ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

Top posting users this week
ayyasamy ram
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 12 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 12 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 12 Poll_c10 
heezulia
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 12 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 12 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 12 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் படை- 1 முதல் 100 வரை

+8
அப்புகுட்டி
nandhtiha
வழிப்போக்கன்
வள்ளியப்பன்
kirikasan
பிளேடு பக்கிரி
அலட்டல் அம்பலத்தார்
நிசாந்தன்
12 posters

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 12 Empty தமிழரின் படை- 1 முதல் 100 வரை

Post by நிசாந்தன் Sat Jul 31, 2010 4:34 am

First topic message reminder :

1956ல் இலங்கையின்
அரசாங்க மொழியாகச் சிங்களத்தை அறிவிக்க முற்பட்டார்கள். தந்தை செல்வாவின் தலைமையில்
தமிழர்கள் அறவழிப் போராட்டம் நடாத்தினர். காலே ஃபேஸ் விடுதி வழியாக சென்றார்கள். கொழும்பு
துறைமுகம் அருகில் தான் உள்ளது. பணிகளை முடித்துக் கொண்டு சிங்கள பணியாளர்கள் எதிர்பட்டனர்.
பேனர்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்களைப் பார்த்து அதிர்ந்தனர்.



சிங்கள நாட்டில்
சிங்களத்தை ஆட்சி மொழியாக கொண்டுவர தமிழர்கள் எதிர்ப்பதா? ஒருவரையும் விடக்கூடாது என
முடிவெடுத்து, கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து, தாக்கத் தொடங்கினர். சிறிது நேரத்தில்,
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களவர்கள் திரண்டுவிட்டனர். எக்காரணம் கொண்டும் திருப்பித்
தாக்கக் கூடாது என, தந்தை செல்வா தடுத்துவிட்டார். தமிழர்கள் சிதறி அங்கும் இங்கும்
ஓடினர். ஒளிந்து கொள்ளத்தான் ஒரு இடமும் கிடைக்கவில்லை. மனோகரன், வசீகரன் தந்தை செல்வாவின்
மகன்கள் இருவரும் தூக்கிவீசப்பட்டார்கள்..



இத்தாக்குதல்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மட்டும் தாக்கவில்லை, அனைத்து தமிழர்களின் வீடுகளிலும்
கடைகளிலும் புகுந்து தாக்கினார்கள், சூரையாடினார்கள். பேருந்து, ஆட்டோ மிதிவண்டியில்
செல்கின்ற தமிழர்கள் ஒருவரையும் விடவில்லை. இந்த தாக்குதலை கவனித்துப் பார்த்தால் நன்றாக
புரியும்… இந்த வெறி திடீரென தோன்றியது அல்ல. பல ஆண்டுகளாக, அவர்களின் மனதில் கனத்துக்
கொண்டிருந்த நெருப்பு, கிடைத்த சிறு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எரிமலையாக வெடித்தது.
தமிழன் எங்கெல்லாம் வசிக்கிறான், அவன் வீடு எண், கடைகள் எக்கெல்லாம் உள்ளது என சுலபமாக
கண்டுபிடித்து தாக்கினார்கள்.



ஆயினும், போராட்டக்
குழு, நாடாளுமன்றத்தை அடைந்தது. பிரதமர் பண்டாரநாயக்காவின் அலுவலகத்திற்குள் இரத்தம்
சொட்ட சொட்ட அமிர்தலிங்கமும், சுந்தரலிங்கமும் நுழைந்தனர். தங்களின் கருத்தை மனுவில்
குறிப்பிட்டு பிரதமரிடம் கொடுத்தனர். அவர்கள் சென்றபின், அது குப்பைத்தொட்டிக்கு சென்றது.
அன்று மாலை ஐந்து மணிக்கு தந்தை செல்வா, சத்தியாகிரக போராட்டத்தை திரும்பப் பெற்றார்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down


தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 12 Empty தமிழரின் படை-90

Post by நிசாந்தன் Thu Oct 21, 2010 12:32 am

ஒக்ரோபர் 23-ம் தேதி கிழக்கு திருகோணமலைப் பகுதியில் தாக்குதலை ஆரம்பித்தனர் புலிகள். கப்பற்படை, விமானப் படை இரண்டும் ஒருங்கிணைந்து நடாத்திய தாக்குதல் அது.

பிந்துனுவேவா சிறைச்சாலை குரூரத்தின் அடையாளமாக உள்ளது. சீர்திருத்தப் பகுதி என்று ஒன்று அங்கு உள்ளது. பதின்வயதைக் கூட தாண்டாத தமிழ் சிறுவர்களை அங்கே அடைத்து வைத்திருந்தார்கள். சந்தேகத்தின் பேரில் விசாரணை இன்றி அடைத்து வைக்கப்பட்டவர்கள். சிலர் தாமாக வந்து சரணடைந்தவர்கள். அதாவது, துப்பாக்கியைக் காட்டியபின், தாமாக.

இவர்களை உள்ளே வைத்திருந்ததற்கு முக்கிய காரணம்… பதின்வயதைக் கூட தாண்டாத சிறுவர்களை விடுதலைப் புலிகள் தங்களது அமைப்பில் இணைத்துக் கொண்டுள்ளனர் என்று சர்வதேச அரங்கில் அவதூறு பரப்பலாம். என்ன ஆதாரம் என்று கேட்டால், இவர்களைக் காட்டலாம். இவர்கள் எங்களது வீரர்களைத் தாக்க வந்தார்கள் என்று சொல்லலாம். தகவல் தொடர்புக்கும் ஒற்றறிவதற்கும் இந்த குழந்தைகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்துகிறார்கள் என்று கூறலாம்.

ஒக்ரோபர் 25. ஒரு கூட்டம் அதிரடியாக உள்ளே நுழைந்தது. இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்களைக் கொண்ட பெரும் கூட்டம் அது. கையில் கட்டை, கம்பு, வீச்சரிவாளுடன் சிறைச்சாலைக்குள் நுழைந்தார்கள். எங்கே அந்த கொலைகாரத் தமிழர்கள் என்று கேட்டார்கள்? சிறுவர்கள் மிரட்சியுடன் நின்றார்கள். சிறைத் துறை அதிகாரிகள் ஒதுங்கி நின்றார்கள். அடுத்த நொடி, தாக்குதல் ஆரம்பித்தனர். கால்களால் மிதிப்பட்டு இறந்தவர்கள் எத்தனை பேர், தடியடிக்கு இறந்தவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை. ஆனால், சிறைச்சாலை முழுவதும் இரத்தம் ஆறாக ஓடியது. 29 சிறுவர்கள் இறந்ததாக கணக்கு கூறுகிறது சிங்கள அரசு.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 12 Empty Re: தமிழரின் படை- 1 முதல் 100 வரை

Post by சிவா Thu Oct 21, 2010 12:51 am

வணக்கம் நிசாந்தன்! உங்களின் இந்த அருமையான படைப்பை அனைவரும் படிக்க வேண்டும் என்றால் இதுபோன்று ஒரே இடத்தில் பதியுங்கள்!


தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 12 Empty Re: தமிழரின் படை- 1 முதல் 100 வரை

Post by நிசாந்தன் Thu Oct 21, 2010 1:31 am

என்ன கொடுமை சரவணன் இது. இது போன்று ஏன் நான் ஒரே பதிவின் கீழ் எழுதுவதில்லை என முன்பே கூறியிருந்தனே
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 12 Empty Re: தமிழரின் படை- 1 முதல் 100 வரை

Post by சிவா Thu Oct 21, 2010 1:37 am

நிசாந்தன் wrote:என்ன கொடுமை சரவணன் இது. இது போன்று ஏன் நான் ஒரே பதிவின் கீழ் எழுதுவதில்லை என முன்பே கூறியிருந்தனே

நான் பார்க்கவில்லை! மீண்டும் ஒருமுறை கூறினால் அறிந்து கொள்வேன்!


தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 12 Empty தமிழரின் படை-91

Post by நிசாந்தன் Thu Oct 21, 2010 9:05 pm

சந்திரிகா புலிகளை நேரடியாக வெற்றிகொள்ள முடியாது என்பதை உணர்ந்து கொண்டார், ஆதலால், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நோர்வேவை துணைக்கு 1999-ல் அழைத்தார். ஏன் குறிப்பாக நோர்வே? நான்கு முக்கிய காரணங்களைக் கூறலாம்.

1) இலங்கைப் பிரச்சனையில் நோர்வே யார் பக்கமும் சாயாது என்பது இலங்கையின் நம்பிக்கை. ஆளைப் பார்த்து தீர்ப்பு சொல்லாது. தீர்ப்பு சொன்னால் என்ன தருவாய் என்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டாது.

2) பொதுவாக நோர்வே அமைதியான நாடு. யாரையும் பகைத்துக் கொண்டது கிடையாது.

3) நோர்வேவுக்கும், இலங்கைக்கும் நீண்டகால நட்பு உண்டு.

4) உலக அங்கீகாரம். நோர்வே அமைதியை விரும்பும் நாடு என்று உலகம் முழுவதுமே அறியப்பட்டிருந்தது.


1993-ல் நோர்வே நிகழ்த்திக் காட்டிய சாதனை. இசுரேல்-பாலத்தீன ஒப்பந்தம். ஓசுலோ அமைதி ஒப்பந்தம்(Oslo Peace Accord) என்று இதனை உலகு அறியும். நடக்கவே நடக்காது என நினைத்துக் கொண்டிருந்ததை நிகழ்த்திக் காட்டியது நோர்வே.

சந்திரிகா எடுத்த முடிவுக்கு விடுதலைப் புலிகளும் உடன்பட்டனர்.

நோர்வே தனது சிறப்பு தூதுவரை இலங்கைக்கு அனுப்பிவைத்தது. அவர் பெயர் எரிக் சோல்ஹைம்(Eric Solheim). ஒக்ரோபர் 31 அன்று இலங்கைக்கு வந்தார் எரிக். இராணுவ உலங்கு வானூர்தியில் வவுனியாவுக்கு அழைத்துச் சென்றனர். அவருடன் சில நோர்வே அதிகாரிகளும், செஞ்சிலுவை சங்க அதிகாரிகளும் உடன் சென்றனர். அவர்கள் அனைவரையும் ஒரு வாகனத்தில் ஏற்றி புலிகளின் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

முதல் முறையாக பிரபாகரனை சந்தித்துப் பேசினார் எரிக். பிரபாகரனுடன் தமிழ்செல்வன் மற்றும் சங்கர் உடன் இருந்தனர். பிரபாகரன் பேசுவதை எரிக்கிற்கும் எரிக் பேசுவதை பிரபாகரனுக்கும் மொழி பெயர்த்து சொல்வது சங்கரின் பணி. இரண்டு மணி நேர பேச்சு நடந்தது.

அடுத்து சந்திரிகாவை சந்தித்தார் எரிக். எரிக் மிகவும் தெளிவானவர் ஆதலால், பிரபாகரனிடம் பேசிய அனைத்தையும் அவர் சந்திரிகாவிடம் சொல்லிவிடவில்லை. போட்டு கொடுக்கும் வேலை உதவாது. இரு தரப்பினரும் சந்தித்து பேச வேண்டும். மனதில் உள்ளதை உள்ளபடி பேச வேண்டும். அவர்கள் இருவரிடமும் ஏதாவது ஒற்றுமை உள்ளதா என பார்க்க வேண்டும். அப்படி இல்லையேல் அதனை உருவாக்க வேண்டும் என்பதில் கருத்தாக இருந்தார்.

காலை வேளைகளில் சந்திரிகாவை சந்தித்தார். மாலையில் எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்தார். அடுத்த நாள் காலை பிரபாகரனை சந்தித்தார். தமிழ்செல்வனிடம் நிறைய விவாதித்தார். சந்தித்த அனைவரையும் வசீகரித்தார். பலன் கிடைத்தது.

டிசம்பர் 21, 2000 அன்று புலிகள் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை அறிவித்தனர்.

சந்திரிகா இதனை எதிர்பார்க்கவில்லை. அவர் எதிபார்த்திருந்தது பேச்சுவார்த்தையை. பேசி, பேசி நேரத்தைக் கடத்தலாம். அந்த சமயத்தில் இராணுவத்தை பலப்படுத்திக் கொள்ளலாம். போர் நிறுத்தம் என்றதும் தூக்கிவாரிப் போட்டது சந்திரிகாவுக்கு. மில்லியன் கணக்கில் செலவு செய்து ஆயுதங்களை வாங்கி குவித்திருக்கிறோம். என்ன செய்வது அத்தனையையும். விடுதலைப் புலிகளை ஒழிக்கிறேன் என்று சொல்லி அல்லவா ஓட்டி வாங்கினோம். இப்பொழுது பார்த்து, அமைதி, ஒப்பந்தம், போர் நிறுத்தம் என்று சொன்னால் சிங்களவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? புலிகளுடன் தொடுக்கும் போரினால் தான் இன்று விலைவாசி உயர்ந்திருக்கிறது என்று காரணம் கூறியுள்ளோம். போர் இல்லை என்றால், மக்கள் சும்மா இருப்பார்களா? போர்க் கொடி உயர்த்தினால் என்ன செய்வது?

எப்படி பார்த்தாலும் அமைதி சாத்தியம் இல்லை என சந்திரிகா நம்பினார். புலிகள் போர் நிறுத்தம் அறிவித்திருக்கும் நிலையில் அவர்களைத் தாக்கினால், புலிகளுக்கு கணிசமான சேதத்தை விளைவிக்கலாம் என்றது இராணுவம்.

சரி என்றார் சந்திரிகா.

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 12 Empty தமிழரின் படை-92

Post by நிசாந்தன் Thu Oct 21, 2010 9:15 pm

சனவரி 16, 2001 அன்று ஆனையிறவு பகுதியை கைப்பற்றும் நோக்கில் புலிகளை விரட்டியது சிங்கள இராணுவம். புலிகளிடமிருந்து ஒரு அறிக்கை வந்தது.

மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கிறோம். இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். மேலும் மூன்று மாதங்கள் போர் நிறுத்தத்தை நீட்டிக்கிறோம். ஒத்துழைப்பு தரவும்.

உலகம் முழுவதிலுமிருந்து இலங்கை அரசுக்கு நெருக்கடிகள் வந்தன. விடுதலைப் புலிகளே போரை நிறுத்திக் கொள்கிறேன் என்கிறது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பிரிட்டன், ஆத்திரேலியா, கனடா தொடங்கி ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்தன.

மார்ச் 31. நடுக்கடலில் வைத்து, புலிகளின் படகு மீது தாக்குதல் நடாத்தியது சிங்கள கடற்படை. போர் நிறுத்தம் அமலில் இருக்கும் போது நடத்தப்பட்ட தாக்குதல் இது. கடற்புலிகள் திருப்பி தாக்கினார்கள். இதில் சிங்கள கடற்படையின் 500 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இசுரேல் தயாரிப்பான டோரா கப்பல்(Dvora Fast Attack Craft) வெடித்துச் சிதறியது. ஐந்து பேரைக் காணவில்லை என்றது சிங்கள அரசு.

ஏப்ரல் 24. ஆனையிறவை விடமாட்டோம் என கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியது சிங்கள இராணுவம். இதற்கு Operation Rod Of Fire என்று பெயர். நெருப்பை ஊதி அணைத்தது புலிகள் அமைப்பு. புலிகளின் குரலில் அறிவிப்பும் செய்தது. முப்பது சிங்கள இராணுவத்தினரின் உடல்கள் எங்களிடம் உள்ளன. செஞ்சிலுவை சங்கம் வந்து பெற்றுக் கொள்ளவும்.

மே-4. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காலின் பவல் தனது திருவாயை மலர்ந்தார். இலங்கை விவகாரத்தில் இராணுவத் தீர்வு சரிபட்டுவரும் என்ற நம்பிக்கை அமெரிக்காவிற்கு கிடையாது.

யூலை 24. பண்டரநாயகா விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடாத்தினர் விடுதலைப் புலிகள். பதின்மூன்று பயணிகள் விமானம். 400 மில்லியன் டாலர் சேதம். அருகிலிருந்த கட்டுநாயக்கா விமானப்படை தளத்தின் மீது தாக்குதல். எட்டு போர் விமானங்கள் அழிந்து போயின. அதில் இரண்டு இசுரேலின் கிபிர் வானூர்தி. இது ஒரு 100 மில்லியன் டாலர். மொத்தமாக 500 மில்லியன் டாலர் சேதம்.

செப்டம்பர் 26-ல் விடுதலைப் புலிகள் தனது மூத்த தளபதியான கர்னல் சங்கரை இழந்தது.

எரிக்கிற்கு கோபம் தாளவில்லை, புலிகள் போர் நிறுத்தம் அறிவித்திருக்கும் இந்நிலையில் எதற்கு இந்த இலங்கை அரசு முந்திக் கொண்டு தாக்குதல் நடாத்துகிறது? இலங்கை அரசிடம் சென்று பேசினார். விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிப்பது சரியல்ல என்று வாதாடிப் பார்த்தார். அமெரிக்கா வரை சென்று பேசிப் பார்த்தார். பலனில்லை.

இந்த சமயத்தில் தான் எரிக் மீது இலங்கை அரசுக்கு சந்தேகம் வந்தது. பேச்சுவார்த்தைக்கு நடுவராக இவரை அழைத்து வந்தால் இவர், புலிகளுக்கு ஆதரவாக அல்லவா செயல்படுகிறார். அவரின் அணுகுமுறையை மாற்றச் சொல்லி சந்திரிகா உத்தரவிட்டார். எரிக் பணியவில்லை. இலங்கை அரசு நோர்வேவுக்கு தந்தி அனுப்பியது. எரிக்கை மாற்றச் சொன்னது. நோர்வே தனது வெளியுறவு அமைச்சர் தோர்ஜோர்ன் ஜக்லாந்து(Thorgjoern Jagaland) என்பவரை அனுப்பி வைத்தது.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 12 Empty தமிழரின் படை-93

Post by நிசாந்தன் Fri Oct 22, 2010 2:18 pm

டிசம்பர் 7,2001 அன்று UNP தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை அமைத்தது. தனது 52 வயதில் இரணில் விக்கிரமசிங்கே பிரதமரானார். கூடுதலாக பாதுகாப்பு அமைச்சகத்தை தனது வசம் வைத்துக் கொண்டார்.

சனவரி 2000-ல் வடகிழக்கில் விதித்திருந்த தடைகளை அகற்றினார். தமிழ்ச்செல்வன் இரணிலின் முடிவை பாராட்டினார். அதற்கு பிரதியுபகாரமாக பத்து போர்க் கைதிகளை புலிகள் விடுதலை செய்தனர். பிப்ரவரி 22,2002 அன்று போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் கையெழுத்திட்டனர். வவுனியாவிவிருந்து கிளிநொச்சி செல்லும் ஏ-9 நெடுஞ்சாலை திறக்கப்பட்டது. வடகிழக்கு பகுதிகளின் பள்ளிகளில், வழிபாட்டு தளங்கள், பொதுக் கட்டிடங்களிலிருந்து சிங்கள இராணுவத்தினர் திருப்பி அழைத்துக் கொள்ளபட்டனர். ஏப்ரல்-23 அன்று இரணிலும் பிரபாகரனும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

சந்திரிகா கொதித்துப் போனார். The Daily Mirror பத்திரிக்கைக்கு அவர் கொடுத்த பேட்டியில் சீறினார். நான் இராணுவத்துக்கு ஒரு வார்த்தை சொன்னால் எல்லா அமைதி ஒப்பந்தங்களும் தூள் தூளாகும் என்றார்.

சஃபாரி உடை அணிந்திருந்தார் பிரபாகரன். உடன் ஆன்ரன் பாலசிங்கம். மார்ச் மாதம் இறுதியில் பாலசிங்கமும் அவரது மனைவி அடேல் பாலசிங்கமும் வன்னிக்கு வந்து சேர்ந்தனர். பிரபாகரனும் மதிவதனியும் அவர்களை வரவேற்றனர். தமிழ்ச்செல்வன், கருணா(கிழக்கு பகுதியின் புலிகளின் தளபதி). இன்று தமிழரின் அழிவுக்கு காரணமான இனத் துரோகி. இந்தியப் பத்திரிக்கையாளர்கள், உலகின் அனைத்து நாடுகளிலிருந்து வந்திருந்த பத்திரிக்கையாளர்கள் பலரும் வந்திருந்தனர்.

பேட்டியே வேண்டாம் என்று கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஒதுங்கியிருந்த பிரபாகரன் முதன்முறையாக ஏப்ரல் 10,2002 அன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். பிரபாகரனை கரடு முரடான ஆசாமியாக எதிர்பார்த்த பத்திரிக்கையாளர்களுக்கு சஃபாரி உடை அணிந்து, சிரித்த முகமாக தோன்றிய பிரபாகரனைப் பார்த்த அனைவருக்கும் ஆச்சரியமே பதிலாக கிடைத்தது.

வன்னியில் ஏகப்பட்ட பரபரப்பு. இந்த பேட்டியை நேரடியாக ஒளிபரப்பலாமா என்று இலங்கை அரசின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி யோசித்துக் கொண்டிருந்தது.

மிகவும் சுறுக்கமாக பேசினார் பிரபாகரன்.

அமைதிப் பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறது. ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வை அரசு முன்வைக்குமானால் தனி ஈழக் கோரிக்கையை கைவிடவும் தயாராக உள்ளோம். ஆனால், சுயநிர்ணய உரிமை எங்களுக்கு முக்கியம். பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். எங்கள் இயக்கத்தின் மீதான தடையை விலக்கிக்கொள்ள வேண்டும்.

செப்டம்பர் 5,2002. விடுதலைப் புலிகள் மீதான தடை திரும்பப்பெறப்பட்டது. நவம்பர் 27, மாவீரர் தின உரையில் பிரபாகரன் தெளிவாக கூறிய கருத்து இது.

நாங்கள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டோம். அமைதிப் பேச்சுவார்த்தையில் ஆர்வத்துடன் கலந்துக் கொள்கிறோம். சிங்கள மக்களும் தமிழ் மக்களும் இணைந்து வாழ்கிறார்களா அல்லது தமிழ் மக்கள் தனியாக பிரிந்து போகப் போகிறார்களா என்பதை இலங்கை அரசியல் களம்தான் முடிவுசெய்ய வேண்டும்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 12 Empty தமிழரின் படை-94

Post by நிசாந்தன் Fri Oct 22, 2010 2:22 pm

என்ன செய்யலாம் இந்த இரணிலை? விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கிவிட்டார். நோர்வேவை அழைத்து புலிகளுடன் அமைதி ஒப்பந்தம் போடுகிறார். இனி இலங்கையில் அமைதி திரும்பிவிடும். அது நடக்கக்கூடாது. எல்லா பெயரும் இரணிலுக்கு சென்றுவிடும். அது நல்லதல்ல.

இந்தியா உள்பட அனைத்து தேசங்களும் புலிகளைத் தடை செய்துள்ளன. ஆனால், இரணில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பேசாமல் இரணில் விக்கிரமசிங்கேவை அகற்றிவிட்டால் என்ன? சொந்தப் பகை என்று சிலர் சொல்வார்கள். மக்களாட்சி தேசத்தில் இப்படி ஒரு அநியாயமா என்று பத்திரிக்கைகள் புலம்பும். பரவாயில்லை புலம்பட்டுமே!

சந்திரிகா காத்திருந்தார். நவம்பர் 4,2003 அன்று இரணில் விக்கிரமசிங்கே அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றார். ஒரு வினாடி கூட சந்திரிகா தாமதிக்கவில்லை. நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இராணுவத்தை அழைத்தார். உங்களை சோம்பேரிகளாக்கிவிட்டார். புலிகளுக்கு பயந்துக் கொண்டு இரணில் அணில் பிள்ளையாகிவிட்டார். ஆனால் நீங்கள் சிங்கங்கள், யாருக்கும் அடிபணிய வேண்டியதில்லை. இராணுவத்தை உசுப்பிவிட்டார் சந்திரிகா. படைகளை திரட்டுங்கள். தேசத்தின் ஒட்டுமொத்த அதிகாரமும் இராணுவத்திடம் வந்து சேர வேண்டும். அறிவிக்கப்படாத ஒரு அவசர நிலையை அறிவித்தார்.

வேறு ஒரு கணக்கும் சந்திரிகா மனதில் ஓடிக் கொண்டிருந்தது. ஏப்ரல் 2004 தேர்தலில் வெற்றிக் கிடைக்கவேண்டும். புலிகள் அமைதிப் புறாவாக மாறி பறக்க ஆரம்பித்துவிட்டால், இங்கே அரசியல் நடத்த முடியாது. சின்னச் சின்ன பிரச்சனைகளைத் தீர்க்கலாம். ஆனால் ஒரு பெரிய பிரச்சனை எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஆகவே விடுதலைப் புலிகள் தேவைப்படுகிறது. சிங்களர்களே, தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட்டு உங்கள் அனைவரையும் பாதுகாப்பேன் என்று மைக் செட் பிடித்து தெருவுக்கு தெரு முழங்கியாக வேண்டும்.

JVP-யுடன் இணைந்து, UPFA(United People’s Freedom Alliance) என்னும் கூட்டணியை அமைத்தார். ஏப்ரல் 2,2004 அன்று தேர்தல் நடைப்பெற்றது. UPFA வெற்றிபெற்றது. ரணில் விக்கிரமசிங்கே இல்லாத அரசாங்கம் அது. பிரதமர், மகிந்த இராசபக்சே
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 12 Empty தமிழரின் படை-95

Post by நிசாந்தன் Fri Oct 22, 2010 2:27 pm

தளபதி கருணா தனது குழுவினருடன் பேசிக்கொண்டிருந்தார். இனிமேலும் பிரபாகரனுடன் இணைந்திருக்கமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. நமக்கென்று ஓர் இயக்கம். நமக்கென்று ஒரு படை. நண்பர்களே, நாம் வளர்ந்துவிட்டோம். அதை மற்றவர்களுக்கு நாம் உணர்த்தியாகவேண்டும். விருப்பமுள்ளவர்கள் என்னுடன் வரலாம்.

மார்ச் 2004-ல் தமிழ் ஈழ மக்கள் விடுதலைப் புலிகள்(TMVP) இயக்கம் கருணா தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. கிழக்குப் பகுதியிலுள்ள தமிழர்கள் மீது விடுதலைப் புலிகள் போதிய கவனம் செலுத்தவில்லை என்று கருணா காரணம் சொன்னார். எத்தனை எத்தனையோ போர்களில் புலிகள் சார்பில் உயிர் துறந்தது கிழக்கைச் சேர்ந்த தமிழ்ப் போராளிகள் தாம். ஆனால் அதிகாரம் முழுவதும் வடக்கில் மட்டுமே குவிந்துள்ளது என்பது கருணாவின் கருத்து. அனால் இலங்கையின் புவியியலைப் பார்த்தால், கிழக்கைவிட வடக்கே பாதுகாப்பானது. சிங்கள படையெடுப்பு, கிழக்கில் விரைவாகவே வந்தடையும். ஆகவேதான் வடக்கில் நிர்வாகப்பொறுப்பை பிரபாகரன் நிர்வகித்தார். அவர் நினைத்திருந்தால், வல்வெட்டித்துறையை தலைமையிடமாக அறிவித்திருக்கலாம். ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லை.

1983-ல் புலிகள் அமைப்பில் இணைந்தார் கருணா. எட்டுக் கால் பாய்ச்சலில் முன்னேறினார் கருணா. முதல் நிலைத் தளபதியாக முன்னேறினார். தலைவரின் பிரித்தியேக பாதுகாவலராக இருந்திருக்கிறார். 2003-ம் ஆண்டு கிழக்கிலுள்ள மட்டக்களப்பை-அம்பாரை மாவட்டங்கள் கருணாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறப்பு தளபதியாக உயர்ந்தார்.

கருணா பிரிந்து சென்றதற்கு பின்னால், இந்திய உளவுத் துறையான றோ முக்கிய பங்கு வகித்தது. இதனை பொட்டு ஒம்மான் முன்னமே மோப்பம் பிடித்துவிட்டார். பிரபாகரனிடம் சொல்லிய போது அவர் பொறுமைக் காக்க சொன்னார். ஆனாலும் கருணாவின் செயல்பாடுகளில் மாற்றமில்லை. ஆகவே, புலிகள் கருணா மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தனர். கருணா இயக்கத்தில் இருந்த போது நடந்த முறைகேடுகள் பற்றி விசாரணை நடைப்பெற்றது. 1990-ல் 400 முதல் 600 இராணுவ வீரர்கள் புலிகளிடம் சரணடைந்துள்ளனர். கருணாவின் குழு அத்தனைப் பேரையும் கொன்றுள்ளது. கிழக்கு பகுதியில் இருந்த இசுலாமியர்களைக் கொன்றதிலும் கருணாவிற்கு பங்குண்டு என பிற்பாடு தெரியவந்தது.

பொட்டு ஒம்மான் கருணாவை உடனடியாக கைது செய்ய உத்தரவிடும்படி பிரபாகரனிடம் கேட்டார். ஆனால், பிரபாகரன் ஒப்புக்கொள்ளவில்லை. ஜெயசிகுரு எதிர்சமரில், கருணா மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், நீங்களும் நானும் இன்று கிளிநொச்சியில் உயிருடன் நின்றுக் கொண்டு பேசிக் கொண்டிருக்க முடியாது என்றார் பிரபாகரன். கருணாவை அழைத்துவரச் சொன்னார். அவருடன் பேசுவதற்கு. ஆனால், தன்னை தண்டிக்கத் தான், பிரபாகரன் அழைக்கிறார் என நினைத்த கருணா, உடனே சிங்களவனுடன் கூட்டுசேர்ந்துக் கொண்டார்.

எந்த மக்களுக்காக, தனது உயிரையும் துச்சமென நினைத்து போராடி அவர்களைக் காத்த கருணாவும் அவரது குழுவினரும், அந்த மக்களையே தினம் தினம் கொல்ல ஆரம்பித்தனர். அவரகளின் பொருட்களை கொள்ளையடிக்க ஆரம்பித்தனர். சிங்கள பேரினவாத அரசு தூக்கி போடும் எழும்புத் துண்டுக்கு ஆசைப்பட்டு, தன்மானத்தை இழந்து நாயைப் போல வாலாட்டிக் கொண்டிருக்கிறார்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 12 Empty தமிழரின் படை-96

Post by நிசாந்தன் Fri Oct 22, 2010 2:33 pm

டிசம்பர் 6,2004. அன்றைய தினத்தை உலகம் என்றுமே மறக்காது. இது நாள் வரை போரினால் மட்டும் சீரழிந்துக் கொண்டிருந்த இலங்கை, அன்று ஆழிப்பேரலையால் அலைகழிக்கப்பட்டது. சுனாமி இலங்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டது. இந்தோனேசியாவிற்கு அடுத்து அதிக உயிர்பலி இலங்கையில்தான். இந்தியாவிற்கு வந்த அதிக பாதிப்பை இலங்கை உள்வாங்கியது. முக்கியமாக ஈழப் பகுதிகள்.

ஏழை, பணக்காரன், சிங்களவன், தமிழன் என்று பாகுபாடு இல்லாமல் அனைவரையும் கொன்றொழித்தது சுனாமி. தமிழர் பகுதியில் மட்டுமே குண்டு வீச பழகியிருந்த உலங்கு வானூர்திகள் முதல் முறையாக மீட்புப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டன. சிங்களவர்கள் வாழும் பகுதிகளில் மட்டும் உணவுகள் வழங்கப்பட்டன. மீட்புப் பணிகள் நடந்தன. வடகிழக்கு பகுதியில் ஒரு அரசாங்க அலுவலர் கூட எட்டிப்பார்க்கவில்லை.இருந்தால் இரு. செத்தால் சாவு என்று விட்டுவிட்டார்கள். இலங்கை சந்தித்த மொத்த இழப்புகளில் சரிபாதி தமிழர்களுடையது. எல்லாம் முடிந்தபின் கணக்கு எடுக்கப்பட்டது. இலங்கையை மட்டுமல்ல, உலகையே உலுக்கியது அந்த எண்ணிக்கை. 30,000க்கும் அதிகமானோர் இறந்துபோயிருந்தனர். பாதிக்கு பாதி தமிழர்கள்.

தமிழ் பிரதேசங்கள் முழுவதும் மரண ஓலங்கலே எங்கும் கேட்டன. கன்னத்தில் இருந்து கையை இறக்கி என்ன செய்யலாம் என சந்திரிகா யோசிப்பதற்கு முன்னால் முட்டிக்கால் வரை காற்சட்டைகளை மடித்துக் கொண்டு தண்ணீரில் இறங்கியிருந்தார்கள் விடுதலைப் புலிகள். மருத்துவ முகாம்கள் ஆங்காங்கே முளைத்திருந்தன. எப்போது அமைத்தார்கள்? யார் அமைத்தார்கள்? எங்கிருந்து மருந்து மாத்திரைகள் வந்தன என்று ஒருவருக்கும் தெரியாது. பிரபாகரனின் பிரத்தியேக மருத்துவர் கூட களத்தில் இறக்கிவிடப்பட்டிருந்தார்.

சிங்களர்களை கரை சேர்க்க மட்டுமே அரசு நினைக்கும் என புலிகளுக்குத் தெரியும். குப்பைக் கூளங்களை அகற்ற, சிதிலங்களை அப்புறப்படுத்த கட்டட இயந்திரங்கள் தேவை. ஆனால் எங்கே போவது? அள்ளிப்போட வேண்டியதுதான். நேற்றுவரை ஏ.கே.47 சுமந்துக் கொண்டிருந்தவர்கள் துவக்குகளை சுவற்றில் ஓரமாக வைத்துவிட்டு, பனியனுடன் குப்பை அள்ளிக் கொண்டிருந்தனர். பெருக்கி சுத்தப்படுத்தினார்கள். துப்பாக்கியைத் தூக்கும் போது இருந்த துடிதுடிப்பு, அதே வேகம், அதே நெருப்புப் பொறி, துடைப்பத்தைத் தொட்டபோதும் இருந்தது.

உதவிக்குத் தான் வரவில்லை. உபத்திரமாவது செய்யாமல் இருந்திருக்கலாம் சிங்கள அரசு. உடனடியாக இராணுவத்தை அழைத்தார் சந்திரிகா. அதெப்படி? நாமே இன்னும் நிவாரணப் பணிகளில் இன்னும் முழுமையாக இறங்கவில்லை. அதற்குள் எப்படி விடுதலைப் புலிகள் களத்தில் இறங்கி பணியாற்ற ஆரம்பித்தனர்? உடனடியாக அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். அத்தனை முகாம்களையும் நம்மிடம் ஒப்படைக்க வேண்டும்.

இத்தாலிய தூதரகம் ஒன்று தமிழர் பகுதியில் இருந்தது. தமிழர்களுக்கு உதவுவதற்காக புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் இத்தூதரகத்திற்கு நிதி அளித்தனர். அந்த தூதரகம் பொறுப்புடன் எல்லாவற்றையும் சேகரித்து தமிழர்களிடம், அங்கே பணியில் ஈடுபட்டிருந்த புலிகளிடம் கொண்டு போய் சேர்த்தனர். சந்திரிகாவிற்கு இந்த விடயம் பின்னர் தெரியவந்ததும், இத்தாலிய தூதரகத்தை அழைத்து கிழித்துவிட்டார். ஆனால், இத்தாலிய தூதரக ஆதிகாரிகள் அதனைக் கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்குத் தெரியும், அவர்கள் செய்தது ஒரு நல்ல காரியம். சந்திரிகாவிடம் கொடுத்திருந்தால் அதில் ஒரு நயா பைசா கூட தமிழர்களின் கைகளில் கிடைத்திருக்காது.

நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட ஐக்கிய நாடுகள் சபைத் தலைவர் கோஃபி அன்னான் சனவரி 8,2005 அன்று இலங்கை வந்திருந்த போது விடுதலைப் புலிகள் இருந்த திசைப் பக்கம் கூட அவரை சிங்கள அரசு அனுப்பவில்லை. குட்டு வெளிப்பட்டுவிடும் என்று சிங்கள அரசுக்கு நன்றாகவேத் தெரியும். அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்குப் பகுதிகளுக்கு மட்டும் அழைத்துச் சென்றது.

உலகின் பல முனைகளிலிருந்து இலங்கை அரசுக்கு நிதி வந்துக் குவிந்துக் கொண்டிருந்தது. இன்முகத்துடன் அதனை சிங்கள அரசு பெற்றுக் கொண்டது. பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிக்கும் போது, அப்பணத்தில் பெரும் பகுதி தமிழ் பிரதேசங்களுக்கு செலவிடப்படுவதாக அரசு தெரிவித்தது. உலகமும் இதனை நம்பி ஏமாந்தது.

பொருளாதார இழப்பு என்று பார்த்தால், சிங்கள அரசைவிட புலிகளுக்கு அதிக இழப்பு ஏற்பட்டது. ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பு அது. கையிருப்பில் இருந்த ஆயுதங்களும் போர்த்தளவாடங்களும் கணிசமான அளவுக்குச் சேதம் அடைந்திருந்தன. முல்லைத்தீவில் அமைந்திருந்த கப்பல் தளம் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது (ரிசம்பர் 29, 2004). 1,200 முதல் 1,500 வரை புலி வீரர்கள் இறந்ததாக சில செய்திகள் வெளிவந்தன.

நிவாரணப் பணிகளின் ஒவ்வொரு கட்டத்தையும் நேரடியாக சென்று பார்த்தார் தமிழ்ச்செல்வன். பிரபாகரன்? பிரபாகரனும் பொட்டு ஒம்மானும் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டனர். அவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை என்றது சிங்கள அரசின் செய்தி நிறுவனமான ரூபவாஹினி. சென்னையில் உள்ள தி இந்து பத்திரிக்கையும் இந்த செய்தியை வெளியிட்டது. இதற்கு முன்னரே பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற பொய்யான செய்தியை இந்து வெளியிட்டுள்ளது. இது இரண்டாவது முறை. ஈழத் தமிழர்கள் யாரும் இந்தச் செய்தியை நம்பியதாகத் தெரியவில்லை. அடப்போப்பா! தமிழ்ச்செல்வன் இறந்துவிட்டார் என்று நேற்றுதான் சொன்னீர்கள். கொஞ்சம் கண்களைத் திறந்து பாருங்கள். அவர் இங்கு தான் நின்று கொண்டிருக்கிறார் எங்களுடன்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 12 Empty Re: தமிழரின் படை- 1 முதல் 100 வரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

Back to top

- Similar topics
» கர்நாடகத்தில் முதல் முறையாக பயணிகள் ரெயில் சேவை - நாளை முதல் தொடங்குகிறது
» 30 வகை வாழை சமையல் – பொரியல் முதல் போண்டா வரை… சூப் முதல் கேக் வரை…
» அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி
» 'முதல் பரிசுதான் முதல் தொடக்கம்'- பாலஸ்ரீ விருது வென்ற மாணவனின் அசத்தல் பேட்டி!
» இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு முதல் வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum