகாப்பது மிக மிக முக்கியம். அல்லது நாங்கள் விரட்டப்படுவோம். எங்களது இராணுவ முகாம்கள் இருப்பதனால்தான் செயவர்தனேவால் எங்களை எங்கள் பிரதேசத்திலிருந்து விரட்டமுடியவில்லை. எதிர்காலத்தில் அதுபோல விரட்ட முடியாது.

உடனடியாக என்ன நடக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?
ஈழத்திற்கான போர் உருவாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் அது வலுபட்டு வருகிறது. தனிஈழம் வந்தே தீரும். உலகின் எவ்வளவு வலிமைமிக்கச் சக்தியாயிருப்பினும் அதைத் தடுக்கமுடியாது. அல்லது இப்போராட்டத்தில் தமிழர்கள் அனைவரும் ஒழிக்கப்படலாம்; தமிழினமே இந்தத் தீவிலிருந்து துடைத்தெறியப்படலாம் என்பதே மாற்றாக இருக்கும்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-2(1) Empty தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-2(4)

Post by நிசாந்தன் Thu Oct 28, 2010 8:38 pm

ஒரு பெரிய தாக்குதலுக்கான திட்டத்தில் ஈழப்போராளிகள் இருப்பதாக இலங்கை அரசு கூறுகிறதே, அது உண்மையா?
அப்படிப்பட்ட ஒரு முடிவை நாங்கள் எடுக்கவில்லை. அது போன்ற தகவல்கள் பொய்யானவை. அவை அனைத்தும் பெரிதுபடுத்தப்பட்ட கதைகள்.

சிவிலியன் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என பாலசிங்கம் கூறியுள்ளாரே?
எதிர்காலத்தில் அவ்வாறு நிகழலாம் என்றே கூறியுள்ளார். அது நிகழ வாய்ப்புள்ளது.

இலங்கை அரசு ஒரு மாபெரும் தாக்குதலை தொடுக்கப்போவதாக எதிர்பார்க்கிறீர்களா?
ஆம், அப்படித்தான் நம்புகிறோம். பெய்ரூட்டில் நாம் கண்டதை விட மிகப் பெரிய தாக்குதலாக இருக்கும். யூலை 1983 பேரழிவைவிட திருகோணமலை, வவுனியாவில் நடைபெற்றவை மிகமோசமானதாகும். அத்தகு தாக்குதல்கள் மேலதிகக் கொலை வெறியுடன் மீண்டும் நடக்கும். தமிழ்ப் பொதுமக்கள் மீதான இலங்கை அரசின் விமானத் தாக்குதல் எங்களை அழித்தொழிப்பதற்கான இலங்கை அரசின் உறுதியான திட்டத்தின் வெளிப்பாடே.

தமிழ்ப் பகுதிகளில் இருபெரும் குண்டுகள் வீசப்பட்டால் உங்கள் எதிர்ப்பு என்னவாகும்?
குண்டுகளும் அணுஆயுதங்களும் ஆயிரக்கணக்கானவர்களை கொல்லக்கூடும். ஆனால், முக்கியமானது என்னவெனில் யாரிடம் ஆயுதங்கள் உள்ளன என்பதே. இந்தக் கணக்கில் ஆயுதங்கள் இலங்கை அரசின் பொறுப்பில் உள்ளன. அவைகளைக் கைப்பற்றுவது எங்களுக்கு ஒன்றும் கடினமல்ல. சொல்லப்போனால், எங்களிடமுள்ள பெரும்பாலான ஆயுதங்கள் இலங்கை இராணுவத்திடமிருந்து கைபற்றப்பட்டவைதான்.


போர்நிறுத்தத்தை நீட்டிக்க ஒப்புக் கொள்வீர்களா?
நாங்கள் ஒன்றும் போர் நடத்தவில்லை. எங்கள் மக்கள் மீதான இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான முயற்சியே. எங்கள் மீதான இனப்படுகொலை நிறுத்தப்பட்டால் நாங்கள் போரை நிறுத்துவோம். ஆனால், போர் நிறுத்தம் நீடிக்க வேண்டுமானால், போர் நிறுத்த விதிமீறல்களைக் கண்காணிப்பதற்கான ஒரு வெளிநாட்டு முகமை வேண்டும். போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட வேண்டுமானால், இலங்கை அரசாங்கமும், மத்தியத்தராக செயல்படும் இந்தியாவும், போர் நிறுத்த மீறல்கள் நடைபெறாது என உறுதியளிக்க வேண்டும். அரசுசாரா சர்வதேச செஞ்சிலுவை சங்கம் போன்ற ஒரு அமைப்பிடம் போர்நிறுத்தக் கண்காணிப்புப் பணியையும், அரசியல் கைதிகளின் நிலை பற்றி கவனிக்கும் பொறுப்பைத் தரவேண்டும்.

இலங்கை இராணுவம் கட்டுப்பாட்டினை மீறி நடக்கிறது எனக் கருதுகிறீர்களா?
நாங்கள் அப்படி ஒருபோதும் நினைக்கவில்லை. செயவர்தனேயின் நேரடிப் பார்வையில்தான் தமிழர்கள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அவர் இரட்டை வேடம் போடுகிறார். படுகொலைகளை நடத்த இராணுவத்திற்கு ஒருபுறம் உத்தரவு போடும்போதே மறுபுறம் இராணுவம் கட்டுப்பாட்டை மீறிப் போவதாகவும் கூறி அதன்மூலம் பழியிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். இராணுவத்திற்குள் அப்படி ஒரு கிளர்ச்சி இருப்பின், செயவர்தனே தூக்கியெறியப்பட்டு இராணுவப் புரட்சி மூலம் அரசு மாறியிருக்கும்.

செயவர்தனே, அரசியல் தீர்வின் மீது நம்பிக்கையற்றவர் என நினைக்கிறீர்களா? ஒரு பேச்சுவார்த்தை மூலமான சமாதான உடன்படிக்கை செயவர்தனேவுக்குப் பதில் வேறு யாரேனும் இருப்பின் சாத்தியம் என நினைக்கிறீர்களா?
சிங்களத் தலைமையிலான மாற்றம் மட்டும் பிரச்சனையைத் தீர்க்கும் என நாங்கள் கருதவில்லை. நாங்கள் ஒவ்வொரு முறையும் வஞ்சிக்கப்பட்டோம். தொடர்ந்து ஒவ்வொரு சிங்கள அரசாலும் ஏமாற்றப்பட்டோம் என்பதை வரலாறு காண்பிக்கிறது.

ஒரு நீண்ட நாள் போரையும் உயிரிழப்பையும் தனி ஈழத்திற்காக எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறீர்களா?
உறுதியாக. களபலியும் ஈகமும் இன்றி உலகில் எந்த நாடும் விடுதலை பெற்றுவிடவில்லை. தமிழர்களாகிய நாங்கள் எங்கள் சுதந்திரத்திற்காக உயிர்களை இழக்கத் தயாராகவே உள்ளோம்.

தென் ஆப்பிரிக்காவைப் போல, பல பத்தாண்டுகளுக்கு எந்தவிதப் பலனுமின்றி விடுதலைப் போர் தொடரலாமல்லவா?
ஒரு விடுதலைப் போருக்கு யாரும் காலநிர்ணயம் செய்ய முடியாது. இலட்சியத்தை அடையும்வரை இது ஒரு தொடரும் போராட்டம். இது ஒரு மக்கள் யுத்தம். எனவே, ஒரு சில கெரில்லா போராளிகளின் இழப்பிற்காக, விடுதலை போரை நிறுத்த முடியாது. மக்களின் மனஉறுதியும், சர்வதேச ஒத்துழைப்பும், சூழ்நிலைகளுமே ஒரு விடுதலைப் போரின் வெற்றியை உறுதி செய்கின்றன. எங்கள் வாழ்நாளில் தனி ஈழம் காண்போம் என்ற நம்பிக்கையில்தான் போராடி வருகிறோம். ஒரு விடுதலைப் போரை, அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல நாங்கள் விரும்பவில்லை. எங்கள் ஈகத்தின் பயனை அடுத்தத் தலைமுறை சுவைக்க வேண்டும். ஒருவேளை, எங்கள் வாழ்நாளில் நாங்கள் வெற்றிபெறாவிட்டால், அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பது பற்றிய ஒரு எதிர்காலத் திட்டம் எங்களிடமுள்ளது.

அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் நீங்கள் பங்கேற்பீர்களா?
அது இலங்கை அரசுப் பிரதிநிதிக் குழுவின் அமைப்பைப் பொறுத்தது.

போராளிகள் மீது இந்தியா ஒரு ஒப்பந்தத்தைத் திணிக்கும் எனக் கருதுகிறீர்களா?
இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. எங்களின் மக்களின் நியாயமான விருப்பத்தை நிறைவேற்றாத எந்த ஒரு ஒப்பந்தத்தையும் நாங்கள் ஏற்கமாட்டோம் என்பதால் எந்த ஒன்றையும் திணிப்பது என்பதில் எந்தப் பொருளுமில்லை.

தனது இராணுவத் தயாரிப்புகளுக்கான கால இடைவெளியைப் பெறுவதற்கான செயவர்தனேவின் தந்திரமே இந்த சமாதானப் பேச்சுவார்த்தை எனக் கருதுகிறீர்களா?
அப்படியும்தான். ஆனால், அந்தக் கால அவகாசம் எங்களுக்கும் உதவக்கூடும்.

தமிழ்ப் பகுதிகளில் நீங்கள் ஒரு கிராமப்புற வீரனாகக் கருதப்படுகிறீர்கள். உங்கள் வாழ்நாளிலேயே ஒரு வரலாறாக உருவெடுப்பதற்கான காரணங்கள் என்ன என நினைக்கிறீர்கள்?
அதை மக்கள்தான் கூறவேண்டும். அடிப்படையில் அதுபோன்ற உணர்ச்சிகரமான பேச்சுகளை நான் வெறுக்கிறேன். அது ஒருவரது தற்பெருமையை வளர்த்துவிடும். ஒரு விடுதலைப் போராளி அது போன்ற சுயபிரமைகளிலிருந்தும் தன்னலப் போக்கிலிருந்தும் விடுபட்டு உயர போராட்டத்தில் முழு மனதோடு ஆழ்ந்துவிட வேண்டும். நாங்கள் தமிழ் மக்களின் அடையாளங்கள் மட்டுமே.

ஒருவேளை, சில சூழ்நிலைகளில் உங்களுக்கும் இந்திய அரசுக்குமான உறவுகளில் சிக்கல் ஏற்பட்டு இந்தியா உங்களுக்கு உதவும் முயற்சியிலிருந்து வெளியேறும் நிலை உருவானால், உங்கள் விடுதலைப் போரைத் தனியாகவே தொடர்வீர்களா?
அதைத்தவிர வேறுவழி என்ன இருக்கிறது? எங்கள் இலட்சியத்தை அடையும்வரை எங்கள் போராட்டம் தொடரும். இந்தியாவின் ஆதரவு எங்களுக்கு ஊக்கமளிக்கும் மருந்து. எனினும், இந்தியா எங்களுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டால், எங்கள் விடுதலைப் போர் முடிந்துவிடும் என்று சொல்லமுடியாது. ஏனெனில், எங்கள் போராட்டத்தைத் தொடங்கும்போது இந்தியாவின் ஆதரவை பெற்று, தொடங்கவில்லை. நாங்கள் இறுதிவரை போராடுவோம். நாம் களப்பலியானால் வேறு ஒருவர் பொறுப்பேற்பார். சுபாஷ் சந்திரபோசு கூறியதைப் போல, ‘எந்த ஒரு விடுதலைப் போராளியும் தான் மட்டும் விடுதலையைப் பெற்றுத் தர முடியும் என தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ள முடியாது’. எனது தலைமுறை விடுதலையைப் பெற்றுத் தரமுடியவில்லையெனில், அடுத்த தலைமுறை போராட்டத்தைத் தொடரும்.


சண்டே இந்தியா
சந்திப்பு : அனிதா பிரதாப்
௨௯-௯-௧௯௮௫
௫-௧௦-௧௯௮௫


Last edited by நிசாந்தன் on Thu Oct 28, 2010 8:46 pm; edited 1 time in total (Reason for editing : விடுபட்டுவிட்டன.)
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-2(1) Empty Re: தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-2(1)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum