புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_m10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_m10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 
50 Posts - 42%
prajai
 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_m10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_m10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 
4 Posts - 3%
Jenila
 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_m10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_m10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 
1 Post - 1%
M. Priya
 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_m10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 
1 Post - 1%
kargan86
 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_m10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 
1 Post - 1%
jairam
 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_m10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_m10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_m10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_m10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 
50 Posts - 29%
mohamed nizamudeen
 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_m10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 
8 Posts - 5%
prajai
 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_m10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 
6 Posts - 3%
Jenila
 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_m10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 
4 Posts - 2%
Rutu
 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_m10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_m10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_m10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_m10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 
1 Post - 1%
kargan86
 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_m10 பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?


   
   
Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Sun Oct 17, 2010 5:06 pm

காஃபிர்களை வெட்டிக் கொல்லுங்கள் என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகிறதே, இஸ்லாத்தை ஏற்காதவர்களை காஃபிர்கள் என்று வசைபாடுகிறதே, முஸ்லிமல்லாத மக்களுடன் சகிப்புத் தன்மையுடன் நடக்கக் கூடாது என்றெல்லாம் இஸ்லாம் கட்டளையிடுகிறதே?


பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் :

மேற்கூறியவை இஸ்லாத்தின் மீது பரவலாகக் கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள். இந்தக் குற்றச்சாட்டுக்களை சில விஷமிகள் பொதுமேடையில் பேசியும், இன்னும் சிலர் தற்போது இணையத்தளங்களின் எழுதுவதன் மூலம் முஸ்லீம்களுக்கும் மாற்று மதத்தவர்களுக்கும் பகைமை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இவை, உண்மை கலப்பில்லாத குற்றச்சாட்டுக்களாகும்.

முஸ்லிமல்லாதவர்களைக் காஃபிர்கள் என்று இஸ்லாம் கூறுகிறது உண்மை தான். காஃபிர்கள் என்பது ஏசுவதற்குரிய வார்த்தையன்று. அரபு மொழியில் காஃபிர்கள் என்பதற்கு மறுப்பவர்கள், நிராகரிப்பவர்கள் என்று பொருள். இஸ்லாத்தை மறுப்பவர்கள், இஸ்லாத்தை நிராகரிப்பவர்கள் என்ற பொருளில் இவ்வார்த்தை பயன் படுத்தப்படுகிறது.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை இஸ்லாத்தை ஏற்காதவர்கள் எனக் கூறுவதில் இழிவுபடுத்துதல் ஏதுமில்லை. காஃபிர்கள் என்பதன் பொருள் தெரியாத காரணத்தினால் அது ஏதோ திட்டக்கூடிய வார்த்தை என எண்ணிக் கொள்கின்றனர்.

'காஃபிர்களைக் கொல்லுங்கள்! காஃபிர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள்' என்றெல்லாம் குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளதே? என்ற குற்றச்சாட்டும் தவறாகப் புரிந்து கொண்டதனால் ஏற்பட்டதாகும். முதலில் அவர்கள் சுட்டிக் காட்டும் திருக்குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம்.

அவர்களைக் கண்ட இடத்தில் நீங்கள் வெட்டுங்கள்! உங்களை அவர்கள் வெளியேற்றியது போல் அவர்களை நீங்கள் வெளியேற்றுங்கள்! குழப்பம் கொலையை விடக் கொடியதாகும். மஸ்ஜிதுல் ஹராம்(கஃபா வளாகம்)அருகில் அவர்கள் உங்களுடன் போர் செய்யாத வரை அவர்களுடன் நீங்கள் போர் செய்யாதீர்கள்! அவர்கள்(அங்கே) உங்களுடன் போர் செய்தால் நீங்களும் அவர்களுடன் போர் செய்யுங்கள்! (அல்குர்ஆன் 2:191)

இது தான் அவர்கள் சுட்டிக் காட்டும் குர்ஆன் வசனம்.

இவ்வசனத்தில் 'அவர்கள்' என்று கூறப்பட்டுள்ளது. எந்த மொழியில் அவர்கள் என்று கூறப்பட்டாலும் அது யாரைக் குறிக்கிறது என்பதை முந்தைய வசனங்களில் தேடிப் பார்க்க வேண்டும். பொதுவாக முஸ்லிமல்லாத மக்களை அது குறிக்கின்றதா? குறிப்பிட்ட இனத்தவர்களைக் குறிப்பிடுகின்றதா? குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் மக்களைக் குறிப்பிடுகின்றதா? இதற்கான விடையை இதற்கு முந்தைய வசனங்களில் தேட வேண்டும்.

இதற்கு முந்தைய வசனத்தில் கூறப்பட்டதை அப்படியே எடுத்துக் காட்டுகிறோம். இந்தக் குற்றச்சாட்டு விஷமத்தனமானது என்பதை அதிலிருந்து யாரும் புரிந்து கொள்ள முடியும்.

உங்களுடன் போருக்கு வருபர்களுடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போரிடுங்கள்! வரம்பு மீறி விடாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறியவர்களை நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 2:190)

உங்களுடன் யாரேனும் வலிய வம்புச் சண்டைக்கு வந்தால் அவர்களுடன் போரிடுங்கள் என்று இவ்வசனத்தில் கூறிவிட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான் இறைவன்.

ஒரு ஆட்சிநடைபெரும் நாட்டில் இன்னொரு இன்னொரு நாட்டவர் அநியாயமாகப் போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் என்ன தவறு? எந்த அரசாவது தன்னுடன் போருக்கு வரக் கூடியவர்களை எதிர்த்துப் போராடாதிருக்குமா? அவ்வாறு நடக்கும் போரில் எதிரிகளைக் கொல்லாது மயிலிறகால் வருடிக் கொடுக்குமா?

போர் என வந்து விட்டால் எல்லா விதமான தர்மங்களையும் தூக்கி எறிவது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் திருக்குர்ஆன் 'அவர்களுடன் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்' எனக் கூறி போர்க்களத்திலும் புதுநெறியை இஸ்லாம் புகுத்துகிறது.

நியாய உணர்விருந்தால் பாராட்டியிருக்க வேண்டிய ஒரு வசனத்தை தவறாக விமர்சனம் செய்வது நியாயம் தானா? விமர்சனம் செய்பவர்கள் சிந்திக்கட்டும்.

அல்குர்ஆன் 4:89, 4:90, வசனங்களில் போர்ப் பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் எதிரிகளை வெட்டுங்கள் எனக் கூறப்படுகிறது.

அந்தச் சமயத்தில் கூட நீங்கள் முஸ்லிமல்லாத மக்களுடன் உடன்படிக்கை செய்திருந்தால் அவ்வாறு உடன்படிக்கை செய்த மக்களுடன் எதிரிகள் சேர்ந்து விட்டால் அவர்களைக் கொல்லாதீர்கள் எனவும் அவ்வசனங்கள் கூறுகின்றன. முஸ்லிமல்லாத எத்தனையோ சமுதாயத்தவர்களுடன் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உடன்படிக்கை செய்து அவர்களுடன் இணக்கமாக வாழ்ந்துள்ளனர்.

போர் செய்ய வந்த எதிரிகளுக்கு உடன்படிக்கை செய்தவர்கள் அடைக்கலம் கொடுத்தால் அவர்களை விட்டு விடுமாறும் இஸ்லாம் கூறுகிறது.

போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நேரத்தில் எந்த ஆட்சியாளரும் செய்வதை விட பெருந்தன்மையுடன் நடக்கக் கூறும் இவ்வசனங்களைத் தான் சிலர் தங்களின் தவறான நோக்கத்திற்குப் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் நடக்கும் போது 'எதிர்த்து வருவோரை சுட்டுத் தள்ளுங்கள்' என்று இந்தியப் பிரதமர் ஆணையிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த உத்தரவுப்படி பாகிஸ்தானிய முஸ்லிம் வீரர்கள் சுட்டுத் தள்ளப்பட்டால் இந்தியா முஸ்லிம்களை கொன்று குவிக்கிறது என யாரும் கூறமாட்டார்கள். சுடப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் முஸ்லிம்கள் என்பதற்காக அவர்கள் சுடப்படவில்லை. போருக்கு வந்த எதிரிகள் என்ற காரணத்திற்காகத்தான் இவர்கள் சுடப்படுகின்றனர்.

ஆனால் இஸ்லாமிய வரலாற்றை மட்டும் இவ்வாறு புரிந்து கொள்ள மறுப்பது தான் விசித்திரமாக உள்ளது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகரமாம் மதீனாவிலும், அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் யூதர்கள் வாழ்ந்தனர். கிறித்தவர்கள் வாழ்ந்தனர். முஸ்லிமல்லாத எத்தனையோ மக்கள் வாழ்ந்தனர். அவர்களெல்லாம் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்லப்பட வில்லை.

இஸ்லாம் எவ்வளவு சகிப்புத் தன்மையுடைய மார்க்கம் என்பதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை மட்டும் தவறான எண்ணம் கொண்டவர்கள் முன் வைப்பது பொருத்தமாக இருக்கும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனா நகர் சென்றதும் இறைவனை வணங்குவதற்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அந்தப்பள்ளி வாசலில் நபிகள் நாயக்(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அமர்ந்திருந்த போது முஸ்லிமல்லாத ஒரு கிராமவாசி வருகிறார். பள்ளிவாசலுக்குள் நுழைந்து அதன் ஒரு மூலையில் சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார். இதைக் கண்ட நபித்தோழர்கள் ஆத்திரமுற்று அவரைத் தாக்கத் தயாரானார்கள். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 'அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை விட்டு விடுங்கள்' எனக் கூறினார்கள்.

அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை காத்திருந்து அவரை அழைத்தனர். அவரிடம் மென்மையாக 'இது அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலம். இங்கே அசுத்தம் செய்யக் கூடாது' என்று கூறி அனுப்பினார்கள்.


பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தவரைக் தண்டிக்காமல் அவர்கள் விட்டு விட்டது சாதாரணமான ஒரு செயலாக யாருக்கும் தோன்றலாம். ஆனால் சிறுநீர் கழிப்பதைக் கண்டு, அவர் கழித்து முடிக்கும் வரைக் காத்திருந்து மென்மையாக அறிவுரை கூறியதைச் சாதாரணமாகக் கருதமுடியாது. இத்தகைய சகிப்புத்தன்மையை எந்த மதவாதியிடமும் காணமுடியாது.

இஸ்லாம் ஒரு கடவுளைத்தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடாது, என்பதில் இஸ்லாத்திற்கு இரண்டாவது கருத்துகிடையாது. அதற்காகப் பிறமதத்தவர்களால் வழிபாடு செய்யப்படுபவர்களை ஏசலாமா என்றால் ஏசக்கூடாது என இஸ்லாம் திட்டவட்டமாக உத்தரவிடுகிறது.

அவர்கள் அல்லாஹ்வை விடுத்து யாரைப் பிரார்த்திக்கின்றார்களோ அவர்களை நீங்கள் ஏசாதீர்கள். அவ்வாறு ஏசினால் அறியாமை காரணமாக அவர்கள் அல்லாஹ்வை ஏசுவார்கள். (அல்குர்ஆன் 6:108)

தான தர்மங்கள் செய்வதில், உதவிகள் புரிவதில் நீதியை நிலைநாட்டுவதில் முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் எனப்பாகுபாடு காட்டக் கூடாது எனவும் இஸ்லாம் தெளிவான கட்டளை பிறப்பிக்கிறது.

மார்க்க விஷத்தில் உங்களுடன் எதிர்த்துப் போர் புரியாதவர்களுக்கும் உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும் நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கவில்லை. (அல்குர்ஆன் 60:8)

விசுவாசிகளே! நீதியை நிலைநாட்டக் கூடியவராகவும் நீதிக்குச் சாட்சிகளாகவும் ஆகி விடுங்கள்! ஒரு சாரார் மீது(உங்களுக்குள்ள) வெறுப்பு(அவர்களுக்கு) நீதி செலுத்தாதிருக்கும்படி உங்களைத் தூண்டக் கூடாது. நீங்கள்(அனைவரிடமும்) நீதியாக நடந்து கொள்ளுங்கள்! அதுவே இறையச்சத்துக்கு நெருக்கமானதாகும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் (அல்குர்ஆன் 5:8)


இத்தகைய மார்க்கத்தைத் தான் வன்முறை மார்க்கம் எனத் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நியாய உணர்வுடையோர் இதை உணர்வார்கள்.

.

நன்றி : http://egathuvam.blogspot.com/

இதே கேளிவிக்கு ஜாகிர் நாயக் அவர்கள் அளித்த பதிலிலிருந்து ஒரு பகுதி

:அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸ{ரத்துத் தவ்பாவின் ஆறாவது வசனம் இஸ்லாம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் இல்லை என்பதை தெளிவாக உணர்த்துகிறது. அருள்மறை வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

'(நபியே!) முஷ்ரிக்குகளில் (இறைவனுக்கு இணைவைப்பவர்கள், இறை மறுப்பாளர்கள்) யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!. அதன்பின் அவரை பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு ( பத்திரமாக) அனுப்பபுவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்."(அல் குர்ஆன் 9:6)

அருள்மறை குர்ஆன் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது இறைவனுக்கு இணைவைப்பவர்கள் உங்களிடம் புகலிடம் தேடுவார்கள் எனில், அவர்களுக்கு அபயமளியுங்கள் என்று சொல்வதோடு நின்று விடாமல், அவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு சென்றடையும் வரை அவருக்கு பாதுகாப்பளியுங்கள் என்றும் வலியுறுத்துகிறது. இன்றைய நவநாகரீக உலகத்தில் அமைதியை விரும்பும் ஒரு ராணுவத் தளபதியாக இருந்தால் - போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, எதிரி ராணுவ வீரர்களை மன்னித்து விட்டுவிடலாம். ஆனால் எந்த ராணுவ தளபதி எதிரி ராணுவ வீரர்களை, அவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்தைச் சென்றடையும்வரை அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்?.

இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் இல்லை. அமைதியையும் - சமாதானத்தையும் விரும்பக்கூடிய மார்க்கம் என்பதை மேற்கூறிய குர்ஆனிய வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.



நன்றி : ஏகத்துவம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 17, 2010 5:25 pm

காஃபிர்கள் என்பதற்கு நல்ல விளக்கம் நண்பா இந்த வார்த்தையை நான் உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில் கேட்டுள்ளேன் ஆனால் அதற்க்கு அப்பொழுது அர்த்தம் தெரியாது விளக்கத்துக்கு மிக்க நன்றி

இஸ்லாம் மட்டுமல்ல எந்த மதமும் சமயமும் என்றுமே அமைதியையும் சமாதானத்தையும் விரும்பகூடியதுதான் எந்த மதமுமே என்றுமே யாரையும் துன்புறுத்த சொல்லவில்லை. மாறாக எல்லோரிடத்திலும் அன்பை மட்டுமே காட்ட சொல்லுகிறது , தவறு மததிலில்லை மனிதர்களிடதேதான் என்ன செய்வது எல்லமததிலும் மார்க்கங்களிலும் மததுவேசர்கள் இருக்ககதானே செய்கிறார்கள் அவர்கள் நிழலில் வளரும் வேர்களையும் அவர்கள் விசசெடிகளாக மாற்றிவிடுகிறார்கள், இன்று இறை மார்கங்களைபற்றி சரியாக எடுத்துரைக்க எத்தனைபேருக்கு தெரியும் , தனக்கு தெரிந்தது தான் கேட்டது இதை வைத்து கதைகட்டி இது இப்படிதான் என்று நண்பவைதுவிடுகிரார்கள் யாரை குறை கூறுவது , ஆண்டவன் ஒருவன் இருக்கிறான் அவன் அனைவரையும் பார்த்துக்கொண்டுதான் உள்ளான் சரியான நேரத்தில் தவறான மனிதர்களுக்கு சரியான பாடம் புகட்டுவான் என்று அனைவரும் நம்புவோம்



ஈகரை தமிழ் களஞ்சியம்  பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Oct 17, 2010 5:27 pm

இஸ்லாம் மட்டுமல்ல எந்த மதமும் சமயமும் என்றுமே அமைதியையும் சமாதானத்தையும் விரும்பகூடியதுதான் எந்த மதமுமே என்றுமே யாரையும் துன்புறுத்த சொல்லவில்லை.



சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Oct 17, 2010 7:14 pm

அழகான பதிவிட்டமைக்கு நன்றி நண்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Oct 17, 2010 7:25 pm

எந்த ஒரு மதமும் பகைமையையும் வெறுப்பையும், ஆண்டவன் பெயரால் வன்முறைகளையும் ஆதரிப்பதுமில்லை. நியாயப்படுத்துவதுமில்லை. ஆனால், மதம் மதமாக இருக்கும்வரையில் எந்தப் பிரச்சனையுமில்லை. ஆனால், மதம் வெறியாக மாறும் போது தான் பிரச்சனையே துவங்குகிறது. இந்து மதத்திலும், இசுலாமிய மதத்திலும், கிருத்துவ மதத்திலும், ஜைன மதத்திலும் கூட தீவிரவாதிகள் உள்ளனர். முக்கியமாக கவனிக்க வேண்டியது, சில புல்லுருவிகள் தங்களின் சுயநல இலாபத்துக்காக மக்களின் மத நம்பிக்கையை பயன்படுத்தி அவர்களை மூளை சலவை செய்து மதத்தின் பெயரால், வன்முறையை செயல்படுத்துகின்றனர். மக்கள் தான் விழிப்புடன் இருக்கவேண்டும்.

Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Sun Oct 17, 2010 9:19 pm

balakarthik wrote:

இஸ்லாம் மட்டுமல்ல எந்த மதமும் சமயமும் என்றுமே அமைதியையும் சமாதானத்தையும் விரும்பகூடியதுதான் எந்த மதமுமே என்றுமே யாரையும் துன்புறுத்த சொல்லவில்லை. மாறாக எல்லோரிடத்திலும் அன்பை மட்டுமே காட்ட சொல்லுகிறது , தவறு மததிலில்லை மனிதர்களிடதேதான் என்ன செய்வது எல்லமததிலும் மார்க்கங்களிலும் மததுவேசர்கள் இருக்ககதானே செய்கிறார்கள் அவர்கள் நிழலில் வளரும் வேர்களையும் அவர்கள் விசசெடிகளாக மாற்றிவிடுகிறார்கள், இன்று இறை மார்கங்களைபற்றி சரியாக எடுத்துரைக்க எத்தனைபேருக்கு தெரியும் , தனக்கு தெரிந்தது தான் கேட்டது இதை வைத்து கதைகட்டி இது இப்படிதான் என்று நண்பவைதுவிடுகிரார்கள் யாரை குறை கூறுவது , ஆண்டவன் ஒருவன் இருக்கிறான் அவன் அனைவரையும் பார்த்துக்கொண்டுதான் உள்ளான் சரியான நேரத்தில் தவறான மனிதர்களுக்கு சரியான பாடம் புகட்டுவான் என்று அனைவரும் நம்புவோம்

சியர்ஸ்

Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Sun Oct 17, 2010 9:22 pm

நிசாந்தன் wrote:இந்து மதத்திலும், இசுலாமிய மதத்திலும், கிருத்துவ மதத்திலும், ஜைன மதத்திலும் கூட தீவிரவாதிகள் உள்ளனர். முக்கியமாக கவனிக்க வேண்டியது, சில புல்லுருவிகள் தங்களின் சுயநல இலாபத்துக்காக மக்களின் மத நம்பிக்கையை பயன்படுத்தி அவர்களை மூளை சலவை செய்து மதத்தின் பெயரால், வன்முறையை செயல்படுத்துகின்றனர். மக்கள் தான் விழிப்புடன் இருக்கவேண்டும்.

மிகச் சரி... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 17, 2010 9:26 pm

தவறான பிரச்சாரத்தைத் தடுக்கும் மிகச்சிறந்த பதிவு.

மனத்தில் மனிதம் புகுந்தால் மதம் தானாக்வே வெளியேறிவிடும் என்பது நான் என்மாணவர்களுக்கு கற்றுத்தரும் ஒரு முக்கிய அறிவுரை..!

மிக்க நன்றி நண்பரே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Sun Oct 17, 2010 9:47 pm

கலை wrote:தவறான பிரச்சாரத்தைத் தடுக்கும் மிகச்சிறந்த பதிவு.

மிக்க நன்றி நண்பரே.. புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக