ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு வரலாறு

+3
அன்பு தளபதி
ரபீக்
சிவா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பொது அறிவு வரலாறு  - Page 2 Empty பொது அறிவு வரலாறு

Post by சிவா Sun Oct 24, 2010 8:01 pm

First topic message reminder :

பொது அறிவு வரலாறு  - Page 2 Empty பொது அறிவு பொது அறிவு வரலாறு  - Page 2 Empty வரலாறு

சிந்து சமவெளி நாகரிகத்தின் காலம் கி.மு. 3250 முதல் 2750 வரை.

சிந்து சமவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம்.

மொஹஞ்சதாரோ என்ற வார்த்தைக்கு ‘இறந்தவர் மேடு’ என்று பொருள்.

சிந்து சமவெளி எழுத்துமுறை, ‘சித்திர எழுத்து முறை’.

சிந்து சமவெளி மக்கள் ‘பசுபதி’ என்ற ஆண் தெய்வத்தையும் ‘அன்னை’ என்ற பெண் தெய்வத்தையும் வழிபட்டனர்.

சிந்து சமவெளி மக்கள், உலோகங்களில் இரும்பையும், விலங்குகளில் குதிரையையும் அறிந்திருக்கவில்லை.

சிந்து சமவெளி நாகரிகத்துக்குப் பின் இந்தியாவில் தோன்றியது ஆரிய நாகரிகம்.

ஆரிய நாகரிகம் பற்றி அறிய உதவுவது: வேதங்கள், உபநிடதங்கள்.

வேதங்கள் ரிக், யஜூர், சாம, அதர்வண என 4 வகை.

வேதங்களில் பழைமையானது ரிக் வேதம்.

ரிக் வேதத்தில் 1,028 மந்திரங்கள் உள்ளன.

யஜூர் வேதம் சடங்குகள் பற்றிக் குறிப்பிடுகிறது.

இந்திய இசைக் கலைக்கான தொடக்கம், சாம வேதத்தில் காணப்படுகிறது.

அதர்வண வேதம் பில்லி, சூனியம் பற்றிக் குறிப்பிடுகிறது.

உபநிடதங்கள் மொத்தம் 108.

ரிக் வேத காலத்தில் ஆரியர்கள் சப்த சிந்து பகுதியில் குடியேறினார்கள்.

ஆரியர்கள், தங்கள் தலைவரை ‘ராஜன்’ என்று அழைத்தனர்.

ராஜனுக்கு அறிவுரை கூற, ‘சபா’ என்ற மூத்தோர் சபையும், ‘சமிதி’ என்ற பொது சபையும் இருந்தன.

முற்பட்ட வேதகாலத்தில் சமூகத்தில் வர்ணாஸ்ரமம் இருந்திருக்கவில்லை.

ரிக் வேத காலத்தில் சமூகத்தில் பெண்கள் நிலை உயர்ந்திருந்தது.

பிற்பட்ட வேதகாலத்தில் பெண்களின் நிலை பின்தங்கியது.

ஆரியர்கள், இயற்கைச் சக்திகளை கடவுளாக வழிபட்டனர்.

மகத நாட்டை நந்தர்கள் ஆண்டபோது கி.மு. 326ல் அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தார்.

இந்தியாவின் மீது படையெடுத்த முதல் ஐரோப்பியர், அலெக்ஸாண்டர்.

அலெக்ஸாண்டரை எதிர்த்துப் போரிட்ட இந்திய மன்னர் போரஸ் என்ற புருஷோத்தமன்.

மௌரிய வம்சத்தைத் துவக்கியவர் சந்திரகுப்த மௌரியர்.

சந்திரகுப்த மௌரியரின் அரசியல் குரு சாணக்கியர்.

அலெக்ஸாண்டரின் படைத் தலைவரான செலுக்கஸ் நிகேடரை சந்திரகுப்த மௌரியர் தோற்கடித்தார்.

மெகஸ்தனிஸ் எழுதிய நூல் இண்டிகா.

சந்திரகுப்த மௌரியரின் மகன் பிந்துசாரர்.

பிந்துசாரரின் மகன், சக்கரவர்த்தி அசோகர்.

கி.மு. 216ல் நடந்த கலிங்கப்போரில் அசோகர் கலிங்கத்தை வென்றார்.

கலிங்கப் போர் நிகழ்வுகளால் மனம் மாறிய அசோகர் புத்த மதத்தைத் தழுவினார்.

அசோகரைப் புத்த மதத்துக்கு மாற்றிய புத்த பிட்சு: உபகுப்தா.

மௌரியர்களின் முக்கிய கலைச் சின்னங்கள்: சாரநாத் சிம்மதூண், சாஞ்சி ஸ்தூபி.

சாணக்கியர் எழுதிய நூலான ‘அர்த்த சாஸ்திரம்’ அரசு நிர்வாகம் பற்றியது.

அசோகர் தனது கல்வெட்டுகளில் ‘தேவனாம்பிரிய பிரியதர்ஷி’ என்ற பெயரால் குறிக்கப்படுகிறார்.

‘மாஸ்கி’ என்ற இடத்திலுள்ள கல்வெட்டில் மட்டுமே அசோகர் என்ற பெயர் காணப்படுகிறது.

கி.பி. 78ல் அரசேற்ற குஷான அரசரான கனிஷ்கர், சக ஆண்டைத் தொடங்கினார்.

கனிஷ்கர் காலத்தில் சரகர், சுஷ்ருதர் என்ற இரு மருத்துவ மேதைகள் வாழ்ந்தனர்.

சுஷ்ருதர், ‘பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தை’ என அழைக்கப்படுகிறார்.

கனிஷ்கரின் தலைநகர் புருஷபுரம், இப்போது பெஷாவர்.

கனிஷ்கர், 4வது புத்த மாநாட்டை காஷ்மீரில் கூட்டினார்.

கனிஷ்கர் கால புத்தமதம் மஹாயானம்.

கனிஷ்கர் காலத்தில் அஷ்வகோஷர் ‘புத்த சரிதம்’ நூலை எழுதினார்.

கனிஷ்கர் புத்த மதத்தை பரப்பியதால் ‘இரண்டாம் அசோகர்’ என்று அழைத்தனர்.

குப்த வம்சத்தின் முதல் அரசர், ஸ்ரீகுப்தர்.

முதலாம் சந்திரகுப்தர் ‘மஹாராஜாதிராஜா’ என சிறப்புப் பெயர் பெற்றார்.

‘இந்திய நெப்போலியன்’, ‘கவிராஜா’, ‘சாஹாரி’ என்ற பட்டப் பெயர்கள் சமுத்திரகுப்தருக்கு உரியவை.

இரண்டாம் சந்திரகுப்தர் ‘விக்கிரமாதித்யர்’ என்ற சிறப்பு பெயர் பெற்றார்.

முதல் சீனப் பயணியான பாஹியான், இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவுக்கு வருகை தந்தார்.

‘நவரத்தினங்கள்’ என்ற ஒன்பது அறிஞர்கள் இரண்டாம் சந்திரகுப்தர் அவையை அலங்கரித்தனர்.

குப்தர் காலம் ‘இந்தியாவின் பொற்காலம்’ என அழைக்கப்படுகிறது.

நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் குமார குப்தர்.

குப்தர்கால ஓவியங்கள் மஹராஷ்டிராவில் ஒளரங்காபாத் அருகிலுள்ள அஜந்தா குகைகளில் காணப்படுகின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ‘தியோகார்’ என்ற இடத்தில் அமைந்துள்ள தசாவதாரக் கோயில், குப்தர் காலத்தைச் சேர்ந்தது.

‘மெஹருலி’ என்ற இடத்திலுள்ள துருப்பிடிக்காத இரும்புத்தூண் குப்தர் கால கலைச்சின்னங்களில் ஒன்று.

குப்தர்காலம் இந்து சமயம் மற்றும் சம்ஸ்கிருத மொழியின் மறுமலர்ச்சி காலமாகும்.

வர்த்தமான அரசர்களில் புகழ்பெற்றவர் ஹர்ஷ வர்த்தனர்.

ஹர்ஷரின் தலைநகரம் தானேஷ்வர்.

'ரத்னாவளி', 'பிரியதர்ஷிகா', 'நாகநந்தம்' ஆகியவை ஹர்ஷர் எழுதிய நூல்கள்.

ஹர்ஷரின் அவைப்புலவரான பாணபட்டா, 'ஹர்ஷசரிதம்', 'காதம்பரி' ஆகிய நூல்களை எழுதினார்.

சீனப் பயணி யுவான் சுவாங், ஹர்ஷரின் அவைக்கு வந்தார்.

ஹர்ஷர் காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் புகழ்பெற்று விளங்கியது.

யுவான் சுவாங் எழுதிய பயண நூல் ‘சியூக்கி’.

ஹர்ஷரை ‘சகோலதாரபதநாதா’ என்று அழைத்தவர் இரண்டாம் புலிகேசி.

பொது அறிவு வரலாறு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது அறிவு வரலாறு  - Page 2 Empty Re: பொது அறிவு வரலாறு

Post by சிவா Sun Oct 24, 2010 8:19 pm

காமராஜரின் அரசியல் குரு தீரர் சத்தியமூர்த்தி.

காந்திஜியின் குரு கோபாலகிருஷ்ண கோகலே.

பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய்.

காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா.

போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவரெட்டி.

இரண்டு முறை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜேந்திரபிரசாத்.

லாலா லஜபதி ராயின் படுகொலைக்குக் காரணமான 'சாண்டர்ஸ்' என்ற போலீஸ்காரரைக் கொன்றவர் பகத்சிங்.

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு உத்தரவிட்ட பஞ்சாப் கவர்னர் மைக்கேல் ஓ.டயரை கொன்றவர் உத்தம்சிங்.

இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட ஆண்டு 1885.

முஸ்லிம் லீக் தொடக்கப்பட்ட ஆண்டு 1906.

சுயராஜ்ய கட்சியைத் தொடங்கியவர்கள் சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு.

பார்வார்டு பிளாக் கட்சியைத் தொடங்கியவர் சுபாஷ் சந்திரபோஸ்.

ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்ற ஆண்டு 1920.

சட்ட மறுப்பு இயக்கம் நடைபெற்ற ஆண்டு 1930.

கிலாபத் இயக்கத்தை 1920ல் தொடங்கியவர்கள் முகமது அலி, சௌகத் அலி சகோதரர்கள்.

ராஷ்டிரிய சுயம் சேவக்(RSS) அமைப்பை 1925ல் தொடங்கியவர் ஹெட்கேவார்.

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு (Loksabha) தேர்ந்தெடுக்கப்படுவதற்கான குறைந்தபட்ச வயது 25.

மாநிலங்களவைக்கு (Rajya sabha) தேர்ந்தெடுக்கப் படுவதற்கான குறைந்தபட்ச வயது 30.

உச்சநீதிமன்ற நீதிபதியின் ஓய்வு பெறும் வயது 65.

உயர்நீதி மன்ற நீதிபதியின் ஓய்வு வயது 62.

இந்தியாவின் தேசிய வருமானத்தைக் கணக்கிடுவது மத்திய புள்ளியியல் நிறுவனம்.

ஐந்தாண்டுத் திட்டங்களைத் தயாரிப்பது திட்ட ஆணையம்.

இந்திய தேசிய ராணுவத்தை (INA) தொடங்கியவர் சுபாஷ் சந்திரபோஸ்.

இந்திய சுதேச சமஸ்தானங்களை இணைத்தவர் சர்தார் வல்லபபாய் படேல்.

ஒரு ரூபாய் நோட்டில் கையெழுத்து இடுபவர் நிதித்துறைச் செயலாளர்.

பிற ரூபாய் நோட்டுகளில் கையெழுத்து இடுபவர் ரிசர்வ் வங்கியின் கவர்னர்.

பொது அறிவு வரலாறு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது அறிவு வரலாறு  - Page 2 Empty Re: பொது அறிவு வரலாறு

Post by மஞ்சுபாஷிணி Sun Oct 24, 2010 8:37 pm

அருமையான பயனுள்ள தகவல்கள் சிவா....

கோன் பனேகா கரோர்பதி போக இது போன்று பொது அறிவுக்கேள்விகள் பற்றி விவரங்கள் அறிய இந்த பகிர்வு மிகவும் உதவியாக இருக்கும்பா....

அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பொது அறிவு வரலாறு  - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பொது அறிவு வரலாறு  - Page 2 Empty Re: பொது அறிவு வரலாறு

Post by Aathira Sun Oct 24, 2010 10:44 pm

//காமராஜரின் அரசியல் குரு தீரர் சத்தியமூர்த்தி.//

தீரர் சத்தியமூர்த்தியின் அரசியல் குரு காமராசர் என்று படித்துள்ளேன் சிவா.

ஒரு முறை சென்னை சர்வகலா சாலையின் துணைவேந்தர் பொறுப்பை ஆங்கில அரசு தீரர் சத்தியமூர்த்திக்கு கொடுக்க முன் வந்த போது பலர் அவரை அப்பொறுப்பை ஒப்புக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். ஆனால் சத்திய மூர்த்தி காமராசரிடம் ஆலோசனை கேட்டாராம். காமராசர் தனிப்பட்டவர்கள் சட்ட மறுப்பு வரப்போகிறது. துணைவேந்தர் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் உங்கள் அரசியல் வாழ்க்கை என்னாவது? அதனால் கண்டிப்பாக ஒத்துக்கொள்ளக் கூடாது என்று கூறினாராம். சத்தியமூர்த்தியும் அப்படியே நடந்தாராம். இது போல பல சமயங்களில் காமராசரிடம் அவர் ஆலோசனை கேட்பது வழக்கமாம். காமராசரும் அவரை சூழ்ச்சி வலைகளில் விழாமல் பலமுறை தப்பிக்க வைத்துள்ளாராம். (திரு. முருக. தனுஷ்கோடி, காமராசரின் இனிய நண்பர், நவசக்தி இதழின் ஆசிரியர், காமராசரைப்போலவே திருமணம் செய்து கொள்ளாமல் காமராசருடன் இணைந்து நாட்டுப்பணி ஆற்றியவர்)

தவறிருந்தால் மன்னிக்கவும்.

பொது அறிவு வரலாறு  - Page 2 Aபொது அறிவு வரலாறு  - Page 2 Aபொது அறிவு வரலாறு  - Page 2 Tபொது அறிவு வரலாறு  - Page 2 Hபொது அறிவு வரலாறு  - Page 2 Iபொது அறிவு வரலாறு  - Page 2 Rபொது அறிவு வரலாறு  - Page 2 Aபொது அறிவு வரலாறு  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பொது அறிவு வரலாறு  - Page 2 Empty Re: பொது அறிவு வரலாறு

Post by சிவா Mon Oct 25, 2010 12:36 am

3. அரசியல் குரு

மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியும் ஆன சத்தியமூர்த்தி அவர்களைத் தான் காமராஜர் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல்சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரான போது காமராஜரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரஸ் கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராஜர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்கு தான் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல் முதலமைச்சர் ஆனபோதும் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டுத் தான் தன் பணியைத் தொடங்கினார்.

http://wapedia.mobi/ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D

இங்கு இப்படித்தான் அக்கா உள்ளது!

Last edited by சிவா on Mon Oct 25, 2010 1:01 am; edited 1 time in total

பொது அறிவு வரலாறு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது அறிவு வரலாறு  - Page 2 Empty Re: பொது அறிவு வரலாறு

Post by Aathira Mon Oct 25, 2010 12:57 am

சிவா wrote:3. அரசியல் குரு

மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியும் ஆன சத்தியமூர்த்தி அவர்களைத் தான் காமராஜர் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல்சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரான போது காமராஜரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரஸ் கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராஜர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்கு தான் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல் முதலமைச்சர் ஆனபோதும் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டுத் தான் தன் பணியைத் தொடங்கினார்.

http://wapedia.mobi/ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%௮

இங்கு இப்படித்தான் அக்கா உள்ளது!
அதனால்தான் சிவா முதலிலேயே தவறிருந்தால் மன்னிக்கவும் என்று கூறிவிட்டேன். நான் படித்ததும் உண்மை. தாங்கள் படித்ததும் உண்மை. கட்டுரை என் கையில் உள்ளது. எழுதியவர்களில் யாரோ ஒருவர் தவறாக எழுதியிருக்க வேண்டும். இதில் நம் தவறு எதுவும் இல்லை. (எனக்கு அந்த லின்க் திறக்கவில்லை)

பொது அறிவு வரலாறு  - Page 2 Aபொது அறிவு வரலாறு  - Page 2 Aபொது அறிவு வரலாறு  - Page 2 Tபொது அறிவு வரலாறு  - Page 2 Hபொது அறிவு வரலாறு  - Page 2 Iபொது அறிவு வரலாறு  - Page 2 Rபொது அறிவு வரலாறு  - Page 2 Aபொது அறிவு வரலாறு  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பொது அறிவு வரலாறு  - Page 2 Empty Re: பொது அறிவு வரலாறு

Post by சிவா Mon Oct 25, 2010 1:04 am

Aathira wrote:
அதனால்தான் சிவா முதலிலேயே தவறிருந்தால் மன்னிக்கவும் என்று கூறிவிட்டேன். நான் படித்ததும் உண்மை. தாங்கள் படித்ததும் உண்மை. கட்டுரை என் கையில் உள்ளது. எழுதியவர்களில் யாரோ ஒருவர் தவறாக எழுதியிருக்க வேண்டும். இதில் நம் தவறு எதுவும் இல்லை. (எனக்கு அந்த லின்க் திறக்கவில்லை)

இருவரும் ஒருவரை ஒருவர் குருவாக எண்ணிக் கொண்டுள்ளார்கள் போலும்! அதனால்தான் இவ்வாறு செய்திகள் வந்துள்ளது!

http://wapedia.mobi/ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D

இதுதான் சரியான முகவரி அக்கா!

பொது அறிவு வரலாறு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது அறிவு வரலாறு  - Page 2 Empty Re: பொது அறிவு வரலாறு

Post by கலைவேந்தன் Mon Oct 25, 2010 1:04 am

இருவருமே சளைத்தவர் இல்லை என்பதால் இருவருமே ஒருவருக்கொருவர் குரு என்று முடிவுக்கு வரலாம்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பொது அறிவு வரலாறு  - Page 2 Empty Re: பொது அறிவு வரலாறு

Post by சிவா Mon Oct 25, 2010 1:06 am

கலை wrote:இருவருமே சளைத்தவர் இல்லை என்பதால் இருவருமே ஒருவருக்கொருவர் குரு என்று முடிவுக்கு வரலாம்..!

அப்படியே ஆகட்டும் ஜீ!

பொது அறிவு வரலாறு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது அறிவு வரலாறு  - Page 2 Empty Re: பொது அறிவு வரலாறு

Post by Aathira Mon Oct 25, 2010 1:31 am

சிவா wrote:
Aathira wrote:
அதனால்தான் சிவா முதலிலேயே தவறிருந்தால் மன்னிக்கவும் என்று கூறிவிட்டேன். நான் படித்ததும் உண்மை. தாங்கள் படித்ததும் உண்மை. கட்டுரை என் கையில் உள்ளது. எழுதியவர்களில் யாரோ ஒருவர் தவறாக எழுதியிருக்க வேண்டும். இதில் நம் தவறு எதுவும் இல்லை. (எனக்கு அந்த லின்க் திறக்கவில்லை)

இருவரும் ஒருவரை ஒருவர் குருவாக எண்ணிக் கொண்டுள்ளார்கள் போலும்! அதனால்தான் இவ்வாறு செய்திகள் வந்துள்ளது!

http://wapedia.mobi/ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D

இதுதான் சரியான முகவரி அக்கா!

அப்படித்தான் இருக்க வேண்டும் சிவா. இல்லா விட்டால் இப்படி எழுத முடியாது. கலை சொல்வது போல இருவருமே மண்டைச் சுரப்பு அதிகம் உள்ளவர்கள் என்பாகள். இந்தக் காலா காந்திக்குக் கிடைத்த நல் நண்பர் தீரர் சத்திய மூர்த்தி. நண்பர்கள் ஒருவரை ஒருவர் கலந்து ஆலோசித்தல் என்பது ஒருதலையாக இருக்க் முடியாதே.

பொது அறிவு வரலாறு  - Page 2 Aபொது அறிவு வரலாறு  - Page 2 Aபொது அறிவு வரலாறு  - Page 2 Tபொது அறிவு வரலாறு  - Page 2 Hபொது அறிவு வரலாறு  - Page 2 Iபொது அறிவு வரலாறு  - Page 2 Rபொது அறிவு வரலாறு  - Page 2 Aபொது அறிவு வரலாறு  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பொது அறிவு வரலாறு  - Page 2 Empty Re: பொது அறிவு வரலாறு

Post by selvam1986 Tue Aug 12, 2014 2:15 pm

nice
selvam1986
selvam1986
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 12/08/2014

Back to top Go down

பொது அறிவு வரலாறு  - Page 2 Empty Re: பொது அறிவு வரலாறு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum