புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10 
2 Posts - 1%
prajai
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10 
2 Posts - 1%
Harriz
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10 
440 Posts - 47%
heezulia
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10 
30 Posts - 3%
prajai
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை


   
   

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 3:37 pm

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை Kadal-thamarai


முன்னுரை



டி.வி. இராமசுப்பையர் அதிசய மனிதருள் ஒருவர்.


நண்பர் தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை எனும் டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாறு நூலுக்கு முன்னுரை ஒன்று எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது, தயக்கமும், மகிழ்ச்சியும் ஊடாட ஒப்புக் கொண்டேன்.

நான் பிறந்து வளர்ந்து, இப்போது வாழ்ந்து வரும் வெள்ளாங்குடியின் அருகில் உள்ள தடிமார் கோவில் கிராமத்தில் டி.வி.ஆர்., பிறந்தார். இளமைப் பருவத்தின் பெரும் பங்கை அங்கே தான் செலவழித்தார். வடிவீசுவரத்திற்கு தனது இருக்கையை மாற்றிய போதும், வட சேரி கிராமத்திற்கு மாதத்தில் பலமுறை வந்து செல்வார். எனவே, ஊர்ப்பற்றுக் காரணமாக, சார்புடன் முன்னுரையை எழுதி விடுவேனோ என்ற பயத்தால் தயக்கம் எழுந்தது.

டி.வி.ஆரையும், அவர், தன்னுடன் அழைத்துச் செல்லும் மக்களையும் - ஒன்றிரண்டு நாள் அவர் மருமகனையும் - நான் அகல நின்று 1941ம் ஆண்டிற்கு முன் பார்த்து இருந்தாலும், நாகர்கோவில் கிளப்பில் உறுப்பினன் ஆன பின்தான் அந்த கிளப்பின் செயலாளர் என்ற நிலையில் டி.வி.ஆரை அறிந்திட முடிந்தது. சமுதாய நன்மைக்கு அவர் செய்த பணிகளைத் தெரிந்திடவும் வாய்ப்பு ஏற்பட்டது. 1963ம் ஆண்டு, காசி சர்வ கலாசாலை போல் கன்னியாகுமரியில் பல்கலைக்கழகம் அமைக்கும் ஆலோசனைக்கு டி.வி.ஆர்., மிகவும் துணை நின்றார். அவர்தான் அந்த ஆலோசனைக் குழுவின் தலைவர். எனவே, நட்புறவாலும், அன்பாலும் கட்டுப்பட்ட என்னிடம், டி.வி.ஆரைப் பற்றி எழுதுவதில் இனந்தெரியாத மகிழ்ச்சி எழுந்தது.

ஆய்வு நிறுவனம், அறநிலையங்கள் முதலியவற்றைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மார்ச் மாதம் கெடுபிடியானது. அம்மாத முதலில் தான் இந்த வரலாற்று நூல் கிடைத்தது. கிடைத்த நாள் மாலை, நூலின் ஒரு சில பகுதிகளைப் படித்தேன். மிக சுவையாக நூல் வளர்ந்து சென்றது. தெளிவுகளைத் திரட்டி, சம காலத்தவர்களின் எண்ணங்களை இடை இடையே கொடுத்து நூல் உருவாக்கியுள்ள திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பிற பணிகளை ஒதுக்கி விட்டு, அன்றும், அடுத்த நாளும் நூல் முழுவதும் படித்து முடித்தேன். செம்மையாக முத்துகிருஷ்ணன் உருவாக்கியுள்ளார் என்ற எண்ணமே என் உள்ளத்தில் மேலோங்கி நின்றது.

நூலின் செம் பாதிக்கு மேல், தினமலர் பத்திரிகையை டி.வி.ஆர்., நிறுவி வெற்றி கண்டதைப் பற்றியதாகும். அந்த நிறுவனத்தை டி.வி.ஆரின் மக்களும், பேரப் பிள்ளைகளும் இன்று ஒற்றுமையுடன் வளர்த்து வருகின்றனர். தனது மக்களை இந்தப் பணியில் ஈடுபடுமாறு செய்தது டி.வி.ஆரின் குடும்பத் தலைமைக்குத்தக்க உதாரணமாகும்.

எஸ்.வையாபுரிப்பிள்ளை, "தினமலர்' இதழை செப்., 6,1951 வெளியிட்ட அன்று, அவருடன் நானும் சென்றிருந்தேன். சி.ஓ.மாதவன் தலைமை தாங்கினார். கவிமணி ஒரு வாழ்த்துப் பாவால் தினமலர் இதழை வரவேற்றார்.அன்று சாதாரண நிலையில் உருவான, "தினமலர்', திருவிதாங்கூர் தமிழர் எழுச்சியால் பிரபலம் அடைந்து, இன்று, ஆலமரம் போல் படர்ந்து அனேகமாக ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் வெளியிடப்படுகிறது. அந்த வளர்ச்சி, பாராட்டத்தக்கது; பெருமைப்படத்தக்கது.

டி.வி.ஆர்., பத்திரிக்கை வளர்ப்பதில் காட்டிய ஆர்வம், வகுத்த நெறிமுறைகள், அரசியல், தனிமனித எதிர்ப்புகள், அஞ்சா நெஞ்சம், பிறரை அணைத்துச் செல்லும் ஆற்றல், மன்னித்து மறக்கும் பெருந்தன்மை முதலியவற்றை முத்துகிருஷ்ணன் திறம்படக் கூறி இருக்கிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 3:38 pm

"தினமலர்' தோன்றுவதற்கு முன்னர் டி.வி.ஆர்., ஆற்றிய அரிஜனத் தொண்டு, நாகர்கோவில் நகரத்திற்கு குடிநீர் கொண்டு வந்தது, இரயில் பாதை அமைத்தது, கட்டாயக் கல்வி அமல் செய்ய உதவியது, இலக்கிய விழாக்கள் எடுத்தது முதலியவற்றை முத்துகிருஷ்ணன் சுருக்கமாக விவரித்துள்ளார்.

குழந்தையே முதியவர்களின் தந்தை, என்ற கொள்கையைச் சமூக இயலார் வற்புறுத்துவதுண்டு. டி.வி.ஆரின் பிற்கால பண்புகளில் பெரும்பாலானவற்றை அவருடைய குழந்தை அல்லது இளமை பருவத்திலேயே காண இயலும்.

டி.வி.ஆர்., தத்து எடுக்கப்பட்ட குழந்தை. அவருடைய உறவினர் பெரும் சொத்தின் உடமையாவார். அவர்தான் டி.வி.ஆரை தத்து எடுத்து வளர்த்தார். அந்த சொத்துக்கள் அனைத்தையும் பிற்காலத்தில் விற்று, தினமலர் வளர்ச்சிக்கு முதலீடு செய்தார். விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு இந்தச் செயல் எவ்வளவு மன உளைச்சல் தரும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

சுதந்திரம் பெறுவதற்கு முன்னும், பின்னும் இருவகையாக தலைவர்கள் உருவாயினர். அரசாங்கத்தை எதிர்த்து இயக்கம் நடத்தி, இன்னலும், சிறை வாசமும் அனுபவித்து உருவான அரசியல் தியாகத் தலைவர்கள் ஒரு வகையினர்; தமிழ்நாட்டில் இராஜாஜி, காமராசர் முதலியவர்களைக் கூறலாம்.

மற்றொரு சாரார், சமுதாயத் தொண்டு, அரிஜன முன்னேற்றம், தொழிற்சாலைகளைத் தோற்றுவித்து பல்லாயிரவர்களுக்கு வேலை வாய்ப்புத் தருவது, குடிதண்ணீர், போக்குவரத்து முதலியவற்றை அமைத்துக் கொடுத்தல், விதவை விவாகம், கல்விப்பணி முதலியவற்றில் ஈடுபட்டுச் சமுதாயத் தலைவர்களாக உருப்பெற்றனர். ஈ.வே.இராமசாமிப் பெரியார், டி.வி.ஆர்., போன்றவர்களை உதாரணமாகக் கூறலாம்.

மகாராஷ்டிரத்தில் திலகர் அரசியலிலும், இரானடே சமூக நலனிலும் தலைமை தாங்கினர். காந்தியடிகள் இந்த இரண்டு துறையிலும் தலைமையிடத்தைப் பெற்றார். ஆனால், அரசியல் தரும் அதிகாரம் முதலிய பவிஷûகளைப் பெற மறுத்து விட்டார்.

சமுதாயத் தலைவர்கள், மக்கள் மாற்றத்திற்கு அரசியலாரின் துணையை நாட வேண்டியிருந்தது. இராஜாராம் மோகன் ராய், பிரிட்டிஷ் அரசின் துணையுடன்தான் சதி என்ற உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழித்தார். டி.வி.ஆரும் குடிதண்ணீர், இரயில் அமைப்பு முதலியவற்றிற்கு அரசு உதவியை முதலில் நாடினார். "தினமலர்' பத்திரிக்கை வலுவுடைய செய்தித்தாளாக மாறியதும், அரசியல் தலைவர்கள் டி.வி.ஆரின் தயவை நாடினர். சமூக மாற்றத்திற்கு அரசியல் ஆதரவு, "தினமலர்' வழியாக டி.வி.ஆருக்கு எளிதாக கிடைத்தது. இது பெரும் சாதனை.

டி.வி.ஆர்., என்ற மனிதர் இன்றும் என் மனத்திரையில் பளிச்சிடுகிறார். சராசரி உயரம், சற்று பருமனான தேகம். அதிக கறுப்பில்லாத மாநிறம். நெற்றியில் சுருண்டு வளைந்து கிடக்கும் முடிக்கத்தை. வெள்ளையாடை, வெள்ளை அரைக்கைச் சட்டை, ஆடரம்பரமில்லாத தோற் வேட்டி, சிரித்த முகத்துடன், "என்ன ஓய் ? இதைச் செய்தீரா?' என்ற கேள்வி. செய்தது சொற்பம்; அதை நினைத்துப் பெருமைப்படுவது கூடாது. செய்ய வேண்டியவை பல; அவற்றைச் செய்து முடித்திட வேண்டும், என்பதே டி.வி.ஆர்., முழங்கும் மந்திரம்.



வி. அய். சுப்பிரமணியம்,

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் திருவனந்தபுரம் துணை வேந்தர்.

சர்வதேச திராவிட மொழியியல் பள்ளியின் நிறுவனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 3:40 pm

இந்த வரலாறு தோன்றிய வரலாறு!



ஐம்பதுகளில், நானும், என்போன்ற பல இளைஞர்களும், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிக்கை ஆசிரியர்களது ரசிகர்களாகத்தான் இருந்து வந்தோம். கலைஞர்கள் கூட அப்படித்தான். அக்காலத்தில் திரைப்படங்களில் கொடி கட்டிப் பறந்த எம்.கே.டி., பாகவதரும் இதற்கு விதி விலக்கல்ல. பத்திரிக்கை ஆசிரியர்கள் தங்களைப் பற்றி ஒருவரி பாராட்டி எழுத மாட்டார்களா என ஏங்கிய காலமது.

அந்தக் காலத்தில் பத்திரிக்கைகளுக்கு இன்று போல ஊர் ஊருக்கு விற்பனையாளர்கள் கிடையாது. மாத, வார இதழ்கள் எல்லாம் தபாலில்தான் வரும். அவை வரும் கிழமைகளில், நாங்கள் தபாலாபீசுக்கு முன்னதாகவே போய் இதழ்களை வாங்கி, அங்கேயே குப்பையும், இடிபாடுகளும் நிறைந்த படிக்கட்டுகளில் உட்கார்ந்து படித்து விட்டுத்தான் வீட்டிற்கு வருவோம். நானும் இதற்கு விதிவிலக்கல்ல. பாரதி என்ற கவிஞன் எங்கள் ஊரில் பிறந்தவன். அப்போது கவிஞன் என்றால் தெரியாது. புலவன் என்றுதான் கூற வேண்டும். பாரதியின் நினைவாக ஒரு வாசக சாலை ஊரில் உருவாக்க இளைஞர்களான நாங்கள் ஆசைப்பட்டோம். இதற்காக பிரபலமான கல்கி ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியை ஊருக்கு அழைத்திருந்தோம். அவரது வருகையும், நினைவு மண்டபம் எழுந்ததும் தனியான பெரிய கதை. பாரதி மண்டபம் எழுந்ததும், ஏராளமான எழுத்தாளர்கள், பாரதிக்கு அஞ்சலி செய்ய ஊருக்கு வந்த வண்ணம் இருந்தனர். நாங்கள் சிலர் அவர்கள் பின்னால் சுற்றினோம். அவர்களது சம்பாஷணைகளை ஆவலுடன் கேட்டோம். எழுத்தாளர்கள் மீது அசாதாரணமான காதல் கொண்டோம்.

பாரதியாரை, கவிஞர், தேசிய கவிஞர், மகாகவி என்றெல்லாம் அழைப்பர்; ஆனால், அவன் ஒரு பத்திரிக்கையாளன் என்பதே என்னை கவர்ந்தது.

நானும் பத்திரிக்கையாளனாக வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டேன். அன்றைக்கு பத்திரிக்கையாளன் என்றால் எங்களைப் போன்ற சிலரைத் தவிர யாருமே மதிப்பது இல்லை. பத்திரிக்கை ஒரு தொழிலே இல்லாத காலம் அது. எழுதப் படிக்கத் தெரியாத பெரும் கூட்டம் எங்கே காசு கொடுத்து பத்திரிக்கை வாங்கப் போகிறது? பத்திரிக்கைகளில் கொடுக்கப்பட்ட சம்பளம் வெளியில் சொல்ல முடியாதது. பத்திரிக்கை நடத்துபவர்களுக்கு ஒருநாளைத் தள்ளுவது ஒரு யுகத்தைத் தள்ளுவது போலாகும். பத்திரிக்கைதான் என் லட்சியம் என்று துணிந்த பின், எனக்கு என் உடன்பிறந்த சகோதரியே தன் பெண்ணை மணம் செய்து தர சம்மதிக்கவில்லை. அந்தக்காலம் எப்படி என்பதை சுட்டிக் காட்டவே இந்த சுயபுராணம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 3:41 pm

திருவனந்தபுரத்தில் இருந்து, "தினமலர்' பத்திரிக்கை நெல்லைக்கு வந்த நேரம் அது (1957). அப்போது நான் ஒரு பிரபலமான பத்திரிக்கையின் நிருபராக இருந்து வந்தேன். எனக்கு, "தினமலர்' பிடித்தது. அதன் கண்ணோட்டம், செய்திகள், தலைப்புகள் என்னைக் கவர்ந்தது. ஏன், "தினமலர்' பத்திரிக்கைக்கும் நிருபராக இருக்கக் கூடாது என எண்ணி நெல்லை சென்றேன். ஆனால், எனக்கு முன்னதாகவே ஒரு செல்வாக்கான பத்திரிக்கை நிருபர், "தினமலர்' பத்திரிக்கை நிருபர் பதவியை தனக்கே வாங்கி வைத்து இருந்தார் என்பது அங்கு சென்ற பின்னர் தெரிந்தது.

இருந்தாலும் பரவாயில்லை, நானும் எழுதுகிறேன்... பிடிக்கிறதா பாருங்கள், என அப்போது மானேஜராக அங்கு இருந்த இளைஞரிடம் கூறி, செய்திகள் அனுப்பத் தொடங்கினேன். ஒரே வாரத்தில் நானே எட்டயபுரம் நிருபர் என டி.வி.ஆரே கையொப்பம் செய்து உத்திரவு அனுப்பி இருந்தார்.

பின்னர் டி.வி.ஆரை அடிக்கடி சந்திக்கும் நிலை. பல, அவரது அழைப்பால் சென்றதாக இருக்கும். "அந்தக் கிராமத்துக்குப் போய் வா! இது ஒரு பிரச்னை நன்றாக விசாரித்து விரிவாக எழுது !' இப்படிப் பல வழிகாட்டல்கள். ஒருவனிடம் திறமை ஒளிந்து கொண்டிருந்தால் அதைக் கண்டுபிடித்து சிறப்பாக வேலை வாங்கத் தெரிந்தவர் டி.வி.ஆர்., அப்போது என்னிடம் இருந்த ஒரே வாகனம் சைக்கிள்தான். ரோடே இல்லாத கிராமங்களில், காய்ந்து கிடக்கும் கண்மாய்களின் ஊடே, கருவமுள்களின் குத்தலுக்குத் தப்பித்து கிராமம் கிராமமாகச் சென்று அவைகளை சிறந்த சித்திரங்களாக்கி, "தினமலர்' மூலம் படம் பிடித்து காட்டத் தொடங்கினோம்.

"தினமலர்' புதிய, புதிய வாசகர்களைப் பெற்றது; வளர்ந்தது. அத்துடன் அந்தக் கால அரசியல்வாதிகள், அதிகாரிகள், "தினமலர்' சுட்டிக்காட்டும் பிரச்னைகளை படித்து, முடிந்த அளவு தீர்வுகளும் செய்து வந்தனர். "தினமலர்' பத்திரிக்கையாளன் பெரிதும் மதிக்கப்பட்டான்.

என் சொந்த வாழ்க்கையில் ஒரு பேரிடி விழுந்தது 1970 - 71ல். பேனாவைத் தூக்கி எறிந்து விட்டு, பித்துப் பிடித்தவன் போல் ஆனேன். இதைக் கேள்விப்பட்ட டி.வி.ஆர்., என்னை நெல்லைக்கு வரச்சொல்லி பேனாவை மீண்டும் கையில் கொடுத்து எழுதத் தூண்டினார். அன்று மட்டும் அவர்கள் அதைச்செய்யாதிருந்தால் எனக்கு எழுத்தாளன் என்ற முகவரியே இல்லாமல் போயிருக்கும்.

என்னை அழைத்த நேரம், திண்டுக்கல்லில் உபதேர்தல் வர இருந்தது. தி.மு.க.,விலிருந்து எம்.ஜி.ஆர்., பிரிந்து, அண்ணா தி.மு.க., வை உருவாக்கி, இந்தத் தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருந்த நேரம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 3:41 pm

திண்டுக்கல் தேர்தலுக்கு நானே விசேட நிருபர். என் சொந்த மன உளைச்சலையும் அது தீர்த்து புதிய மனிதனாக்கியது.

ஏற்கனவே பத்திரிக்கையாளன் பாரதி மேல் காதல் கொண்ட நான், அதற்கான ஆதாரங்களை வெகு பாடுபட்டு சேர்த்து, பெரிய நூல் எழுதி, அச்சுக்கு கொடுத்திருந்தேன். அப்போதே தமிழக பத்திரிக்கையாளர்களது வாழ்க்கை முழுவதும் தொகுக்கப்பட வேண்டுமென்ற ஆசை உதித்தது. ஒரு தனி நபர் செய்யக் கூடிய பணி அல்ல அது.

டி.வி.ஆர்., 1984ல் அமரரானார். அதற்கு மூன்றாண்டுகள் முடிந்த பின் டி.வி.ஆரது வாழ்க்கை வரலாற்றை எழுதலாமே என்ற ஆசை எழுந்தது.

டி.வி.ஆரது வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் திரட்டுவதில் பல சிக்கல்கள் இருந்தன. டி.வி.ஆர்., நாட்குறிப்பு ஏதும் வைத்திருந்ததாகத் தெரியவில்லை. அவரது குமாரர்கள் கல்லூரிகளில் படிக்க ஊரை விட்டுச் சென்று விட்டதால், டி.வி.ஆரது நடுவயது வாழ்க்கைப் பற்றி முழுமையாக அவர்களால் கூற இயலவில்லை.

திருநெல்வேலி வந்த பின்னர் அவரது வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன் உள்ள வாழ்க்கை எப்படி இருந்தது? தடயம் கிடைப்பது மிகக் கடினமாகவே இருந்தது.

நான் சோர்வடையவில்லை. தமிழில் வெளிவந்துள்ள வாழ்க்கைச் சரித நூல்கள் ஒன்று விடாமல் படித்தேன். தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர், "என் சரிதம்' எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால் அவரோ தேதி வாரியாக எழுதி உள்ளார். நானோ கண்ணைக் கட்டி காட்டில் விட்டவனாக இருந்தேன். இந்த நிலையில் "கல்கி' பற்றி சுந்தா எழுதி, 1976ல் வெளிவந்த, "பொன்னியின் புதல்வன்' நூலைப் படிக்க நேர்ந்தது. அதில் உலகில் வெளிவந்த வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் பலவற்றையும், அதன் ஆசிரியர்கள் கையாண்ட யுக்திகளையும், சுந்தாவும், "கல்கி' ஆசிரியர் ராஜேந்திரனும் படித்து பார்த்த விவரங்கள் இருந்தன. அதில் ஒன்று, "பேர்ல் பக்கின்' வாழ்க்கை வரலாறு. இது பேட்டி வடிவில் அமைந்திருந்ததாகக் குறிப்பிடப் பட்டிருந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 3:42 pm

எனக்கு இப்போது புதிய வழி கிடைத்து விட்டது. டி.வி.ஆரது பழைய நண்பர்கள் பலரைக் கண்டு, அவர்களிடம் பேட்டிகள் கேட்டு, நூலை எழுதி முடிக்கலாம் என்பதே எனக்குக் கிடைத்த புதிய வழி. டி.வி.ஆரின் நண்பர்கள் யார் யார் ? எங்கே இருக்கிறார்கள்? இதுவெல்லாம் புதிராகவே இருந்தது. திருவனந்தபுரம், "தினமலர்' பழைய இதழ்களின் தொகுப்புக்கள் அனைத்தையும் கவனமாகப் படித்தேன். அதில் உள்ள செய்திகளில் அடிக்கடி வரும் பெயர்களை குறித்துக் கொண்டேன். சில பெயர்களுக்கு, பதவிகளும், இன்னும் சிலருக்கு சிறிய படத்துடன் செய்திகளும் இருந்தன. இவைகளை கொண்டு, கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருவனந்தபுரத்தில் தேடத் தொடங்கினேன். நான் சேகரித்த பெயர்கள் 164. இவர்களுக்கு இப்போது வயது 75க்கும் அதிகம் இருக்கும். பலரைப் பற்றி விவரம் கிடைக்கத்தான் செய்தது. ஆனால், அவர்கள் இப்போது எங்கே இருக்கின்றனர் என்பதைத் தான் தெரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. ஒரு சிலர் வயது அதிகமானதால் சொன்ன வரிகளையே மணிக்கணக்கில் கீறல் விழுந்த ரெக்கார்டுகள் ஒலிப்பது போல ஒலித்தனர். பலர் படுத்த படுக்கை. மிகவும் கஷ்டப்பட்டு வீட்டைக் கண்டுபிடித்துப் போனால், "ஒரு வாரம் முன்னால் வரக்கூடாதா ? அவர் காலமாகி ஒரு வாரமாகிறதே !' என்ற சொல்லைக் கேட்கும் நிலை.

எப்படியோ... இந்த துப்பறியும் வேலையில் 59 பேரை கண்டு பிடித்து விட்டேன். இதற்கு பெரிதும் உதவிய முழுப்பெருமையும் நாகர்கோவிலில் நீண்டகாலம் எங்கள் நிருபராக இருந்த ரிச்சர்டை சாரும். கிட்டத்தட்ட குமரி மாவட்டத்தில் நான்கு மாதங்கள் என்னுடன் நடையாய் நடந்தார்.

திருவனந்தபுரத்தைப் பொறுத்தவரை குழித்துறை நிருபர் கே.எஸ்.ஆறுமுகம் பிள்ளையின் உதவி மறக்க முடியாதது. யாருமே அண்ட முடியாத மூன்று முக்கியமானவர்களை அன்றைய நிருபர் சம்சுதீன் அணுகி உதவிகள் பெற்றுத்தந்தார். ஒரு நபர் சிக்கினால், அவர், தனக்கும், டி.வி.ஆருக்கும் வேண்டிய ஒருவரது முகவரியைத் தருவார். இப்படியாக 60 பேரை பேட்டி கண்டு விவரங்கள் பெற்றேன்.

நான் பார்த்த அனைவருமே டி.வி.ஆர்,. மீது தேவதா விஸ்வாசம் உள்ள நண்பர்களாக இருந்தனர். ஒரு சில உதாரணங்களை கூறியே ஆக வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 3:43 pm

மாறாயக்குட்டிபிள்ளை கடும் இதய நோயாளி, பேசவே கூடாது என்று டாக்டர்கள் தடை போட, அவரது வீட்டார், வீட்டிலேயே பிள்ளை இல்லை என என்னைத் திரும்ப அனுப்பி விட்டனர். தொடர்ந்து போன் மூலம் தொடர்பு கொண்டதில், ஒருமுறை அவரே பேசினார். உடனே வீட்டுக்கு வரச் சொன்னார். மூன்று நிமிஷம் பேசினால் ஒரு மாத்திரை சாப்பிட்டாக வேண்டும். மாத்திரை பாட்டிலை மேஜை மீது வைத்துக் கொண்டு, "டி.வி.ஆரைப் பற்றி நினைத்தாலே வியாதி குறைந்து விடும்' என்று கூறிய தகவல்கள் என்னை உணர்ச்சிவசப்படச் செய்தது.

முன்னாள் எம்.பி., சிவன்பிள்ளை திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். என் கடிதம் கிடைத்ததும், தனக்கு உதவியாளராக இருந்தவர்களிடம் ஒவ்வொரு நாளும் சில வரிகளை சொல்லி எழுதி அனுப்பியது மறக்க முடியாதது.

புதுவை தேச பக்தரும், முன்னாள் அமைச்சருமான வ.சுப்பையா அவர்கள் உடல்நலம் கெட்டு நாக்கு பேச இயலாத நிலையில் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் பேச்சு வரும் என்றனர். பல நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் பேச முடிந்தது. உடனே அவரது மனைவியார் சரஸ்வதி மூலம் தந்தி கொடுத்து வரச்சொல்லி கூறிய தகவல்கள் அபூர்வமானதாகும்.

தஞ்சைப் பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்த வி.ஐ.சுப்பிரமணியத்திற்கும், டி.வி.ஆருக்கும் ---------தொடர்பு உண்டு என தெரிந்து தஞ்சைக்கு தபால் எழுதினேன். உடனே புறப்பட்டு வரச்சொல்லி தந்தி கொடுத்தார். இந்த நூல் எழுத தன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்வதாகவும், வேண்டுமானால் புரூப் கூட திருத்தித் தருவதாகவும் அவர் கூறியது எனக்கு புது தெம்பை உண்டாக்கியது. வயதான நிலையில் முன்னாள் ரயில்வே உதவி அமைச்சர் ஓ.வி.அழகேசன் அவர்களை செங்கல்பட்டில் அவரது வீட்டில் சந்தித்தேன். அவரோ, "நான் ரயில்வே அமைச்சராக இருந்தவன் என்பதை நினைவு வைத்துள்ளவன் நீங்கள் தான்' என்று வேதனையுடன் வேடிக்கையாக கூறி, டி.வி.ஆர்., பற்றி நினைவுகளை கூறினார்.

டி.வி.ஆரின் இளமைப் பருவ நிகழ்ச்சிகளை அவர்களது சொந்தக்காரர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அதில் எனக்கு நம்பிக்கையில்லை. கண்ணதாசன் ஒருசமயம் கூறினார்: புதுவை போய் இருந்தேன். பாரதியார் வசித்த வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரருக்கு 85 வயதிருக்கும். பாரதியார் கால முதல் அந்த வீட்டிலேயே உள்ளார். அவரிடம் பாரதியாரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என போய் கேட்டேன். அதற்கு அவர், "நன்றாகத் தெரியும். ஆனால் அவருக்கு (பாரதியாருக்கு) இத்தனை புகழ் வரும் என்று அன்றே தெரிந்திருந்தால் அவருடன் நெருங்கிப் பழகி இருப்பேனே!' என்றாராம். இதைப் போலத்தான் புகழ் வந்த பின் ஒவ்வொருவரும் பல கதைகளை சொல்வர்; அவைகள் வரலாறு ஆகாது. ஆனால், சென்னையில் வசித்த எழுத்தாளர் பரந்தாமன் நிறைய தகவல் தரலாம் என்று டி.வி.ஆருக்கு நெருக்கமானவர்கள் பலர் கூற, அவரை பல முறை சென்னை சென்று பார்த்தேன். எழுத்தாளர்களிடம் ஒன்றை எழுதி வாங்குவது எவ்வளவு கஷ்டம் என்பது அனுபவப்பட்டவர்களுக்கே அது தெரியும்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 3:43 pm

ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் நினைவுபடுத்தி சென்னைக்குத் தவறாமல் கார்டு ஒன்று போடுவேன். இது எட்டு மாதம் நடந்தது. இந்த கார்டு தொந்தரவு பொறுக்க முடியாமல் அபூர்வமாக ஏராளமான இளமை நினைவுகளை சுவையாக எழுதி அனுப்பினார் பரந்தாமன்.

தென்குமரி தமிழர் போராட்டம் என்றால் தேச பக்தர் மணி அண்ணாச்சி தான் நினைவுக்கு வருவார். பிடிவாதக்காரர், தன்மான உணர்வு மிக்கவர், பெரும் சாதனைகளைச் செய்தவர். எழுத்தாளர். நெருங்கிப் பழக பலரும் கொஞ்சம் பயப்படவே செய்தனர். நான் போய் பார்த்த போது பழைய ரெக்கார்டுகள், மினிட்டுகள், புகைப்படங்கள் எல்லாவற்றையும் தேடித் தந்து, சந்தேகங்கள் பலவற்றைத் தீர்த்து வைத்தார்.

தமிழர் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு பற்றி திருவனந்தபுரம் உயர்நீதிமன்ற நீதிபதி சங்கரன் தலைமையில் நீதி விசாரணை நடை பெற்றது. அந்த தீர்ப்பு விவரம் குமரி மாவட்டத்தில் இல்லை. திருவனந்தபுரத்தில் தேடினால் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் சேர்ந்த பின்னர் அங்கிருந்து பல ரெக்கார்டுகளை கொண்டு வரவில்லை என்று கூறிவிட்டனர். தேடோ தேடென்று தேடினேன். நல்ல வேளையாக, பிரபல வழக்கறிஞரும், முன்னாள் எம்.பி., யுமான ஏ.ஏ.ரசாக்கிடம் ஒரு பிரதி இருந்தது. "நான்கு மணி நேரம் தான் தர முடியும்' என்ற கண்டிப்புடன் தந்து உதவினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பொதுகாரியங்கள், அதற்காக அச்சான நோட்டீஸ்கள், பத்திரிக்கை செய்திகள் பலவற்றையும் தேதி வாரியாக பைண்டிங் செய்து வைத்திருப்பவர் படேல் சுந்தரம் பிள்ளை. அந்த முதியவர் வீட்டுக்கு பலதடவை போய் பல சந்தேகங்களை தீர்த்துக் கொண்டேன்.

நாகர்கோவில் தமிழ் எழுத்தாளர்கள் மகாநாட்டை 1958ல் டி.வி.ஆர்., முன்னின்று நடத்தினார். அது பற்றி "கல்கி'யில் வெளியான கட்டுரையை நகல் எடுத்துக் கொள்ள உதவினார் "கல்கி' ஆசிரியர் ராஜேந்திரன்.

படங்கள் வேண்டுமே, ஒரு படம் கூட டி.வி.ஆர்., வீட்டில் இல்லை. அந்தக்காலத்தில் "பிளாஷ்' கிடையாது. கட்டிடங்களுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை படமாக்க முடியாது. முக்காலியில் கேமிரா, அதன் மீது ஒரு பெரிய கருப்பு போர்வை, எல்லாரையும் திறந்த வெளியில் வரிசையாக உட்கார்த்தி கொஞ்சம் சிரியுங்கள் என கூறி படமெடுப்பார் போட்டோகிராப்பர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 3:45 pm

பெரிய பெரிய குரூப் போட்டோக்கள் இரண்டு தலைமுறைக்கு முந்தியது. குமரி மாவட்ட பங்களாக்களில் ஏதோ ஒரு கிடங்கில் கிடந்த படங்களைத் தேட டி.வி.ஆரின் நண்பர்கள் அனுமதித்தனர். அவைகளை தேடி எடுத்து அழுக்கு நீக்கி அபூர்வமாக அழகாக மீண்டும் பிரதி எடுத்துத் தந்தார் நாகர்கோவில் நியூ ஸ்டூடியோ உரிமையாளர் என்.எஸ்.கே.பெருமாள். நல்லவேளையாக வாஞ்சியூர், நெல்லை தச்சநல்லூர் அலுவலகங்களை அப்போதே படம் எடுத்து வைத்தேன். இன்று அங்கே பெரிய பெரிய பங்களாக்கள் காணப்படுகின்றன.

நூலை வடிவமைக்க மதுரை - சென்னையில் உள்ள "தினமலர்' சகோதர, சகோதரிகள் தொடர்ந்து உதவினர். அவர்களது கடுமையான உழைப்பை மறக்க முடியாது. இதன் புரூப்களைப் பார்த்து பிழைகளை திருத்தி உதவியவர்கள் பேராசிரியர் வளன் அரசு மற்றும் தமிழப்பன்.

டி.வி.ஆரின் இளமைக் கால சம்பவங்கள் அதிகம் கிடைக்கவில்லை. மத்திய காலத்தில் - "தினமலர்' ஆரம்பமாவதற்கு முன் - ஏராளமான பொது தொண்டுகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். "தினமலர்' தொடங்கிய பின் தனது பத்திரிக்கை மூலம் மக்கள் சேவையை பெரிய அளவில் செய்து முடித்துள்ளார்.

ஆகவே, பத்திரிக்கையை நேரடியாக டி.வி.ஆர்., கவனித்த கால் நூற்றாண்டு பணிகள் சிலவற்றையும் தொட்டுக் காட்டி உள்ளேன்.

இது ஒரு தனி நபரது வரலாறு மட்டுமல்ல... கால் நூற்றாண்டு குமரி மாவட்ட தமிழக வரலாறுகள் சிலவும் இணைந்துள்ளது. உண்மையில் "தினமலர்' தொடக்க கால முதல் இன்று வரை செய்த மக்கள் பணிகள் பற்றி ஒரு பெரிய ஆய்வு நூல் வருவதே நியாயம். அதை பிற்காலத்தில் யாராவது செய்வர் என்ற நம்பிக்கை உண்டு.

பேட்டிகள் தந்து உதவிய 60 பெரியோர்களில் நூல் வெளிவர வருஷங்கள் பல ஆனதால், இன்றைக்கு 10 பேர் இருப்பார்களா என்பதே சந்தேகம். பணியில் உதவிய அந்த அமரர்களுக்கு எனது மனப்பூர்வமான அஞ்சலிகளை கூறிக் கொள்வது அவசியமாகி உள்ளது.

இந்த நூலில் எல்லா தகவல்களையும் சொல்லி விட்டதாக நினைக்கக் கூடாது. இது ஒரு சிறிய ஆரம்பம். எதிர்காலத்திலும் இதன் தொடர்ச்சியை யாராவது ஒருவர் செய்வார் என நம்புகிறேன்.


நெல்லை தி.முத்துகிருஷ்ணன்
செப்டம்பர் 1, 1995


மூன்று கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடல் தந்த குழந்தை டி.வி.ஆர்,. அவரது மகத்தான சாதனையான "தினமலர்' இதழின் சின்னம் தாமரை. ஆகவே இவைகளை நினைவுபடுத்தும் வகையில் நூலுக்கு, "கடல் தாமரை' என்று பெயர் சூட்டி உள்ளேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 3:49 pm

கன்னங்கரிய கடலில் ஒரு சின்னஞ்சிறிய பூ



தமிழ் நாட்டின் எல்லையைச் சொல்ல வந்த மகாகவி பாரதி, நீலத்திரைக்கடலையும், குமரி அம்மனின் தவத்தையும் இணைத்து, மிகப் பெருமையாக, அற்புதமாக வர்ணித்து விடுகிறார். 1910 ம் ஆண்டை ஒட்டி, பாரதி இவ்வாறு கூறி இருக்கலாம். உண்மையில் அதுதான் தமிழகத்தின் எல்லையா? குமரியைத் தமிழகத்தின் எல்லையாக உருவாக்க எத்தனை பெரிய போராட்டம் நடந்திருக்கிறது!

அந்தப் போரட்டத்தில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள ஒரு குழந்தை 1908ல் பிறந்தது. அந்தக் குழந்தையின் வரலாற்றை வாசகர்கள் முன் பெருமையுடன் படைக்கிறோம். முக்கடல், சுற்றிலும் மலைக் கூட்டம், இயற்கைச் செல்வங்கள் இணைந்த, அழகு கொஞ்சும் நாஞ்சில் நாட்டில் நாம் குறிப்பிட்ட குழந்தை பிறந்து வளர்ந்தது.

அன்றைய நாஞ்சில் நாடு எப்படி இருந்தது?

நடை, உடை, கலை, கலாசாரம், உணவு, திருக்கோயில்கள், ஆட்சி முறை, மொழி, அனைத்துத் துறைகளிலும் நாஞ்சில் நாடு, தமிழ்நாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டே இருந்தது.

சூழ்நிலைகள் ஒரு மனிதரின் எண்ண உணர்வுகளுக்குத் துணையாக இருந்ததா அல்லது சூழ்நிலைகளை ஒருவர் மாற்றி அமைக்க முன் வந்தாரா என்பது நமக்குள் எழும் கேள்விகள். இக்கேள்விகளுக்குப் பதிலைக் காண, இப்போது நாம், முக்கால் நூற்றாண்டுக்கு முன் உள்ள நாஞ்சில் நாட்டின் தலைநகர் நாகர்கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்தது நாஞ்சில் நாடு. நாட்டின் பெயரே அதை ஒட்டி எழுந்ததுதான். பச்சைப் பசும் இரத்தினக் கம்பளங்கள் போர்த்தியது போன்ற மலைச்சிகரங்கள். ஒரு பக்கம் எப்போதும் பொங்கி எழுந்து வானத்தைத் தொட்டு விளையாடும் அலைகடல், நிலமோ சமதளமானது அன்று. எங்கும் மேடும், பெரும் பள்ளங்களும்! தனித்தனியாக அழகான வீடுகள். பெரும்பாலும் கள்ளிக்கோட்டை ஓடுகளையே கூரைகளாகக் கொண்டவை. வீட்டைச் சுற்றிச் சிறு மதில் சுவர். வீடுகள் அனைத்தும் கேரள பாணிக் கட்டடங்கள். முன் கதவுகள் இரண்டுக்குப் பதில் நான்காகக் காட்சி தரும். யாராவது அழைத்தால், மேல் கதவுகள் இரண்டை - ஜன்னல்களைத் திறந்து பார்ப்பது போலப் பார்க்கும் புதிய காட்சிகள். வீட்டைச் சுற்றி, தென்னைகள், பூச்செடிகள். சாலை ஓரங்களில் ஏராளமான காய்கள் தோரணங்களாகத் தொங்கும் பலாமரங்கள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக