புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 16:19

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 13:42

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 20:54

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:36

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:57

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:37

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:23

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 13:12

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:05

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 08:05

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 06:45

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 19:19

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024, 15:17

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 15:16

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:44

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:09

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:05

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:02

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 12:59

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 12:57

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024, 11:58

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024, 11:56

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024, 19:46

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024, 18:15

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:21

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:18

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:14

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:11

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:11

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:10

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024, 12:12

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:16

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:15

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:13

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:10

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_m10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10 
75 Posts - 38%
heezulia
சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_m10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10 
65 Posts - 33%
Dr.S.Soundarapandian
சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_m10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_m10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_m10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_m10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_m10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_m10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_m10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_m10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_m10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10 
326 Posts - 49%
heezulia
சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_m10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_m10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_m10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_m10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10 
23 Posts - 3%
prajai
சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_m10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_m10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10 
3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR
சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_m10சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 19 Oct 2010, 23:38

சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! S சாலையோர ரோமியோவா நீங்கள்? சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Smiles சிறைக் கம்பிகள் தயார்!

கோடை விடுமுறைக்குப் பின் கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. எதிர்காலக் கனவுகளைச் சுமந்துகொண்டு மாணவர்கள் புத்தகக் கட்டுகளுடன் அவசர அவசரமாக அவரவர் இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருப்பது தின நிகழ்வு. இந்த சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வேலை வெட்டியில்லாத சாலையோர ரோமியோக்கள் பெண்களைச் சீண்டிப் பார்ப்பதின் மூலம் தாங்கள் இன்பமுறுவதாக நினைத்துக் கொண்டு ஒரு கொலை பாதகச் செயலைச் செய்ய முற்படுகின்றனர். ஈவ் டீசிங் என்று சொல்லப்படும் இந்த பெண் சீண்டல் பல அப்பாவிப் பெண்களின் உயிரைப் பறித்துள்ளது என்பதனை இந்த ரோமியோக்கள் ஒரு கன நேரம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இல்லையெனில் கடுமையான தண்டனைகளை அவர்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும். ஈவ் டீசிங் செய்த ஒரு சில இளைஞர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் குண்டர்கள் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனர். இந்தியாவிலேயே ஈவ் டீசிங் குற்றத்துக்கு குண்டர் சட்டம் பயன்படுத்தப்பட்டது இதுவே முதன் முறை.

இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி பிரிவு-509 பெண்கள் நடமாட்டத்தைத் தடுத்தல், அவர்களின் கன்னியத்திற்கு இழுக்கு ஏற்படுத்துதல், எரிச்சலுரச் செய்தல், பெண்களை மானக் குறைவாகப் பேசுவது, பாடுவது போன்ற செயல்கள் தண்டனைகுரிய குற்றம் என்கிறது. இதைவிட வீரியமுள்ள அதிக தண்டனை தரக்கூடிய தனிச்சட்டத்தினை சரிகா ஷா மரணத்திற்குப் பின் தமிழக அரசு கொண்டு வந்தது. அதன்படி ஒரு பெண் ஆட்டோவில் செல்லும்போது பெண் சீண்டலுக்கு ஆளானால் அந்த ஆட்டோ ஓட்டுநர் வாகனத்தை அருகில் உள்ள காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று உடனடியாகப் புகார் கொடுக்க வேண்டும். தவறினால் அந்த ஓட்டுநரும் குற்றத்திற்கு உடந்தையானவராகக் கருதப்படுவார். பேருந்தில் இந்த நிகழ்ச்சி நடந்தால் நடத்துனரும் ஓட்டுனரும் பொறுப்பேற்க வேண்டும். எனினும், தற்போதுள்ள ஐபிசி பிரிவும் தனிச் சட்டமும் இக்குற்றத்திற்குப் போதுமான தண்டனையை வழங்கவில்லை. ஈவ் டீசிங் சட்டத்தை மேலும் கடுமையான தண்டனைகளை வழங்குவதாக மாற்ற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு நீதியரசர் மு. இஸ்மாயில் தலைமையின் கீழ் ஒரு கமிஷனை நியமித்தது. இக்கமிஷன் தற்போதுள்ள சட்டப் பிரிவுகளை ஆய்ந்தறிந்து தனது அறிக்கையை அரசுக்குத் தாக்கல் செய்துள்ளது. தற்போது பரிசீலனையில் உள்ள இக்கமிஷனின் பரிந்துரைகளின்பேரில் கடுமையான சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். எனவே, ஈவ் டீசிங் செய்யும் இளைஞர்கள் இனி கடுமையான இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் என்பதனை நினைவில்கொள்ள வேண்டும்.

சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவி சரிகா ஷா ஈவ் டீசிங்கால் கொல்லப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஒன்பது பேருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் தலா 8 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த 2001-இல் தீர்ப்பளித்தது நினைவிருக்கலாம்.

சட்டப்பூர்வ தண்டனைகள் ஒருபுறம் இருப்பினும், காவல்துறை குற்றத்தில் ஈடுபடும் இளைஞர்களைக் கண்காணிக்க ஒரு சில சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதன்படி முக்கியமான பகுதிஷகளில் காவலர்கள் குறிப்பாக பெண்காவலர்கள் சாதாரண உடையில் இருந்து கண்காணிப்பார்கள். பேருந்து நிலையங்கள், கல்லூரி, பள்ளி நுழைவாயில்கள், பெண்கள் அதிகமாகக் கூடும் இடங்கள், பேருந்து பயணங்கள் என்று சென்சிடிவாக-கண்டறியப்பட்டுள்ள இடங்களில் கண்காணிப்பினைத் தீவிரப்படுத்தியுள்ளது காவல்துறை. மேலும், கண்காணிப்பு வாகனங்களும் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. வாகன நெருக்கடியுள்ள சாலைகளில் போக்குவரத்து காவலர்களின் எண்ணிக்கையும் கூடுதலாக்கப்பட்டுள்ளது.. இவர்களும் இந்தக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.

ஈவ் டீசிங் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்கள் உடனடியாகக் காவல்துறையினரைத் தொலைபேசி எண் 1091-ல் தொடர்புகொள்ள வேண்டும். அடுத்த முனையில் பெண்காவலர்கள் புகாரை பதிவுசெய்து உடனடி நடவடிக்கைகளை எடுப்பார்கள். இது கட்டணம் இல்லாத தொலைபேசி வசதி. காவல்துறை இதனை அறிமுகப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர் தன்னுடைய பெயரையோ விலாசத்தையோ தரவேண்டிய அவசியமில்லை. எந்த இடத்தில் அவர் இக்கொடுமைக்கு ஆளாகின்றார் என்ற இடம்பற்றிய தகவலை மட்டும் தந்தால் போதும். இந்த வசதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உண்டு. மாவட்ட காவல்துறை தலைமை அலுவலகங்களில் பெண்களுக்கென்று சிறப்புப் புகார் பிரிவு எற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் ஈவ் டீசிங் குற்றத்திற்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, ஈவ் டீசிங் செய்துவிட்டு தப்பிவிடலாம் என்ற எண்ணத்தை இளைஞர்கள் கைவிடவேண்டும். கடுமையான சட்டங்களும் தண்டனையும் தற்போது நடைமுறையில் உள்ளன. ஈவ் டீசிங் என்பது ஒரு விடலைத்தனமான செயல் என்று மேம்போக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட காலம் ஒன்று உண்டு. ஆனால், இன்று ஒரு கொலைக்குற்றமாக அது விஸ்வரூபமெடுத்துள்ளது.

ஈவ் டீசிங்கால் சென்னைக் கல்லூரி மாணவி சரிகா ஷா கொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பின்தான் இந்தக்கொடும் செயலின் உக்கிரம் மக்களுக்குப் புரிந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு இளம் பெண்களின் முகங்கள் மீது திராவகத்தை ஊற்றியதிலிருந்து ஈவ் டீசிங்கின் கோரமுகம் வெளிப்பட்டது. இதே மாவட்டத்தில் தக்கலையில் சுதா என்ற பள்ளி மாணவி இக்கொடுமையால் தற்கொலை செய்துகொண்டாள். நாகர்கோவில் அருகிலுள்ள ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்த அமுதா என்ற கல்லூரி மாணவி ஈவ் டீசிங்கால் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாள்.

மாவட்டத்திற்கு ஒரு பெண்ணாவது ஈவ் டீசிங் கொடுமைக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்கிறார் காவல்துறை தலைவர் ஐ,ஜி.திலகவதி. "என்னைப்பொறுத்த அளவில் இது கொலை செய்வதைக் காட்டிலும் ஒரு பெரிய குற்றம். பெண் சீண்டலுக்கு ஆளாகி இறந்துபோன பெண்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். உண்மையிலேயே கொலையும் நடந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணின் துப்பட்டாவைப் பிடித்து இழுத்து ஈவ் டீசிங் செய்தபோது அந்த பெண் கீழே விழுந்து தலையில் பலமாக அடிபட்டு இறந்துபோனாள். சில சமயங்களில் இக்கொடுமைக்கு தொடர்ந்து ஆளாகும் பெண்கள் உள்ளுக்குள்ளாகவே சுருங்கிப் போகிறார்கள். மன உளைச்சல்களைத் தாங்கமுடியாமல் தங்களது வாழ்க்கையையே முடித்துக்கொள்கிறார்கள்" என்கிறார் திலகவதி.

தன்னார்வக் குழுக்களின் பங்கு

சட்டம் காவல்துறை இதனையும் தாண்டி இன்று பல தன்னார்வக் குழுக்கள், பெண்கள் அமைப்புகள் ஈவ் டீசிங் குற்றத்திற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றன. பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் பாதிக்கப்பட்ட பெண்களைக் காவல்துறை உதவியுடன் சட்ட உதவி பெறவும் சம்பந்தப்பட்ட குற்றவாளி தண்டனை பெறவும் இந்த அமைப்புகள் இன்று போராடி வருகின்றன. இவர்களில் தனிநபர்களும் சமூக செல்வாக்குள்ள பெண்களும் தங்கள் பங்குக்கு இக்கொடுமையை எதிர்த்துப் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் ஈவ் டீசிங் நிகழ்வதற்கு பல காரணங்களை முன்வைக்கின்றனர். மலர் என்கிற தன்னார்வக்குழு தற்போது பெருமளவு பெருகி வரும் இக்குற்றத்திற்கு இணைய தளத்தைக் காரணம் காட்டுகின்றது. அதாவது, இன்று பல இளைஞர்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் ஆபாசப் படங்கள் வக்கிர உணர்வினை உந்திவிடும் தகவல்களை எளிதில் பெறும் வசதியினை பெற்றுள்ளனர். இதன் மூலம் மனரீதியாக சீரழிந்து பாலியில் வன்முறைக்குத் தூண்டப்படுகின்றனர். மேலும், சினிமா அரங்கங்களில் நீலப்படங்களைப் பார்த்தும் தொலைக்காட்சி விளம்பரங்களில் பெண்களை வெறும் போகப் பொருளாகச் சித்தரித்து வெளியிடப்படுவதையும் பார்ப்பதுடன் போதுமான பாலியல் குறித்த கல்வி விழிப்புணர்வு இல்லாததனாலும் ஈவ் டீசிங் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

பெண்கள் வெறும் போகப் பொருளாகக் காமத்தின் வடிகாலாகப் பார்க்கும் ஆண் என்ற பார்வையின் நோக்கே ஈவ் டீசிங் என்கிறார் சென்னை ராணி மேரி கல்லூரியில் ஓய்வு பெற்ற சமூகவியல் பேராசிரியர் சரஸ்வதி ராஜேந்திரன். ஒரு பெண்ணின் சுயமரியாதையையும் கௌரவமும் அவளின் ஆளுமைத் தன்மையுடன் தொடர்புடையது. இதனை ஏற்க முடியாமல் அவளை மட்டுப்படுத்த நினைக்கும் வக்கிரப் புத்தியின் தன்மையே ஈவ் டீசிங் என்கிறார்.

இன்று பெருகிவரும் நுகர்வு கலாச்சாரமும் அதற்கு தோதாக பெண்களை வெறும் அழகுப் பதுமைகளாக்கித் தங்களது அழகு சாதனப்பொருட்களை விற்பதற்கு ஒரு ஊடகமாக இன்று பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதனால், பெண்கள் மேனாட்டு நாகரீகத்தால் ஈர்க்கப்படுகின்றனர். இதுவும் ஈவ் டீசிங் நிகழ ஒரு காரணம் என்கிறார் தமிழக பெண்கள் இயக்கத் தலைவர் பெர்ணாட் ஃபாத்திமா. பெண் என்றால் தாய்மை, பாதுகாத்தல், பகிர்ந்துகொள்ளுதல், வளர்த்தெடுத்தல் போன்ற சூழல் காரணிகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்கின்ற சமூகப் பார்வை மாற வேண்டும். பெண் சீண்டல் என்பது ஒரு வன்முறை. பாலியல் பலாத்காரத்திற்கு ஒப்பானது. ஒரு பெண்ணை அவமானப்படுத்தி கொச்சைப்படுத்தி மனதளவில் உளைச்சலை ஏற்படுத்தி கொடுமைப்படுத்தும் வன்செயல்கள் தடுக்கப்படவேண்டும் என்கிறார் அவர்.

காட்சி ஊடகங்களின் பங்கு

சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகைகள் இன்று மக்களை ஆட்டிப்படைத்து வருகின்றன. இவைகளில் வெளியிடப்படும் நல்ல செய்திகளைக் காட்டிலும் அதில் வக்கிரகங்களை மட்டுமே உள்வாங்கி, தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அதனை வெளிப்படுத்தும் மனோபாவம் இன்று பலரிடம் காணப்படுகிறது. பெண் என்பவள் இன்று தொடர்பு சாதனங்களின் பார்வையில் ஒரு போகப்பொருள், சதைப்பிண்டம், மாடாய் உழைக்கும் இயந்திரம், ஆண்களின் ஆளுமையை வெளிப்படுத்த உருவாக்கப்பட்ட ஆடுகளம் என்கிறார் சாகித்ய அகாதமி விருது பெற்றவரும் தமிழகத்தின் மூத்த எழுத்தாளருமான ராஜம் கிருஷ்ணன். கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே என்று எடுத்துச் சொல்லும் இந்த சாதனங்கள் அந்தக் கற்பையே இன்று விற்பனைப் பொருளாக்கி லாபம் சம்பாதிக்கின்றனர். இவை ஈவ் டீசிங் கொடுமையை மேலும் தூண்டிவிடும் உபயங்களாக உள்ளன. வக்கிரங்களைக் கண்டு கண்ணீர்விடாமல் அதன் ஆணிவேரை அறுத்தெறிய பெண்கள் முன்வர வேண்டும் என்கிறார் ராஜம் கிருஷ்ணன்.

சில ஆண்டுகளுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளிப்படையாகத் தென்பட்ட ஈவ் டீசிங் கொடுமைகள் இன்று கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக ஐ.ஜி.திலகவதி கூறுகிறார். இம்மாவட்ட ஆட்சித் தலைவரும் காவல்துறை கண்காணிப்பாளரும் ஈவ் டீசிங் என்ற குற்றமே இல்லாமல் செய்ய வேண்டும் என்று முனைந்து செயல்பட்டு வருவதாக அவர் சொன்னார். மேலும் அனைத்து கல்லூரி மாணவ மாணவியர் பிரதிநிதிகள், ஆசிரியர் பிரதிநிதிகள், கல்லூரி முதல்வர்கள், உள்ளுர் மக்கள் ஆகியோருடன் இணைந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்கிறார்.

இப்படிப்பட்ட நிலைமைகள் மாற வெறும் சட்டங்கள் மட்டுமே போதாது. மாணவர்கள் என்ற பெயரில் பல சமூக விரோத குழுக்கள் இக்கொடுமையில் ஈடுபடுகின்றனர். எனவே, கல்லூரி மாணவர்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சமூகத்தில் உள்ள சில தவறான கருதுகோல்களால் பெண்ணுக்கு இதுதான் இடம் என்ற போக்கு மாறவேண்டும். எந்தவொரு பெண்ணும் தான் பலவீனமானவள் என்ற சிந்தனையிலிருந்து விடுபடவேண்டும். பெண்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தற்காப்புக் கலைகளில் தேர்ச்சிப் பெற்றவர்களாக இருக்க வேண்டும். உதாரணமாக மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பெண் பிள்ளைகளுக்கு பள்ளிகளில் தைக்குவாண்டோ என்ற தற்காப்புக் கலை கற்றுத்தரப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு பெண்ணும் தன்னம்பிக்கைப் பெறுகிறாள். தன்னம்பிக்கையுள்ள எந்த பெண்ணிடமும் ஈவ் டீசிங் என்ற சீண்டலை எந்தவொரு ஆணும் மேற்கொள்ளத் துணியமாட்டான். இதற்கும் மேலாக ஒரு பெண் தன்னை நிந்திப்பவனை நேரடியாகச் சந்தித்து அதாவது "Taking the bull by horns" என்று சொல்வது போல் சம்பந்தப்பட்டவனை எதிர்கொண்டு எப்படிப்பட்ட தண்டனைகள் சட்டத்தில் உள்ளன, என்று துணிந்து சொல்ல வேண்டும். பாரதி சொன்னதுபோல்

பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளலாகாது பாப்பா !
மோதி மிதித்து விடு பாப்பா ! அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா !

என்பதற்கேற்ப குணம் கொண்டவர்களாக நமது பெண்கள் இருக்க வேண்டும்.. இதற்கும் மேலாக காவல்துறை பெண்கள் இயக்கங்கள் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், கட்டணமில்லா தொலைபேசி வசதிகள் என்று பல நிலைகளில் பெண்களுக்கு உதவ பல அமைப்புகள் செயல்படுகின்றன, இவ்வளவு வசதிகளையும் கொண்டு ஈவ் டீசிங்கை எதிர்கொள்வது ஒரு பெண்ணுக்கு சுலபமானதாகவே இருக்க வேண்டும்.

அடுத்தமுறை உங்களுக்கு ஈவ் டீசிங் பிரச்னையா? பயப்படாதீர்கள், சுழற்றுங்கள் தொலைபேசி எண்: 1091.

நீங்கள் சாலையோர ரோமியோக்களா? சிறைக்கம்பிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன என்பதை மறந்துவிடாதீர்கள்.

மூலம்: இந்திய அரசின் பத்திரிகைத் தகவல் அமைச்சகம்!

சாலையோர ரோமியோவா நீங்கள்? சிறைக் கம்பிகள் தயார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக