ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்

+5
ராஜா
சாந்தன்
அருண்
V.Annasamy
balakarthik
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 Empty நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்

Post by balakarthik Wed Oct 20, 2010 12:39 pm

First topic message reminder :

உலகிலே மிகக் கடினமான விஷயம் எதுவென்று என்னைக் கேட்டால் எளிதில் சொல்லிவிடுவேன், தண்ணியடிக்கும் பழக்கமில்லாத ஒருவன் தண்ணி பார்ட்டிக்கு செல்வது என்று. சிறுவயதில் இருந்தே எனக்கு இந்த நல்லப் பழக்கம் உண்டு. அதாங்க தண்ணியடிக்காமல் இருப்பது. அப்போது எனக்கு 18 வயது(தங்கம்.. உனக்கு இப்பவும் 18 தாண்டா). கல்லூரி நண்பன் ஒருவன் பார்ட்டி தருவதாக சொன்னான். அதுவும் தண்ணி பார்ட்டிடா என்று அழுத்தி சொன்னான். எனக்கு விருப்பமில்லை என்றேன். இன்னொரு நண்பன் தான் சும்மா வந்து வேடிக்கை பாரு மச்சி. கலக்கலா இருக்குமென்று பவர் சோப் போட்டு பிரயின் வாஷ் செய்தான். அதைத் தொடர்ந்து நான் வருவதாகவும் ஆனால் தண்ணியடிக்க சொல்லி தொல்லைப் பண்ணக்கூடாதென்றும் பார்ட்டி தருபவனிடம் சொன்னேன். அது உன் இஷ்டம் மச்சி என்றவனிடம் என்னடா ஸ்பெஷல் என்றேன். ”தெரியாதா மச்சி. போன வாரம் மொத மொதல்லா சரக்கடிச்சு பெரிய மனுஷன் ஆயிட்டண்டா” என்றான்.

அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வைத் தொடர்ந்து பல பார்ட்டிகளுக்கு செல்லத் தொடங்கினேன். ஏ.சி பாரில் அன்லிமிட்டெட் சைட் டிஷ் என்பதால் டின்னரையும் அங்கேயே முடித்து விடுவது என் வாடிக்கையாகிவிட்டது. எவ்வளவு சைட் டிஷ் வைத்தாலும் சில நிமிடங்களில் அரைத்து தள்ளியதால் கிரைண்டர் என்ற பட்டப்பெயரும் கிடைத்தது. இது என்னடா ஃப்ரீயா கொடுக்கிறத சாப்பிட்டா கூடவே ஃப்ரீயா டைட்டிலும் தர்றாங்களேன்னு ஆச்சரியமாக இருந்தது. உண்மையை சொல்லப் போனால் நான் இது போன்ற பார்ட்டிகளுக்கு செல்ல முக்கிய காரணம் சைடு டிஷ் மட்டும் அல்ல. சரக்கு உள்ளே போகும் வரை கந்தசாமியாக இருப்பவன் முதல் கல்ப் அடித்ததும் கம்யூனிஸ்டாக மாறுவான். ஸ்மால் அடித்தவன் சுவாமிகள் ஸ்ரீஸ்ரீ ஆயா பகவானின் லீலைகளை எடுத்துரைப்பான். லார்ஜ் அடித்தவன் இந்தியாவின் லா& ஆர்டர் குறித்து கவலை தெரிவிப்பான். லைட்ஸ் ஆன் சுனிலை மட்டுமே படிப்பவன் என்று நினைக்கும் ப்ரகஸ்பதி தோப்பில் முகமது மீரானைத் தெரியுமா என்று மிரள வைப்பான்.

இந்த வயதில், அதாங்க 18 வயதில் தண்ணியடிப்பவர்களில் இரண்டு பேராவது காதல் தோல்வியில் இருப்பார்கள். அவர்களின் ஃபீலிங்க்ஸ் கொடுமை சொல்லி மாளாது. நாத்தம் புடிச்ச குப்பைத்தொட்டிக்கு பக்கத்தில் அவளைப் பார்த்ததில் தொடங்கி, அவளது கூந்தல் மணம் வரை மணிக்கணிக்கில் சிலாகிப்பார்கள். தண்ணியடிக்காமல் ஸ்டெடியாக இருக்கும் என்னைப் போன்றவர்கள் தான் அவர்களின் டார்கெட். அந்தக் கதைக்கெல்லாம் பல சமயம் ரிப்பீட் ஆடியன்சாக இருந்த கொடுமையும் நேர்ந்ததுண்டு. இரண்டாம் முறை கேட்கும்போது அந்த கதை நமக்கு தெரியாதது போல் நடிக்க வேண்டும். இல்லையெனில் நாமும் அந்த ஜீலியட்டுக்கு நூல் விட்டதாக நினைத்துக் கொண்டு ரோமியோ நம் மீது பாய்ந்துவிடும் அபாயமுண்டு. கடைசியாக அவர் ஆஃபாயில் போடும் சமயம் வந்ததும் ”விடு மச்சி. உனக்குன்னு ஒருத்தி இனிமேலா பொறக்க போறா?” என்ற டயலாக்கோடு நகர்ந்து விட வேண்டும். இல்லையெனில் கறை நல்லது விளம்பரத்தில் நம் கதையும் வந்துவிடக்கூடும்.

காதல் கதைகள் பெரும்பாலும் சுவாரஸ்யமாக இருந்துவிடுமென்பதால் தப்பித்து விடலாம். ஆனால் தப்பித் தவறி அரசியல் ஆர்வலரிடம் மாட்டிக் கொண்டால் செத்தோம். வட்ட செயலாளரின் தகிடுதத்தத்தில் ஆரம்பிக்கும் பேச்சு பில்கேட்ஸுக்கும் சிதம்பரத்திற்கும் இடையே நடந்த டீலிங் வரை செல்லும். மாட்டையும் மக்களையும் வைத்து கம்யூனிசத்திற்கும் ஃபாஸிஸத்திற்கும் இன்னும் பல இஸத்திற்கும் விளக்கம் சொல்ல ஆரம்பித்தால் நம் மூளையில் நெப்போலியன் நர்த்தனம் ஆடத் தொடங்குவார். “உன்கிட்ட ரெண்டு மாடு இருக்கு. ஒன்னை பக்கத்தில் இருக்கிறவன்கிட்ட கொடுத்தா அது சோஷலிசம். ரெண்டு மாடையும் அரசே எடுத்துக்கிட்டு உனக்கு பால மட்டும் ஃப்ரீயா கொடுத்தா அது கம்யூனிஸம். அந்த பாலுக்கு காசு கேட்டா அது ஃபாஸிஸம்.ஒரு மாட்ட வித்து ஒரு காளை மாட்ட நீ வாங்கினா அது கேப்பிட்டிலிஸம்” இப்படி போகும் இஸ ரயிலில் இருந்து ரன்னிங்கில் இறங்கி வரத் தெரியாதவர்கள் இது போன்ற பார்ட்டிகளுக்கு போகாமல் இருப்பதே உசிதம்.

ரன்னிங்கில் இறங்கி இந்தப் பக்கம் பார்த்தால் பாபா முத்திரையோடு நித்திரையில் ஆழ்ந்திருப்பார் ஆன்மிக குடிகாரர். தெரியாமல் அவரை எழுப்பிவிட்டால் அவ்வளவுதான். இதெல்லாம் சிற்றின்பம். பதரே பேரின்பம் அவனிடத்தில் உண்டு என மேலே கையை காட்டுவார்கள். ஆனால் அவர் கண்கள் கீழ் நோக்கி இருக்கும். நாம் மேலேதான் பார்க்க வேண்டும். கட்டாயம் ஒரு குரு-சீடன் கதை சொல்வார். நாமும் பயபக்தியுடம் கேட்டுக் கொள்ள வேண்டும். ஓஷோ தெரியுமா என்றால் ஆம் என்று சொல்லக்கூடாது. தவறி சொல்லிவிட்டால் நீ நினைக்கிற மாதிரியான ஆளில்ல அவரு என்று நம் மனதில் இருப்பதைப் புட்டு புட்டு வைப்பார். இன்பம்-துன்பம்,நல்லது-கெட்டது, ஆசை-ஏமாற்றம் என போகும் பிரசங்கத்தை லாவகமாக முடிக்க தெரிந்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் இந்த பிரபஞ்சம் போல அதுவும் முடிவில்லாமல் போய்க் கொண்டேயிருக்கும்,

குடிக்கும் வரை கோலாகலமாக செல்லும் வைபவம் திரும்பும் வழியில் சொதப்பும். அத்தனை பேரும் பிரச்சினை செய்ய மாட்டார்கள். ஆனால் நிச்சயம் ஒருவன் செய்துவிடுவான். அவனை பத்திரமாக ஹாஸ்டலில் சேர்க்க வேண்டிய தார்மீக கடமை ஓசியில் சைட் டிஷ் சாப்பிட்டவனுக்கே அதிகம். வரும் வழியில் தேமேவென மேமேன்னு கத்திக் கொண்டிருக்கும் ஆட்டிடம் சென்று பேசத் தொடங்குவார் அன்றைய மேன் ஆஃப் தி மேட்ச். ஆட்டை, ராஜ பாளையத்து நாய் என நினைத்து வீரமாக அதன் எதிரில் நின்று பழங்கதைகள் பேசுவார்.”அன்னைக்கு என்ன துரத்துன இல்ல. இப்ப என் மச்சான் கூட இருக்கான். தொரத்து பார்ப்போம்”என அருகிலிருக்கும் ஏதாவது ஒரு மச்சான் மீது கை போட்டுக் கொள்வார். அரைகுறை மப்பில் இருக்கும் மச்சானும் மாப்பிள்ளைக்காக அந்த ஆட்டை மிரட்டுவார். அது மிரண்டு ஓடும். விடாமல் துரத்தி மாப்பிள்ளையின் நன்மதிப்பை பெற்றிடுவார் மச்சான். மறுநாள் ஏண்டா ஆட்டை துரத்தினன்னு யாராவது கேட்டா, மச்சான் அந்த சமயத்துல மட்டன் கேட்டான். கடையெல்லாம் மூடிட்டாங்க. அதுக்காக மச்சான்கிட்ட இல்லைன்னு சொல்ல முடியுமா என்று தயார் செய்து வைத்திருக்கும் புனைவை பிரசுரிப்பார்கள். அவசரப்பட்டு சிரித்துவிட்டால் அடுத்த பார்ட்டியில் காராசேவு கிடைக்காதென்பதால் நானும் வாய் மூடி இருந்துவிடுவேன்.

இவ்வளவு கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு கால் கிலோ மிக்சருக்கும், வறுத்த கடலைக்கும் நான் பட்ட பாட்டைக் கண்டு எனக்கு வெறுப்பு வந்தது. என்னடா செய்யலாமென்று பல ஆங்கிளில் யோசித்து ஒரு நல்ல நாளில் ஒரு நல்ல முடிவு எடுத்தேன். எடுத்த முடிவின்படி கச்சிதமாக காரியத்தை முடித்த பின் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று இன்னொரு நண்பனையும் பார்ட்டிக்கு அழைத்தேன். என்னடா விசேஷம் பார்ட்டியெல்லாம் தர்ற என்றான்.

”தெரியாதா மச்சி. போன வாரம் மொத மொதல்லா சரக்கடிச்சு பெரிய மனுஷன் ஆயிட்டண்டா”என்றேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 Empty Re: நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்

Post by கார்த்திக் Wed Oct 20, 2010 6:26 pm

balakarthik wrote:
கார்த்திக் wrote:
balakarthik wrote:

என்ன ரொம்ப புகழாத நண்பா எனக்கு இந்த பப்ளிக்குட்டி எல்லாம் புடிக்காது

பப்ளிக்ல குட்டியா எங்க எங்க

இங்கே


நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 2584ka9_26

அட நாய்க்குட்டிய ..... அட போப்பா .. சோகம் சோகம் சோகம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 Empty Re: நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்

Post by balakarthik Sun Sep 04, 2011 2:20 pm

கார்த்திக் wrote:அட நாய்க்குட்டிய ..... அட போப்பா .. சோகம் சோகம் சோகம்

அதுவும் குட்டித்தானே புன்னகை புன்னகை


ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 Empty Re: நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்

Post by rameshnaga Sun Sep 04, 2011 3:22 pm

"excellent" ஆக இருக்கிறது பாலாகார்த்திக்..உங்களுடைய கதை சொல்லும் யுக்தி. நான் ரொம்பவும் ரசித்துப் படித்தேன். நன்றி! உங்களின் பகிர்வுக்கு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 Empty Re: நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்

Post by balakarthik Sun Sep 04, 2011 4:54 pm

rameshnaga wrote:"excellent" ஆக இருக்கிறது பாலாகார்த்திக்..உங்களுடைய கதை சொல்லும் யுக்தி. நான் ரொம்பவும் ரசித்துப் படித்தேன். நன்றி! உங்களின் பகிர்வுக்கு.

நன்றி நாகா சார் நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 Empty Re: நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்

Post by சிவா Sun Sep 04, 2011 5:03 pm

இந்தக் கட்டுரையைப் படிக்கும் பொழுது, நானும் பாரில் அமர்ந்து இந்தக் (குடிகாரக் கலாட்டாக்களை) காட்சிகளை நேரில் கண்டது போல் உணர்வை ஏற்படுத்திவிட்டது. பாராட்டுக்கள் பாலா.


நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 Empty Re: நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்

Post by balakarthik Sun Sep 04, 2011 5:07 pm

சிவா wrote:இந்தக் கட்டுரையைப் படிக்கும் பொழுது, நானும் பாரில் அமர்ந்து இந்தக் (குடிகாரக் கலாட்டாக்களை) காட்சிகளை நேரில் கண்டது போல் உணர்வை ஏற்படுத்திவிட்டது. பாராட்டுக்கள் பாலா.

என்னது இது கட்டுரையா உண்மைய சொல்லுங்க நீங்க சும்மா உட்கார்ந்திருந்தீங்களா நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 676261 நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 676261


ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 Empty Re: நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்

Post by இளமாறன் Sun Sep 04, 2011 5:08 pm

நல்ல கட்டுரை சைடு டிஷ்க்கு ஆசை பட்டு போய் இப்படி உட்கார்ந்து இருந்த எப்படி இருக்குமுணு அழகா சொல்றீங்க நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 677196 நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 Empty Re: நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்

Post by சிவா Sun Sep 04, 2011 5:10 pm

balakarthik wrote:
சிவா wrote:இந்தக் கட்டுரையைப் படிக்கும் பொழுது, நானும் பாரில் அமர்ந்து இந்தக் (குடிகாரக் கலாட்டாக்களை) காட்சிகளை நேரில் கண்டது போல் உணர்வை ஏற்படுத்திவிட்டது. பாராட்டுக்கள் பாலா.

என்னது இது கட்டுரையா உண்மைய சொல்லுங்க நீங்க சும்மா உட்கார்ந்திருந்தீங்களா நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 676261 நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 676261

ஏன்னா, நானும் குடிக்க மட்டேன் பாஸ். ஒன்லி டீ, காபி!


நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 Empty Re: நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்

Post by இளமாறன் Sun Sep 04, 2011 5:14 pm

சிவா wrote:
balakarthik wrote:
சிவா wrote:இந்தக் கட்டுரையைப் படிக்கும் பொழுது, நானும் பாரில் அமர்ந்து இந்தக் (குடிகாரக் கலாட்டாக்களை) காட்சிகளை நேரில் கண்டது போல் உணர்வை ஏற்படுத்திவிட்டது. பாராட்டுக்கள் பாலா.

என்னது இது கட்டுரையா உண்மைய சொல்லுங்க நீங்க சும்மா உட்கார்ந்திருந்தீங்களா நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 676261 நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 676261

ஏன்னா, நானும் குடிக்க மட்டேன் பாஸ். ஒன்லி டீ, காபி!

ஒன்லி டீ அல்லது பார்லி டீ சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 Empty Re: நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்

Post by சிவா Sun Sep 04, 2011 5:16 pm

இளமாறன் wrote:

ஒன்லி டீ அல்லது பார்லி டீ சிரி

நீங்க பார்ல போய்த்தான் டீ குடிப்பீங்களா இளா.


நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்  - Page 3 Empty Re: நானும் பெரிய மனுஷன் ஆயிட்டேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum