புதிய பதிவுகள்
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசனும்... அரசியும்... Poll_c10அரசனும்... அரசியும்... Poll_m10அரசனும்... அரசியும்... Poll_c10 
96 Posts - 49%
heezulia
அரசனும்... அரசியும்... Poll_c10அரசனும்... அரசியும்... Poll_m10அரசனும்... அரசியும்... Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
அரசனும்... அரசியும்... Poll_c10அரசனும்... அரசியும்... Poll_m10அரசனும்... அரசியும்... Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
அரசனும்... அரசியும்... Poll_c10அரசனும்... அரசியும்... Poll_m10அரசனும்... அரசியும்... Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
அரசனும்... அரசியும்... Poll_c10அரசனும்... அரசியும்... Poll_m10அரசனும்... அரசியும்... Poll_c10 
7 Posts - 4%
prajai
அரசனும்... அரசியும்... Poll_c10அரசனும்... அரசியும்... Poll_m10அரசனும்... அரசியும்... Poll_c10 
3 Posts - 2%
Barushree
அரசனும்... அரசியும்... Poll_c10அரசனும்... அரசியும்... Poll_m10அரசனும்... அரசியும்... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அரசனும்... அரசியும்... Poll_c10அரசனும்... அரசியும்... Poll_m10அரசனும்... அரசியும்... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அரசனும்... அரசியும்... Poll_c10அரசனும்... அரசியும்... Poll_m10அரசனும்... அரசியும்... Poll_c10 
2 Posts - 1%
cordiac
அரசனும்... அரசியும்... Poll_c10அரசனும்... அரசியும்... Poll_m10அரசனும்... அரசியும்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசனும்... அரசியும்... Poll_c10அரசனும்... அரசியும்... Poll_m10அரசனும்... அரசியும்... Poll_c10 
223 Posts - 52%
heezulia
அரசனும்... அரசியும்... Poll_c10அரசனும்... அரசியும்... Poll_m10அரசனும்... அரசியும்... Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
அரசனும்... அரசியும்... Poll_c10அரசனும்... அரசியும்... Poll_m10அரசனும்... அரசியும்... Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
அரசனும்... அரசியும்... Poll_c10அரசனும்... அரசியும்... Poll_m10அரசனும்... அரசியும்... Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அரசனும்... அரசியும்... Poll_c10அரசனும்... அரசியும்... Poll_m10அரசனும்... அரசியும்... Poll_c10 
18 Posts - 4%
prajai
அரசனும்... அரசியும்... Poll_c10அரசனும்... அரசியும்... Poll_m10அரசனும்... அரசியும்... Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அரசனும்... அரசியும்... Poll_c10அரசனும்... அரசியும்... Poll_m10அரசனும்... அரசியும்... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அரசனும்... அரசியும்... Poll_c10அரசனும்... அரசியும்... Poll_m10அரசனும்... அரசியும்... Poll_c10 
2 Posts - 0%
Barushree
அரசனும்... அரசியும்... Poll_c10அரசனும்... அரசியும்... Poll_m10அரசனும்... அரசியும்... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அரசனும்... அரசியும்... Poll_c10அரசனும்... அரசியும்... Poll_m10அரசனும்... அரசியும்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசனும்... அரசியும்...


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 24, 2010 11:03 pm



கோவிலுக்குப் போலாங்களே.......நோயின்றி வாழ......

ஊருக்கு அரசன் அரசி எவ்வாறு முக்கியமோ, அதே போல கருவூருக்கு இந்த அரசன் அரசி என்றழைக்கப்படும் அரசமரமும் வேப்ப மரமும் முக்கியம் என்று சென்ற இதழில் கண்டோம்.. இதில் வேமபு தமிழர்களின் பண்பாட்டோடவும் வழிபாட்டோடவும் வாழ்வியலோடும், உடல் ஓம்பு முறையோடவும் தொடர்புடைய்து. வழிபாட்டோடு தொடர்புடையது என்பது அம்மன் வழிபாட்டை அறிந்த அனைவரும் அறிவர்.

பக்தி செய்யும் வகையைக் கூற வந்த வள்ளலார் வேம்பையே
உவமையாகக் கூறுகிறார்.

”வேமபுரு புழுவை வாங்கிமென் கரும்பிடை விட்டாலும் வேம்பையே நோக்கிப் பின்னும் வியப்புறுமாறு

என்று கூறி வேம்பு ஆலயம் செல்வது இரண்டும் கசந்தாலும், பக்தி பிறவி என்ற பிணியைப் போக்கி இன்பம் பயப்பது. வேம்பு உடல் பிணியைப் போக்கி நலமாக வாழ் வைப்பது.. ஆகவே உடல் ஓம்புவதற்கு முதன்மையான மருந்தாக வேம்பு பயனளிக்கிறது.

தமிழர்களின் அகத்தும் புறத்தும் வேம்பு தொடர்ந்தே வந்துள்ளது. தமிழர்களின் அக வாழ்வில்,
கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
என்னை இன்றியும் கழிவது கொல்லோ(குறுந்தொகை 24)

என்று பிரிந்து சென்ற காதல் தலைவனின் வருகைக்காகக் காத்திருக்கும் தலைவி, வேம்பின் மலரைப் பார்த்து ஏங்க, தலைவன் வரும் காலம் காட்டும் கடிகாரமாகப் பயன் பட்டது வேம்பு. புற வாழ்விலோ போரில் அடையாள மாலையாகப் பயன்பட்டுப் பண்பாட்டோடு தொடர்புடைய பெருமையைப் பெற்றுள்ளது. இதனைச் சுட்டும் பின்வரும் புறநானூற்றுப் பாடல்.

குடுமி களைந்தநுதல் வேம்பின் ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து

இது மட்டுமல்ல வேம்பு வானியலுடன் தொடர்புடையது என்பதற்கு சான்றுகள் பல காணப்படுகின்றன. நம்புவதும் நம்பாததும் அவரவர் கையில் என்ற போதும் உள்ளவற்றைப் பதிவது நம் கடமையுமாகிறது.

நவகோள்களில் கேதுவின் பிரியமான மூலிகை வேம்பு என்கின்றது வானியல் நூல். ஜாதகத்தில் கேதுவின் தச புத்திகள் கேடு தர விளைவிக்கும் தருணங்களில் வேப்பமரத்திற்கு மஞ்சள் குங்குமம் இட்டு ஒன்பது நாட்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டு வர, கெடுபலன் குறையும் என்பர். அதுமட்டுமல்ல மரத்தின் எல்லா பாகங்களையும் சமமாக எடுத்து தூள் செய்து, தேனில் குழைத்து நெற்றியில் பூசி வர மிருகங்களைக் கூட வசியப்படுத்தலாமாம்.

அகில உலகத்தையும் இயக்கும் பெரும் சக்தியே ஆதி பராசக்தி. எங்கும் நிறைந்த ஆதி சக்தியை மூலைகையிலும் கண்டனர் நம் முன்னோர்கள். வேம்பை நம் சித்தர்கள் ஆதிசக்தி மூலிகை, பராசக்தி மூலிகை என்று பெயரிட்டு அழைத்தனர். அகத்தியரின் பரிபூரணம் 400 உம் இந்தக் குறிப்புகளைக் காணலாம்.

கோடையில் இளைப்பாற்றிக் கொள்ள நம் முன்னோர்கள் கண்ட வழி அம்மன் கோயில் திருவிழாக்கள். பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அம்மன் கோவில் திருவிழாக்களில் வேப்பிலை ஆடை அணிந்து கோவிலைச் சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வேப்பிலை ஒரு கிருமி நாசினி. உடலில் வெப்பத்தை உள்வாங்கும் தன்மை கொண்டவை. இதனால் பழங்காலத்தில் வெப்ப நோயின் தாக்குதலிருந்து விடுபட்டனர்..

என்ன ஒன்று அவர்கள் உரிமை வாங்க வேண்டும் என்பதை மட்டும் அறியாது விட்டு விட்டார்கள். அதன் பலன் இன்று நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து நம் உரிமையை நாம் பெறவேண்டியுள்ளது.. அமெரிக்காவிடம் இருந்து போராடிப் பெற்ற காப்புரிமையைத்தான் (பேடண்ட்) சொல்கிறேன்.
போந்தை, வேம்பே ஆர் என வரூஉம்
மாபெருந் தாணையர் மலைந்த பூவும்


என்று கூறி தொல்காப்பியர் காலம் தொடர்ந்து நாம் பயன் படுத்தி வரும் வேப்பிலையை பறிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் வரி கட்டும் அபாயத்தில் இருந்து நல்ல வேளையாகத் தப்பித்தோம் என்றே கூற வேண்டும்.


சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் ஆற்றல் வேம்பிற்கு உள்ளது. காற்றில் கலந்துள்ள தூசியை வடிகட்டும் ஆற்றலும். அத்துடன் காற்றில் கலந்துள்ள Anthro cyanine என்னும் நச்சு வாயுவை ஈர்த்துக்கொள்ளும் (கொல்லும்) ஆற்றலும் வேம்புக்கு உள்ளது. வேம்பு வெளியிடும் பிராகிபிடின் என்ற வேதிப்பொருள் மனிதனைத் தாக்கும் நோய்க்கிருமிகளை முற்றிலும் இயங்க விடாமல் அழித்து விடும் தன்மையது. வேம்பின் மருத்துவ குணங்களைப் பற்றிக் கூற ஆரம்பித்தால் முடிவில்லாது தொடரும்.

காய சித்தியாகும் கடிய சிலேஷ்ம மாறும்
தூய விந்து நாதமிவை சுத்தியுமாம் தூயவருக்
கெத்திக்கும் கிட்டு, இலையருந்தில் வாயெல்லாம்
தித்திக்கும் வேம்பதற்குத் தேர்

அகத்தியம் காயசித்திக்கு மருந்தாகும் என்று வேம்பின் தேர் என்று கூறுகிறது. ஆத்தா மகமாயி ஒருபுறம், வேம்பு ஒரு புறம் என்று பக்தர்களின் உள்ள உடல் நோயைத் தீர்க்க அடமாக அமர்ந்து இருக்கும் இடம் கோயில். இக்கோயில்களுக்குப் போகமாட்டேன் என்று அடமாக இருப்பது அழகா? அறிவுடைமையா?

சென்ற இதழில் அரச மரம் பற்றி குறிப்பு கூறி விடுத்தேன். அதன் தொடர்ச்சியாக,
வேப்ப மரத்தை மரங்களின் அரசி என்று கூறுவதன் காரணங்கள் அறிந்தோம். அதே போல அரச மரத்தை வ்மரங்களின் அரசன் என்று கூறுவதற்கு முக்கியமான காரணம் அறியவேண்டாமா? அது பெரியதாக வளர்வதாலா? உதிய மரம் கூட பெருத்து பெரிய மரமாக இருக்குமாமே. பழமொழி சொல்லுகிறதே.. உதியம் பெருத்து உத்திரத்திற்கு ஆகுமா? என்று. அப்போது அது அல்ல காரணம். வேறு எதுவாக இருக்கும்.

கம்பரின் கைவண்ணத்தில் கூறவேண்டுமாயின் அரச மரத்தை உயிர் காற்றெலாம் உரைவதோர் உட்ம்புமானது என்று கூறலாம். உயிரெலாம் உரைவதோர் உடம்பு மாயினான் என்று மன்னன் தசரதனைக் காட்டுவார். கம்பர். மன்னன் என்பவன் தன் நாட்டு மக்களைக் உயிர் போல எண்ணி காக்க வேண்டிய கடமையுடையவன் என்பாதால். அக்கடமையை ஒரு மரம் செய்கிறது எனும்போது அதனை 'அரசன்' என்று முடிசூட்டாமல் எப்படி அழைப்பதாம்? எப்படி என்று கேட்கிறீர்களா?

மரங்களில் அபூர்வமான மரம் அரச மரம். அனைத்து தாவரங்களும் 12 மணி நேரம் ஆக்ஸிஜனும், 12 மணிநேரம் கார்பன்-டை-ஆக்சைடும் வெளியேற்றும். ஆனால் அரச மரம் மட்டும் நமக்காக நாம் உயிர் வாழ, நல்ல காற்றைச் சுவாசிக்க உயிர்க்காற்றை (ஆக்சிஜனை) 24 மணிநேரமும் வெளியேற்றும் அற்புதமான தனமையைத் தன்னகத்தே கொண்டது..

அதனால்தான் கோயில்கள் தோறும் அரசும் வேம்பு கோலோச்சுகிறது. இவ் அறிவியலை உணர்ந்த நம் முன்னோர்கள், கோயில்கள் தோறும், சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பராமரிக்க அரச மரங்களை நட்டு பராமரித்தார்கள். பொது இடங்களிலும் கிராமங்களில் அரச மரத்தை நட்டார்கள். இந்த இடத்தில் நம் முன்னோர்களின் உயிரியல் அறிவையும் பாராட்டியே ஆகவேண்டும்.

கிரகங்களில் வியாழன் (Jupiter) கிரகம் சக்தி வாய்ந்தது. இது குழந்தைப் பாக்கியம், திருமணம், பணம், வரவு போன்ற காரியங்களுக்கு உதவுவதாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்துக்கள் அரச மரத்iதை வலம் வந்து குரு' என்று அழைப்பார்கள். வியாழக்கிழமை உருவானதும் இதை அடியொற்றியே.

வியாழன் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுக்கள் நன்மைகள் தரும். கெட்ட கதிர்வீச்சுக்கள் தீங்கு விளைவிக்கும். அரச மரத்திற்கும், வியாழன் (Jupiter) கிரகத்திற்கும் நேரடி தொடர்புகள் இருக்கின்றன என்று வானநூல் அறிவியல் கூறுகின்றன.. இந்த மரம் வியாழன் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகளை தன் உடலில் உறிஞ்சிக் அடைத்துக் கொண்டு தன்னையும் பாதுகாத்துக் கொண்டு நம்மையும் வாழ வைக்கும் இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் மருந்தாக மாறுகிறது.

"ரெய்கி' மருத்துவத்தில் மரத்தைக் கட்டிப்பிடிக்கும் சிகிச்சை பிரபலமானது. மரத்தை கட்டிப்பிடிக்கும் போது அதன் நல்ல குணங்கள் நம் உடலில் மாற்றலாகி பல வகையான நோய்களைக் குணப்படுத்துவதுடன், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உண்டாக்குகிறது. கிரக தோஷங்களையும் நீக்குகிறது. இம்மரத்தை தினசரி அரை மணி நேரம் கட்டிப்பிடிப்பதால் மேற்கண்ட பலன் கிடைப்பதுடன் நல்ல உடல் நலனும் கிடைக்கிறது. (ஆரச மரத்தைக் கட்டிப் பிடிக்க முடியுமா என்ற கேள்விக்கு ரெய்கி மருத்துவர்கள்தான் பதிலளிக்க வேண்டும்)

இவற்றின் காரணமாகவே அரச மரத்தைக் தொட்டு கும்பிட்டு வலம் வருவது இந்துக்களின் வழக்கமாக இருந்து வருகின்றது.
பெட்ரோல் புகையில் கலந்து ஐக்கியமான உயிர்க்காற்றைச் சுவாசிக்க முடியாது தவிக்கும் இன்றைய சூழலில்,

அவசரமாகச் சுவாசிக்க வேண்டும்
காரோட்டி ஊருக்கு வெளியே போ

என்றும்,

பிராண வாயு பிரித்தெடுக்க
நாசிக்குச் சக்தி இல்லை


சுற்றியுள்ளது காற்றல்ல
இது
பெற்றோல் டீசலின்
வளிவடிவம்


இதைச் சுவாசிப்பதெனில்
எந்திர மூக்கு வேண்டும்”


என்றும் கூறிய வைரமுத்துவின் கவிதை வரிகள்தான் என் நினைவுக்கு வருகிறது. சிறிது நேரமாவது தூய உயிர்க் காற்றைச் சுவாசிக்க விரும்பினால் கோயிலுக்குப் போகலாமே..
இன்னும் வரும் ஆலய உலா...



நன்றி குமுதம் ஹெல்த்.

ஆதிரா...




அரசனும்... அரசியும்... Aஅரசனும்... அரசியும்... Aஅரசனும்... அரசியும்... Tஅரசனும்... அரசியும்... Hஅரசனும்... அரசியும்... Iஅரசனும்... அரசியும்... Rஅரசனும்... அரசியும்... Aஅரசனும்... அரசியும்... Empty
சடையப்பர்
சடையப்பர்
பண்பாளர்

பதிவுகள் : 128
இணைந்தது : 04/07/2010
http://www.raj.jana123@gmail.com

Postசடையப்பர் Tue Oct 26, 2010 5:57 pm

படித்தேன் அம்மா .. ரொம்ப பயனுள்ளது



புன்னகை புன்னகை ஈகரையின் இளவரசன் புன்னகை புன்னகை அரசனும்... அரசியும்... Indiaflaganimated
தமிழுள் நான் என்னுள் தமிழ்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 26, 2010 6:02 pm

வேப்ப மரத்தின் குணங்களை கூறி பதிவுவிட்டமைக்கு மிக்க நன்றி அக்கா...

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Oct 26, 2010 6:31 pm

மிகவும் பயனுள்ள தகவல்களை பரிமாறி கொண்டமைக்கு நன்றிகளும், நல்லதொரு முயற்சிக்கு பாராட்டுக்களும்.
வாழ்க வளமுடன். அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 31, 2010 11:15 pm

சடையப்பர் wrote:படித்தேன் அம்மா .. ரொம்ப பயனுள்ளது
நன்றி ராஜேஷ். அரசனும்... அரசியும்... 154550



அரசனும்... அரசியும்... Aஅரசனும்... அரசியும்... Aஅரசனும்... அரசியும்... Tஅரசனும்... அரசியும்... Hஅரசனும்... அரசியும்... Iஅரசனும்... அரசியும்... Rஅரசனும்... அரசியும்... Aஅரசனும்... அரசியும்... Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 31, 2010 11:27 pm

கோவிலுக்குச் செல்வது என்பது பக்தி தொடர்பானது மட்டுமல்ல, மனதிற்கும், உடலுக்கும் வலு சேர்க்கிறது என்பதை அழகாக எழுதியுள்ளீர்கள்!

வேம்பு, அரசமரம் பற்றிய விளக்கங்கள் அருமை அக்கா!



அரசனும்... அரசியும்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Nov 02, 2010 12:56 pm

நன்றி அக்கா....

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Nov 02, 2010 4:10 pm

அருமையான தொடர் தோழி!
ஆரோக்கியமுடன் நீ வாழி!! அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 21, 2010 7:46 pm

arun_vzp wrote:வேப்ப மரத்தின் குணங்களை கூறி பதிவுவிட்டமைக்கு மிக்க நன்றி அக்கா...
நன்றி அருண். அரசனும்... அரசியும்... 154550

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Nov 21, 2010 7:51 pm

வேம்பின் பயனை உலகறிய வைத்த ஆதிராவுக்கு நன்றி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக