ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:52

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:51

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் படை- 1 முதல் 100 வரை

+8
அப்புகுட்டி
nandhtiha
வழிப்போக்கன்
வள்ளியப்பன்
kirikasan
பிளேடு பக்கிரி
அலட்டல் அம்பலத்தார்
நிசாந்தன்
12 posters

Page 13 of 13 Previous  1, 2, 3 ... 11, 12, 13

Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 13 Empty தமிழரின் படை- 1 முதல் 100 வரை

Post by நிசாந்தன் Sat 31 Jul 2010 - 6:04

First topic message reminder :

1956ல் இலங்கையின்
அரசாங்க மொழியாகச் சிங்களத்தை அறிவிக்க முற்பட்டார்கள். தந்தை செல்வாவின் தலைமையில்
தமிழர்கள் அறவழிப் போராட்டம் நடாத்தினர். காலே ஃபேஸ் விடுதி வழியாக சென்றார்கள். கொழும்பு
துறைமுகம் அருகில் தான் உள்ளது. பணிகளை முடித்துக் கொண்டு சிங்கள பணியாளர்கள் எதிர்பட்டனர்.
பேனர்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்களைப் பார்த்து அதிர்ந்தனர்.



சிங்கள நாட்டில்
சிங்களத்தை ஆட்சி மொழியாக கொண்டுவர தமிழர்கள் எதிர்ப்பதா? ஒருவரையும் விடக்கூடாது என
முடிவெடுத்து, கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து, தாக்கத் தொடங்கினர். சிறிது நேரத்தில்,
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களவர்கள் திரண்டுவிட்டனர். எக்காரணம் கொண்டும் திருப்பித்
தாக்கக் கூடாது என, தந்தை செல்வா தடுத்துவிட்டார். தமிழர்கள் சிதறி அங்கும் இங்கும்
ஓடினர். ஒளிந்து கொள்ளத்தான் ஒரு இடமும் கிடைக்கவில்லை. மனோகரன், வசீகரன் தந்தை செல்வாவின்
மகன்கள் இருவரும் தூக்கிவீசப்பட்டார்கள்..



இத்தாக்குதல்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மட்டும் தாக்கவில்லை, அனைத்து தமிழர்களின் வீடுகளிலும்
கடைகளிலும் புகுந்து தாக்கினார்கள், சூரையாடினார்கள். பேருந்து, ஆட்டோ மிதிவண்டியில்
செல்கின்ற தமிழர்கள் ஒருவரையும் விடவில்லை. இந்த தாக்குதலை கவனித்துப் பார்த்தால் நன்றாக
புரியும்… இந்த வெறி திடீரென தோன்றியது அல்ல. பல ஆண்டுகளாக, அவர்களின் மனதில் கனத்துக்
கொண்டிருந்த நெருப்பு, கிடைத்த சிறு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எரிமலையாக வெடித்தது.
தமிழன் எங்கெல்லாம் வசிக்கிறான், அவன் வீடு எண், கடைகள் எக்கெல்லாம் உள்ளது என சுலபமாக
கண்டுபிடித்து தாக்கினார்கள்.



ஆயினும், போராட்டக்
குழு, நாடாளுமன்றத்தை அடைந்தது. பிரதமர் பண்டாரநாயக்காவின் அலுவலகத்திற்குள் இரத்தம்
சொட்ட சொட்ட அமிர்தலிங்கமும், சுந்தரலிங்கமும் நுழைந்தனர். தங்களின் கருத்தை மனுவில்
குறிப்பிட்டு பிரதமரிடம் கொடுத்தனர். அவர்கள் சென்றபின், அது குப்பைத்தொட்டிக்கு சென்றது.
அன்று மாலை ஐந்து மணிக்கு தந்தை செல்வா, சத்தியாகிரக போராட்டத்தை திரும்பப் பெற்றார்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down


தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 13 Empty தமிழரின் படை-97

Post by நிசாந்தன் Fri 22 Oct 2010 - 16:05

சந்திரிகாவின் பதவிக்காலம் நொவம்பர் 2005 அன்று முடிவுக்கு வந்தது.
இலங்கை அரசியல் அமைப்புச் சட்டப்படி ஒருவர் அடுத்தடுத்து இருமுறை மட்டுமே அதிபராக இருக்கலாம். எனவே சந்திரிகா தேர்தலில் போட்டியிட இயலாது. தனது தம்பி அணுர பண்டாரநாயகாவை நிறுத்தலாம் என யோசித்தார். ஆனால், பிரதமர் மகிந்த ராஜபக்சேவிற்கு கட்சியில் செல்வாக்கு அதிகம். ஆகையால் அவரே அதிபர் பதவிக்கான வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டார்.

இம்முறை எப்பாடுபட்டாவது அதிபர் பதவியை பெற்றுவிட களத்தில் குதித்தார் இரணில் விக்கிரமசிங்கே. ஆனால் புலிகள் அமைப்பு தமிழர்களை தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்றது. தமிழர் பகுதிகளில் யாரும் வாக்களிக்கவில்லை.

அத்தோடு இரணில் வெற்றி பெறுவது கடினமானது. மகிந்த ராசபக்சே வெற்றி பெற்றார். மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இரணில் தோல்வியடைந்தார்.

நொவம்பர் 19,2005 அன்று மகிந்த இராசபக்சே அதிபர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 13 Empty தமிழரின் படை-98

Post by நிசாந்தன் Fri 22 Oct 2010 - 16:09

ஆட்சிக்கு வந்ததும் பாதுகாப்புத் துறையையும், நிதித்துறையையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார் மகிந்தா.

ரிசம்பர் 2005. சிங்கள இராணுவம் தமிழர் பகுதியில் தாக்குதல் தொடுத்தது. புலிகள் பதில் தாக்குதல் தொடுத்தனர். இராணுவ முகாம்கள் மீது. 150 இராணுவ வீரர்கள் அந்த ஒரு மாதத்தில் இறந்துபோயினர்.

பிப்ரவரி 2006 இறுதியில் யெனிவாவிற்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் மகிந்தா. இது ஒரு கண்துடைப்பு என்று மகிந்தாவும் பிரபாகரனும் நன்கு அறிந்திருந்தனர்.

ஏப்ரல் 25,2006, கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தலைமைத் தளபதி, லெப்.ஜென்ரல் சரத் ஃபொன்சேகா ஆழ்ந்த யோசனையில் இருந்தார். புலிகளை எப்படி அழிப்பது என்று தீவிர யோசனையில் இருந்தார். மதிய உணவிற்காக தனது காரில் ஏறி சென்றுக் கொண்டிருந்தார். செல்லும் வழியில் இராணுவ மருத்துவமனை இருந்தது. அங்கு ஒரு கர்ப்பவதி. வயிற்றில் குழந்தைக்கு பதிலாக வெடிமருந்து. கண்ணிமைக்கும் நேரத்தில் ஃபொன்சேகாவின் கார் மீது பாய முயன்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஃபொன்சேகாவின் கார் முன்னால் சென்றுக் கொண்டிருந்த பாதுகாப்பு மோட்டார் சைக்கிள் அவளை தள்ளிவிட்டது. வெடிச்சத்தம் சுற்றுவட்டாரத்தை அதிரச்செய்தது. ஃபொன்சேகாவிற்கு பலத்த காயம்.

ஃபொன்சேகாவைத் தூக்கிக் கொண்டு இராணுவ மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கிருந்து கொழும்பு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். பின் சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்வது நல்லது என்று கூறப்பட்டதால், அவர் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் மட்டுமே பிழைத்தார். அவருடன் இருந்த மற்ற ஒன்பது பேரும் பரலோகம் அடைந்தனர்.

எல்லோரும் தெரிந்துக் கொள்ள விரும்பியது, இந்தியா மற்றும் அமெரிக்கா உள்பட, இதைத்தான். ஐந்து அடுக்கு பாதுகாப்பு கொண்ட இராணுவத் தலைமையகத்திற்குள் எப்படி புலிகளால் ஊடுருவ முடிந்தது?
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 13 Empty தமிழரின் படை-99

Post by நிசாந்தன் Fri 22 Oct 2010 - 16:12

தாக்குதலுக்கு பச்சைக் கொடி காட்டினார் மகிந்தா இராசபக்சே. மே 2006, வடகிழக்கு பிரதேசங்கள் மீது உலங்கு வானூர்திகள் பறந்தவாறே குண்டு மழைப் பொழிய ஆரம்பித்தன. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடும்போது கூட தமிழர்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொண்டனர். சிங்கள ஆட்சியாளர்கள் எத்தனை பேர் மாறினாலும் சரி, அவர்கள் அனைவரிடமும் ஒரு ஒற்றுமை உண்டு. புலிகள் எங்காவது தாக்கிவிட்டார்களா? புலிகள் மீது கோபமா? தாக்கு அப்பாவி தமிழ் மக்களை.

பத்து பேர் இறந்து போனார்கள். விடுதலைப் புலிகள் கோபமடைந்தனர். என்ன பெட்டைத்தனமாக, அப்பவி மக்கள் மீது தாக்குதல் தொடுப்பது? அவர்கள் நமது மக்கள். இதற்கு பதிலடி கொடுத்தே தீர வேண்டும். அதே மே மாதம், யாழ்ப்பாணத்தில் உள்ள கப்பல் தளத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்கள் மீது புலிகள் தாக்குதல் நடாத்தினர். அதே மாதம் 19 அன்று ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளை தீவிரவாத இயக்கமாக அறிவித்து தடை செய்தது. புலிகளின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன. சூன் மாதம், ஓஸ்லோ, நோர்வேயில் நடக்க இருந்த அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்து போனது.

சூன் 26,2006. ஃபொன்சேக இன்னமும் மருத்துவனமையில் போராடிக் கொண்டிருந்தார். அவர்க்கு பதிலாக அவர்க்கு கீழ்நிலையில் இருந்த மேஜர் ஜெனரல் பரமி குலதுங்க பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தனர். வீட்டிலிருந்து இராணுவ முகாமை நோக்கி காரில் சென்றுக் கொண்டிருந்த அவர் மீது திடீரென்று ஒரு பைக் வந்து மோதியது. வெடித்துச் சிதறினார் குலதுங்க.

மாவிலாறு. கிழக்கு மாகாணத்தில் இருக்கும் பகுதி. இங்குள்ள அணை மூலமாக பிரச்சனை ஆரம்பமானது. தண்ணீரை யார் பகிர்ந்துக் கொள்வது? தமிழர்களா? சிங்களவர்களா? தமிழர்கள் அணையைக் கைப்பற்றினர்.

சிங்களர்களுக்கு ஆதரவாக மகிந்த வந்தார். அவருக்கு பின்னால், சிங்கள இராணுவம். தமிழர்களுக்கு யாரும் இல்லையா என்ற நிலையில், புலிகள் தமிழர்களுக்காக களத்தில் இறங்கினர். இலங்கை விமானங்கள் மாவிலாறைத் தாக்கியது. ஓகஸ்ட் 8. அணையிலிருந்து தண்ணீர் விடுவிக்கப்பட்டது. கொண்டு வந்த மற்ற குண்டுகளை சும்மாவா திருப்பி எடுத்துச் செல்ல முடியும்? தமிழர்கள் வாழும் பகுதிகளில் வீசினர். புலிகள் அங்கிருந்து அகல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். வெகுகாலத்திற்கு பின் சிங்களர்களுக்கு ஒரு சிறு வெற்றி.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 13 Empty தமிழரின் படை-100

Post by நிசாந்தன் Fri 22 Oct 2010 - 16:15

ஓகஸ்ட் 2006. திருகோணமலைத் துறைமுகத்தை எதிர்நோக்கும் சம்பூர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. சிங்களப் படைகள் வடக்கில் முகமலை, கிழக்கில் மாவிலாறு முதற்கொண்டு பல இடங்களை சிங்கள இராணுவம் தாக்கியதற்கு பதிலடியாக சம்பூரிலிருந்து திருகோணமலையை நோக்கி புலிகள் தாக்குதல் தொடுத்தனர். இலங்கை இராணுவம் பலத்த எதிர் தாக்குதல் தொடுத்தனர். இதன் விளைவாக புலிகள் சம்பூரை செப்டம்பர் 2006-ல் இழந்தனர். இந்த மோதல்கள் அனைத்தும் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் போது நடாத்தப்பட்டது.

ஃபொன்சேகா மீண்டும் இராணுவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

ஒக்ரோபர் 2006. திங்கட்கிழமை. கொழும்பிலிருந்து 120கி.மீ. தொலைவில் இருந்த நகரம் ஹபரணை. எப்போதும் போல அந்த சாலை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. சாலையின் ஓரத்தில் பதினைந்து வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. பெரும்பாலும் இராணுவ டிரக்குகள். இரண்டு பேருந்துகள். அதில் 150 இராணுவத்தினர் இருந்தனர். சீரான வேகத்துடன் அவை புறப்பட்டன. அவைகளை யாரும் சட்டை செய்யவில்லை. திடீரென்று ஒரு டிரக் வேகத்துடன் அவற்றின் மீது மோதியது. முழுக்க வெடிமருந்துகள் நிரப்பப்பட்டிருந்தது. அந்த பேருந்துகளிலிருந்த அத்தனை இராணுவத்தினரும் சிதறி சின்னாபின்னாமானார்கள்.

இத்தனை தீவிரமான ஒரு தற்கொடை தாக்குதலை சிங்கள அரசு இதுவரைக் கண்டதில்லை. அதற்கு சில தினங்களுக்கு முன்பு தான் (ஒக்ரோபர் 12) சிங்கள இராணுவம் என்றுமில்லாத அளவுக்கு மிகப்பெரிய சேதத்தை சந்தித்தது. யாழ்ப்பாணத்திற்கு அருகில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் இடையில் நடந்த நேரடிப் தாக்குதலில் மொத்தம் 129 சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஒரே நாளில் இத்தனை பேரை இழந்தது இதுவே முதல் முறை.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 13 Empty Re: தமிழரின் படை- 1 முதல் 100 வரை

Post by நிசாந்தன் Fri 22 Oct 2010 - 16:23

ஒரே பதிவின் கீழ் நான் எழுதும் போது ஒரு குறிப்பிட்ட பதிவில் வரும் சந்தேகத்தை யாரவது கேட்க வேண்டுமென்றால் அது இயலாது. நான் இந்த பதிவை செய்வதற்கு முக்கிய காரணமே பெரும்பாலான தமிழர்களுக்கு புலிகள் பக்கம் உள்ள நியாயத்தை அறியாமல் இருப்பதனாலதான். துப்பாக்கி எடுத்தவன் எல்லாம் தீவிரவாதி என்ற கருத்துதான் இங்கு பெரும்பாலான மக்களிடத்தில் உள்ளது. அதற்காக தான் இந்த பதிவு
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 13 Empty Re: தமிழரின் படை- 1 முதல் 100 வரை

Post by ராஜா Fri 22 Oct 2010 - 16:30

நன்றி நிசாந்தன் ,

நீங்கள் உங்கள வழியிலேயே தொடருங்கள, பின்பு அனைத்தையும் இணைத்து கொள்ளலாம் தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 13 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 13 Empty Re: தமிழரின் படை- 1 முதல் 100 வரை

Post by நிசாந்தன் Fri 22 Oct 2010 - 16:32

என்னை மன்னிக்கவும். இன்னும் பத்து பதிவுகளே உள்ளன.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 13 Empty Re: தமிழரின் படை- 1 முதல் 100 வரை

Post by அன்பு தளபதி Fri 22 Oct 2010 - 16:34

ராஜா wrote:நன்றி நிசாந்தன் ,

நீங்கள் உங்கள வழியிலேயே தொடருங்கள, பின்பு அனைத்தையும் இணைத்து கொள்ளலாம் தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 13 678642

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 13 Empty Re: தமிழரின் படை- 1 முதல் 100 வரை

Post by கலைவேந்தன் Fri 22 Oct 2010 - 16:41

கவலைப்படாதீர்கள் நிஷாந்தன்.. 1 முதல் 100 வரை இணைத்து விட்டேன்..! தொடருங்கள்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 13 Empty Re: தமிழரின் படை- 1 முதல் 100 வரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 13 Previous  1, 2, 3 ... 11, 12, 13

Back to top

- Similar topics
» கர்நாடகத்தில் முதல் முறையாக பயணிகள் ரெயில் சேவை - நாளை முதல் தொடங்குகிறது
» 30 வகை வாழை சமையல் – பொரியல் முதல் போண்டா வரை… சூப் முதல் கேக் வரை…
» அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி
» 'முதல் பரிசுதான் முதல் தொடக்கம்'- பாலஸ்ரீ விருது வென்ற மாணவனின் அசத்தல் பேட்டி!
» இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு முதல் வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum