புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க வளமுடன் Poll_c10வாழ்க வளமுடன் Poll_m10வாழ்க வளமுடன் Poll_c10 
366 Posts - 49%
heezulia
வாழ்க வளமுடன் Poll_c10வாழ்க வளமுடன் Poll_m10வாழ்க வளமுடன் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
வாழ்க வளமுடன் Poll_c10வாழ்க வளமுடன் Poll_m10வாழ்க வளமுடன் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
வாழ்க வளமுடன் Poll_c10வாழ்க வளமுடன் Poll_m10வாழ்க வளமுடன் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
வாழ்க வளமுடன் Poll_c10வாழ்க வளமுடன் Poll_m10வாழ்க வளமுடன் Poll_c10 
25 Posts - 3%
prajai
வாழ்க வளமுடன் Poll_c10வாழ்க வளமுடன் Poll_m10வாழ்க வளமுடன் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
வாழ்க வளமுடன் Poll_c10வாழ்க வளமுடன் Poll_m10வாழ்க வளமுடன் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வாழ்க வளமுடன் Poll_c10வாழ்க வளமுடன் Poll_m10வாழ்க வளமுடன் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
வாழ்க வளமுடன் Poll_c10வாழ்க வளமுடன் Poll_m10வாழ்க வளமுடன் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
வாழ்க வளமுடன் Poll_c10வாழ்க வளமுடன் Poll_m10வாழ்க வளமுடன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க வளமுடன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 10, 2009 1:19 am

வாழ்க வளமுடன் %E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF
வேதாத்திரி மகரிஷி




வாழ்க என்று சொல்கிறபோது எல்லாம் பெற்று இனிதாக நீங்கள் வாழ வேண்டும் என்ற பொருள் இருக்கிறது. வளமுடன் என்று சேர்க்கிறபோது வாழ்க்கையிலே உங்களுக்குத் தேவையான எல்லா பேறுகளையும் பெற்று வாழவேண்டும் என்று அமைகிறது. இந்த வாழ்த்தும் வார்த்தைகளும் ஒருவரிடமிருந்து வெளியே வரும்போது ஒரு நல்ல அலை புறப்பட்டு வருகிறது. இந்த அலை மற்றவர்களிடம் செல்லும்போது இருவருக்குமிடையே ஓர் இனிமையான உணர்வை தானாகவே ஏற்படுத்திவிடும். இது ஒரு விஞ்ஞான அடிப்படையிலான தத்துவம்.

ஒரே வார்த்தையை திரும்பத் திரும்பச் சொல்லி உயிர் அலைகளில் சீரான அதிர்வை ஏற்படுத்தும்போது மனம் வேறு எதையும் நினைத்து அலை பாயாமல் இருக்கும். மேலும் மன அலை வேகம் ஒரு குறிப்பிட்ட அதிர்வில் வந்து நிற்கும். இது வாழ்க வளமுடன் என்ற சொல்லுக்கும் பொருந்தும்.

குழந்தைகளைக்கூட நாள்தோறும் இரண்டு முறை நீங்கள் வாழ்த்த வேண்டும். சிலசமயம் குழந்தைகள் குறும்பு செய்யக்கூடும். அப்போது குழந்தைப் பருவத்தில் நாம் என்னென்ன பாடு படுத்தினோம் என்பதை எண்ணிப் பாருங்கள். நம் தாய், தந்தையர் நம்மிடம் பட்ட கஷ்டங்களை நினைத்துப் பார்த்தால் இது அடிபட்டுப்போய்விடும்.

மூன்று வயது வரையில் நாம் என்ன செய்தோமோ அது நினைவுக்கு வருவது கடினம். மூளை ஒரு கட்டடம் சின்னஞ்சிறு வயதில் போதிய அளவு உறுதி பெறாததனால் அந்தப்பதிவு சரியாக விழுவதில்லை விரைவிலேயே அது கலைந்து போய்விடும். ஆகையினால் மறந்து போயிருப்போம்.

எத்தனையோ பேர், என் பிள்ளை நான் சொல்வதைக் கேட்பதில்லை. ஒழுங்காக படிப்பதில்லை என்றெல்லாம் குறைபட்டுக் கொள்கிறார்கள். இவர்களிடமெல்லாம் வாழ்த்துங்கள் என்று நான் சொல்கிறேன்.

அப்படி வாழ்த்திய பெற்றோர்கள் இருபது நாட்களுக்குள்ளாக என்னிடம் வந்து, அற்புதமான மாற்றம் இருக்கிறது ஐயா பிள்ளை தானாக உட்கார்ந்து படிக்கிறான். வெளியே சுற்றுவதே இல்லை என்று வியப்போடு தெரிவிக்கிறார்கள். அதை நானே பல குடும்பங்களில் பார்த்திருக்கிறேன். ஆகவே இந்த முறையிலே உங்கள் ஒவ்வொரு குழந்தையையும் வாழ்த்தி, நிச்சயம் அவர்களை நல்ல குழந்தைகளாக மாற்ற முடியும்.

அடுத்து, நமது உடன்பிறந்தோரை வாழ்த்த வேண்டும். இந்த உயிர் எங்கிருந்து வந்தது? நம் தாய், தந்தையரிடமிருந்துதானே அதே தாய், தந்தையர்கள் உயிர்தான் உடன்பிறந்தோரிடம் இருக்கும். உடல்தான் வேறுபட்டு இருக்கிறது. அதாவது ஒரே உயிர் இரண்டு பட்டு இருக்கிறது. அவ்வளவுதான்

எனவே ஒருவரது செயலால் விளையும் நன்மை- தீமைகளின் அதிர்வு அது சகோதரியாக இருந்தாலும் சரி அல்லது சகோதரனாக இருந்தாலும் சரி, உடன் பிறந்தோர் அத்தனை பேருக்கும் போகும். ஆகையால்தான் நமது உடன் பிறந்தவர்களையும் வாழ்த்துவது அவசியம்.

வாழ்க்கையில் எல்லோருக்கும் நட்பு என்பது விலைமதிக்க முடியாத ஒன்று. இதனால் நண்பர்களையும் வாழ்த்த வேண்டும். நமக்கு நண்பர்கள் நூறு பேர்கூட இருக்கக்கூடும்.

அத்தனை பேரையும் வாழ்த்திக் கொண்டிருக்க முடியாது. முக்கியமானவர்கள், நினைவுக்கு வரக் கூடியவர்கள், நெருக்கமானவர்கள் ஆகியோரை மனதில் நினைத்து நாம் வாழ்த்துவது முடியாத காரியமில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 10, 2009 1:19 am

பிறகு தொழிற்சாலையில் மேலாளர்கள், சக ஊழியர்கள், உதவியாளர்கள் போன்றவர்களை ஒவ்வொருவராக நினைத்து வாழ்த்திப் பாருங்கள். இது வரையில் மிகவும் முரட்டுத்தனமாக உங்களிடம் நடந்து கொண்டவர்கள்கூட நாளாவட்டத்தில் அன்போடும் பண்போடும் நடந்து கொள்வார்கள். அப்படி உங்களுடைய வாழ்த்துக்கு இணங்காமல் ஒரு மேலாளர் முரட்டுத் தனமாக இருந்தால், நிச்சயமாக நான் சொல்கிறேன் அவரோ அல்லது நீங்களோ அந்த இடத்தை விட்டு மாற்றப்படும் நிலை வந்துவிடும் உங்களது வாழ்த்துக்கு விரைவிலேயே பயன் கிடைத்து விடும்

அப்புறம் இன்னொரு விஷயம்.... நீங்கள் உங்கள் எதிரியையும் வாழ்த்த வேண்டும் என்று உறுதியோடு சொல்கிறேன். இதனால் பகை மறையும். பாசம் நிறையும். இந்த வாழ்த்தின் பயனால் திருடியவர்கூட பொருளை திரும்ப ஒப்படைத்த சம்பவமும் நடந்திருக்கிறது.

இது டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஓர் அன்பரின் குழந்தைக்குப் போலியோ ஒரு மந்திரவாதி அவரிடம் வந்து, நான் அம்மன் பூஜை செய்து உங்கள் குழந்தையை குணப்படுத்தி விடுவேன் என்றார். அவரும் அந்த மந்திரவாதியை நம்பினார். பூஜை செய் வதற்குரிய சாமான்கள் வாங்குவதற்காக இரண்டாயிரம் ரூபாய் கேட்டார். பின்னர் பூஜை செய்ய ஆரம்பித்தார் மந்திரவாதி. இந்த அம்மனுக்குப் பூஜை செய்ய தங்க நகைகள் போடவேண்டும். உங்களிடம் உள்ள நகைகளைக் கொடுங்கள் என்று கேட்டார்.

அந்த அன்பர் ஓரளவு வசதிபடைத்தவர். எனவே வீட்டிலிருந்த எட்டு சவரன் நகைகளை கொடுத்துவிட்டார். அம்மன் சிலைக்கு நகைகள் அணிவிக்கப்பட்டது. அந்த அன்பரின் வீட்டிலேயே பூஜை நடந்தது பின்னர் இதுவரை செய்த பூஜை மட்டும் போதாது. இன்னும் பதினைந்து நாட்களுக்கு தொடர்ந்து செய்ய வேண்டும். நான் எனது வீட்டுக்கு எடுத்துச் சென்று பூஜை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார் மந்திரவாதி. குழந்தையின் பெற்றோரும் சரி என்று சொல்லி நம்பி அனுப்பியிருக்கிறார்கள்.

அவர் அந்தச் சிலையை அதில் போட்டிருந்த நகைகளோடு அப்படியே எடுத்துச் சென்றுவிட்டார். பதினைந்து நாள் ஆயிற்று, ஒரு மாதம் ஆயிற்று, இரண்டு மாதம் ஆயிற்று. ஆளே அகப்படவில்லை. கடைசியில் அந்தத் தம்பதிகள் என்னிடம் வந்தார்கள். மந்திரவாதியிடம் ஏமாந்து எங்க நகை பறிபோய் விட்டது. இப்ப போலீஸில் புகார் கொடுக்கப்போகிறோம். உங்கள் ஆசி வேண்டும் என்று கேட்டார்கள். நான் ஆசி செய்து பிரயோசனமில்லை. இப்போது உங்க ஆசியைத்தான் நீங்க ஆரம்பிக்கணும். அந்த ஆளை உங்கள் இரண்டு பேருக்கும் தெரியும் அவரை நினைத்து இரண்டுபேரும் நன்கு வாழ்த்திக்கொண்டு வாருங்கள். உங்களுக்குப் பதினைந்து நாள் அல்லது ஒரு மாதத்திலே நல்ல பலன் கிடைக்கும் என்று நான் அவர்களிடம் சொன்னேன். அவர்களுக்கு முதலில் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. இருந்தாலும் நான் சொல்கிறேன் என்பதற்காக சரி, அப்படிச் செய்கிறோம் என்று கூறிச் சென்றார்கள்.

அதற்கப்புறம் இருவருமே தினமும் காலையிலும் மாலையிலும் தியானம் செய்தபிறகு மந்திரவாதியை நினைத்து வாழ்த்திக் கொண்டே வந்தார்களாம். பதினைந்தாவது நாள் காலையிலே ஐந்து மணிக்கு கடும் குளிரில் வந்து கதவைத் தட்டினாராம். அந்த அன்பர் சென்று கதவைத் திறந்ததும், இந்தாப்பா, உன் நகை என்று ஒரு பொட்டலத்தை அவர் கையில் கொடுத்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் விறுவிறுவென சென்றுவிட்டானாம் மந்திரவாதி. உள்ளே போய் அதைப்பிரித்து மனைவியிடம் அவர் காண்பிக்க, அவ்வளவும் இவர்கள் கொடுத்த நகைகள் இதை ஒரு பெரிய ஆச்சரியமாக நமது மனவளக்கலை மன்றக் கூட்டத்திலே வந்து சொன்னார் அந்த அன்பர்

ஒரு செடியை வாழ்த்தும் போதுகூட அதிலிருந்து பிரதிபலிப்பு வரும். ஒரு மரத்தை நாம் வாழ்த்திக் கொண்டே இருக்க, அது நிறைய பழம் கொடுக்கும். இதை நான் பார்த்து இருக்கிறேன். ஆக நமது எந்த வாழ்த்தும் வீண் ஆகாது.

வாழ்க வளமுடன்- வாழ்க வளமுடன் என்று சொல்லச் சொல்ல நம் உடல் நன்றாக இருக்கும். மனம் நன்றாக இருக்கும். நம்மைச் சுற்றிலும் ஒரு நல்ல அலை இயக்கம் இருக்கும். நாம் போகுமிடமெல்லாம் நன்றாக இருக்கும்.

வாழ்க வளமுடன்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக