ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_c10அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_m10அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_c10 
Dr.S.Soundarapandian
அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_c10அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_m10அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_c10 
heezulia
அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_c10அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_m10அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_c10 
i6appar
அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_c10அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_m10அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_c10 
Jenila
அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_c10அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_m10அருஞ்சுனை காத்த ஐயனார் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருஞ்சுனை காத்த ஐயனார்

3 posters

Go down

அருஞ்சுனை காத்த ஐயனார் Empty அருஞ்சுனை காத்த ஐயனார்

Post by சிவா Mon Aug 10, 2009 5:36 pm

திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றுக்குத் தெற்கே உள்ள பகுதியை மானவீர வளநாடு என்று சொல்கின்றனர். அந்தப் பகுதியில் உள்ளது அருஞ்சுனை காத்த ஐயனார் கோயில். ஐயனார் பலர் இருந்து வருகின்றனர். அவர்களுள் ஒருவர் அருஞ்சுனை காத்த ஐயனார்.

மானவீர வளநாட்டில் இடையர் குலத்தில் ஒரு விதவைப் பெண் இருந்தாள். அவள் சிறுவயதிலேயே தன் கணவனை இழந்தவள். அது முதற்கொண்டு வேறு ஆணைப் பார்த்துக் கூட அறியாதவள். விடிவதற்கு முன்பாகவே எழுந்து ஊருக்கு அருகில் இருக்கும் சுனைக்குச் சென்று குளித்து அங்கிருக்கும் ஐயனாரை வழிபட்டு, சுனையில் இருந்து குடத்தில் தண்ணீர் எடுத்து வந்துவிடுவாள்.

அந்தச் சுனையில் கரையில் ஒரு மாமரம் இருந்து வந்தது. அதில் ஒரே ஒரு மாங்கனி இருந்தது. அதை மிகவும் கவனமாகக் காத்து வந்தனர் அந் நாட்டுக் காவலர்கள். அந்த மாங்கனிக்கு அப்படியொரு மகத்துவம் இருப்பதாக அந் நாட்டு அரசவையில் இருக்கும் சோதிடன் சொல்லி வைத்ததால் அரசனும் அம் மாம்பழத்தைக் காக்க வேண்டும் என்று காவலர்களை நியமித்திருந்தான்.

அங்கு மாமரம் இருக்கின்றது. அதில் எத்தனை பழம் இருக்கிறது என்றெல்லாம் அந்த விதவைப் பெண்ணுக்குத் தெரியாது. அவள் எப்போதும் போல் அன்றும் சுனைக்குச் சென்று குளித்துவிட்டு ஐயனாரை வழிபட்டுத் தான் கொண்டு சென்ற குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு விடிவதற்குள் வீடு திரும்பிவிட்டாள்.

விடிந்ததும் காவலர்கள் வந்தனர். சுற்றிப் பார்த்தனர் யாரும் இல்லை. மாமரத்திடம் வந்தவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நேற்று மாலை வரை இருந்த மாம்பழத்தை இன்று காணவில்லை. இது அரசனுக்குத் தெரிந்தால் நம் தலை தப்பாது என்று, காவலர்கள் அருகில் இருக்கும் இடையர்குடிக்கு ஓடினார்கள். அங்கிருந்தவர்களையெல்லாம் அழைத்து மாம்பழத்தைத் திருடியவர்கள் யார் என்று மிரட்டினார்கள். ஒரு பாவமும் அறியாதவர்கள் விழித்தனர். ''எங்களுக்கு ஒன்றும் தெரியாது. நாங்கள் அந்தச் சுனை பக்கம் கூடப் போவதில்லை'' என்று சொன்னார்கள். ''உண்மையைச் சொல்லவில்லை என்றால் அரசனிடம் சொல்லி ஊரையே அழித்துவிடுவோம்'' என்று காவலர்கள் மிரட்டினர். அந்த விதவையின் தாய் தந்தையருக்குப் பயம் அதிகமாகிவிட்டது. ''ஐயா எங்கள் மகள் அந்தச் சுனைக்குப் போவாள். தண்ணீர் கொண்டு வருவாள். ஆனால், இந்த மாதிரிக் காரியம் எல்லாம் செய்யமாட்டாள்'' என்று கூறினர்.

காவலர்களுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது போல் ஆனது. பழியை அவள் மீது போட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் ''சரி அவளைக் கூட்டி வாருங்கள்'' என்றனர். விதவையின் தாய் தந்தையர் பயந்து போயினர். ''ஐயா, என் மகள் இதுவரை எந்த வேற்று ஆணையும் பார்த்ததில்லை. பகலில் அவள் எங்கும் வெளியில் வருவதில்லை. நீங்கள் வேண்டுமானால் எங்கள் வீட்டில் வந்து சோதனை செய்து பாருங்கள்'' என்றனர். உடனே காவலர்களும் அவர்களின் வீட்டிற்குப் போய்த் தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. அவள் தண்ணீர் கொண்டு வந்த குடத்திலும் தேடினர். பார்த்தால் அதில்தான் மாம்பழம் இருக்கிறது. மாம்பழத்தைக் கண்டெடுத்த மகிழ்ச்சியில் கோபமும் சேர்ந்து கொள்ள காவலர்கள் சத்தம் போட ஆரம்பித்தனர். ''பழத்தைத் திருடிக் கொண்டு வந்ததல்லாமல் அறைக்குள் ஒளிந்திருக்கிறாளா? அவளை வெளியே வரச் சொல்லுங்கள்'' என்று சத்தமிட்டனர். விதவையின் தாய் தந்தையருக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படி எப்படியோ கெஞ்சிப் பார்த்தனர். காவலர்கள் விடுவதாக இல்லை.

என்ன செய்வது? எப்படி அந்த மாம்பழம் தன் குடத்துக்குள் வந்தது என்று ஒன்றும் விளங்காமல் தவித்தாள் விதவை. பாவம் அவள் தண்ணீர் எடுக்கும்போது அவளுக்கும் தெரியாமல் மாம்பழம் குடத்துக்குள் வந்தது அவளுக்கெப்படித் தெரியும். அரசனுக்கு முன் நின்று நியாயத்தைச் சொல்வதென்று முடிவெடுத்து அரசவைக்குப் போனாள்.

அரசவை கூடிவிட்டது. காவலர்கள் ''மாம்பழத்தைத் திருடியவள் இந்தப் பெண்தான்'' என்று கூறினர். விதவைப் பெண், ''ஐயா, நான் சுனையில் குளித்து, தண்ணீர் எடுத்து வருவேனே தவிர அங்கு மாமரம் இருந்ததையோ, அதில் மாம்பழம் பழுத்திருந்ததையோ நான் அறியேன்'' என்றாள். காவலர்கள், ''இவள் மட்டுமே அங்கு போவாள். வேறு யாரும் அந்தத் திசைக்குக் கூடப் போனதில்லை. மேலும் அந்தப் பழத்தை இவள் தண்ணீர் கொண்டு வந்த குடத்திலிருந்து எடுத்தோம்'' என்று கூறினர். விதவையால் தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ள முடியவில்லை. அவளுக்குத் தண்டனை கொடுப்பது என்று அரசவை முடிவெடுத்தது.

ஐயனார் மாற்றுருவில் தோன்றி அரசனிடம் அவள் குற்றமற்றவள் என்று கூறினார். விதவைக்குத் தனக்காக வந்து சாட்சி சொன்னது ஐயனார் என்று தெரிந்தது. அரசவை, ஐயனாரின் சாட்சியை ஏற்காமல் தண்டனை கொடுத்தது. கோபம் கொண்ட அந்த விதவைப் பெண், ''என் மேல் அபாண்டமாகக் குற்றம் சாட்டியதால் இந்த நாடே மண்மாரி பொழிந்து அழிந்து போகும். எனக்காக நியாயத்தைச் சொன்ன ஐயனார், ஐயனாரின் சுனை தப்பிக்கும்'' என்று கூறி மண்வாரித் தூற்றினாள். மண்மாரி பொழிந்து நாடே அழிந்தது. ஐயனாரும் சுனையும் தப்பின. அந்தப் பத்தினி விதவையிடமிருந்து சுனையைக் காத்ததால் ஐயனார் அருஞ்சுனை காத்த ஐயனார் என்ற பெயர் பெற்றார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அருஞ்சுனை காத்த ஐயனார் Empty Re: அருஞ்சுனை காத்த ஐயனார்

Post by VIJAY Mon Aug 10, 2009 5:57 pm

எப்படி திறந்த புத்தகமாக இருக்கிறிர்கள்......
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அருஞ்சுனை காத்த ஐயனார் Empty Re: அருஞ்சுனை காத்த ஐயனார்

Post by சிவா Mon Aug 10, 2009 6:00 pm

vijaydga wrote:எப்படி திறந்த புத்தகமாக இருக்கிறிர்கள்......

திறந்த புத்தகமா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அருஞ்சுனை காத்த ஐயனார் Empty Re: அருஞ்சுனை காத்த ஐயனார்

Post by Dr.S.Soundarapandian Wed Jan 17, 2024 6:00 pm

நீதியைக் காப்பாற்ற , அன்றும் இன்றும் , படாத பாடு படவேண்டியுள்ளது !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அருஞ்சுனை காத்த ஐயனார் Empty Re: அருஞ்சுனை காத்த ஐயனார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum