புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_m10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10 
65 Posts - 63%
heezulia
காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_m10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_m10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_m10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_m10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10 
1 Post - 1%
viyasan
காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_m10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_m10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10 
257 Posts - 44%
heezulia
காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_m10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_m10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_m10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_m10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10 
17 Posts - 3%
prajai
காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_m10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_m10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_m10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_m10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_m10காதல் ஓவியம் (கதை சொன்ன கவி) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் ஓவியம் (கதை சொன்ன கவி)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 18, 2010 12:44 pm

மாலை இருள் உலகைச் சூழ்ந்துகொண்டிருக்கிறது. அது ஒரு வசந்தகாலத்தின்
முன்னிரவுநேரம். கதிரோன் மறைந்து இருள் சூழ்ந்துவிட்டபோதிலும்
இளங்கதிரின் விட்டுச்சென்ற வெம்மை காற்றில் இன்னும்தணியவில்லை.

அந்தச் சோலையின் மலர்களைக்கூடி நறுமணம் சுமந்த தென்றல் அங்கே
தனிமையில் நின்றிருந்த தலைவியின் கேசங்களை நீவி முகத்தில் மெதுவாக
வெப்பத்தால் முத்தமிட்டுச் செல்கிறது காற்றுமட்டும்தானா?. காதலனும்தானே!
அவள் உள்ளத்தை பிரிவினால் சுட்டு வேக வைக்கிறான்!

எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது. அவள் முன்னால் இருக்கும் குளிர்த்
தடாகம் ஒன்றைப்பார்க்கிறாள். அதோ அந்த அல்லிமலர்கள் கூட சந்திரனின்
வருகைக்காக அவள்போலவே தவம் கிடக்கின்றன.

அந்த அலைகள்கூட இவள் மனதைப்போல வரிசையாக எழுந்துஉணர்வுகளின்
துடிப்பாக காணுகிறதே! அலைகளின் ஆட்டத்திற்கு தலையாட்டும் மலர்
அவளின் மனம் அங்குமிங்கும் அலைவதையும் அதனருகே துள்ளிவிழும்
கயல்மீன்கள் அவள்விழிகளின் துடிப்பையும் பாவனை காட்டி கேலி
செய்வதுபோல் இருக்கின்றன.

ஆமாம் இதோ இந்தமலர்க்கூட்டம்கூட காற்றிலாடி தமக்குள் இரக்சியமாகப்
பேசிக்கொள்கின்றனவே! அவள் ஏமாற்றத்தைதானே முணுமுணுக்கின்றன
கோபம் கட்டுமீறவே பாடுகிறாள்

தேனென்று சொன்னான் தென்றலென்றான்
தீயாகி நின்றான் பெண்மை கொன்றான்
வானில் வளைந்த வண்ணம் என்றான்
வாஎன்று என்னை தன்னில் கொண்டான்
பூநின்றவாசம் போல்நீ என்றான்
பூன்னகைபூத்தே என்னை வென்றான்
ஏனின்று என்னை விட்டுவிட்டான்
ஏதில் மயங்கி நின்றுவிட்டான்

பூவாகமேனியில் போதை கண்டான்
புயலாக மாறித்தான் காயம்செய்தான்
நோவாகி உள்ளத்தை நெக்கவைத்தான்
நெஞ்சில் கலந்தோடிச் சொக்கவைத்தான்
நாவாகிப்பொய்த்தே இந்நங்கை என்னை
நன்றே மறந்திடில் நிச்சயமே
சாவாகும்மேனியாம் காக்கவெனில்
சற்றே வரச்சொல்லிக் கூப்பிடடி

காற்றுக்கு கட்டளை இடுகிறாள்.தென்றல் குளிர்ந்திட ஆரம்பித்துவிட்டது. நிலவும் எழுந்து பொன்னொளி பரவ
ஆரம்பித்துவிட்டான். காதல் ஏக்கம் கசப்பாக மாறுகிறது. கண்கள்
சிவந்துவிட்டன கோபத்தாலா? தூக்கத்தாலா? அப்போது அங்கே யாரோவரும்
ஓசை கேட்கிறது. அதை அறியாமல் அவள் பாடுகிறாள்


துடித்தே கண்கள் துவள்கிறதே
வெடித்தே நெஞ்சம் அழுகிறதே
வடிந்தே இருளும் முடிகிறதே
மடிந்தே உள்ளம் குமுறுதுவே

எவளோ ஒருத்தி கண்டனனோ
இவளை மறந்து நின்றனனோ
குவளை நிறைதேன் நீயென்று
அவளை இனிதாய் கண்டனனோ

தடந்தோள் கொண்டான் தவறியதேன்
மடந்தை என்னை மறந்ததும் ஏன்
கிடந்தே யுள்ளம் துடிக்கிறதே
விடந்தான் முடிவே கொல்லுகிறேன்

அண்மையில் நின்றிருந்த அலரிப் பூச்செடியிலிருந்து ஒருகாய் பறித்து உண்ண
முயல்கிறாள். அப்போது ஒருகுரல் ஒலிக்கிறது

காதல் காதல் காதல் என்று
காதல் கண்டுமாயும் பெண்ணே
காதல் போயின் சாதல் என்றால்
காற்றுக்குலகில் வேலை இல்லை

காதல் கண்டு தோற்கும் மாந்தர்
காணுமுலகில் மாளச் சென்றால்
ஊதல் இன்றி உயிர்கள் இன்றி
ஒற்றை உலகு சுத்தும் வீணில்

தேனை உண்டு தித்திக் காமல்
தீயை உண்ணத் தேரும் பெண்ணே
போனால் தேகம் வாராதென்று
புரியாதவளே வருந்தாய் இன்று

தாகம் கொள்ளல் தேகக்குற்றம்
தாங்கா, ஆயின் மனதே நோகும்
நாகம் கக்கும் நஞ்சைப்போலே
நாளும் விரகம் தேகம்கொல்லும்

ஆகக் காதல் ஒன்றே உலகின்
ஆகிக் கொண்ட இன்பமில்லை
போகப்போக மனமே யாறிப்
புதிதாய் வாழ்வு பெறலாம் பெண்ணே

மோதல் கொண்டு முனையும் வாழ்வில்
மூச்சை நிறுத்த முயலாதென்றும்
காதல் போயின் வாழ்வை வென்று
காலம் யாவும் காண்போம் நன்று

தலைவி திடுகுற்றுத் திரும்புகிறாள். ஒரு முதியவர் நிற்கிறார். இதுயார்
இவரெப்படி இங்கே?
”யார் நீங்கள்?” என்கிறாள். முதியவர் சிரிக்கிறார். அவள் திகைக்கிறாள். இந்த
இரவு நேரத்தில். இவருக்கு இங்கே என்னவேலை. ‘யார் நீங்கள் பெரியவரே
கூறுங்கள்’
அவர் சிரித்தபடி ’உனைக் காப்பது என் வேலை’ என்று கூறிக் காற்றில்
மறைந்து போகிறார்

அந்தவேளையில் அவள் தோழிஒருத்தி தலைவியை நீண்டநேரம் காணாது
தேடிவருகிறாள். தன் தலைவி திகைத்து நிற்பதைக் கண்டு என்னவென
விசாரிக்கிறாள்.

தன் கவலையைக் கூறி அவள்மீது தலைசாய்த்து கண்களை மூடுகிறாள்
தலைவி. கண்ணிலிருந்து நீர் தாரையாக வழிகிறது.
தோழிஅவளை ஆறுதல் படுத்துகிறாள்

இறுதிக்கு அவசரம் என்ன- மேனி
இடு ’தீ’க்கு ஆசையும் கொள்வது என்ன
வெறுமைக்கு மனமானபோது -சூழ்
வெள்ளிக்குள் நிலவாக தனிமைநீ காணு

துள்ளியே நிலவோடும் நாளும் - ஒரு
துன்பமும் கொள்ளவே இல்லையே நாளும்
அள்ளியே புன்னகை செய்து -அது
அழகாக வானிலே வருவதைப்பாரு

அவள் மடியில் படுத்த தலைவி சோர்வு மிகுதியால் அயர்ந்து மயங்கி
கிடக்கிறாள். அப்போது மென்மையாக் தோழி பாடுகிறாள்


புவிவானை வாவென்று சொன்னால்
பொழியாதோ மழைதூவி நன்றாய்
குவிவானில் கதிர் காணும் நேரம்
குளிர்காலை எனவாக வேண்டும்
செவி கேட்க கவி சொல்லும் சேதி
சிறிதாலும் கேட்காதுபோமே
ரவி வானில் எழுந்தோடி வருவான்
இரவென்னில் கதிர் ஏது செய்வான்

தளிரெங்கும்பூ பூக்க வேண்டும்
தண்ணீரில் முகம் பார்க்கும் போலும்
ஒளிவீசி இரவோட வேண்டும்
உயிர் கொண்டமீன் துள்ளவேண்டும்
களிகூடிப் புள்ளினம் ஆர்த்து
கலகலத்தெழுந்தாடவேண்டும்
வழிதோன்றி அவன்பாதைகண்டே
வரும் வரை தூங்கட்டும் நெஞ்சம்

கனவுகள் சுமையான நெஞ்சை
காற்றாக நீந்திடச் செய்யும்
மனம்மீது கற்பனை கொண்டால்
மாற்றாகித் துன்பங்கள் நேரும்
சினந்தானும் கவலையும் போக
சற்றே நீ உறங்காயோ கண்ணே
நினவெங்கும் அமைதி கொள் என்றும்
நிலையான துலகி லொன்றில்லை

மாறுதல் மட்டுமே வாழ்வு
மாறாத ஒன்றெனில் சாவு
தேறுதல் இல்லையேல் நாமும்
தினமும் ஒருதரம் சாவோம்
ஊறுகள் எதுவந்த போதும்
உரமுள்ள மனதோடு தோன்று
ஏறுதல் தான்மட்டும் எண்ணு
இயற்கையே இழப்பென்று தள்ளு


தோழியின் தாலாட்டில் துக்கம் தணிந்திடவே இருவரும் இல்லம்நோக்கிச்
செல்கிறார்கள்.. விடிந்த்தும் சேதிவருகிறது, தலைவன் வரும்வழியில் ஏற்பட்ட
இடரினால் அரசகாவலர் அவன்பாதையை தடுத்துவிட்டனர் என்றும்
தலைவியிடம் வருத்தம் தெரிவித்து செய்தி அனுப்பியிருந்தான்
மகிழ்வில் தலைவியின் மனம் குதிக்க எங்கிருந்தோ பெண்கள் சேர்ந்து
பாடும்பாடல் ஒலிக்கிறது. அவள் உள்ளத்தில்சேர்ந்த உறுதியும் இன்பமும் பிரதிபலிப்பதாக!


வெட்டுமிடி வீழ்ந்தாலும் வேகோம் -கையில்
விளையாட மின்னலில் பந்துகள் செய்வோம்
கொட்டி மழை பெருகினும் தாழோம் -அங்கு
குளித்தேயோர் சுழிபோட்டு கரைநீந்தி எழுவோம்

தட்டுவோம் கைகள் தனைக் கோர்த்து பெண்கள்
தாண்டாத இடரில்லை காதலும் சேர்த்து
கட்டுவோம் வாழ்வென்ற வீடு ஒளி
காட்டுவோம் அன்பென்ற தீபமும் கொண்டு

பெட்டியில் பாம்பாகிச் சோர்ந்து - பெண்கள்
பெருமையை மறந்துமே தூங்குதல் நீக்கி
எட்டுவோம் இமயங்கள் தாண்டி! - நாமும்
இந்த உலகையும் ஆள்வோம் நிரூபி!
**************


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 18, 2010 8:42 pm

அண்ணா அருமை இந்த கவிதையில் கதை இருக்கிறது ஒரு விதை இருக்கிறது மொத்தத்தில் ஒரு நல்ல க(வி)தை


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 18, 2010 9:10 pm

மிகவும் அழகான பாராட்டு. இதுவே கவியாக நிற்கிறது.நன்றிகள்!

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Oct 27, 2010 11:35 am

அழகிய கவிநடை மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக