புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_vote_rcap 
37 Posts - 77%
heezulia
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_vote_rcap 
10 Posts - 21%
mohamed nizamudeen
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_vote_rcap 
373 Posts - 79%
heezulia
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் படை- 1 முதல் 100 வரை


   
   

Page 5 of 13 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13  Next

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Jul 31, 2010 4:34 am

First topic message reminder :

1956ல் இலங்கையின்
அரசாங்க மொழியாகச் சிங்களத்தை அறிவிக்க முற்பட்டார்கள். தந்தை செல்வாவின் தலைமையில்
தமிழர்கள் அறவழிப் போராட்டம் நடாத்தினர். காலே ஃபேஸ் விடுதி வழியாக சென்றார்கள். கொழும்பு
துறைமுகம் அருகில் தான் உள்ளது. பணிகளை முடித்துக் கொண்டு சிங்கள பணியாளர்கள் எதிர்பட்டனர்.
பேனர்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்களைப் பார்த்து அதிர்ந்தனர்.



சிங்கள நாட்டில்
சிங்களத்தை ஆட்சி மொழியாக கொண்டுவர தமிழர்கள் எதிர்ப்பதா? ஒருவரையும் விடக்கூடாது என
முடிவெடுத்து, கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து, தாக்கத் தொடங்கினர். சிறிது நேரத்தில்,
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களவர்கள் திரண்டுவிட்டனர். எக்காரணம் கொண்டும் திருப்பித்
தாக்கக் கூடாது என, தந்தை செல்வா தடுத்துவிட்டார். தமிழர்கள் சிதறி அங்கும் இங்கும்
ஓடினர். ஒளிந்து கொள்ளத்தான் ஒரு இடமும் கிடைக்கவில்லை. மனோகரன், வசீகரன் தந்தை செல்வாவின்
மகன்கள் இருவரும் தூக்கிவீசப்பட்டார்கள்..



இத்தாக்குதல்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மட்டும் தாக்கவில்லை, அனைத்து தமிழர்களின் வீடுகளிலும்
கடைகளிலும் புகுந்து தாக்கினார்கள், சூரையாடினார்கள். பேருந்து, ஆட்டோ மிதிவண்டியில்
செல்கின்ற தமிழர்கள் ஒருவரையும் விடவில்லை. இந்த தாக்குதலை கவனித்துப் பார்த்தால் நன்றாக
புரியும்… இந்த வெறி திடீரென தோன்றியது அல்ல. பல ஆண்டுகளாக, அவர்களின் மனதில் கனத்துக்
கொண்டிருந்த நெருப்பு, கிடைத்த சிறு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எரிமலையாக வெடித்தது.
தமிழன் எங்கெல்லாம் வசிக்கிறான், அவன் வீடு எண், கடைகள் எக்கெல்லாம் உள்ளது என சுலபமாக
கண்டுபிடித்து தாக்கினார்கள்.



ஆயினும், போராட்டக்
குழு, நாடாளுமன்றத்தை அடைந்தது. பிரதமர் பண்டாரநாயக்காவின் அலுவலகத்திற்குள் இரத்தம்
சொட்ட சொட்ட அமிர்தலிங்கமும், சுந்தரலிங்கமும் நுழைந்தனர். தங்களின் கருத்தை மனுவில்
குறிப்பிட்டு பிரதமரிடம் கொடுத்தனர். அவர்கள் சென்றபின், அது குப்பைத்தொட்டிக்கு சென்றது.
அன்று மாலை ஐந்து மணிக்கு தந்தை செல்வா, சத்தியாகிரக போராட்டத்தை திரும்பப் பெற்றார்.



நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Oct 16, 2010 5:51 pm

நம்மையும், நம் இயக்கத்தையும் காவல்துறை மிகத் தீவிரமாக தேடி வருகிறது. குறிப்பாக என்னை. டிஎன்டி பெயரைக் கேட்டாலே நடுங்குகிறார்களாம். பயம். சிங்களர்கள் பயப்பட ஆரம்பித்திருக்கிறார்கள். சிங்கள காவல்துறை நம் இயக்கத்தை அச்சத்துடன் கவனிக்க துவங்கியிருக்கிறது. ஏனில், நாம் வளர்ந்துக் கொண்டிருக்கிறோம். இனிதான் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். நமது முந்தைய தோழர்கள் செய்த தவறை நாம் மீண்டும் இழைக்கக் கூடாது.

தோழர்களே, நமது நீண்ட கால கனவை நனவாக்கும் வேளை வந்துவிட்டது. ஈழத்தமிழர்களுக்கான, தனித் தேசத்தை நாம் உருவாக்க வேண்டும். நமக்கென்று ஒரு நிலம். நமக்கென்று ஒரு அரசாங்கம். நமக்கென்று ஒரு இராணுவம். மக்கள் நம் மீது நம்பிக்கை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். நம் பையன்களை பார்த்துக் கொள்கிறோம் என பெருமிதம் கொள்ள சொல்கிறார்கள். நாம் அவர்களுக்கு என்ன செய்யப் போகிறோம்?

இப்போதைக்கு, நமது உடனடி தேவை ஒரு கெரில்லா குழு. ஆயுதம் தாங்கிய ஒரு சிறிய இராணுவம். மேலும், நம் இயக்கத்தின் பெயரை மாற்ற வேண்டும். ஈழம் என்னும் பெயரை நாம் முன்னிறுத்தியாக வேண்டும். தமிழ். ஈழம். அவர்கள் விடுதலை. மூன்றும் இணைந்த ஒரு பெயர். புலிகள். புலிகள் இல்லாமலா?

புதிய பெயர் உருவானது. தமிழீழ விடுதலைப் புலிகள். Liberation Tigers Of Tamil Eelam(LTTE). சிங்களர்களின் வாழ்வில் மட்டுமல்ல. தமிழர்களின் வாழ்விலும் மாற்றத்தைக் கொண்டுவரத் துடித்த நான்கு எழுத்துக்கள் மே 5,1976 அன்று உயிர் பெற்றன.

இயக்கத்திற்கான சின்னத்தை பிரபாகரன் முன்னரே தயார் செய்திருந்தார். இவர் சொல்ல சொல்ல ஓவியர் நடராசன், மதுரையில் உருவாக்கிய சின்னம் அது. வாயை பிளந்து கர்ஜிக்கும் புலி. புலியின் வாய் சிவந்திருக்க வேண்டும். இரத்தச் சிவப்பு. எப்போது வேணாலும் பாய்வேன் என முன்னங்கால்கள் தயாராக இருக்க வேண்டும். பின்னனியில் இரண்டு துப்பாக்கிகள். கேடயத்தில் இரண்டு வாள்களை குறுக்கே வைத்திருப்பதைப் போல. சுற்றிலும் ஒரு வட்டம். வட்டத்தை ஒட்டி சூரியக் கதிர்கள். கதிர்களுக்கு பதிலாக பாயிண்ட் 33 ரக தோட்டாக்கள். எழுச்சியூட்டும் சின்னமாக அது அமைய வேண்டும். அப்படி தான் வந்திருந்தது.

அடுத்து, அமைப்பு ரீதியாக சில சட்ட திட்டங்களை வகுக்க வேண்டியிருந்தது. அதற்கு முன்னால், கொள்கைப் பிரகடனம். எல்.டி.டி.ஈ. சாதிக்க விரும்புவது என்ன?

1) சுதந்திரத் தனி ஈழம் அமைய வேண்டும்.

2) சோஷலிச மக்கள் குடியரசை நிருவ வெண்டும்.

3) அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளையும் களைய வேண்டும். குறிப்பாக சாதிய ஒடுக்குமுறை.

4) சோஷலிச உற்பத்தி முறையை வளர்த்தெடுக்க வேண்டும்.

5) அரசியல் போராட்ட்த்தின் நீட்சியாக, ஆயுதம் தாங்கிய போராட்ட்த்தை முன்னட்த்திச் செல்ல வேண்டும்.

6) கெரில்ல போர் முறையை படிப் படியாக மாற்றி, அதனை மக்கள் விடுதலைப் போராக மாற்றியமைக்க வேண்டும்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Oct 16, 2010 5:57 pm

ஒரு மத்திய கமிட்டி. அதில் ஐந்து உறுப்பினர்கள். அந்த கமிட்டிக்கு ஒரு அரசியல் மற்றும் இராணுவப் பிரிவு இருக்கும். முதல் மத்திய கமிட்டியின் உறுப்பினர்கள் பிரபாகரன், செல்லக்கிளி, நாகராஜா, ஐயர் மற்றும் விஸ்வேஸ்வரன்.

உறுப்பினர்களுக்கான அடிப்படை ஒழுங்கு விதிகள் வகுக்கப்பட்டன.

1) புகையிலை, சிகரெட் கூடாது.

2) மது அருந்தக் கூடாது.

3) குடும்பத்தினருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.

4) வேறு இயக்கத்தினருடன் இணையக்கூடாது. இந்த இயக்கத்திலிருந்து வெளியேறும்பட்சத்தில், வேறு புது இயக்கத்தை தொடங்கக்கூடாது.

எல்.டி.டி.ஈ. யின் அரசியல் மற்றும் இராணுவத் தளபதி பிரபாகரன்.
இராணுவத்தின் பணிகள் தெளிவாக வரையறுக்கப்பட்டன. மொத்தம் மூன்று முக்கிய பணிகள்.

1) காவல்துறையின் உளவுப்பிரிவில் யார் யார் இருக்கிறார்கள்? அவர்களின் வலைப்பின்னல் எங்கெல்லாம் பரவியிருக்கிறது.? அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள்? தகவல்களை எப்படி பெறுகிறார்கள்? அவர்களிடம் உள்ள சாதனங்கள் என்னென்ன? எல்லாவற்றையும் கண்டுபிடித்து அழிக்க வேண்டும். குறிப்பாக, உளவுத்துறைக்கு துப்பு கொடுக்கும் நம்பிக்கை துரோகிகளை.

2) இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அரசாங்கப் பணிகளை முடக்க என்னென்ன வழிகள் இருக்கிறதோ, அனைத்தையும் செய்ய வேண்டும். அரசாங்கத்தின் நிரந்தரத் தொல்லையாக, நிரந்தரத் தலைவலியாக மாற வேண்டும். அரசாங்கத்தின் ஒழுங்குமுறை முழுவதுமாக பாதிப்படைய வேண்டும்.

3) இராணுவ முகாம்களை ஆக்கிரமித்து கைப்பற்ற வெண்டும். இராணுவத்தின் வசமுள்ள அனைத்து பகுதிகளும் நம் வசம் வர வேண்டும். பிறகு, அப்பகுதிகளை நாம் நிர்வகிக்க வேண்டும்.

எழுத்துபூர்வமாக எழுதப்பட்ட விதிமுறைகள். தெளிவான அரசியல் சாசனம். அதிகாரம். யாருக்கு கீழ் யார்? என்னென்ன துறைகள்? என்னென்ன பணிகள்? தனிப்பட்ட முறையில் அவரவர் பணிகள் என்ன? சட்டத்திட்டங்களை மீறுபவர்களை என்ன செய்யலாம்? உறுப்பினர்களை எப்படி கண்காணிப்பது? இயக்கத்துக்கான நிதியை எப்படி சேகரிப்பது? ஆயுதங்கள்? கூடுதல் ஆள் பலம்? எப்படி திட்டமிட வேண்டும்? இரகசியத்தை எப்படி காப்பாற்றுவது?
ஒன்று விடாமல் அனைத்தையும் விவாதித்தார்கள்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Oct 16, 2010 6:09 pm

பிரபாகரன் உத்தரவிட்டார். என்.நடராஜன். உரும்பிரை பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் வைத்திருக்கிறார். காட்டிக் கொடுப்பதில் மன்னர். சிவக்குமரனை காட்டிக் கொடுத்தவர் அவரே. ஆபத்தானவர். அகற்றிவிடுங்கள்.

இரண்டு பேர் வண்டியை எடுத்துக் கொண்டு போனார்கள். நடராஜன் வீட்டுக் கதவை தட்டினார்கள். ஐயா, நடராஜன் என்பவர் தாங்கள் தானா? ஆமாம், அதற்கென்ன? ஒன்றுமில்லை, உங்களிடம் கொடுக்கச் சொல்லி, இந்த பொருளைக் கொடுத்தார்கள். ஆவர் மார்புக்கு நேரே துப்பாக்கியை நீட்டினார்கள். ஏய்? யார் நீங்கள்? சத்தம் கேட்டு மற்றவர்கள் வருவதற்குள் காற்றில் கலந்தார்கள்.

நடராஜன் நிரந்தரமாக உறங்கினார்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Oct 16, 2010 6:14 pm

தந்தை செல்வாவிற்கு வயதாகிவிட்டது. கட்சி அமிர்தலிங்கத்தின் கைகளுக்கு சென்றது. மக்களிடம் விடுதலை வேட்கை இருப்பதை பார்த்த அமிர்தலிங்கம், கட்சியின் பெயரை மாற்றினார். தமிழ் ஐக்கிய முன்னணி(TUF) யில் இருந்து தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி(Tamil United Liberation Front). வட்டுக்கோட்டை பகுதியில் கூட்டத்தைக் கூட்டினார். வீர உரைகளை நிகழ்த்தி, இளைஞர்களை தன் வசம் கவர்ந்தார்.

1977, பொதுத் தேர்தலுக்கு, அமிர்தலிங்க தயாராகிக் கொண்டிருந்தார். தந்தை செல்வாவும் யதார்த்தத்தைப் புரிந்துக் கொண்டு, தனி ஈழத்தை ஆதரிக்கத் தொடங்கினார். தமிழ் மக்களுக்கு, தனி ஈழம் மட்டுமே தீர்வு தரும் என்னும் முடிவுக்கு வந்திருந்தார். ஆனால், அதே ஆண்டு, ஏப்ரல் 29ம், தேதி தந்தை செல்வா இயற்கை எய்தினார்.

தந்தை செல்வா இருந்த இடத்தில் இப்போது அமிர்தலிங்கம் தனி ஈழக் கோரிக்கையை உயர்த்திப் பிடிக்க. செல்வா பார்த்துக் கொள்வார் என சொல்லிவந்தவர்கள், அமிர்தலிங்கம் பார்த்துக்கொள்வார் என சொல்ல ஆரம்பித்தார்கள். சந்தேகமில்லாலம், அமிர்தலிங்கத்தின் ஆதரவு வட்டம் பெருகியது.

1977 தேர்தல் மூன்று முக்கிய பிரச்சனைகளை சந்தித்தன. தமிழ், தமிழர்கள், தமிழ் ஈழம். சிங்களக் கட்சிகளும் தமிழீழ ஆதரவு கட்சிகளும் இதை அறிந்திருந்தன. அடுத்த பிரதமர் ஜெயவர்தனேதான் என்று தேர்தலுக்கு முன்பே தெரிந்துவிட்டது.

அதுதான் நடந்தது. ஜெயவர்தனே பிரதமரானார். சிரிமாவோ தோற்றுப் போனார். அமிர்தலிங்கம் எதிர்ப்பார்த்த அளவைவிட TULF அதிக இடங்களைக் கைப்பற்றியது. எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கும் அளவுக்கு வாய்ப்பு அவருக்கு இருந்தது. அதனை கெடுத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை. ஜெயவர்தனேவுடன் சமரசமாக செல்ல விரும்பினார்.

அமிர்தலிங்கத்தின் எதிர்ப்பார்ப்பு வீண்போகவில்லை. எதிர்க்கட்சி தலைவர் அவரே. அரசு பங்களா. கார். டிரைவர். விரல் சொடக்கினால், ஓடிவர பணியாளர்கள். உயர் ரகப் பாதுகாப்பு. அனைத்தும் கிடைத்தன. சீ! சீ! இப்படி செய்துவிட்டீர்களே என கோபத்துடன் வந்தவர்களிடன் தோள்மீது கை போட்டு, அவர்களை சாந்தப்படுத்தினார்.

இந்தப் பதவியின் சக்தி தெரியுமா? உங்கள் அனைவரையும் விட எனக்கு தமிழர் நலன் மீது அதிக அக்கறை உள்ளது. இந்த பதவி மூலமாக நிறைய சாதிக்க முடியும். யாருக்கு? உங்கள் வீட்டுக்கா அல்லது நாட்டுக்கா? என்று கோபமாக முஷ்டியை உயர்த்தினார்கள் இளைஞர்கள்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Oct 16, 2010 6:21 pm

ஜூனியஸ் ஜெயவர்தனே, நீண்ட காலமாக அரசியலில் இருந்தார். தன் அரசியல் எதிரி சாலமன் பண்டாரநாயகா போல, கிருத்துவத்திலிருந்து, பவுத்தத்திற்கு மாறினார். சேனாநாயகாவின் மறைவிற்கு பின் UNP கட்சியைப் பிடித்தார்.

1977-ல் ஆட்சி அதிகாரம், ஜெயவர்தனே, கையில் வந்தது. பதவி ஏற்ற சில காலத்திலேயே தான் யார் என்பதை புரியவைத்தார் ஜெயவர்தனே.

ஆகஸ்ட் 1977. அவரிடம் ஒரு புகார் வந்தது. யாழ்ப்பாணத்தில் ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்திருந்த, ஒரு நற்பணி விழாவிற்கு, சில சிங்கள காவல் அதிகாரிகள், சீருடை இல்லாமல், நுழைவுச்சீட்டு இல்லாமல், நுழைய முற்பட்டனர். ஆனால், தமிழ் காவலர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. உடனே சண்டை. மோதல்.

ஜெயவர்தனே இந்த புகாரை இடது கையால் நகர்த்தி வைத்தார். ”இந்த தமிழர்களுக்கு வேறு வேளை கிடையாதா? கலகம், கலவரம், இதே பிழைப்பாய் போய்விட்டது. தனி ஈழம் வேண்டும், தனி அரசாங்கம் வேண்டும் என யார் இவர்களை பிதற்ற சொன்னது? அவர்களை அடக்கி வையுங்கள்.”

பிரதமரே சொல்லிவிட்டார். சிங்களவர்கள் தங்கள் அடாவடித்தனத்தை ஆரம்பித்தனர். கலவரம் தீவிரமானது. அவசர நிலையை பிரகடனப்படுத்தினார் ஜெயவர்தனே. யாழ்ப்பாணம் எரிய ஆரம்பித்தது. சிங்களர்கள் ஒன்றிணைந்து தமிழர்களை அழிக்க ஆரம்பித்தனர். கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 300. வீடுகளை இழந்தவர்களின் எண்ணிக்கை 3000. 300 கோவில்கள் இடிக்கப்பட்டன.

இந்தியாவில் அப்போது, இந்திராகாந்தியை தோற்க்கடித்து, மொராஜி தேசாய் பிரதமரானார். இலங்கையில் நடந்ததை கேள்விப்பட்டு அப்படியா என்று கேட்டதோடு நிறுத்திக் கொண்டார். திராவிட முன்னேற்றக் கழகம் அப்போது தான் தமிழகத்தில், மிகப்பெரிய அளவில் சிங்கள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடாத்தி முடித்தது.

1977 கலவரம் தமிழர்களுக்கு, சில உண்மைகளை தோழுறித்துக் காட்டியது. எல்லாமே முகத்தில் அறையும் உண்மைகள்.
தமிழா, இனி சிங்கள காவல்துறையை நம்பாதே. சிங்கள நாடாளுமன்றத்தை நம்பாதே. சிங்கள பிரதமரை நம்பாதே. அவர் இலங்கையின் பிரதமரல்ல. அவர் சிங்களவரின் பிரதமர். சிங்களவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நம்பாதே. சிங்களர்களின் தேர்தல். சிங்களர்களின் வாக்கெடுப்பு. சிங்களர்களின் தேர்தல் பிரச்சாரம். சிங்களவர்களின் அரசாங்க பிரச்சாரம். சிங்களவர்களின் நீதிமன்றம். எதையும் நம்பாதே.

தமிழா, மயக்கத்திலிருந்து விடுபடு அமிர்தலிங்கம் உனக்கு உதவமாட்டார். தேன் தடவிய வார்த்தைகளை கேட்டு மயங்கிவிடாதே. நான் உன்னைக் கூட்டி போகிறேன் என எந்த அரசியல்வாதி கூறினாலும், அவன் தமிழனாகவே இருந்தாலும், எக்காரணம் கொண்டும் நம்பிவிடாதே. தனி ஈழக் கோரிக்கையை எந்த நிலையிலும் கைவிட்டுவிடாதே.

ஆயுத எழுச்சிதான் உன்னை விடுவிக்கும். உன் குடும்பத்தை, உன் குழந்தைகளை, உன் இனத்தை, உன் மொழியை விடுவிக்கும். ஆயுதம் மூலமாக தான் உன் கனவு நினைவாகும்.

மிதவாதிகள் கூறுவது போல எல்.டி.டி.ஈ. ஒரு தீவிரவாத இயக்கம் அல்ல. அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு, பொறுமை இழந்து வன்முறையில் ஈடுபடும் அடாவடி இளைஞர்கள் அல்லர் அவர்கள். அவர்களிடம் கனல் உள்ளது. ஆயுதப் போராட்டம் மட்டுமே உன்னை முழுமையாக விடுதலை செய்யும்.
ஆகவே, திருப்பி அடி.


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Oct 16, 2010 6:23 pm

கட்டுரையை ஒரே திரியில் கொடுத்திடின் படிப்பது இலகுவாக இருக்கும் நண்பரே, நடத்துனர்கள் உதவிட வேண்டுகின்றேன்.



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 5 Avatar15523pf0
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Oct 16, 2010 6:25 pm

புற்களுக்கு அடியில் நகரும் பாம்பு. மிகவும் ஆபத்தானவர். சூழ்ச்சிக்காரர். சிரிமாவோ பண்டாரநாயகா, அமிர்தலிங்கம் இருவரும் ஜெயவர்தனேவுக்கு அளித்த சிறப்பு பெயர்கள் இவை. சிங்கள பிரதமர்களின் வரிசையில் ஜெயவர்தனே மிகவும் வித்தியாசப்பட்டவர். தமிழர்கள் மீதான தீவிர எதிர்ப்புணர்வுக்கு அவர் ஒரு காரணம் வைத்திருந்தார்.

1977 பிரச்சாரத்தின் போது நடைப்பெற்ற சம்பவம் அது. துரையப்பா மைதானத்தில், ஜெயவர்தனே பேசுவதாக ஏற்பாடு. ஆனால், அவர் மைக்கைப் பிடித்த மறுநிமிடம், மேடை சரிந்தது. ஜெயவர்தனே பின்னோக்கி விழுந்தார். இதனை தனக்கு எதிரே, நடத்தப்பட்ட, பெரிய அநீதியாக மனதில் குறித்துக் கொண்டார். என்னை கீழே தள்ளிய தமிழர்கள். என்னைப் பார்த்து எக்கலித்த தமிழர்கள். அவர்களை சும்மாவா விடுவது? நசுக்கு அவர்களை.

அன்றைய தினம் மேடையை கவிழ்த்தவர்கள் EROS அமைப்பினர்.

ஆனால் என்ன? ஜெயவர்தனே அவர்களை தமிழர்கள், தமிழ் இனம் என்பதாக எடுத்துக் கொண்டார்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Oct 16, 2010 6:32 pm

மன்னிக்கவும் நண்பரே. ஆனால் இது புலிகளின் முழு வரலாறு. நூறு பக்கங்களுக்கு மேல் உள்ளது. ஒரே திரியின் கீழ் எனக்கு எழுதுவது கடினம். எனக்கு கிடைக்கும் சில மணி நேர இடைவெளிகளில் இதனை எழுதுகிறேன். ஆகையால் என் செயலுக்கும் என்னை மன்னிக்கவும்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Oct 16, 2010 6:38 pm

பிரபாகரன் தலைமையில் எல்.டி.டி.ஈ. அருளரின் தலைமையில் EROS. தங்கதுரையின் தலைமையில் TELO(1977-ல் ஆரம்பிக்கப்பட்டது). கிட்டத்தட்ட ஒரே நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட மூன்று இயக்கங்கள். தேவை படும்போது, தகவல்களை தங்களுக்குள் பரிமாறிக் கொள்வார்கள். EROS க்கு, இலங்கைக்கு வெளியிலும் நல்ல செல்வாக்கு இருந்தது. தனது இயக்கத்தவரை லெபனானுக்கு பயிற்சிக்கு அனுப்பும் அளவிற்கு. யாசிர் அராஃபத்தின் பாலத்தீன விடுதலை இயக்கத்துடன் தொடர்பு இருந்தது.

அமிர்தலிங்கத்துடன் தொடர்பில் இருந்தார் பிரபாகரன். உமா மகேசுவரனை அறிமுகம் செய்துவைத்தவர் அமிர்தலிங்கமே. துடிப்பானவர். நம்பிக்கைக்குரிய போராளி. ஆங்கிலம் சரளமாக பேசக் கூடியவர். உன் இயக்கத்தில் சேர்த்துக் கொள் என்றார் அமிர்தலிங்கம். பிரபாகரனை விட பத்து வயது மூத்தவர் உமா. பேசிப் பார்த்தார், ஒத்து வருபவர் போல் இருந்ததால் இணைத்துக் கொண்டார்.

ஐந்து பேர் மட்டுமே உள்ள மத்திய கமிட்டியில் பிரபாகரன் சிறு மாற்றத்தைக் கொண்டுவந்தார். உமா மகேசுவரனுக்கு அவர் அளித்த பதவி சேர்மன். தன் அதிகாரத்தை உமா மகேசுவரனுடன் பகிர்ந்துக் கொண்டார். எந்த தலைவனுக்கும் வராத இயல்பு. அரசியல் விவகாரங்களை உமா மகேசுவரன் கவனித்துக்கொள்வார். இராணுவ விவகாரங்களுக்கு பிரபாகரன்.

எல்.டி.டி.ஈ. தலைவர்களை அமிர்தலிங்கம் சந்தித்துப் பேசினார். ஜெயவர்தனே தமிழர்களுக்காக சில தீர்வுகளை அளிக்க முன்வந்துள்ளார். சிறிது காலத்துக்கு, நீங்கள் உங்கள் நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ளுங்கள். TULF-ன் ஆயுதப் பிரிவாக எல்.டி.டி.ஈ. செயல்படலாம். என்ன சொல்கிறீர்கள்?
பிரபாகரன் வேறு சிந்தனையில் இருந்தார்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Oct 16, 2010 6:44 pm

கருணாநிதி, சண்முகநாதன், மற்றுமொரு சண்முகநாதன். துரையப்பா கொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட மூன்று காவல் துறை அதிகாரிகள். அவர்களின் புகைப்படம் கிடைத்தது. கொலையாளிகளை கண்டுபிடிக்காமல் ஓயமாட்டேன் என ஒவ்வொருவரும் சூழுறைத்திருக்கிறார்கள். அகற்றிவிடுங்கள் என்றது மத்திய கமிட்டி. கிளம்பினார்கள். பிப்ரவரி 4, கருணாநிதி. மே 18, இரு சண்முகநாதன்கள்.

ஒட்டுமொத்த காவல்துறையும் கிடுகிடுத்துப் போனது. அப்போது தான், தாம் போதுவது லேசுப்பட்ட இயக்கத்தோடு இல்லை என உணரத் தொடங்கினார்கள். எதற்கும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. குறிப்பாக, தமிழ் ஈழம், தமிழ் விடுதலை என்று குறல் கொடுக்கும் இயக்கத்திடமிருந்து பத்து ஃபர்லாங் தள்ளி நிற்பது நல்லது.

அடுத்த இலக்கு, கனகரத்தினம். உமா மகேசுவரன், பிரபாகரனும் இணைந்து செய்ய வேண்டியது. அம்பாரை பகுதியில் உள்ள பொட்டுவில் தொகுதி வேபாளர் திடீரென்று இறந்துவிட, அந்த இடத்தில் போட்டியிட்டவர், கனரத்தினம். தனி ஈழம், தமிழ் தமிழ் என கத்தி கத்தி, தேர்தலில் வெற்றி பெற்றார். பதவி கிடைத்ததும், ஜெயவர்தனேவுடன் ஒட்டிக்கொண்டுவிட்டார்.

சனவரி 26,1978. கொழும்பில் வீட்டிலிருந்து கிளம்பி காரை நெருங்கும்போது, தோட்டா அவரை துளைத்தது. ஆனால், இறக்கவில்லை. சாட்டியம் அளித்தார். ஒரு உயரமானவன். ஒரு குட்டையானவன். பிரபாகரன் தொடர்வண்டியில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். உமா மகேசுவரன் சிறிது காலம் கொழும்பில் தங்குவதாக ஏற்பாடு.

பிரபாகரனை காவல் துறையால் பிடிக்க இயலவில்லை. பெயர் மட்டுமே தெரியும். பிரபாகரன் குள்ளம் என பல பேர் சொல்லி கேள்வி. மற்றபடி ஒரு தகவலும் கிடையாது. முன்னரே அவர் வீட்டை சல்லடை போட்டு தேடியபோதும், உருப்படியாக எதுவும் கிடைக்கவில்லை. ஒரு புகைப்படம்? ஒரு குரூப் போட்டோ? பெரிய அக்கா திருமணத்தில் ஓரத்தில் நிற்கும் படமாவது? இல்லை..! எத்தனை சுத்தமாக கிழித்தெடுத்து போயிருக்கிறான்.?

அடுத்த மூன்று மாதத்தில் கனகரத்தினம் இறந்து போனார்.


Sponsored content

PostSponsored content



Page 5 of 13 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக