புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:05 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_rcap 
30 Posts - 71%
heezulia
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_rcap 
10 Posts - 24%
ஆனந்திபழனியப்பன்
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_rcap 
366 Posts - 78%
heezulia
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_lcapதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_voting_barதமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் படை- 1 முதல் 100 வரை


   
   

Page 3 of 13 Previous  1, 2, 3, 4 ... 11, 12, 13  Next

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Jul 31, 2010 4:34 am

First topic message reminder :

1956ல் இலங்கையின்
அரசாங்க மொழியாகச் சிங்களத்தை அறிவிக்க முற்பட்டார்கள். தந்தை செல்வாவின் தலைமையில்
தமிழர்கள் அறவழிப் போராட்டம் நடாத்தினர். காலே ஃபேஸ் விடுதி வழியாக சென்றார்கள். கொழும்பு
துறைமுகம் அருகில் தான் உள்ளது. பணிகளை முடித்துக் கொண்டு சிங்கள பணியாளர்கள் எதிர்பட்டனர்.
பேனர்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்களைப் பார்த்து அதிர்ந்தனர்.



சிங்கள நாட்டில்
சிங்களத்தை ஆட்சி மொழியாக கொண்டுவர தமிழர்கள் எதிர்ப்பதா? ஒருவரையும் விடக்கூடாது என
முடிவெடுத்து, கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து, தாக்கத் தொடங்கினர். சிறிது நேரத்தில்,
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களவர்கள் திரண்டுவிட்டனர். எக்காரணம் கொண்டும் திருப்பித்
தாக்கக் கூடாது என, தந்தை செல்வா தடுத்துவிட்டார். தமிழர்கள் சிதறி அங்கும் இங்கும்
ஓடினர். ஒளிந்து கொள்ளத்தான் ஒரு இடமும் கிடைக்கவில்லை. மனோகரன், வசீகரன் தந்தை செல்வாவின்
மகன்கள் இருவரும் தூக்கிவீசப்பட்டார்கள்..



இத்தாக்குதல்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மட்டும் தாக்கவில்லை, அனைத்து தமிழர்களின் வீடுகளிலும்
கடைகளிலும் புகுந்து தாக்கினார்கள், சூரையாடினார்கள். பேருந்து, ஆட்டோ மிதிவண்டியில்
செல்கின்ற தமிழர்கள் ஒருவரையும் விடவில்லை. இந்த தாக்குதலை கவனித்துப் பார்த்தால் நன்றாக
புரியும்… இந்த வெறி திடீரென தோன்றியது அல்ல. பல ஆண்டுகளாக, அவர்களின் மனதில் கனத்துக்
கொண்டிருந்த நெருப்பு, கிடைத்த சிறு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எரிமலையாக வெடித்தது.
தமிழன் எங்கெல்லாம் வசிக்கிறான், அவன் வீடு எண், கடைகள் எக்கெல்லாம் உள்ளது என சுலபமாக
கண்டுபிடித்து தாக்கினார்கள்.



ஆயினும், போராட்டக்
குழு, நாடாளுமன்றத்தை அடைந்தது. பிரதமர் பண்டாரநாயக்காவின் அலுவலகத்திற்குள் இரத்தம்
சொட்ட சொட்ட அமிர்தலிங்கமும், சுந்தரலிங்கமும் நுழைந்தனர். தங்களின் கருத்தை மனுவில்
குறிப்பிட்டு பிரதமரிடம் கொடுத்தனர். அவர்கள் சென்றபின், அது குப்பைத்தொட்டிக்கு சென்றது.
அன்று மாலை ஐந்து மணிக்கு தந்தை செல்வா, சத்தியாகிரக போராட்டத்தை திரும்பப் பெற்றார்.



வள்ளியப்பன்
வள்ளியப்பன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 28/07/2010

Postவள்ளியப்பன் Sat Aug 14, 2010 7:24 am

நீங்கள் அனைவரும் முக்கியமான ஒன்றை மறந்து செயல்பட்டீர்கள், செயல்பட்டுக் கொண்டும் இருக்கின்றீர்கள். நான் கீழே தொடுத்துள்ள வினாக்களுக்கு கோபம் கொள்ளாமல் அமைதியாக சிந்தித்து விடை கொடுங்கள்.
௧. நீங்கள் உண்மையான தமிழர்களா?
௨. அப்படி இருப்பின் திருக்குறளை ஆத்மார்த்தமாகப் படித்ததுண்டா?
௩. புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தை படித்ததுண்டா?
௪. "கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாண்மேற்
செல்லா துயிருண்ணுங் கூற்று" என்ற குறளில் உங்களின் நிலைப்பாடு என்ன?
௫. உண்மையான இறை நம்பிக்கை உங்களிடம் உள்ளதா?
௬. சோதி வடிவில்தான் இறைவனைப் பார்க்க முடியும் என்ற வள்ளலாரின் கருத்தில் உங்களின் நிலைப்பாடு என்ன?
௭. உருவ வழிபாட்டில் இருந்து விலகி உண்மையான இறைநிலை எது என உங்களில் யாராவது ஆராய்ந்ததுண்டா?

நான் மேலே தொடுத்துள்ள வினாக்களுக்கு அமைதியாக விடை அழியுங்கள். அதன் பின் உங்கள் மக்களின் நல் வாழ்விற்கும், எதிரிகள் பொடிப் பொடி ஆவதற்கும் நான் கத்தி இன்றி இரத்தம் இன்றி மிக எளிமையான தீர்வு கூறுகின்றேன்.

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Sep 27, 2010 9:57 am

• தன் இனத்துக்கு துரோகம் விளைவிக்காத, தன் இனத்தின் மேன்மைக்காக உழைக்கும் ஒவ்வொருவனும் உண்மையான தமிழனே.
• ஆம் திருக்குறளை நன்கு உணர்ந்து படித்துள்ளோம்.
• ஆம் படித்துள்ளோம்.
• ஐயா சமகால அரசியல் நிலப்பாட்டில் அக்குறளின் மகத்துவம் காணம்ல்போகும் என்பதே எனது நிலைப்பாடு.
• நான் ஒரு நாத்திகன்
• என்னைப் பொறுத்தவரை கடவுளேக் கிடையாது. மனிதன் இயற்கையைப் பார்த்து பயந்து, இயற்கை சக்திகளுக்கு தன்னைப் போல உருவத்தைக் கொடுத்து படைக்கப்பட்ட கற்பனை கதாபாத்திரமே இறைவன்.
• இதை நான் எந்த நிலையிலும் ஆராய்ந்ததில்லை.



நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Sep 27, 2010 10:18 am

பாயிண்ட் பெட்ரோ பகுதியில் சம்பந்தன் என்னும் உள்ளூர் ரவுடியிடம், துப்பாக்கி இருப்பதாகவும், அதனை அவன் விற்க போவதாகவும் அவர்களுக்கு, தகவல் கிடைத்தது. அதன் விலை 150ரூ. தங்களிடமிருந்த பணத்தை சேகரித்தனர். பிரபாகரன், தன் அக்கா ஜகதீஸ்வரி திருமண பரிசாக தனக்கு கிடைத்த மோதிரத்தை கொடுத்தான். ஆனாலும் 40ரூ குறைந்தது.
பேரம் பேசி குறைத்துக் கொள்ளலாம் என பேருந்தில் புறப்பட்டுவிட்டார்கள். ஆனால், சம்பந்தன் அவர்களுடன் பேரம் பேச தயாராக இல்லை. போய் மைதானத்தில் போய் விளையாடுங்கள் என கூறிவிட்டார். பிரபாகரன் மன்றாடிப் பார்த்தான். தாங்கள் ஒரு மிகப் பெரிய ஒரு காரியத்துக்காக கேட்பதாக கூறினான்.
அப்படி என்ன பெரிய காரியம்? சம்பந்தம் கேட்டார்
பிரபாகரன் பொருமையாக விளக்கினான். ”இது நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவி. தயவு செய்து தாருங்கள். உங்கள் பணத்தை எப்படியாவது தந்துவிடுகிறோம்”. ஆனால் துப்பாக்கி கிடைக்கவில்லை.
ஃபெடரல் கட்சியின் பதினோராவது ஆண்டு கூட்டம். தந்தை செல்லவா உறையாற்றுகிறார். அனைவரும் வருக!!! சுவரொட்டிகளிலும், ஒலிப்பெருக்கிகளிலும் விளம்பரம் செய்ததைப் பார்த்தார்கள். போய் பார்க்கலாம் என முடிவு செய்தார்கள் பிரபாகரனும் அவனது தோழர்களும்.
ஏப்ரல் 7,1969 தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுவதாக முடிவு. தமிழினத் தலைவர்கள் என்ன பேசுகிறார்கள் என தெரிந்து கொள்ள பிரபாகரனுக்கு ஆவல்.
செல்வநாயகம் பேசினார். ”தமிழர்களே, 1960 தொடங்கி, இன்று வரை பல வழிகளில் முயன்று பார்த்துவிட்டோம். சிங்கள அரசு கேட்பதாக இல்லை. இப்போது செய்கிறோம். அப்போது செய்கிறொம் என இழுத்தடித்து, கடைசியில் ஏமாற்றிவிட்டார்கள். மீண்டும் முயற்சிப்போம். இன்றல்லது என்றாவது ஒரு நாள்….
”சரி, கிளம்புவோம்..!” என்றான் பிரபாகரன்
[/color][/color][/color]

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Sep 27, 2010 10:21 am

பிரபாகரனைப் போலவே அங்கிருந்து வெறுத்துப்போய் கிளம்பிய இன்னொரு கூட்டம், தம்பிதுரை-ஜெகன் உடையது. தமிழ் விடுதலை இயக்கத்தின் தலைவர்கள். 25 பேர் கொண்ட இயக்கம். ஆயுத போராட்டம் மட்டுமே விடிவை தரும் என திடமாக நம்புபவர்கள். பாயிண்ட் பெட்ரோவில் இரகசியமாக கூடி விவாதிப்பவர்கள்.
பிரபாகரன் அவர்களுடன் இணைய விரும்பினான். அவர்களுக்கு எந்த ஆட்சேபனையுமில்லை. துடிப்பான இளைஞன். ஒத்தாசைக்கு இவனை பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைத்தார்கள். பிரபாகரனுக்கு முதலில் கொடுக்கப்பட்ட பணி, துப்பாக்கியை பிரித்து, மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும்.
கனமான ரிவால்வர்கள். பாயிண்ட் 22 முதல் 38 காலிபர் மாடல்கள். பயிற்சிக்கும் அதே. பார்த்து புதிதாக தயாரிக்கவும் அதுவே. துப்பாக்கி, தோட்டா, வெடிப்பொருள், வெடிகுண்டு அனைத்திலும் ஒன்று வாங்கி வந்துவிடுவார்கள். பின் அக்குவேறு ஆணிவேராக பிரித்து, குறிப்பெடுத்து, வரைபடம் வரைந்து, அதைப்போலவே புதிதாக தயாரிப்பார்கள்.
ஒரு மெக்கானிக்கிற்கு உதவியாக பிரபாகரன் இருந்தான். ஆர்வம் அதிகம் இருந்த்தால், பிரபாகரனால் வெகு விரைவில் கற்றுக்கொள்ள முடிந்தது. துப்பாக்கியை தொடர்ந்து, வெடிகுண்டு. ஆபத்தான பணிதான். ஆனாலும் பிரபாகரன் தயங்காமல் கற்றுக் கொண்டான். கவனமாக தான் வேலைப் பார்த்தான். ஆனாலும், 1970-ல் ஒரு விபத்தில் அவன் காலில் காயம் ஏற்ப்பட்டது.
முதல் காயம். ஆனந்தப்பட்டான் பிரபாகரன். ஆறியபொது, காலில் கறுப்பாக ஓர் அடையாளம். ”இனி என்னை கரிகாலன் என்றே அழைக்கலாம்” என்றான் ஆனந்தமாக.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Sep 27, 2010 10:25 am

தனி ஈழம் வேண்டும் என முதன்முதலில் கோரிக்கையை வலுவாக எழுப்பியவர், சுந்தரலிங்கம். 1958 வன்முறைக்கு பிறகு, அவர் இந்த தீர்மானத்தை முன்வைத்தார். ”சிங்கள-பவுத்த நாடாக இலங்கையை மாற்றுவதே இந்த அரசின் திட்டம். எனில், சிங்களரில்லாத, பவுத்தரில்லாத மற்றவரை என்ன செய்ய போகிறார்கள்….?
இது சரிபட்டு வராது. தமிழர்களுக்கான தனிப்பிரதேசம் அவசியம். தனி ஈழம் நிச்சயம் வேண்டும். கிழக்கு, வடக்கு மாகாணங்களை ஒன்றிணைத்த புதிய தேசமாக ஈழம் வேண்டும்.”
தனி ஈழக் கோரிக்கையை உயர்த்திப் பிடித்த மற்றொரு பிரமுகர், நவரத்தினம். இவ்விருவருக்கும், இளைஞரிடையே ஓரளவு ஆதரவு இருந்தது. ஆனால், மூத்த தலைவர்கள் இவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏப்ரல் 4,1970 அன்று ஃபெடரல் கட்சி வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதி,
’தனி தேசம் கேட்டு, சிலர் இங்கே போராடிக்கொண்டிருக்கிறார்கள். அது தவறான கோரிக்கை. இதனால், தேசத்துக்கு நன்மையில்லை. தமிழர்களுக்கும் நன்மை இல்லை. ஆகையால், யாரும் அவர்களுக்கு, ஆதரவு தரக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்.’
ஃபெடரல் கட்சி எதை சொன்னாலும், ஆமாம் போட ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்த்து. நீதி, நேர்மையுடன் போராடினாலே, அரசாங்கம் பார்க்கிறார்கள். அரசாங்கம் இவர்களை சும்மாவா விடும்?
மே 27,1970-ல் தேர்தல் நடந்த்து. சுந்தரலிங்கமும், நவரத்தினமும் படுதோல்வி அடைந்தனர். சுட்டுக்கொல்லப்பட்ட சாலமன் பண்டாரநாயகாவின் மனைவி, சிரிமாவோ பண்டாரநாயக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐம்பத்து நான்கு வயது. இரண்டாவது முறையாக பதவியேற்பு.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Sep 27, 2010 10:28 am

நீண்ட புகார்ப் பட்டியலை எடுத்துக் கொண்டு, புத்தபிக்குகள் சிரிமாவோவை சந்தித்தனர். நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டனர். செய்யாவிட்டால், அவர்கள் பதிலுக்கு, என்ன செய்வார்கள் என அவருக்கு தெரியும். தன் கணவரைப் போன்று, தானும் சொர்க்கப் பதவிக்கு செல்ல வேண்டியிருக்கும். விண்ணப்பம் இதுதான்…
அறிவியல் மற்றும், தொழில்நுட்பத் தேர்வுகளில் வெற்றிபெறும், தமிழர்களின் விழுக்காடு, 37.2 மருத்துவத்தில் 40.5 விழுக்காடு. விலங்கு மருத்துவத்திலும், வேளாண் மருத்துவத்திலும் 41.9 விழுக்காடு. எங்கும் தமிழர்கள். எதிலும் தமிழர்கள். இது இனியும் நீடித்தால், சிங்களர்கள் சிங்கிள் டீக்கு லாட்டரி அடிக்க வேண்டியது தான். அவர்களுக்கு கீழே நாம் வேலை செய்ய வேண்டியிருக்கும்.
சிரிமாவோ சீறினார். அநியாயம். அக்கிரம்ம். வரலாறு காணாத துரோகம். ஆரம்பத்திலேயே அவர்களை வடிகட்டுவோம். இனி, மெட்ரிக் மதிப்பெண் அடிப்படையில்தான் இடம் என்னும் புண்ணாக்கு எல்லாம் கிடையாது. இனி, சிங்களருக்கு தனி நுழைவுத்தேர்வு, தமிழர்களுக்கு தனி நுழைவுத்தேர்வு. இதுதான், தமிழர்களுக்கும், சிங்களவருக்கும், இடையே பகையை உருவாக்க முக்கிய காரணமாக அமைந்தது
அநீதிதான். அக்கிரம்ம் தான். தமிழர்களுக்கு எதிரான, அக்கிரமம். ஆனால், யார்தான் என்ன செய்ய முடியும்? மாணவர்கள் ஃபெடரல் கட்சி தலைவர்களை சந்தித்தனர். ஆனால், அரசாங்கத்தை எதிர்க்க துணிவில்லாமல், கைவிரித்துவிட்டனர்.
மாணவர்கள் யோசித்தனர். தேவை இனி ஓர் இயக்கம். மாணவர்களை ஒன்றிணைக்க. மாணவர்களின் வலிமையை வெளிப்படுத்த. தமிழ் மாணவர் பேரவை(Tamil Students Union) உருவானது. அதில் இணைந்து கொண்ட மாணவகளுள் ஒருவர், சிவக்குமரன்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Sep 27, 2010 10:37 am

வல்வெட்டித்துறையிலிருந்து பாயிண்ட் பெட்ரோவிற்கு செல்லும் கடைசிப் பேருந்து. பயணிகள் யாருமில்லை. பிரபாகரன் குறிவைத்தது அந்த பேருந்தைத் தான். முன்னரே தயாராக நின்றுக்கொண்டிருந்தார்கள். பாதையில் செயற்க்கை தடைகளை உருவாக்கிருந்தார்கள்.
வண்டி நின்றது. சாரதியும் நடத்துநரும் கீழே இறங்கி என்னவென்று பார்த்தார்கள். பிரபாகரன் பாய்ந்து அவர்களை விரட்டியடித்தார். பின் பெட்ரோலை ஊற்றினார்கள். தீக்குச்சியைக் கிழித்து வீசினார் பிரபாகரன்.
அதே 1970-ல் தான் சிவக்குமரனும் தன் பணியை தொடங்கினார். இவரின் இலக்கு கலாச்சார துணையமைச்சர் சோமவீர சந்தராசிரியின் கார். இவரை சிங்கள வெறித்துறைத் துணையமைச்சர் என அழைத்திருக்கலாம். மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்.
அவரே தகர்க்கப்பட வேண்டியவர்தான் என்றாலும், அவரின் காரிலிருந்து ஆரம்பிக்கலாம் என முடிவுசெய்தார் சிவக்குமரன். அவரின் காருக்கு கீழே வெடிகுண்டைப் பொருத்தினார் சிவக்குமரன். தூரத்திலிருந்து அது வெடித்து சிதறுவதை ரசித்தார்.
பிரபாகரன். சிவக்குமரன். இருவரும் இறுதிவரை சந்தித்துக் கொள்ளவில்லை.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Sep 27, 2010 10:42 am

ஒரு கட்டத்தில் சுந்தரலிங்கம் வெடித்தே விட்டார்.
“எதற்காக இன்னமும் நாடாளுமன்றம் போய்க்கொண்டிருக்கிறீர்கள்? உங்களை யாராவது அங்கே மதிக்கிறார்களா? பக்கம் பக்கமாக தட்டச்சு செய்து எடுத்து செல்கிறீர்களே உங்களால் ஏதாவது ஒரு மாற்றத்தை செய்ய முடிந்ததா? அரசாங்க மொழியாக இனி சிங்களம் தான் என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார் சிறிமாவோ. நீதிமன்றங்களில் கூட சிங்களம் தான் வழக்காடும் மொழியாம். சிங்களத்தில் தான் சட்டம் இயற்றப்படும். சிங்களருக்கு ஆதரவாகவே சட்டம் இருக்கும். என்ன செய்ய முடிந்தது உங்களால்? உண்மையை சொல்லப் போனால், தமிழர் விடுதலை போராட்டம், உங்களால் தான் சுணக்கம் அடந்துள்ளது.”
ஃபெடரல் கட்சியால் மறுத்து ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.
ஏப்ரல் 5,1971, ஜனதா விமுக்கி பெரமுனா, JVP( Janata Vimukthi Peramuna). சிங்கள இளைஞர் இயக்கம் உருவாகியது. அதை எப்படி எடுத்துக் கொள்வது என தமிழர்களுக்கு தெரியவில்லை. சிங்கள அரசை எதிர்க்கும் குழு. சிறிமாவோவை கொலை வெறியுடன் எதிர்க்கும் குழு. இவர்களுக்கும் தமிழர் விடுதலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசாங்க பேருந்துகளை உடைக்கிறார்கள். அமைச்சர்களைத் தாக்குகிறார்கள். பத்தாயிரத்திற்கும் அதிகமான JVPயினர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்களாம். ஆயினும் அவர்களும் சிங்களவர்கள் தாம்.
தமிழர்களை வெகுவாக குழப்பிய மற்றொரு சம்பவம், பங்கிளாதேஷ் பிரிவினை. இந்தியா தான் இராணுவத்தை அனுப்பி, பாக்கிஸ்தானிடமிருந்து, பங்கிளாதேஷை பிரித்தது. அதே போல் இங்கேயும். ஒரே ஒரு யுத்தம். இந்திய இராணுவத்தை எதிர்க்க இயலுமா இலங்கையால்? அற்புதமாக இருக்குமே, தனி ஈழம் அமைக்க இந்தியா உதவுமானால்…!!! தமிழர்கள் கனவில் பறந்தனர்.
ஃபெடரல் கட்சியின் கனவும் இதுவே. ஆயிரம் சொன்னாலும் அம்மையார் இந்திரா காந்தி போல் வருமா? நம்பிக்கை தளரவிட வேண்டாம் தமிழர்களே. இந்தியா உதவும். தமிழர்களின் வாழ்வை மீட்டெடுக்கும் சக்தி. நான் செய்ய வேண்டியது ஒன்றுதான். ஈழத்து காந்தி தந்தை செல்வாவின் அடிச்சுவடியில் பயணிக்க வேண்டியதுதான். தமிழர்கள் இந்த கேடுகெட்ட இந்தியாவை தமிழர்கள் எந்த அளவிற்கு நம்பினார்கள் என கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே…!இவர்களைத் திருத்தவே முடியாது என நினைத்துக் கொண்டார் பிரபாகரன்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Sep 27, 2010 10:47 am

புலிச் சின்னத்தை இயக்கத்துக்கு வைக்க பிரபாகரன் யோசனை சொன்னார். நண்பர்களுக்கும் அது பிடித்திருந்தது. சோழப் பேரரசின் சின்னம். இயக்கத்துக்கான பெயரில் புலி வரவேண்டும். நமக்குள் எரிந்துக் கொண்டிருக்கும் நெருப்பை அந்த பெயர் பிரதிபலிக்க வேண்டும் என நினைத்தார்கள். இரவு முழுதும் விவாதித்தார்கள். புது பெயர் உருவானது.
புதிய தமிழ் புலிகள்(Tamil New Tigers). சுருக்கினால் TNT, விரிவாக்கினால் (Tri Nitro Toluene) சக்திவாய்ந்த வெடிப்பொருள். பிரபாகரன் புன்னகைத்தார். சிங்கள பேரினவாத்த்துக்கு எதிர்த்து தாக்கப்போகும் புலிகளின் கூட்டம். சிங்கத்திற்கு எதிராக புலிகள்.
இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட தேதியை குறிப்பிட்டு சொல்ல முடியாது. மிக மிக இரகசியமாக தொடங்கினார்கள். இரவு நேரங்களில் இரகசியமாக கூடுவார்கள். திட்டம் தீட்டுவார்கள். இயக்கத்தின் நோக்கம் என்ன? என்னவெல்லம் செய்யப்போகிறோம்? என்ன செய்யப்போவதில்லை? நமது அரசியல் நிலைப்பாடு என்ன? தமிழர்களின் பிரச்சனைகளுக்கு நாம் முன்வைக்கும் தீர்வு என்ன? எல்லாவற்றிற்கும் மேலாக, ஒழுக்கத்தைப் பிரதானமாக முன்வைத்தார் பிரபாகரன்.
அது முக்கியம். அப்பா சொல்லிக் கொடுத்த பாடம். புத்தகங்கள் சொல்லிக் கொடுத்த பாடமும் கூட. அடிப்படை ஒழுங்கு விதிகள் இல்லாவிட்டால், எப்பேர்பட்ட பேரியக்கமானாலும் சிதறித்தான் போகும்.தன் பெற்றோருடன் தான் வாழ்ந்து வந்தார் பிரபாகரன். தன் தந்தையைப் பார்க்கும் போதெல்லாம், மனதுக்குள் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொள்வார். ”உங்கள் மகன் வேறு பாதையை தேர்ந்தெடுத்துவிட்டன் அப்பா”.
மார்ச் 1973 வீட்டு வாசலில் போலீஸ் வண்டி வந்து நிற்கும் வரை திருவேங்கிடம் பிரபாகரனை பரிபூரணமாக நம்பினார். என்ன சொல்லுங்கள் என்று தான் அவர்களை வரவேற்றார். வேறு காரியம் காரணமாக வந்திருப்பார்கள் என நினைத்தார்.
எங்கே பிரபாகரன்? அந்த அதட்டல் தோனியில் கூட அவர்களால் அனுமானிக்க முடியவில்லை. இங்கே தான் தூங்கிக் கொண்டிருக்கிறான். எழுப்பவா? பாவம், தூங்குபவனை எழுப்ப வேண்டுமே என்று தான் பார்வதி அம்மாள் உள்ளே சென்றார். திக்கென்றது அவருக்கு.
அங்கு பிரபாகரன் இல்லை.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Sep 27, 2010 10:50 am

மீண்டும் குட்டிமணி-தங்கதுரையுடன் சென்று இணைந்துக் கொண்டார் பிரபாகரன். அவர்கள் இருவரையும் காவல் துறை தேடிக் கொண்டிருப்பதால், மூவரின் இருப்பிடமும் இரகசியமாக வைக்கப்பட்டது. பாதுகாப்பாக தான் இருந்தார்கள் என்றாலும், கையைக் கட்டிக் கொண்டு எவ்வளவு காலம் தான் இருட்டறைக்குள் சும்மா இருக்க முடியும்? சுதந்திரம் இல்லை. நண்பர்கள் இல்லை.
யாரிடம் கேட்டார். எப்படி கண்டுபிடித்தார் என தெரியவில்லை. ஆனால் போலிசுக்கே தண்ணிக் காட்டிக் கொண்டிருந்தவர்களின் இருப்பிடத்திற்கே திருவேங்கிடம் வந்தார். பார்த்தவுடன் தம்பி என கட்டிக் கொண்டார். வேறு எதுவும் கேட்கவில்லை.
ஏன் உன்னைத் தேடி வந்தார்கள்? என்ன செய்தாய்? யார் இவர்கள்? இங்கே உனக்கு என்ன வேலை? ஏதாவது ஆபத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறாயா? எதுவும் கேட்கவில்லை. பார்த்தவுடன் உடைந்து அழுதுவிட்டார்.
முதன்முதலில் மனம் திறந்து பேசினார் பிரபாகரன். “அப்பா, இனி என்னை நம்பாதீர்கள். நான் இனி அங்கே வந்தால் உங்கள் அனைவருக்கும் ஆபத்து. என்னைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிடுங்கள். நான் உங்களுக்கு பயன்பட மாட்டேன்”.


Sponsored content

PostSponsored content



Page 3 of 13 Previous  1, 2, 3, 4 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக