ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் படை- 1 முதல் 100 வரை

+8
அப்புகுட்டி
nandhtiha
வழிப்போக்கன்
வள்ளியப்பன்
kirikasan
பிளேடு பக்கிரி
அலட்டல் அம்பலத்தார்
நிசாந்தன்
12 posters

Page 6 of 13 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13  Next

Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 6 Empty தமிழரின் படை- 1 முதல் 100 வரை

Post by நிசாந்தன் Sat Jul 31, 2010 4:34 am

First topic message reminder :

1956ல் இலங்கையின்
அரசாங்க மொழியாகச் சிங்களத்தை அறிவிக்க முற்பட்டார்கள். தந்தை செல்வாவின் தலைமையில்
தமிழர்கள் அறவழிப் போராட்டம் நடாத்தினர். காலே ஃபேஸ் விடுதி வழியாக சென்றார்கள். கொழும்பு
துறைமுகம் அருகில் தான் உள்ளது. பணிகளை முடித்துக் கொண்டு சிங்கள பணியாளர்கள் எதிர்பட்டனர்.
பேனர்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்களைப் பார்த்து அதிர்ந்தனர்.



சிங்கள நாட்டில்
சிங்களத்தை ஆட்சி மொழியாக கொண்டுவர தமிழர்கள் எதிர்ப்பதா? ஒருவரையும் விடக்கூடாது என
முடிவெடுத்து, கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து, தாக்கத் தொடங்கினர். சிறிது நேரத்தில்,
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களவர்கள் திரண்டுவிட்டனர். எக்காரணம் கொண்டும் திருப்பித்
தாக்கக் கூடாது என, தந்தை செல்வா தடுத்துவிட்டார். தமிழர்கள் சிதறி அங்கும் இங்கும்
ஓடினர். ஒளிந்து கொள்ளத்தான் ஒரு இடமும் கிடைக்கவில்லை. மனோகரன், வசீகரன் தந்தை செல்வாவின்
மகன்கள் இருவரும் தூக்கிவீசப்பட்டார்கள்..



இத்தாக்குதல்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மட்டும் தாக்கவில்லை, அனைத்து தமிழர்களின் வீடுகளிலும்
கடைகளிலும் புகுந்து தாக்கினார்கள், சூரையாடினார்கள். பேருந்து, ஆட்டோ மிதிவண்டியில்
செல்கின்ற தமிழர்கள் ஒருவரையும் விடவில்லை. இந்த தாக்குதலை கவனித்துப் பார்த்தால் நன்றாக
புரியும்… இந்த வெறி திடீரென தோன்றியது அல்ல. பல ஆண்டுகளாக, அவர்களின் மனதில் கனத்துக்
கொண்டிருந்த நெருப்பு, கிடைத்த சிறு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எரிமலையாக வெடித்தது.
தமிழன் எங்கெல்லாம் வசிக்கிறான், அவன் வீடு எண், கடைகள் எக்கெல்லாம் உள்ளது என சுலபமாக
கண்டுபிடித்து தாக்கினார்கள்.



ஆயினும், போராட்டக்
குழு, நாடாளுமன்றத்தை அடைந்தது. பிரதமர் பண்டாரநாயக்காவின் அலுவலகத்திற்குள் இரத்தம்
சொட்ட சொட்ட அமிர்தலிங்கமும், சுந்தரலிங்கமும் நுழைந்தனர். தங்களின் கருத்தை மனுவில்
குறிப்பிட்டு பிரதமரிடம் கொடுத்தனர். அவர்கள் சென்றபின், அது குப்பைத்தொட்டிக்கு சென்றது.
அன்று மாலை ஐந்து மணிக்கு தந்தை செல்வா, சத்தியாகிரக போராட்டத்தை திரும்பப் பெற்றார்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down


தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 6 Empty தமிழரின் படை-40

Post by நிசாந்தன் Sat Oct 16, 2010 6:50 pm

பத்தியம்பிள்ளை தானாகவந்து, புலிக் குகைக்குள் மாட்டிக் கொண்டார். உமா மகேசுவரன், நாகராசா, வாமதேவன் புடைப்படங்களை பெரிதுபடுத்தி ஊர் முழுக்க ஒட்டினார். பிரபாகரனைப் பிடிப்பேன். புலிகளை ஒடுக்குவேன் என சூழுரை வேறு, மிக தீவிரமாக தன் புலன்விசாரணையை ஆரம்பித்தார். சில துப்புகளையும் கண்டுபிடித்தார்.

மன்னார் மாவட்டம். உள்ளே, ஏதோ ஒரு காட்டுப் பகுதிக்குள் தான் பிரபாகரன் பதுங்கி இருக்கிறான். ஆயுதங்களோடு போனால் அமுக்கிவிடலாம் என ஒரு ஜீப் எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள். குறிப்பிட்ட தூரம் சென்றதும் இறங்கினார்கள். காலடி தடங்கள் காணப்பட்டன. பத்தியம்பிள்ளை உற்சாகமானார். பத்தியம்பிள்ளை தேடிக் கொண்டிருந்த உமா மகேசுவரன், நாகராசா மட்டுமல்லாமல், செல்லக்கிளி, ரவி என்று அனைத்து முக்கிய தலைகளும் அங்கே தான் இருந்தார்கள்.

கூடுதல் எச்சரிக்கையுடன் நடந்திருந்தால், அவர்கள் அனைவரையும் பத்தியம்பிள்ளை பிடித்திருக்கலாம். புலிகளின் சகாப்தம் அன்றே ஒரு முடிவுக்கு வந்திருக்கும்.

அதற்குள் அவர்கள் சுதாகரித்துக் கொண்டார்கள். ஏதோ ஒரு வாகனம். விளக்கை அணைத்துவிட்டு, இருட்டில் ஊர்ந்து வருகிறது. தயாராக இருக்கவும். செல்லக்கிளி பத்தியம்பிள்ளையை நோக்கி நடந்து வந்தார். கையைத் தூக்கு. விடுதலைபுலிகள் இயக்கத்தை சேர்ந்தவன் தானே! பிரபாகரன் எங்கே? உமா மகேசுவரன் எங்கே? ஆயுதங்களை எங்கே பதுக்கி வைத்திருக்கிறீர்கள்? அதட்டினார் பத்தியம்பிள்ளை.

செல்லக்கிளி பணிவாக குனிந்து, ஐயா, ஒன்றும் செய்துவிடாதீர்கள். நீங்கள் எங்கே கூப்பிட்டாலும் வருகிறேன். என்ன கேட்டாலும் சொல்கிறேன். அதற்குமுன் அந்த குடிசைக்குள் வாருங்கள் தேநீர் அருந்திவிட்டு செல்லலாம். அவர்களும் நம்பி உள்ளே சென்றார்கள். ஒரு தோட்டா பத்தியம்பிள்ளைக்கு, மற்றவர்களும் அவர் கூடவே பரலோக பதவி அடைந்தனர். உடல்களை அருகில் இருந்த கிணற்றில் வீசினர். ஜீப்பை கிளிநோச்சி கொண்டு போய் கொளுத்தினார்கள். ஒன்றுமே தெரியாததைப் போல திரும்பினர்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 6 Empty Re: தமிழரின் படை- 1 முதல் 100 வரை

Post by nandhtiha Sat Oct 16, 2010 7:15 pm

அனைவருக்கும் வணக்கம்
தமிழரின் படை எழுதி வரும் அன்பருக்கு என் வணக்கங்கள். இதனை மொத்தமாக எழுதி (RAR) கோப்பாக மாற்றி தளத்தில் ஏற்றினால் நல்லது.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 6 Empty Re: தமிழரின் படை- 1 முதல் 100 வரை

Post by நிசாந்தன் Sat Oct 16, 2010 11:46 pm

நன்றி நந்திதா. முன்னர் ஒரு நண்பருக்கு நான் பதிலளித்ததையே உங்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். என்னவென்றால், நான் ஒரு மருத்துவ மாணவன். எனக்கு அதிக நேரம் இடைவெளி கிடைக்காது. எனக்கு கிடைக்கும் சில மணித்திலாய நேரத்தில் புலிகளின் வரலாறை அனைவரும் அறிய வேண்டும் என இங்கு எழுது்கிறேன். மேலும் RAR கோப்பாக ஏற்றும் போது, ஒரு அத்தியாயத்தில் சில நண்பர்களுக்கு வரும் சந்தேகங்களை என்னால் நிவர்த்தி செய்ய இயலாது. ஏனென்றால் புலிகளுக்கு எதிராக உலக அரங்கில் பல அவதூறுகள் பரப்பிவிடப்பட்டுள்ளன. அவற்றை நான் அறிந்தவரையில் நிவர்த்தி செய்வதும் எனது கடமையாகும். தனித் தனி அத்தியாயங்களாக பதிவு செய்யும்போது நண்பர்களுக்கு வரும் சந்தேகங்களை என்னால் நிவர்த்தி செய்ய இயலும்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 6 Empty தமிழரின் படை-41

Post by நிசாந்தன் Sat Oct 16, 2010 11:54 pm

”எத்தனை காலத்துக்கு தான் இப்படி மறைந்து மறைந்து தாக்குதல் நடாத்துவது? நாம் யார் என்று மக்களுக்கு தெரிய வேண்டாமா?” என்றார் உமா மகேசுவரன்.

“நாம் நடாத்துவது ஒரு இரகசிய அமைப்பு” என்றார் பிரபாகரன்.

”மக்களின் ஆதரவு நமக்கு தேவை. நாம் என்ன செய்கிறோம் என அவர்களுக்கு தெரிய வேண்டும். உங்கள் தலைமையின் கீழ்தான் நாங்கள் இயங்குகிறோம் என அவர்களுக்கு தெரியவேண்டும்” என்றார் உமா மகேசுவரன்.

அது சரியான யோசனையாகப்பட்டது. PLO(Palestine Liberation Organisation), IRA(Irish Republic Army) போன்ற இயக்கங்கள் ஒரு காலத்தில் மக்களிடம் தங்களை பகிரங்கமாக வெளிக்காட்டிக் கொண்ட இயக்கங்களே. மேலும் உமா மகேசுவரன் கூறிய மற்றொரு விடயம் அவரை சிந்திக்க வைத்தது. துரையப்பா, கனகலிங்கம் போன்ற துரோகிகளை மிகவும் சிரமப்பட்டு அகற்றியிருக்கிறோம். அதை செய்தது நாம் தான் என மக்களுக்கு சொல்ல வேண்டும். அப்போது தான் அவர்கள் நம்மை ஆதரிப்பார்கள்.

ஏப்ரல் 25,1978-ம் தேதி அந்த கடிதம் வீரகேசரி இதழில் பிரசுரமானது. TNT என முன்பு செயல்பட்டுக் கொண்டிருந்த எமது இயக்கத்தின் தற்போதைய பெயர் LTTE. கீழ்கண்டவர்களை நாங்கள் தான் கொன்றோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். துரையப்பா முதல், பத்தியம்பிள்ளையுடன் வந்த எடுபிடிகள் வரை அனைத்து பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. கீழே ஒரு குறிப்பு.

எந்தவொரு தனி நபரோ, இயக்கமோ இந்தக் கொலைகளுக்குப் பொறுப்பேற்க முடியாது. அவ்வாறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 6 Empty Re: தமிழரின் படை- 1 முதல் 100 வரை

Post by nandhtiha Sun Oct 17, 2010 12:03 am

மதிப்புக்குரிய அன்பருக்கு
வணக்கம்
நன்றி தொடருங்கள். சில விடயங்களை விரிவாக எழுதலாமே. சிலரைப்பற்றிய விவரங்கள் மிகவும் சுருக்கமாக இருக்கின்றன,
விரிவாக எழுதினால் வரலாற்றுப் பொக்கிஷமாக இருக்கும்.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 6 Empty தமிழரின் படை-42

Post by நிசாந்தன் Sun Oct 17, 2010 12:05 am

புதிய அரசியலமைப்புச் சட்டம், புதிய திருத்தங்களுடன் 1978 செப்டம்பர் 7,8 தேதிகளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இலங்கை மக்களே திரண்டு வாரீர்! இலங்கை மக்களென்றால், சிங்களர்கள். அழைத்தவர் ஜெயவர்தனே. புதிய அரசியலமைப்புச் சட்டப்படி, இனி பிரதமர் பதவி பெரிதல்ல. அதிபர் தான். முழு அதிகாரமும் அவருக்கே. இனி ஜெயவர்தனே, பிரதமரல்ல, அதிபர். மேலும் சில மாற்றங்கள். இனி சிங்களம் தான் பிரதானம். பவுத்தம் தான் பாரம்பரியம். வேண்டுமானால், கிழக்கு வடக்கு பகுதிகளில், தமிழ் நிர்வாக மொழியாக இருக்கட்டும். பிழைத்துப் போகட்டும்.

தமிழர்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. மட்டக்களப்பில் ஒரு பேருந்து கொளுத்தப்பட்டது. கேட்ஸ் பகுதியில் மற்றுமொரு பேருந்து. பிரபாகரன் அவர்களிடமிருந்து வேறுபட விரும்பினார். காவல்துறையின் கவனத்தைக் கவர அல்ல. சிங்களர்களின் கவனத்தை கவர அல்ல. ஜெயவர்தனே. அவரின் கவனத்தை கவர.

விமானம் தோதாக இருந்தது. பிரபாகரனும் பேபி சுப்பிரமணியும் டைம்பாம் தயாரிக்க வேண்டும். உமா மகேசுவரனும் ராகவனும் விமான ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும். AVRO 748. ரத்மலானாவிலிருந்து பாலை செல்லும் விமானம். பேபியும் ராகவனும் இரண்டு இறுக்கைகளை முன்பதிவு செய்து கொண்டார்கள். விமானம் தரையிறங்கியதும் டைம்பாமை வைத்துவிட்டு இறங்கினார்கள். அனைத்து பயணியரும் இறங்கியதும் வெடிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் விமானம் வெடித்து சிதறியது. அது நடந்தது செப் 7. ஜெயவர்தனே புதிய தீர்மானத்தை வாசித்துக் காட்ட வேண்டிய தினம்.

யார் என்று அரசாங்கம் கிளறுவதற்கு முன்னால், அந்த அதிகாரப் பூர்வமான கடிதம் பத்திரிக்கைகளில் வெளிவந்தது. நடைப்பெற்ற விமான தாக்குதலுக்கு நாங்கள் தான் காரணம். இப்படிக்கு, உமா மகேசுவரன். சேர்மன், LTTE.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 6 Empty தமிழரின் படை-43

Post by நிசாந்தன் Sun Oct 17, 2010 12:11 am

விமானத் தகர்ப்புக்கு பிறகு இயக்கத்தில் இணைந்தவர்களில் முக்கியமானவர்கள் கிட்டு, ரகு மற்றும் மாத்தையா. கிட்டு, பிரபாகரனுக்கு உறவு முறை. இயற்பெயர் சதாசிவம் பிள்ளை.

1979-ல் க்யூபாவின் தலைநகர், ஹவானாவில், உலக மாணவர் மற்றும் இளைஞர்கள் மாநாடு நடைப்பெற்றது. LTTE மற்றும் TULF தங்களின் பிரதிநிதிகளை அங்கே அனுப்பி வைத்தன. ஈழப்பிரச்சனை குறித்து, உலகின் கவனத்தை கவர LTTE துடித்துக் கொண்டிருந்தது. அதற்ககு சிறு பிரசூரங்கள், சிறு புத்தகங்கள் அவர்களுக்கு தேவைப்பட்டது. ஆன்ரன் பாலசிங்கத்தின் அறிமுகம் கிடைத்தது அப்பொதுதான்.

ஆன்ரன் பாலசிங்கம் வீரகேசரியில் துணையாசரியராக பணியாற்றினார். எழுத்தாளர். மொழிப்பெயர்ப்பாளர். யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். பின், இலண்டனில் குடியேறினார். இரண்டு முக்கிய நூல்களை விடுதலைப் புலிகளுக்கு எழுதி கொடுத்தார். தமிழர்களின் தேசிய பிரச்சனை குறித்து. சோசலிச தமிழ் ஈழத்தை நோக்கி. பிரபாகரனை வியக்க வைத்த இரு படைப்புகள் அவை.

அதற்குபின், எந்த அரசியல் தொடர்பான நூலானாலும், எது வேண்டுமானாலும் ஆன்ரன் பாலசிங்கம் தான் நினைவுக்கு வந்தார். பல்வேறு மொழிகளில் அவரின் படைப்புகள் வெளியிடப்பட்டன. தேச எல்லை கடந்து ஈழப் பிரச்சனை குறித்து மக்கள் படிக்க போகிறார்கள் என சந்தோசம் பிரபாகரனுக்கு. தனி ஈழம் குறித்து, கருத்தியல் படைப்புகள் அவ்வளவாக வெளிவராத காலகட்டம் அது.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 6 Empty தமிழரின் படை-44

Post by நிசாந்தன் Sun Oct 17, 2010 12:16 am

1978-ன் இறுதியில் யாழ்ப்பாணத்தில் கருத்தியல் ரீதியான மோதல்கள் நடந்தன. அவை, ஓர் இயக்கம், ஆயுதம் தாங்கிய இயக்கம், வங்கிக் கொள்ளை, விமான தகர்ப்பு போன்ற செயல்களில் ஈடுபடலாமா? இது மார்க்சியமாகுமா? போராட்டங்கள் மக்களுக்காக நடாத்தப்படுவது மட்டுமல்ல, அவை மக்களை கொண்டு நடாத்தப்படுவது.

இங்கே இயங்கும் இயக்கங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவை மக்களுடன் இணைவது கிடையாது. மக்கள் வேறு தாங்கள் வேறு போல நடந்துக் கொள்கின்றன. சித்தாந்தம்? அப்படி ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. உழைக்கும் மக்களுக்காக, சுரண்டப்படும் மக்களுக்காக அவர்கள் போராடுவது கிடையாது. ஆகவே, இவர்களை சாகசவாதிகள் என்று வேண்டுமானால் அழைக்கலாம்.

விடுதலைப் புலிகளைப் பற்றிதான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என்பது சொல்லாமலே புரிந்தது. பிரபாகரன் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்கவில்லை. வர்க்கங்கள் குறித்தோ, தொழிலாளர் நலன் குறித்தோ, மார்க்சியம் குறித்தோ அவர் பேசியிருக்கவில்லை. அவரின் ஒரே குறிக்கோள் தனி ஈழம். இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் இணைந்த ஒரு தனி தேசம். அது போதும் அவருக்கு.

ஒரு முறை கல்லூரி பேராசிரியர், பிரபாகரனுடன் பேசினார்.
“மக்களை அரசியல் ரீதியாக தயார்படுத்த வேண்டும் என உங்களுக்கு தோன்றவில்லையா?”
அதே மென்மையான குறளில் பதிலளித்தார் பிரபாகரன். ஆனால் அழுத்தமாக.
“மக்களுக்கு தேவை செயல். வாய்ப்பேச்சு அல்ல.”
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 6 Empty தமிழரின் படை-45

Post by நிசாந்தன் Sun Oct 17, 2010 12:20 am

பிரிட்டனைப் பார்த்து கற்றுக் கொள்வோம் என்றார் ஜெயவர்தனே. 1974-ம் ஆண்டிலேயே தீவிரவாத எதிர்ப்புச் சட்டத்தை இயற்றிவிட்டார்கள். தென் ஆப்பிரிக்காவும் கூட. நாம் எதற்கும் லாயக்கற்றவர்களாக புத்தம் சரணம் கச்சாமி பாடிக்கொண்டிருக்கிறோம். நாம் முளையிலேயே தீவிரவாதத்தை கிள்ளி எறிந்திருந்தால், இவ்வளவு பெரிய விஷச் செடியாக வளர்ந்திருக்காது. எவ்வளவு ஆணவமாக இந்த கடிதத்தை எழுதியிருக்கிறார்கள். நாங்கள் தான் கொன்றோம். இந்தந்த தேதிகளில், இந்தந்த ஆட்களை. விமானத்தையும் நாங்கள் தான் வெடிவைத்து தகர்த்தோம்.

1979-ம் ஆண்டு இந்த தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தை பிறப்பிக்கிறேன். விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து தீவிரவாத இயக்கங்களும் தடை செய்யப்படுகின்றன. சந்தேகிக்கப்படும் எவரையும் காவல்துறை கைது செய்யலாம். கை கால்களை உடைக்கலாம். மண்டையை பிளக்கலாம். நான் எதுவும் கேட்கமாட்டேன். காவல்துறைக்கு அனைத்து அதிகாரத்தையும் அளிக்கிறேன்.

இது போதாதா? சிங்கள காவல்துறை தன் கோர முகத்தை காட்டத் துவங்கியது.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 6 Empty தமிழரின் படை-46

Post by நிசாந்தன் Sun Oct 17, 2010 12:23 am

யாழ்ப்பாண சம்பவங்கள் சிங்கள அரக்கர்களை தோலுரித்துக் காட்டின. முகம் சிதைந்த, மண்டை உடைந்த உடல்கள் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டன. வீட்டுக் கதவுகளை உடைத்து, தமிழ் இளைஞர்களை வாகனங்களில் ஏற்றிச் சென்றார்கள். போனவர்கள் திரும்பவே இல்லை.

வகை வகையான சித்திரவதைகள். கைவிரல் நகங்களில் ஊசி ஏற்றினார்கள். தலை கீழாக தொங்கவிட்டு, தலைமுடியை பொசுக்கினார்கள். நெருப்பு எறும்புகளை உடலில் பரவவிட்டார்கள். காயங்களுக்கு மிளகாய் பொடி வைத்து கட்டினார்கள். மாணவர்கள், தமிழ் பாடப் புத்தகங்களை சட்டைக்குள் மறைத்து எடுத்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. 10 வயது சிங்கள பொடியன் அழைத்தாலும் தமிழ் இளைஞர்கள் தலை தெரிக்க ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.

”ஜெயவர்தனே மட்டும் ஓர் உண்மையான பவுத்தராக இருந்திருந்தால், நாம் துப்பாக்கி தூக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.” என்றார் பிரபாகரன்.

இது எவ்வளவு நிதர்சனமான உணமை வரிகள்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 6 Empty Re: தமிழரின் படை- 1 முதல் 100 வரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 13 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics
» கர்நாடகத்தில் முதல் முறையாக பயணிகள் ரெயில் சேவை - நாளை முதல் தொடங்குகிறது
» 30 வகை வாழை சமையல் – பொரியல் முதல் போண்டா வரை… சூப் முதல் கேக் வரை…
» அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி
» 'முதல் பரிசுதான் முதல் தொடக்கம்'- பாலஸ்ரீ விருது வென்ற மாணவனின் அசத்தல் பேட்டி!
» இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு முதல் வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum